பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, August 18, 2013

தலைவா - Time to Release

சில வருடங்களுக்கு முன் " தமிழ் நாட்ட அந்த ஆண்டவனே வந்தாலும் ..." என்று பஞ்ச் டயலாக் அடித்த நடிகரே, ஷங்கரின் முதல்வன் படத்தில் நடிக்க மாட்டேன் என்று ஜகா வாங்கினார். அப்படி இருக்க தலைவா - Time To Lead என்ற வாசகத்துடன் களம் இறங்கினார் விஜய்.

மற்ற படங்களுக்கு கேளிக்கை வரியும் இந்த படத்துக்கு அது கிடையாது என்பது ஏன் என்று ஆராய வேண்டும். கேளிக்கை வரி 25% போனால் நிச்சயம் இந்த படம் வியாபார ரீதியாகத் தோல்வியைச் சந்திக்கும். இப்போது பலரும் திருட்டு வீசிடியில் இதைப் பார்த்துவிட்டார்கள் என்று செய்திகள் வந்துக்கொண்டு இருக்கிறது. விஸ்வரூபம் ஏதோ சவுண்ட் எஃபெக்ட் நல்லா இருக்கும் அதனால் தியேட்டரில் போய் பார்க்க வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள், ஆனால் விஜய் படத்தில் அப்படி எல்லாம் கிடையாது அதனால் சாதாரண பிரிண்டே போதும் என்று மக்கள் நினைத்துவிட்டார்கள்.

படத்தில் நியூஸ் வரும் காட்சிகளில் எல்லாம் சன் டிவி தான் வருகிறது. அதனால் கூடிய சீக்கிரம் இது சன் டிவியில் வரும் என்று எதிர்பார்க்கலாம். 'தலைவா' திரைப்படத்தை வெளியிட வேண்டுமென்ற கோரிக்கையோடு நடிகர் விஜய் உண்ணா விரதம் இருக்க அனுமதி கேட்டும், அதற்கு அனுமதி தரவில்லை. ஒரு 'படைப்பாளி' என்ற முறையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்த கருணாநிதி, "பதைக்கிறேன்" என்றார்.

வரிவிலக்கு கிடைக்காத ஒரே காரணத்தால் திரை அரங்கு உரிமையாளர்கள் தங்கள் வியாபார கணக்கின் படி இந்த படத்தை திரையிட மறுத்தார்கள் என்று ஒரு செய்தி வருகிறது. அப்படி என்றால் தலைவா பட விளம்பரங்களில் டைம் டூ ஹெட் (தலைமையேற்கும் நேரம் வந்துவிட்டது) என்கிற வாசகங்கள் இடம் பெற்று இருந்தன. இந்த வாசகங்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளன. அதே போல தலைவா படத்தில் சில வசனங்கள் மீயூட் செய்யப்பட்டது என்று நம்பப்படுகிறது.

விஸ்வரூபம் படத்துக்கு தடை வந்த போது  சப்போர்ட் செய்த அந்த க.கூட்டம் இப்போது வீட்டில் பம்மிக்கொண்டு இருப்பது ஏன் என்றும் தெரியவில்லை.

தலைவா படத்துக்கு டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் சென்னை எக்ஸ்பிரஸ் என்ற ஹிந்தி படத்தை பார்த்துவிட்டு 'மச்சி ஹிந்தி தெரியாமலே படம் புரிகிறது' என்கிறார்கள். தமிழ் படம் தலைவா ஏன் ரிலீஸ் என்று தான் புரியவில்லை.

8 Comments:

Anonymous said...

en release agavillai endru theriyavillai engirirgal apuram yarai ethirthu arikkai viduvathu. viswaroopam padam arasal thadai seiyapatathu muslim amaipinar padathai ethirthu oorengum suvarotti ottinargal arpattam seithargal avargalai ethirthu kamal haasanai makkal support seithargal thalaiva padam yaral thadai seiyapattathu endru nengal kandu pidithu sollungal ellorum vijayay support seivargal. vari vilakku kodukathathal padam vyaparam agathu athanal minimum guarantee koduka matom endru distributorgalum theater ownergalum solvathaga solgirargal athanal thaan padam veliyida mudiyavillai endru oru pechu irukirathu.ithu vyapara prachanai itharku yaruku ethiraka kural kodupathu.arasukku ethiraga kamal pol vijay courtuku pogatum apothu ellarum avarukkuga kural matumalla jayalalithavirku oru padamum kodupargal.

Anonymous said...

Unanswered questions:

- DGP announced that there is no issue from police side wrt. thalaivaa release - Why didn't producer take that word and release the movie?
- Distributors were mum, all along - why?
- How come the threats are non-existent now and the movie can be released?
- Paari Vendhar disclaims any role in Vendhar Movies!

Lalitha said...

Comedy pieces Vijay & SA Chandrasekar! Why Jayalalitha fearing for these comedians? Their aspire to lead has been looked as comedy entertainer to Tamil People. Then why Jayalalitha is getting frightened on these Jokers!!

Anonymous said...

how come when pachamuthu's face was on the logo of vandhar movies(Seen since the first official trailer of thalaivaa, now he's denying any association with vendhar movies?
Onnumey pirila baa..

Anonymous said...

En thalaivaa pola yaaru chocchaan,
Arms ellaam etthi vacchaan,
Avan mookkum kannimars Paaru macchaan,
Avan aduttha cm agapporaan.

Avanappola arivaaliya India ulagame paatthathilla,
Avan kannula ariyaamayai erkkum Sudar onnu irukuthula,
Avana pola ulaga gnaanam ullavana paatthathilla,
Rasigan, Vishnu, villu suraa pola thulli vaa thalaivaa..

Cm aa aana mukavum thalapathiyaam,
Cm aavennu sollikkira staalum thalapathithaan,
Cm aasayilirundha supra staarum thalapathithaan,
Neethaan... Iraivaa.. Thalaivaa.. Thalaimai Erkka vaa. Vaa.

Meesaiyilum Mann ottavillai, ennaa enakku meesayum illai, mañamum illai....

Anonymous said...

Vijay, S.A.C, and all his fans... Shameless creatures and mokkai's. Comedians of Tamil cinemaa. His mokkai fans are going to be the next mla's,, next councilors, mayors,
S.A.C will be education minister. And his educated fans will be our ministers for finance, health, etc.. I think so, vijay and his fans don't even have brain.. Andha edathula oru kaali idam irukuthula. Fools.

Anonymous said...

What Mr. Cho is going to tell this time?

Anonymous said...

pachamuthu:puthiyathalaimurai::thalaivaa:ban
y no one thinking in this angle?