பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 21, 2015

எம்.எம்.சி மாணவர் கல்வி உதவி தொடர்பாக

இட்லிவடை வாசகர்களே...

இந்த இடுகை வாயிலாக எ.அ.பாலா விடுத்த தாழ்மையான வேண்டுகோளை ஏற்று, பல நல்ல உள்ளங்கள் செல்வாவின் மருத்துவக் கல்விக்கு உதவி செய்துள்ளீர்கள் என்பதை அறிவிக்கவே இந்தப் பதிவு. இதுவரை சேர்ந்துள்ள தொகை, படிப்பின் முதல் 3 ஆண்டுகளுக்குப் போதுமானதாக இருக்கும். இந்த முயற்சிக்கு பொருளுதவி செய்தோ, ஏதாவது ஒரு வகையில் உதவி செய்தோ, வாழ்த்துக்களை தெரிவித்தோ, ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பது இட்லிவடையின் கடமையாகும்.

செல்வாவின் மருத்துவப்படிப்பு முடியும் வரை அவருக்கு உதவி, ஊக்கமளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் ஏதாவது உதவி பின்னாளில் தேவைப்பட்டால், உங்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன்.

இதற்கு முன் பல முறை ஆதரவளித்த நீங்கள் மீண்டும் கை கொடுப்பீர்கள் என்ற திடமான நம்பிக்கை எனக்குண்டு.
மீண்டும் நன்றி.

இட்லிவடை மற்றும் எ.அ.பாலா

1 Comment:

ஜெயக்குமார் said...

இட்லிவடை என்ற ஒரு பிளாக்கை வைத்துக்கொண்டு எவ்வளவு நல்ல விஷயங்கள் தொடர்ந்து சாதிக்கப்படுகிறது என்பது உண்மையில் மகிழ்ச்சிக்கும், பாராட்டுதலுக்கும் உரிய விஷயம்.

இட்லிவடை வாசகர்கள் இட்லியை சட்னிபோல கமெண்ட்டுகளில் பிழிந்தாலும் உதவி எனக்கேட்ட உடன் அள்ளித்தரும் மக்களாக இருக்கின்றனர். அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

இட்லிவடையின் சேவை மென்மேலும் தொடர்க.