பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 30, 2013

லாலு பிரசாத் யாதவ்


அப்பாடா, முதல் முறையாக சட்டத்தினால் ஒருவருக்கு பதவி போயிருக்கிறது. அவர் கொள்ளை அடித்த பணம் எங்கே ?

இவரை காபாத்தவே இந்த அரசு அவசர சட்டம் கொண்டு வர முயன்றது என்று தெரிகிறது.

Read More...

Saturday, September 28, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - FIR

முதல் காட்சியில் நடுரோட்டில் ஒருவர் அடிப்பட்டு கிடக்க மங்கலான காட்சி அமைப்பில் என்ன என்று நமக்கு ஆவலை ஏற்படுத்தி அதை கடைசி காட்சி வரை எடுத்து செல்கிறார் மிஷ்கின்.

த்ரில்லர் படம் என்றால் அமைதியான காட்சியில் ஒரு பூனையை கத்தவிடுவது, அல்லது யாராவது அலறுவது என்று தமிழ் சினிமாவி ஃபார்முலா இதில் இல்லை.

திரைக்கதை, எடிட்டிங், இசை இரண்டு முக்கிய கதாப்பாத்திரங்களின் நடிப்பு ஆகியவை இந்த படத்தின் பலம்.

யுத்தம் செய் படத்தில் இருந்த அதே விறுவிறுப்பு இந்த படத்திலும். ஆனால் கடைசில் மிஷ்கின் சொல்லும் ஓநாயும் ஆட்டுக்குட்டி கதை எவ்வளவு பேருக்கு புரியும் என்று தெரியாது. இவ்வளவு விறுவிறுப்பான படத்துக்கு இந்த  பிளாட் சுமார் தான். நல்ல ப்ளாஷ் பாக் காட்சிகளாக சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். படம் முழுவதும் பல கேள்விகள் நமக்கு வருகிறது அதை எல்லாம் ஒரு நீதி கதை மூலம் சொல்லும் போது பார்ப்பவர்களுக்கு அந்த Impact வருவது ரொம்ப கஷ்டம். இந்த மாதிரி ஒரு கதைக்கு ஒரு நல்ல heavy ஆன ப்ளாஷ் பாக் இல்லாதது ஒரு பெரிய குறை.

பழைய நீதிக்கதையை கொஞ்சம் இந்த காலத்துக்கு மாற்றி ஒரு த்ரில்லர் கொடுக்க முடியும் என்று நிருபித்திருக்கிறார் மிஷ்கின்.

கடைசியில் அந்த மார்ஷல் ஆர்ட்ஸ் கத்தி சண்டை எல்லாம் அட போங்கப்பா இதுவும் சினிமா தான் என்று சொல்ல தோன்றுகிறது.

நிச்சயம் பார்க்கலாம். இரண்டாவது தடவை பார்த்தால் புரியாத இடங்கள் புரியும் !

இட்லிவடை மார்க் 6.5/10

மஞ்சள் கலர் புடவை டான்ஸ் இல்லை !

Read More...

Friday, September 27, 2013

நான் ஸ்டாப் நான்சென்ஸ்


எடிட் பண்ணதை கட் பேஸ்ட் செய்துள்ளேன்
தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பிறகு அடுத்த தாக்குதல் ராகுல் காந்தியிடமிருந்து வந்திருக்கிறது.

தீவிரவாதிகள் தாக்குதலைக் காட்டிலும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் கடும் எதிர்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு கடும் பாதிப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும் போது, "அரசு கொண்டு வந்திருக்கும் இந்த அவசர சட்டம் தவறானது; முட்டாள் தனமானது என்பது எனது கருத்து. இச்சட்டத்தை கிழித்து எறிய வேண்டும்" என்று அவேசமாக கூறினார்.

இதை வேடிக்கை பார்க்கும் நாமக்கு அட சூப்பர் என்று தோன்றினாலும், இது மோடியைவிட ராகுல் மிக நேர்மையானவர் என்று தோற்றத்தை ஏற்படுத்த என்று நினைக்கிறேன்.

நேற்று திருச்சியில் மோடியின் பேச்சுக்கு நானும் களத்தில் இருக்கிறேன் என்று சொல்லும் செயல் தான் இது.

ராகுல் அப்படியே நேர்மையானவர் என்றால், இதற்கு முன் ராபர்ட் நிலவிவகாரம், 2G, நிலக்கரி ஊழல், அதை தொடர்ந்து மறைந்து போன கோப்புகள், விளையாட்டு ஊழல் போன்றவற்றை எல்லாம் ஏன் கண்டுக்கொள்ளாமல் இருந்தார்?



பாவம் மன்மோகன் சிங் ரூபாயின் மதிப்பு மாதிரி இவர் மதிப்பும் நாளுக்கு நாள் குறைந்துக்கொண்டே போகிறது.

Read More...

Thursday, September 26, 2013

மஹாபாரதம் கும்பகோணப் பதிப்பு - முன்வெளியீட்டுத் திட்டம்



மஹாபாரதம் கும்பகோணப் பதிப்பை நவீன முறையில் அச்சிட்டு ஒன்பது பாகங்களாக வெளியிட ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு.வெங்கட்ரமணன் அவர்கள் திட்டமிட்டுள்ளார். இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிப்பதும் முடிக்காததும் உங்கள் கையில்தான் உள்ளது.

விலைவாசி உயர்ந்த இன்றைய காலகட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் பதிப்பித்தால் மொத்தத் தொகுப்பின் (ஒன்பது பாகங்கள்) விலை ரூ.5000 க்குக் கொடுப்பது சாத்தியம் இல்லை. எனவே குறைந்தது முந்நூறு பேருக்கும் மேல் முன்வெளியீட்டுத் திட்டத்தில் இணைந்தால்தான் எல்லோருக்கும் குறைந்த விலைக்குக் கிடைக்க வழி செய்யலாம்.

இதுவரை நூறு பேருக்கும் மேல் இந்தத் திட்டத்தில் இணைவதாக உறுதியளித்துள்ளார்கள். குறைந்தது முந்நூறு பேராவது முன்வெளியீ்ட்டுத் திட்டத்தில் இணைந்தால்தான் பதிப்பாளர் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

முன்வெளியீட்டுத் திட்டத்தில் இணைபவர்களுக்கு மொத்தத் தொகுப்பின் விலை ரூ.5000. இணையாதவர்களுக்கு இதன் விலை ரூ6000 அல்லது அதற்கு மேல் இருக்கலாம் என்று பதிப்பாளர் கூறியுள்ளார். (குறிப்பு: தபால் செலவு தனி. இதில் அடங்காது). தபால் செலவைப் பின்பு செலுத்திக் கொள்ளலாம். முடிந்தவர்கள் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தப் பதிப்பு புதிதாக நேர்த்தியான முறையில் தட்டச்சு செய்யப்பட்டு வெளிவர இருப்பதால் ஏழு மாதங்களிலிருந்து ஒரு வருடம் காலம் வரை ஆகலாம். இந்தத் திட்டத்தில் குறைந்தது முந்நூறு பேர் சேரவில்லை என்றால் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதும் செல்லாததும் பதிப்பாளரினின் முழு முடிவில் உள்ளது. முன்னெடுத்துச் செல்ல முடியாத பட்சத்தில் அதுவரை பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும். மீதித் தொகை வட்டியில்லாமல் திருப்பிக் கொடுக்கப்படும்.

முன்வெளியீட்டுத் திட்டம் விவரம்

மஹாபாரதம் கும்பகோணம் ம.வீ.ரா பதிப்பு

மொத்தம் ஒன்பது பாகங்கள். கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் பக்கங்கள். எடை கிட்டத்தட்ட பதினைந்து கிலோ.

முன்வெளியீட்டுத் திட்டத்தில் சேர்பவர்களுக்கு விலை ரூ.5000

பணம் செலுத்துபவர்கள் ஒரு முழுத் தொகுப்புக்கு ரூ.5000 கேட்பு வரைவோலையாகவோ (DD) அல்லது காசோலையாகவோ (cheque) "S.Venkataramanan payable at Chennai" என்ற பெயரில் கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும். வரைவோலையாகவோ அல்லது காசோலையாகவோ செலுத்தும்போது பின்புறம் தங்களின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணைக் கண்டிப்பாகக் குறிப்பிடவும். தனியாக கீழ்க்கண்ட விவரங்களைத் தெரிவிக்கவும்.

1) பெயர்
2) முழு முகவரி
3) தொலைபேசி எண்
4) மின்னஞ்சல் முகவரி
5) காசோலை அல்லது கேட்பு வரைவோலை எண்
6) வங்கியின் பெயர்
7) தேதி
வங்கிக் கிளையின் பெயர்
9) எத்தனைத் தொகுப்புகள் வேண்டும்
10) மொத்தத் தொகை (ஒரு முழுத் தொகுப்புக்கு ரூ.5000)

பதிப்பாளர் சென்னையில் இருப்பதால் காசோலை செலுத்துபவர்கள் சென்னையில் வங்கிக் கணக்கு உள்ளவர்கள் உள்ளூர் காசோலையை அனுப்பலாம். இல்லை என்றால் சென்னையில் பணம் எடுக்கும்போது பணப்பிடிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் (at par cheque or multi city cheque).

தாங்கள் அனுப்பிய காசோலை அல்லது கேட்பு வரைவோலை கிடைத்தவுடன் பணம் செலுத்தியதற்கான ரசீதை பதிப்பாளர் தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைப்பார்.

S. VENKATARAMANAN
NEW NO: 9 – OLD NO:135
NAMALVAR STREET, EAST TAMBARAM
CHENNAI 600 059. INDIA
PHONE NO: 9894661259
EMAIL : venkat.srichakra6@gmail.com

இணையம் வழியாகவோ அல்லது நேரடியாகவோ பதிப்பாளரின் வங்கிக் கணக்குக்கும் பணம் செலுத்தலாம். வங்கிக் கணக்கின் விவரங்கள் கீழே. செலுத்தியவுடன் தேவையான அனைத்து விவரங்களையும் தபால் வழியாகவோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ பதிப்பாளருக்குத் தெரியப்படுத்தவும்.

S.Venkataramanan
Punjab National Bank
S.B.Account No: 3613000400053803
IFSC Code: PUNB0361300
Periamet branch
Chennai

அன்புள்ள
பா.மாரியப்பன்

இதுபற்றி தினகரன் வசந்தம் இதழில் வந்த செய்தி:
http://srimahabharathaparvangal.blogspot.in/2013/09/blog-post_6444.html

விஜயபாரதத்தில் வந்த செய்தி: http://srimahabharathaparvangal.blogspot.in/2013/09/blog-post_5725.html
நல்ல வாய்ப்பு

Read More...

Tuesday, September 24, 2013

ஜெகனும் ஜாமீனும்... !

சொத்து குவிப்பு வழக்கில் சி.பி.ஐ கைது செய்து கடந்த 16 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன்ரெட்டியை சி.பி.ஐ. நீதிமன்றம் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது.

மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி என்ற பேச்சு வருகிறது. ஜெகனின் குடும்பம் அதை மறுக்கவில்லை. காங்கிரஸுக்கும் இவருக்கும் ரகசிய ஒப்பந்தம் என்று சொல்லுகிறார்கள்.

ஜெகன் உத்தமர் இல்லை, YSR சேர்த்து வைத்த சொத்தை பாதுகாக்க அவர் என்ன வேண்டும் என்றாலும் செய்வார் என்று நினைக்கிறேன்.

Read More...

Monday, September 23, 2013

ஒரு பேனாவும், பெரும் கனவுகளும்.

மிக நீண்டதொரு இடைவேளைக்குப் பின்னர், இட்லிவடை வாசகர்களுக்காக ஒரு ரீடர்ஸ் டைஜஸ்ட் மொழிபெயர்ப்பு!!

கட்டுரையாசிரியரைப் பற்றியதோர் சிறிய அறிமுகம்:


இக்கட்டுரையாசிரியர், டான் பிந்நோக், தென்னாப்ரிக்காவின் கேப் டவுன் நகரில் தன்னுடைய மனைவியும், பிரபல நாவலாசிரியருமான பாட்ரிஷியா ஸ்கான்ஸ்டீனுடன் வசிக்கிறார். இவர் ஒரு பயணக் கட்டுரையாளர், பல புதிய இடங்களுக்குச் செல்வதும், புதிய மனிதர்களைச் சந்திப்பதும், ஆப்ரிக்க காடுகளில் வசிக்கும் புலிகளை புகைப்படமெடுப்பதும் இவரது விருப்பமான பொழுதுபோக்காகும். இனி இவருடைய கட்டுரையின் மொழிபெயர்ப்புக்குச் செல்லலாம்.

.
1999 ஆம் ஆண்டின் மத்தியில், தெளிந்த வானத்துடன் கூடிய ஆப்ரிக்காவிற்கே உரித்தான வெம்மையான ஒரு தினம். எத்தியோப்பியாவிலிருக்கக் கூடிய ஒரு சிறு கிராமமொன்றின் குறுக்கே ஓடும் நதியொன்றின் மீதான பாலத்தில் நின்று கொண்டிருந்தபோது, கண்கவரும் பல வண்ண நூலிழைகளால் பின்னப்பட்டிருந்த ஒரு ப்ரேஸ்லெட்டுடன் ஒரு சிறுவன் என்னை அணுகினான்.

என் பெயர், மாரிஷெட் டையர்ஸ், என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு, நான் உங்களுக்கு எத்தியோப்பியாவின் நிறங்களைப் பரிசளிக்கிறேன், பதிலாக எனக்கு பணமெதுவும் வேண்டாம், உங்களுடைய நட்பு மட்டுமே போதும் என்று கூறிக் கொண்டே, என்னுடைய கையில் அந்த அழகிய ப்ரேஸ்லெட்டை அணிவித்தான்.

டாணா ஏரியிலிருந்து சீறிப் பாய்ந்து கொண்டிருந்த நீல நைல் நதியின் மேலமைந்திருந்த அப்பாலம், பாஹர் தார் என்ற இடத்தில் அமைந்திருந்தது. அச்சிறுவன் மாரிஷெட் அப்போதுதான் அவனுடைய பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தான், ஆங்கிலப் பாடங்களை பயிற்சி செய்ய வேண்டியிருப்பதாகக் கூறினான்.

பச்சை, மஞ்சள், சிகப்பு இழைகளால் மிக நெருக்கமாகவும், நேர்த்தியாகவும் பின்னப்பட்டிருந்த அந்த ஆபரணத்தையும், வெள்ளைச் சிரிப்புமாய், தேனின் நிறத்தோடு, அடர்த்தியான கருப்பு நிற முடியுடைய அச்சிறுவனையும் நான் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தேன். அவனுடைய நாகரிகம்தான் எத்தனை பழையது மற்றும் முன்னேறியது!! ஐரோப்பியர்கள் வெறும் புற்களையும், களி மண்ணையும் வைத்துக் கொண்டு கட்டிடம் கட்டிக் கொண்டிருந்த காலத்திலேயே, இவர்கள் கற்களாலான அரண்மனைகளையும், க்ரானைட்டினால சிலைகளையும் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

இந்நிறங்கள் எவற்றைப் ப்ரதிபலிக்கின்றன?, என்று கேட்டேன்.

பச்சை இயற்கை வனப்புடன் கூடிய சமவெளியையும், மஞ்சள் சர்ச்சையும், சிகப்பு...என்று யோசித்தவன், நினைவில்லை, நீங்களே தெரிந்து கொள்வீர்கள் பிறகு என்று புன்னகைத்தான்.

சிறு தயக்கத்திற்குப் பிறகு, உங்களால் எனக்கொரு பேனா தர முடியுமா?? என்று கேட்டான்.

பொதுவாக பணம், இன்னும் பலவற்றைக் கேட்கும் ஆஃப்ரிக்கக் குழந்தைகளைப் பார்த்தே பழக்கப்பட்ட நான், பேனா மட்டும் போதுமா? என்று ஆச்சர்யத்துடன் வினவினேன்.

ஆம், போதும். பேனா இல்லையென்றால் எங்களைப் பள்ளியில் அனுமதிப்பதில்லை. என்னுடைய பேனா இன்று தீர்ந்துவிட்டது, இன்னொன்றை வாங்குமளவிற்கு என்னுடைய குடும்பத்திற்கு வசதியில்லை. நான் பள்ளிக்குச் செல்வதை மிகவும் விரும்புகிறேன். பிற்காலத்தில் ஒரு மருத்துவராகவோ அல்லது ஒரு கணக்காளராகவோ வர விரும்புகிறேன், அதற்கு நான் கல்வி கற்றேயாக வேண்டும். உங்களால் எனக்கொரு பேனா தர முடியுமா??

நான் பொதுவாக பயணங்களின் போது மலிவான பேனாக்கள் நிறைய வைத்திருப்பேன். அதனால் அவன் கைநிறைய பேனாக்களை அள்ளிக் கொடுத்தேன். அப்பேனாக்களைப் பெற்றுக் கொண்டதும் அவன் முகத்தில் விரிந்த அப்புன்னகைக்கு முன்னர் அப்பேனாக்கள் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என எனக்குத் தோன்றியது.

உங்கள் முகவரியைக் கொடுங்கள், உங்களுக்குக் கடிதமெழுதுகிறேன், என்றான்.

சரி, ஆனால் நீ ஏன் உன் வயதொயொத்த என் பெண், ரோமனிக்கு கடிதமெழுதக் கூடாது? என்னைவிட அவளுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய சுவாரஸ்யமான விஷயங்கள் உன்னிடம் அதிகமிருக்குமென எண்ணுகிறேன், என்றேன்.

நான் கேப் டவுன் திரும்பிய சில தினங்களுக்குள்ளாகவே, கண்ணைப் பறிக்கும் தபால்தலைகளைத் தாங்கிய ஒரு கடிதமொன்று மாரிஷெட்டிடமிருந்து வந்தது.

என்னுடைய இனிய சினேகிதிக்கு, என்று துவங்கிய, எத்தியோப்பியச் சாயலுடனான அழகிய ஆங்கில நடையில் அக்கடிதத்தில், தன்னுடைய குடும்பம், பாஹர் தார் கிராமம், தன்னுடைய நம்பிக்கைகள் மற்றும் லட்சியங்கள் என நிறையப் பேசியிருந்தான். ரோமானிக்கு புதிய சினேகிதன் கிடைத்த அளவிலா மகிழ்ச்சியுடன் திரும்பக் கடிதமெழுதினாள்.

தொடர்வதும் பிறகு இடை நிற்பதுவுமாகக் துவங்கிய இவ்விருவருக்குமிடையேயான கடிதப் போக்குவரத்து பல வருடங்களுக்கு நீடித்தது. பிறகு அவளுடைய ஒரு கடிதத்திற்கு பதிலே வராமற்போனது. பள்ளிப் படிப்பு முடிந்துவிட்டதா? அருகிலுள்ள பண்ணையில் ஏதும் வேலை செய்து கொண்டிருப்பானோ? அல்லது வசிப்பிடம் அருகே தபால்நிலையம் ஏதும் இல்லாதிருக்கலாம், அல்லது மற்ற ஆஃப்ரிக்கச் சிறுவர்களைப் போல அடிஸ் அபாபாவில் இவனும் பிச்சையெடுக்கச் சென்றிருப்பானோ என பலவிதமான எண்ண ஓட்டங்கள், சுய சமாதானங்கள்.

மெதுவாக, கால ஓட்டத்தில், மாரிஷெட், எங்களுடைய கடந்தகாலத்தில் கரைந்து விட்டிருந்தான்.

2011, அக்டோபர் மாதம், தென் ஆஃப்ரிக்காவின், ஃப்ரீ ஸ்டேன் ப்ரொவின்ஸின் ஊடாகப் பிரயாணித்துக் கொண்டிருந்தபோது, என்னுடைய அலைபேசி அழைத்தது. நானே வண்டியோட்டிக் கொண்டிருந்தபடியால் எடுக்க வேண்டாமென நினைத்து, பிறகு தொடந்து அழைத்துக் கொண்டேயிருந்தமையால், அழைப்பை எடுத்தேன்.

மறுமுனையில் ஹலோ என்ற குரல், நீங்கள் டான் பிந்நோக்தானா? என்று கேட்டது.

ஆம், நீங்கள் யார்?

நான் மாரிஷெட் டையர்ஸ், எத்தியோப்பியாவின் பாஹர் தார் பாலத்தருகே நீங்கள் சந்தித்த சிறுவன், நினைவிருக்கிறதா?

ஓஹ், நன்றாகவே.

உங்களுடைய இணையதளத்தில் உங்களது அலைபேசி எண் கிடைத்தது என்று சொன்னவன் எனது மின்னஞ்சல் முகவரியைக் கேட்டான்.

அங்கு அவ்வளவாக அலைபேசி இணைப்பு சரியாக இல்லாதபடியால், நான் உங்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன் என்று அவன் சொன்னவுடன் தொடர்பு அறுந்து போனது. எனக்கு மிகுந்த ஆச்சரியம்! எப்படி அவ்வளவு ஏழ்மை நிலையிலிருந்த ஒரு சிறுவனுக்கு இன்று இணையதளங்களையும், செல்போன்களையும் பயன்படுத்துமளவிற்கு முன்னேற்றம் கிட்டியது?

சில வாரங்களுக்கு அவனிடமிருந்து மின்னஞ்சல் ஏதும் வரவில்லை. பிறகு ஒன்று வந்தது....

அன்பிற்குரிய பிந்நோக்,

உங்களிடம் மீண்டும் பேச முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி. பல முறை உங்களைத் அலைபேசியின் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ள முயற்சி செய்து பலனளிக்கவில்லை. அன்றைய தினம் உங்களுடன் பேச முடியுமென்றே நினைக்கவில்லை, அந்நாளை ஆசீர்வதிக்கப்பட்ட தினமாக உணர்கிறேன். எப்படி இருக்கிறீர்கள்? நீண்ட காலமாயிற்று.

அந்த மின்னஞ்சலூடாக, மாரிஷெட், எப்படியோ ஹாலந்திற்குச் சென்றுவிட்டதும், அங்கு சில காரணங்களால் கல்வி கற்க இயலாமற்போனதும், பிறகு லண்டனில் கடந்த நான்கு வருடங்களால கல்வி கற்று வருவதும் தெரியவந்தது. மின்னஞ்சல் கடைசியில் இவ்வாறு முடிந்தது..

...நான் தற்போது ப்ருநெல் பல்கலையில் பட்டய கணக்காளருக்குப் படித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் அளித்த பேனாக்களுக்கு நன்றி. தொடர்பிலிருங்கள். உங்களுக்கும் உமது குடும்பத்தாருக்கும் என்னுடைய வணக்கங்கள்.

மீண்டும் வருக!

Read More...

Sunday, September 22, 2013

மோடி தான் அடுத்த பிரதமர் - எஸ்.வி.சேகர்

நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருப்பதால், பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்பது உறுதி. மத்தியில் காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்து மாற்றுக் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடையே மேலோங்கியிருப்பது பாஜகவுக்கு கூடுதல் பலம்.

நரேந்திர மோடி சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்ற பிரசாரத்தை வைத்து பாஜகவை வீழ்த்த முடியாது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் பல மதக் கலவரங்கள் நடைபெற்றுள்ளன என்பதை அனைவரும் அறிவர்.

குஜராத்தில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் நரேந்திர மோடியைத் தான் ஆதரிக்கின்றனர் என்பதே உண்மை.

இந்தியாவின் மொத்த வாக்காளர்களில் 30 சதவீதம் பேர் மட்டுமே அரசியல் கட்சி சார்ந்தவர்கள். மீதமுள்ள 70 சதவீதம் பேர் எந்தக் கட்சியும் சாராதவர்கள். இதில், சுமார் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் இளைஞர்கள். இளைஞர்களின் விருப்பம் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்பதாகவே உள்ளது. இதன்மூலம் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. பாஜகவுக்கு வெற்றி உறுதி என்றார் எஸ்.வி. சேகர்.

நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள வைத்தியநாதசுவாமி கோயிலுக்கு நடிகர் எஸ்.வி. சேகர் தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை வழிபாடு மேற்கொண்டார். அப்போது இந்த தகவலை சொன்னார்.

அவருக்கு உண்டான நாடியை பார்த்ததில் அவர் எந்த கட்சியில் இருக்கிறார் என்று தெரியாமல் போய்விட்டது !

Read More...

Friday, September 20, 2013

அவர்கள் யார் என்னை அழைக்க?

தமிழ் சினிமாவில் தன் வசனங்களால் பெரும் மாறுதல்களை உண்டாக்கியவர் என்ற பெருமை மு கருணாநிதிக்கு உண்டு. ஒரு படத்தின் ஹீரோவுக்கு நிகராகப் பேசப்பட்டவை அவரது நெத்தியடி வசனங்கள்.

இந்த தமிழ் சினிமாவுக்கு, எம்ஜிஆருக்குப் பிறகு அதிக நன்மைகள் செய்தவர் என்றால் அது கருணாநிதி ஒருவர்தான். பட்டியலிட முடியாத அளவுக்கு சலுகைகள். அடிமட்ட சினிமாக் கலைஞர் கூட நினைத்தால் முதல்வராக இருந்த கருணாநிதியைப் பார்த்துவிட முடியும். அந்த அளவு சினிமாக்காரர்களுக்கு இடம் கொடுத்தார் கருணாநிதி. அட, அவர்களுக்காக தனி வாரியமே அமைத்தார். பொதுமக்களுக்கே வெறுப்பு வரும் அளவுக்கு அவர் சினிமாக்காரர்களைக் கொண்டாடினார் என்பதையும் மறுப்பதற்கில்லை.

அப்படிப்பட்ட கருணாநிதியை இன்று சினிமாக்காரர் ஒருவரும் திரும்பிப் பார்க்கவும் தயங்குகின்றனர். அன்று பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா எடுத்த பார்ட்டிகள், இப்போது கருணாநிதி என்ற பெயரைச் சொல்வதையே தவிர்க்கின்றனர். காற்றில் வசனக் கத்தி வீசிய வெத்து ஹீரோக்கள் பெட்டிப் பாம்பாய் ஒடுங்கிக் கிடக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 70 நெடிய ஆண்டுகள் எழுத்தாளராக, தயாரிப்பாளராக இருக்கும் கருணாநிதியின் குடும்பத்தினர் பலரும் இன்று திரையுலகில் முன்னணியில் உள்ளனர். இத்தனை சிறப்பு இருந்தாலும், இன்று இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவுக்கு கருணாநிதிக்கு ஒரு அழைப்பிதழ் வைக்க அஞ்சும் நிலை.

இதுபற்றி கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “அவர்கள் யார் என்னை அழைப்பதற்கு?” என்று பொட்டிலடித்த மாதிரி பதில் கூறி, அந்தப் பிரச்சினையைக் கடந்து போய்விட்டார் கருணாநிதி. நூறாண்டு காணும் இந்திய சினிமாவின் முக்கிய அங்கமான தமிழ் சினிமாவுக்கு பெரும் பங்களிப்பு செய்த கருணாநிதியை அழைக்காததும் சிறப்பிக்காததும் நிச்சயம் கருணாநிதிக்கு இழுக்கல்ல.. தமிழ் சினிமாவுக்குதான் பெரும் தலைகுனிவு!

Read More...

Thursday, September 19, 2013

'இந்து' தங்கமீன்கள்



தந்தைப் பெரியாரிடம்,“ஆங்கிலப் பத்திரிக்கை ஆரம்பிக்க சொல்கிறீர்களே அய்யா…செய்திகளுக்கு எங்கே போவது?” என ஒருமுறை கேட்டார்களாம்.அதற்கு அவர், ‘செய்திக்கா பஞ்சம்…? இன்னத்த ‘இந்து’ பேப்பர் வாங்கீட்டு வா…அதுல அவன் எதையெல்லாம் சரின்னு போட்டிருக்கானோ, அதையெல்லாம் தப்புன்னு எழுது…எதத் தப்புன்னு போட்டிருக்கானோ
அதையெல்லாம் சரின்னு எழுது…’ என்றாராம்.

அதுதான் இன்றைக்கும் சரி போலிருக்கிறது.

அதே “தி இந்து” இப்போது தமிழில்.

“தி இந்து”

இந்து என்கிற மதத்தின் பெயரை தாங்கி வரும்
செய்தித்தாளை என்றும் வாங்கக் கூடாது
என்ற என் உறுதி இன்று இல்லாமல் போனது.
இன்று என் சொந்தப்பணம் ரூபாய் 4 ஐ
நான் செலவளித்து வாங்கும்படி செய்தது
தி இந்து. அதன் இந்த தந்திரத்திற்கு
என்னுடையப் பாராட்டுகள்.

தங்கமீன்கள் வெளிவந்து மூன்று வாரம்
கழித்து அது குறித்தும் என்னைக் குறித்தும்
எழுத வேண்டியக் கட்டாயத்தை
ஒரு பத்திரிக்கைக்கு ஏற்படுத்தி இருக்கிறது
இந்தத் திரைப்படம் என்பது தான் இதன் வெற்றி.

புதிதாகத் தொடங்கப்பட்டப் பத்திரிக்கையின்
வியாபாரத்திற்கும் பரபரப்பிற்கும் ”தங்கமீன்கள்”
தேவைப்படுகிறது என்பதுதான் அதன்
ரசிகர்களுக்கு கிடைத்த வெற்றி.

தி இந்து நம்மை நம் படைப்பை
பாராட்டி எழுதினால்தான் நாம்
நம் படைப்பு மீது சந்தேகம்
கொள்ள வேண்டி வரும்.
நம் படைப்பை அவர்கள் இகழும் போதும்,
தூற்றும் போதும் தான் நம் படைப்பு
நேர்த்தியானது என்பது உறுதியாகிறது.
அதை உறுதி செய்த ”தி இந்து” விற்கு நன்றிகள்.
ஆறு வருடத்திற்கு முன்பு வந்த ”கற்றது தமிழ்”
திரைப்படத்திற்கும் விமர்சனம் செய்வீர்களாக என்று
வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.

படைப்பைக் குறித்த விமர்சனத்திற்குத்தான் நாம்
பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.
தனி நபர் எள்ளல்களை நாம் சட்டை செய்வதில்லை.

பிரியங்களுடன்

ராம்
(என்ன செய்ய நான் அந்த ராமில்லை)

( தகவல் உதவி: இயக்குனர் ராம் பக்கம் )

மனிதர்களில் இந்து எப்படியோ அதே மாதிரி மீன்களில் தங்கமீன்கள்

Read More...

Tuesday, September 17, 2013

பிரதமர் வேட்பாளர் என்று உண்டா? - ஞாநி

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைத் தங்கள் பிரதமர் வேட்பாளர் என்று பாரதிய ஜனதா கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. பிரதமர் வேட்பாளரை 1998-லிருந்தே ஒவ்வொரு மக்களவைத் தேர்தலின்போதும் இப்படி அறிவித்துவருவதாக அந்தக் கட்சித் தலைவர் சொல்லியிருக்கிறார்.

இதற்கு முன்பு அறிவித்த எந்த அறிவிப்பும் இந்த முறை மோடியை அறிவிக்க அந்தக் கட்சி செய்த ஆயத்தங்களுக்கு நிகராகாது. ஏறத்தாழ ஓராண்டுக்கும் மேலாக மோடிதான் தங்கள் பிரதமர் வேட்பாளர் என்று நிறுவுவதற்கு அக்கட்சியின் பல பிரமுகர்களும் ஆர்.எஸ்.எஸ். அனுதாபிகளும் விதவிதமான முயற்சிகள் செய்துவந்திருக்கின்றனர். மோடிக்கு எதிராக உங்கள் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்று அறிவிக்க முடியுமா என்று காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து சீண்டியும் வந்துள்ளனர். காங்கிரஸ் இதுவரை அந்த வலைக்குள் சிக்கவில்லை என்பது சற்றே ஆறுதலான விஷயம்தான்.

ஏனெனில், பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை அறிவிப்பது என்பதே இந்திய பாராளுமன்ற ஜனநாயக முறைக்கும் இந்திய அரசியல் சட்டத்துக்கும் விரோதமானதாகும். பெரும் அனைத்திந்திய கட்சிகளில் ஒரு கட்சி அப்படிச் செய்வது என்பது ஆபத்தான போக்கு.

இந்திய அரசியல் சட்டப்படியும் நாடாளுமன்ற, சட்டமன்ற நடைமுறைகள், மரபுகள்படியும், பிரதமர் வேட்பாளர் என்றோ முதலமைச்சர் வேட்பாளர் என்றோ ஒருவர் மக்களிடம் நேரடியாக வாக்குக் கேட்க இடமே கிடையாது. மக்களிடம் வாக்குக் கேட்டுத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் மக்களவை உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்கள் மட்டும்தான். நான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்று சொல்லித்தான் தேர்தலில் நின்று ஜெயித்து வந்திருக்கிறேன். என்னைப் பிரதமர் பதவி ஏற்கும்படி குடியரசுத் தலைவர் அழைக்க வேண்டும் என்று எந்த மக்களவை உறுப்பினரும் தனியே அவரிடம் கோர முடியாது. “நீங்கள் மக்களவை உறுப்பினர் பதவித் தேர்தலில் ஜெயித்திருக்கலாம். ஆனால், உங்கள் கட்சி பெரும்பான்மை பெறவில்லை. தனிப் பெரும் கட்சியாகவும் ஜெயிக்கவில்லை. அப்படியே தனிப் பெரும் கட்சியாகவோ, அறுதிப் பெரும்பான்மையோ பெற்றிருந்தாலும்கூட, இப்போது உங்கள் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உங்களைத் தங்கள் நாடாளுமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்தால்தான் நான் உங்களைப் பிரதமர் பதவிக்குப் பரிசீலிக்க முடியும்” என்றே குடியரசுத் தலைவர் பதில் சொல்ல முடியும்.

எனவே பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை ஒரு கட்சி அறிவித்து தேர்தலில் நிறுத்தச் சட்டத்தில் இடமே இல்லை. அப்படி அறிவித்து நிறுத்துவதன் பின்விளைவுகள் தேவையற்ற சிக்கல்களையும் ஏற்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக, நரேந்திர மோடி ஜெயிக்கிறார், பா.ஜ.க-வுக்குத் தனிப் பெரும் கட்சி நிலைகூடக் கிட்டவில்லை என்று வைத்துக்கொள்வோம். மோடி பிரதமராக முடியாது. அவர் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லி ஜெயித்திருந்தாலும் பிரதமராக முடியாது என்றால், என்ன அர்த்தம்? தனி நபர் வெற்றி அடிப்படையில் பிரதமர் பதவி தரப்பட மாட்டாது என்ற சட்டப்படியான நிலையை மறைத்துத் தேர்தலைச் சந்திப்பது எப்படி நியாயமாக முடியும்? அடுத்து, நாங்கள் ஆட்சி அமைக்கும் அளவுக்கு இடங்களைப் பெற்றால் மோடியைப் பிரதமராக்குவோம் என்றுதான் சொல்கிறோம் என்று வாதாடலாம். இதுவும் தவறானது. தேர்வாகி வரும் சுமார் 252 பா.ஜ.க. உறுப்பினர்களில் பெரும்பாலோர் மோடி பிரதமராகக் கூடாது என்று, அத்வானியோ சுஷ்மாவோதான் ஆக வேண்டும் என்றும் அப்போதுகூட மாற்றி முடிவு செய்யலாம். அரசியலில் அப்படியெல்லாம் நடக்காது என்று எதையும் சொல்ல முடியாது.

அப்படிச் செய்தால், மோடி பிரதமராவார் என்று சொல்லித்தானே என் ஓட்டை வாங்கினீர்கள், அத்வானி, சுஷ்மா என்றால் நான் உங்கள் கட்சிக்கு ஓட்டே போட்டிருக்க மாட்டேனே என்றுகூட வாக்காளர்கள் கருதலாம். இன்னொரு சாத்தியமாக, கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்தாலும், மோடி மட்டும் மக்களவைத் தேர்தலில் தோற்றுப் போய்விட்டால், வேறொருவரைத்தான் பிரதமராக்க வேண்டியிருக்கும். ஆறு மாதத்துக்குள் வேறு தேர்தலில் நிற்கவைத்து அவரை ஜெயிக்க வைக்கலாம் என்று தோற்றவரைப் பிரதமராக்க முயற்சித்தால் அது தார்மிகமாகாது.

இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை இப்போதுள்ள சட்டங்களின்படி தனிநபரை முன்னிறுத்துவதல்ல. கட்சியை முன்னிறுத்தியே விதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் கட்சிகளில் ஒரு கட்சியைப் பெரும்பான்மைக்குரியதாகத் தேர்வு செய்கிறார்கள். அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் தங்கள் தலைவரை அதன் பின் தேர்வு செய்யலாம் என்பதே இந்த நடைமுறை.

இதை மாற்றித் தனிநபரை பா.ஜ.க. முன்னிறுத்த முயற்சிப்பது ஏன்? பெருவாரியான மாநிலக் கட்சிகளும் இப்படித் தனிநபரையே மாநில அளவில் முன்னிறுத்துகின்றன. அதையே மத்திய அரசுக்கும் விரிவுபடுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது. கட்சியைவிட தனி நபரே கவர்ச்சியானவர் என்று காட்டுவதுதான் பாசிஸத்தின் ஆதார வேர். தவிர மாநில அளவில் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் இந்திய அளவில் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் வேறுபாடுகளும் உள்ளன.

தனிநபரை முன்னிறுத்தும் போக்கு, இந்திய அளவில் அனைத்திந்திய கட்சிகளுக்கு மட்டுமே சாத்தியமானது. மாநிலக் கட்சிகள் தங்கள் தலைவர்களை இந்திய அளவிலான தலைவர்களாக முன்னிறுத்துவது கடினம். ஆனால் கட்சியின் கொள்கை அடிப்படையில் ஒரு மாநிலத்தில் என்னவெல்லாம் சாதித்தோம், மத்தியிலும் வாய்ப்பு வந்தால் என்ன செய்வோம் என்று கட்சியாக தன்னை முன்னிறுத்துவது சாத்தியமானது.

அது மட்டுமல்ல, பிரதமர் வேட்பாளர் என்று தனிநபர் சார்ந்த போக்கைச் சட்டவிரோதமாக மக்களவைத் தேர்தலின்போதே ஊக்குவிப்பது வேறு வகையிலும் ஆபத்தானது. இந்த அடிப்படையை எல்லாக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டால், வி.பி.சிங், குஜ்ரால், தேவ கவுடா, சந்திரசேகர், நரசிம்மராவ், மன்மோகன்சிங் ஆகிய நபர்கள் ஒருபோதும் பிரதமராகியிருக்கவே முடியாது. பண பலம் உள்ள தனிநபர் வழிபாட்டை ஊக்குவிக்கும் சக்திகள் மட்டுமே வலிவடையும்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முறையை இந்தியாவிலும் ஏற்படுத்த விரும்பும் கட்சிகளில் பா.ஜ.க-வும் ஒன்று. நாடாளுமன்றத்தில் போதுமான பலம் இல்லாவிட்டாலும்கூட, அதிபராகிவிட்டால், சில அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும் என்பது அமெரிக்க அதிபர் அமைப்பின் விசித்திரங்களில் ஒன்று. அப்படிப்பட்ட தனிநபர் அதிகாரத்தை இப்போதுள்ள இந்திய முறைக்குள்ளேயே புகுத்தும் முயற்சியாகவே பிரதமர் வேட்பாளர் அறிவிப்பைக் கருத வேண்டும். இது நம் ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல.

ஞாநி, மூத்த பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர். தொடர்புக்கு: gnanisankaran@gmail.com

நன்றி: தி இந்து - தமிழ்
நட்சத்திர விழா என்று போட்டு விட்டு சகல நடிகர் நடிகை படங்களையும் போட்டு டிக்கெட் விற்று விட்டு கடைசியில் குள்ள மணி, உசிலை மணி, தவக்களை, அங்கமுத்து போன்ற நடிக நடிகைகளை வைத்து ஷோ நடத்தி ஏமாற்றும் மோசடிக் கும்பல் போல ஏமாற்ற வேண்டும் என்று ஆசைப் படுகிறார் - திருமலை ராஜன்

Read More...

ரிலயன்ஸை அடிபணிய வைத்த மக்கள் சக்தி

வாங்கியவுடன் பழுதடைந்த நுண்ணனு சாதனதுக்காக அலைய நேரும் அவலத்தை நம்மில் பலர் சந்தித்திருப்போம். அதற்காக, அந்த சாதனத்தை விற்ற கடை (ரிலயன்ஸ் டிஜிட்டல், அண்ணாசாலை) வாசலில் குடும்ப சகிதமாக தைரியமாக கொடி பிடித்து தர்ணா செய்து, ஒருவர் நியாயம் பெற்றதை மனதாரப் பாராட்ட வேண்டும். மெல்லிசைக் குழு ஒன்றை நடத்தி வரும் ஸ்ருதி பாலாஜியை, அவர் ரிலயன்ஸில் ரூ.9999 கொடுத்து வாங்கிய, வாங்கியவுடன் பழுதான டேப்லட் வகை கைபேசியைக்கு (வாரண்டி காலத்தில்) மாற்று தராமல், ரிலயன்ஸின் விற்பனைப் பிரதிநிதி, பல முறை அலைக்கழித்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதோடு, கேலி பேசியது வேதனையான விஷயம்.

ஆனால், பலர் போல பாலாஜி சும்மா இருக்கவில்லை! ஒரு பெரிய கடைக்கு எதிராக கொடி பிடித்து போராடி, மீடியா மற்றும் போலீஸ் கவனத்தை ஈர்த்து நியாயம் பெற்றிருக்கிறார். சம்பந்தப்பட்ட விற்பனைப் பிரதிநிதி அந்த டேப்லட் வகை கைபேசியை மாற்றித் தராமல் சமீபத்தில் தான் மார்க்கெட்டில் அந்த சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டதால், குறைகள் சகஜம் என்றும், வாடிக்கையாளர் அபிப்பிராயங்கள் அதை மேம்படுத்த உதவும் என்றும் வியாக்கியானம் பேசியது பாலாஜியை கடுப்படித்திருக்கிறது. உழைத்துச் சம்பாதித்த அவரது பணத்துக்கு பங்கம் வராமல் இருக்க பாலாஜி மேற்கொண்ட நடவடிக்கை நிச்சயம் தேவையான ஒன்று. இல்லாவிட்டால், ரிலயன்ஸ் டிஜிட்டல் போன்ற ஒரு பெரிய ஸ்தாபனத்துக்கு எதிராக, சாதாரண வழிமுறைகளில் அவருக்கு நியாயம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

- எ.அ.பாலா

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

Read More...

Monday, September 16, 2013

சோ ஏன் சந்தித்தார் ?

ஏதோ பெரிய கண்டு பிடிப்பு மாதிரி எல்லா பத்திரிக்கையும் சோ ஏன் ஜெயலலிதாவை சந்தித்தார் என்று எழுதுகிறார்கள்.

கலைஞர் மோடிக்கு ஆதரவு இல்லை என்று சொன்னவுடனே சோவிற்கு பாதி வேலை குறைந்துவிட்டது!.

பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார் அவருக்கு ஆதரவு கேட்க தான் சோ சென்றுள்ளார்.

ஜெயலலிதா இந்த ஆண்டு தொடக்கத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடும் என்று சொல்லியுள்ளார். இந்த முடிவு என்ன ஆகும் என்று பார்க்க வேண்டும்... மாற்றிக்கொள்வார் என்று எனக்கு தோன்றவில்லை

அம்மா தனியாக நின்றாலும் ஜெயிப்பது உறுதி. அதற்கு பிறகு மொடிக்கு ஆதரவு தருவார் என்று நினைக்கிறேன்.

Read More...

Saturday, September 14, 2013

ஒரு நற்செய்தி

மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டதவிட மகிழ்ச்சி தருவது, கருணாநிதி மோடியை ஆதரிக்கமுடியாது என்று சொன்னதுதான். வாழ்க கருணாநிதி.

Read More...

Friday, September 13, 2013

நவமிக் கடுதாசி




மோதிக்கு ஒரு ஓட்டு போயிடுத்தேன்னு வருத்தமா இருக்கு. :-)

Read More...

Inevitable...


....
மழை பெய்து நாத்து நட்டாச்சு.  சீக்ரமே களையெடுத்து நாட்டுக்கு நல்ல விளைச்சல் குடுக்க வாழ்த்துகள்.

Read More...