பிறந்த நாள் வாழ்த்துகள் !
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Tuesday, February 25, 2014
அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் - V1.0
பிறந்த நாள் வாழ்த்துகள் !
Posted by IdlyVadai at 2/25/2014 06:33:00 AM 8 comments
Labels: செய்தி
Thursday, February 20, 2014
துன்பியல் சம்பவம்
தேவை இல்லாத தாமதம் காரணமாக உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது சரி என்றாலும், ஒரு தீவிரவாதி கூட்டத்துக்கு, அதுவும் ‘அமைதிப் பூங்கா’ என்று பேர் எடுத்த தமிழகத்தில் முன்னாள் பிரதமர், போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் என்று காவு வாங்கிய கூட்டத்தை விடுதலை செய்வது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
நாளை ஒருவர் தண்டனைக்கு உள்ளானால், மத்திய அரசு. ஜனாதிபதி, வக்கீல்கள் இழுத்தடித்தால் அவருக்கு ஆயுள் தண்டனையும், மாநில அரசு நினைத்தால் அவருக்கு விடுதலை கிடைக்கும் என்ற மோசமான முன் உதாரணமாக இது அமையக் கூடும். அதோடு இல்லாமல், இந்தியாவில் தீவிரவாதிகள் குண்டு வைத்து மாட்டிக்கொண்டால் விடுதலை கிடைக்க வாய்ப்பு இருக்கு என்று அகிவிடும். நாட்டின் பாதுகாப்பிற்கே இது ஒரு சவாலாகிவிடும்.
உடனடியாக உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு இந்த கூத்தை நிறுத்த வேண்டும்.
ஜெயலலிதாவின் இந்த மூவ் அரசியலில் பலருக்கு ‘செக் மேட்’ வைக்க உதவும், ஆனால் உயர் நீதி மன்றம் முன் இருக்கும் மனுநீதி சோழனுடைய சிலை ஒரு வரலாற்று முரணாகிவிடும்.
Posted by IdlyVadai at 2/20/2014 06:30:00 AM 34 comments
Labels: செய்திவிமர்சனம்
Tuesday, February 18, 2014
எட்டு வயது தான் !
பெரியவர்கள் எம்.ஏ வைஷ்ணவம், வரலாறு என்று படிக்க சின்னவர்கள் டான்ஸ் ஆடுகிறார்கள். India has got talent !!
Posted by IdlyVadai at 2/18/2014 01:37:00 PM 1 comments
Labels: வீடியோ
Sunday, February 16, 2014
Friday, February 14, 2014
Thursday, February 13, 2014
எஸ்.வி.சேகர் பேட்டி - Exclusive
எஸ்.வி.சேகர் பேட்டி என்று முடிவு செய்தவுடன், யார் அவரை பேட்டி எடுத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்த போது, அவரே பத்ரி என்று சொல்லிவிட்டார். பத்ரியை தொடர்பு கொண்ட போது ’பார்க்கலாம்’ என்று ஜகா வாங்காமல், உடனே தேதி கொடுத்திவிட்டு, பதிவு செய்து youtubeலும் போட்டுவிட்டார். அவருக்கு எங்கள் ஸ்பெஷல் நன்றி.
நன்றி: எஸ்.வி.சேகர்,
ஸ்பெஷல் நன்றி: பத்ரி,
கொசுறு நன்றி: இந்த பேட்டிக்கு மறைமுகமாக உதவி செய்தவர்களுக்கும், கேமரா எடுத்த நபருக்கும்... :-)
அடுத்தது யாரை பேட்டி எடுக்கலாம் ?
Posted by IdlyVadai at 2/13/2014 01:12:00 PM 16 comments
Labels: இட்லிவடை ஸ்பெஷல், பேட்டி, வீடியோ
Wednesday, February 12, 2014
இன்று முட்டாள்கள் தினம்
டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும், மின் கட்டணம் செலுத்தாமல் போராட்டம் நடத்தினர். காங்கிரஸில் ஆதரவில் அந்த கட்சி ஆட்சி அமைத்து தினமும் ஏதாவது செய்துக்கொண்டு யாராவது ஆட்சியை கலைப்பார்களா என்று பார்த்துக்கொண்டு இருக்கிறது. அதன் வரிசையில் இன்று ஒரு புதிய அறிவிப்பை கெஜ்ரிவால் அரசு வெளியிட்டுள்ளது. அதில் டெல்லியில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2012 ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் மின் கட்டணம் செலுத்தாமல் போராட்டம் நடத்தியவர்களுக்கு மின் கட்டணத்தில் 50 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளதாக கெஜ்ரிவால் அரசு அறிவித்துள்ளது. மேலும், அபராதம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி அறிவிப்பின் மூலம் அரசு ரூ. 6 கோடி அளிக்க வேண்டும்.
ஒழுங்காக சட்டத்தை மதித்து மின்சாரக் கட்டணம் செலுத்தியவர்கள் முட்டாள்கள், சட்டத்தை மதிக்காதவர்களுக்கு பரிசு. சினிமாவில் நடக்கும் ஸ்டண்டை விட இவர்கள் செய்யும் ஸ்டண்ட் பிரமாதம். 6 கோடி யார் வீட்டு பணம் ?
படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற நம்பிக்கை போய்விட்டது!
Posted by IdlyVadai at 2/12/2014 07:27:00 PM 10 comments
Labels: செய்திவிமர்சனம்
மீண்டும் இட்லிவடை
இட்லிவடை வந்தாச்சு, அடுத்து மோடி தான்!
பிகு: எஸ்.வி.சேகர் பேட்டி முடிந்துவிட்டது... கூடிய விரைவில்.. இட்லிவடையில்..
Posted by IdlyVadai at 2/12/2014 09:42:00 AM 13 comments
Labels: அறிவிப்பு
Wednesday, February 05, 2014
டோண்டு ராகவன் -முதல் ஆண்டு நினைவஞ்சலி -5 பிப் 2014 - எ.அ.பாலா
http://balaji_ammu.blogspot.in/2013/02/blog-post.html
பின்னர் சற்று விரிவாக ஒரு அஞ்சலி இடுகையும் பதிந்திருந்தேன். பார்க்க:
http://balaji_ammu.blogspot.in/2013/02/blog-post_6.html
அவரது கருத்துகளுக்கும், சார்புகளுக்கும் அவரைத் தீவிரமாக எதிர்த்தவர்கள் கூட தனிப்பட்ட அளவில் அவரிடம் நட்பு பாராட்டினார்கள், அவரை மதித்தார்கள்! அவரும் அவ்வண்ணமே அனைவரிடமும் நட்பு பாராட்டிய மனிதர். டோண்டு அவர்கள் தமிழ், ஆங்கிலம், பிரென்ச், ஜெர்மன் என்று 4 மொழிகளில் புலமையோடு, இறுதி நாள் வரை, ஒரு கன்ஸல்டண்ட்டாக மொழி பெயர்த்தல் பணியை செய்து வந்தார். துக்ளக் ஆண்டு விழாக்களை அவரைப் போல கவர் செய்து பல தகவல்களையும், தனது விமர்சனங்களையும் தனது இடுகைகள் வாயிலாக பகிர்ந்து கொண்டவர் யாரும் கிடையாது. சென்ற வருடம் (ஜனவரி 2013) மட்டும் தான் உடல்நிலை காரணமாக துக்ளக் ஆண்டு விழாவுக்கு செல்லவில்லை என்பதை ஜிசாட்டில் இட்லிவடையிடம் அவரே தெரிவித்திருந்தார். பார்க்க:
http://idlyvadai.blogspot.in/2013/02/blog-post_6623.html
வாடிக்கையாளரை அணுகும் முறைகள், நங்கநல்லூர் பஞ்சாமிர்தம், தன்னம்பிக்கை, டோண்டு பதில்கள் என்ற லேபில்களில் அவர் எழுதிய இடுகைகள் பலரால் வாசிக்கப்பட்ட பிரபலமான இடுகைகள். மனிதர் சளைக்காமல், பின்னூட்டக் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தவர். அதுவும் அவருக்கு ஏராளமான வாசகர்கள்/ரசிகர்கள் அமையக் காரணமாய் இருந்தது! பின்னூட்டச் சண்டைகளும் போடுவார்... கடந்த ஓர் ஆண்டு காலமாக டோண்டு என்ற பெயரை தமிழ்மணம் வலைத்தளத்தில் பார்க்க முடியாதது மனதை என்னவோ செய்கிறது :-(
எந்தரோ மகானுபாவுலு அந்தரிகி வந்தனமு.....!
---எ.அ.பாலா
:-(
Posted by IdlyVadai at 2/05/2014 03:34:00 PM 4 comments
இட்லிவடைக்கு மீண்டும் எஸ்.வி.சேகர் பேட்டி
பேட்டி இந்த வாரம் சனிக்கிழமை நடைபெறும். வாசகர்கள் கேள்விகளை பின்னூட்டத்தில் கேட்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் கேள்விகள் அவரிடம் கேட்கப்படும்.
அன்புடன்,
இட்லிவடை
Posted by IdlyVadai at 2/05/2014 09:43:00 AM 0 comments
Labels: இட்லிவடை ஸ்பெஷல், எஸ்.வி.சேகர், பேட்டி
Sunday, February 02, 2014
தேமுதிக, பிஜேபி கூட்டணி
விஜயகாந்த் கூட்டணி இல்லை என்று கட்சி தொடங்கினாலும், அவர் எந்த கூட்டணிக்கு போவார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக தற்போது ஆகிவிட்டது. அவருக்கு என்ன ஆப்ஷன் இருக்கிறது ? காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால் எல்லோரும் சிரிப்பார்கள். அதனால் அவருக்கு இப்போ இருப்பது ஒரே ஒரு ஆப்ஷன் தான் - பிஜேபி. தற்போது மோடி அலையில் சேர்ந்து கரை சேர முடியுமா என்று யோஜிப்பார் என்று நினைக்கிறேன்.
பா.ம.கவும் தற்போது பிஜேபி என்று முடிவு செய்துவிட்டால் அங்கே கேப்டனுடன் எப்படி சகித்துக்கொண்டு போகிறார்கள் என்று பார்க்க வேண்டும். கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த இந்தக் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டும் மண்ணைக் கவ்வ வேண்டும். முரசு கொட்டி புலிகள் அனுதாபிகள் பாஜகவுடன் சேர்ந்தால் சுப்பிரமணியன் ஸ்வாமி நிலைமை பாவம்தான்.
வடிவேலு எங்கே இருக்கிறார் ?
Posted by IdlyVadai at 2/02/2014 07:00:00 PM 10 comments
Labels: அரசியல்