இன்று ஆம் ஆத்மி கட்சி தில்லியில் பெரும்பான்மை வெற்றி கிடைத்துள்ளது. மக்கள் மத்தியில் பிஜேபி வெறுப்புணர்வை பரப்புதல் போன்றவற்றுக்கு எதிரான தீர்ப்பு என்று இதை முழுமையாக எடுத்துக்கொள்ள முடியாவிட்டாலும், பிஜேபி கொஞ்சம் பேச்சை குறைத்துக்கொண்டு செயலில் காட்ட வேண்டும்.
சோ துக்ளக் ஆண்டுவிழாவில் சொன்ன ஒரு விஷயம் “வளர்ச்சி என்ற பாதையில் மோடி போய்க் கொண்டிருக்கிறார். அதைக் கெடுப்பது போல், ஆங்காங்கே அதற்கு இடையூறு செய்வது போல் என்னென்னவோ பேசுகிறார்கள். ஒரு வரைமுறையே இல்லை. ராமர் பற்றிய பேச்சு, கோட்ஸே பற்றிய பேச்சு – இப்போது கோட்ஸேவுக்கு கோயில் என்று ஆரம்பித்திருக்கிறார்கள். எனக்குச் சந்தேகமே வந்து விட்டது. அதாவது, மோடிக்கு வரும் நற்பெயரைக் கெடுப்பதற்கென்றே, இந்த அரசின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கத்துடனேயே இந்த மாதிரி எல்லாம் செய்கிறார்களோ என்று. சிலர் அவரது வளர்ச்சியைப் பொறுக்க மாட்டாமல், அவர்களால் இந்த மாதிரி காரியங்கள் நடத்தப்படுகின்றனவோ என்று எனக்குச் சந்தேகமே வந்து விட்டது”
பிஜேபிக்கு 7க்கும் குறைவான இடங்களில் வெற்றி பெற்றால் கூட, அந்த கட்சிக்கு நாங்கள் எதிர்கட்சி அந்தஸ்த்து தர தயங்கமாட்டோம் - ஆம்.அத்மி கட்சி