பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, July 27, 2013

மஹாபாரதம் - கும்பகோணப் பதிப்பு

தமிழில் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாக சொல்லப்படும் மஹாபாரத கும்பகோணப் பதிப்பு தற்போதுஅச்சில் இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.

இந்நூல் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் நன்கு தேர்ச்சி பெற்ற பல அறிஞர் பெருமக்களால் நேரடியாக சமஸ்கிருதத்தில் இருந்து ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்ட முழு வியாச பாரதமும் (பதினெட்டு பருவங்களும்) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ம.வீ. இராமானுஜாசாரியார் அவர்களால் தொகுக்கப்பட்டன.மஹாபாரதம் எளிய தமிழ் மக்களையும் சென்று சேர வேண்டும் என்பதற்காக தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியைப் பல அறிஞர் பெருமக்கள் இந்தப் பணிக்காகச் செலவழித்துள்ளனர். இம்மொழிபெயர்ப்பு ஏறக்குறைய இருபத்தைந்து வருடங்கள் நடைபெற்றன. ஒருவர் மொழிபெயர்ப்பது அவராலேயே சரி பார்ப்பது பிறகு இரண்டு சமஸ்கிருத அறிஞர்களால் மீண்டும் சரிபார்ப்பது என்று மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு.

ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு.வெங்கட்ரமணன் அவர்கள் குறைந்தது நூறு பேர் முன்வந்து வாங்க விரும்புவதாக தெரிவிக்கும்போது இதற்கான முன் வெளியீட்டுத் திட்டத்தை வெளியிட்டு மூன்று நான்கு மாதங்களில் அச்சில் கொண்டு வருவதாகவும் சொல்லியிருக்கிறார். இதைத் தங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும் குழுமங்களுக்கும் தயை கூர்ந்து பரிந்துரைக்கவும்.

விலை ரூ.5000 இருக்கலாம். உண்மையில் மஹாபாரதம் படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு விலை மதிப்பற்ற பொக்கிஷம் என்பதைக் கவனித்தில் கொள்ள வேண்டும்.

ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன் திரு. வெங்கட்ராமணன் அவர்களை 09894661259 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது venkat.srichakra6@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன் ஒரு மின்னஞ்சல் அனுப்பி தாங்கள் வாங்க விரும்புவதாகத் தெரிவிக்கலாம்.

குறைந்தது நூறு பேர் தங்களது பெயரை பதிந்தவுடன் திரு.வெங்கட்ரமணன் அவர்கள் இதைப்பற்றிய முன்வெளியீட்டுத் திட்டத்தையும் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் எப்படிச் செலுத்த வேண்டும் போன்ற விவரங்களையும் அறிவிப்பார். ஆதலால் நண்பர்கள் விரைந்து தங்களது விருப்பத்தைத் தெரிவித்து ஆதரவளிக்குமாறு அன்புடனும் பணிவுடனும் கேட்டுக் கொள்கிறேன்.

ஆர்வமுள்ளவர்கள் எனக்கும் மின்னஞ்சல் செய்யலாம். mariappan.balraj@gmail.com

ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள். கேள்விகள் ஏதாவது இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள். ஐந்து ரூபாய்க்கு சாப்பாடு கிடைக்குமா என்று தெரியாது ஆனால் 5000ரூக்கு மஹாபாரதம் கிடைக்கும் !

Read More...

Friday, July 26, 2013

வாலி – சில குறிப்புகள் - ஹரன்பிரசன்னா



தொடக்கக் குறிப்பு: இது வாலியைப் பற்றிய ஆய்வு அல்ல. எனவே ஒத்திசைவு ராமசாமிகள் (http://othisaivu.wordpress.com/2012/03/10/post-100/) கொஞ்சம் விலகி நிற்கவும். ;)

இரண்டாம் குறிப்பு: நான் இங்கே வாலி எழுதியதாகக் குறிப்பிட்டிருக்கும் பாடல்களில் சில வாலி எழுதாமல் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. அதை ஒரு புள்ளி விவரப் பிழை என்று மட்டும் கொள்ளவும். உண்மையில் பல திரையிசைப் பாடல்களை யார் எழுதியது என்று கண்டுபிடிப்பதே பெரிய சிரமமாக இருந்தது. அதோடு வாலியும் ராஜாவும் சேர்ந்து பணியாற்றிய பாடல்கள் நினைவில் வந்து அருவிபோல் கொட்டுகின்றன. (வார்த்தைகள் முட்டுகின்றன! வாலி!) ஒரு பாடலை நினைக்குபோது அதிலிருந்து அதிலிருந்து என பலப்பல பாடல்கள். ஆய்வுக் கட்டுரை அல்ல என்று சொல்லிவிட்டதாலும் என் மனத்திலிருந்து எழுதுவதாலும் நினைவிலிருந்த வரிகளை மட்டுமே இங்கே குறிப்பிடப் போகிறேன்.

மூன்றாம் குறிப்பு:
நான் வாலியை வந்தடைந்தது இளையராஜாவின் வழியாகத்தான். எனவே நான் எழுதப்போகும் இந்தப் பதிவு தொடர்ச்சியாக இளையாராஜவைப் பற்றியும், எனவே வைரமுத்துவைப் பற்றியும் பேசும் வாய்ப்பு உண்டு. எம் எஸ் வி மற்றும் கேவி மகாதேவன் இசையில் வாலி பல நல்ல பாடல்களை எழுதியிருக்கிறார். நல்ல பாடல்கள் தவிர மற்ற பாடல்கள் பற்றித் தெரியாததால் நான் அவற்றைத் தொடவில்லை. 1976லிருந்து 2000 வரை என வைத்துக்கொண்டாலும், 24 வருடங்களில் வாலியை வரையறுத்தாலே அதன் முன்பின்னாக நாம் நீட்டித்துக்கொள்ளமுடியும் என்று நினைக்கிறேன்.



நான்காம் குறிப்பு: கட்டுரை தொடங்கிவிட்டது!

13 வயதில் எல்லாம் இளையராஜா வெறியனாகிவிட்டேன் என்று நினைக்கிறேன். வீட்டில் இருந்த ரேடியோவை எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கவேண்டும் என்பதற்காக, அதில் இரண்டு ஸ்பீக்கர்களை இணைத்து ஒன்றை சமையலறையிலும் இன்னொன்றை கழிப்பறையிலும் வைத்திருந்தேன். அது இளையராஜா கோலோச்சிய காலம் என்பதால் எப்போதும் ராஜாவின் பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கும். யார் எழுதியது என்பதெல்லாம் அப்போது கவனித்ததே இல்லை.

ராஜாவும் வைரமுத்துவும் பிரிந்துவிட்டதால், ராஜாவின் மீது இருந்த தீவிரக் காதல் காரணமாக வைரமுத்துவின் மீது தீராத வன்மம் இருந்தது. அவர் என்ன எழுதினாலும் சிரிப்பேன். தொலைக்காட்சிகளில் அவர் தோன்றிப் பேசும்போது அவரது தமிழைக் கடுமையாகக் கிண்டல் செய்வேன். 91ல் ரஹ்மான் வந்தார். வைரமுத்துவின் கிராஃப் கடுமையாக எகிறியது. எல்லோரும் ரஹ்மானைப் பற்றியே பேசினார்கள். ரஹ்மான் உயர உயர இளையராஜாவின் இசை மீதான என் வெறி கூடிக்கொண்டே போனது. ஒரு நாளைக்கு பத்து முறையாவது ராஜாவை நினைத்துக்கொள்வேன். எங்கே இருந்தோ எப்படியோ ஒரு ராஜா பாட்டு காதில் விழுந்து அன்றைய தினத்தை இன்னும் இளமையாக்கும்.

இந்த சமயத்தில் 1993ல் கல்லூரிக்குள் நுழைந்தேன். அங்கே இதே போன்று இரண்டு கிறுக்கர்கள் எனக்கு நண்பர்களானார்கள். ஒருவன் ஜெயராஜன். இன்னொருவன் வினை தீர்த்தான். நாங்கள் மூவரும் ராஜா வெறியர்கள். வினை தீர்த்தான் வாலியின் தீவிரமான ரசிகன். ஜெயராஜன் வைரமுத்துவின் தீவிரமான ரசிகன். எவ்வித யோசனையும் இல்லாமல் நான் வினைதீர்த்தானுடன் சேர்ந்துகொண்டேன். தினம் தினம் வாலி வைரமுத்து சண்டைதான். இளையராஜா விஷயத்தில் மட்டும் மூவரும் ஒன்றாகிவிடுவோம்.

வேதியல் பிரிவில் எங்கள் மூவர் கூட்டணி மட்டும் எப்போதும் வித்தியாசமாகப் பேசிக்கொண்டிருக்கும். அந்தப் பாட்டு யார் எழுதினது, இந்தப் பாட்டு யார் எழுதினது என்று கேட்டு கேட்டுத்தான் நான் வாலியைப் பற்றிப் பேச ஆரம்பித்தேன். அவர் எழுதிய பாடல்களைத் தேடித் தேடிக் கேட்க ஆரம்பித்தேன். எம் எஸ் வியுடன் அவர் இணைந்து பல பாடல்களை மிகச் சிறப்பாக எழுதியிருந்தார். ஆனால் என் கவனம் அவர் ராஜாவுடன் என்ன எழுதுகிறார் என்பதில் மட்டுமே இருந்தது.

இன்னொரு பக்கம் தேவா வாலி கூட்டணி. வைரமுத்துவை எதிர்க்கவேண்டும் என்பதற்காகவே வாலியைக் கடுமையாகப் புகழ்வோம் நானும் வினைதீர்த்தானும். ஜெயராஜன் கெஞ்சுவான், ‘கொஞ்சமாவது மனசாட்சியோடு பேசுங்கல.’

இப்போது யோசித்துப் பார்த்தால் ஜெயராஜன் எத்தனை நியாயமாகப் பேசியிருக்கிறான் என்பது புரிகிறது. அன்றும் இன்றும் வாலி, வைரமுத்துவை எப்படி அணுகிறேன் என்பதும் எனக்கே புரிகிறது. கன்சிஸ்டென்ஸி என்ற வகையில் கண்ணதாசனோடும் வைரமுத்துவோடும் வாலியை ஒப்பிடவே முடியாது என்பதே அவரது தோல்வி என்று இன்று நன்றாகப் புரிந்திருக்கிறது.

பாடல்களில் ஆபாசமாக எழுதுவது முதலிலிருந்தே இருந்து வந்துள்ளது. ஆனால் அது தேவா-வாலிக்குப் பின்னர்தான் அதற்குப் பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்தது என்பது என் எண்ணம். யாரோ ஒருவர் ஆபாசமாக எழுதுவதற்கும், வாலி போன்ற ஒருவர் ஆபாசமாக எழுதுவதற்கும் உள்ள வேறுபாடே இந்த அங்கீகாரத்துக்குக் காரணம். ஆனால் வாலி இதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. ‘எப்படி எப்படி சமஞ்சது எப்படி’ என்ற பாடல் வந்தபோது, எங்கள் நண்பர்கள் அனைவரும் ரகசியமாகப் பேசிக்கொண்டோம். மணி அண்ணன் என்பவர், ‘இவம்லாம் ஐயராம். என்ன அசிங்கமா எழுதியிருக்கான்’ என்றார். வாலியின் பெரிய ஆதரவாளனான நான், ‘இதுல என்ன இருக்கு? அந்த கேரக்டர் அப்படி பேசுது. சமஞ்சது எப்படின்னு கேட்டா ஒரு தப்பா’ என்றேன். உடனே அவர், ‘ஐயரே. ஐயர்ன்றதுக்காக சப்போர்ட் பண்ணாதல. நீ உங்க அம்மாகிட்டயும் அக்கா கிட்டயும் கேளுல’ என்றார். என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ‘அப்படி கேக்க முடியாது. அதான் அவன் (அந்த கேரக்டர்) வேற ஒருத்திகிட்ட கேக்கான்’ என்று என்னமோ சொல்லி வைத்தேன். மணி அண்ணனுக்கு ஆத்திரம் அடங்கவே இல்லை. இப்போது நான்கைந்து நாள்களுக்கு முன்பாக வாலி பற்றிய பேச்சு வந்தபோது, சமஞ்சது எப்படி என்ற பாடலுக்கு நான் சொன்ன அதே காரணத்தை இன்னொரு நண்பர் சீரியஸாகவே என்னிடம் சொன்னார்.

உண்மையில் சமஞ்சது எப்படி என்ற பாடல் தமிழ்ப் பாடல்களில் ஆபாசத்துக்குப் பெரிய அளவில் வித்திட்டது. அது மட்டுமல்ல, அந்த படத்தின் பாடல்கள் அத்தனையுமே இப்படி ஆபாசத்தை பெரிய அளவில் பரப்பின. அன்று நான் வாலியை பெரிய அளவில் ஆதரித்தாலும் இன்று யோசிக்கும்போது வாலி இப்பாடல்களை எழுதியிருக்கக்கூடாது என்றே தோன்றுகிறது. தனி ஒருவரால் திரையுலகப் பாடல்கள் பெரிய வீழ்ச்சியை அடைந்துவிடமுடியாது என்றாலும், அதற்கு பலமான அஸ்திவாரத்தைப் போட்டவர் வாலிதான்.

அதே (இந்து) படத்தில் வந்த மற்ற வரிகளைப் பாருங்கள். சமஞ்சது எப்படி… முந்தா நேத்து வானம் லேசா தூறல் போடும் நேரம் ஊதாப் பூவ போல பூத்து உட்கார்ந்தேனே ஓரம், ஒலக்க ஒண்ணு இங்கிருக்கு ஒரலு ஒண்ணு அங்கிருக்கு நெல்லு குத்தும் நேரம் எது சொல்லடி என் சித்திரமே நெல்லு குத்தும் நேரத்துல உரலுக்குள்ளே மாட்டிக்குவே, கட்டயிலும் கட்ட இது கடஞ்செடுத்த நாட்டுக்கட்ட அது உரச உரச உருகுதுடா டோய், உட்டாலக்கடி சிவப்புத் தோலுடா கொஞ்சம் உத்துப் பார்த்தா உள்ளே தெரியும் நாயுடு ஹாலுடா, எங்கிட்ட பேட்டிருக்கு உங்கிட்ட பால் இருக்கு… அத்தனையும் வாலி.

வாலியின் இந்த வரிகள் சக கவிஞர்களுக்கும் போட்டியை ஏற்படுத்தியது. கதவ சாத்து கதவ சாத்து மாமா நான் கன்னி கழிய வேணும்னா ஆமா – காளிதாசன், படிப்படியா அது தொடங்கட்டும் பள்ளியறையில் சூடு அடங்கட்டும் – வைரமுத்து, மாங்கா மாங்கா ரெண்டு மாங்கா மார்(க்)கெட்டுப் போகாத குண்டு மாங்கா (வைரமுத்து? திரைப்படம் பிரதாப்) என ஆளாளுக்குத் தொடங்கினார்கள். அடுத்து வந்தது எறும்புக் கடி. சின்ன ராசாவே சித்தெறும்பு என்ன கடிக்குதா என்று வாலி எழுதினார். பலர் வீடுகளில் அப்படி ஏன் கேக்கான் என்று சொல்லும்போது எனக்கெல்லாம் சிரிப்பாக இருக்கும். இன்று நினைத்தால் பக்கென்று இருக்கிறது. சித்தெறும்போடு கட்டெறும்பும் கடித்தது. கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு – வைரமுத்து. இப்படி பலமான போட்டி துவங்கியது. புலமைப்பித்தனும் சரிகமபதநி படத்தில் இப்படி ஒரு வரி எழுதினார். சட்டென்று நினைவுக்கு வரவில்லை. மேத்தா ‘தென்றல் வரும் தெரு’ படத்தில் ‘கடலைப் பயிரு ஜொள்ளு நீரில் நல்லா விளையும்டா’ என்று என்னவோ எழுதினார். நல்லவேளை அத்துடன் புலமைப்பித்தன், மேத்தாவெல்லாம் நிறுத்திக்கொண்டு விட்டார்கள்.

இந்தப் பாடல்கள் வந்தபோது பெரிய சர்ச்சையைக் கிளப்பின. சர்ச்சைகள் எல்லாவற்றையுமே வாலி விளம்பரமாகப் பார்த்தார். ‘காய்ச்ச மரம் கல்லடி படும்’ என்று சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு எழுதினார். வாலியின் மோசமான பாடல்களைப் பற்றி அந்த நேரத்தில் யாருமே கண்டிக்கவில்லை. கமல்ஹாசனுடன் ஒரு பேட்டியில் இதைப் பற்றிக் கேட்டார்கள். தெளிவாக, பேட் பால் என்றெல்லாம் பாட்டு வருகிறதே என்று கேட்டார்கள். அவர் மிகவும் புத்திசாலித்தனமாக ‘என் படங்களில் அப்படி வருவதில்லை’ என்றார். எஸ்பிபியும் யேசுதாஸும் இனி நாங்கள் இரட்டை அர்த்தப் பாடல்களைப் பாடப்போவதில்லை என்று அறிவித்தார்கள். ஆனால் எந்தக் கவிஞரின் பெயரையும் அவர்கள் குறிப்பிடவில்லை. அப்படிப் பாடாமல் இருந்தார்களா என்றும் தெரியவில்லை. வாலியோ, ‘கம்பன் கழகத்தில் கவிஞர் என்றும், திரையுலகில் விட்டெறியும் ரொட்டித் துண்டுக்கு வாலாட்டும் நாய்’ என்றும் சொல்லிவிட்டார். கடைசி வரையில் இப்படித்தான் இருந்தார். என்னுடைய ஜி.எம் ஒருவர் அடிக்கடிச் சொல்வார், ‘கால் மீ தோட்டி, பட் பே மீ ஃபார்டி’ என்பார். இப்படித்தான் வாலியும் இருந்தார்.

திடீரென்று வாலி அவதார புருஷன் எழுதப்போவதாக அறிவிப்பு வெளியானது. அன்று உள்ளூர மகிழ்ச்சியாக இருந்தது. இனி வாலியை எதிர்ப்பவர்களுக்கு பதில் சொல்லவாது முடியும்! முதல் வாரத்தில் ‘காமன் கதை எழுதி காயங்கள் பெற்ற நான் ராமன் கதை எழுதி ரணங்களை ஆற்ற உள்ளேன்’ என்று எழுதினார். வாலி ஆபாசமாக எதுவும் எழுதவில்லை என்று சொல்லிக்கொண்டிருந்த என்னை நண்பர்கள் பிடித்துக்கொண்டார். அவரே ஒத்துக்கிட்டார் என்றார்கள். (பின்னர் சோ ஒரு மேடையில் பேசும்போது, இப்படி வருத்தப்படும் அளவுக்கு வாலி எதையும் மோசமாக எழுதிவிடவில்லை என்றார். எனக்கு பக்கென்று இருந்தது.)

நான்கைந்து வாரங்கள் அவதார புருஷன் படிக்கவுமே வெறுத்துவிட்டது. ஆனாலும் வெளியில் விடாமல் பாராட்டிக்கொண்டிருந்தேன்.  ஒரு கட்டத்தில் வாலி மாயை மெல்ல விலகியபோது வாலியின் கவிதை ஆழம் புரிந்துவிட்டது! நேர்மையாகச் சொல்வதென்றால் வாலியை ஏன் கவிஞர் என்றழைக்கவேண்டும் என்பதே எனக்குப் புரியவில்லை. இதை அதீதம் என்று எண்ணலாம். ஆனால் நான் உண்மையில் இப்படித்தான் நினைக்கிறேன்.

வாலி அற்புதமான பல திரைப்பாடல்களைத் தந்தவர். மறுக்கமுடியாது. வாலி எழுதி எனக்குப் பிடித்த பாடல்கள், நான் அசந்த பாடல்கள் பல உள்ளன. சட்டென்று சிலவற்றைப் பட்டியலிடுகிறேன். ‘ராம நாமம் ஒரு வேதமே.’ முதலில் இதைச் சொல்ல காரணம் உண்டு. வாலியின் மிகச் சிறந்த வரியாக நான் இதைப் பார்க்கிறேன். ராமன் பாரதத்தின் நாயகன் என்ற எண்ணம் எனக்கு வலுப்பட்டபோது, ஹிந்துத்துவத்தின் வாயிலாக இந்தியாவின் பாரம்பரியப் பெருமைகள் குறித்த பெருமிதம் ஏற்பட்டபோது இந்த வரி எனக்கு மிகவும் ஆழமாகப் பட்டது. ராம நாமம் வேதம் என்ற மூன்று வார்த்தைகளில்தான் எத்தனை பெரிய ஜாலம். வாலியின் பெரிய திறமைகள் என்றால், சந்தத்திலிருந்து சிறிதும் விலகாத வார்த்தைகளைக்கொண்டு பாடல்களை எழுதுவது. தமிழ் வார்த்தைகளின் பலம். இவையே வாலியின் திறமைகளாக நான் நினைப்பவை.

கல்லூரியில் வாலி வைரமுத்து விவாதம் வரும்போது நானும் வினைதீர்த்தானும் அடிக்கடி ஜெயராஜனை இதைக்கொண்டுதான் மடக்குவோம். ‘கொடுக்கிற மெட்டுக்கு சரியான வார்த்தையை போடத் தெரியலைன்னா என்னல கவிஞன்’ என்போம். ஏன், வார்த்தைகளுக்கு இசையமைப்பாளர் இசையமைத்தால் என்ன என்று பேசுவான் ஜெயராஜன். மெட்டே முதன்மை என்பதாகவே என் மனப்பதிவு இருந்தது. கொடுக்கப்படும் மெட்டுக்கு சரியான வார்த்தைகளை அதுவும் ஆழத்தோடு அமைப்பதே கவிஞரின் சாதனை என்று நினைத்தேன். இப்போதும் இதுதான் என் எண்ணம். ஆனால், கொஞ்சம் சந்தத்தை அட்ஜஸ்ட் செய்துகொள்வதன்மூலம் நல்ல ஒரு வார்த்தையைப் போட்டு கவிதையின் ஆழத்தைக் கூட்ட முடியுமானால் அதைச் செய்வதில் தவறில்லை என்றும் இப்போது நினைக்கிறேன். இதை வைரமுத்து அன்றே செய்துகொண்டிருந்தார். ஆனால் வாலி சந்ததிலிருந்து சிறிதும் பிசகமாட்டார். இதனாலேயே பல சாதாரணமான வார்த்தைகளைப் போட்டு பாடல்களை ஒப்பேற்றிவிடுவார்.

மறுபடியும் திரைப்படத்தில் வரும் ‘நலம்வாழ என்னாளும் என் வாழ்த்துகள்’ பாடல் இன்னொரு அதிசயம். இயைபுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது வாலியின் பாணி. அதற்காக எத்தனை மோசமான வரிகளையும் எழுதத் தயங்காதவர். இதனாலேயே பல வரிகள் எனக்கு எரிச்சலூட்டியிருக்கின்றன. வட்டமிட்டு சுத்தும் கண்ணும் வீச்சு, வாய விட்டு போனதென்ன பேச்சு என்று எழுதினாலே எனக்கு எரிச்சல் வரும். அதே படத்தில் வரும் ’ஆழம் விழுதாகவே மனம் ஆடிடும் போது நானும் அதுபோலவே அலை ஆடிடும் மாது’ என்று எழுதியிருப்பார். இதில் வரும் போது மாது என்பது எத்தனை இயல்பாக இருக்கிறது என்று பாருங்கள். ஒரு நீண்ட வரியில், வரியை உடைக்காமல் இப்படி வரும்போது அது அழகு. அல்லது ‘வானம் என் விதானம் இந்த பூமி சன்னிதானம்’ என்ற அளவுக்குப் போகவேண்டும். அதே வரியில் பாருங்கள், ‘பாதம் மீது மோதும் ஆறு பாடும் சுப்ரபாதம்’ என்று வரும். என்ன ஒரு ரைமிங். இது வைரமுத்து. வாலியும் இப்படி எழுதக்கூடியவரே. ஆனால் அவசரத்துக்கு எழுதியிருப்பாரோ என்னவோ. இந்த இயைபு விஷயத்தில் அவர் என்னவேண்டுமானாலும் எழுதக்கூடியவராகிவிட்டார். ’நீ போடு காதல் விண்ணப்பம் கிடைக்காது வேறே சந்தர்ப்பம்’ என்று என்னவாவது எழுதுவார்.

வாலியின் கற்பனைகளைப் பற்றிப் பேசினாலும் எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமே மிஞ்சும். சில க்ளிஷேக்களில் இருந்து அவரால் கடைசி வரை மீளவே முடியவில்லை. குயிலைப் பற்றி எழுதினால் அடுத்த வரி மயிலைப் பற்றி எழுதியாகவேண்டும் என்று என்ன நேர்ச்சை? குயிலைப் பிடிச்சு கூண்டில் அடைச்சு கூவச் சொல்லுகிற உலகம், மயிலைப் புடிச்சி கால ஒடச்சி ஆடச்சொல்லுகிற உலகம் – கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் ஆடாதம்மா சோலைமயில்தன்னை சிறை வைத்துப் பூட்டி பாடென்று சொன்னால் பாடாதம்மா. குயில் பின்னர் மயில், அதிலும் ஒரே விதமான கற்பனை. இன்னொரு பாட்டு, குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே! (இதுபோன்றவை வைரமுத்துவுக்கும் உண்டு. கால்கொலுசு மணியாவேனா, கால்கொலுசு மணிச்சத்தம், இன்ன பிற.)

கொட்டும் மழைச்சாறல் உப்பு விற்கப் போனேன் காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன் – நான் உப்பு விக்கப் போனா மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுது நான் மாவு விக்கப் போனா பெரும் புயல் காத்து வீசுது. இரண்டுமே வாலி! இப்படியே சிந்தனை மாறாமல் அப்படியே எழுதுவார்கள்?

தேன் என்று எழுதுவதில் வாலியை மிஞ்ச ஆள் கிடையாது. காமம் வந்தால் ஆணுக்குள்ளும் பெண்ணுக்குள்ளும் தேன் ஊறும் என்ற ரேஞ்சுக்கு அவர் பல பாடல்களை எழுதித் தள்ளியிருக்கிறார். உள்ளூர ஊறுதடி தேன்போல (பாசமுள்ள பாண்டியரு). இந்த தேன் ஊறும் பாடல்கள் பல உள்ளன. தேவையென்றால், நான் பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் அப்டேட் செய்கிறேன். அதேபோல் பெண்களை குளமென்றும் ஆணை குளிக்க வரும் ஆள் என்றும் எழுதித் தள்ளியிருக்கிறார். இவையெல்லாம் எனக்குச் சுத்தமாகப் பிடிக்காத கற்பனைகள். (நான் தானே நீச்சல் குளம் நாள்தோறும் நீயும் வந்து ஓயாமல் நீச்சல் பழகு, இளமை நதியில் குளிக்க வரவா). இவற்றைப் போல வாலி எழுதிய பாடல்கள் பல உண்டு. இன்னொரு சலிக்க வைக்கும் கற்பனை, இடையை நூலகம் என்பது! மேனி எங்கும் நான் படிக்கும் நூலகம்தான், மீண்டும் மீண்டும் நான் படிக்கும் நூலகம்தான், இளையவளின் இடை ஒரு நூலகம் படித்திடவா பனி விழும் இரவுகள் ஆயிரம். மற்றுமொறு சலிப்பு – விடுமுறை நாள். வெட்கம் அச்சம் இவைகளுக்கின்று விடுமுறை நாளாச்சு, உன் நாணம் ஒருமுறை விடுமுறை எடுத்தால் என்ன. அதேபோல், அருகில் இருந்தால் ஒரு யுகம் ஒரு நொடி, விலகி இருந்தால் ஒரு நொடியும் ஒரு யுகம் என்று நிறைய தடவை எழுதியிருக்கிறார். அதேபோல் மழையில் நீ நனைந்தால் எனக்கு காய்ச்சல் (ஆசை, காதலர் தினம்). அதேபோல் விலை கேட்பது. (என்ன விலை அழகே, இந்தப் புன்னகை என்ன விலை.)

இப்படிப் பல வரிகளை மீண்டும் மீண்டும் எழுதியிருக்கிறார். 15,000 பாடல்களில் இதுபோன்று நிகழ்வது சாதாரணம் எனலாம். ஆனால் ஒரு சலித்த கற்பனையை மிக உயர்வானதாக எண்ணி அவர் மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதுதான் ஆச்சரியம் தருகிறது. அதோடு, ஒரு சிறந்த கவிஞன் இந்த ரிப்பிட்டிஷனைத் தவிர்க்கவேண்டும் என்று நினைப்பவனாக இருக்கவேண்டும்.

வாலியின் தமிழ் வார்த்தை குறிந்த ஞானம் அபாரம். ஆனால் துரதிர்ஷ்டவசமாகத் தமிழ்த் திரைப்பாடல்களில் மிகவும் தேர்ந்தெடுத்த சில வார்த்தைகளுக்குள்ளாகவே அவர் சுற்றிக்கொண்டிருந்தார். வாலியின் பாடல்களைத் தொடர்ந்து கேட்டு ஐம்பது வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துவிடலாம். பூங்குயில், குயில் மயில் தென்றல் மானே தேனே பொனமானே ராசா ரோசா ராஜா பாட்டு கண்மணி பொன்மணி மாமா நிலா இப்படி மேலோட்டமான வார்த்தைகளை எவ்விதத் தயக்கமும் இல்லாமல் எழுதுவார். இதனாலேயே ஒரு பாடலில் மிக அழகான வரிகளும், மிக அபத்தமான வரிகளும் ஒரே போல் இடம்பெறும்.

ராஜாவின் பல அற்புதமான பாடல்களையெல்லாம் ஆழமற்ற, கோடிட்ட இடங்களை நிரப்புவது போல வார்த்தைகளைக் கொண்டு ரொப்பியவர் வாலி. இன்று பல பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் பெரிய ஆயாசம் எழுகிறது. தீர்க்கமுடியாத ஏக்கம் வருகிறது. எத்தனை எத்தனை அழகழகான மெட்டுக்கள். மெலோடி, குத்துப் பாடல் என்று வகையில்லாமல் ராஜா போட்ட அத்தனை மெட்டுக்களையும் மிகவும் சாதாரணமான வரிகளால் ஒப்பேற்றியிருக்கிறார் வாலி. வைரமுத்துவோடு ஏற்பட்ட பிரிவை, ராஜா, ’மெட்டுக்கு வரிகளின் பலம் தேவையில்லை’ என்ற நிலைக்குக் கொண்டு சென்றார். இதை மீறி, மெட்டு என்பதை வார்த்தைகள் சிறைப்படுத்துகின்றன என்று ராஜா நினைப்பதில் மிகப்பெரிய நியாயம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.. அது இசை என்னும் பேரனுபவத்தை மனத்தில் வைத்து ராஜா சொல்வது. ஆனால் தமிழ்த் திரைப்படத்துக்கான மெட்டில் வரிகள் வேண்டும் என்ற நிலை உள்ளபோது, அதை ராஜா வைரமுத்துவின் கணக்கை, அதுவும் ஒரு சீனியர் கவிஞன் மூலமே தீர்த்துக்கொண்டார். பல பொருளற்ற வரிகளை எழுதித் தள்ளினார் வாலி. ராஜாவின் வேகத்துக்கும், வாலியின் வேகத்துக்கும் ஒத்துப் போனது. மேலும் வாலி ஒரு சீனியர் என்பது ராஜாவுக்கு இலகுவாக இருந்தது. இந்த இரண்டு காரணங்களன்றி, வாலி ராஜாவுடன் இத்தனை பாடல்களை எழுதித் தள்ளியிருக்கமுடியாது என்றே நினைக்கிறேன்.

கண்ணதாசன் வாலி எழுதிக்கொண்டிருந்தபோது வைரமுத்து வந்தது போல, வாலி வைரமுத்து எழுதிக்கொண்டிருந்தபோது ஒரு புயல் வரவில்லை. இதுவும் ஒரு காரணம். இப்படி நேர்ந்திருந்தால், வாலியின் முக்கியத்துவம் கொஞ்சம் குறைந்திருக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.

சம்பா சம்பா அடி ரம்பா ரம்பா கேக்குது கேக்குது ஏதோ ஒண்ணு பாத்து பாத்து ஏங்குறேன் லவ்வு பண்ணு என்ற வரிகளைக் கேட்கும்போதே எரிச்சல் எழுகிறது. இதற்கு எதற்கு ஒரு கவிஞர்? ஹோஹோல ராணி ஹோஹோல மேனி, ஹோஹோல தேனி லாவளவுல வாணி இது என்ன! சம்பா சம்பா ரம்பாதான் அம்மா பொண்ணு ரம்பாதான், இதுதான் இதுக்குத்தான் அதுதான் அதுக்குத்தான், இப்ப சாத்து நடு சாத்து - இப்படி வாலி எழுதித் தள்ளிய பாடல்களைப் பட்டியலிட்டால் அவர் ராஜாவை எந்த அளவுக்கு வஞ்சித்திருக்கிறார் என்பது புரியும்.

ராஜாவின் பல பாடல்களில் முதல் பாரா முடியும்போது வரும் வரி மிக அழகானதாக நீளமாக இருக்கும். அதற்கு வரிகளை எழுதுவதில் ஒரு பெரிய சவால் இருக்கும். வைரமுத்து பல பாடல்களில் கலக்கியிருக்கிறார். கைகள் இடைதனில் நெளிகையில் இடைவெளி குறைகையில் எரியும் விளக்கு சிரித்துக் கண்கள் மூடும் என்பது போல. இப்படி வைரமுத்து கலக்கிய வரிகள் பல உள்ளன. வாலியும் இப்படி எழுதியிருக்கிறார். அந்தி மாலை வரும் நோய்கொண்டு தன்னந்தனியாய் நின்று பாவை நிதம் பாடும் விதம் பாராய் – இது வாலி எழுதியதுதான். நல்ல வரிகள்தான். நான் யோசித்தபோது இப்படி நீளமான வரிகளில் வாலி நன்றாக எழுதியதாகக் கிடைத்தவை சில பாடல்களே. இன்னொன்று, ஸ்ரீ... ராம சங்கீர்த்தனம் நலங்கள் தரும் நெஞ்சே...மனம் இனிக்க, தினம் இசைக்க, குலம் செழிக்கும்... தினம் நீ சூட்டிடு பாமாலை. ஆனால் பல பாடல்களில் இப்படி வரும்போது வாலி மிக சாதாரணமான வார்த்தைகளையே எழுதியிருக்கிறார். சந்தத்தில் பிசிறே இருக்காது. நல்ல தமிழ் வார்த்தைகளாகவும் இருக்கும். ஆனால் பொருள் இருக்காது. ஆழம் இருக்காது. இதையெல்லாம் வாலி கவனித்தாரா என்றே தெரியவில்லை. தன் மீதான அதீத நம்பிக்கையும் வாலிக்கு ஒரு எதிரி என்றே நினைக்கிறேன். (நீளமான வரிகளில் வாலி கலக்கியிருக்கும் இன்னொரு பாடல், இந்தப் பூவுக்கொரு அரசன் பூவரசன்.)

திரைப்படப் பாடல்கள் இல்லாமல் வாலியை கவிஞராகப் பார்த்தால் வெறும் ஏமாற்றமே மிஞ்சும். கல்லூரியில் கவிதை என்ற ஒன்று வந்தது. ‘பல மரங்களைக் கொண்டு சிலுவை தயாரிக்கும் நாம், பல மனிதர்களைக் கொண்டு ஒரு யேசுவை தயாரிக்கமுடியவில்லையே’ என்ற ரேஞ்சில் உள்ள கவிதை இது. இதுதான் வாலியின் கவிதை! ஒரு சிறிய அறிவுபூர்வமான சிந்தனையையே கவிதை என்று மெச்சக்கூடிய உலகில் மட்டுமே வாலி செல்லுபடியாவார். எனவேதான் இவ்வுலகம் அவரையும் கவிஞர் என்றே அழைக்கிறது. இன்று ஆழம் பத்திரிகை என் கைக்கு வந்தது. அதில் வாலியின் ஒரு கவிதையைப் பார்த்தேன். (ஆர்.முத்துகுமார் வாலிக்கு எழுதிய அஞ்சலி.) மனிதர்களை எங்களால் மந்திரிகளாக்க முடிகிறது, மந்திரிகளைத்தான் மீண்டும் மனிதர்களாக்க முடிவதில்லை! இந்த ஆச்சரியக்குறி போட்டுவிட்டாலே அது கவிதை என்று வாலி நம்பியது ’எங்ஙனம்’?

வாலியின் மீதான ஈர்ப்பில், அவரது பொய்க்காதல் குதிரைகள் கவிதைத் தொகுப்பையெல்லாம் முன்பு படித்திருக்கிறேன். பெரிய ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. சிலேடை, இயைபு, சிறிய அறிவுபூர்வம் – இவற்றையே அவர் கவிதைகள் என நம்பினார். எனவே வாலியின் முக்கியமான இடம் என்பது அவரது திரைப்படப் பாடல்களால்தான்.

வாலியின் இன்னொரு சறுக்கல், எவ்விதத் தேவையும் இல்லாமலும்கூட தொடர்ந்து ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்திக்கொண்டே இருந்தது. என்னதான் இயக்குநர்கள் கேட்டாலும், ஒரு கவிஞர் கொஞ்சமாவது உறுதி காட்டவேண்டாமா? அழகு ஒரு மேஜிக் டச், ஆசை ஒரு காதல் ஸ்விட்ச் என்று அந்நாளிலேயே ஆரம்பித்துவிட்டார். கடைசிவரை இப்படிப் பல பாடல்களை எழுதித் தள்ளினார். இது பற்றி அவருக்கிருந்த ஒரே பதில், கம்பன் கழகத்தில் மட்டுமே நான் கவிஞன் என்பதே. சரி, அப்படி என்ன கவியரங்களில் பேசுகிறார் என்று பார்த்தாலும், வெற்றுச் சிலேடைகளாகவே அவை எஞ்சும்.

வாலியின் அரசியலைப் பற்றிப் பேசாமல் இருப்பதே நல்லது. எவ்வித நேர்மையும் இல்லாத வகையில் மட்டுமே அவர் நடந்துகொண்டார். அதிலும் கருணாநிதிக்கு கடைசி காலங்களில் அவர் அடித்த கவிதைப் புகழ்ச் சாயங்கள் அருவருப்பூட்டுபவை. நான் ஆணையிட்டால் என்ற பாடலில் வரும் ஒரு வரி, காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன் என்பது. அவர் காக்கைகள் என்று காமராஜரையே சொல்கிறார் என்ற குற்றச்சாட்டு உண்டு. இதை வாலியே எழுதினார். என்னதான் அரசியல் நிலைப்பாடு என்றாலும் யாரை எப்படி எழுதுகிறோம் என்ற உணர்வு ஒரு கவிஞருக்கு இருந்திருக்கவேண்டும். இரண்டு நடிகர்கள் உச்சத்தில் இருந்தபோது, இரண்டு ரசிகர்களை ஏத்திவிடவும் பல வரிகளை எழுதியிருக்கிறார். இங்கே எல்லாம் அவர் வெறும் வணிக திரைப்படப் பாடலாசிரியராக மட்டுமே இருந்துவிடுகிறார்.

தனது வரிகளை மாற்றக்கூடாது என்று வாலி அதிகம் அடம்பிடித்ததில்லை. அல்லது தன் வசதிக்கேற்ப யாரிடத்தில் எப்படி இருந்திருக்கவேண்டுமோ அப்படி இருந்திருக்கிறார். வாலி சந்தேகமே இல்லாமல் ஒரு சமசரசத்தின் உச்சமாகவே இருந்தார். அதனால்தான் அவரால் இத்தனை நீண்ட நெடுங்காலம் திரையுலகில் சாதிக்க முடிந்தது.

திரையிசையில் வாலியின் இடமும் சாதனையும்தான் என்ன? வாலி கடைசிவரை இளைஞர்களும் கொண்டாடும் திரைப்படப் பாடலாசிரியராக இருந்தார். தமிழ் வார்த்தைகளில் அறிவு ஆழமாக இருந்தாலும், எந்தக் காலத்தில் எந்த வார்த்தைகள் எடுபடாது என்று தெரிந்து வைத்திருந்தார். எந்த வார்த்தையை எங்கே பயன்படுத்தவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். (செங்காய் நிலாவின் தங்காய்!) தொடர்ந்து சமகாலத்துக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக்கொண்டே இருந்தார். சந்தம் அவரது மூச்சு என்பதால் மிக வேகமாக அவரால் சந்தத்துக்கு ஏற்ற வார்த்தைகளை எழுதித் தரமுடிந்தது. மிக ஆழமான வரிகள் இல்லை என்றாலும், மினிமம் கேரண்டி இருந்தது. அதில் சில சமயம் அபூர்வமும் தென்படும் வாய்ப்பு உண்டு. இளைஞர்களை ஊக்குவிப்பவராக இருந்தார். இவையெல்லாம் இவரது சாதனைகள். 15,000 பாடல்கள் எழுதும்வரை ஒருவர் நீடித்திருப்பது சாதாரணம் இல்லை. அப்படி நீடித்திருந்ததே அவரது சாதனை.

எனக்குப் பிடித்த வாலியின் பாடல்களைப் பட்டியலிடுவதென்றால் 500 பாடல்களாவது தேறும் என்று நினைக்கிறேன். சட்டென்று நினைவுகூரமுடியாத, ஆனால் நினைவில் எங்கோ தங்கியிருக்கும் பாடல்கள் பல இருக்கும். எனவே சட்டென்று நினைவுக்கு வரும் சில பாடல்களை மட்டும் குறிப்பிடுகிறேன்.

01. ராம நாமம் ஒரு வேதமே
02. அழைக்கிறான் மாதவன்
03. ஜனனி ஜனனி
04. ஸ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம்
05. பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்
06. கமலம் பாதக் கமலம்
07. பூவுக்கொரு அரசன் பூவரசன்
08. மாசறு பொன்னே வருக
09. நல்லதோர் வீணை செய்தே (மறுபடியும்)
10. நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துகள்
11. தென்றல் வந்து தீண்டும்போது
12. அரிதாரத்தைப் பூசிக்கொள்ள
13. நியூ யார்க் நகரம்
13. ரோஜா ரோஜா ரோஜா (காதலர் தினம்)
13. சரவண பவ குக வடிவழகா
14. சின்னத் தாயவள்
15. மணியே மணிக்குயிலே
16. ராஜ்யமா இமயமா
17. மடை திறந்து ஓடும் நதியலைநான்
18. துள்ளித் திரிந்ததொரு காலம்
19. பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
20. என்ன விலை அழகே

இன்னும் பல நூறு நல்ல பாடல்களை எழுதிய வாலிக்கு அஞ்சலி. என் இளமைப் பருவத்தை பெரிய அளவில் ஆக்கிரமித்திருந்த வாலிக்கு இன்னொரு ஸ்பெஷல் அஞ்சலி.

கடைசியாக, வாலி நல்ல திரைப்படப் பாடல் ஆசிரியர் அல்ல என்று சொல்லவில்லை. அவர் இன்னும் நல்ல திரைப்படப் பாடலாசிரியராக இருந்திருக்கலாம் என்றே சொல்லுகிறேன். காலம் எல்லோருக்கும் இப்படி ஒரு வாய்ப்பை வழங்காது. அந்த வாய்ப்பை வாலி நன்றாகப் பயன்படுத்திக்கொண்டாரே ஒழிய, புரிந்துகொள்ளவில்லை என்கிறேன்.

ஆமாம் உங்க கவிதை தொகுப்பு எங்கே கிடைக்கும்... படித்து பார்க்க ஆவல் :-)

Read More...

Thursday, July 25, 2013

பாட்லா ஹவுஸ் கண்ணீர் கதை

இந்த வீடியோவை முதலில் பாருங்கள்.


செய்தி:
டெல்லி தொடர் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்தியன் முஜாகி தீன் தீவிரவாதிகள், பாட்லா ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் அங்கு சென்ற போலீசாருக்கும், தீவிரவாதிகளுக்குமிடையே துப்பாக்கி சண்டை நடந்தது 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த இந்த என்கவுண்டரில் இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். காவல்துறை தரப்பில் இன்ஸ்பெக்டர் ஷர்மா பலியானார்.

இந்த சம்பவத்தின்போது கைது ஷாஜத் அகமது என்பவர் கைது செய்யப்பட்டார். போலீசார் தாக்குதல் நடத்த தொடங்கியதும் ஜூனாயத் என்பவர் தப்பி ஒடிவிட்டார். கைது செய்யப்பட்ட ஷாஜத் மீது, இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த என்கவுண்டர் தொடர்பான வழக்கு டெல்லி கோர்ட்டில் நடைபெற்று வந்தது. சம்பவத்தை கண்ணால் பார்த்த 6 பேர் உள்ளிட்ட 70 பேர் அரசுத் தரப்பில் சாட்சியளித்தனர். இறுதிக்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், ஷாஜத் அகமது மீதான குற்றம் நிரூபணமானது.

இதனால் நடந்த சம்பவம் உண்மையான என்கவுண்டர் என்றும், இன்ஸ்பெக்டரை கொன்ற ஷாஜத் குற்றவாளி என்றும் நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.

ஆனால் இந்த என்கவுண்ட படங்களை பார்த்த பிறகு சோனியா காந்தி அழுதார் கண்ணீர் விட்டார் என்று ஓட்டுக்கு பிச்சை எடுக்கிறது காங்கிரஸ். நாட்டுக்காக தன் உயிரை தியாகம் செய்தவர்களை இதைவிட கேவலப்படுத்த முடியாது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு போகும் பிறகு ஒபாமாவிற்கு கடிதமாக கூட இந்த பசங்க அனுப்புவார்கள்.


மல்டிலெவல் மார்கெடிங் முறையில் மோடி பிரதமராக சீக்கிரம் வர வேண்டிய நேரம் வந்துவிட்டது. எப்போது தேர்தல் வந்து மோதி பிரதமராவார் என்று காத்துக்கொண்டு இருக்கிறோம்...காங்கிரஸுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன பெரிய வித்தியாசம் ?

Read More...

ஒபாமாவுக்கு கடிதம்


இந்த மாதிரி விளம்பரம் குறித்து ஒபாமாவுக்கு கடிதம் எழுதலாம் என்று இருக்கேன். பின்னூட்டத்தில் திருமாவை தவிர மற்றவர்கள் கையெழுத்து போடலாம்.

Read More...

Wednesday, July 24, 2013

கீர்த்தன்யா - உதவி

இட்லிவடை நண்பர் அனைவருக்கும் வணக்கம்.

கி.கீர்த்தன்யா என்கிற 7 மாதக்குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய ரூ.2,75,000 செலவாகும் என்று தெரிவித்திருக்கிறார்கள். (விவரங்கள் இணைப்பில்) மனிதநேயம் உள்ள அனைவரும் உதவ முன்வரவேண்டும் என்றுக் கேட்டுக்கொள்கிறேன். உதவ விரும்புவோர் தங்களது பெயரையும் அனுப்பும் தொகை விவரத்தையும், வங்கி கணக்கு எண், இடம், ஊர் ஆகிய விவரங்களையும் எந்த குழந்தைக்கான தொகை என்பதை விரிவாக தெரிவித்தால் நன்று. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

Fund Transfer Details:-

Save A Life Charitable Trust,
Indian Bank,
Tirumangalam Branch Code No.00446,
SB Account No.6039779102,
IFSC Code No.IDIB000T031.

Save A Life Medical Aid Support Volunteer Team.
9566155503 / 9566171118
Website: www.savealifetrust.org





Read More...

Monday, July 22, 2013

வாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா

வாலி ஒரு மகா கவிஞன் என்பதைத் தாண்டி அவரின் மிகப்பெரிய சாதனையாக நான் கருதுவது, தனது கடைசி மூச்சு வரை தன்னை RELEVANT ஆக வைத்துக் கொண்ட தன்மையைத் தான். இறுதி வரை தன்னை புதுப்பித்துக் கொண்டே இருந்தார் என்று தான் கூற வேண்டும். அதனாலேயே, அவரால் எம்ஜியார் தொடங்கி தனுஷ் வரை ஹிட் பாடல்களை அள்ளி வழங்க முடிந்தது. கண்ணதாசனுக்கு அடுத்து அவரளவுக்கு மொழியை வசப்படுத்தி வைத்திருந்தவர் யாருமில்லை. கற்பனை வளம், சொல் ஆளுமை (vocabulary), தமிழ் மேல் காதல் என்ற மூன்றும் அதீதமாக வாய்க்கப் பெற்றவர் வாலி. 15000-க்கும் மேல் பாடல்கள் புனைந்த அவர், தமிழ் பாடலாசிரியர்களில் சச்சின் டெண்டுல்கர்.

ஸ்ரீரங்கம் அருகே திருப்பரைத்துறையில் 1931-ல் டி.எஸ்.ரங்கராஜனாக் பிறந்து, சென்னை கலைக்கல்லூரியில் பயின்று, வாலி சில ஆண்டுகள் ஆல் இந்தியா ரேடியோவில் பகுதி நேர வேலை பார்த்தவர். சினிமா வாய்ப்புக்காக அலைந்த சமயத்தில், அவருக்கு உதவியவர்களில் குணச்சித்திர நடிகர் வி.கோபாலகிருஷ்ணனும், பாடகர் டி.எம்.எஸ்ஸும் முக்கியமானவர்கள். வாலி வார்த்தைச் சித்து விளையாட்டில் கை தேர்ந்தவர் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர் டி.எம்.எஸ். வாலி டி.எம்.எஸ்-ஸுக்கு ஒரு போஸ்ட் கார்டில் அனுப்பிய கவிதை, இசை வடிவம் பெற்று, டி.எம்.எஸ்-ஸாலேயே பாடப்பட்டு ”கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்” என்று AIR-ல் பெரும்பிரபலம் அடைந்தது. ’அழகர் மலைக்கள்ளனாக’ ஆரம்பித்த வாலியின் சகாப்தப் பயணம் ‘காவியத்தலைவனாக’ முடிவுற்றதில் ஆச்சரியமில்லை!



எம்ஜியாருக்கு வாலி எப்போதும் “ஆண்டவரே” தான். எம்ஜியாருக்காகவே எழுதப்பட்ட ஹிட் பாடல்கள் தான் எத்தனை!

1. தரை மேல் பிறக்க வைத்தான்
2. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
3. நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
4. கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்
5. அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச்சிரிப்பு
6. கண் போன போக்கிலே கால் போகலாமா
7. நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

வாலி என்று தனக்கு நாமகரணம் செய்து கொண்டதற்கு அவருக்கு ஓவியர் மாலி மேல் இருந்த அபிமானமே காரணம். வாலியே ஓரளவுக்கு நன்றாக வரைவார். வசன கவிதையில் / பேச்சில் எதுகை மோனையில் அவரை விஞ்ச இனி ஒருவர் பிறந்து தான் வர வேண்டும். அவரது திரைப்பாடகளில் மட்டுமன்றி, அவரது கலகலப்புப் பேச்சிலும் ஒரு தன்னிச்சையான இயல்பு (spontaneity) இருந்ததும், அவரது பேச்சை கேட்கத் தூண்டுவதாக இருந்தது.
“ஊக்குவிக்க ஆளிருந்தா ஊக்கு விக்கறவன் கூட தேக்கு விப்பான்”

ஒரு முறை வாலி வீட்டுக்கு ஒரு பாம்பு வந்த விஷயம், நாளிதழ்களில் முக்கியச் செய்தியாக வந்து விட, பலரும் அவரை விசாரிக்க, ஒருவர் மட்டும் “உங்க வீட்டுக்கு மட்டும் ஏன் பாம்பு வர வேண்டும்?” என்று குசும்பாக கேட்க, வாலி தனக்கே உரித்தான பாணியில், “படமெடுக்கறவங்க எவ்வளவோ பேர் வராங்க, பாம்பு வந்தா என்னய்யா!” என்று ஒரு போடு போட்டாராம். பிறிதொரு சமயம், எம்ஜியார், வாலியை வெறுப்பேத்த, ”உலகம் சுற்றும் வாலிபன்” படத்தின் டைட்டில் கிரெடிட்ஸில், பாடலாசிரியாராக வாலியின் பெயரை போடப் போவதில்லை என்று சொன்னபோது, வாலி உடனே “அப்படி உங்களாலே படத்தை ரிலீஸ் பண்ணவே முடியாது” என்றாராம். எம்ஜியார் விடாப்பிடியாக, ‘பண்ணிக்காட்டறேன் பாருங்க’ என்று கூற, வாலி “அதெப்படி ’வாலி’ இல்லாம நீங்க படத்தை ‘உலகம் சுற்றும் பன்’ என்றா ரிலீஸ் பண்ணுவீங்க?!” என்றவுடன் எம்ஜியார் சிரித்து விட்டு வாலியை தழுவிக் கொண்டாராம்.

அய்யங்காரான வாலிக்கு மீன் குழம்பு பிடிக்கும் என்பது ஒரு பிரச்சினையே இல்லை. சிலபல சமயங்களில் கட்டாயத்தின் பேரிலோ (நட்பின் பேரிலோ!) அவரது அரசியல் சார்பு ஜால்ரா தான் சற்று அயற்சியைக் கொடுத்தது. ஆனால், அதிலும் இருந்த மொழி வளமும், சொல் விளையாட்டும் ரசிக்கத்தக்கதாக இருந்தது. எ.கா: ’ஏ.எம், பி.எம் பார்க்காத ஒரே சி.எம் நீ தான்’. வாலியின் (கலைஞருக்கு) ஜால்ரா கவிதை ஒன்றை இங்கே காணலாம்.


இந்தக் கவிதையிலும் (ஆண்டு 2007-ல் எமனிடம் இருந்து நீ என்னை மீட்டாய். அதற்கு முன் ஆண்டு 2006-ல் ஓர் 'உமனிடம்' இருந்து தமிழ் மண்ணை மீட்டாய்), இது தவிர ஓரிரு சமயங்களிலும், வாலி ஜெ.ஜெ-வை கிண்டலாக விமர்சித்திருந்தாலும், புள்ளி விவரங்களுடன் விமர்சகர்களுக்கு பதில் / விளக்கம் தரும் ஜெ.ஜெ, வாலி குறித்து எதுவுமே பேசியதில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. அது போல, பெரும்பாலான சினிமா ஆசாமிகள் போல அரசியல் சூழலுக்கு ஏற்றாற் போல் வாலி ஜால்ரா தட்டவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். கருணாநிதி மேல் கடைசி வரை வாலி அபிமானத்துடனே இருந்தார்!

பிடித்த வாலியின் பாடல்கள் என்று பெரிய ஒரு லிஸ்ட் இருந்தாலும், சிலபல பாடல்கள் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

1. வெண்ணிலா வரும் வேளையில் நான் விழித்திருந்தேன், என்னவோ கனவுகளில்...
2. மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டனே
3. மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ
4. கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை
(ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் இந்த சொந்தமம்மா, வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா - மறக்க முடியாத சரண வரிகள்)
5. வளையோசை கலகலகலவென கவிதைகள் படிக்குது
6. காதோடு தான் நான் பாடுவேன், மனதோடு தான் நான் பேசுவேன்
7. ஒன்னை நினைச்சே பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே
8. ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன், உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி என் கண்மணி
9. வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
10. அம்மா என்றழைக்காத உயிரில்லையே
11. காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா

வாலி பாடலின் ஒவ்வொரு வார்த்தைக்கும் முக்கியத்துவம் தருபவர். “சீனத்து பட்டு மேனி உந்தன் சிட்டு மேனி” என்ற உ.சு.வா பாடலுக்கு, பல்லவி வரிக்கு முன் ஒரு சொல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யாரோ பிரியப்பட, வாலி “செஞ் சீனத்து பட்டு மேனி உந்தன் சிட்டு மேனி” என்று பல்லவியை ஒரு நொடியில் அழகாக்கி விட்டார். வாலிக்குப் பிடித்த பாடல் குறித்து, ஒரு பேட்டியில், ஒரு வரலாற்றைப் பதிவு செய்த வகையில் அமைந்த கண்ணதாசனின் “நிலவைப் பார்த்து வானம் சொன்னது...” பாடலை வாலி பிரமிப்புடன் குறிப்பிட்டு இருக்கிறார். அப்பாடலில் வரும் “புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமை அல்லவே அதை நீயும் சொன்னது
சொன்ன வார்த்தையும் இரவல் தான் அது
திரு நீலகண்டரின் மனைவி சொன்னது” என்ற சரண வரிகளை நினைவு கூர்க!

வாலி கண்ணதாசன் மேல் பெருமதிப்பு வைத்திருந்தவர். சமீபத்தில் வாலி பற்றிய சந்தக்கவிதையாக எழுதப்பட்டதில் “கண்ணதாசன் கொடி அகற்றி கண்ணதாசனை வென்றாய்” என்பதை ஏற்றுக் கொள்ள வாலி ஒரேடியாக மறுத்து, பின்னர் அவ்வரிகள் “கோடி கோடி கனவோடு கோடம்பாக்கம் வந்தாய்; கண்ணதாசன் கொடியோடு கொடி நாட்டி நின்றாய்” என்று மாற்றப்பட்டது.

எண்பத்து ஒன்று வரை தமிழ் எழுதி
கண்பட்டும் நிறைவாகவே வாழ்ந்த பின்னும்
மண்பட்டு உன் உடல் போகையிலே
புண்பட்டுப் போனாளய்யா தமிழன்னை!

என்று அவருக்கு உரித்தான ஸ்டைலிலும், “ராஜனுக்கு ராஜன் எங்க ரங்கராஜன் தான்” என்ற அவரது தசாவதார பாடல் வரிகள் வாயிலாகவும், வாலி அவர்களுக்கு அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன். அவரது விஜயத்தால், பரமபதம் இப்போது கலகலப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்!

எ.அ.பாலா
பரமபதம் கலகலப்பாக இருக்குமா என்று தெரியாது ஆனால் உங்களது விஜயத்தால் இட்லிவடை கலகலப்பாக இருக்க போகிறது உண்மை

எ.அ.பாலாவிற்கு சில கேள்விகள்:
வாலி சில முறை ஜெயலலிதாவை நக்கல் அடித்தாலும் ஜெயலலிதா கண்டுகொள்ளவில்லை ஏன் ?
வாலி மறைந்த போது ஜெயலலிதா ஏதாவது அஞ்சலி அறிக்கை கொடுத்தாரா ? அல்லது டி.கே.பி மறைந்த போது கலைஞர் கண்டுகொள்ளாத மாதிரி இவரும் கண்டுக்கொள்ளவில்லையா ?

Read More...

Friday, July 19, 2013

ஆத்மாவின் சங்கமம்! - செங்கோட்டை ஸ்ரீராம்


சிலரின் நடவடிக்கைகளைப் பார்த்து.... கேட்டு... நமக்குள் அவரைப் பற்றிய ஒரு பிம்பத்தை வரைந்து கொள்வோம். சிலரைப் பற்றிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வோம். ஆனால் பலநேரங்களில் அவை பொய்த்துப் போகும்.

கவிஞர் வாலியைப் பற்றி என்னுள் பதிந்த பிம்பமும் அதுதான்! ஒரு ரசிகனாக... தமிழைக் காதலிக்கும் ஒரு காதலனாக என் பள்ளிப் பருவத்தில் இருந்து கேட்டுக் கேட்டு வளர்ந்த வாலியின் பாடல்களும் கவிதைகளும் அவரைப் பற்றிய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும் சினிமாக்காரர்கள் என்றால் போலித் தனமும் அதிகம் இருக்கத்தான் செய்யும் என்ற உள்மனப் பதிவும் கூடவே இருந்ததால், கிட்டே நெருங்கிப் பார்த்தும் எட்டியே நிற்க வைத்திருந்தது மனது. இருப்பினும் இன் இளமைக் கால எதிர்பார்ப்புகளுடனேயே இருந்த எனக்கு சென்னையில் பத்திரிகை வாசம், அவருடன் நெருங்கிய வாசத்தை ஏற்படுத்தித் தந்திருந்தது.

மயிலாப்பூர்வாசியாக இருந்தேன். அதனால், அடிக்கடி வாலியைப் பார்க்கும் வாய்ப்பும் ஏற்பட்டிருந்தது. இருப்பினும் ஒரு பத்திகையாளனாக... பார்ப்போம், சிரிப்போம்... விலகிச் செல்வோம்.

வாலியின் அரசியல் பார்வைகளையும், அரசியலார்களுடன் சரிந்து விழுந்து, மொத்தத்தில் சரணாகதியாகக் கிடப்பதையும் கண்டு ஒரு வித வெறுப்பே வளர்ந்திருந்தது. ஸ்ரீரங்கத்து மண் வாசத்தில் பிறந்து வளர்ந்திருந்த போதும், எனக்கு ஏனோ ஓர் அன்னியோன்யம் அவரிடம் பிறந்ததில்லை. அன்னியப்பட்டே விலகியிருந்தேன். ரங்கநாயகி என்று ஒருவரைப் பாடுவதையும், இன்னொருவரை அண்டிக் கிடப்பதையும் கண்டு சீச்சீ... என்று எண்ணிய காலமும் உண்டு.
ஆனால்... அவர் ஒரு கவிஞர். அந்தக் காலத்தில் மன்னரைப் பாடி பரிசில் பெறும் புலவன் இருந்தானில்லையா? அவன் என்ன... மன்னன் என்ற மனிதனையா பாடினான்..? மனிதனாக இருந்த, மன்னன் பதவியில் உள்ள நபரைத்தானே பாடினான்.. அதுபோல்தான் பரிசில் பெற விழையும் இந்தக் கவிஞனும்! - என்று சமாதானம் சொல்லும் என் மனம்.
விகடன் பிரசுரத்தின் பொறுப்பில் இருந்தபோது.... ஒருநாள்...


வாலியின் புதிய கவிதை நூலுக்கான கையெழுத்துப் பிரதியைக் கொடுத்து படித்துப் பார் எனக் கொடுத்தார் அப்போதைய ஆசிரியர் வீயெஸ்வி.

கம்பன் நாற்பது, ஆறுமுகன் அந்தாதி என இரண்டு பிரதிகள். அப்போது வாலியின் கவிதைகள் விகடனில் தொடராக வந்து பின்னர் புத்தகமாக உருப்பெற்றதுண்டு. ஆனால், நூலாகப் பிரசுரம் செய்வதற்காகவே தனியாகக் கொடுத்திருந்தார் அதனை.
அனைத்தும் வெண்பாக்கள். கம்பன் எண்பது - என்பது மரபுக் கவிதை களிநடம் புரிய அமைந்திருக்கும் வெண்பாத் தொகுப்பு. படிக்க மிகவும் சுகமாக இருந்தது. அந்தப் பாடல்களுக்கு விளக்கமும் எழுதியிருந்தார் பேராசிரியை வே.சீதாலட்சுமி என்பவர். அதுபோல், ஆறுமுகன் அந்தாதிக்கு ம.வே.பசுபதி விளக்கம் எழுதியிருந்தார்.

இவற்றை நூலாக்கும் முயற்சியில் இருந்தேன். ஏதோ கொஞ்சம் தமிழ் படித்த காரணத்தால் கம்பன் எண்பது நூலில் உள்ள வெண்பாப் பாடலில் ஓரிரு இடங்களில் தளை தட்டுவதையும், சில வார்த்தைகளின் பொருள் புரியாமையையும் உணர்ந்தேன்.
நூலின் பிழை திருத்தப் படியை எடுத்துக் கொண்டு வாலியின் வீட்டுக்குச் சென்றேன். குங்குமப் பொட்டு துலங்க, வாலியின் எப்போதும்போன்ற வசீகரம் அப்போதும் இருந்தது. எப்போதும் கூட்டத்திலேயே சந்தித்துப் பழகிய நான், முதல் முறையாக வீட்டில் தனிமையில் சந்தித்தேன்.

நூல் திருத்தப் படிகளை கையில் வாங்கியவர் அதை அப்படியே சற்றுத் தள்ளி ஒரு மேஜையில் வைத்தார்.
”ம்... அப்புறம்.. உன்னைப் பத்தி கொஞ்சம் சொல்லேன்?” என்று தொடங்கினார்... அவருக்கு என் நெற்றிக் குறி, இந்தக் காலப் பத்திரிகை உலகத்தில்... என்னைக் குறித்தான ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்த்தியிருந்தது எனக்குப் புரிந்தது.
வைணவ பரிபாஷையில் பேச்சுக் கொடுத்தேன்... "அடியேன்... ஸ்ரீராமன். பிறந்தது அரங்கன் காலடி. வளர்ந்தது பொதிகை மலையடி. கல்லூரி திருச்சி பிஷப். அத்யயனம் ஆசாரியன் திருமாளிகை!”

"எனக்கும் ஆசைதான்! ஆனால்.. எவ்வளவோ துறந்து, எத்தனையோ சமரசங்களுக்குப் பின் இந்த நிலையை அடைந்துள்ளேன்! இந்த உலகம் பொல்லாதது. உன் புறத்தோற்றம் உன்னை இந்தத் துறையில் முன்னேற விடாது. பத்திரிகைப் பொறுப்பாச்சே! தண்ணீர் சமாசாரம் என எல்லாம் இழுப்பாங்களே!.." - என்னமோ சொன்னார். ஆனால் எனக்கோ மனம் அதில் ஒப்பவில்லை. நான் என் நிலையில் நின்றேன்.

"இல்லை ஸ்வாமி. இதற்குப் பெயர் திருமண் காப்பு. இது வெறும் புறச் சின்னம் என்று கூறுகிறீர்களா? இல்லை. இதனை ரட்சை என்போம். இது அடியேன் உடலுக்கு மட்டுமா ரட்சை..? நீங்கள் சொல்வது போன்ற சூழ்நிலைகளில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளும் ரட்சையல்லவா? ஒன்று... இதற்கு மதிப்பு கொடுப்பவராக இருந்தால் நாம் இதுபோன்ற இசகுபிசகான இடங்களுக்குச் செல்ல மாட்டோம். அடுத்தது, நம்மை எவரும் இத்தகைய இடங்களுக்கு அழைக்க மாட்டார்கள்... ஸ்வதர்மத்தை எப்போதும் நினைவுறுத்திக் கொண்டிருக்கும்” - இப்படியாகப் போனது என் விளக்கம். எனது சிறுவயதும் துடுக்குத்தனமும் அவரிடம் அப்படிப் பேசியதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்!

ஆனால் அவரோ நான் பரந்த தளத்துக்கு வந்து எல்லோருடனும் பழகும் பத்திரிகையாளனாக வேண்டும் என்று தன் ஆசையைத் தெரிவித்தார். அதனால் என் புறச் சின்னங்களை கைவிட்டுவிட அறிவுரை கூறினார். ”இவற்றை அகத்தளவில் வைத்துக் கொள்ளலாமே!” என்றார்.

ஆனால் நானோ, "அடியேன் என்னளவில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். தேவரீர் க்ஷமிக்கணும்...” என்றேன்.
"இல்லை சீராமா... நான் உன் நல்லதுக்குச் சொல்கிறேன்.... அதான் சொன்னேனே.. எனக்கு மட்டும் இப்படி இருக்க வேண்டும் என்று ஆசையில்லையா என்ன?! ஆனால், நான் இந்தத் துறைக்கு வந்த கால கட்டம், மிகவும் கடினமான கால கட்டம்! எங்கே திரும்பினாலும் நாத்திகர்கள் ஆதிக்கம். சினிமாத் துறை முழுக்க பிராமண எதிர்ப்பாளர்கள் கோலோச்சினார்கள். காதுபட பாப்பான் என திட்டத்தான் செய்தான்... அதையும் மீறி அவர்களுக்கிடையே வளர வேண்டும்! ஒரு வெறி! வயிற்றுப் பாடு! வேறு வழி. அதனால் சமரசம் செய்து கொண்டேன்.. எல்லோருடனும் எல்லா இடத்துக்கும்தான் போயாக வேண்டும்! எல்லாம்தான் சாப்பிட்டாக வேண்டும்! இல்லை என்றால்... இன்றைய (....) உள்பட... பகாசுரர்கள் பலர் இருந்த சினிமாத் துறையில் என்னால் போட்டி போட்டு வந்திருக்க முடியுமா?” - கேட்டார்... சற்று நேரம் மௌனம்!
அடுத்தது... அவரே தொடங்கினார்.

"காவிரிக் கரையில் இருந்து 3 ரங்கராஜன்கள் சென்னைக்கு வந்தோம். எத்தனையோ கஷ்டங்களைத் தாண்டி எங்கள் துறையில் கால் பதித்தோம்... (அவர் சொன்ன 3 ரங்கராஜன்கள் - சுஜாதா, ரா.கி.ரங்கராஜன், வாலி... இவர்களைப் பற்றிய பேச்சு சற்று நேரம் ஓடியது...)

... நாங்கள் எங்கள் அளவில் குடும்பத்தில் எங்களுக்கான ஸ்வதர்மத்தைக் கைவிட்டுவிட்டோமா? -
கேள்வி எழத்தான் செய்தது. ஆனாலும், என் விடாப்பிடி விவாதமும் தொடர்ந்தது. சிறிது நேரத்தில்... "சரி உன்னிஷ்டம். நான் வேறு எதுவும் சொல்லவில்லை. நீ நல்ல நிலைக்கு வர வேண்டும். அது என் உள்ளக் கிடக்கை" என்று அத்தோடு என் தனிப்பட்ட வாழ்க்கையின் பின்னணி விவாதத்தை முடித்துவிட்டார்.

இப்போது, கம்பன் எண்பது - நூலின் பிழைதிருத்தும் படியை எடுத்துக் கொண்டார். அதில் சில இடங்களில் நான் கைவைத்திருந்தேன். ஒவ்வொரு பாடலாக நான் போட்டிருந்த திருத்தங்களைப் பார்த்துக் கொண்டே வந்தார். விளக்கக் குறிப்புகளில் போடப்பட்டிருந்த திருத்தங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டார். இரண்டு வெண்பாவில் தட்டிய தளையை சுட்டிக் காட்டினேன். "இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்; வாசகருக்குப் புரியுமா என்று தெரியவில்லை?!” - சொல்லிக் கொண்டே வாலியின் முகத்தை சற்றே நோக்கினேன்.. (நீ யார் சின்னப் பையன்? என் பாடலில் கை வைக்க..? - இப்படிக் கேட்டுவிடுவாரோ என்று சற்றே அச்சமும் இருக்கத்தான் செய்தது.)

"இதோ... பார்.. சீராமா. நீ விகடனுக்கு வந்து... என்ன... ஒரு வருடம் ஓடியிருக்குமா? ஆனால் விகடன் மூலம் என்னைப் படிக்கும் வாசகர்கள், ஆண்டாண்டு காலமாய் இருக்கிறார்கள். வாசிக்கிறார்கள். அவர்களுக்கு வாலி என்ன சொல்கிறான் என்பது புரியும். விட்டுவிடு..." என்றார்,.

நான் மறுப்பேதும் சொல்லவில்லை. "சரி ஸ்வாமி.. அப்படியே இருக்கட்டும்...” சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டேன்.
அதன் பின்னர் அவரை தனியாகச் சந்திக்கும் வாய்ப்பு பெரிதாக அமையவில்லை. நானும் அதில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை. இடமாற்றம் காரணமாக இருந்தது.

அண்மைக் காலத்தில் அழகியசிங்கர் நூலை எழுதி வெளியிட்டார். நிகழ்ச்சிக்குச் சென்று வாலியைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம்தான்! ஆனால்... செய்திகளின் பின்னே வேட்டை நாயாய்த் துரத்திக் கொண்டிருக்கும் அறிவுக்கு, வாலியின் கவித்துவத்தை ரசிக்கும் ரசனை கொஞ்சம் மக்கிப் போய்விட்டது என்றுதான் தோன்றியது. நிகழ்ச்சியை மட்டும் தவறவிட்டேனல்லேன்... வாலி என்னும் என் நலம்விரும்பிய கவிஞனையும்தான்!
அவர் சொன்ன வழிமுறைகள் வேண்டுமானால் எனக்குக் கசப்பாய்த் தெரிந்திருக்கலாம்... ஆனால், என் மீதான உள்ளார்ந்த அக்கறையை நான் உணர்ந்தே இருந்தேன்.

காவிரிக் கரையில் பிறந்து கூவத்தில் குளித்தெழுந்த வாலி என்னும் நளினமான ஆறு.... நிறைவாக ஆச்சார்யன் என்னும் கங்கையில் ஆச்சரியமாகக் கலந்தது. அவர் கடைசியாக எழுதிய நூல்... அதனைக் காட்டும்! அழகியசிங்கர் நூல் வெளியீட்டு விழாவில் நிகழ்த்திய ஏற்புரையில் வாலி சொன்னார். "எல்லாவற்றையும் கடந்து ஆத்மா கரையேறத் துடிக்கிறது!" - இது ஓர் ஆத்மாவின் அனுபவம் மட்டுமல்ல; ஆத்மார்த்தமான அனுபவமும்தான்!

( நன்றி: https://www.facebook.com/senkottaisriram )

Read More...

Thursday, July 18, 2013

வாலி அஞ்சலி



அஞ்சலி

Read More...

Tuesday, July 16, 2013

வயசு 25 !




மேலே உள்ள இந்த போன்சாய் மரத்தின் வயசு 25!. போன்சாய் என்றால் குட்டியே குட்டியூண்டு மரங்கள், அதாவது பெரிய மரங்கள் ஆனால் அது வளராமல் சின்னதாக இருக்கும். இந்த போன்சாய்க்கு இன்னொரு குணம் உண்டு பெரிய மரங்களை கண்டால் பிடிக்காது ரவுடி கூட்டத்தை கொண்டு வெட்டிவிடும்.

Read More...

Monday, July 15, 2013

படிப்பிற்கு உதவி

இ.வ,
கோவையில் உள்ள விஜயலட்சுமி டிரஸ்ட் - +2 முடித்த மாணவர்களுக்கு இதுவரை 4 மாவட்ட (கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு) மாணவ/மாணவியருக்கு - அரசு பள்ளி எனில்-80%, அரசு உதவி பள்ளி எனில்-90% தனியார் பள்ளி எனில்-95% மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரூ 25,000/- அளித்து வந்தார்கள். (எந்த சாதி/மத/வருமான கட்டுப்பாடுகளும் இல்லை). இந்த வருடம் முதல் விரிவுபடுத்தி தமிழகம் முழுதும் உள்ள அரசு பள்ளி மாணவ/மாணவியருக்கு மட்டும் இலவச கல்வி - (பொறியியல் கல்லூரி படிப்பிற்கு அதிகபட்சம் -வருடத்திற்கு 1 லட்சம்) அளித்து வருகிறார்கள். (எந்த சாதி/மத/வருமான கட்டுப்பாடுகளும் இல்லை). உங்கள் வலைப்பக்கத்தில் இத்தகவலை வெளியிட்டு தக்கவர்கள் பயனடைய வைக்க உதவுங்கள்.

Read More...

உமாசங்கர் -





இவருடைய அடுத்த இலக்கு கவிதை எழுதுவது தான்....செய்துவிடுவார்

Read More...

ராகுலுக்கு கடைசி தந்தி !

நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த தந்தி சேவையில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு கடைசி தந்தி அனுப்பப்ட்டது. இந்தியாவில் கடந்த 160 ஆண்டுகளாக நடைபெற்றிருந்த தந்தி சேவை நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. இதில் ஏராளமானோர் தமது உறவினர்களுக்கு தந்தியை அனுப்பியுள்ளனர். அந்த தந்தி சேவையில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு டில்லியில் உள்ள ஜான்பாத் மத்திய தந்தி அலுவலகத்தில் இருந்து கடைசி தந்தி அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்ன தந்தி அனுப்பினார்கள் என்று தெரியாது.
வாசகர்கள் கமெண்டில் கூறலாம். நல்ல தந்திக்கு பரிசு உண்டு
'காங்கிரஸ் கவலைக்கிடம்' என்று இருந்திருக்குமோ ? /span>

Read More...

Saturday, July 13, 2013

நாய்குட்டி அரசியல் !

நாம் காரின், பின் சீட்டில் பயணிக்கும்போது, ஒரு நாய்க்குட்டி, காரில் விழுந்து அடிபட்டால், நமக்கு வருத்தம் ஏற்படுமா, இல்லையா... வருத்தம் இருக்கத் தானே செய்யும்! அதேபோன்ற வருத்தம் எனக்கும் இருந்தது.நான், முதல்வரா, இல்லையா என்பது முக்கியமில்லை. ஆனால், மனித நேயமிக்கவன். உலகில் எங்காவது ஒரு தவறான செயல் நடந்தால், அதற்காக வருத்தப்படுவது இயற்கை தானே! சர்ச்சைக்குரிய நபராக, என்னை சித்தரிக்கின்றனர். அமெரிக்காவில் கூட, வேறுபட்ட கருத்துக்களை கூறுவது, ஜனநாயகத்தில் இயற்கையான விஷயம் என, கூறப்படுகிறதே!நான், தேசியவாதி; நாட்டுப் பற்றுள்ளவன். இதில் என்ன தவறு இருக்கிறது? நான், இந்துவாக பிறந்திருக்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது? இந்துவாக பிறந்ததால், இந்து தேசியவாதி என, கூறுகின்றனர்."முன்னேற்றத்தை பற்றி சிந்திப்பவர், வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுபவர், வேலையே குறியாக இருப்பவர்' என, என்னைப் பற்றி, பல கருத்துக்கள் கூறப்படுகின்றன. இவை, ஒன்றோடு ஒன்று தொடர்புடையது தான். இதில், எந்த முரண்பாடும் இல்லை

நான் ஒரு தேசியவாதி என்று சொன்னதை யாரும் கண்டுக்கொள்ளவில்லை ஆனால் நாய் குட்டியை பிடித்துக்கொண்டு விட்டார்கள். கடித்து வைக்க போகிறது !

Read More...

Friday, July 12, 2013

பாரதி அன்பர் சீனி.விசுவநாதனின் குமுறல்





Read More...

தோனி



நன்றி: Facebook

இன்று தோனி, நாளை மோதி

Read More...

Saturday, July 06, 2013

சிங்கம்-2 FIR

சிங்கம்-2 விளம்பரம் போன வாரம் முழுக்க பலரை ரீசார்ஜ் செய்தது. காலை ஷோ போயிருக்க வேண்டும் ஆனால் என் மேனேஜர் முக்கியமான வேலை என்று என்னை படுத்தி எடுத்துவிட்டார். அந்த கடுப்பிலேயே மாலை தியேட்டர் பக்கம் போன போது கேண்டீன் பசங்களிடம்
'சிங்கம் எப்படி?" என்று கேட்டேன்.
"சூப்பர் சார்"

அப்ப நம்மிடம் இருக்கும் சுரேஷ் கண்ணன் மூளையை கழட்டிவைத்துவிட்டு படம் பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு உள்ளே சென்றேன். 

பெண் பார்க்கும் போது சாதாரணமான இருக்கும் பெண் கல்யாணத்தின் போது சூப்பராக இருக்கும். காரணம் அவளுக்கு போடும் மேக்கப். சிங்கம் படமும் அப்படியே சாதாரண கதைக்கு கொஞ்சம் நன்றாக மேக்கப் போட்டுள்ளார்கள். படத்தின் நீளம் 2.46நிமிடங்கள். அதை கொஞ்சம் வெட்டியிருந்தால் சிங்கம்-3 கூட எடுத்திருக்கலாம்.



படம் முழுக்க நாம் என்ன நினைக்கிறோமோ அதை சூர்யா செய்கிறார். வில்லனை அடிக்க வேண்டும் என்று நினைத்தால் உடனே அடிக்கிறார், அனுஷ்கா, ஹன்சிகாவுடன் பாட வேண்டும் என்று நினைத்தால் உடனே பாடுகிறார். மூன்றே நாளில் வெளிநாட்டுக்கு சென்று வந்துவிடுகிறார். தன் ஒட்டு மொத்த குடும்பத்தையும் காக்க அவர் மழையில் வேட்டியுடன் போடும் சண்டையில் உண்மையான தமிழ் 'கலைஞர்' தெரிகிறார். சபாஷ் சூர்யா!

சிங்கத்தை காட்டுல பார்த்திருக்கிற... என்று சிங்கம்-1 வரும் வசனம் போல இதிலேயும் நிறைய அடுக்கு வசனம் வருகிறது. ஆபரேஷன்-D என்ன என்று விளக்கும் போது 10 ரூல் பேசுகிறார். 4 ரூலுக்கு பிறகு டைரக்டருக்கே போர் அடித்திருக்கும் என்று நினைக்கிறேன் உடனே மூயூட் செய்துவிட்டு 10வது ரூலுக்கு ஜம்ப் செய்துவிடுகிறார்.

துத்துக்குடி என்றால் உடனே ஓர் இருவர் சிலுவை மாட்டிக்கொண்டும், சிலர் 'பாய்' என்றும் வந்துவிட வேண்டும் என்பது தான் நியதி. இதில் அப்படியே. சந்தானம் காமெடி செய்கிறார் வழக்கம் சில வசனம் சிரிக்கவும், சில முகம் சுழிக்கவும் வைக்கிறது. - விஸ்வரூபம் காமெடி படத்துடன் ஒட்டாமல் சும்மா ஜாலிக்கு. விவேக் ? வந்துவிட்டு போகிறார்.

ஒரு போலீஸ் படத்துக்கு என்ன என்ன தேவை என்பதை நாம் சிவாஜி, எம்.ஜி.ஆர்... அர்ஜூன், விஜயகாந்த் படங்களில் பார்த்திருக்கிறோம் - தேசிய கீதத்துக்கு மரியாதை, ஸ்கூல் மாணவர்களை ஒழுங்கான பாதையில் வழி நடத்த வேண்டும், போதை மருந்து கடத்தல், வெளிநாட்டு வில்லன், போலீஸ் ஸ்டேஷன் உடைத்துக்கொண்டு வில்லன் தப்பிப்பது, வில்லனின் மச்சினியோ தங்கையோ போலீஸுக்கு உதவி செய்வது, வில்லன் பத்து-பதினைந்து வெள்ளை கார்களில் வருவது, போலீஸ் ஸ்டேஷனில் உள்ள பீரோ, மேஜை உடைவது... இவை எல்லாம் ஒழுங்கான முறையில் கலந்து தந்திருக்கிறார்கள்.

ஒரு ஜாலியான படம் பார்க்க விரும்பும் எல்லோரும் பார்க்கும் விதமாக இருக்கிறது படம்.

இட்லிவடை மார்க் - சிங்கம்1-2

கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்



இதில் வரும் அந்த சிங்கம், வசனம் பேசி, டியூயட் பாடினால் அது தான் சிங்கம்-2 படம் :-)

Read More...

Friday, July 05, 2013

சா"தீ"

தருமபுரி திவ்யாவை காதல் திருமணம் செய்த இளைஞர் இளவரசன் வியாழக்கிழமை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸôர் தெரிவித்தனர் - செய்தி

இனி அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் எல்லாம் ஃபேஸ்புக், டிவிட்டர் என்று பேச ஆரம்பித்துவிடுவார்கள். இதில் என்ன கூத்து என்றால் இந்த so-called அரசியல் தலைவர்கள் எல்லாம் தொகுதியில் அந்த அந்த ஜாதியில் தான் வேட்பாளர்களை நிறுத்துவார்கள். இவர்கள் ஊட்டி வளர்த்த சாதி வெறி தான் இது.

ஃபேஸ்புக், டிவி விவாதம் செய்யும் எழுத்தாளர்களின் அழுகை, அலம்பலை நினைத்தால் நினைத்தால் பயமாக இருக்கிறது.

இந்த செய்தியை படிக்கும் போது - மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணையை உங்கள் சமூகத்தில் தேர்ந்தெடுங்கள் என்ற தமிழ்மேட்ரிமோனி விளம்பரம் சைடில் வந்தது - இதில் நிறைய உண்மை இருக்கிறது!

Read More...