பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 30, 2013

இரண்டு மருமகன்களின் மாறுபட்ட கதை

இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பெட்டிங் சர்ச்சை பற்றி குருமூர்த்தி காரசாரமான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். வாசிக்க:

http://newindianexpress.com/opinion/The-contrasting-tale-of-two-sons-in-law/2013/05/30/article1611654.ece

சில முக்கியமான பகுதிகள் தமிழில் இங்கே. முழு ஆங்கில கட்டுரை கடைசியில்... 

சோனியாவின் மருமகன் ராபர்ட் வத்ரா, நான்கே வருடங்களில், 2 பில்லியன் டாலர்கள் (11000 கோடி ரூபாய்) மதிப்புள்ள ஒரு ரியல் எஸ்டேட் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியதாக Celebritynetworth.com வலைத்தளம் குறிப்பிட்டுள்ளது. சோனியா ஆதரவு மீடியா கூட, இதில் ஊழல் நடந்திருப்பதை ஒப்புக் கொண்டிருக்கின்றன.

ராபர்ட் வத்ரா (DLF சார்ந்த) விவகாரம் பற்றிய செய்திகள் வந்த சமயம், தன்னைப் பற்றி குற்றச்சாட்டு எழுப்பிய ’ஆம்ஆத்மி’ கட்சியினரை அவர் “‘mango people’ [aam aadmi] in banana republic [India]”(வாழைப்பழ தேசத்தின் மாம்பழ ஆட்கள்!) என்று வசை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் கார்ப்பரேட் இன்சைடர் குறிப்பிடுவதின்படி, ஊழலுக்கு எதிராக போர் தொடுக்க குரல் கொடுக்கும் சோனியாவின் சொத்து மதிப்பு இரண்டிலிருந்து பத்தொன்பது பில்லியன் டாலர்கள். ஸ்ரீனிவாசனை வெட்கம் கெட்டவராக காட்டும் அதே மீடியா ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகளில் 9வது இடத்தைப் பிடித்த சோனியாவை கொண்டாடுகிறது.

வத்ரா விவகாரத்தின்போது, முதலில் மௌனமாக இருந்த காங்கிரஸ்காரர்கள், சோனியாவின் கட்டளைக்குப் பின், ராபர்ட் வத்ராவுக்கு மீடியாவில் வக்காலத்து வாங்கினார்கள். அதாவது, வத்ராவின் மீதான தாக்குதல், ஒரு தனிமனிதர் மீதானதது அல்ல, காங்கிரஸ் கட்சி அதன் தலைமை மீதானதது என்று பொங்கினார்கள்.

ஸ்ரீனிவாசனை பதவி விலகச் சொல்லும் ஷரத் பவார், அப்போது முதல் குடும்பத்தின் மீட்பில் இறங்கி, அரவிந்த் கேஜர்வாலை ராபர்ட் வத்ராவுக்கு எதிராக நீதிமன்றத்துக்கு போக அறைகூவல் விடுத்தார்.

பிரதான எதிர்க்கட்சியான பிஜேபியும் வத்ராவுக்கு எதிராக பெரிதாக வாயைத் திறக்கவில்லை.

வத்ரா, தான் 7.5 கோடிக்கு வாங்கிய சொத்தை DLFக்கு 58 கோடிக்கு விற்க முயன்றதை, தடை செய்த விசாரணை அதிகாரி அசோக் கெம்கா, பத்தே நாட்களில், இடமாற்றம் செய்யப்பட்டார்.

வத்ரா விவகாரத்தைத் தொடர்ந்து வெளிவந்த சில ஊழல்களும், இப்போது இந்த ஐபிஎல் பெட்டிங் விவகாரமும், மீடியா தலைப்புகளை ஆக்ரமித்துள்ளதால், வத்ரா ஒரு நேர்மையான பிசினஸ்மேனாக இன்னும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

குருநாத்தின் குற்றம், வத்ராவின் சுருட்டலோடு ஒப்பிட்டால் மிகச் சிறியது. ஆனால், வத்ராவைப் போல ஒரு வலிமையான மாமியார் அவருக்கு வாய்க்கவில்லை.

மூலக்கட்டுரை முழுமையாக கீழே:



The contrasting tale of two sons-in-law

By S Gurumurthy

30th May 2013 08:33 AM

Known as ‘Mappillai’ in Tamil and ‘Damad’ in Hindi, all sons-in-law have high standing in Indian families -- religion, caste, region and language regardless.

No surprise therefore that sons-in-law of wealthy, powerful families make news, mostly for wrong reasons. Some months ago, Robert Vadra, son-in-law of Sonia Gandhi, was in the news for building, in just four years, real estate empire worth couple of billion Dollars [Rs 11,000 crore], according to California’s Celebritynetworth.com, which even the media that adores Sonia Gandhi had to confess as reeking of corruption.

When Arvind Kejriwal exposed the shenanigans of Vadra, for the first time therefore even Sonia-friendly media raised eyebrows about her. But within hours of the exposure, she certified Vadra as honest, directed her party to defend her son-in-law. Yet the media did manage to keep the issue alive.

In April last Haryana Government cleared Vadra of wrong doing. Before the media could scrutinise the fake clearance, the CBI and Law Minister Ashwini Kumar were shockingly caught fabricating CBI report to Supreme Court followed by the CBI catching Railway Minister Pawan Bansal’s nephew selling top posts in the Railways. Vadra went out of the radar even as both ministers made noisy exit.

When the Prime Minister’s head was the next, came the news of spot fixing in Indian Premier League [IPL] cricket matches. All previous scams of lakhs of crores of rupees moved out of the radar as another son-in-law, who held himself out as the owner of Chennai Super Kings team, was caught punting on matches.

Gurunath Meiyappan, the hitherto unknown son-in-law of N Srinivasan who heads the high profile Board of Control for Cricket of India [BCCI] has virtually saved the UPA Government that was being chased by the media and the Supreme Court.

Obviously a smalltime punter, Gurunath is in the news for betting on IPL cricket match results. As per police investigating him, far from making money, he was desperately talking to bookies for tips to bet, win and recover the loss of a crore he had made. Yet see where the two sons-in-law stand now. Gurunath is in police custody for an offence that is yet to be made clear and his father-in-law is fighting to save his seat as chairman of the prestigious BCCI. But Vadra, shaming those who had raised questions of corruption against him as ‘mango people’ [aam aadmi] in banana republic [India], still walks like the President and Prime Minister of the country uninterrupted by security in airports and his mother-in-law pontificates on honesty and calls for war against corruption despite the US based Corporate Insider’s count of her [undeclared] wealth at between $2-19 billions. Media berates Srinivasan as shameless. And celebrates Sonia Gandhi for figuring as the 9th most powerful women in Forbes Magazine’s list last week. It is just a prologue to the interesting and contrasting tale of the two sons-in-law - Vadra and Gurunath. Let us recall the Vadra story and contrast it with Gurunath’s.

On October 5, 2012, the Aam Aadmi Party leader Arvind Kejriwal and Prashant Bhushan disclosed with prima facie evidence that ‘damad’ Robert Vadra has amassed some 31 properties in the last four years mostly in and around New Delhi, which even at the time of their purchase were worth `300 crore and now over `500 crore when the five companies owned by him had a capital of only `50 lakhs. They said that Vadra got the money almost free from the real estate giant DLF in exchange for favours by Congress government in Haryana to DLF - clearly pointing to corruption. The entire media, visual and print, carried the news extensively and stunned the ruling party into silence.

Seeing no one from the Congress defending Vadra through the day, Sonia Gandhi stepped in to defend her ‘damaad’ saying that there has been no misuse of either of the Gandhi family or any other misuse by Vadra who was a businessman and his transactions are transparent and above board. [Zee news 5.10.2012]. She also asked, like an owner of alsatians does, the Congress party to go after those who went after Vadra.

“Sonia Gandhi tells Congress to defend Robert Vadra against allegations”, said NDTV [5.10.2012]. Then it was a pack of wolves let loose against the mango people and the media. Capturing how the wolves were let loose, wrote The Hindu [8.10.2012] the day most newspapers had front paged the exposure on Vadra, Congress spokespersons were briefing media on economic reforms and the appreciation of the Rupee, and how government was confident of getting the insurance and pensions bills passed in Parliament!

The party had actually distanced itself from Vadra, saying he was not a party member and stressing that his accusers could go to court. But that very evening, with Sonia fiat, everything changed. Ministers and party men vied to defend Vadra. Two days later, the Congress even said that the attack on Vadra was a planned conspiracy not against Vadra an individual but targeted at the entire Congress and its leadership - read Sonia. Meanwhile, on 8.10.2012, Vadra came out with his mango people in banana republic tweet, which Sonia Gandhi explained on 10.10.2012 as not Vadra’s but Varun Gandhi’s!

Soon, the UPA allies stepped in to rescue the first family. Sharad Pawar even dared Arvind Kejriwal to go to court to substantiate his allegations. This was the very man who told N Srinivasan to resign forthwith if he had an iota of honesty! Why then a different rule for the son-in-law of the first family, Mr Pawar?

Lalu Prasad accused Kejriwal of targeting Vadra for “cheap publicity.” Not to be left out the Prime Minister’s Office too came out in defence of Vadra by filing an affidavit in Allahabad High Court on 22.11.2012.

Finance Minister P Chidambaram said that it was just private transaction between two individuals which cannot be questioned on the basis of insinuations, unless there was quid pro quo or corruption. But, if it were two private individuals dealing why should the ruling party, ministers and government defend Vadra? Why did the Congress say that the target was not an individual but Sonia. Then, where were the Opposition? The BJP just stopped short of defending Vadra. Only sections of the media was still trying to keep the issue alive. The Livemint online ran a 38-page coverage of the fraud. The India Today ran a detailed exposure of Vadra [22.10.2012]. Earlier, on 15.10.2012, Ashok Khemka, IAS officer handling Vadra’s case, cancelled sale by Vadra to DLF of the property he had bought at `7.5 crore for `58 crore. He was transferred from his job within 10 days [25.10.2012]. Not as punishment, the CM Hooda asserted. Out of compassion then? This raised a hue and cry. Earlier, on 19.10.2012 the DNA came out with an exposure that Vadra has bought 770 hectares of land in a Rajasthan village at double the market rates during 2009-2011 with inside information about the development plans of the government in that area, with the result the value of the land has shot up by 40 times over the price paid by him.

The Business Standard wrote [9.3.2013] an investigative expose titled ‘How a Rajasthan village lost of Rober Vadra’ detailing how Vadra made a killing in the deal. But came the Haryana government exoneration of Vadra on April 22. 2013.

And with the subsequent scams, now the IPL scam taking over the media headlines, Vadra remains declared an honest business man now and Sonia Gandhi as the Mrs Clean of politics!

Gurunath, whose offence is petty as compared to Vadra’s loot, was not fortunate like Vadra to have had an all powerful in-law family. Obviously Vadra chose the right family to marry. Lesson: those who want to be celebrity sons-in-law must choose the right family to marry before attempting to make wrong money!


S Gurumurthy is a well-known commentator on political and economic issues.

Email: comment@gurumurthy.net

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
சரியான பாடம்: மாமியாருக்கு மாப்பிளை ஆகலாம், ஆனால் மாமனாருக்கு மாப்பிள்ளை ஆக கூடாது :-)

Read More...

Monday, May 27, 2013

சல்யூட் அடிக்க மறந்த ஓபாமா


தமிழ் எழுத்தாளர்களை பார்த்தால் எல்லோரும் சல்யூட் அடிக்க வேண்டும் என்ற புதிய சட்டம் இனி அமலுக்கு வர போகிறதாம். எழுத்தாளர்களும் இனி ராம்ராஜ் வேட்டி, பனியன் போட்டுக்கொள்ள வேண்டும் அப்போது தான் - சல்யூட் ராம்ராஜுக்கு சல்யூட் என்று மக்கள் சல்யூட் அடிப்பார்கள் !

Read More...

Saturday, May 25, 2013

டி.எம்.எஸ் - அஞ்சலி



அஞ்சலி

Read More...

(பவர்?)ஸ்டார் ஸ்ரீநிவாசன்

ஒரு ஹாலிவுட் கிரைம் த்ரில்லர் கதைக்கு இணையான அத்தனை அம்சங்களையும் கொண்டதாக இது உள்ளது. கிரிக்கெட் வீரர்கள், தரகர்கள், மாடல்கள், நடிகைகள், கார்ப்பரேட் பெரும்புள்ளிகள், அரசியல்வாதிகள் என்று பல பாத்திரங்களும் இதில் பங்கேற்றுள்ளனர். பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் வாரியத்தில் செல்வாக்குடனும், பலத்துடனும் வலம் வந்த தற்போதைய தலைவர் அஞ்சாநெஞ்சர் ஸ்ரீனிவாசன் அவர்களையே இந்த விவகாரம் கதிகலக்கியிருக்கிறது. அவரை கீழே இறக்கிய பின் தான் மீடியாவில் இருப்பவர்கள் பாத்ரூம் கூட போவார்கள் என்று நினைக்கிறேன்.

அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன் மேல் பெட்டிங் குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டிருக்கும் சூழலில், ஸ்ரீனிவாசன் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று வட இந்திய ஆங்கில நியூஸ் டிவி சேனல்கள் (CNN-IBN, TimesNow, Headlines Today) அலறுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. IPL-இல் நடந்துள்ள இந்த மகா பெரிய அசிங்கத்திற்கு பொறுப்பேற்று அதன் தலைவர், காங்கிரஸ்காரர் ராஜிவ் சுக்லா பதவி விலக வேண்டும் என்றும் அவை அலற வேண்டியது தானே!! அது போலவே, ஸ்ரீசாந்த், சண்டிலா, சவான் என்று 3 கிரிக்கெட்டர்கள் முதலில் சிக்கியபோதும், ஸ்ரீசாந்த் வயிற்றெரிச்சலைத் தான் வட இந்திய ஆங்கில நியூஸ் சேனல்கள் அதிகம் கொட்டிக் கொண்டன.


துபாய்-தாவூத் பழக்கமுள்ள ஜாம்பவான் வகை பெட்டிங் தரகர்கள் உள்ள /பாலிவுட் ஒளிவீசும்/ ஏராளமாக பணம் புரளும் மும்பையைச் சேர்ந்த, ஒரு மிகப்பெரிய கார்ப்பரேட் கையில் இருக்கும் மும்பை அணியின் நிர்வாகம் மற்றும் கிரிக்கெட் வீரர் எவர் மீதும், பெட்டிங் சம்பந்தமாக ஒரு லேசான குற்றச்சாட்டு கூட வெளியில் வராதது இந்த விசாரணையின் மேல் பெருத்த சந்தேகத்தை வரவழைப்பதாக உள்ளது!

மேலும், மக்கள் பணத்தை சுருட்டி, உலகமகா ஊழல் செய்து வரும் அரசியல்வாதிகளில் வெகு சிலரே, நிலைமை கட்டுக்கடங்காமல் போனபிறகே, பதவி விலகும் அவலச்சூழல் இருக்கும் இந்த நாட்டில், ஊழலோடு ஒப்பிட்டால் உப்புச்சப்பு இல்லாத சூதாட்டத்திற்காக ஒருவரை பதவி விலகச் சொல்வது உச்சக்கட்ட கேவலமாக இருக்கிறது. இந்த விவகாரம் வெட்ட வெளிச்சம் ஆனதற்குக் காரணமே, இந்த சூதாட்டப் பணத்தில் ஒரு சிலருக்கு பங்கு சரியாக போய்ச் சேராதது தான் என்று தாராளமாக எண்ணலாம்.

முன்னர் 2ஜி ஊழல் விவகாரத்தில் ராஜா தான் அத்தனை ஊழல் பணத்தையும் சுருட்டிக் கொண்டது போலவும், திமுக மட்டும் தான் ஊழலை மூடி மறைக்க முயற்சித்தது போலவும், மற்ற வட இந்திய சூத்ரதாரிகள் அப்பாவித்தனமாக நடந்து மாட்டிக்கொண்டது போலவும், வட இந்திய நியூஸ் சேனல்கள் ஷோ காட்டியதை கண்டு மகா கடுப்பாக இருந்தது. பெட்டிங் விவகாரத்தில் 2-3 வட இந்திய பெருந்தலைகள் சம்பந்தப்பட்டிருந்தால், இந்த நியூஸ் சேனல்கள் இதை அடக்கி வாசித்திருக்கும்.

ஸ்ரீனிவாசன், ராஜா, ஸ்ரீசாந்த்.... எந்த தவறும் செய்யவில்லை என்று நாம் சொல்லவில்லை..ஆனால் தென் இந்தியர்கள் ஒரு விவகாரத்தில் சிக்கிக் கொண்டால், இந்த நியூஸ் சேனல்கள் எப்படி அநியாயமாக ஒருதலைபட்சமாக நடந்து கொள்கின்றன, அதை பயங்கரமாக ஊதிப் பெரிதாக்குகின்றன என்பதை கவனிக்க வேண்டும்.

டைம்ஸ் நவ் சேனல், விண்டு தாராசிங் (பாலிவுட் தரகர்) மற்றும் குரு மெய்யப்பன் செல்ஃபோனில் என்ன பேசிக்கொண்டார்கள் என்று தெரிந்து கொள்ள இந்திய மக்களுக்கு உரிமை இருக்கிறது என்று அறைகூவல் விடுவதை பார்த்தபோது, 2ஜி விவகாரத்தில் ராடியா, ரத்தன் டாட்டா, பர்கா தத் சம்பந்தப்பட்ட டேப்பில் இருக்கும் மேட்டர் குறித்து தெரிந்து கொள்ளவும் அதே மக்களுக்கு ஆர்வமும் உரிமையும் உள்ளதை புரிந்து கொள்ளாத, ஒருதலைபட்சமாக நடக்கும் அந்த சேனனில் லட்சணம் தெரிந்தது. விண்டு சில பாலிவுட் நடிகர்கள்/நடிகைகளுடனும் பேசினாராம் ஆனால் அதை எல்லாம் இவர்கள் அவ்வளவாக இன்னும் கண்டுகொள்ளவில்லை. இன்னொரு உதாரணம் இதற்கு முன் அபிஷேக் மனு சிங்வி செய்த காரியத்துக்கு இவரை தினமும் டிவியில் கூப்பிட்டு இதே மீடியா பேச வைக்கிறார்கள். ஏன் போலீஸுக்கு பயந்துக்கொண்டு ஊரை விட்டு ஓடிபோன லலித் மோடியை தினமும் டிவியில் கூப்பிட்டு கருத்து கேட்கிறார்கள்.

கிட்டத்தட்ட 3 கோடி மக்கள் சஹாரா குரூப்பில் முதலீடு செய்த 24000 கோடி ரூபாயை திருப்பித் தராதது குறித்து SEBI-ஆல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சுப்ரதா ராய், ஸ்ரீனிவாசன் பதவி விலகி, ஷரத் பவார் மீண்டும் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக வர வேண்டும் என்று கூறுவது இன்னொரு தமாஷ். ஈயத்தைப் பார்த்து இளிச்சதாம் பித்தளை - ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது! இன்னொரு விஷயம், குரு மெய்யப்பனை சம்மன் அனுப்பி வரவழைத்து மும்பை போலீஸ் கைது செய்தது போல, தவறு செய்ததாக கருதப்படும் பாலிவுட்/கார்ப்பரேட் மும்பை பெருந்தலை ஒருவரை, சென்னை போலீஸ் கைது செய்து சென்னையில் வைத்து விசாரண செய்வது என்பது அத்தனை எளிதான விஷயமாக தோன்றவில்லை. திரை மறைவு அரசியல் வழியாக அவரை தப்ப வைப்பதற்கு எல்லாவித முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கும். அது தான் மும்பை spirit. Some are more equal than others.

இறுதியாக, இந்திய கிரிக்கெட் உய்யவேண்டும் என்றால், BCCI-இல் இருக்கும் அத்தனை கார்ப்பரேட் மற்றும் அரசியல்வாதிகளும் பதவி விலகி, அதன் நிர்வாகம் கிரிக்கெட்டின் மேல் உண்மையான அக்கறை உள்ள, மக்களால் நேசிக்கப்படுகிற, முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடம் தரப்பட வேண்டும். அது நடக்கும் என்று தோன்றவில்லை. இதுவும் கடந்து போம் !

எனக்கு என்னவோ கோசாமி மீது இருக்கு கடுப்பில் குருவை மீடியா வாட்டி எடுக்கிறது என்று நினைக்கிறேன். பார்ப்பதற்கு இரண்டு பேரும் ஒரே ஜாடை :-)

Read More...

சூது கவ்வும் - சினிமா விமர்சனம் ( புதிய காப்பி )



அதிகாலை அலாரம் வைத்து அரக்கப்பறக்க எழுந்து குளித்து, உடைமாற்றி, அமர்ந்து சாவகாசமாக ஐபிஎல் பார்க்கும் ஒருவனிலிருந்து ஆரம்பிக்கிறது காமெடிக் கச்சேரி!

இதுவரை கிரிக்கெட் உலகம் நமக்கு காட்டிய விளையாட்டை சூதாட்டமாக ஜாலி கலாட்டவாகப் படைத்து மனதைக் கவ்வியிருக்கிறது - 'சூது கவ்வும்'!

சூதாட்டத்துக்கு ஐந்து விதிகளை வகுத்துக்கொண்டு 'மிக நேர்மையாக, இதயக் சுத்தியுடன்' பெட் வைக்கும் குரு, கிரிக்கெட் போர்டின் தலைவரின் மாப்ளை!. மாமனார் நடத்தும் போட்டியில் பெட் வைத்தால் என்ன ஆகும் என்பதே ...படம்!. கிரிக்கெட் விளையாட்டு போலவே பல ட்விஸ்ட், க்ளைமாக்ஸ் என்று அசத்துகிறது திரைக்கதை.

''நீங்க ஐபிஎல் பார்ப்பதில்லையா ?"

''எதுக்குப் பார்க்கணும், அது தான் முடிவு தெரியுமே?''

''சென்னைக்கு ஜட்டியோடு வந்தவன் எல்லாம் பேண்ட் போடுகிறான். ஜட்டி இல்லாம வந்தவன்தான் சூட் போடுகிறான்!''


''சார்... கடைசி பால் மட்டும் நோபால் போடாதீங்க சார்!"

''நான் கத்த மாட்டேன். தயவுசெஞ்சு ஸ்ரீசாந்தோட கர்ச்சீப்பை மட்டும் வாய்ல திணிக்காதீங்க.. நாறுது!''

''ஸ்பாட் ஃபிக்ஸிங் பண்றதுக்கு குருட்டுத் தனமான முட்டாள்தனமும், மேட் ஃபிக்ஸிங் பண்றதுக்கு முரட்டுத் தனமான புத்திசாலித்தனமும் வேணும்!''

"ஒவ்வொரு ஓவரிலும் 4 நோபால் போடறான்.. இதுல இவன் நோபால் போடாம இருக்க தான் நாம் பெட் பண்ணனும்''.


இப்படி சீனுக்கு சீன் சிரிப்பு மேளா நடத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் லலித் மோடி, தன்னுடைய படம் ரிலீஸ் ஆனவுடன் ஒளிந்தோடி பல வருஷங்களாக லண்டனில் சுற்றுலாவில் இருக்கிறார்.

ஆனால், அசட்டுக் காமெடிகளாக இல்லாமல் நினைத்து நினைத்துச் சிரிக்கும் அளவுக்கு ஒவ்வொரு பந்தும்அவ்வளவு இன்ட்ரஸ்டிங் ப்ளஸ் இன்டெலிஜென்ட். கிரிக்கெட் உலகில் இதற்குக் கலகல வரவேற்பு!

படத்தில் ஹீரோ என்று யாரைச் சொல்வது? அமெச்சூர் ஸ்பாட் ஃபிக்ஸிங் செய்யும் குருவையா ? அதிகாலை டிவியில் ஹைலட் போடும் போது ஸ்பாட் ஃபிக்ஸிங் செய்யும் விண்டூவையா? ஹர்பஜனுக்கு சிலை வைக்கும் ஸ்ரீசாந்தையா? நேர்மையான கிரிகெட் தலைவராக வரும் பவாரையா?

படத்தில் ஜம்பிங் ஜபாங் ஜம்பக் ஜம்பக் இன்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை எல்லோர் வாயிலும் முணு முணுக்கும் பாடல். கதாநாயகியாக வரும் அந்த பாலிவுட் நடிகை கற்பனையாக வந்தாலும் கொஞ்சிக் கொஞ்சியே கிளாமரும் ஹ்யூமருமாக வசீகரிக்கிறார். கடைசிவரை அவர் யார் என்ற தகவலை மும்பை போலீஸ் மறைத்துவிட்டது பலருக்கு ஏமாற்றம்.

படத்தின் குறைகள், நிறையவே! இவ்வளவு சொதப்பலாக ஒரு பெட்டிங் கும்பல் இருக்க முடியுமா? கிரிக்கெட் குழுவின் தலைவர் தன் மாப்பிளை ஒரு அமெச்சூர் பெட்டிங் கும்பலுடன் இருக்கிறார் என்று எப்படித் தெரியாமல் போனது? இவ்வளவு நாளாக இதை வெற்றிகரமாக இந்தியா முழுவதும் நடத்திய இந்த கும்பலை பின்தொடராமல் போலீஸ் ஏன் இவ்வளவு நாள் வேடிக்கை பார்த்தது? இதை எல்லாம் யோசித்தால் படத்தை ரசிக்க முடியாது. ஆனால், அது எதையும் யோசிக்கவிடாமல் அள்ளுகிறது மீடியா காமெடி!

குருநாத் போலீஸில் மாட்டிக்கொள்ளும் போது நான் இந்தக் கும்பலுக்குத் தலைவன் இல்லை என்று ஜகா வாங்குவதும், இன்ஸ்பெக்டர் அசால்டாக தன் ஐபோனில் கூகிள் Cache திறந்து காமிக்கும் போது "சும்மா காமெடி செய்தேன்!" என்று குரு சொல்லுவது நல்ல தமாஷ் + டிவிஸ்ட்.

மேட்ச் ஃபிக்ஸிங் ரூல்ஸ் என ஐந்து விதிகளை குரு எழுதி வைத்திருப்பார். அதில் முதலாவது, அதிகாரத்தில் இருப்பவர் பெட் வைக்க கூடாது என வரும். அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் நடத்தும் குரு தயங்குவார். உடனே விண்டூ குருவிடம் "சொதப்பினா கவலை பட வேண்டாம்"' என்ற கடைசி ரூல்ஸை நினைவுப்படுத்துது 'செம'.

வெளியுலகை மறக்கடித்து, ஆறாம் அறிவை முடக்கிவைத்து, இருபது ஓவர் மேட்சைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருக்க முடியுமென்றால், இப்படியான 'சூது’களுக்கு நிச்சயம் விரிக்கலாம் சிவப்புக் கம்பளம்! வாழ்க ஐபிஎல்!

( ஒரிஜனல் சூது கவ்வும் விமர்சனம் - நன்றி விகடன் )

Read More...

Friday, May 24, 2013

ஐபிஎல் பாட்டு


விண்டூ, குருநாத், சீனிவாசன் என்று எல்லோரும் இந்த பாட்டுக்கு ஆடலாம்.

Read More...

Tuesday, May 21, 2013

கட் & பேஸ்ட்


இட்லிவடை கூட கட் & பேஸ்ட் தான்.. இப்பவே சொல்லிபுட்டேன். கடைசி தகவல் இந்த நீயூஸே ஏதோ தெலுங்கு டிவியில் வந்தாம் அதை விகடன் காப்பி அடித்துவிட்டது என்று பேசிக்கொள்கிறார்கள் !

Read More...

Sunday, May 19, 2013

அப்படியா ? சீமானுக்கு வாழ்த்துகள்!

முன்பு திராவிடஸ்தான் உருவாக்கித் தர வேண்டுமென்று ஜின்னாவை நாடினார் ஈரோடு வெங்கிடசாமி ராமசாமி நாயக்கர்; இன்று நாயக்கரின் பேரன் சீமான் ஈழம் உருவாக்குவதற்காக ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக்கை நாடியுள்ளார். ஜின்னா திராவிடஸ்தானை உருவாக்கித் தந்த அதே பாதையில் யாசின் மாலிக்கும் ஈழத்தைப் பெற்றுக் கொடுப்பார் என நம்புவோமாக.

அடுத்து சீமான் ஹஃபீஸ் ஸயீதை அழைத்து வருவார் எனவும் நம்புவோமாக!

Read More...

Thursday, May 16, 2013

IPL Match fixing - எ.அ.பாலா

இந்த வருடம் IPL பற்றி எதுவும் எழுதக்கூடாது என்ற எனது எண்ணத்தை இன்று மதியத்திலிருந்து ஆங்கிலச் செய்திச்சேனல்களில் அல்லோலகல்லோலப்படும் மேட்ச் ஃபிக்ஸிங் குறித்த செய்திகள் மாற்றி விட்டது. ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கித் சவான் ஆகிய மூவரையும் தில்லி போலீஸ் கைது செய்துள்ளது. மூவரில் ஸ்ரீசாந்த் தான் சூத்ரதாரி என்று தெரிகிறது. அவர் மூலம் தான் துபாய் சூதாட்டக்கார கும்பல் மற்ற இருவரையும் வளைத்துப் போட்டுள்ளது. கேரளா என்பதால், துபாய் கனெக்‌ஷன் ஆச்சரியம் அளிக்கவில்லை.

இதில் தாவூத் இப்ராஹிம் ஆட்களின் பங்கிருப்பது தெரிய வந்துள்ளது. ராஜஸ்தான் அணியின் மற்ற ஆட்டக்காரர்களுக்கோ, அணியை நிர்வகிப்பவர்களுக்கோ இதில் எந்த தொடர்பும் இல்லை என்று கூறப்படுகிறது. டிராவிட் போன்ற ஒரு நேர்மையானவர் தலைமை வகிக்கும் அணியில் 3 பேர் இப்படி நடந்து கொண்டுள்ளது வருத்தமான விஷயம். அது போல, மும்பை அணியில் யாரும் இது வரை மேட்ச் ஃபிக்ஸிங்கில் மாட்டிக் கொள்ளாதது சந்தேகத்தைத் தருகிறது.

இந்த IPL-இல் பல ஆட்டங்களில் பேட்டிங்கில் சொதப்பி வந்த மும்பையின் போலார்ட், ஒரு ஆட்டத்தில் ஹைதரபாத் அணியின் ஃபெரெரா மற்றும் அமித் மிஷ்ரா பந்து வீச்சை துவம்சம் செய்தபோது, மேட்ச் ஃபிக்ஸிங் மாதிரி எனக்குத் தோன்றியதை டிவிட்டரில் நேற்று பதிந்திருந்தேன். அவர்கள் இருவரும் போலார்டுக்கு அழகாக போட்டுக் கொடுத்த மாதிரி தான் இருந்தது.

தில்லி போலீஸ் 2-3 வாரங்களாகவே, ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கித் சவான் ஆகிய மூவரையும் கண்காணித்து வந்துள்ளனர். சில ஆட்டங்களில், இத்தனையாவது ஓவரில் இத்தனை ரன்களுக்கு மேல் தாரை வார்க்க மேற்கூறிய மூவரும், பணம் பெற்றுக் கொண்டுள்ளனர் என்று தெரிகிறது. ஊழலில் உலகப் பிரசித்தி பெற்ற இந்தியாவில் கடந்த சில வருடங்களாக நடந்தேறியுள்ள ஊழல்கள், பகற்கொள்ளைகளை வைத்துப் பார்க்கும்போது இது ஒரு பெரிய விஷயமே இல்லை.

அதோடு, BCCI-இல் நடந்து வரும் உள் சண்டைகள், அதன் அரசியல்வாதி நிர்வாகிகளுக்கிடையே power struggle, இந்திய கிரிக்கெட்டை தங்கள் கையில் வைத்திருப்பதால் அவர்களுக்கு கிடைக்கும் ஆனந்தமான உல்லாச வாழ்க்கை, இதுவரை வெளிவந்த / வெளியே வராத ஊழல்கள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, அரசியல் / கார்ப்பரேட் தலையீடு இல்லாத, கிரிக்கெட் தெரிந்த நேர்மையான ஆட்கள் (கவாஸ்கர், மஞ்ச்ரேக்கர், கபில், சித்து, பேடி போன்றவர்கள்) அங்கம் வகிக்கும் ஒரு நிர்வாகம், BCCI-க்கு மிக அவசியம். மேட்ச் ஃபிக்ஸிங் இரண்டாம் பட்சம் தான்,

தங்கள் சமீபகால மோசமான செயல்களால் கெட்ட பெயரை வேண்டிய அளவு சம்பாதித்து வைத்திருக்கும் தில்லி போலீஸ், மேட்ச் ஃபிக்ஸிங்கில் செலுத்தும் அதிக கவனத்தையும், உளவுத் திறமையையும், தில்லியை பெண்களுக்கு பாதுகாப்பாக வைத்திருப்பதிலும் செலுத்தினால், அவர்களுக்கு புண்ணியமாகப் போகும்.
:-)

Read More...

Tuesday, May 14, 2013

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 14-5-2013

100 கோடியில் அமெரிக்காவில் சுதந்திரதேவி இருப்பது போன்ற ஒரு சிலையை தமிழ்த் தாய்க்கு அமைக்கப் போகிறார் முதல்வர். இதனால் பல நல்லது நடக்கப் போகிறது. அமெரிக்காவில் இந்த சிலை இருப்பதால் தான் அங்கே மின் வெட்டு கிடையாது. அதனால் இந்த சிலை வந்த பிறகு குறிப்பாக மதுரையில் மின்வெட்டு என்ன எந்த வெட்டும் இருக்காது என்று நம்புகிறோம்.


அடுத்த நம்ப முடியாத நியூஸ் ஒன்று போன வாரம் ஊழல் செய்திகளுக்கு நடுவே வந்தது. அது 3D பிரிண்டிங் பற்றியது. ஆராய்ச்சியாளர்கள் 3D பிரிண்டிங் முறையில் துப்பாக்கி தயாரித்து அதை சோதித்தும் உள்ளார்கள்.



இது என்னடா சோதனை என்று நாம் நினைக்க இதைவிட பெரிய சோதனையை மன்மோகன்சிங் சந்தித்துள்ளார். அடுத்த முறை அவர் பிரதமராக இருக்க போகிறாரா என்று தெரியாத நிலையில் மோடி அடித்து விளையாட ஆரம்பித்துள்ளார். காங்கிரஸ் கட்சி இன்று India Shining போல ஒரு வீடியோ தொகுப்பைப் போட ஆரம்பித்துள்ளார்கள். பார்க்கலாம்.
( இடை குறிப்பு: இதற்கு செலவு ரூ180 கோடி )

படம் பார்த்தோமா, அதை பற்றி விமர்சனம் எழுதினோமா என்று இல்லாமல் நம் மக்கள் திடீர் திடீர் என்று இளையராஜா, ரஹ்மான் பற்றி விவாதிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். "இளையராஜா திமிர்பிடித்தவர் என என்னிடம் சொல்லும் எல்லாருக்கும் ஒரே பதில்: 'கரெக்டுங்க. இனிமே நீங்க அவர் மூஞ்சிலயே முழிக்காதீங்க…" என்று போன வாரம் ஒரு ஸ்டேடஸ் பார்த்தேன். இளையராஜா திமிர் பிடித்தவர் கிடையாது என்று அவர் குமுதத்தில் வரும் கேள்வி பதிலைப் படிப்பவர்களுக்கு தெரியும். இதற்கு எதற்கு வீண் விவாதம் ?

விவாதம் என்று சொன்னவுடன் நம் நினைவுக்கு வருவது கவிஞர் மனுஷ். இவர் வீட்டில் பூனைகுட்டி, டிவி, இண்டர்நெட், ஃபோன் என்று எல்லாம் இருக்கிறது. ஆனால் கரண்ட் மட்டும் இருப்பதில்லை. அதனால் அடிக்கடி ஏஸி ரூம் இருக்கும் டிவி ஸ்டுடியோவிற்கு விவாதத்திற்கு போய்விடுகிறார். அவர் போன வாரம் போட்ட ஸ்டேடஸ் ".இது என் நம்பர். நாளைக்கு கூப்பிடுங்க..இந்தக் கண்ணீர் கதையை சொல்கிறேன்..வயர் மேன்லாம் தெய்வம் சார்..டெய்லி 200 ரூபாய் கொடுக்கிறேன்". அப்படி என்றால் அவர் லஞ்சம் கொடுப்பவர் நல்லவர், அதை வாங்குபவர் தெய்வம்!. அதனால் தான் காங்கிரஸில் நிறைய தெய்வங்கள் இருக்கிறது.
( இடை குறிப்பு: அங்கெல்லாம் கடமைய மீறத்தான் லஞ்சம் அனா இங்க கடமை செய்யவே லஞ்சம்", இந்தியன் படத்தில் ஒரு வசனம். இதற்கு அர்த்தம் என்ன பாஸ் ? )

பசு நமக்கு தெய்வம். கர்நாடகா முதலவ்ர் வந்த முதல் நால் பசு வதை சட்டத்தை எடுத்துவிட்டார். பசு தோல் போர்த்திய புலி என்று நாம் பார்த்திருக்கிறோம். அதே போல வீட்டுல எலி வெளியில புலி என்பதையும் கேள்விப்படிருக்கிறோம். பாகிஸ்தான் நாடாளுமன்ற் தேர்தலில் நவாஸ் ஷெரீப் கட்சி வெற்றி பெற்றது. அவருடைய கட்சிச் சின்னம் புலி. தன்னுடைய பிரச்சாரத்துக்கு நிஜமான வெள்ளை புலி ஒன்றைப் பிரச்சாரத்துக்கு வைத்திருந்தார். பிரச்சாரத்தின் போது அது பாவம் இறந்து போனது. அதற்காக வருத்தப்படுவதா அல்லது பாகிஸ்தானைவிட நல்ல இடத்துக்கு போனது என்று சந்தோஷப்படுவதா?

இப்ப மன்மோகன்சிங் பாகிஸ்தான் போவாரா என்று தெரியாது. ஆனால் அவர் டில்லியில் இருப்பதை காட்டிலும் அங்கே போனால் நிம்மதியாக இருப்பார் என்று நினைக்கிறேன்.

பாராளுமன்றத்தில் பிஎஸ்பி எம்பி ஒருவர் வந்தே மாதரம் பாடும் போது எழுந்து வெளியே போனது ஒரு சின்ன சர்ச்சையை உண்டு செய்தது. சிரித்துக்கொண்டே 'பைடிஹே' என்று சொல்லும் மீரா குமார் கூட உணர்ச்சிவசப்பட்டு இப்படி எல்லாம் செய்யக் கூடாது என்று கண்டித்தார். அவர் கண்டிக்கும் முன் ஒரு கேள்வி கேட்டிருக்கலாம். அந்த எம்.பி பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதியா அல்லது முஸ்லீம் பிரதிநிதியா ? அவர் முஸ்லீம் பிரதிநிதி என்றால் பிரச்சனை. அடுத்த முறை மக்கள் தேர்ந்தெடுக்க கூடாது. Program எழுதும் போது Bug வருவதில்லையா? அதே போல இந்த எம்.பி பாராளுமன்றத்தில் ஒரு Bug.. சரி செய்ய வேண்டியது மக்கள் தான்.

Bug பற்றி ஒரு செய்தி. பூச்சிகளை சாப்பிட்டால் நல்லது என்கிறது செய்தி ஒன்று. இனி சிக்கன், மட்டன் என்று சாப்பிடாமல், பூச்சிகளை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று சொல்லுகிறார்கள். சாப்பிட்டவர்கள் தங்கள் அனுபவங்களைச் சொல்லலாம்.

பிச்சை எடுப்பவர்களுக்கு ஒரு ரூபாய் போட்ட காலம் எல்லாம் போயே போச்சு. ஆனால் ஒரு ரூபாய்க்கு இப்ப நிறைய கிடைக்கிறது. ஒரு ரூபாய்க்கு ஏர்டெல் வீடியோ பார்க்கலாம் என்கிறது விளம்பரம். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி ஏன் ஒரு இட்லிகூட கிடைக்கிறது. ஆனால் அதே ஒரு ரூபாயைப் பிச்சைக்காரர்கள் கூட வாங்க மாட்டார்கள் என்பது தான் முரண்!

அடுத்த முரண் - போன வார உச்ச நீதிமன்றம் சிபிஐ கூடுக்குள் அடைக்கப்பட்ட கிளி என்று கண்டனம் செய்தது. அதனால் இந்தவாரம் கிளி பற்றி ஒரு சின்ன ஜோக்.

பாலியல் தொழில் செய்யும் பெண், பாதிரியாரை பார்க்க செல்கிறாள்!

அய்யா, நான் இரண்டு கிளிகள் வளர்க்கிறேன்! அவை எப்போதும் ஒரே வார்த்தையை தான் சொல்கின்றன என்றாள்!

என்ன என்றார் பாதிரியார்!

"நான் ஒரு விபச்சாரி, உனக்கு சுகம் தரட்டுமா?" என்பதே அது என்கிறாள்!

என்னிடம் இரு கிளிகள் இருக்கின்றன, அவைகள் எப்போதும் ஜெபித்து கொண்டே இருக்கும், அவைகளிடயே விட்டால் அவைகள் உன் கிளிகளை திருத்திவிடும் என்றார்! பாதிரியார்.

கிளிகள் பாதிரியாரின் கூண்டுக்குள் விடப்பட்டன! விபச்சாரியின் கிளிகள் வழக்கம் போல் "நாங்கள் விபச்சாரிகள், உங்களுக்கு சுகம் தரட்டுமா?" என்றது!

உடனே பாதரியாரின் கிளி ஒன்று சொன்னது "சொன்னேன் பார்த்தியா நமது ஜெபத்துக்கு கடவுள் செவி மடுத்துவிட்டார் என்றது!"
( இடை குறிப்பு: நன்றி வால் பையன் )

நாமக்கல் மாணவர்கள் கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே சொல்லி மார்க் வாங்கிவிட்டாகள் என்று இணைய கிழட்டு இளைஞர்கள் டிவிட்டர் ஃபேஸ் புக்கில் அதைப் பற்றி விவாதித்தார்கள். அவர்கள் செய்தது குறுக்கு வழி. அப்படி எல்லாம் படிக்கக் கூடாது என்று. உலகைச் சுற்றி வந்தவர்களுக்கு மாம்பழம் என்று சொன்ன போது பிள்ளையார் அம்மா அப்பாவைச் சுற்றி வந்து மாம்பழத்தைப் பெற்றார். அது குறுக்கு வழி இல்லையா?

மாம்பழம் என்றதும் நம் நினைவுக்கு வருவது அய்யா தான். அவரை பற்றி ஒரு சின்ன டிவிட்டர் செய்தி.


சிறையில் காந்திய சிந்தனைகள் படிக்கிறார் ராமதாஸ்.
இத சின்ன வயசில் படிச்சிருந்தா இப்ப படிக்க வேண்டி வந்திருக்காது!

Read More...

உதவி வேண்டி...

இட்லிவடை நண்பர்களுக்கு வணக்கம்.

இட்லிவடை நண்பர்களுக்கு, சக்திவேல் என்கிற 4 மாதக்குழந்தையின் அறுவைசிகிச்சைக்காக Save a Life volunteer team அமைப்பை சார்ந்தவர்கள் உதவிகோரியுள்ளார்கள். (விவரம் இணைப்பில்) கடந்த முறை இட்லிவடை நண்பர்கள் மூலம் கணிசமான தொகை ஒரு குழந்தையின் மருத்துவ செலவிற்காக இவர்கள் அளித்துள்ளார்கள் என்பதை அறிந்து இந்தக்குழந்தைக்காக உதவிகோரியுள்ளார்கள். உதவ முன்வருபவர்கள் http://savealifetrust.org/donta.html மேற்கண்ட இணைப்பில் உள்ள விவரங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
With Love
R.Griesh



Read More...

Sunday, May 12, 2013

சன்டேனா இரண்டு (12-5-13) செய்திவிமர்சனம்

ராமதாஸ் கைதை தொடர்ந்து, பாமகவினர் நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டி நடுரோட்டில் போட்டு இருக்கிறார்கள். பல பகுதிகளில் மரங்களுக்கு தீ வைத்து கொளுத்தி இருக்கின்றனர்.

இந்த வார சன்டேனா இரண்டு, “காடு/மரவெட்டிகள் மற்றும் ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு” சமர்ப்பணம்.



செய்தி # 1



சில வருடங்களுக்கு முன்னால் ஊட்டி சென்றபோது அது எனக்கு ஒரு கசப்பான,மனதில் ஒட்டாத அனுபவமாகவே அமைந்தது.பார்க்கும் இடமெல்லாம் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள்...கழிவுகள்..கூட்ட நெரிசல்..அதன் காரணனமான சீர்கேடுகள் இப்படி பல.



"ஊட்டி போறது வேஸ்ட். கொடைக்கானல் தான் இப்போ பெஸ்ட்" என்று தனது ஹனிமூன் பயணதிட்டம் பற்றி பேசினான் என் நண்பன் ஒருவன். ஊட்டியின் நிலை விரைவில் கொடைக்கானலுக்கும் வரும் நிலை வெகு தூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது.

கடல் மட்டத்திலிருந்து 2,636 மீ உயரத்தில் இருக்கும் மலை, வரையாடுகள், ஷோலா புல்வெளிகள் உள்ளிட்ட அரிய உயிரினங்களைக் கொண்ட, பூகோளரீதியாகவே நிலச் சரிவுக்கான அதிக அச்சுறுத்தலைக் கொண்ட மலை நீலகிரி.

"யுனெஸ்கோ' அறிவித்த இந்தியாவின் முதல் பல்லுயிர்க்கோவை (பயோஸ்பியர் ரிசர்வ்) நீலகிரி, இன்றைக்கு உலக வெப்பமயமாதலின் அபாயச் சங்காக மாறியிருக்கிறது. குறைந்த நாளில் அதிக மழை கொட்டித் தீர்ப்பதும், பல நாட்கள் வெயில் வாட்டி எடுப்பதும் இதன் வெளிப்பாடுதான். நீலகிரியில் மக்கள் குடியேற்றம் அதிகமாவதற்கு முன்பே, பெருமழை, வெள்ளம், மண்சரிவு, நிலச்சரிவு என பல விதமான இயற்கைப்பேரழிவுகள் நடந்துள்ளன.

இப்போது இந்த மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை, ஒன்பது லட்சம். கடந்த 1981ல் நான்கு லட்சம் மட்டுமே. 1967ல் 28 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட ஊட்டி நகரில், இப்போது ஒன்றே கால் லட்சம் பேர் வசிக்கின்றனர். ஆண்டுக்கு 20 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

1.சுற்றுலா மையமாக மாறிய பின், மக்களுக்காகவும், சுற்றுலாப் பயணிகளுக்காகவும் சோலைக் காடுகள் வெகுவாக அழிக்கப்பட்டு, தேயிலைத் தோட்டங்களும், சுற்றுலா மையங்களும், கான்கிரீட் காடுகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

2. பணப்பயிர்களில் காசு பார்த்தவர்கள், மலையெல்லாம் தேயிலையை விதைத்து, பார்க்குமிடத்தையெல்லாம் "பசுமைப் பாலைவனம்' ஆக மாற்றத்துவங்கினர். நீலகிரியில் இப்போதுள்ள மொத்த விவசாயப் பரப்பில், 80 சதவீதத்துக்கு தேயிலை விவசாயமே நடக்கிறது.

3. மாவட்டத்திலுள்ள 10 தோட்ட நிறுவனங்களிடம் மட்டுமே, பல ஆயிரம் ஏக்கர் பரப்பு தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இவை அனைத்துமே வளம் கொழித்த காடுகளாக இருந்தவைதான். காடழிப்பைக் கண்டு கொள்ளாத அரசு, அங்கெல்லாம் ரோடுகள் போடவும் நிதியை வாரிக் கொடுத்தது.கடந்த நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகளில் அழிக்கப்பட்ட வனப் பரப்பை விட, கடந்த 60 ஆண்டுகளில் அழிக்கப்பட்ட வனப்பரப்பே அதிகம்.

4. நீலகிரியில் காடழிப்பு, மரக்கடத்தல், அனுமதியற்ற கல்குவாரி, ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு பட்டா, மாற்று வழி, புதிய ரோடுகள், புதிய ரயில்வே வழித்தடம் என வளர்ச்சிப் பணிகள்,மாவட்டம் முழுவதும் அனுமதியின்றியும், விதிகளை மீறியும் உருவான கட்டடங்கள்.

5. இருக்கிற ரோடுகளை பாதுகாப்பானதாக மாற்றவும், இதை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்காமல்,ரோடுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது.

தொழிற்சாலைகளுக்கு எரிபொருளாகவும், கட்டுமான பணிகளுக்கும் அதிகளவு மரங்கள் பயன்படுவதால் ஒரு டன் பத்தாயிரம் வரை விற்பனையாகிறது. இதனால், சமீப காலங்களில் பசுமை மரங்கள் வெட்டி சாய்க்கப்படுவது அதிகரித்து வருகிறது.

அதே போல், நெடுஞ்சாலை மற்றும் ஊரக இணைப்பு சாலைகளின் ஓரத்திலும், அரசு புறம்போக்கு நிலங்கள், கோவில் நிலங்கள், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்கள், வாய்க்கால்கரைகள் என பல இடங்களில் உள்ள மரங்கள், வருவாய்த்துறை அனுமதி இல்லாமல் வெட்டப்படுகிறது.

அரசியல்வாதிகள் முதல் அன்றாடம்காய்ச்சிகள் வரை இயற்கை வளத்தினை, அதன் பாதுகாப்பு பற்றிய அடிப்படை அறிவு மருந்துக்கும் இல்லை என்பதையே இவையெல்லாம் காட்டுகின்றன.

நமது கல்வி முறைகளில், பாட திட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். பசுமை கல்வி என்னும் ஒரு திட்டத்தை அரசு உருவாக்கி, மழலை பள்ளிகள் முதல் அதை கட்டாய படமாக கொண்டு வரவேண்டும். இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குழந்தைகள் முதல் நாம் தொடங்குவோம்.

மாநில வன உயிரின வாரிய உறுப்பினரும், நீலகிரி கானுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சங்க நிர்வாகியுமான ஏ.சி.சவுந்திரராஜன் தினமலருக்கு அளித்த பேட்டியில், ""மலை மாவட்டம் என்பதால், இதற்கென தனித்தன்மை உண்டு. இங்குள்ள வனமும், சுற்றுச்சூழலும் இங்குள்ள மக்களின் வாழ்வோடு தொடர்புடையவை. கடந்த 1993ல் இயற்கைப் பேரிடர் ஏற்பட்ட பின்னும், தேவையான நடவடிக்கை எடுக்காததன் விளைவாக இப்போது பல உயிர்கள் பலியாகியுள்ளன.

பல வித நிர்ப்பந்தங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் வளைந்து கொடுத்து இங்கு திட்டங்கள் செயல்படுத்தப்படுமேயானால், இன்னும் 20 ஆண்டுகளில் இப்படியொரு மாவட்டம் இருப்பதே கேள்விக்குறியாகி விடும்,'' என்றார்.

மரங்களை வெட்டும் பாமகவினரால் ஏற்கனவே தானே புயலால் சிதைக்கப்பட்ட கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களும் காணாமல்போகும் என்று தெரிகிறது.

செய்தி # 2



நாட்டின் அரிசி உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் உத்தரப்பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நெல் பயிரிடுவது கணிசமான அளவுக்குக் குறைந்திருக்கிறது.

தமிழகத்தின் மொத்த உணவுதானிய உற்பத்தியில் 85 சதவீதத்தை அரிசிதான் பெற்றுள்ளது. மாநிலத்தில் சுமார் 19 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது. ஆனால், இங்கும் விவசாய நிலங்கள் மெல்ல மெல்ல சுருங்கி வருகிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாகக் கருதப்பட்ட தஞ்சைப் பகுதி தற்போது பெரும் பின்னடைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஆம், காவிரிப் படுகைப் பகுதிகளில் தனியார் அனல்மின் நிலையங்கள் அமைக்கப்படுவதற்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் விவசாயிகளிடமிருந்து விலைக்கு வாங்கப்படுகின்றன. இதனால், வாங்கப்படும் விவசாய நிலங்கள் மட்டுமன்றி அதன் அருகிலுள்ள விளைநிலங்கள் மற்றும் மக்கள் வாழும் பகுதிகளில் கடும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது.

கிராமங்களில் ஒரு சில ஏக்கர் விளைநிலத்தை மட்டும் வைத்திருப்பவர்கள்கூட கல்லூரி, மருத்துவமனை, தொழிற்சாலை மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் தங்கள் நிலத்தை விற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதைத் தடுப்பதற்கு கேரளத்தில் உள்ளதுபோல் விளைநிலத்தை குடியிருப்புப் பகுதி உள்ளிட்ட வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்த கடும் விதிமுறைகளை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும்.

நாடு முழுவதும் பெரும்பாலான புறநகர்ப் பகுதிகளில் கட்டுமானத் துறை மிக வேகமாக வளர்ச்சி பெற்று வருகிற நிலையில், தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தற்போது ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலத்தை செங்கல் சூளைகளாக மாற்றத் தொடங்கியுள்ளனர்.

செங்கல் சூளைத் தொழில் லாபகரமாக உள்ளது என்றாலும், இது பூமி வெப்பமயமாவதை மேலும் அதிகரிக்கச் செய்யும் அபாயமும் இருக்கிறது. சுமார் ஒரு லட்சம் செங்கற்களைத் தயாரிக்க 30 முதல் 40 டன் மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக ஆயிரக்கணக்கான மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுகின்ற நிலையில் காடுகள் அழிக்கப்படுவதுடன் பூமி வெப்பமும் அதிகரிக்கிறது.

குடியிருப்புப் பகுதிகள் பெருகிய நிலையில் ஏரி நீர்ப்பாசனம், கால்வாய் நீர்ப்பாசனம் ஆகிய பாரம்பரிய நீர்ப்பாசன முறைகள் குறைந்து கிணற்றுநீர்ப் பாசனம் அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால்,​​ தற்போது கிணற்றுநீர்ப் பாசனமும் வெகுவாகக் குறைந்துள்ளது. 1974-ல் தமிழகத்தில் சுமார் 7 லட்சம் பம்ப்செட்டுகள் இருந்தன. ஆனால், தற்போது சுமார் 20 லட்சம் பம்ப்செட்டுகள் உள்ளன.

மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் மணல் கொள்ளை நடைபெற்று வருவது ஊரறிந்த ரகசியம். இதனால் ஆற்றுப் படுகைகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அருகிலுள்ள விவசாயப் பாசனக் கிணறுகள் வறண்டு வருகின்றன. இதனால், தண்ணீர் இல்லாத நிலையில் - வானமும் பொய்த்துவிடுகின்ற சூழலில் - விவசாயிகள் மாற்றுத் தொழிலுக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். இதனால் விளைநிலங்கள் 'விலை'நிலங்களாக வேறு பணிகளுக்கு மாற்றம் பெறுகின்றன.

ரியல் எஸ்டேட் துறை தற்போதைய அளவுக்கு அசுர வளர்ச்சி பெறாத காலத்திலேயே இத்தகைய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றால், விளைநிலங்கள் வீட்டுமனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களாகவும் உருமாறி வரும் இன்றைய காலத்தில் விவசாயத்தின் பரிதாப நிலை என்னவாக இருக்கும் என்பதைக் கணித்துக்கொள்ளுங்கள்.

கிராமப்புற வங்கிகள், விவசாய கூட்டுறவு வங்கிகள் ஆகியவை விவசாயிகளுக்கு அளிக்கும் மொத்தக் கடன்களைவிட, வர்த்தக வங்கிகள் தொழிற்சாலைகளுக்கு அளிக்கும் கடன்களின் அளவு நம் நாட்டில் எப்போதுமே பல மடங்கு அதிகமாக உள்ளது.

இந்நிலை மாறி விவசாயத்துக்குத் தேசிய வங்கிகளும் தனியார் வங்கிகளும் பெருமளவில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

உரங்களுக்காக விவசாயிகள் பெரும் தொகையைச் செலவழிக்க வேண்டியிருப்பதால் இயற்கை மற்றும் பாரம்பரிய விவசாய முறை குறித்த விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்த அரசும் சமூக ஆர்வலர்களும் முன்வர வேண்டும்.

உலகின் மிக பெரிய விவசாய நாடான இந்தியாவில் இன்று அரிசி இறக்குமதி செய்யும் அவலநிலை வந்து விட்டது. நம் விவசாய நிலங்களை பீடிதது இருக்கும் ரியல் எஸ்டேட் என்னும் தீராத, கொடிய வியாதிக்கு முடிவு என்ன? எப்போது?

(புள்ளிவிவரங்கள் : தினமணி, நீலகிரி கானுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சங்கம் மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை).

(நன்றி, இனி, அடுத்தவாரம்)

-இன்பா

Read More...

Friday, May 10, 2013

ஊழலை தடுக்க ஒருவர் வந்துவிட்டார்

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை, தனி மனித உரிமைக்கு எதிரானவை என்று நீதிமன்றத்தில் பிரதமர் அலுவலகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது - பழைய செய்தி

புது செய்தி கீழே
மத்திய அமைச்சர்கள் அஸ்வினி குமார் மற்றும் பன்சால் விவகாரங்களில் பிரதமர் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என சோனியா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Why timesnow, cnn ibn and ndtv do not touch this subject ?

Read More...

நல்ல ஆடு

நான் நல்ல ஆடு. நம்புங்க

Read More...

Wednesday, May 08, 2013

கர்நாடகா - பிஜேபி தோல்வி - காங்கிரஸ் வெற்றி - ஏன் ?

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி என்ற செய்தி வந்துவிட்டது. இது எதிர்பார்க்கபட்டது தான் என்றாலும் இதற்கு முழு காரணம் எடியூரப்பா தான்.


கடந்த வருடங்களில் பிஜேபியில் நடந்த குத்து சண்டை இன்று அதை மூன்றாவது இடத்தில் நிறுத்திவிட்டது. இதில் எனக்கு சந்தோஷமே!

கர்நாடக மக்கள் பிஜேபிக்கு கொடுத்த நல்ல வாய்ப்பை கெடுத்துக்கொண்டார்கள்.

எடியூரப்பா ஊழல் வழக்கில் சிக்கிய பிறகு பிஜேபி தலைமை வழ வழ கொழ கொழ என்று இருந்தது தான் இதற்கு முக்கிய காரணம். சதானந்த கவுடா முதல்வர் பதவியில் உட்கார்ந்த பிறகு அதை விட்டு எழுந்துகொள்ள மாட்டேன் என்று வீம்பு செய்ய பிறகு நடந்தது எல்லோருக்கும் தெரிந்தது. தலமை உடனே ஒரு முடிவு எடுத்திருந்தால் இந்த நிலமை வந்திருக்காது. சமீபத்தில் பிஜேபி தலமைக்கு நடந்த ஒரே நல்லது நிதின் கட்கரி வெளியே சென்றது தான். பிஜேபிக்கு கடவுள் அருள் இருக்கிறது என்று நம்புகிறேன்.

எடியூரப்பா சோனியாவை இன்னொரு முறை புகழ்ந்து பேசி காங்கிரஸ் பக்கம் செல்வாரா அல்லது உமா பாரதி பேச்சை கேட்டு பிஜேபி பக்கம் வருவாரா என்று தெரியவில்லை. யாருக்கு கெட்ட காலம் என்று போக போக தான் தெரியும்.

மோதி வந்து பிரச்சாரம் செய்த பிறகும் இந்த நிலமையா ? என்று மீடியா ஆரம்பித்திருக்கிறது. கர்நாடகாவில் நடந்தது சட்ட மன்ற தேர்ந்தல், பாராளுமன்ற தேர்தல் வரும் போது பார்க்க வேண்டும்.

மோதி வந்தால் தான் இந்தியா உருப்படும் என்று தற்போது எல்லா இந்தியர்களும் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த நம்பிக்கை வீண் போகாது.

Read More...

கர்நாடக ?


யார் என்ன சொன்னார்கள் ?

There’s no scope for a fractured mandate. The Congress will emerge as single-largest party and will cross the figures cited in the exit polls. My party is poised to get 115-120 seats.
G PARAMESHWARA - KPCC PRESIDENT


The KJP will get 50 seats and form a government with Congress. I will be the next chief minister. The Congress high command is looking at the 2014 Lok Sabha polls and wants 20 seats from Karnataka. I can win those for the Congress.
B S YEDDYURAPPA - KJP PRESIDENT


I know the pulse of the people. I’ve travelled the entire state. We will get enough seats to form a government on our own.
H D KUMARASWAMY - JD(S) STATE PRESIDENT


Pre-poll surveys and exit polls will be proved wrong. We will get a good number of seats. The results on Wednesday will prove this. PRAHLAD JOSHI - BJP STATE PRESIDENT

சோ பதில் துக்ளக்

கே : கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள சூழலில், பெங்களூரில் - அதுவும் பா.ஜ.க. அலுவலகத்திற்கு அருகில் – குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதே! இதனால் அம்மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்தானே?

ப : எடியூரப்பா வைத்த குண்டு, இதை விடப் பெரிய வெடிகுண்டு. அதுவே அனுதாபத்தை ஏற்படுத்தாதபோது, இந்த குண்டா அனுதாப ஓட்டைத் தேடித் தந்து விடும்?

பிஜேபி வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் !

Read More...

Tuesday, May 07, 2013

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை -12

அந்த ப்ரீ ஸ்கூலை (preschool) சென்றடைகையில் மாலை மணி ஆறரை ஆகி விட்டிருந்தது. மனைவியின் தோளில் இருந்த என் குழந்தை அந்த இடத்தை வித்தியாசமாகப் பார்த்தான். வரவேற்பரையைத் தாண்டி உள்ளே சென்றதும் சுவரெங்கும் மாட்டப்பட்டிருந்த / ஒட்டப் பட்டிருந்த குழந்தைகள் வரைந்த ஓவியங்கள், அவர்கள் செய்த வண்ண வண்ண போர்டுகள்,பலூன்கள். அடுத்தடுத்த அறைகளில் அடுக்கி வைக்கப் பட்டிருந்த வித விதமான பொம்மைகள், ப்ளாக்குகள், புதிர் அடுக்குகள் எல்லாமே என் குழந்தையின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தன. உடன் வந்திருந்த குடும்ப நண்பரின் குழந்தை, கீழே இறங்கி, பொம்மைகள் பக்கம் சென்றது. என் குழந்தையை அங்குள்ள பெண்மணி ஒருவர் வாங்கிக் கொண்டு அவனுக்கு ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டி, விளையாட ஊக்குவித்தார்.அந்த சென்டரை ஃப்ரான்ச்சைஸி எடுத்த பெண்மணி, ”இது விளையாடும் அறை, இது உறங்கும் அறை, இது உணவருந்தும் அறை, அந்தப் பக்கம் வெளிப்புறம் அவுட் டோர் ஆக்டிவிட்டி ஏரியா” என்று மிகுந்த உற்சாகத்துடன், குழந்தைகளின் கற்றல் திறனை, வித விதமான விளையாட்டுக்கள், செய் முறை நடவடிக்கைகள் மூலம் அவர்கள் எப்படித் தூண்டுகிறார்கள் என்று விவரித்துக் கொண்டே வந்தார்.


… மதுரையில் என் சின்ன வயதில் நான் ப்ரீ ஸ்கூலுக்கெல்லாம் சென்றதில்லை. ஒன்றாம் வகுப்புக்கு முன்னர் அரை க்ளாஸீக்குச் சென்றிருக்கிறேன். காலையில் டீச்சர் ”அம்மா இங்கே வா வா , நிலா நிலா ஓடி வா என்று கடனுக்கு நான்கைந்து முறை அழைப்பதற்குள் மதியம் வந்து விடும். மதிய உணவு முடித்து விட்டு, கால் மாடு, தலை மாடாக எல்லாக் குழந்தைகளும், அங்கேயே படுத்து,பையைத் தலைக்கு வைத்துத் தூங்க வேண்டும்.கதவை அடைத்து விட்டு, டீச்சரும் நாற்காலில் உட்கார்ந்த படியே தூங்குவார். எப்போதடா மணியடிக்கும்? என்று அரைக் கண்களை அடிக்கடித் திறந்து பார்த்து, (முழுசா கண் திறந்தா டீச்சர் திட்டுவாங்க) மணியடித்தவுடன், தபால் பையைத் தோளில் போட்டுக் கொண்டு அம்மாவைப் பார்க்க வீட்டுக்கு ஓடுவேன்.
”அஞ்சு வயசுக்கு முன்னால, குழந்தைய, எங்கயுமே சேக்குறது தப்பு. அப்பா அம்மாவோட தான் இருக்கணும், நாங்கள்ளாம் எந்த ப்ரி ஸ்கூலுக்குப் போனோம்? நல்லா புத்திசாலியா இல்லயா என்ன?” என்கிற பெரியவர்களின் பேச்சுக்கள் நிறைய வீடுகளில் ஒலிக்கக் கேட்டிருக்கிறேன்.

ப்ரீ ஸ்கூல் ஏன் முக்கியம்?

குழந்தைகளின் மிக முக்கியமான கல்விப் பருவம் அவர்கள் வாசிக்கத் துவங்கும் முன்னரே தொடங்கி விடுகிறது.
குழந்தைகளின் வளர்ச்சி வீதம்- உடல், மன, எமோஷனல், சமூக ரீதியான வளர்ச்சி- இந்த வயதில் அதிகமாக இருக்கிறது.இந்தப் பருவத்தில் தான் குழந்தை, தன் உடலைக் கொண்டு தன்னால் என்னென்ன செய்ய முடியும்? எப்படிச் செய்ய முடியும் என்று பரீட்சித்துப் பார்க்கத் துவங்குகிற பருவம்.
குழந்தைகளின் இளம் மூளையானது புதிய விஷயங்களை மிக எளிதில் கிரகிக்கிறது.புதிய பழக்கங்களை இலகுவாகக் கற்றுக் கொள்கிறது.

உட்கார வைத்து ஏ,பி,சீ,டி அல்லது ஒண்ணு ரெண்டு என்று சொல்லித் தருவது தவறான கல்வி முறை.. விளையாட்டு நடவடிக்கைகள், கதை சொல்லுதல், ப்ளாக்குகளை சேர்த்தல் போன்ற மகிழ்வூட்டும் நடவடிக்கைகள் மூலமே கற்றல் இனிமையாகும். விளையாட்டுகளின் மூலம் குழந்தைகளின் கற்கும் திறனை முன்னேற்றுவது என்பதையே அடிப்படைக் கல்வி முறையாகக் கொண்டது அந்தப் பள்ளி.(Pre-School) விளையாட்டுப் பொருட்களை தொட்டு, உணர்ந்து, செய்து பார்த்தலின் மூலம் கற்றல் இயற்கையாகவே நிகழ்கிறது. வளரும் வயதில் விளையாட்டின் மூலமே குழந்தை கற்றுக் கொள்கிறது.ஒவ்வொரு விளையாட்டுச் செயல்பாடும் முக்கியமானதே. ஆசிரியர்கள் கற்றலுக்கான சூழலை, அதற்கேற்ற விளையாட்டு நடவடிக்கைகளின் மூலம் கட்டமைக்கிறார்கள். இந்த நடவடிக்கைகளின் வாயிலாக குழந்தைகளுக்கு, கணிதம், அறிவியல், கலை பற்றிய அடிப்படை புரிதல் நிகழ்கிறது. பின்னாளில் நிகழ இருக்கும் உடல் வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும் ப்ரீ ஸ்கூல் ஒரு தகுந்த அடித்தளத்தை அமைக்கிறது.

ப்ரீ ஸ்கூல், குழந்தைகளுக்கு, தங்களைப் பற்றி அறிய, மற்றவர்களுக்கு மரியாதை தர, சின்னச் சின்ன புதிர்களை விடுவிக்க, தன் வயதொத்த மற்ற குழந்தைகளுடன் விளையாட, அதன் மூலம் தைரியத்தை வளர்த்துக் கொள்ள ஒரு களமாக அமைகிறது
ப்ரீ ஸ்கூல் செல்லும் குழந்தைகளின் நினைவாற்றல், திட்டமிடுதல்,வாசிப்பு மற்றும் மொழி வளத் திறன்,(vocabulary) பகிர்ந்து கொள்ளும் பண்பு போன்றவை நன்கு முன்னேறியுள்ளதாகக் கண்டறிந்துள்ளனர்.ப்ரீ ஸ்கூல் பருவம், குழந்தையின் விழுமியங்களையும், மனோபாவத்தையும் உருவாக்குகிற அடிப்படைப் பருவம்.

ப்ரீஸ்கூலின் மைல்கல், அகடமிக் எல்லைகளை எட்டுவதாக இல்லாமல், குழந்தையை சோசியலைஸ் செய்வதையும், அவர்களின் கற்பனைத் திறனை வளர்ப்பதுமே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

உளவியல் ஆய்வுகளின் படி, Nature Vs Nurture கோட்பாட்டின் படி, வீடு சரியில்லையெனில் (கற்றலுக்கான சரியான சூழ்நிலை வீட்டில் கிடைக்காவிடில்) ப்ரீஸ்கூலினால் குழந்தைக்குக் கிடைக்கும் பலன்கள் அதிகம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், வீட்டில் இருக்கும் மோசமான சூழ்நிலையை சமனப் படுத்த பல்வேறு பரந்து பட்ட அனுபவங்களைப் (exposure) பெற, ப்ரீ ஸ்கூல் உதவுகிறது. மரபணு ரீதியாக வரும் அறிவாற்றலை நல்ல முறையில் குழந்தைகளிடம் வெளிக் கொணர ப்ரீஸ்கூல் ஒரு தூண்டுதல் காரணியாக செயல்பட்டு உதவுகிறது.
.
ப்ரீ ஸ்கூல் குழந்தைகளிடம் கண்ட முக்கிய பலன்கள்:

1.ப்ரீ ஸ்கூல் செல்லும் குழந்தைகள், செல்லாத குழந்தைகளை விட ஆல்ரவுண்ட் வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

2.முன்னதாகவே ப்ரீ ஸ்கூலில் சேர்ந்த குழந்தைகள் (3 வயதுக்கு முன்னரே) தாமதமாக சேர்ந்த குழந்தைகளை விட அதிக பலன்களைக் கண்டுள்ளனர்.

3.முழுநேரமும் ப்ரீ ஸ்கூலில் இருந்த குழந்தைகளுக்கும், பகுதி நேர குழந்தைகளுக்கும் அறிவுத் திறனளவில் வேறுபாடு ஏதுமில்லை.

4.வசதி வாய்ப்புகளற்ற ஏழ்மை நிலைக் குழந்தைகளுக்கு ப்ரீ ஸ்கூலினால் கிடைக்கும் பலன்கள் குறிப்பிடத்தக்க அளவில் மிக அதிகமாக இருந்தன.

5.அதிக மாதங்கள் ப்ரீ ஸ்கூல் செல்லும் குழந்தைகள் குறைந்த கால அளவு சென்ற குழந்தைகளை விட நன்கு சிறந்து விளங்குகின்றனர்.

ப்ரீ ஸ்கூலில் கற்றுக் கொண்ட நல்ல விஷயங்கள், திறன்கள், குழந்தைகள் வளர்ந்த பின்பும் (பத்துப் பதினைந்து வருடங்களாகியும் ) மறைவதில்லை என்று சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ”இல்லை இல்லை. ப்ரீ ஸ்கூலின் பாதிப்பு (effect) குறைந்த காலத்திற்கு மட்டுமே” என்று வாதிடுவோரும் உண்டு.

நல்ல, தரமான ப்ரீ ஸ்கூலை எப்படித் தேர்ந்தெடுப்பது?

இணையத்தில் தேடுங்கள். கள ஆய்வு செய்யுங்கள்.முதலில் உங்கள் வீட்டிலிருந்து அருகாமையில் இருக்கிறதா என்று பாருங்கள். பகுதி நேரமா? முழு நேரப் பள்ளியா என்று முடிவு செய்யுங்கள். குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள பெரியவர்கள் யாரும் இல்லாத வீடுகளில், கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் பட்சத்தில் முழுநேரப் பள்ளியைத் தேர்ந்தெடுக்கும் கட்டாயத்திற்கு ஆளாகிறோம்.

ஒவ்வொரு ப்ரீஸ்கூலையும் நேரில் சென்று பாருங்கள். அவர்களது ஃபீஸ், அட்மிசன் பாலிசி, கல்வி கற்றுக் கொடுக்கும் முறை என்று ஒவ்வொன்றாகக் கேட்டு அறியவும்,

எத்தனை குழந்தைகள் பயில்கிறார்கள், எத்தனை ஆசிரியர்கள் / ஆயாக்கள் (care takers) இருக்கிறார்கள், குழந்தைகளை அவர்கள் வயதுக்கேற்ப தனித் தனியே பிரித்துப் பயிற்றுவிக்கிறார்களா, குழந்தைகள்-பாதுகாவலர்கள் விகிதாச்சாரம் (child-caretaker ratio) அவர்களது தினப் படி நடவடிக்கைகள் என்னென்ன? என்பதைக் கேட்டு அறியவும்.

அந்த சென்டரை நடத்தும் மேலாளர்/ ஆசிரியர், early-childhood education training கற்றுள்ளாரா என்று உறுதி செய்து கொள்ளவும்.இது போன்ற அங்கீகரிக்கப் பட்ட ட்ரெயினிங் கற்றிருப்பவர்கள் நல்ல கல்விச் சூழலை குழந்தைக்கு அளிக்க முடியும்.
முக்கியமாக, அந்த இடம் சுகாதாரமாகவும், குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதாகவும் (முதலுதவிப் பெட்டி போன்றவை) இருக்கிறதா என்று பார்க்கவும். கலைப் பொருள்கள், குழந்தைகளின் வயதிற்கேற்ப சரியான பொம்மைகள் உள்ளனவா? அவை சரியான தரத்தில் உள்ளனவா? குழந்தைகள் செய்த கலைப் படைப்புகள், அவர்களின் வேலைப்பாடுகளை அந்த அறைகளின் சுவர்களில் தொங்க விட்டுள்ளார்களா? குழந்தைகளுக்கான விளையாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள தகுந்த இடவசதி, புதிர்களை விடுவிக்க, ப்ளாக்குகள் சேர்க்க தகுந்த இட வசதி, தூங்குவதற்கான தனி அறை, உணவருந்த தனி அறை, குழந்தைகளுக்கேற்ற கழிப்பறை வசதிகள் ஒழுங்காக உள்ளனவா என்று எல்லாவற்றையும் உறுதி செய்து கொள்ளவும்.தினசரி காலை முதல் மாலை வரை குழந்தைகளுக்காக என்னென்ன நிகழ்வுகள் என்று டைம் டேபிளை அவர்களைக் கேட்டறியவும்.என்னென்ன உணவு வகைகள் குழந்தைக்குக் கொடுக்கிறார்கள் என்று கவனமாக அறிந்து கொள்ளவும்.
ப்ரீ ஸ்கூலில் சேர்ப்பது எந்த விதத்திலும் வீட்டில் சொல்லிக் கொடுப்பதைக் குறைத்து விடக் கூடாது. வீட்டுக்கு வந்த பின்பும், பெற்றோர்கள் குழந்தையுடன் அதிக நேரம் செலவிட்டு, உரையாடிக் கொண்டிருக்க வேண்டும்.அதுதான் சரியான முறை.
பெற்றோர்களும்,இந்த சமூகமும் குழந்தைகளை ப்ரீ ஸ்கூலில் விடுவதன் மூலம் அவர்களிடம் ஒரு பெரிய பொறுப்பை ஒப்படைத்திருக்கின்றனர் என்பதை ஒவ்வொரு ப்ரி ஸ்கூலும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
நல்ல தரமான ப்ரி ஸ்கூலில் சேர்ப்பதானால் சரி. ப்ரீ ஸ்கூலின் தரம் சரியில்லை என்று நீங்கள் நினைத்தால் வீட்டிலேயே கற்றுக் கொடுப்பது உத்தமம்.

அந்த ப்ரீ ஸ்கூலை சுற்றிப் பார்த்து விட்டு வீட்டுக்குப் போகக் கிளம்பினோம். குழந்தைகள் இரண்டும் அங்கேயே இருந்து கொண்டு வர மாட்டேன் என்று அடம் பிடித்தன.

அடுத்த மாதத்திலிருந்து ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மட்டும் டே கேருக்கு (day care) குழந்தையை அனுப்ப முடிவெடுத்துள்ளோம்.
டாக்டர் பிரகாஷ்.

www.rprakash.in


எழுத்தாளர் ஆவதற்கு முன் பிளாக் எழுதுவது அவசியம் அதே போல ஸ்கூல் போவதற்கு முன் ப்ரீ ஸ்கூல் அவசியம்.

Read More...

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 7-5-2013

டேய் இட்லி,
நல்லா இருக்காயா?

வேளுக்குடி கிருஷ்ணன் 'ராமன் சென்ற பாதை' என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஆரம்பித்த உடன் சேது சமுத்திரம் பற்றி மறந்து போன கலைஞர் திடீர் என்று அதைப் பற்றி அறிக்கை விட ஆரம்பித்துவிட்டார் "அறிவியல்ஆய்வு ஆதாரங்கள் எங்களிடம் (திமுகவிடம்) உள்ளன. தில்லியில் இந்து மத சன்னியாசிகளை அழைத்து அந்த ஆதாரங்களைக் காட்டினோம். அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டனர்" என்கிறார். எனக்கு தெரிந்து இந்த மாதிரி எதை சொன்னாலும் ஒத்துக்கொள்ள ஒரே ஆள் தான் இருக்கிறார் அவர் தான் இந்த நாட்டில் பிரதமர்.
அடிக்கடி பெரியார் அண்ணா எல்லாம் என் கனவில் வருவார் என்று சொல்லும் போது நாம் நம்பவில்லையா? அதே போல இதையும் நம்பிவிட்டு போக வேண்டும். ஆனால் ராமர் இருந்தார் என்பதை மட்டும் நம்ப முடியாது.


ஆனால் நம்ப முடியாத ஒன்றை சாரு தன்னுடைய சமீபத்திய பதிவில் சொல்லியுள்ளார் "தமிழில் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துபவர்களின் புத்தகம்தான் இரண்டு லட்சம் விற்கிறது என்றால் இது என்ன மாதிரியான சமூகம்? இப்படிப்பட்ட சமூகத்துக்காக ஒரு எழுத்தாளன் எழுதலாமா?". இவர் புத்தகம் வெறும் 200 காப்பி தான் விற்பனை ஆகிறதாம். சாருவிற்கு ஒரு சின்ன அட்வைஸ். பேசாம நீங்க நியூஸ் பேப்பரில் எழுதினால் ஒரே நாளில் பல லட்சம் காப்பி விற்கும் தமிழ்ச் சமுதாயம் பற்றி அடிக்கடி கவலைப்பட்டு சாரு சொல்வதைப் பார்த்தால் சந்தோஷமாக இருக்கிறது. சாருவிற்கு ஒரு சின்ன அட்வைஸ். மயில்கண் வேஷ்டியோ. நண்டு மார்க் லுங்கியோ. எதா இருந்தாலும் பேசாம ஒரு பெக் அடித்துவிட்டுத் தூங்குங்க சார். ( இடை குறிப்பு: Charu படம் எடுக்க நான் பட்ட பாடு அதிகம். 'Charu' என்று கூகிள் இமேஜில் தேடினால் கிடைப்பது.. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள், என்ன சமுகம் இது ! )

பெக், புகை இலை, சிகரேட், ஜாதி வெறு என்றால் உடனே ஞாபகத்துக்கு வருவது அய்யா தான். மக்கள் தொலைக்காட்சியில் அய்யா, அய்யாவோட பையன் இரண்டு பேரும் சிறையில் இருக்க அவர்கள் போடும் விளம்பரங்கள் செம கலக்கல்.
"மதுவை ஒழித்தார் அதனால் அவரை சிறைக்கு அனுப்பலாமா?"
"ஐ.நா இவரை பாராட்டியது அதனால் இவரை சிறைக்கு அனுப்பலாமா?"

இதே மாதிரி பல வாசகங்கள்...

தினமும் ஆறு மணிக்கு 'தமிழ்' 'தமிழ்நாடு' என்று போற்றி பாடல் போடும் மக்கள் தொலைக்காட்சி, மாமல்லபுரத்தில் தங்கள் சித்திரை நிலவு கூட்டத்தின் போது அவர்கள் தொண்டர்கள் எல்லாம் அந்த பல்லவ கோயில் கோபுரம் மீது ஏறி தங்கள் கொடியை ஏற்றினார்கள். இதை எல்லாம் படம் எடுத்து அந்த ஆறு மணி தமிழ் பாட்டில் போடலாம் நல்லா இருக்கும். சித்திரை முழு நிலவுப் பெருவிழா என்ற கூத்தில் ஐந்து பேருந்துகளை எரித்து, 11 குடிசைகளைக் கொளுத்தி, சில இளைஞர்களின் உயிர்ப் பலிகளோடு முடிந்திருக்கிறது. இதை எல்லாம் மக்கள் தொலைக்கட்சியில் போடாமல், பத்து பேர் மொட்டை அடித்தார்கள், வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டார்கள் என்று முக்கியமான செய்திகளாக போடுகிறார்கள். இவர்கள் பேசிய பேச்சு வீடியோவை பார்த்தால் ... "அதுவும் குரு காடுவெட்டி குரு... தொழிலின் அடிப்படையிலும், பிறப்பின் அடிப்படையிலும் பேசிய பேச்சு அச்சில் ஏற்ற முடியாத அசிங்க வார்த்தைகள்" என்கிறது ஆனந்த விகடன்.

ராமதாஸ் என்ற பெயரால் ராமருக்கே பெரிய இழுக்கு, இந்த மாதிரி நோய் பரப்பும் டாக்டர்கள் இருக்கும் வரை. தமிழ்நாட்டை அந்த ஆண்டவனாலும், இதை சொன்ன அவர் ரசிகர்களாலும் காப்பாத்த முடியாது.

அரசை காப்பாத்தறேன் பேர்வழி என்று சிபிஐ தாக்கல் செய்யும் மனுவை ரெவ்யூ செய்கிறேன் என்று சில விஷயங்களை டெலீட் செய்து அனுப்பியிருக்கிறார் சட்ட துறை அமைச்சர். இதுக்கு ஏன் இவ்வளவு கூப்பாடு ? சிபிஐ கோர்ட்டில் தாக்கல் செய்யும் மனுவை முதலில் அரசுக்குக் காண்பித்துவிட்டுதான் தாக்கல் செய்யும். இட்லிவடை எல்லாப் பதிவுகளையும் சரக்கு மாஸ்டருக்குக் காண்பித்து விட்டு தான் போஸ்ட் செய்யும். அது போல தான் இதுவும். தப்பில்லை.

டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும் சரப்ஜித் உயிரை காப்பாத்த முடியாமல் போனது. அரசு மரியாதையுடன் அவரை பெரிய ஹீரோவாக ஆக்கி சகல கட்சிகளிலுமிருந்து ஓட்டுப் பொறுக்க வந்தார்கள். கடைசியில் அவரை தியாகி என்று அறிவித்துவிட்டு ஒரு கோடி ரூபாய் கொடுத்துவிட்டு மறந்து போனார்கள். எனக்கு ஒரு டவுட். சில மாதங்கள் முன்பு பாகிஸ்தான் இராணுவம் நம் வீரர்களின் தலையை சீவி அனுப்பியவர்களுக்கு ஏன் இதே போல அரசு மரியாதை செய்யவில்லை? அவர்கள் தியாகி இல்லையா? அவர்களுக்கு குடும்பம் இல்லையா ?

தியாகி என்றவுடன் ஞாபகத்துக்கு வரும் இரண்டு பேர் - ராசா, தயாநிதி. தங்கள் தாத்தாவுக்காக மந்திரி பதவியை ராஜிநாமா செய்தார்கள். சிறை சென்றது பெரிய தியாகம் என்று சொல்ல முடியாது அது பெரிய விஷயம் இல்லை, இப்ப எல்லாம் பவர் ஸ்டார் கூட சிறைக்கு போகிறார். பவர் உள்ளே போனதால்தான், வெளியே பவரே இல்லாமல் போச்சு என்று வரலாறு சொன்னாலும் சொல்லும்.

எது எப்டியோ. இப்போதைய பவர் ஸ்டார் தோனி தான், இவர் மகா விஷ்ணுவாக விஸ்வரூப தரிசனம் கொடுக்க உடனே ஹிந்து காப்பாளர்கள் இவர் மீது கேஸ் போட்டுவிட்டார்கள். விஸ்வரூபம் என்றாலே கோர்ட் கேஸ் என்று தானே அர்த்தம்!

எவ்வளவு கோர்ட் கேஸ் என்று போட்டாலும் கோர்ட்டில் பெயில் கிடைத்தாலும் ராமதாஸ் வெளியே வர விரும்ப மாட்டார் என்று நினைக்கிறேன். ராமதாஸுக்கு திருச்சி சிறையில் சகல வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. அவர் நலமுடன் இருக்கிறார் என்று இன்று அவரைச் சந்தித்த அவரது சம்பந்தியும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

கடைசியாக, இலங்கைப் பிரச்சனை முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன், எப்படி சொல்லுகிறேன் என்றால் அவ்வளவாக யாரும் FB, twitter இல் இதைப் பற்றிப் இப்போது பேசுவதில்லை.

இந்த வார துக்ளகில் வந்த ஒரு கேள்வி பதில்:

கேள்வி : இலங்கையில் பத்திரிகைகளுக்குச் சுதந்திரம் கிடையாது, வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் அங்கு சென்று செய்தி சேகரிக்க முடியாது என்று இங்கு பல கட்சித் தலைவர்கள் பேசி வரும்போது, தங்களுக்கு (துக்ளக்) மட்டும் அங்கே சென்று செய்தி சேகரிப்பதற்கும், அந்நாட்டு அரசின் உதவி கிடைத்துள்ளதைப் பற்றியும் தங்களது விளக்கத்தை வாசகர்களுக்குத் தெரிவிப்பீர்களா?

பதில் : இந்தியாவிலிருந்து பத்திரிகையாளர்கள் வந்து இலங்கையில் உள்ள நிலையை நேரில் காண வேண்டும் என்று இலங்கை அரசு அவ்வப்போது அழைத்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால், அதை யாரும் ஸீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. நமது நிருபர்கள், இலங்கைத் தூதரகத்திடம் விஸா பெற்று ‘துக்ளக்’ செலவில் அங்கு சென்று வந்தார்கள். அவர்கள் மக்களையும், மற்ற பலரையும் சந்தித்தபோது, அதில் இலங்கை அரசினர் யாரும் குறுக்கிடவும் இல்லை. பெண்கள் ராணுவ முகாம், மற்றும் முன்னாள் புலிகள் மறுவாழ்வு மையம் ஆகிய இடங்களுக்கு நமது நிருபர்கள் சென்றபோதுதான், அனுமதி பெற்றுச் சென்றனர். அங்கும் பேட்டிகளின்போது ராணுவத்தினர் அருகில் இல்லை.

போகிற எடங்களுக்கு எல்லாம் தூக்கி செல்லுவது எது என்றால் உடனே நாம் நம்முடைய செல்போனை சொல்லுவோம். ஆனால் நமிதா சாக்லெட்டை தூக்கி செல்கிறார். சாக்லெட் அவரின் நாயின் பெயர்.

‘‘போகிற இடங்களுக்கு எல்லாம் தூக்கி செல்கிற மாதிரி ஒரு நாய்க்குட்டி வாங்க வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை. அது, இப்போதுதான் நிறைவேறியிருக்கிறது. இந்த நாய்க்குட்டி, ½ அடி உயரத்துக்கு மேல் வளராது. கூடையில் வைத்தோ அல்லது பையில் வைத்தோ சுலபமாக தூக்கி செல்ல முடியும். அதன் பெயர் ‘சாக்லெட்'. கொஞ்சம் பெரிதாக ஆகிவிட்டால் அதை சாக்லெட் மச்சான் என்று கூப்பிடுவார். நாய்க்கு அடித்த அதிர்ஷ்டம்.

எச்சகல நாயே என்று திட்டுவதை பார்க்கலாம். சில சமயம் பின்னூட்டத்திலும் இது போல வரும். இந்த நியூஸை பார்த்தால் அப்படி தான் இருக்கிறது.
வெள்ளைக்காரர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கொல்கத்தா நகரின் பிரசித்தி பெற்ற ஹௌரா பாலத்திற்கு தற்போது ஒரு ஆபத்து வந்துள்ளது. வெள்ளத்தாலோ பூகம்பத்தாலோ இந்த ஆபத்து வரவில்லை. வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு எல்லாவற்றையும் வாயிலே போட்டு நன்றாகக் குதப்பி மக்கள் துப்பும் எச்சிலால்தான் இந்த ஆபத்து. எச்சில் தாக்குதலில் இருந்து இதை காப்பாற்ற தற்போது ஃபைபர் கண்ணாடி கவசம் போட போகிறார்களாம். கூடவே 'சாமி' படங்கள் வேற. 


"மூன்று வருட காலத்திலே மூன்று மில்லி மீட்டர் அளவுக்கு இந்த மூட்டுகள் அரிக்கப்பட்டு நாசமாகியுள்ளன. பாலத்தை தாங்கி நிற்கிற 78 தூண்களிலும் இதே வேகத்தில் அரிப்பு நடந்துகொண்டு போனால் மொத்த பாலமுமே வலுவிழந்துபோய்விடும்." என்கிறார்கள் இதை ஆராய்ச்சி(?) செய்தவர்கள்!

நாம் ஏன் அணுஆயுதம் எல்லாம் தயாரிக்க வேண்டும் சும்மா எச்சிலை வைத்தே பெரிய பெரிய நாசவேலைகள் செய்யலாம் போல இருக்கே!

இது கல்கியில் வந்த தலையங்கத்தின் ஒரு பகுதி. இதுவும் எச்சில் சம்பந்தமானது தான். சாலையில் எச்சில் துப்பியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில், அதை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி மஜும் தார், பொது இடங்களில் எச்சில் துப்புவது இந்தியர்களின் இயல்பாகிவிட்டது," என்று வருந்தினார். நகரைச் சுத்தமாக வைத்திருக்க மக்களின் ஒத்துழைப்பு தேவை," என்றார். மத்திய காங்கிரஸ் அரசின் அவலமான ஆட்சியைக் கண்டு வெறுத்துப்போன மக்கள், கடந்த சில ஆண்டுகளில் கூடுதலாக உமிழ்நீரை செல வழித்திருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது! ( இடை குறிப்பு: கல்கிக்கு கூட கோபம் வந்த இப்ப தான் பார்க்கிறேன் )

மாம்பழம் என்றால் வாயில் எச்சில் ஊறும். அதுவும் இப்ப மாம்பழ சீசன்.
அதனால் கடைசியாக மாம்பழம் சம்பந்தமான ஒரு கேள்வி பதில்:

''இன்னமும் விடாமல் '2016-ல் பா.ம.க. ஆட்சியைப் பிடிக்கும்’ என்கிறாரே அன்புமணி ராமதாஸ்?''

'' 'மாம்பழத்துக்கு சீஸன் கிடையாது’ என்று ஒரு விளம்பரம் வருமே... அதைப் பார்த்ததில்லையா நீங்கள்?''

தற்போது சந்திப்பு சீசன். விஜயகாந்த் கருணாநிதியை போன மாதம் சந்தித்தார். இப்ப அகிலேஷ் யாதவ் ஜெயலலிதா சந்தித்தது பெரிய விஷயமாகச் சொல்லுகிறார்கள்.


கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் சந்தித்து, தேசிய அளவில் மூன்றாவது அணி அமையப் பாடுபடுவேன்’ என்கிறார் எடியூரப்பா. இது எப்படி இருக்கு! யார் யாரை வேண்டும் என்றாலும் சந்தித்துக்கொள்ளட்டும் காய்கறி விலை கம்மியானால் போதும் !


அன்புடன்
முனி
கடைசி குறிப்பு
இரா.மு யாரை பார்த்தாலும் வணக்கம் என்று சொல்லுவதில்லை பதிலுக்கு ஒரு கேள்வி கேட்கிறார் "நீங்கள் பார்த்த முதல் படம் எது என்று சொல்லுங்கள்?" பல பிரபலங்கள் பதில் அளித்துள்ளார்கள். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் பெண்கள் யாரும் பதில் அளிக்கவில்லை. நான் 10 வயசில் மதிரை வீரன் பார்த்தேன் என்றால் அவர்கள் வயசை நாம் ஈசியா கண்டுபிடித்திவிடுவோம் இல்லையா ?

Read More...

Sunday, May 05, 2013

சன்டேனா இரண்டு (5-5-13) செய்திவிமர்சனம்

இந்த வாரம்...இரண்டு ஹிரோக்கள்.


செய்தி # 1


இதுவரை 50 படங்களுக்கு மேல் முடித்துவிட்டார்கள் அஜித்தும்,விஜய்யும்.

இவர்களின் முக்கிய வெற்றிப்படங்களை கவனித்தால் புரியும். அவற்றை இயக்கி இருப்பது ஒரு புதிய இயக்குனர் என்பது.

அஜித்தை பொருத்தவரையில் காதல் கோட்டை, இயக்குனர் அகத்தியனுக்கு அது இரண்டாவது படம்தான். காதல் மன்னன் - சரண், வாலி - எஸ்.ஜெ.சூர்யா, சிட்டிசன் - சரவண சுப்பையா, தீனா - ஏ;ஆர்.முருகதாஸ் என பலரை தொடர்ந்து அறிமுகபடுத்தினார் அஜித்.



விஜய்யை எடுத்துக்கொண்டால்,அவரது மெகா ஹிட் படமான துள்ளாத மனமும் துள்ளும்,இயக்குனர் எழிலுக்கு முதல் படமே. மசாலா ஹிட்டான திருப்பாச்சி, பேரரசுக்கு முதல் படம். சச்சின் - ஜான் மகேந்திரன், வேட்டைக்காரன் - பரமசிவன் என்று மட்டும் இல்லாமல், தனது 50வது படமான சுறாவை அறிமுக இயக்குனர் ஒருவரை நம்பி ஒப்படைத்தார் விஜய். 50 படங்களுக்கு மேல்தான் நண்பன் என்று ஷங்கரிடம் போனார் விஜய்.

புதிய இயக்குனர் ஒருவருக்கு வாய்ப்பு அளித்து ரிஸ்க் எடுக்க, விஜய்-அஜித் இருவருமே தயக்கம் காட்டியதில்லை.

ஆனால், நடிகர் சூர்யா விதிவிலக்காக இருக்கிறார். மாறி மாறி குறிப்பிட்ட இயக்குனர்களாக ஹரி,கவுதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ், கே.வி.ஆனந்த் என பயணம் செய்துவருகிறார்.

தற்சமயம் ஹரி இயக்கத்தில் "சிங்கம் 2" செய்துவரும் சூர்யா, அடுத்து மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் "துருவ நட்சத்திரம்" என்ற புதிய படம் நடிக்க இருக்கிறார்.

பெரிய பேனர்கள், குறிப்பிட்ட இயக்குனர்கள் என தனக்கென்று பாதுகாப்பான ஒரு வட்டம் போட்டுகொண்டு இருக்கிறார் இவர்.

ஒரு சமூக சேவகராக அடையாளம் கொண்ட சூர்யா, தான் நடிக்கும் சினிமாக்களில் மட்டும் ஏன் இதுவரை திறமையான இளம் இயக்குனர்களுடன் இணைய தயக்கம் காட்டிவருகிறார்??



செய்தி # 2



சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று விருப்புகிற இளம் இயக்குனர் யாராக இருந்தாலும் அவர்களின் முதல் சாயஸ் என்று ரெடியாக இருக்கிறார் விஜய் சேதுபதி.

குறும்பட இயக்குனர்கள் திரைப்பட இயக்குனராக தேர்தெடுக்கும் ஏணி...விஜய் சேதுபதி.

இவரே குறும்படங்களில் நடித்துதான் முன்னேறியவர் என்பதும் குறிப்பிடதக்கது. சீனு ராமசாமியின் "தென்மேற்கு பருவகாற்று" இவருக்கு நல்ல அறிமுகத்தை தந்த படம் என்று சொல்லாம். அந்த படத்தின் வெற்றிக்கும் பின்னும் சசிகுமாருடன் சிறிய வேடத்தில் தலைகாட்டினார் சேதுபதி.

தன்னை வைத்து குறும்படம் இயக்கிய கார்த்திக் சுப்புராஜுடன் இவர் இணைந்த "பீட்சா" படத்தின் வெற்றி பல இளம் இயக்குனர்களுக்கு, குறும்பட இயக்குனர்களுக்கு ஒரு புதிய பாதையை, நம்பிக்கையை விதைத்தது.

அதை தொடர்ந்து வந்த "நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்" அந்த நம்பிக்கையை உறுதி செய்து இருக்கிறது.

இந்த வரிசையில் தற்போது வெளிவந்து இருக்கும் "சூது கவ்வும்" வரவேற்ப்பை பெற்று, குறும்பட உலகில் இருந்து நலன் என்னும் மற்றொரு திறமையான இயக்குனரை அடையாளப்படுத்தி இருக்கிறது.

விஜய் சேதுபதியின் அடுத்த படமான "பத்மினியும்,பண்ணையாரும்" படத்தின் இயக்குனரும் புதியவர்தான்.

குறும்பட உலகத்தில் இருந்துவரும் ஒரு புதிய இயக்குனர் என்றாலே ரசிகர்களிடம், படம் பற்றிய எதிர்பார்ப்பு வந்துவிட்ட ஒரு ஆரோக்கிய சூழல் உருவாக காரணமாக நிற்கும் விஜய் சேதுபதிக்கு ஹாட்ஸ் ஹாப்.



(நன்றி, இனி, அடுத்தவாரம்)

-இன்பா

Read More...

Saturday, May 04, 2013

அயர்லாந்து, அம்பானி, சீனா மற்றும் சில - எ.அ.பாலா

1. 6 மாதங்களுக்கு முன், அயர்லாந்தின் கருக்கலைப்புத் தடைச் சட்டத்தின் காரணமாக, சவீதா என்ற இந்தியப் பெண் அநியாயமாக உயிரிழந்தது நினைவிருக்கலாம். அதைத் தொடர்ந்து, அங்கு கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்தியாவைப் போல, கூச்சல் போட்டு விட்டு விஷயத்தை சௌகரியமாக மறந்து விடாமல், அங்குள்ள அரசு, அயர்லாந்து தீவிர கத்தோலிக்க நாடாக இருந்தும், அச்சட்டத்திற்கு சில திருத்தங்களை கொண்டு வர இருப்பது வரவேற்கப்பட வேண்டியது. இதற்கு எதிர்ப்பாளர்கள் இருப்பினும், அங்குள்ள பெரும்பான்மை மக்களின் மனித நேயமும், நேர்மையும் பாராட்டத்தக்கது,

2. இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானிக்கு மகாராட்டிர அரசு, மக்கள் வரிப்பணத்தில் Z+ வகை பாதுகாப்பு வழங்கியிருப்பதை, சுப்ரீம் கோர்ட் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. சாமானியனுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலையும், தில்லியில் ஒரு 5 வயது சிறுமி அநியாயமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதையும் கோர்ட் சுட்டிக்காட்டியிருக்கிறது. பணக்காரர்கள் தனியார் பாதுகாப்புக்கான விலையை எளிதாக கொடுக்க இயலும் என்றும் கோர்ட் கூறியிருக்கிறது. கோடிகளில் புரளும் அம்பானி, மக்கள் பணத்தில் தனக்கு பாதுகாப்பு தேவையில்லை என்று சொல்லாதது அவரது வெட்கமின்மையை காட்டுகிறது.

3. நாலைந்து நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் பக்ராம் விமான தளத்திலிருந்து புறப்பட்ட போயிங் 747 வகை கார்கோ விமானமொன்று, கிளம்பிய சில நிமிடங்களிலேயே, தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது, அருகிலிருந்த ஒரு வாகனத்தின் டேஷ்போர்ட் கேமரா, 3 நிமிட வீடியோவாக அவ்விமானத்தின் மரணத்தை பதிவு செய்திருந்ததை, டிவியில் பார்த்தபோது சற்று கலக்கமாக இருந்தது. கூர்ந்த அறிவை ஆயுதமாக பயன்படுத்தி தொழில்நுட்பத்தில் எத்தனை உச்சம் தொட்டாலும், checklist தயாரித்து கவனமாக இருந்தாலும், நம்மை மீறி சிலபல விஷயங்கள் நடப்பதை நம்மால் தடுக்க முடியாது என்பது தெளிவு. அந்த வீடியோவை இங்கே காணலாம். http://edition.cnn.com/2013/05/01/world/asia/afghanistan-bagram-crash-video/?hpt=hp_mid


4. சீனா, இந்திய எல்லையிலிருந்து கிட்டத்தட்ட 18 கி.மீ உள்ளே வந்து, 5 ராணுவ கூடாரங்களை அமைத்து 18 நாட்களாக அழும்பு பண்ணிக் கொண்டிருப்பது குறித்த செய்திகளையும், விவாதங்களையும் ஆங்கில நியூஸ் சேனல்களில் பார்க்கையில், பரிதாபமாகவும் அதே சமயம் நகைச்சுவையாகவும் உள்ளது. இந்தியாவுக்கு வெளிநாட்டுக் கொள்கை என்று எதுவும் கிடையாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். முன்பொரு முறை, காஷ்மீர் வாழ் இந்தியருக்கு மட்டும் (இந்தியாவை வெறுப்பேற்றுவதற்காக) சீனா தனி வகை விசா வழங்கியபோதும், அருணாச்சலப்பிரதேசத்தை “தென் திபெத்” என்று கூறி வருவதற்கும், இந்தியா மினிமம் என்ன செய்திருக்க வேண்டும்? திபெத்தை disputed territory- யாகத்தான் இந்தியாவும் பார்க்கிறது என்றாவது (official ஆகவோ unofficial ஆகவோ) அறிவித்திருக்க வேண்டாமோ!

சீனா (தனக்குச் சாதகமான சூழல் என்று உணர்ந்து), நீரை சோதித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது (testing the waters!). எதிர்காலத்தில் ஒரு சிறிய அளவுக்கான போருக்கான ஓர் ஆயத்தமாக இது இருக்கலாம். இந்த விஷயத்தில் பிஜேபி காங்கிரஸை விட எந்த விதத்திலும் பெட்டர் என்று கூற முடியவில்லை. அவர்கள் ஆட்சியில் இருந்திருந்தாலும், எதையும் கழட்டியிருக்க மாட்டார்கள் என்பது தான் யதார்த்தம்.

5. 20 ஆண்டுகள், பாகிஸ்தானிய இருட்டுச் சிறையில் உழன்று, அநியாயமாக, வஞ்சகமாக சக கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்ட சரப்ஜித் சிங்கை இப்போது மாவீரனாக, தேசிய நாயகனாக கொண்டாடுவதால் என்ன பயன்? அவரைப் போல பல நாடுகளில் பல இந்தியக் கைதிகள் பல வருடங்களாக உழன்று கொண்டிருக்கின்றனர். தமிழ் மீனவர்கள் சிங்களக் கப்பல் படையால் தாக்கப்படுவது ஒரு வழக்கமாகவே ஆகி விட்டது. எந்த இந்திய அரசுக்கும் தம் மக்கள் எங்கிருந்தாலும் காக்கப்பட வேண்டியவர்கள் என்ற பொறுப்பும் கிடையாது, உணர்வும் கிடையாது. இவை இருந்தால் மட்டுமே, சரியான துரித நடவடிக்கை என்பது சாத்தியம்.

6. சீக்கியர்களுக்கு எதிரான 1984 தில்லி வன்முறை சம்பந்தப்பட்ட ஒரு வழக்கிலிருந்து முக்கியக் குற்றவாளியான, மாஜி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சஜ்ஜன் குமாரை, சாட்சியங்கள் வலுவாக இல்லாத நிலையில், கோர்ட் விடுவித்திருப்பது, சீக்கியர்களிடையே பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சஜ்ஜன், ஜக்திஷ் டைட்லர், லலித் மகேன் (இவர் காலிஸ்தான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு இறந்தார்) ஆகிய மூவருக்கும் சீக்கியப் படுகொலையில் சம்பந்தமில்லை என்றால், எதால் சிரிப்பது (அ) அழுவது என்று புரியவில்லை! சீக்கியப் படுகொலை பற்றி அறிய: https://en.wikipedia.org/wiki/1984_anti-Sikh_riots

மோடி அப்பழுக்கற்றவர் என்றெல்லாம் கூறவில்லை. குஜராத் படுகொலையை முன் வைத்து காங்கிரஸ் கட்சி மோடியை வசை பாடுவது, அபத்த முரணாகத் தோன்றுகிறது.

7. பாமக தலைவர் ராமதாஸ் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து வெடித்துள்ள வன்முறை, பொது அமைதிக்கு பங்கம் மற்றும் பெருமளவில் பொதுச்சொத்து நாசம் குறித்து, இது எதிர்பார்த்த ஒன்று என்பது தவிர கூற எதுவுமில்லை. History has the bad habit of repeating itself.

"History has the bad habit of repeating itself"... பாலா திரும்ப ஐபிஎல் பற்றி எழுத ஆரம்பித்துவிடுவாரோ ?

Read More...

Thursday, May 02, 2013

சரப்ஜித் சிங்


சரப்ஜித் உடல் வந்து ஒரு மணி நேரம் முன்பு வந்து சேர்ந்தது. சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தார் என்று செய்தி வந்ததும் இது பொய் என்று உள் மனம் சொன்னது. பாகிஸ்தான் ஒரு நாடு கிடையாது, அது ஒரு கசாப்பு கடை. சரப்ஜித் கொலை நிச்சயம் கசாப், அப்சல் குரு தூக்குக்கு பழி வாங்கும் செயல்.


மோதி நீங்க எப்ப வருவீங்க ?

Read More...