பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 28, 2013

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 28-8-2013

டேய் ப்ரதர் முனி,

வருஷாந்த்ரம் ஆச்சு உன்னுடன் பேசி. லெட்டர் எழுதி. நல்லா இருக்கிறாயா?

இன்றைய க்ருஷ்ண ஜெயந்திக்கு பத்ரி சார் அவர்கள் போட்ட ஸ்டேட்டஸ்:"ஒரு முஸ்லிம் அக்கா, தன்னோட பையனை கிருஷ்ணனா அலங்கரிச்சு ஸ்கூட்டர்ல கூட்டிட்டுப் போறமாதிரி ஒரு படம் இருக்குமே, அதை யாரும் இன்னமும் ஒட்டலையா?" அவருடைய ஆசையை ஏன் கெடுப்பானேன். அதனால் கீழே இந்தப் படங்கள்.



நல்ல ஸ்டேட்டஸ் நன்றி பத்ரி.

இதை விட நல்ல படங்கள் செப்டம்பர் 9 அன்று வரும் பிள்ளையார் சதுர்த்திக்கு வரும். அதுவரை மக்கள் தங்களுக்கு அரை குறையைத் தெரிஞ்ச இந்தியப் பொருளாதாரம், ரேப் கேஸ், வெண்பாம் அதற்கு தளை தட்டும் கமெண்ட், உணவு பில் வெவகாரம் ... என்று பல விஷயங்களை ராமா கிருஷ்ணா என்று பேசிக்கொண்டு இருக்கலாம்.



எந்தப் படம் எங்கே வெளிவந்தாலும், தமிழகத்தில் வருவது சந்தேகம்தான். இப்போ லேட்டஸ்ட்டா இந்த லிஸ்டில் ‘மெட்ராஸ் கஃபே’. சில நாட்களூக்கு முன் இந்தியாவில் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் வெளியானது. விடுதலைப்புலித்தலைவர் பிரபாகரனைப் பற்றித் தவறாகச் சித்தரிக்கட்டுள்ளது என்று இதற்கு எதிர்ப்பு. தமிழர்கள் எதிர்ப்பு என்று போட்டிருக்கிறார்கள். அப்படியா தலைவா?

தலைவா பாடல் வெளியீட்டு விழாவில் சத்யராஜ் "உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் மாவீரன் பிராபாகரன் ஆகியோரை ஏன் காட்டவில்லை..? அவர்களையும் காட்டியிருந்தால் இங்கு கூடியிருக்கும் தமிழர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்களே..!!" என்றார். மீண்டும் அப்படியா என்று தான் கேட்க வேண்டும். ஏதோ படம் எடுத்தார்களா ரிலீஸ் செய்தார்களா என்று இல்லாமல் இந்த அலம்பு கொஞ்சம் ஜாஸ்தியாத்தானிருக்கு. சீமான் சத்யராஜ் போல ஏன் பிரபலப் பெண்கள், நடிகைகள் யாரும் இப்டிக் குரல் குடுக்கலை?

அவள் விகடனில் "பெண்கள் விரும்பும் பரோட்டா! நல்லதா... கெட்டதா?" என்ற கட்டுரை ஜெயமோகனின் சுதந்திரதின உரையைக் காட்டிலும் சிந்திக்க வைத்தது. அந்த கட்டுரையிலிருந்து ஒரு பகுதி "வீட்டில் செய்ய முடியாததும், ஆண்கள் மட்டுமே செய்யக் கூடியதுமான பரோட்டாவை கடையில் வாங்கிச் சாப்பிடுவதில் பெண்களுக்கு ஓர் அலாதி இன்பம். ஆண்கள் சமைத்த பொருளை சாப்பிடும் உளவியல் சந்தோஷமும் அதில் ஒளிந்திருக்கிறது!'" (அடுத்த அப்படியா !) இந்தக் கேள்விக்கு சமையல் மாமி தான் பதில் சொல்ல வேண்டும். சரி மாமிக்கு பரோட்டா சுட தெரியுமா?

விகடன் வார வாரம் ஒரே மாதிரி நியூஸ் படம் என்று கமெண்ட் அடிப்பவர்களுக்கு - கடந்த சில வாரமாக விகடனில் எது மாறுகிறதோ தெரியாது ஆனால் ஆசிரியர் குழுவில் இருப்பார்கள் ஒவ்வொருவராக ஹிந்து ஆரம்பிக்க போகும் தமிழ் நாளிதழுக்கு போகிறார்கள். ஆசிரியர் குழு லிஸ்டில் பலருடைய பெயர்கள் மேலே செல்கிறது. மேலே இருந்த பெயர்கள் புத்தகத்துக்கு வெளியே போய்விட்டடு!. குமுதத்திலிருந்தும் சிலர் போவர்கள் என்று கேள்விப்படுகிறேன். ( அட அடுத்த அப்படியா !)

சரி. அடுத்த அப்படியா நீயூஸை கேட்டால் தமிழ் ஆர்வலர்கள் கொதித்துப்போவர்கள். பல காலமாக தான் தமிழன் என்று சொல்லிக்கொள்ள வாகனங்களில் தமிழ் எழுத்துக்களைக் கொண்டு நம்பர் பிளேட்டுகளை அனுமதித்தாகள். இந்த அபத்தமான காரியத்துக்குத் தற்போது தடை வந்துவிட்டது. தமிழில் எழுதிக்கொள்ளலாம் என கலைஞர் ஆட்சியில் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இப்போது திடீரெனத் தமிழில் உள்ள நம்பர் பிளேட்டுகளை அகற்றுவதற்கு தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராமதாஸ், திருமாவளவன், சுப.வீரபாண்டியன், சீமான் வாகனங்களிலெல்லாம் தமிழில்தான் நம்பர் பிளேட் உள்ளது. அட்லீஸ்ட் நம்பர் பிளேட்டையாவது அகற்ற இப்பவாவது இந்த மாதிரி பகுத்தறிவுச் சிந்தனை வந்ததே, அப்பாடா என்று சந்தோஷப்பட வேண்டியது தான்.

பகுத்தறிவு என்றால் வீரமணி இல்லாமலா? கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா? - சிந்திப்பீர் என்று கீ.வீரமணி அறிக்கை விட்டிருக்கிறார். இவரைப் போல ஆளுங்களுகெல்லாம் ரிடையர்மெண்டே கிடையாதா? அந்தக் கிருஷ்ணன்தான் இந்த லோகத்தக் காப்பாத்தணும்.

கலிக்கு முன்பே அவதரித்ததால் அந்த க்ருஷ்ணர் தப்பிச்சார். இல்லை கிருஷ்ணர் பெண்கள் டிரஸை ஒளித்து வைத்தார் என்று பேச ஆரம்பித்துவிடுவார்கள்.

கற்பழிப்பு நியூஸ் வந்தவுடன் உடனே சிலர் பெண்கள் எப்படி டிரஸ் போட்டுக்கொள்ள வேண்டும் என்று கருத்து சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள். பூணூல் பத்திரிகை இந்தக் கருத்தைச் சொன்னால் அவர்களை ஏசுவதும், ஆனால் சில மாதங்களில் அவர்கள் அதே கருத்தை சொல்லுவதும் நடந்துக்கொண்டு இருக்கிறது. பூணூல் ஆசாமிகள் கருத்தைவிட பூனம் கருத்து சிந்திக்க வைக்கிறது. பீர்பார்'களைத் திறந்தால் கற்பழிப்பு குற்றங்கள் குறையுமாம். (மீண்டும் ஒரு பெரிய அப்படியா ?) ( பூனம் பாண்டே படம் கூகிளில் கிடைக்கவில்லை )

கொலை கொள்ளை கற்பழிப்பு என்று செய்திகளைக் கேட்டு புளித்து போச்சு. அதனால் ஒரு காமெடி செய்தி. பசியை போக்கும் வகையில், உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியதால், மணிமேகலையாக, காங்கிரஸ் தலைவர் சோனியா திகழ்கிறார். இதச் சொன்னது இந்த லோகத்தில் ஒருத்தறாத்தான் இருக்கும் என்று குழந்தை கூடச் சொல்லிடும்.

ஒரு வாரம் முன்பு பழமொழிப் புதிர் போட்டியில் பலர் கலந்துக்கொண்டு சுலபமாக விடை அளித்தார்கள். இந்தப் புதிருக்கு சரியான விடையை கண்டுபிடிப்பவர்களுக்கு நிச்சயம் பரிசு காத்துக்கொண்டு இருக்கிறது கேள்வி : கோச்சடையான் எப்போது வெளியாகும்! - பதில் விரைவில் என்று இருக்க கூடாது. ரஜினி ஸார் கலந்து கொண்டு சரியான பதில் சொன்னாலும் அவருக்குப் பரிசு கிடையாது.

கொஞ்ச நாளாக இரண்டு கேள்விகள் என் மண்டையை குடைகிறது

மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று கணவன் நினைப்பது எப்போது ?
கணவன் அழகாக இருக்க வேண்டும் என்று மனைவி நினைப்பது எப்போது ?


என்றென்றும் அன்புடன்
இட்லிவடை

21 Comments:

Anonymous said...

Veeramani's wife worships a Krishna statue located at the backyard of their house. Even his own wife is not convinced with his stupid ideas.

Badri Seshadri said...

எனக்கு ஃபேஸ்புக்கில் கிடைத்த இன்னொரு லிங்க்: https://www.facebook.com/photo.php?fbid=553603708020158&set=a.226725110708021.50724.226712794042586&type=1&ref=nf

kothandapani said...

மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று கணவன் நினைப்பது எப்போது ?
கல்யாணத்திற்க்கு முன்னால்

கணவன் அழகாக இருக்க வேண்டும் என்று மனைவி நினைப்பது எப்போது ?
எப்போதும் இல்லை (நிறய ஆண்களை பார்க்கும்போது அப்படிதான் தோன்றுகிறது)

kothandapani said...

கேள்வி : கோச்சடையான் எப்போது வெளியாகும

எப்ப வரும் எப்படி வரும் என்று எல்லாம் சொல்ல முடியாது . ஆனா வர வேண்டிய நேரத்தில் வரும் .

Anonymous said...

while expecting controversial cartoons like the one found in the link below, I am surprised IdlyVadai can bring good cartoons as well.

http://media.dinamani.com/2013/08/29/29cartoon.jpg/article1757257.ece/binary/original/29cartoon.jpg

IdlyVadai said...

அன்பு வாசகரே,


http://media.dinamani.com/2013/08/29/29cartoon.jpg/article1757257.ece/binary/original/29cartoon.jpg

இது கார்ட்டூனே இல்லை. படத்துடன் ஒரு நக்கல் கட்டுரை. அவ்வளவு தான்.

ப்ரதிவாதி பயங்கராச்சாரி said...

இதெல்லாம் ஒரு போஸ்ட். கருமம்டா. அதனாலதான், J Jaganathaஒ, முனி யோ சனியோ அத்தன பேரும் மழைக்கு கூட இ.வ. பக்கம் ஒதுங்குறதில்ல. இ.வ. கடய சாத்தற நேரம் வந்தாச்சு. சீக்கிரமா எ.அ.பாலா ஐயங்கார வந்து ச்ரார்தம் நடத்த சொல்லுங்கோ!

Unknown said...

சோனியா மணிமேகலையா?
தலைவரே உங்களை நம்பி நான் பெஸ்புக்ல நிறைய பேர் கிட்ட சண்டை போட்டிருக்கேன்.
தயவு செஞ்சு இந்த மாதிரி பேசாதீங்க.

பிரதிவாதி ப்யங்கராச்சாரி,

லலிதா புண்ணியத்துல எனக்கு மட்டும் ஆபீசுல நெட் கட் பண்ணிடாங்க. இரவு வந்து எழுதுறேன். வேற வழி இல்லை. கூடிய சீக்கிரம் வேற கம்பனி மாறப்போறேன். என்சாய்

Unknown said...

//எப்ப வரும் எப்படி வரும் என்று எல்லாம் சொல்ல முடியாது . ஆனா வர வேண்டிய நேரத்தில் வரும் .
/

வரவேண்டிய நேரத்தில் வராம போனாத்தான் ரஜினி. கோழை.

Dhas said...

Idlyvadai...

அப்டியே ஸைடு பார்ல "ஜாலி ஜானி" போஸ்டரையும் மாத்தலாம். கடைல கொஞ்சம் மராமத்து வேலை இருக்கு...

முனிக்கு கடிதம் ஓகே.

Harini said...


@ Pratiwadhi Bhayankarachari

It is not ச்ரார்தம், by the way,
It is SRAATHAM ( that which is done
with Srathai is called SRAATHAM

cho visiri said...

@ Shri Pratiwadhi Bhayankaraachari-

It is not "ச்ரார்தம்:", my friend,
It is actually SRAATHAM (that which is done with Sradhdhai (with utmost care)

ப்ரதிவாதி பயங்கராச்சாரி said...

Hello Harini & Cho Visiri

Just go to Google and search for 'Srardham'. எங்கேயிருந்து புடிச்சீங்க SRAATHAM.சத்தம் போட்டு ச்ரார்த்தமில்ல ச்ராத்தம் தான்னு சொன்னதால ச்ரார்த்தம் ச்ராத்தமாயிடுமா!

பெசொவி said...

@ cho visiri

you have wasted your valuable time for replying to ShrPratiwadhi bhyankaraachari :(

Unknown said...

harini and cho visiri இரண்டு பேரும் ஒரே நபர் போல. ஏன்பா காமடி பண்ணுற

Anonymous said...

மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று கணவன் நினைப்பது எப்போது ?
கணவன் அழகாக இருக்க வேண்டும் என்று மனைவி நினைப்பது எப்போது ?

"For matter"

Murali

Unknown said...

//Anonymous said...
மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று கணவன் நினைப்பது எப்போது ?
கணவன் அழகாக இருக்க வேண்டும் என்று மனைவி நினைப்பது எப்போது ?

"For matter"

Murali//

முரளி கலக்கிட்ட. மேட்டர பத்தி ஐன்ஸ்டீன் கூட சொல்லியிருக்கார் தெரியுமா?

Anonymous said...

மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று கணவன் நினைப்பது எப்போது ?
கணவன் அழகாக இருக்க வேண்டும் என்று மனைவி நினைப்பது எப்போது ?
for matter

இது போல 'சந்தான' கமண்ட்டுகளை தவிர்க்கலாம்.

Unknown said...

//Anonymous said...
மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று கணவன் நினைப்பது எப்போது ?
கணவன் அழகாக இருக்க வேண்டும் என்று மனைவி நினைப்பது எப்போது ?
for matter

இது போல 'சந்தான' கமண்ட்டுகளை தவிர்க்கலாம்.//

நீயே அந்த கமெண்டை போட்டுட்டு நீயே வேணாம்னு சொல்லுற பாத்தியா அனானி. உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

Anonymous said...

J.J

பின்னூட்டம் போடறதத் தவிர வேற வேலையே இல்லயா உமக்கு? ஆஃபிஸ்ல வேலை செய்யாம இப்படியே செஞ்சுகிட்டு இருந்தா கூடிய சீக்கிரமே சீட்டு கிழித்து அனுப்பிடப் போறாங்க.. ஜாக்கிரதை!

Anonymous said...

லூசு லூசு

--second anony