பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, July 06, 2015

சென்னை மெட்ரோ - ஒரு பார்வை - ஸ்ரீராம் சுந்தரேசன்.

இப்போதைய டிரெண்ட் சென்னையை பொருத்த வரை மெட்ரோ ரயில் தான். சரி நாமளும் ஒரு ரவுண்டு அடிக்கலாம் என்று .கிளம்பினேன். 14,500 கோடி செலவு நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளது மிகவும் வெளிபடையாக தெரிந்தது. ஸ்டேஷன் எல்லாம் முடியாத நிலையில் இருந்தாலும் ரொம்பவே ஹை டெக். பாதுகாப்பு ஒப்பந்தகம்பனிகள் செய்கிறது. விதௌட் பயணம் நிச்சயமாக முடியாது, மேலும் ஒப்பந்த பிச்சைகாரர்கள், கடலை மிட்டாய் விற்பவர்கள், அரவாணி அட்டுழியங்கள் எல்லாம் இல்லை என்பது சென்னைக்கு ரொம்ப புதுசு. டிக்கெட் கவுன்ட்டர், ஆடோமடேத் டிக்கெட் மெச்சின், ஏலேவடோர், ஈஸ்காலடோர், பாதுகாப்பு அம்சங்கள் எல்லாம் உலக தரம்.

ரயில் நீல மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ளது - பிரேசில் இறக்குமதி. பச்சை, மஞ்சள், திராவிட கருப்பு எல்லாம் இல்லாமல் இருப்பது மகிழ்ச்சி. முக்கியமாக இலை படம் வரையப்படவில்லை - செந்தில் பாலாஜி நோட் தி பாயிண்ட். ஸ்டாலின் பக்கத்தில் நிற்பாரோ என்று பார்த்தேன் - அரை தப்பியது. லண்டன் டியுப்பு வண்டியில் ஜுபிலி என்ற ரயிலில் பயணித்தது போல் ஒளி, ஒலி மற்றும் அனுபவம் இருந்தது. ஒரு வகுப்பை சார்ந்த பகுதி முழுவதும் வெச்டிபுல் மூலம் இணைத்திருப்பது நல்ல யோசனை.

மேலே இருந்து பார்க்கும் பொழுது சென்னை இவ்வளவு அழகா என்று தோன்றுகிறது. விலை அதிகமானாலும், நேரம் மற்றும் குளுகுளு ஏசி, முக்கிய இடங்களுக்கு அருகாமை (கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குள்) என்று நிச்சயமாக பல அம்சங்கள் ஈர்க்கின்றன.ஏழை மக்களுக்கு எட்டா கனி என்றெல்லாம் சிலர் புலம்புகிறார்கள் - டாஸ்மாக் அளவுக்கு அல்ல என்று பதில் வருகிறது.

போஸ்டர் ஓட்டும் புண்ணியவான்கள் ராஜ ஸ்ரீதர் அ(ழி)க்கிறார், 10, +2 படித்தவருக்கு வேலை கொடுக்கும் கணவான்கள், கடலை குப்பை போடும் குப்பை லாரிகள் தயவு செய்து மெட்ரோவை மன்னித்து விட்டு விடுங்கள். பொது மக்கள் தங்கள் அருகில் பப்பில்கம் ஓட்டுபவர்கள், இல்லை வேறு எந்தவிதத்திலாவது அசுத்தம் செய்பவர்களை யோசிக்காமல் அரைந்து விடுங்கள் - தெரியாமல் கன்னத்தில் கை பட்டது என்று சொல்லிகொள்ளலாம்.

மொத்தத்தில் இன்றைய நாள் இனிய நாள்.
- ஸ்ரீராம் சுந்தரேசன்.

10 Comments:

கௌதமன் said...

அதிகக் கட்டணம் இருக்கும் பயணத்திற்கு, சிக்கனப் பயணக் கட்டுரை! நன்று!

Rajagopalan said...

In Dubai Metro , if you are found chewing a gum, you are fined immediately. No questions asked.

Rajagopalan

Rajagopalan said...

In Dubai Metro , if you are found chewing a gum, you are fined immediately. No questions asked.

Rajagopalan

kothandapani said...

இந்த கட்டுரையை அப்படியே ஒரு 5 ஆண்டு கழித்து வெளியிடுங்கள் . அப்போதும் இந்த நாள் இனிய நாளாக இருக்க வாழ்த்துக்கள்

Anonymous said...

Is that Ravichandran Ashwin in the pic?

Anonymous said...

Brahmin.. Arrogance

sidtharth said...

எல்லாம் சரிதாங்கோ ! முதலில் தமிழை ஒழுங்கா எழுதுங்கோ ! /*அரைந்து, அரை தப்பியது*/ இல்லை .. "அறைந்து / அறை தப்பியது " தான் சரி..

Anonymous said...

/*டிக்கெட் கவுன்ட்டர், ஆடோமடேத் டிக்கெட் மெச்சின், ஏலேவடோர், ஈஸ்காலடோர்*/
தமிழ்ல எழுதுங்க அல்லது முழுசா ஆங்கிலத்துல எழுதுங்க.... இப்படி ரெண்டும் கெட்டனா எழுதி ஏன் கொல்றீங்க ?

Anonymous said...

//தெரியாமல் கன்னத்தில் கை பட்டது என்று சொல்லிகொள்ளலாம்//

Correction - Kaiyil kannam pattathu

YAZHI said...

Good one