பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Saturday, September 27, 2014
நீங்கள் தான் எங்களுக்கு முதல்வர் !
Posted by IdlyVadai at 9/27/2014 02:27:00 PM 27 comments
Labels: அறிவிப்பு
Friday, September 26, 2014
அசைக்க முடியாத அம்மா! - பத்ரி
இன்னும் முழுதாக ஒரு நாள் கூட இல்லாத நிலையில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த பதினைந்தாண்டுகளுக்கும் மேலாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கில், நீதிபதி ஜான் மைக்கேல் கன்ஹா தீர்ப்பு வழங்கவிருக்கிறார்.
1991-96 இல் ஜெயலலிதாவின் ஆட்சி முடிவுற்று, கருணாநிதி தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றவுடன், ஜெயலலிதா மீது தொடுக்கப்பட்ட 12 வழக்குகள் தொடுக்கப்பட்டன. இவற்றில் 10 வழக்குகளில் அவர் விடுவிக்கப்பட்டாலும், இரண்டு வழக்குகளில் மட்டும் 2000 வது ஆண்டில் கீழ்நிலை நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
2001 ஆம் ஆண்டு மறுபடியும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிமுக அதிகபட்ச மெஜாரிடியுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. ஒரு நபர் அதிகபட்சமாக இரண்டு தொகுதிகளிலிருந்து மட்டுமே போட்டியிட முடியும் என்ற நிலையில், ஜெயலலிதா நான்கு தொகுதிகளிலிருந்து போட்டியிட கட்சி சார்பில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவையனைத்தும் நிராகரிக்கப்பட்டன, எனினும் கட்சியின் சார்பில் ஜெயலலிதாவையே முதல்வராக முன்மொழியப்பட்டார். பிறகு உச்சநீதிமன்றம் தலையிட்டு, வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டவர், முதல்வராகப் பதவியேற்க இயலாது என்று கூறிவிட்டது.
இதற்கிடையே முதல்வரின் நம்பிக்கைக்குரியவராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றார். பின்பு, 2001 வது வருடத்தில் சென்னை உயர் நீதிமன்றமும் 2003 இல் உச்ச நீதிமன்றமும் அவரை அவ்விரு வழக்குகளிலிருந்தும் விடுவித்து தீர்ப்பளித்தது.
2003 ஆம் ஆண்டில் அவருக்கெதிராக ஒரே ஒரு வழக்கு மட்டுமே மீதமிருந்தது. அதுதான் நாளை தீர்ப்பை எதிர்நோக்கியிருக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு. ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் அவரது உறவினர் ஆகியோர் வருமானத்திற்குப் புறம்பாக சுமார் 66 கோடி ரூபாய் சொத்து குவித்துள்ளதாக வழக்கு, இதுவும் மற்ற வழக்குகளைப் போல 1998 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. 2001 ஆம் ஆண்டில், அதிமுக ஆட்சியிலிருக்கும் நிலையில், வழக்கு தமிழகத்தில் முறையாக நடக்காது என்ற திமுகவின் கோரிக்கையை ஏற்று, உச்ச நீதிமன்றம், வழக்கை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றியது. வழக்கு தொடுக்கப்பட்டு, பதினேழாண்டுகளான நிலையில், கர்நாடக மாநிலத்திற்கு வழக்கு மாற்றப்பட்ட 11 ஆண்டுகளில் பல்வேறு வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மாறியுள்ள நிலையில், நாளை தீர்ப்பு வெளியாகவிருக்கிறது.
இவ்வழக்கில், ஜெயலலிதா குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு, இரண்டாண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றால், அவர் உடனடியாக தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும், முதல்வர் பதவியையும் இழக்க நேரிடும். அதற்கும் குறைவான தண்டனை கிடைத்தால் என்ன நேரிடும் என்பதில் குழப்பமிருக்கிறது. இதே போன்றதொரு வழக்கில், மஹராஷ்டிர சிவசேனையின் சட்டசபை உறுப்பினர் பபன்ராவ் கோலாப், இவ்வருடம் ஜூன் மாதம் தனது பதவியை இழந்தார்.
ஜெயலலிதா, அதிமுகவின் அசைக்க முடியாத தலைவர். அவருக்கென்று ஒரு குடும்பமில்லாத நிலையில், தீர்ப்பு எதிர்மறையாக இருந்தால், அவர் 2001 இல் செய்ததைப் போன்று, தனது நம்பிக்கைக்குரியவரை முதல்வராக அமர்த்தி, ஆட்சியையும், கட்சியையும் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் வல்லமை படைத்தவர்.
அதன்பிறகு, மேல் நீதிமன்றங்களில் முறையீடு செய்து, தண்டனை குறைப்போ அல்லது விடுதலையோ பெறலாம். ஆனாலும், இவ்வழக்கு தொடர்பிலுள்ள வருமான வரி வழக்கில்தான் அவருக்கு இன்னொரு சிக்கல் இருப்பதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் நிலையும் சரியானதாக இல்லை. கருணாநிதி தலைமையிலான திமுகவும் ஊழல் வழக்குகளால் வலுவிழந்து காணப்படுகிறது. மூத்த மகன் அழகிரி கட்சியிலிருந்தும், குடும்பத்திலிருந்தும் ஓரங்கட்டப்பட்டுள்ளார். 90 வயதைக் கடந்த கருணாநிதியும், கட்சித் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு படைத்தவராகத் திகழும் ஸ்டாலினிடம் கட்சித் தலைமையை ஒப்படைக்க ஆர்வமற்றவராகக் காணப்படுகிறார்.
தமிழகத்திலும், கடந்த மூன்றாண்டுகளாக அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் நலத் திட்டங்களால், மக்களிடம் ஆட்சியின்பால் பெரிய அதிருப்தி ஏதுமில்லை, அது சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலிலும் வெளிப்பட்டது, அதிமுக 37/39 இடங்களில் வெற்றி பெற்றது.
தற்போது தமிழகத்தில் ஊழலுக்கெதிராகப் பிரசாரம் செய்யுமளவிற்கு எந்தக் கட்சியும் ஸ்திரமாக இல்லை. தமிழக பாஜகவின் அடிப்படைக் கட்டமைப்பும் திமுக, அதிமுகவை எதிர்க்குமளவிற்கு வலுவானதாக இல்லை. இது தற்போது தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல் முடிவுகளிலிருந்தே தெளிவாகிறது.
இவ்வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டால், மிகுந்த எழுச்சியோடு 2016 தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறுவர்; தோல்வியுற்றாலும் கூட, குறைந்தபட்சம் மெஜாரிட்டி பெற்று ஆட்சியமைத்து விடுவர். ஊழல் கறை படிந்த மாநிலக் கட்சிகளுக்கு மாற்றாக, நல்ல அரசியல் கட்சிகள் இல்லாததையே இந்நிலை காட்டுவதாக இருக்கிறது.
பத்ரி எழுதிய http://swarajyamag.com/featured/unshakeable-amma/ தமிழாக்கம்.
:-)
Posted by IdlyVadai at 9/26/2014 06:48:00 PM 8 comments
Labels: அரசியல்
Thursday, September 25, 2014
MOM - BOM
72ஐ திருப்பி போட்டால் 27 வரும் அந்த MOM செவ்வாய் தோஷத்துக்கு பரிகாரம் செய்ய பலர் தயாராகிவிட்டார்கள். இப்பவே பலர் பெங்களூரை நோக்கி படை எடுக்க ஆரம்பிட்துவிட்டார்கள். இதற்கு BOM என்று பெயர் வைத்துள்ளார்கள்.- பெங்களூர் ஆர்ப்பிட்டர் மிஷன்!.
27 அன்று என்ன ஆனாலும் பலர் ராகெட் விட போகிறார்கள் என்பது தான் நிஜம்!
Posted by IdlyVadai at 9/25/2014 04:52:00 PM 5 comments
Friday, September 19, 2014
Thursday, September 18, 2014
ஐ பாடல்கள்
இப்போதைக்கு மெரசலாயிட்டேன் நன்றாக இருக்கிறது.
அப்பறம் ஆல்பத்தில் வைரமுத்து இல்லை!
Posted by IdlyVadai at 9/18/2014 05:13:00 PM 7 comments
Wednesday, September 17, 2014
ஐ ! எது சார் உண்மை ?
விழாவை பொறுத்தவரை, ஒரு விழா எந்தவித முன்னேற்பாடும் இன்றி நடைபெற்றால் எப்படியிருக்கும் என்பதற்கு ஓர் உதாரணமாக இருந்தது. பிற்பகல் 3:30 மணியில் இருந்து 5:30 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்று டிக்கெட்களில் போடப்பட்டு இருந்தது. ஆனால், நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது மணி 7:30-யைத் தாண்டிவிட்டது.
இசை வெளியீட்டு விழா ஆரம்பிக்கும் முன்பு இசைக்கு ஏற்றவாறு ஒளி அமைப்பு மாறுவது காண்பிக்கப்பட்டது. ரஜினியை அழைத்து வந்து உட்கார வைத்துவிட்டுச் சென்று விட்டார்கள். சில நிமிடங்கள் தனியாக உட்கார்ந்து கொண்டு இருந்தார். பிறகு ஷங்கர், புனித் ராஜ்குமார் கடைசியாக அர்னால்டு அழைத்து வரப்பட்டார்.
நிகழ்ச்சியை உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருந்த அர்னால்டு முன்பு பாடி பில்ட் ஷோ நடைபெற்றது. நிறைய பாடி பில்டர்கள் ஷங்கர் படங்களின் பாடல்களுக்கு ஏற்றவாறு பாடி பில்ட் நிகழ்ச்சியை அரங்கேற்றி, நேரடியாக அர்னால்டுக்கு மரியாதை செய்தார்கள். அப்போது, அவர்களோடு இணைந்து மேடையேறிய அர்னால்டு, தன்னுடைய பேச்சைத் தொடங்கினார்.
இதை கவனித்ததும், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகர் சிம்ஹா குறுக்கிட்டு, 'படத்தைப் பற்றிய பேச்சை அப்புறம் பேசலாம் சார்' என்று கூறவே, "நான் எப்போது என்ன பேச வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும்" என்று தொடங்கி தனது பேச்சைத் தொடங்கி முடித்து அரங்கினை விட்டு வெளியேறினார்.
இசையை வெளியிடுவதற்கு முன்பே அர்னால்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது, விழா ஏற்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
'ஐ' படத்தின் இசை வெளியீடு விழா சிறப்பு விருந்தினர் இன்றி, ரஜினி இசையை வெளியிட புனித் ராஜ்குமார் பெற்றுக் கொண்டார். அந்த இசை வெளியீட்டின்போது கூட படத்தின் நாயகன் விக்ரமும், நாயகி ஏமி ஜாக்சனும் அங்கு இல்லை. 'ஐ' இசை வெளியீட்டு விழாவைக் காப்பாற்றியது என்னவோ ரஜினி மட்டுமே.
'தசாவதாரம்' இசை வெளியீட்டில் தூய்மையையும் எளிமையையும் கற்றுக் கொடுத்தார் ஜாக்கிசான், 'ஐ' இசை வெளியீட்டு விழாவில் 'காலம் தவறாமை'யை கற்றுக் கொடுத்திருக்கிறார் அர்னால்டு.
பிரம்மாண்டம் என்ற அடைமொழியுடன் அறங்கேற்றப்படும் தமிழ் சினிமாவின் இசை வெளியீட்டு விழாவில் எந்த ஒரு நிகழ்ச்சியும் சரியான நேரத்தில் ஆரம்பித்ததில்லை. இனியாவது விழித்துக்கொள்வார்களா?
தினமணி செய்தி
விழாவில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கலந்து கொண்டார். ஆடியோவின் முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பெற்றுக்கொண்டார். விழாவில் ஒரு பகுதியாக "ஐ' படத்தில் நடித்துள்ள "பாடிபில்டர்'களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதைப் பார்த்து வியப்படைந்த
அர்னால்டு அவர்களை வாழ்த்திப் பேசியதாவது:
நான் இந்த விழாவில் இறுதியாகத்தான் பேச வேண்டியிருந்தது. ஆனால் இப்போதே பேசி விடுகிறேன். எப்போதும் என் விருப்பம் எதுவோ அதைத்தான் செய்வேன். ஷங்கர் ஓர் அற்புதமான இயக்குநர். அவரது படங்கள் அனைத்தும் உலகளவில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்று வருகின்றன. "பாடிபில்டர்'களுக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதில் எனக்கு மகிழ்ச்சி. ஏனென்றால் நானும் ஒரு "பாடிபில்டர்'. விழாவில் நான் பார்த்த "பாடிபில்டர்'கள் அனைவரும் தங்களது உடலை நன்றாக வைத்துள்ளனர்.
ஒரு படத்தில் அர்னால்டு இல்லை, இரண்டு படங்களிலும் விக்ரம் இல்லை ஆனால் ரஜினி இருக்கிறார்.
Posted by IdlyVadai at 9/17/2014 06:40:00 AM 6 comments
Labels: சினிமா
Sunday, September 14, 2014
ரயில் உணவு - எஸ்.ராமகிருஷ்ணன்
ரயில் பயணிகளுக்கு என்றே மோசமான உணவுகளைத் தயாரிக்கிறார்கள் போலும். இட்லி வாங்கினால் ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரிக்க முடியாது. சட்னி, ஒரே உப்பாக இருக்கும். நாற்றம் அடிக்கும். தோசை என்றால் அது வளைந்து நெளிந்து உருண்டை போலாகியிருக்கும். காகிதம் போல சுவையே இல்லாமலிருக்கும். பூரியைப் பிய்த்துத் தின்பதை உடற்பயிற்சியாக மேற்கொள்ள வேண்டும். சாப்பாடு என்றால் அதற்கு தரப்படும் சோறு, சாம்பார், கூட்டு- பொறியல் வகைகள் வாயில் வைக்க முடியாது.
இவ்வளவு ஏன் ஒரு தேநீர் கூட சர்க்கரை பாகு போன்ற ஒன்றைத்தான் தருவார்கள். இத்தனை லட்சம் மக்கள் பயணம் செய்யும் ரயிலில் இவ்வளவு மோசமான உணவு தரப்படுவது ஏன்? ஒவ்வொரு முறையும் யாரோ சிலர் புகார் செய்யத்தான் செய்கிறார்கள், நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரயில்வே சொல்கிறது. ஆனால், ரயில்வே உணவின் தரம் ஆண்டுக்கு ஆண்டு மோசமாகிக் கொண்டுதான் போகிறது.
ரயிலில் தரப்படும் உணவு வகைகளைக் கண்காணிப்பதற்கு என சுகாதார அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று இதுவரை யாருக்கும் தெரியாது.
உங்கள் வாழ்க்கையில் என்றைக்காவது ஏதாவது ஒரு ரயிலில் மதிய உணவில் என்ன காய்கறிகள் தரப்படும். என்ன உணவு வகைகள் எப்போது தயாரிக்கப்பட்டன என்ற பட்டியல் தரப்பட்டிருக்கிறதா, ரயிலில் யார் சமைக்கிறார்கள் என்று எப்போதாவது பார்த்திருக்கிறோமா? என்ன மாவு பயன்படுத்துகிறார்கள், என்ன எண்ணெய் பயன்படுத்துகிறார்கள் என ஏதாவது தெரியுமா?
உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள் வாயில்தான் உணவு வகைகளை சொல்கிறார்கள். விலையும் அவர்கள் சொல்வதுதான். பழைய காகிதம் ஒன்றில் உணவை பேக் செய்து, கொண்டுவந்து நீட்டுகிறார்கள். அல்லது நசுங்கிப்போன அலுமினியம் ஃபாயிலில் அடைத்துத் தருகிறார்கள்.
பேன்டரி கார் உள்ள ரயிலில் 20 நிமிஷங்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு உணவுப் பொருளை விற்கக் கொண்டு வருகிறார்கள். அந்த உணவாவது சூடாக இருக்க வேண்டும் அல்லவா? நாமே கிச்சனுக்குப் போய் ஏன் இப்படி உணவு சவசவத்துப் போயிருக்கிறது; சட்னி சரியில்லை; சாம்பார் சரியில்லை எனப் புகார் சொன்னால் அதை யாரும் காது கொடுத்துக் கேட்பது இல்லை.
இவ்வளவுக்கும் பல ஊர்களில் ரயில் நிலையங்களில் உள்ள கேன்டீன்களில் மிகச் சிறந்த சைவ உணவு வகைகள் கிடைப்பதை நான் ருசித்திருக்கிறேன். ரயில் நிலைய கேன்டீன்களில் தரமான உணவு கிடைக்கும்போது பயணிகளுக்கு மட்டும் ஏன் இந்தக் கொடுமை?
'அந்நியன்’ படத்தில் உணவு சரியில்லை என கான்ட்ராக்டரை கதாநாயகன் அடித்துக் கொல்லுவான். அந்தக் காட்சிக்கு தியேட்டரில் கிடைத்த கைதட்டு ரயில்வே மீது மக்கள் கொண்டுள்ள ஆதங்கத்தின் வெளிப்பாடே.
ஜூலை 23-ம் தேதி கொல்கத்தா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடத்தப்பட்ட சோதனையில் உணவில் கரப்பான் பூச்சி இருந்தது கண்டறியப்பட்டது. இதை அடுத்து, ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்துக்கு ரூ. ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், சாப்பிட்டவர்கள் கதி? அப்பாவி மக்களுக்கு ஒரு நியாயமும் கிடையாது.
பஸ்ஸிம் எக்ஸ்பிரஸ், புஷ்பக் எக்ஸ்பிரஸ், மோதிஹரி எக்ஸ்பிரஸ், ஷிவ் கங்கா எக்ஸ்பிரஸ், கோல்டன் டெம்ப்பிள் மெயில், நேத்ராவதி எக்ஸ்பிரஸ், பஞ்சாப் மெயில், ஹெளரா அமிர்தசரஸ் மெயில், சண்டிகர் சதாப்தி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் சோதனை நடத்தப்பட்டு... தரமற்ற, கெட்டுப்போன, சுகாதாரமற்ற உணவுகள் வழங்கப்பட்டது கண்டறியப்பட்டது. அதற்காக ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே தவறு தொடர்ந்து ஐந்து முறை கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நிறுவனத்தின் கேட்டரிங் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அறிவித்திருக்கிறது.
இந்தநாள் வரை மோசமான உணவைச் சாப்பிட்ட மக்களுக்கு என்ன நஷ்டஈடு தரப் போகிறார்கள்? ஐந்து முறை மோசமான உணவு பரிமாறப்படும் வரை கேட்டரிங் செய்பவர்களை எதற்காக அனுமதிக்க வேண்டும்? நஷ்டஈடாக பணம் அபராதம் விதிப்பதால் அவர்கள் செய்த தவறு சரியாகிவிடுமா? இது அப்பட்டமான கண்துடைப்பு நாடகம்.
எனது பயணத்தில் இதுவரை ஒருமுறை கூட உணவு பரிசோதகர் ரயிலுக்கு வந்து உணவின் தரம் எப்படியிருக்கிறது என பயணிகளிடம் கேட்டது இல்லை. உணவு வகைகளை ருசி பார்த்ததில்லை. ஒரு பயணி குறைந்தபட்சம் ரயில் பயணத்தில் இருநூறு ரூபாய் உணவுக்குச் செலவு செய்கிறான். ஆனால், அதற்கான தகுதி அந்த உணவுக்கு கிடையாது. இதை நாம் சகித்துக்கொண்டு போவதுதான் ரயில்வே உணவின் தரம் மோசமானதற்கு முக்கியக் காரணம்.
1915-ம் ஆண்டு பெங்கால் நாக்பூர் ரயில்வே முதன்முறையாக மேற்கத்திய வகை உணவை ரயிலில் பயணிகளுக்காக வழங்க முன்வந்தது. அதற்கு முக்கியக் காரணம் வெள்ளைக்காரர்கள் ரயிலில் பயணம் செய்தது. அதுவே ரயிலில் உணவு வழங்குவதன் முதற்படி. அதைத் தொடர்ந்து 1920-களில் தென்னக ரயில்வே ரயில் பயணிகளுக்காக உணவு வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியது, 1954-ல் மத்திய அரசு அழகேசன் கமிட்டி என்ற குழுவை அமைத்து உணவின் தரம் மற்றும் விலை குறித்தது பரிசீலனை செய்து புதிய நடைமுறையை உருவாக்கியது. அதைத் தொடர்ந்து 1967-ம் ஆண்டு ரயில்வே துறை கேட்டரிங் கமிட்டி ஒன்றை உருவாக்கி அதற்கு ஒரு சேர்மனையும் நியமித்தது.
1979-ல் இந்த உணவு வழங்கும் துறை தனி அமைப்பாக செயல்படும் என அறிவித்தது ரயில்வே. அதை ஒரு நபர் கமிட்டி வழிநடத்தும் என்றார்கள். அதன்படி தனியார்களுக்கு கான்ட்ராக்ட் விடப்பட்டு உணவு வழங்குவது நடைமுறைக்கு வந்தது.
ரயில்வேயின் உணவுகுறித்த மக்களின் கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்படும் முக்கியப் பிரச்னைகள் ஐந்து. முதலாவது உணவு தரமாக இல்லை; இரண்டாவது சரியான நேரத்தில் உணவு வழங்கப்படுவது இல்லை; மூன்றாவது உணவு சூடாக இல்லை; நான்காவது பேக்கேஜிங் சரி இல்லை; ஐந்தாவது உணவு வழங்கும் பணியாளர்களின் அலட்சியப்போக்கு. இந்திய ரயில்வே உலகிலே பெரிய நிறுவனம் என தன்னை பெருமை சொல்லிக் கொள்கிறது. உணவு வழங்குவதில் அதுதான் உலகின் மிக மோசமான நிறுவனம். ஜப்பானிய ரயில்களில் அவர்கள் தரும் உணவும் அதன் தரமும் இணையற்றது.
ஜப்பானிய ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் பென்டோ எனப்படும் வெளியில் சாப்பிடும் உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.. ரயிலில் விற்கப்படும் எகிபென் எனப்படும் உணவுப் பொட்டலங்களை விதவிதமான அளவுகளில், உணவு வகைகளில் அட்டைப் பெட்டிகளில் சூடு தாங்கும் காகிதம் சுற்றி அழகாக பேக் செய்திருக்கிறார்கள். அதில் எப்போது அந்த உணவு தயாரிக்கப்பட்டது என்ற நேரம் அச்சிடப்பட்டிருக்கும். எத்தனை மணி வரை அதைச் சாப்பிடலாம் என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன் ருசியும் தரமும் நிகரற்றது. விலையும் குறைவு. நேரம் கடந்துபோனால் அந்த உணவு பேக்குகளை விற்பனைசெய்ய மாட்டார்கள். கழிவுத் தொட்டியில் போட்டுவிடுகிறார்கள்.
ஐரோப்பிய ரயில்களில் வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் ரொட்டிகளையும் பழங்களையும் கேக் வகைகளையும்தான் பயணிகள் அதிகம் சாப்பிடுகிறார்கள். ரயிலில் விற்கப்படும் உணவின் விலை அதிகம் என்பது ஒரு காரணம்.
ரயில்களில் உள்ள உணவே தேவலை என சொல்ல வைப்பவை விமானத்தில் தரப்படும் உணவு வகைகள். இவ்வளவுக்கும் அவை நட்சத்திர உணவகங்களில் தயாரிக்கப்படுபவை. இரவு பனிரெண்டரை மணிக்குக் கிளம்பும் இந்திய விமானங்களில் சூடாக உப்புமாவும் பிய்க்க முடியாத வடையும் தருவார்கள். நள்ளிரவில் யார் உப்புமா சாப்பிடுவார்கள்? யாருக்கு இந்த யோசனை வந்தது? காலை பசியோடு விமானத்தில் ஏறினால் ரொட்டியும் சாம்பார் சாதமும் கொடுப்பார்கள். யார் இந்த உணவு வகைகளை தேர்வு செய்கிறார்கள், எதன் அடிப்படையில் தருகிறார்கள், ஒருவரும் கேட்டுக் கொள்வது இல்லை. குறைந்த கட்டண விமானங்களில் தண்ணீர் தருவதோடு சரி. வேறு எல்லாமும் காசுக்குத்தான். அவர்கள் பயணிகளின் பசியைப் பற்றிக் கண்டு கொள்வதே இல்லை.
நன்றி: ஆனந்த விகடன்
ரயிலில் தரப்படுவதை உணவு என்று சொன்ன எஸ்.ராவுக்கு பெரிய மனசு :-)
Posted by IdlyVadai at 9/14/2014 09:58:00 PM 10 comments
Labels: கட்டுரை
Saturday, September 13, 2014
ஜார்ஜ் குட்டி. சுயம்புலிங்கம் ஆன கதை !

மலையாள சினிமாவுக்கும் தமிழ் சினிமாவிற்கும் உள்ள பெரிய வித்தியாசம் அதன் மொழி தான். போன வருஷம் த்ரிஷ்யம் என்னும் த்ரில்லர் படம் ஒன்று வந்தது பலருக்கு நினைவிருக்கலாம். மோகன்லால் நடித்திருந்தார். படத்தில் அவர் பெயர் ஜார்ஜ் குட்டி. கமல் பெயர் சுயம்புலிங்கம்.
தமிழில் இதை எடுக்க போகிறார்கள் என்ற போது பி.வாசு எடுத்த சீனு என்ற படம் முதலில் ஞாபகத்துக்கு வந்தது. பிறகு அந்த படத்தில் கமல் நடிக்க போகிறார் என்ற கேள்விப்பட்டவுடன் உன்னைப்போல் ஒருவன் ஞாபகத்துக்கு வந்தது.
தமிழ் சினிமாவுக்கும் மலையாள சினிமாவிற்கும் இன்னொரு பெரிய வித்தியாசம் தமிழ் படத்தில் இருக்கும் செயற்கைத்தனம். மேலே உள்ள படத்தைப் பார்த்தாலே அது தெரியும். மலையாள படத்தில் மோகன்லால் அவர் பாத்திரத்தை அழகா அண்டர்பிளே பண்ணீருவாரு. ஆனால் இதில் கமல் அப்படி செய்வார் என்று எதிர்ப்பாக்க முடியாது.
படத்தில் கமலின் வீபூதி கூட செயற்கை தான்
Posted by IdlyVadai at 9/13/2014 07:03:00 AM 10 comments
Labels: சினிமா
Thursday, September 11, 2014
இட்லிக்குள் எமன் !
விரைவில் இட்லிவடை போட்டி :-)
Posted by IdlyVadai at 9/11/2014 10:53:00 PM 2 comments
Thursday, September 04, 2014
நாட்டுடைமை - கேள்வியும் பதிலும்
''தந்தை பெரியாரின் படைப்புகள் புரட்சிகரமானவை. அதே சமயம் அவற்றை நாட்டுடைமை ஆக்குவதில் உள்ள ஆபத்துகளில் முக்கியமானவை பட்டியலிடுகிறேன். புரிந்துகொள்ளுங்கள்...
1. பெரியார் கொள்கை பிடிக்காத அரசுகள் அந்த வன்மம்கொண்டு, உரிமைகொண்டு - பெரியார் படைப்புகளை அறவே முடக்கிவிடக்கூடிய ஆபத்து உண்டு.
2. தந்தை பெரியார் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் எழுத்தும் மாறாமல் - மாற்றப்படாமல் - அப்படியே அச்சாக வேண்டும். பார்ப்பான் என்ற சொல்லாக்கத்துக்குப் பதில் 'பிராமணர்’ என்று போட்டால் பொருளே மாறிவிடக்கூடும். 'பார்ப்பனரை 'பிராமணர்கள்’ என்று அழையாதீர் - உங்கள் சூத்திரப் பட்டம் ஒழிய’, என்பது பெரியார் வாசகம். இதை மாற்றினால் என்னவாகும்?
3. கடவுள் மறுப்புபோல புரட்சிகர வாசகங்கள் இடம்பெறாததோடு, திரித்தும் கூறி அச்சிட்டுப் பரப்பும் அபாயமும் உண்டு. எனவே, புத்தருக்கும் மற்ற புரட்சியாளருக்கும் ஏற்பட்ட ஜாதகக் கதை திரிபுகள்போல் பெரியாருக்கும் ஏற்படாது தடுப்பது எங்கள் கடமை.
4.காந்தியின் அறக்கட்டளை காந்தியாரின் நூல்களை தன் உடமையாக்கி உள்ளதே! அது தவறா? பாரதியாரின் பேத்தி, 'எங்கள் தாத்தாவின் பாடல்களில் பேதம் செய்யப்பட்டுள்ளன’ என்று கூறவில்லையா?
- இப்படி பலப்பல காரணங்கள் உள்ளன. நம் நாட்டில் ஊடுருவல்களுக்கும் திரிபுகளுக்கும் பஞ்சமா என்ன?
எங்களிடம் அனுமதிபெற்று எவர் வேண்டுமானாலும் அச்சிட்டுக்கொள்ள வேண்டும்; அதன் மூலம் திரிபுகள் தடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அதன் நோக்கமே தவிர, வேறு அல்ல. அதுவும்போக, பெரியார் நூல்களை நாங்கள் அச்சிட்டு, மலிவு விலையில் நாடு தழுவிய அளவில் பரப்பும் பணி தொடர் பணியாக உள்ளதே!''
நன்றி: விகடன்
வெங்காயம் விலை ஏறிவிட்டது - செய்தி
Posted by IdlyVadai at 9/04/2014 01:41:00 PM 5 comments
எனக்கு பிடித்த பத்து
அதே நடிகையிடம் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்றால் உடனே பானுமதி, சரோஜா தேவி என்பார்கள்.
சிலர் ஆர்னால்ட் ஸ்வார்செனகர், அல்லது அமிதாப் என்பார்கள். தற்கால நடிகர்கள், நடிகைகள் பெயரை யாரும் சொல்ல மாட்டார்கள்.
உங்களுக்கு பிடித்தப் பத்து புத்தகங்கள் பட்டியலில் திருக்குறள், புறநானூறு என்று பட்டியலை பார்த்தால் சமூகத்தின் இந்த பிரச்சினைக்கு ஏதோவொரு உளவியல் காரணம் கட்டாயம் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
Posted by IdlyVadai at 9/04/2014 10:19:00 AM 2 comments
Tuesday, September 02, 2014
ஆர்வ மிகுதி போஸ்ட்
Posted by IdlyVadai at 9/02/2014 08:02:00 PM 10 comments