பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 15, 2013

Zero Dark 30 - FIR

அலுவலகத்துக்கு பக்கத்தில் இருக்கும் தியேட்டரில் 'Zero Dark 30' படம் நேற்று இரவு பார்த்தேன். கடைசி 15 நிமிடங்கள்...நானே படத்தில் நடித்த ஃபீலிங். விஸ்வரூபத்தை ஹாலிவுட் ரேஞ்சுக்குப் போற்றுபவர்கள் இந்தப் படத்தை ஒரு முறை பார்க்க வேண்டும். கமல் எவ்வளவு அசட்டுத்தனம் செய்திருக்கிறார் என்று புலப்படும்.

பல இடங்களில் இது சினிமாவா அல்லது நிஜமா என்று தெரியாத மாதிரி எடுத்திருக்கிறார்கள்.

9/11 இரட்டைகோபுரத் தாக்குதலுக்குப் பின் படம் ஆரம்பிக்கிறது. படிப்படியாக பல விஷயங்களைக் கண்டுபிடித்துக் கடைசியில் பின்லேடன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். Connecting the dots அருமை.

எப்படி பத்து ஆண்டுகளாக சி.ஐ.ஏ.வின் பெண் ஏஜென்ட் (நடிகை ஜெசிகா செஸ்டெயின்) பின்லேடன் இருப்பிடத்தை கண்டுபிடித்து வேட்டை ஆபரேஷனை வழி நடத்துகிறார் என்பது தான் கதை.

அல்கெய்தா ஒவ்வொரு இடத்திலும் வெடிகுண்டு வெடிக்கச் செய்யும் இடங்களின் காட்சி அமைப்பும், திடீர் என்று வெடிக்கும் போது ஏற்படும் ஒலி ஏதோ நாமே அங்கு இருப்பது போன்ற ஒரு உணர்வைக் கொடுக்கிறது.

சில இடங்களில் டாகுமெண்டரி மாதிரி இருந்தாலும் அவைகளை சுவாரஸியம் குறையவில்லை. இசை, ஒளிப்பதிவு, காட்சி அமைப்பு. நடிகர்கள் என்று எதுவும் தனியாக தெரியாமல் எல்லாம் காட்சிகளுடன் இணைந்துள்ளது. எதிலேயும் குறை கண்டுபிடிக்க முடியாதவாறு எடுத்திருக்கிறார்கள். எல்லா வசனங்களிலும் Fxxxx..கெட்ட வார்த்தை வருகிறது.

பாகிஸ்தானில் பின்லேடன் காம்பவுண்டுக்குள் இறங்கும் அமெரிக்க படைகள் அங்கே நிகழும் சம்பவங்கள் ...வெறும் இருட்டு, நிழல் போல உருவங்கள் மட்டுமே வைத்துக்கொண்டு அந்த காட்சிகள் 'அட அட' போட வைக்கிறது. என்ன மாதிரி ஹோம்வொர்க் செய்தால் இந்த மாதிரி படம் எடுக்க முடியும்?

நிச்சயம் இந்தப் படத்தைப் பார்க்க சிபாரிசு செய்வேன்.

நடுராத்திரிக்கு பிறகு 30 நிமிடத்தில் பின்லேடனை எப்படிப் போட்டுத் தள்ளுகிறார்கள் என்பதால் படத்துக்கு அந்த பெயர். படத்தில் ஓசமா இறந்த பிறகு சந்தோஷம், அதே சமயம் இந்த கதையை நம் கோடம்பாக்கம் ஆசாமிகள் யாரும் எடுக்கவில்லையே என்று டபுள் சந்தோஷமும் நமக்கு வருகிறது. சி.ஐ.ஏ ஏஜண்டாக ஆணுக்கு பதில் பெண் வந்து ..."என்னை யார் என்று தெரிகிறதா ?" என்று பாட்டுக்கு BGMல் ஒலிக்க ஓசாமாவை கையும் களவுமாக பிடிபட்டு...அவர் பக்க நியாயத்தை சொல்லிவிட்டு... சரி விடுங்க!
(படத்தில் ஓசமா ஒரு வார்த்தை கூட பேசவில்லை!)

இட்லிவடை மார்க் 8.5/10

விஸ்வரூபத்தையும் இதையும் கம்பேர் செய்து ஒருவரை எழுதச் சொல்லியிருக்கிறேன். அவர் அனுப்பினால் இங்கே பிரசுரிக்கிறேன்.

34 Comments:

dr_senthil said...

எப்படி ஒப்பிடு செய்யமுடியும்.. ஆங்கில படத்தை எடுத்தவர் அமெரிக்கன் விஸ்வரூபம் எடுத்தவர் ஆழ்வார்பேட்டை

Anonymous said...

Kamalai vambukhu izhukatti ungaluku thookam varadhe?!?!?!

Unknown said...

you are comparing 40 million $ with 20.

விஷ்வரூபம் எடுத்ததற்கே கமல் அழுது புரண்டு ரிலீஸ் செய்ய வேண்டியது ஆஹியது நினைவு இருக்கட்டும்.

Unknown said...

விஷ்வரூபம் எடுத்ததற்கே கமல் அழுது புரண்டு ரிலீஸ் செய்ய வேண்டியது ஆஹியது நினைவு இருக்கட்டும்.

Anonymous said...

Kamal has sown the seed which is a laudable effort. Stop being a stupid idly-vadai. Your article's intention only reminds me of three frogs in a well story

vijayaustin said...

Use your comparison for continuous improvement not to criticize others. Everybody has their own unique talents

Anonymous said...

|
|
|

Aru said...

I started watching this movie and felt the initial investigation part when the heroine joins the team was boring...So its upto all individual's taste...Comparing to Vishwaroopam was unwanted work...

Ravi said...

Its not wise to compare two films, that to made from different parts of the world. ( Like how its bad to compare two kids ). If you want to go ahead and compare it, please do so, I would love to see how innocence your "compare" writer is!

ZD3 is very well made film. Screenplay and the story were well paced. The final 30 mins was seen from the Navy SEAL night vision goggles ( not novel idea ), which makes the viewer to be in the scene itself.

Ravi
www.filmbulb.blogspot.in
www.teashoptalks.blogspot.in

எனி சந்தேகம்... நோ ப்ராப்ளம் said...

/// விஸ்வரூபத்தையும் இதையும் கம்பேர் செய்து ஒருவரை எழுதச் சொல்லியிருக்கிறேன். அவர் அனுப்பினால் இங்கே பிரசுரிக்கிறேன்///

யாரு.....

1. ஜார்ஜ் புஷ்ஷா......
2. முல்லா ஓமரா........
3. கமல தாசனா.........
4. சாருவா.............
5. ஜெக நாதனா.........(அப்பப்ப இவ வுல கமெண்டுவாரே)

இப்படி ஒரு உருப்படியான லிஸ்ட் இருக்க போறதில்ல.....

1. பாரதி மணியா.......
2. அன்பு மணியா......

விஸ்வரூபத்த சீண்டி விட்டுட்டு... சஸ்பென்ஸ்..... வைச்சு... வேற கடுப்ப கிளப்பணுமா....

யோவ்..... இட்லி.... நீ நல்லவனா கெட்டவனா........

எனி சந்தேகம்... நோ ப்ராப்ளம் said...

//// kg gouthaman said...
'அன்பின்' என்று ஆரம்பித்திருப்பதைப் பார்த்தால் ...../////////

சாரிப்பா........விமர்சனம் எழுதுற பட்டியல்ல........

Kg கௌதமன தான் ஜெக நாதன்னு தப்பா எழுதிட்டேன்...

மன்னிச்சுரு மச்சி.............

க விக்னேஷ் said...

Dear IdlyVadai...the budget of this movie is over double the budget of Vishwaroopam...so definitely there will be a difference in the quality of output...
Looks like this movie is a docu-fiction but Vishwaroopam is a pucca commercial Masala movie and has some real characters (like Osama) and incidents inter-woven into the script...
You are comparing two movies falling in two entirely different genres...
Epic Fail IdlyVadai!!!
When so-called super directors copy 100 English movies n serials into one Mega Budget movie (read Enthiran)...u ppl appreciate it and call it world class...when Kamal makes a movie you ridicule it...too bad ppl...

Anonymous said...

if you want to compare Kamal then do it with an Indian director and remember that he spend just half (20 million) of what spent (40 million) for Zero Dark 30. None of our director dare enough to spend a 20 million on a thriller movie in hollywood standard.

Anonymous said...

No Indian has the skill set to make a comment on Kamal. Comparing movies like this is height of stupidity. Its like comparing Idly with Dosa.

Anonymous said...

Is this post written by our old friend Bala. He is the master in comparing and criticising.

You cannot compare the industry output of a well advanced industry to the output of an industry which is not even 10% of the former.

By all standards, Viswaroopam is far better than IV's beloved Nonthiran.

Anonymous said...

Is this post written by our old friend Bala. He is the master in comparing and criticising.

You cannot compare the industry output of a well advanced industry to the output of an industry which is not even 10% of the former.

By all standards, Viswaroopam is far better than IV's beloved Nonthiran.

Anonymous said...

We compare Kamal and Viswaroopam to "Hollywood Standard". This is self explanatory. Hollywood is the benchmark for us. So Hollywood films will be of course better.

Anonymous said...

அமெரிக்காவில் பாலியியல் குற்றத்திற்கு 59 ஆண்டுகள் சிறை. நம்ம ஊரில் .. ராஜ்யசபா துணைத்தலைவர் பதவி .இப்படி எந்த துறையிலும் அமெரிக்காவை நெருங்க முடியாத நாம் ,
சினிமா மட்டும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கவேணும் என்று பேராசை படலமா ..

முல்லாவின் குல்லா said...

ஏம்பா இட்லிவட, இந்த படத்தோட இயக்குனரும் நான் ஹாலிவுட வுட்டு துபாய் போயிடுவேன்னு சொன்னா இந்த படமும் சிம்பதிநால கொஞ்சம் ஒடுமேப்பா... நம்ம கமல் ரசிகர்களுக்கும் கொஞ்சம் ஜில்லுனு இருக்கும் நம்ம ஆள போலவே அங்கிட்டும் ஒருத்தரு இருக்காருன்னு சந்தோஷபடுவாங்கோ.... ஹாலிவுட்காரங்களுக்கு ஒரு படத்த வசூல் பண்ண வைக்க என்னெல்லாம் அதிரடி, அழுகை, கோர்ட், கேசுன்னு செய்யனும்னு நம்ம சர்ச்சை நாயகன் கிட்ட கேட்டிருந்தா இந்த படத்தையும் எப்பிடி ஓட்டுறதுன்னு சொல்லி குடுதிருப்பாரே...

முல்லாவின் குல்லா said...

//அமெரிக்காவில் பாலியியல் குற்றத்திற்கு 59 ஆண்டுகள் சிறை. நம்ம ஊரில் .. ராஜ்யசபா துணைத்தலைவர் பதவி .இப்படி எந்த துறையிலும் அமெரிக்காவை நெருங்க முடியாத நாம் ,
சினிமா மட்டும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கவேணும் என்று பேராசை படலமா .. //

தம்பி சொல்லுறது கரெக்டுதானே? படம் வெளியாகுரதுக்கு முன்னே, ஹாலிவுட் அளவுக்கு எங்க படம் இருக்குனு சொல்ல வேண்டியது... அது வெளியாகி சந்தி சிரிச்சவுடனே, ஆஹா அது கமர்சியல் படம்னு உடான்ஸ் உட வேண்டியது... இல்லைனா, மேலே சொன்ன மாதிரி ஒரு சால்ஜாப்பு சொல்லிக்க வேண்டியது... யாரோட ரசிகருங்க நாங்க? ஆஸ்கார், ஆச்கார்னு ஒரு காலத்தில நாக்குல ஜொள்ளு வுட்டுகிட்டு இருந்துபுட்டு, அது தனக்கு இல்லைன்னு ஆன பிறகு, அதுவும் தனக்கு பின்னாடி வந்த ஆளு ஒன்னுக்கு ரெண்டா ஆஸ்கார அள்ளிகிட்டு போனத பார்த்த பிறகு, ஐயோ இந்த ஆஸ்கார் இனிமே வேணாம், இந்தியால அவங்க வந்து விருது வாங்கிகட்டும்னு "சீ சீ இந்த பழம் புளிக்கும்"நு சொன்ன நரி நடிகனின் ரசிகனுங்கதானே நாங்க, பின்ன இப்பிடிதான் பேசுவோம் :)

Anonymous said...

The irony is, in Middle East, Viswaroopam is banned and Zero Dark 30 running on all screens

Anonymous said...

"சீ சீ இந்த பழம் புளிக்கும்"நு சொன்ன நரி நடிகனின் ரசிகனுங்கதானே நாங்க

என்னங்க இப்படி சொல்லிடீங்க நடிகர் என்னடாணா , பாப்பதியம்மா உப்பு சரியா இருக்கா ன்னு சொல்லு - டயலாக் விடுவாரு

கௌதமன் said...

//எனி சந்தேகம்... நோ ப்ராப்ளம் said...
//// kg gouthaman said...
'அன்பின்' என்று ஆரம்பித்திருப்பதைப் பார்த்தால் ...../////////

சாரிப்பா........விமர்சனம் எழுதுற பட்டியல்ல........

Kg கௌதமன தான் ஜெக நாதன்னு தப்பா எழுதிட்டேன்...

மன்னிச்சுரு மச்சி............. //
சாரி நான் சினிமா - அதிலும் புதுப் படங்கள் எதுவும் பார்ப்பதில்லை.

கௌதமன் said...

//எனி சந்தேகம்... நோ ப்ராப்ளம் said...
//// kg gouthaman said...
'அன்பின்' என்று ஆரம்பித்திருப்பதைப் பார்த்தால் ...../////////

சாரிப்பா........விமர்சனம் எழுதுற பட்டியல்ல........

Kg கௌதமன தான் ஜெக நாதன்னு தப்பா எழுதிட்டேன்...

மன்னிச்சுரு மச்சி............. //
சாரி நான் சினிமா - அதிலும் புதுப் படங்கள் எதுவும் பார்ப்பதில்லை.

sree said...

zero dark 30 is historical drama whereas vishwaroopam is action thriller.It is foolish to compare these distinct movies

R. J. said...

Enough comments already! It is IV's turn to respond - We are waiting! - R. J.

IdlyVadai said...

RJ மற்றும் பலர்,

நான் எங்கே விஸ்வரூபம் ZD30 கம்பேர் செய்தேன்.

//ஹாலிவுட் ரேஞ்சுக்குப் புகழ்வதை//

என்று முதலில் சொல்லியிருக்கிறேன். நான் சொன்னது அவர்களின் திரைக்கதை, காட்சிக்கு கொடுக்கும் முக்கியதுவம் போன்றவை.

நாம் ஹாலிவுட் மாதிரி எடுத்திருக்கிறோம் என்று சொல்லும் போது அதை கம்பேர் செய்தால் என்ன தப்பு ?

குழந்தை ராஜா போல இருக்கிறான் என்றால் அவன் நிஜ ராஜா கிடையாது என்று இங்கே இருக்கும் கமெண்ட் பல உணர்த்துகிறது. நன்றி.

//கமல் எவ்வளவு அசட்டுத்தனம் செய்திருக்கிறார்//

வெட்டியாக பேசும் கடவுள் டயலாக். எங்காவது FBIல் கடவுள் பற்றி வசனம் பேசுவோமா ? வடிகட்டிய லூஸு தனம். படத்தில் சீரியஸ்நெஸ் போய்விடுகிறது.

இந்த படத்தை தமிழில் எடுத்திருந்தால் ஓசாமா டூயட் பாடியிருப்பார் என்று சொன்னது விஸ்வரூபம் பற்றிய கமெண்ட் இல்லை. தமிழ் சினிமா பற்றிய கமெண்ட். கமல் எடுத்த விஸ்வரூபத்துக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.


ezilmaran said...

தரத்தை கொடுக்க வேண்டும் என்றால் பட்ஜெட் பார்க்காமல் செலவு செய்ய வேண்டும். 100 கோடி எங்கே? 1000 கோடி எங்கே?.இதற்கே போட்ட முதலை எடுப்பதற்கே முழி பிதுங்கி விடுகிறது.ஆங்கில படங்களுக்கு உலக மார்கெட் இருக்கிறது. அதனால் தைரியமாக செலவு செய்கிறார்கள். கமல் இந்த செலவில் இவ்வளவு தரத்தை கொடுத்ததை பாரட்டத்தான் வேண்டும்
\

Ravi said...

IV,

I don't understand the point in your reply comments.

By making an attempt to relate Viswaroopam and ZD30 your trying to demote both the films.

Right from the next day of Osama killing, ZD30 makers had full access to all the classified information. This is enough for any obtuse film-maker to create a sensational and riveting film. ( With due respect to Kartyn, remb The Hurt Locker ).

Flaws will be there in any product.

Did Kamal anywhere in his numerous interviews or the movie poster say that Viswaroopam is on Hollywood scale !!, no, right?

I am not sure which version you saw ( ZD30 ), the actual movie is 2 Hrs 37 mins, in which first 30 mins they show only torture of detainees, it was gross and had little to do with the actual story.

You quote the FBI scene where they talk about god, which is a வடிகட்டிய லூஸு for you. There is a scene in ZD30, when the CIA Director ( with 10+ ppl ) will be briefed about the Osama compound, he will ask about the film' hero ( heroine here ) when she clears some fact, for which she will reply that "she is the mot___fu_k_r who found this place". Woww!! If you feel that was an American aggression, then FBI scene in Viswaroopam is Indian nakal'ism ( There is no point made in both the scenes and this is typical of Kamal to drag "god" )

Ravi
www.filmbulb.blogspot.com
www.teashoptalks.blogspot.com
க விக்னேஷ் said...

Dear IdlyVadai...there is nothing wrong in comparing Hollywood movies to Tamil movies when the maker claims it to touch the Hollywood standards...but the comparison should not be made across genres...that was my only concern here...
Compare Vishwaroopam with Die-Hard...I will not complain...even in that case you should think about the budget and market involved...this is my humble opinion :)

Sundar said...

Every movie has it's own plus and minus. For Kamal movie you are targeting only the minus.
"கமல் எவ்வளவு அசட்டுத்தனம் செய்திருக்கிறார்" என்று சொல்லும் நீங்கள் ZDT படத்தில் வரும் அசட்டுத்தனங்களை கவனிக்க மறந்தது ஏனோ? Read the interview of the real shooter who shot Bin Laden, about the movie ZDT. I have given the link. இதில் உள்ள அபத்தங்கள் உமக்கு புரியும். He has appreciated the performance of the character Maya. At the same time he has pointed out some silly things in the movie..

http://movies.yahoo.com/blogs/2013-oscars/seal-team-6-shooter-calls-jessica-chastain-zero-202410085.html

Sundar said...

Every movie has it's own plus and minus. For Kamal movie you are targeting only the minus.
"கமல் எவ்வளவு அசட்டுத்தனம் செய்திருக்கிறார்" என்று சொல்லும் நீங்கள் ZDT படத்தில் வரும் அசட்டுத்தனங்களை கவனிக்க மறந்தது ஏனோ? Read the interview of the real shooter who shot Bin Laden, about the movie ZDT. I have given the link. இதில் உள்ள அபத்தங்கள் உமக்கு புரியும். He has appreciated the performance of the character Maya. At the same time he has pointed out some silly things in the movie..

http://movies.yahoo.com/blogs/2013-oscars/seal-team-6-shooter-calls-jessica-chastain-zero-202410085.html

Sundar said...

Every movie has its own plus and minus. But when talking about kamal's movie you are targeting only the minus.
"கமல் எவ்வளவு அசட்டுத்தனம் செய்திருக்கிறார்" என்று சொல்லும் நீங்கள் ZDT படத்தில் வரும் அசட்டுத்தனங்களை கவனிக்க மறந்தது ஏனோ ? Read the interview of the real shooter who shot Bin Laden, about the movie ZDT. இதில் உள்ள அபத்தங்கள் உமக்கு புரியும். He has appreciated the character maya and her performance. At the same time he has pointed out so many mistakes like the length of the Mission, Speaking to the another soldier during the mission, Calling Bin laden's name two times before shooting and so on.. Here's the link.
http://movies.yahoo.com/blogs/2013-oscars/seal-team-6-shooter-calls-jessica-chastain-zero-202410085.html

Anonymous said...

u shud read www.huffingtonpost.com. what a blog. perhaps the best. compared to that idlyvadai is nothing.

i have told somebody to write a comparison between huffington and idlyvadai. once they are ready i will publish it.