ஆதௌ கீர்த்தனாரம்பத்திலேயிருந்து இன்றுவரைக்குமான ஹிந்துத்வ சிந்தனைகளை தொன்மம், மதம், அரசியல், சமூகம், மானுடம், பிரபஞ்சம் போன்றவைகளுடன் இணைத்து நமக்கு தந்துள்ள அருமையான ஓர் புத்தகம் என நான் அறிமுகம் செய்வேன்.
முதலில் இந்தப்புத்தகம் நமக்குக்காட்டுவது நாம் இன்றுவரை கண்டிராத ஓர் கதவு. இதுவரை வெறும் ஹிந்துவாக, இந்தியனாக இருந்த நாம் இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது நம்மைக் குறித்த உண்மையன பெருமையும், நமது தொன்மம் குறித்த மனவிலக்கங்களிலிருந்தும், நமக்கு போலி பகுத்தறிவுவாதிகளால் நம்மீது சுமத்தப்பட்ட குற்ற உணர்சியிலிருந்தும் விடுதலை பெறலாம்.
நமது கலாச்சாரத்துக்கும், பாரம்பரியத்துக்கும் சரித்திரத்துக்கும் , மேலை நாட்டு நாகரீகம் என நம்பப்படும் போலிகளிலிருந்து நாம் எவ்வளவுதூரம் மேம்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.
அதே மேலைநாட்டுக் கலாச்சாரங்களில் இருந்து வந்தவர்களிலும் மனச்சாட்சியுடன் நடந்த, இயற்கையை உணர்ந்த, புதிய உலகை, நம்பிக்கையை, திறப்பைக் கண்டவர்களையும் நமக்கு அறிமுகம் செய்கிறது இந்த புத்தகம்.
கம்யூனிஸம் என்ற சமூகத்தீமை (இது என் நம்பிக்கை) மானுடத்திற்கு ஆற்றிய அளப்பரிய கொடுமைகளையும், மூர்க்கத்தனமான சிந்தனைகளால் எப்படி அறிவியலை எதிர்த்தது என்பதையும், தான் நம்பிய கொள்கைகளே சரி என்ற மமதையில் எப்படி இயற்கையை அடிமையாக்க முயன்றனர் என்பதையும் அதற்கு இயற்கை அளித்த எதிர்வினைகளையும் குளிகையாக்கி தந்துள்ளார்.
பல புத்தகங்களில் நாம் வாசித்து தெளியவேண்டியதை நமக்காக இச்சிறு புத்தகத்தில் மிக அழகாக புரியும் மொழியில் விளக்கியுள்ளார்.
அடிமைவியாபாரம் குறித்த பகுதிகளை படிக்க, படிக்க ஆத்திரமும், கோபமுமே மேலோங்குகிறது. இப்படிப்பட்ட கீழ்த்தரமான சிந்தனைகளுடன், மானுடவிரோதிகளாக இருந்த ஐரோப்பியர்களுக்கு எப்படி உலகை திருத்த எண்ணம் வந்ததோ? மறந்தும் அடிமைகளை மனிதர்களாக கூட நடத்தாமல் இருக்கும் அடிமைகள் இறந்துவிட்டால் கரும்புத்தோட்டத்திற்கு என்ன செய்வது எப்படி ஆட்களை எங்கிருந்து கொண்டுவருவது என்பது பற்றிய சிந்தனைகளில் இருந்தவர்கள்தான் தங்களை உலகை ரட்சிக்க வந்தவர்களாக சொல்லிக்கொண்டவர்கள், சொல்லிக்கொள்கிறவர்கள்.
நமது பாரம்பரிய மருத்துவமுறைகள் எப்படி மேற்குலகால் களவாடப்பட்டது என்பதும், அது எப்படி மீளப்பெறப்பட்டது என்பதும், மேலும் களவாடப்படாமல் தடுக்க இந்தியாவில் இருந்த சுயநலமற்ற மக்கள் எப்படி பாரம்பரிய மருத்துவ பயன்கள் உள்ள பட்டியலை தயாரித்து இந்திய மருத்துவ பயன்களுள்ள செடிகள், மரங்களையும், மருத்துவ முறைகளையும் களவாணித்தனமாக பேடெண்ட் செய்யமுயலும் கார்பரேட் அரக்கர்களிடமிருந்து காப்பாற்றினர் என்பதையும் படிக்கும்போது நம் நாட்டின் மீதான, பாரதத்தாயின் புதல்வர்களின் மீதான நம்பிக்கை கூடுகிறது.
பாரம்பரிய நெல்மணிகளை காப்பாற்றிய ஒருவரை நம் இந்திய அரசாங்கம் எவ்வளவு தூரம் கீழ்மைப்படுத்தியது என்பதையும், கடைசியில் அரசாங்கம் அவரது எதிர்ப்பைச் சமாளிக்க அவரையே பதவியில் இருந்து நீக்கியதும், மீண்டும் அவர் மனம் தளராமல் பாரம்பரிய நெல் சேகரிப்பை தொடர்ந்ததும் அதற்கு ஏற்பட்ட சிக்கல்களையும் படிக்கும்போது நம்மை ஆண்ட காங்கிரஸின் கோர முகம் தெரிகிறது. வெளிநாடுகளின் காலை நக்கிப் பிழைப்பதையும், அவர்களுக்கு அடிமைச்சேவை செய்வதையுமே காங்கிரஸ் 60 ஆண்டுகளாக செய்திருக்கிறது. நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்த கட்சி என்ற பெருமையை வைத்து மக்களை ஏமாற்றி உண்டு கொழுக்கும் கார்ப்பரேட் ரவுடிகளின் அடிமைச்சேவகர்களாகத்தான் இன்றைய காங்கிரஸ் இருந்திருக்கிறது.
இஸ்லாமியர்களை நம்பிச்சென்ற மேற்கு வங்கத்தின் மண்டலையும், அவரை நம்பிச்சென்ற தலித்துகளையும் நினைக்கும்போது பரிதாபம் மேலிடவில்லை. தெரிந்து பாழுங்கினற்றில் விழுந்த ஒருவராகத்தான் நினைக்கத்தோன்றுகிறது. இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் தலித்தலைவரும் அதே பாழுங்கினற்றில் விழுந்திருக்கிறார் என்பதற்கு அம்பேத்கர் சிலையை முஸ்லீம் அடிப்படைவாதிகளை திருப்தி செய்வதற்காக அகற்றியதிலிருந்தே நாம் அறியலாம். அன்றைக்கு மண்டலுக்கு ஏற்பட்ட கதியையே தனக்கும், தன்னை நம்பி வருவோர்க்கும் கொடுக்க காத்திருக்கிறார். இன்றைய சொந்த லாபங்கள் அவருக்கு வருங்காலத்தில் ஏற்படப்போகும் பேரழிவை காணும் சக்தியை மறைக்கிறது. நாளை அந்த பேரழிவு நடக்கும்போது எல்லாமே காலம் கடந்துவிட்டிருக்கும். இந்துக்களாக இருப்பதைத்தவிர, இந்துக்களாக இருந்துகொண்டே உரிமைக்கு போரிடுவதைத்தவிர வேறு எந்த வழியும் அவர்களின் பேரழிவுக்கே இட்டுச் செல்லும் என்பதை அம்பேத்கர் உணர்ந்திருக்கிறார்.
அயோத்தி பிரச்சினையில் நம் போலி மதச்சார்பின்மை மகாத்மாக்கள் ஆடிய நாடகங்கள், பொய், புரட்டுகள் எல்லாவற்றையும் ஆதரத்துடன் சொல்கிறது இந்தப் புத்தகம். எனக்கும் பல விஷயங்கள் இதில் புதிதாய் தெரிந்தன.
ஜூராஸிக் பார்க் படத்தில் வரும் வசனத்தை வைத்து செயற்கை மரபனுக்களுடன் உருவாக்கப்பட்ட உணவு தனியங்களின் பயிர்கள் எப்படி சூழலை சமாளிக்க முடியாமல் பலவித நோய்களுக்கு ஆட்பட்டன, பின்னர் அதைச் சமாளிக்க என்னென்ன்ன விஷங்களை மருந்துகள் என்ற பெயரிலும், உரங்கள் என்ற பெயரிலும் இட்டு நம் நிலத்தை பாழாக்கினோம் என விளக்குகிறார். இறுதியில் நாம் டைனோசர்களின் பாதையில் செல்கிறோமா எனக் கேட்கிறார். ஆம் என்பதுதான் பதிலாக இருக்க முடியும். ஆனால், அதை நம்மிடமே விட்டுவிடுகிறார்.
கஜினி முகமதுவையும், ராஜ ராஜ சோழனையும் ஒப்பிட்டு எழுதிய கட்டுரை ஒன்றுபோதும். இந்து தர்மத்தின் பெருமையைச் சொல்ல. எதிரிகளை வென்றாலும் அவர்கள் மதத்தை பரப்ப இடம் கொடுத்த கலாச்சாரம் எங்கே?, எதிரிகளின் சமய சம்பந்தப்பட்ட அனைத்தையும் ஒழித்த இஸ்லாமிய அடிப்படைவாதம் எங்கே? அதன் தொடர்ச்சி இன்றுவரை பாமியான் புத்தரை பீரங்கியால் பிளந்தது, இன்றைக்கு ஈராக்கில் ஷியாக்களின் புனித மசூதிகளையும், கபர்ஸ்தான்களையும் அழிப்பதில் வந்து நிற்பதுவரை சகிப்புத்தன்மைக்கும் எங்களுக்கும் காத தூரம் என்பதை வரலாறு முழுக்க இடைவிடாது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள், செய்துகான்பித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
காட்டுக்களவாணிகள் என்ற கட்டுரையில் எப்படி ஆதிவாசிகளின் எல்லா நம்பிக்கையையும் மறுத்து அவர்களை கிறிஸ்தவர்களாக்க முனைந்து, அவர்களை ஒடுக்கினார்கள் என்பதையும், பின்னர் அவர்களின் இறைவேசிகள் என்றழைக்கப்படும் ஷாமன்களின் மருத்துவம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் திருடி அதை கார்ப்பரேட் வணிகமாக்கினர் என்பதையும் சொல்கிறார். அதன் சிறந்த எடுத்துக்காட்டாக நம்மூர் வெங்காய தோசையை ஆனியன் பீட்சா என வெள்ளைக்காரன் மீண்டும் கொண்டுவந்து கொடுத்தால் 3 விலை கூடக்கொடுத்து தின்னும் மனநிலையில் வெள்ளைக்கார பொருட்களின் மீது மோகம் கொண்டலைகிறோம் என்பதையும் சொல்கிறார்.
சகோதரன் என்ற கட்டுரையில் இந்திரா பார்த்தசாரதியின் அவுரங்கசீப் நாடகத்தை முன்வைத்து நாம் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாமல் இருப்பதையும், வரலாறு முழுக்க ஒருவருகொருவர் காட்டிக்கொடுத்தே காணாமல் போனதையும் சுட்டிக்காட்டுகிறார்.
காடுமிராண்டிச் சடங்காக கருதப்பட்ட தீமிதித்தல் இன்றைக்கு மேலை நாடுகளில் எப்படி பிரச்சினைகளை எதிர்கொள்ள ஒரு பயிற்சியாக பயன்படுத்தப்படுகிறது எனச் சொல்கிறார். நம்மை காட்டுமிராண்டி என சொல்லிவிட்டு அதையே தான் பயன்படுத்துவதன் மூலம் எப்படி நம் கலாச்சாரம் திருடப்படுகிறது என்பதற்கு ஓர் உதாரனமாகக் கொள்ளலாம்.
சதி என்ற அத்தியாயத்தில் எப்படி யூதர்களுக்கு எதிராக போலியாக உருவாக்கப்பட்ட ஒரு புத்தகத்தை வைத்து வெறுப்பை உமிழ்ந்தனர் எனக்காட்டுகிறது. நம் நாட்டிலும் பிராமண சமுதாயத்துக்கு எதிராக திராவிடர்க்கழகம் என்ற பெயரில் இயங்கும் நச்சுக் கும்பல்கள் செய்த செயல்களும் (குடுமி அறுப்பு, பூணூல அறுப்பு) அதன் தலைவரான ராமசாமி நாயக்கர் பாம்பையும், பாப்பானையும் கண்டால் பாம்பை விட்டுவிட்டு பாப்பானை அடி என்று வெறுப்பை உமிழ்ந்ததும் வரலாறு. அவரைத்தான் இன்றைக்கு பகுத்தறிவு பகலவன் என தமிழ்ச்சமூகத்தின் ஒரு சிறு குழு கொண்டாடுகிறது. இதே மேற்குலகாய் இருந்திருந்தால் யூதர்களுக்கு ஏற்பட்ட கதியே பிராமணர்களுக்கும் ஏற்பட்டிருக்கும். ஆனால், இந்து பண்பாட்டின் எதையும் ஆராய்ந்து நோக்கும் தன்மை இப்படிப்பட்ட விஷப்பிரச்சாரத்தை நகைச்சுவையாக எடுத்துகொண்டது. ஆனால், இப்போது மேலும் விஷமான பிரச்சாரங்கள் பிராமணர்கள் மீது நடத்தப்படுவதாக தெரிகிறது. நாசமாப்போறவன் தான் மட்டும் போகாம ஒரு சமூகத்தையே நாசமாக்கிவிட்டுத்தான் ஓய்வார்கள் போல. கிறிஸ்தவ எவாஞ்சலிக்கல் கும்பல்களும், இஸ்லாமிய அடிப்படைவாத கும்பல்களும் இந்தியாவில் நடத்த விரும்புவது இதையே.
இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் யூத வெறுப்பை நான் நேரடியாக கண்டிருக்கிறேன். அவர்களைப் பற்றி பேச்சு எழுந்தாலே முகத்தில் எழும் வெறுப்பும் அவர்களைப்பற்றி பேசநேர்ந்ததற்காக ஏற்படும் எரிச்சலையும் காணலாம். இஸ்லாமியர்களின் பார்வையில்
ஈரான் – ஈராக் போர் – யூத சதி
ஈராக் – குவைத் போர் – யூத சதி
பஹ்ரெய்னில் குழப்பம் – யூத சதி
எகிப்தில் மக்கள் கொந்தளிப்பு – யூத சதி
சிரியாவில் குழப்பம் – யூத சதி
என இப்படி மத்திய கிழக்கில் நடக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அவர்கள் ஆய்ந்தறிந்த விடை யூத சதி என்பது மட்டுமே. இதுதான் அவர்களின் கையாலாகாத தனத்துக்கும், அவர்களுக்குள் அடித்துக்கொண்டு சாகும்போதும், அவர்களுக்குள்ளும், வெளியிலிருந்தும் வாங்கும் அடிகளுக்கும் அவர்களுக்குள்ளேயே சமாதானம் அடைய இதுதான் பேருதவியாய் இருக்கிறது.
ஒர் அருமையான பொக்கிஷம் இந்நூல் என்பேன். அடிக்கடி நாம் எடுத்து வாசிக்க வேண்டிய புத்தகமும் கூட. எத்தனை காலம் நாம் ஏமாளிகளாய் இருந்திருக்கிறோம் என்பதை தெரிந்துகொள்ளவும், இன்றும் நம்மை ஏமாற்றுவோர் யார் என்பதையும், நமது பாரம்பரியம் என்ன, கலாச்சாரம் என்ன, கடவுள் நம்பிக்கை குறித்த அடிப்படையான கேள்விகள், உலக சரித்திரத்தில் நடந்த கொடும் நிகழ்வுகள் குறித்து வரலாற்றுப்பார்வை என எல்லாவற்றையும் கொண்டு ஆனால் மிகச் சிறிய புத்தகமாக (160 பக்கங்கள்) வந்துள்ளது.
நாம் அனைவரும் வாசிக்க வேண்டிய அருமையான புத்தகம் நம்பக்கூடாத கடவுள்.
புத்தகத்தில் பிடித்த வரிகள்..
“இத்தனைகோடி மக்கள் இருந்தும் முக்கி முக்கி ஒருமெடல்தானே நம்மால் எடுக்க முடிகிறது. ஆனால் சீனாவைப்பார் என நாம் அங்கலாய்க்கலாம். ஆனால் சீனாவின் சுரங்கங்களுக்குள் இறங்கிக் கரியெடுக்கும் தொழிலாளிக்கு இந்திய ஜனநாயகம் என்பது கைக்கெட்டாத தூரத்தில் இருக்கும் உயிர் காக்கும் அமுதம். “
“பிரணவம் பிரம்மத்தின் ஆன்மாவினுடைய ஒலிவடிவம். “அவையே தானேயாய்.. நீக்கமின்றி நிற்குமன்றே” என்கிறது சிவஞான போத சூத்திரம். உயிர்களனைத்தும் நீக்கமற நிற்கும் இறைத்தத்துவம் என்பது பாரத பண்பாட்டுக்குரல்.”
“அறிவியல் அமைப்புகளிடையே சர்வதேச அளவில் அறிவுப்பரிமாற்றம் தேவைதான். ஆனால், அது பரிமாற்றமாக இருக்க வேண்டும். கப்பமாக அல்ல.”
”ஆனால் இணைத்தன்மைகள் இத்துடன் முடிந்துவிடவில்லை. எலி வீஸல் தனது வதை முகாம் நினைவுகளின் நாவலான “இரவு” என்பதில் பைத்தியக்கார மோசே எனும் பாத்திரத்தைக் காட்டுகிறார். அவன், தான் சென்றிருந்த இடங்களில் நாஸிகள் செய்யும் பயங்கரங்களைக்கூறும்போது, அதை நம்பாமல், அந்த வடக்கு ட்ரான்ஸில்வேனிய ஊரின் யூதர்கள், மோசேயைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். அந்த யூதர்களைப்போலவே 1947க்குமுன்னால் பாக்கிஸ்தானிய சிந்திகள் சிரித்திருக்கக்கூடும், 1971க்கு முன்னால் பங்களாதேஷின் சங்மாக்கள் சிரித்திருக்கக்கூடும்.1988க்கு முன்னால் காஷ்மீர பண்டிட்டுகள் சிரித்திருக்கக்கூடும். 2010ல் இலவச கலர் டீவிகளுக்கு முன்னால் அமர்ந்து தமிழர்கள் சிரிப்பதைப்போல.”
15 Comments:
This is an out and out hate book. Govt should ban it.
Saravanan
/* அடிமைவியாபாரம் குறித்த பகுதிகளை படிக்க, படிக்க ஆத்திரமும், கோபமுமே மேலோங்குகிறது. இப்படிப்பட்ட கீழ்த்தரமான சிந்தனைகளுடன், மானுடவிரோதிகளாக இருந்த ஐரோப்பியர்களுக்கு எப்படி உலகை திருத்த எண்ணம் வந்ததோ? */
அது சரி, காலிலிருந்து பிறந்தவன் என்று இன்றைய 21ம் நூற்றாண்டில்கூட அடிமையாக நடத்துவது கீழ்த்தரமான சிந்தனை இல்லையா?
//This is an out and out hate book. Govt should ban it.// கரெக்டு பாஸ். அந்தப்புத்தகத்த படிச்சு தெரிஞ்சு தடை கேட்கும் “சரவணன்” நீங்கங்கிறத நல்லா புரிஞ்சிகிட்டேன். ஏண்டா, இப்டி முக்காடு போட்டுட்டு வாரீங்க?
நானும் சரவணன் தான்ப்பா..
//This is an out and out hate book. Govt should ban it.// கரெக்டு பாஸ். அந்தப்புத்தகத்த படிச்சு தெரிஞ்சு தடை கேட்கும் “சரவணன்” நீங்கங்கிறத நல்லா புரிஞ்சிகிட்டேன். ஏண்டா, இப்டி முக்காடு போட்டுட்டு வாரீங்க?
நானும் சரவணன் தான்ப்பா..
//This is an out and out hate book. Govt should ban it.// கரெக்டு பாஸ். அந்தப்புத்தகத்த படிச்சு தெரிஞ்சு தடை கேட்கும் “சரவணன்” நீங்கங்கிறத நல்லா புரிஞ்சிகிட்டேன். ஏண்டா, இப்டி முக்காடு போட்டுட்டு வாரீங்க?
நானும் சரவணன் தான்ப்பா..
//This is an out and out hate book. Govt should ban it.// கரெக்டு பாஸ். அந்தப்புத்தகத்த படிச்சு தெரிஞ்சு தடை கேட்கும் “சரவணன்” நீங்கங்கிறத நல்லா புரிஞ்சிகிட்டேன். ஏண்டா, இப்டி முக்காடு போட்டுட்டு வாரீங்க?
நானும் சரவணன் தான்ப்பா..
//அது சரி, காலிலிருந்து பிறந்தவன் என்று இன்றைய 21ம் நூற்றாண்டில்கூட அடிமையாக நடத்துவது கீழ்த்தரமான சிந்தனை இல்லையா? // பல ஆண்டுகள் காடு மலை சுற்றிவிட்டு இப்போதுதான் நாட்டுக்குள் வருகிறீர்களா கிறுக்கன்?
இன்றைக்கு தீண்டாமையைக் கடைப்பிடித்தால் யாராயிருந்தாலும் ஜெயிலுக்குப் போகவேண்டும் என்பதே உண்மை.
அருமையான பதிவு. புத்தகத்தை அறிமுகப்படுத்தியதிற்கு நன்றி.
http://tl.gd/n_1s2di9m
Pappara patti, Dharmapuri sambavam ellam indha bookil iruka
மதிப்புமிக்க திருவாளர் கிறுக்கன் அவர்களுக்கு தாங்கள் 'காலில் இருந்து பிறந்தவன்' என்று கூறுவது கீழ்த்தரமானது என்று எப்படி கூறுகின்றீர்கள். உங்கள் வாதப்படி, இடித்து கை மோசமானதா ? அல்லது ஆண் பெண் மர்ம உருப்புகள் அருவருப்பானதா ? இந்தியாவில் அடிமைத்தனம் என்றும் இருந்ததில்லை. ஒரு சாரார் ஒதுக்கி இருந்தார்கள், அவ்வளவே. நீங்கள் கூறுவதில் இருந்து நான் புரிந்துகொண்டது - நீங்கள் பிரித்தாளும் சூழ்ச்சியுடன் ஆங்கிலேயர் ஏற்படுத்திய சரித்திரத்திற்கு பழக்கப் படித்துவிடீர்கள் என்பதே. திறந்த மனது உங்களுக்கு இல்லை...
அப்படியென்றால் கோவிலுக்கு சில நாயன்மார்களுக்கும், திருப்பாணாழ்வாருக்கும் ஏன் அனுமதி மறுக்கப்பட்டது. அப்புறம் இறைவனே நேரில் வந்து கேட்டுக்கொள்ளும்படி ஆனது. சொல்ல முடியுமா ஹரி கிருஷ்ணா
என்ன சார் பளிச்சனு உண்மைய சொல்லிட்டடிங்க.......உண்மை சுடும் சார்
///சதி என்ற அத்தியாயத்தில் எப்படி யூதர்களுக்கு எதிராக போலியாக உருவாக்கப்பட்ட ஒரு புத்தகத்தை வைத்து வெறுப்பை உமிழ்ந்தனர் எனக்காட்டுகிறது. நம் நாட்டிலும் பிராமண சமுதாயத்துக்கு எதிராக திராவிடர்க்கழகம் என்ற பெயரில் இயங்கும் நச்சுக் கும்பல்கள் செய்த செயல்களும் (குடுமி அறுப்பு, பூணூல அறுப்பு) அதன் தலைவரான ராமசாமி நாயக்கர் பாம்பையும், பாப்பானையும் கண்டால் பாம்பை விட்டுவிட்டு பாப்பானை அடி என்று வெறுப்பை உமிழ்ந்ததும் வரலாறு. அவரைத்தான் இன்றைக்கு பகுத்தறிவு பகலவன் என தமிழ்ச்சமூகத்தின் ஒரு சிறு குழு கொண்டாடுகிறது. இதே மேற்குலகாய் இருந்திருந்தால் யூதர்களுக்கு ஏற்பட்ட கதியே பிராமணர்களுக்கும் ஏற்பட்டிருக்கும். ஆனால், இந்து பண்பாட்டின் எதையும் ஆராய்ந்து நோக்கும் தன்மை இப்படிப்பட்ட விஷப்பிரச்சாரத்தை நகைச்சுவையாக எடுத்துகொண்டது. ஆனால், இப்போது மேலும் விஷமான பிரச்சாரங்கள் பிராமணர்கள் மீது நடத்தப்படுவதாக தெரிகிறது. நாசமாப்போறவன் தான் மட்டும் போகாம ஒரு சமூகத்தையே நாசமாக்கிவிட்டுத்தான் ஓய்வார்கள் போல. கிறிஸ்தவ எவாஞ்சலிக்கல் கும்பல்களும், இஸ்லாமிய அடிப்படைவாத கும்பல்களும் இந்தியாவில் நடத்த விரும்புவது இதையே.//
இங்கே ஆப்ரஹாமிய மதங்கள் வரும் முன்னரே சமணமும் பௌத்தமும் அந்த வேலையை செய்ததை மறக்கலாமோ?சங்கம் மருவிய காலத்தில் பாண்டியர்களின் அரண்மனை தூண்களுக்குள் ஒளிந்து கொண்டிருந்த சனாதனம் பின்னர் மூச்சு விட கூன் பாண்டியனின் கூனை நிமிர்த்தும் வரை ஆயிற்றே அண்ணா!மறந்துட்டியளே!
//இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் யூத வெறுப்பை நான் நேரடியாக கண்டிருக்கிறேன். அவர்களைப் பற்றி பேச்சு எழுந்தாலே முகத்தில் எழும் வெறுப்பும் அவர்களைப்பற்றி பேசநேர்ந்ததற்காக ஏற்படும் எரிச்சலையும் காணலாம். இஸ்லாமியர்களின் பார்வையில்
ஈரான் – ஈராக் போர் – யூத சதி
ஈராக் – குவைத் போர் – யூத சதி
பஹ்ரெய்னில் குழப்பம் – யூத சதி
எகிப்தில் மக்கள் கொந்தளிப்பு – யூத சதி
சிரியாவில் குழப்பம் – யூத சதி //
ஹிட்லரின் ஸ்வஸ்திக்கை கூட பார்த்ததும் இவன் நம்மாளு என்று சொல்லும் வெறியர்களை கொண்ட கூட்டம் இப்பொழுது கிளம்பியிருக்கிறது ஒன்றுதான்-2015 வருட இந்திய சரித்திரம் கண்ட வளர்ச்சி-கிருஸ்துவுக்கு பின்னர்.
கிருஸ்துவுக்கு முன்னர்-முடி வெட்டும் தொழிலாளியின் மகளுக்கு பிறந்தவன் என்று தீண்டாமை பேசி-மஹா பத்ம நந்தனில் ஆரம்பித்து தன நந்தன் வரை வதைத்த ஒரு கூட்டம் அது.
அந்த சாணக்யன் வளர்த்து விட்ட சந்திர குபதன்-தன் முதுமையில் சனாதன அரிதாரம் களைந்து சிரவண பெல்கோலாவில் சமண துறவி பாகு பலியுடன் முக்தி அடைந்தான் என்ற உண்மையை மறக்கலாமா அண்ணா ?
அஜித் வடக்காயில் ப்ளாக்குகள் வாசித்ததில்லையோ?
ajit vadakayil
http://ajitvadakayil.blogspot.in/
Post a Comment