பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 05, 2013

சா"தீ"

தருமபுரி திவ்யாவை காதல் திருமணம் செய்த இளைஞர் இளவரசன் வியாழக்கிழமை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸôர் தெரிவித்தனர் - செய்தி

இனி அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் எல்லாம் ஃபேஸ்புக், டிவிட்டர் என்று பேச ஆரம்பித்துவிடுவார்கள். இதில் என்ன கூத்து என்றால் இந்த so-called அரசியல் தலைவர்கள் எல்லாம் தொகுதியில் அந்த அந்த ஜாதியில் தான் வேட்பாளர்களை நிறுத்துவார்கள். இவர்கள் ஊட்டி வளர்த்த சாதி வெறி தான் இது.

ஃபேஸ்புக், டிவி விவாதம் செய்யும் எழுத்தாளர்களின் அழுகை, அலம்பலை நினைத்தால் நினைத்தால் பயமாக இருக்கிறது.

இந்த செய்தியை படிக்கும் போது - மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணையை உங்கள் சமூகத்தில் தேர்ந்தெடுங்கள் என்ற தமிழ்மேட்ரிமோனி விளம்பரம் சைடில் வந்தது - இதில் நிறைய உண்மை இருக்கிறது!

25 Comments:

ப.கந்தசாமி said...

நடைமுறை யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல் செயல் புரிந்ததின் விளைவு.

Anonymous said...

thoo!

பூவண்ணன் said...

இந்த சாதியை பார்த்து ஆட்களை நிறுத்துகிறார்கள் என்ற பிட் ஆதாரம் இல்லாமல் ரொம்ப நாளாக திராவிட எதிர்ப்பாளர்களால் ஒட்டப்படுகிறது.
விஜயகாந்த் சினிமாவில் புள்ளி விவரம் தருவது போல ஒவ்வொரு தொகுதியிலும் எந்த எந்த சாதிக்காரர் கடந்த பத்து தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை பார்த்தால் இந்த வாதத்தில் உள்ள பொய் புரியும்
சாதி தலைவர்களின்,சாதி கட்சிகளின் குற்றச்சாட்டே அவர்கள் சாதியினருக்கு வர வேண்டிய இடங்கள் திராவிட கட்சியினரால் சிறுபான்மை சாதிகளுக்கு சென்று விட்டன எனபது தான்
மற்ற எல்லா மாநிலனகளையும் விட குறைவான எண்ணிக்கையில் இருக்கும் சாதியினர் வேறு சாதியினர் அதிகம் இருக்கும் தொகுதிகளில் செய்த்தது அதிக அளவில் தமிழகத்தில் தான்.
தேசிய கட்சிகளில் ,மாநில முதலவர்களில் மற்ற மாநிலங்களில் நூத்துக்கு 99 பெரும்பான்மை சாதிகள் தான்.இங்கு மட்டும் தான் எண்ணிக்கை குறைவான சாதிகளின் தலைமை.

இந்த முறை சட்டசபையில் இருக்கும் எம் எல் ஏக்களில் 46 பேர் பட்டியல் இனத்தவர் (இரு பொது தொகுதிகள் உட்பட)39 பேர் வன்னியர்.36 முக்குலத்தோர்,22 பேர் கொங்கு கவுண்டர்,17 பேர் நாடார்.இங்கு நான்கு சம எண்ணிகையில் உள்ள சாதிகள் கிடையாது.சென்ற இரு முறைகளும் பா ம க அதிகம் செய்ததால் வன்னியர்கள் 43,42 பேர்.சசிகலாவின் ஆதிக்கம் இருந்தும் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் வன்னியர்கள் தான்


சாதியை வைத்தே பெரும்பாலும் தீர்மானிக்கப்படும் பஞ்சாயத்து தலைவர் தேர்தல்களை வைத்து இன்னும் முப்பது எம் எல் ஏ ஜெயிக்க வேண்டிய சாதி நம் சாதி எனபது தான் பா ம கா வின் கணக்கு.


சென்னையில் அதன் சுற்றுபுரங்களில் மற்ற சாதியினர் அதிகம் நிறுத்தி வைக்கப்பட்டு வெற்றி பெறுகிறார்கள்.அதை தடுக்க வேண்டும் என்பதும் பாமகா வின் கணக்கு.அது நடைபெறாமல் இருக்க காரணம் திராவிட கட்சிகள் என்பதால் தான் அவற்றை கரித்து கொட்டுவதும்

பூவண்ணன் said...

தமிழ்நாட்டில் தமிழர்கள் அதிகம் பேர் எம் எல் ஏ ஆகிறார்கள் என்பதை குற்றமாக எண்ணினால் தவறு யார் பக்கம் உள்ளது.ஒரு தொகுதியில் மிக அதிக சதவீதத்தில் ஒரே ஒரு சாதி இருந்தால் எல்லா கட்சியிலும் பொறுப்புகள் அந்த சாதியை சேர்ந்தவரிடம் இருக்க வாய்ப்பு அதிகம்.அப்படிப்பட்ட சூழல் தான் அனைத்து ஊர்களிலும்.அப்படி இங்கு இல்லை எனபது தான் சாதி கட்சிகளின் குற்றசாட்டே .சாதி சங்கங்களின் பத்திரிக்கைகளை பார்த்தால் புள்ளி விவரத்தோடு எப்படி அவர்களின் சாதி அதிகம் இருக்கும் தொகுதிகளில் சிறுபான்மை சாதியை சார்ந்தவர்கள் திராவிடம் என்ற பெயரில் வெற்றி பெறுகிறார்கள் என்ற பொருமல் இருக்கும்.ஒரே சாதியை சார்ந்தவர் மட்டும் ஜெயத்த தொகுதிகளை தமிழகத்தில் விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் மற்ற மாநிலங்களில் பெரும்பாலான தொகுதிகளில் குறிப்பிட்ட சாதி,மதத்தை சார்ந்தவர்களை தவிர வேறு யாரும் ஜெயிக்காத தொகுதிகள் அதிகம்
வோக்களிகர்களின் கோட்டையில் தேவ கௌடாவின் ஆட்களும்,அவர் சாதிகாரர்களும் தான் ஜெயிக்க முடியும் .லின்காயத்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களில் அவர்கள் சாதி ஆட்கள் தான்
ரெட்டி மட்டும் ஜெயித்த தொகுதிகள் ஆந்திரத்தில் சில டசன் இருக்கும்.கம்மா,ராசு,காபபு அதிக சதவீதத்தில் இருக்கும் தொகுதிகளில் வெற்றி அவர்கள் சாதியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான்

பூவண்ணன் said...

எடியுரப்பா,வீரேந்திர பாடீல்,பொம்மை முதல்வர்களாக இருந்தாலும் அவர்களும் அவர்கள் வாரிசுகளும் லிங்காயத் அதிகம் இருக்கும் தொகுதிகளில் தான் நிற்ப்பார்கள்.பிரதமராக இருந்தாலும் வொக்கலிகர் அதிகம் இருக்கும் தொகுதியில் தான் தேவ கெளடாவும் வாரிசுகளும்,முதல்வராக இருந்த கிருஷ்ணாவும் எல்லா தேர்தலிலும் நிற்கிறார்கள்.கம்முநிச்டாக இருந்தாலும் அச்சுதானந்தன் நிற்பது ஈழவர்கள் அதிகம் இருக்கும் தொகுதி தான்.ஆந்திரம்,உதர்ப்ரதேசம் ,உட்டர்க்ஹாந்த்(முதல்வராக இருந்தாலும் ராஜபுத்திர சாதியை சார்ந்த உட்கட்சி ஆட்களே தங்கள் கட்சியின் க்ண்டூரியை தோற்கடித்தார்கள்)எல்லாவற்றிலும் இதே கதை தான்.வங்காளத்தில் மாத்திரம் ஒதுக்கீட்டு தொகுதிகள் மீதியில் முக்கால்வாசி பிராமணர்கள்.மக்கள் தொகையில் பத்து சதவீதத்திற்கு கீழ் இருந்தாலும் 35 சதவீத இடங்கள் அவர்களுக்கு.இதை விரும்புகிறவர்கள் தான் சாதி பார்த்து ஒட்டு போடுகிறார்கள் என்ற போலியான குற்றசாட்டை வீசுபவர்கள்
தமிழகத்தின் நிலையை பார்ப்போமா .இங்கு கட்சியை இரும்பு பிடிக்குள் வைத்திருக்கும் தலைவர் ஒருவரின் சாதியும் எந்த தொகுதியிலும் அதிக எண்ணிக்கையில் இல்லாத சாதி தான்
கருணாநிதி,ஸ்டாலின்,மாறன்,எம் ஜி ஆர்,ஜெயா நின்ற தொகுதிகளின் பட்டியலை பார்த்தால் என் கூற்றின் உண்மை விளங்கும்

h@rish said...

அட யாருங்க இப்போ சாதி பாக்குறாங்க...?

பூவண்ணன் said...

சாதி இல்லை என்று யாரும் சொல்லவில்லைஆனால் தமிழகத்தில் தான் உள்ளது போல பேசுவது எதனாலோ தேசிய கட்சிகளின் அழகை பார்க்கலாமா

காமராஜர் தருமபுரி மாவட்டத்தில் நின்றாரா இல்லை
முன்னாள் மத்திய அமைச்சர்கள் பொன் ராதா தருமபுரி நிற்பாரா
சி பி ராதக்ரிஷ்ணன் நாகர் கோவிலில் நிற்பாரா ,ஆனால் எம் ஜி ஆ,ஜெயலலிதா ,கலைஞர்,அவரின் மகன்கள் எங்கு தேர்தலில் நின்றார்கள் /நிற்கிறார்கள்.

கேரளாவில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியில் மூன்று ஈழவ எம் எல் ஏ க்கள்.கம்யூனிஸ்ட் கட்சியில் 20திர்க்கும் மேல் ஈழவ எம் எல் ஏ க்கள்.காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்ற நாயர்கள் 17.கம்யூனிஸ்ட் கட்சியில் ஆறோஏழோ.
தேவ கெளட கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தான் வொக்கலிகர் அதிகம் இருக்கும் தௌகுதிகளில் போட்டி.வோக்கலிகா ஒருவரை முதல்வர் ஆக்கினாலும் அவர்கள் கௌடா பின்னால் வலுவாக இருக்கிறார்கள் என்பதால் தான் பா ஜ க அவரை தூக்கி விட்டு லின்காயத்தை ஆக்கியது.இது தான் சாதி அரசியல்
வைச்யரான ரோசையாவால் ரெட்டி வோட்டுக்கள் ஜகன் பின் செல்வதை தடுக்க முடியாது.(அங்கு ரெட்டிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மற்ற பிற்பட்டதாழ்த்தப்பட்ட சாதி வோட்டுக்களும் அதிகம்.)என்பதால் கிரண் குமார் ரெட்டி முதல்வர் ஆக்கபட்டார். இது தான் சாதிஅரசியல்.
இங்கு ஆறு மாதம் முதல்வராக இருந்த முக்குலத்தோர் சாதியை சார்ந்த பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு மறுபடியும் ஜெயா முதல்வர் ஆன போது ஒரு சிறு சலசலப்பு கூட கிடையாது.

பூவண்ணன் said...

இந்த பதிவு உண்மையில் வருத்தம் தெரிவிக்கும் பதிவு மாதிரி தெரியவில்லை
போயிட்டானா ,ஹைய்யா ஜாலி ஜாலி இனிமே எவனாவது/எவளாவது காதல்,சாதிமறுப்பு திருமணம் என்று எண்ணினால் காட்டி மிரட்ட ஒரு சடலம் கிடைத்த மகிழ்ச்சி தான் தெரிகிறது
ஆயிரக்கணக்கான பேர் சாதிகடந்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்

இந்த கொடூர நிகழ்வை காட்டி சாதி முக்கியம்.அவனவன் சாதியில் துணை தேடுங்கள் என்று கூச்சம் இல்லாமல் எழுதுவது வருந்த வேண்டிய ஒன்று

Unknown said...

//காமராஜர் தருமபுரி மாவட்டத்தில் நின்றாரா//

பூவண்ணன் சார் ....

சும்மா அடிச்சு விடாதீங்க........

கிட்டத்தட்ட நாடார்களே இல்லாத குடியாத்தம் தொகுதியில் நின்று காமராஜர் ஜெயித்துள்ளார்.......

Unknown said...

பூவண்ணன் சார்.......


இப்ப எதுக்கு சம்பந்தமே இல்லாம தீராவிட இயக்க புகழ் பாடுரீங்க........


தீராவிட இயக்கங்களின் ஆட்சியில் தலித் ஒருவர் அதிகபட்சமாக சபாநாயகராக நியமிக்க நாற்பத்தைந்து வருடங்கள் ஆகியுள்ளது.....[ அதையும் பிராமணரான ஜெ தான் செய்தார் ].......அதுவரை அதிகபட்சம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவிதான்.....


காம‌ராஜர் ஆட்சியில் , புரோட்டோகால் படி முதல்வருக்கு அடுத்த நிலையில் உள்ள உள் துறை அமைச்சர் பொறுப்பில் திரு. கக்கன் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்......

Anonymous said...

sooper slap to poovannan!

R. J. said...

This definitely needs discussion in all media only with the hope that the political leaders may soften their approach towards caste-ism. It is a pity that the girl's father committed suicide in the first place - probably afraid of being out-cast by his own caste. (I don't think he himself was strongly against the marriage - though he too would not have accepted it whole-heartedly). Understand the girl's guilt feelings when her father died. It will only increase now with her husband's suicide and someone need to take care of her and her mother with proper counselling. The girl could have discussed her feelings with her husband before returning to her mother and both could have agreed to wait for a proper time to join again. There are many Ifs and Buts. Time for CM to call the girl and her mother as well as the parents of the boy, alongwith a qualified counsellor to advise them properly and assure them of support. - R. J.

லெமூரியன்... said...

ஒரு சாதி இந்துவிடம் எதிர்பார்த்த ஒன்றுதான் உங்களிடமும் வெளிப்பட்டிருக்கிறது.

அருவெறுப்பான மஞ்சள் கமெண்ட்.

காதல் மற்றும் அன்புதான் மானுடத்தினை தழைத்தோங்க வைத்திருக்கிறது..!

அது புரியாத இந்த காட்டுமிராண்டி வன்னிய இனத்திற்கு காதல் மற்றும் அன்பினை விளக்க முனைவோம்..

நாடக காதல் என்று சொன்ன நாய்களுக்கு அன்பின் அவசியத்தை எடுத்து சொல்வோம்..

லெமூரியன்... said...

காதலிப்பதும் மனம் செய்து கொள்வதும் அவரவரின் தனிப்பட்ட உரிமை.

நீ மூக்க நுளைச்சி உண்மை காதல் பொய் காதல்னு சொல்ல நீ காதலிச்சிருக்கியா ?

அட கிழட்டு பயல்களா...

முதல்ல நீங்க உங்க பொண்டாட்டிய காதலிக்க பழகுங்கட...

அப்புறம் விளக்கம் சொல்லுங்க உண்மை காதல் எது நாடக காதல் எதுன்னு..

பூவண்ணன் said...

http://www.thehindu.com/news/national/tamil-nadu/byelections-generally-no-shockers-for-ruling-party/article2925159.ece

http://en.wikipedia.org/wiki/K._Kamaraj

சான்றோன் ஐயா
இது ஞாயமா.எம் பி யாக இருந்து முதல்வர் ஆனதால் முதல்வராக போட்டியிட்ட தொகுதி குடியாத்தம்.அவர் போட்டியிட்ட பத்து தேர்தல்களில் இது ஒன்றை தவிர மற்ற எல்லாம் அவர் சாதியினர் அதிக எண்ணிக்கையில் உள்ள இடங்கள் தான்,.அடுத்த தேர்தலில் அவர் குடியாத்தத்தில் போட்டியிடவில்லை.
அவர் வென்ற நாகர்கோவில் தொகுதி தமிழகத்தில் ஒரே சாதியை சார்ந்தவர் மட்டும் வெற்றி பெற்ற ஒரு சில தொகுதிகளில் ஒன்று
எம் ஜி ஆர்,கலைஞர்,ஜெயலலிதா,ஸ்டாலின் பல தேர்தலில் நின்ற தொகுதிகளுக்கும் அவர்களின் சாதிக்கும் ஏதாவது தொடர்பு உண்டா

Padmanaban said...


100% உண்மை

kothandapani said...

திராவிட இயக்கங்கள் தோன்றி வளர்ந்ததே ஜாதிகளை எதிர்த்து அரசியல் பண்ணியதால் தான்.
antibraminism என்ற அடிப்படையில் அணைத்து ஜாதிகளையும் இணைத்து வளர்ந்ததே திராவிட இயக்கம். ஆம்பூர் தொகுதியில் ஒரு ஹிந்துவை ஜெயிக்க வைத்தவர் MGR .அதை என்னவோ பெரிய சாதனை மாதிரி சொல்கின்றார் நண்பர்.எதெல்லாம் பழம் கதைகள். தற்போதெல்லாம் திராவிட இயக்கங்களும் ஜாதியை பார்த்து வேட்பாளர்களை select பண்ணுவது மறுக்கமுடியாது.பரிதாபத்திற்கு உரியது. தமிழகத்தை இரும்பு பிடியில் வைத்திருக்கும் தலைவரின் மகள் ஒரு திருவற்றியுராயோ தூதுகூடியையோ தேடி ஓடுவது இன்றைய நிலை.

இளவரசனை எண்ணி கூப்பாடு போடும் எயக்க்காகங்களும் மீடியாக்களும் அவன் depression
ஆக இருந்த போது எங்கு இருந்தன . உண்மையில் அக்கறை இருந்து இருந்தால் அவனி அரவணித்து ஆறுதல் சொல்லி , கவுன்செல்லிங் பண்ணி ஒரு உயிரை காப்பாத்தி இருக்கலாம்.

Anonymous said...

காதலாவது கத்திரிக்காயாவது, வெங்காயம்

Anonymous said...

தமிழ்நாடு குட்டிச்சுவர் ஆனதற்கே இந்த ’திராவிட’ என்ற இல்லவே இல்லாத ஓர் இனமும், அது பற்றிய பொய்ப் புரளியும்தான் காரணம்.

ஈவெராவால் ஆரம்பிக்கப்பட்ட “திராவிடர் கழகம்”, ”ர்” போய் ”திராவிட” முன்னேற்றக் கழகம் ஆனது எப்படி? அதில் இருக்குது விஷயம்.

தமிழ் மீது (உண்மையான) பற்றுக் கொண்டிருந்தவர்கள் “தமிழர் முன்னேற்றக் கழகம்” தானே ஆரம்பித்திருக்க வேண்டும்? ஏன் ஆரம்பிக்கவில்லை? இந்த “திராவிட” என்ற சம்ஸ்கிருத வார்த்தை எங்கிருந்து, எப்படி வந்தது? இது யாரை ஏமாற்ற?

இதுல இவங்க எல்லாம் அறிவுஜீவிகளாம், வெங்காயம்.

பூவண்ணன் said...

சான்றோன் ஐயா

எம் ஜி ஆர் யார் தெரியுமா .அவர் தந்தை சாதி பிரஷ்டம் செய்யப்பட்டு சண்டாளன் ஆனவர்.அவர் குடும்பத்தினர் அவருக்கு கருமாதி செய்து விட்டனர். பின்பு அன்றைய தீண்டத்தகாத சாதியான ஈழவ சமுதாயத்தை சார்ந்த சத்யபாமாவை திருமணம் செய்து கொண்டு இலங்கைக்கு சென்றவர்.அவரை எந்த சாதியில் சேர்ப்பீர்

கலைஞரின் சாதியான சின்ன மேளம் எனும் பொட்டு கட்டி விடும் வழக்கத்தை கடைபிடிக்கும் சாதி பல மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட பட்டியலின் கீழ் தான் வருகின்றது.நரி குறவரோ,இசை வெள்ளாளரோ,கேப்மாறியோ MBC கீழ் வருவதால் ஆதிக்க சாதி ஆகி விடுவார்களா.அரசு உருவாக்கிய பட்டியலில் சில சாதிகள் ஒன்றிலிருந்து இன்னொரு குழுவுக்கு போகும்.சில சாதிகள் ஒரு மாவட்டத்தில் mbc ,இன்னொரு மாவட்டத்தில் sc அல்லது ST கீழ் இருப்பதும் உண்டு.
நாங்கள் ஆண்ட சாதி ,எங்களை SC கீழ் சேர்க்காதீர்கள் என்று பள்ளர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.காங்கிரஸ் கட்சி ஒரு சில விதிவிலக்குகளை தவிர்த்து மிட்டாமிராசுகளின் கட்சி எனபது அனைவருக்கும் தெரியும்

பூவண்ணன் said...

மேலவளவு பஞ்சாயத்து தலைவர் சாதிவெறியால் படுகொலை செய்யப்பட்ட போது பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஆசைப்பட கூடாது.சாதி தொழிலை செய்து அமைதியாக வாழுங்கள் என்று எழுத வேண்டியது தானே
ராணுவ வீரர்கள்,காவல்துறையினர் கொடூரமான முறையில் உயிர் இழந்த நிகழ்வுகளின் போது ,இனி யாரும் இந்த வேலைகளை பற்றி யோசிக்காதீர்கள் .அரசு திட்டமான கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் கிடைக்கும் வேலையை பார்த்து கொண்டு இருங்கள்.அது நல்லது என்று பதிவிட வேண்டியது தானே
இங்கு மட்டும் ஒரே சாதிக்குள் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்ற அறிவுரை எங்கிருந்து குதிக்கிறது.

Anonymous said...

poovannan, excellent sir. but we cant expect any sensible reply from iv and its ilk.
idlyvadai, if you cant reply to poovannan's questions delete the yellow sentence or better delete this post. you and YOUR GROUP are not expected to support something against casteism. the least thing that you can do is keep quiet and ignore this event as if nothing happened. it will be the best condolence from you for this dead man.

rest in peace bro...

Anonymous said...

ALL THE PEOPLE TEND TO FORGET THAT MURDERS TAKE PLACE ONLY
A DALIT MARRIES A CASTE HINDU.
WHEN A BRAHMIN IS MARRIED TO A DALIT NO BRAHMIN MAKES A NOISE ABOUT IT. THE DALITS ALSO DONT APPRECIATE OR BRING TO LIGHT THE BRAHMIN TOLERANCE.
ALMOST ALL DALIT LEADERS OF TAMILNADU HAVE BRAHMIN WIVES.
AMBEDKARS WIFE IS A BRAHMIN.
MARAN BROTHERS ARE MARRIED TO BRAHMINS.
MGR'SWIFE JANAKI AMMA IS A BRAHMIN.
MUSIC GODESS "MS" WAS MARRIED TO A BRAHMIN AND IS WORSHIPPED IN MANY HOUSES. BRAHMINS ARE THE BEST FRIENDS OF DALITS. AT NO POINT A BRAHMIN HAS HARMED DALITS.
IN TAMILNADU BOTH BRAHMINS AND DALITS ARE OPPRESSED.
BOTH DALITS AND BRAHMINS MUST JOIN TOGETHER AND FIGHT OPPRESSION.

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

என்னா ஒரு அறிவு. கழுத மேய்க்குற பயலுக்கு இம்புட்டு அறிவா?
I ALWAYS REFRAINED FROM PERSONAL COMMENT AND WAS RESTRICTING MYSELF TO ISSUE BASED COMMENTS SINCE STOOPING DOWN TO PERSONAL COMMENTS REVEALS THE CHARACTER OF THE WRITER.
IF MY MEMORY IS RIGHT. IDLY VADAI HAS ASSURED ITS READERS IT WILL FILTER THE COMMENTS OF JAIJANKER JAGANATHAN AND IF INDECENCY PERSISTS IDLY VADAI WILL BLOCK HIS COMMUNICATIONS TOTALLY.
I APPEAL TO IDLY VADAI TO ACT IN THE INTERESTS OF DECENCY.