பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, December 07, 2016

ஜால்ரா சத்தம்

நேற்று ராஜாஜி ஹாலில் அம்மாவை சுற்றி ஒரு குடும்பம் வளையம் போட்டு யாரையும் அண்ட விடாமல் முன்னிலை படுத்திக்கொண்டிருந்தது. ரத்த உறவுகளா அல்லது நட்பா என்று விவாதம் ஆரம்பிக்கப் போவதில்லை.

ஆனால், நேற்று மெரினா கூட்டத்தில் அடி மட்ட தொண்டர்கள் பலர் இதைக் கண்டு கோபமாக ஏசிக்கொண்டு இருந்ததைப் பார்க்க கேட்க முடிந்தது.

முகநூலிலும், டிவிட்டரிலும் திடீர் ஜால்ரா சத்தம் கேட்டு டிவியை பார்த்தால் அங்கே தந்தி டிவி மூச்சுக்கு முந்நூறு தடவை அதே ஜால்ராவைப் போட்டுக்கொண்டு இருந்தது. 

இது கூட பரவாயில்லை ஆனால் பிரதமர் மோடி தலையை தடவிக்கொடுத்து ஆறுதல் சொல்லுவது எல்லாம் டீ மச் தேவையில்லாதது.

பிஜேபி இல.கணேசன் மெனக்கட்டு ஒருவரைப் பிரதமருக்கு அறிமுகம் செய்து வைத்ததை  எல்லாம் பார்க்கும் போது கேவலமாக இருந்தது.

காங்கிரஸ் திருநாவுக்கரசர் விடுவாரா அவரும் ராகுலுக்கு அறிமுகம் செய்து வைத்து தன் கடமையை செய்தார்.

கடைசியில் அந்தச் சாஸ்திரி பால் தெளித்த பிறகு பிசுக்கை துடைத்துக்கொள்ள தன் மேல் அங்கவஸ்திரத்தைக் கொடுத்து அவரும் கடைசியாக ஜால்ரா அடித்தார்.

எச்சரிக்கை: இட்லிவடை அம்மாவுக்கு மட்டுமே ஜால்ரா அடிக்கும்.  

 

அஞ்சலி 

5 Comments:

Madhavan Srinivasagopalan said...

// கடைசியில் அந்தச் சாஸ்திரி //

மேம்போக்காக, ஒரு ஷோவிற்காக, நடந்ததே அந்த சம்பிரதாய நடிப்பு. அவர், உண்மையான(!) சாஸ்திரியாக(!) இருந்தால், பஞ்சகச்சம் அல்லவா கட்டியிருந்திருக்க வேண்டும் ! மேலும், அவர் / அங்கு... வேணாம்.. விடுங்க...
# 'பஞ்சகச்சம்' -- எனக்குத் தெரிந்தவரை அவர் திருமணம் ஆனவர்.

Cinema Virumbi said...

டீ மச் Edhaavadhu ul kuththu irukkaa?!

Cinema Virumbi

kothandapani said...

திராவிட சிங்கங்களுக்கு கும்பிட கால்கள் எப்போதும் தேவைப்பட்டுக்கொண்டே உள்ளது.....

”தளிர் சுரேஷ்” said...

கடைசி பஞ்ச் சூப்பர்!

Unknown said...

ஆம். அம்மா அவாள் என்பதால் அவர் தலைவியாக இருந்த அதிமுகவுக்கு ஜால்ரா அடித்தது. அவாளே இல்லைன்னு ஆயிட்டப்பறம் எதுக்கு அடிக்கணும் ஜால்ரா.
அதனாலே இனிமேல் பிஜேபிக்கு எந்த குழப்பமும் இல்லாம ஜால்ரா அடிக்கும்.