வருஷாந்த்ரம் ஆச்சு உன்னுடன் பேசி. லெட்டர் எழுதி. நல்லா இருக்கிறாயா?
இன்றைய க்ருஷ்ண ஜெயந்திக்கு பத்ரி சார் அவர்கள் போட்ட ஸ்டேட்டஸ்:"ஒரு முஸ்லிம் அக்கா, தன்னோட பையனை கிருஷ்ணனா அலங்கரிச்சு ஸ்கூட்டர்ல கூட்டிட்டுப் போறமாதிரி ஒரு படம் இருக்குமே, அதை யாரும் இன்னமும் ஒட்டலையா?" அவருடைய ஆசையை ஏன் கெடுப்பானேன். அதனால் கீழே இந்தப் படங்கள்.
நல்ல ஸ்டேட்டஸ் நன்றி பத்ரி.
இதை விட நல்ல படங்கள் செப்டம்பர் 9 அன்று வரும் பிள்ளையார் சதுர்த்திக்கு வரும். அதுவரை மக்கள் தங்களுக்கு அரை குறையைத் தெரிஞ்ச இந்தியப் பொருளாதாரம், ரேப் கேஸ், வெண்பாம் அதற்கு தளை தட்டும் கமெண்ட், உணவு பில் வெவகாரம் ... என்று பல விஷயங்களை ராமா கிருஷ்ணா என்று பேசிக்கொண்டு இருக்கலாம்.
அவள் விகடனில் "பெண்கள் விரும்பும் பரோட்டா! நல்லதா... கெட்டதா?" என்ற கட்டுரை ஜெயமோகனின் சுதந்திரதின உரையைக் காட்டிலும் சிந்திக்க வைத்தது. அந்த கட்டுரையிலிருந்து ஒரு பகுதி "வீட்டில் செய்ய முடியாததும், ஆண்கள் மட்டுமே செய்யக் கூடியதுமான பரோட்டாவை கடையில் வாங்கிச் சாப்பிடுவதில் பெண்களுக்கு ஓர் அலாதி இன்பம். ஆண்கள் சமைத்த பொருளை சாப்பிடும் உளவியல் சந்தோஷமும் அதில் ஒளிந்திருக்கிறது!'" (அடுத்த அப்படியா !) இந்தக் கேள்விக்கு சமையல் மாமி தான் பதில் சொல்ல வேண்டும். சரி மாமிக்கு பரோட்டா சுட தெரியுமா?
பகுத்தறிவு என்றால் வீரமணி இல்லாமலா? கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா? - சிந்திப்பீர் என்று கீ.வீரமணி அறிக்கை விட்டிருக்கிறார். இவரைப் போல ஆளுங்களுகெல்லாம் ரிடையர்மெண்டே கிடையாதா? அந்தக் கிருஷ்ணன்தான் இந்த லோகத்தக் காப்பாத்தணும்.
கலிக்கு முன்பே அவதரித்ததால் அந்த க்ருஷ்ணர் தப்பிச்சார். இல்லை கிருஷ்ணர் பெண்கள் டிரஸை ஒளித்து வைத்தார் என்று பேச ஆரம்பித்துவிடுவார்கள்.
கற்பழிப்பு நியூஸ் வந்தவுடன் உடனே சிலர் பெண்கள் எப்படி டிரஸ் போட்டுக்கொள்ள வேண்டும் என்று கருத்து சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள். பூணூல் பத்திரிகை இந்தக் கருத்தைச் சொன்னால் அவர்களை ஏசுவதும், ஆனால் சில மாதங்களில் அவர்கள் அதே கருத்தை சொல்லுவதும் நடந்துக்கொண்டு இருக்கிறது. பூணூல் ஆசாமிகள் கருத்தைவிட பூனம் கருத்து சிந்திக்க வைக்கிறது. பீர்பார்'களைத் திறந்தால் கற்பழிப்பு குற்றங்கள் குறையுமாம். (மீண்டும் ஒரு பெரிய அப்படியா ?) ( பூனம் பாண்டே படம் கூகிளில் கிடைக்கவில்லை )

ஒரு வாரம் முன்பு பழமொழிப் புதிர் போட்டியில் பலர் கலந்துக்கொண்டு சுலபமாக விடை அளித்தார்கள். இந்தப் புதிருக்கு சரியான விடையை கண்டுபிடிப்பவர்களுக்கு நிச்சயம் பரிசு காத்துக்கொண்டு இருக்கிறது கேள்வி : கோச்சடையான் எப்போது வெளியாகும்! - பதில் விரைவில் என்று இருக்க கூடாது. ரஜினி ஸார் கலந்து கொண்டு சரியான பதில் சொன்னாலும் அவருக்குப் பரிசு கிடையாது.
கொஞ்ச நாளாக இரண்டு கேள்விகள் என் மண்டையை குடைகிறது
மனைவி அழகாக இருக்க வேண்டும் என்று கணவன் நினைப்பது எப்போது ?
கணவன் அழகாக இருக்க வேண்டும் என்று மனைவி நினைப்பது எப்போது ?
என்றென்றும் அன்புடன்
இட்லிவடை