பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 26, 2013

சாதா குழந்தை to சூப்பர் குழந்தை - 4

இசையில் தொடங்குதம்மா:
நமது மூளைக்கும், இளையராஜாவின் மூளைக்கும் அமைப்பிலும், இயங்கும் விதத்திலும் நிச்சயமாக நிறைய மாற்றங்கள் இருக்கும். காரணம்-இசை.
கடந்த இருபத்தைந்து வருடங்களாக நடந்து வரும் ஆய்வுகளில் தெரிய வருவது இதுதான். குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்கப் படும் இசையால், அவர்களின் மூளையின் அமைப்பில், செயல்பாடுகளில் நல்ல வளர்ச்சியை உருவாக்க முடியும் என்பதே.
இந்த உலகிற்கு வரும் முன்னரே, குழந்தைகள் அம்மாவின் குரலை, தனித்து இனங்கண்டு கொள்ளப் பழகி விடுகின்றன.சொல்லப் போனால், குழந்தை கேட்கும் முதல் இசையும் அதுதான்.அம்மாவின் குரலை அரவணைப்பாக உருவகப் படுத்தும் குழந்தை, பிறந்த பின்னரும் அதையே தொடர்கிறது;


கர்ப்பத்தில் இருக்கையிலேயே பழக்கப் படுத்தப் பட்ட , கேட்ட எந்த ஒரு இசையுடனும், ஒலியுடனும்-அது அம்மா பாடிய பாடலோ, வாசித்த ஏதேனும் ஒரு இசைக் கருவியின் இசையோ அல்லது உரக்கக் கேட்ட இசையோ-, குழந்தை வெகு விரைவாக அதனுடன் ஒத்திசைய முடிகிறது.

பேச முயற்சிப்பதற்குப் பல வாரங்களுக்கு முன்னரே, குழந்தைகள் தாயின் தாலாட்டுப் பாடல்களுக்கு பதில் கொடுக்க ஆரம்பிக்கின்றன. தொட்டிலில் போட்ட என் எட்டு மாதக் குழந்தையை ஆட்டிக் கொண்டே, ரே..ரே…ரே..ரே.. என்று ராகம் போட்டுக் கூவி, சட்டென்று நிறுத்தினால், நான் விட்ட இடத்திலிருந்து அவனும் ரே ரே என்று மழலையில் தொடரக் கேட்டிருக்கிறேன். குழந்தைகள்,தங்களை அறியாமலேயே ஒலியை உள்வாங்கி அதற்கு பதில் தருகின்றன.பொருள்களைத் தொடுகையில், கீழே போடுகையில், தட்டுகையில், கரண்டி போன்ற ஏதேனும் ஒன்றை வைத்துத் தட்டுகையில் உண்டாகும் ஒலியால் அவர்கள் கவர்ந்திழுக்கப் படுகிறார்கள்.

என் ஒன்றே கால் வயது மகன், காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடங்களுக்குள்,நேராக சமையலறைக்கு வந்து கைக்குக் கிடைத்த பாத்திரம், கரண்டியைக் கொண்டு லொட்டு லொட்டென்று அவனுக்குத் தெரிந்த சுப்ரபாதத்தை இசைப்பது தினசரி வாடிக்கையாகி விட்டது.

குழந்தைகளின் நகர்வு இயக்கத்திற்கும், அவர்களின் ஒலி எழுப்பும் திறனுக்கும் உள்ள தொடர்பை நரம்பியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளார்கள். சில குறிப்பிட்ட நகர்வு இயக்கங்களை மேற்கொள்ள முடியாத குழந்தைகளால், சில குறிப்பிட்ட ஒலியையும் உண்டாக்க முடியவில்லை.

இசையும், நகர்வும் ஒருமித்த ஒரு உருவாய் குழந்தை வளர்கிறது.தன் உடலையே ஒரு இசைக் கருவியாக இந்த உலகுடன் இயைந்து இசைக்கும் இசையாக வளரும் குழந்தையின் கட்டுப்பாடுகளற்ற நகர்வு பள்ளிக்கு சென்ற பிறகு, அதன் இயல்புத் தன்மையை இழக்கத் துவங்குகிறது.

அறிவியல் உலகில்,குழந்தையின் மூளை வளர்ச்சியில் இசைக்கு இருக்கும் பங்கு குறித்த விவாதங்கள் நீண்ட காலமாக நிகழ்ந்து கொண்டே இருந்தன.

மொஸார்ட்டின் இசையைக் கேட்ட குழந்தைகளின் ந்யூரான் செல்களின் அடர்த்தி (density) அதிகமாகி அதன் காரணமாக ஞாபக சக்தி, புதிர்களுக்கு பதில் சொல்லும் திறன்கள் அதிகரித்ததை ஆய்வு முடிவுகள் உணர்த்தின.
மிகக் குறைந்த வயதிலேயே இசையைக் கற்றுக் கொண்ட குழந்தைகள் மொழித் திறன், கணிதத் திறன், செஸ் போன்ற நுட்பமான விளையாட்டுகளை விளையாடத் தேவையான ஒன்றிரண்டு படிகள் அட்வான்ஸாக சிந்திக்கும் திறன் ,ஞாபக சக்தித் திறன்,மற்றும் பொதுவான ஐ.க்யூ போன்ற எல்லாத் திறன்களும் அதிகரித்து விளங்கின. இது போன்று, இசையால் Spatial Temporal Reasoning, and Language Analytical Reasoning திறனும் அதிகரிப்பதை “Mozart Effect” என்று அழைக்கிறார்கள்.(இந்த “Mozart Effect” குறுகிய காலத்திற்கே என்று வாதிடுவோரும் உண்டு). சிக்கலான கணிதப் புதிர்களை விடுவிக்க மூளையின் எந்தப் பகுதி நன்கு செயல்பட வேண்டுமோ, அந்தப் பகுதியை இசை நன்கு தூண்டி செயல்பட வைக்கிறது.எனவே, இசையில் ஆர்வமுடன் இருக்கும் குழந்தைகள் கணிதப் புலிகளாகவும், கணிதத்தில் புலிகளாக இருக்கும் குழந்தைகள் இசையை வெகு சீக்கிரமும் கற்க முடிகிறது.
உலகப் புகழ் பெற்ற கணித மேதை ராமானுஜனுக்கு, கணிதத்திற்கு அடுத்து இசையில்தான் பெரும் ஆர்வம் இருந்ததாம். சென்னையில் இருக்கையில் அப்போதைய இசை மேதை டாக்டர்.எம்.டி.ராமனாதம் அவர்களது கர்நாடக இசைக் கச்சேரியைத் தவற விட மாட்டாராம். இசை ஆர்வத்தினால் ஒரு குழலை வாங்கி அதை வாசித்துப் பயிற்சி பெற்று வாசித்ததோடு மட்டுமல்லாமல், இசை ரசனையுள்ள நண்பர்களுடன் அடிக்கடி சந்தித்து இசை குறித்த கருத்துக்களைப் பகிரவும் செய்வாராம்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பற்றி பரவலாக நமக்குத் தெரியாத விஷயம், அவர் மிகச் சிறந்த இயற்பியல் விஞ்ஞானி மட்டுமல்ல; வயலின் இசையை மிகுந்த ஆர்வத்துடன் வாசிக்கும் கலைஞரும் கூட.எப்போதெல்லாம் தன் ஆராய்ச்சிப் பணிகள் சிக்கலாகி, தீர்வுகளைக் கண்டறிய சிரமப் படுகிறாரோ, அப்போதெல்லாம், ஒரு சிறு பிரேக் எடுத்துக் கொண்டு, மொஸார்ட்டின் இசையை தனது வயலினில் இசைத்து மகிழ்வாராம்.
வெவ்வேறு வகையான இசையானது மூளையில் வெவ்வேறு விதமான அலைவரிசையை (ஆல்ஃபா, பீட்டா போன்ற ) உருவாக்க வல்லவை. மிகுந்த சப்தத்துடன் கூடிய ஹெவி மெட்டல்,ராக் போன்ற இசையை விடுத்து, மெல்லிய, க்ளாசிக்கல் வகை சங்கீதத்தை குழந்தைகளைக் கேட்க வைக்கலாம்.
இசையினால் குழந்தைகளின் மூளையில் ஏற்படும் வளர்ச்சிகள் எல்லாமே, வெறுமனே இசையை, அவர்கள் கேட்பதால் மட்டுமே நிகழ்ந்து விடுவதில்லை. ஏதேனும் ஒரு இசைக் கருவியை (பியானோ அல்லது வயலின் அல்லது வேறு ஏதேனும் ஒன்று) வாசிக்கப் பயிற்சி பெறுவதே மேற்கூறிய எல்லா நல்ல பலன்களையும் ஒருசேர அளிக்க வல்லது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளின் வயதும் அதற்கேற்ற இசைப் பயிற்சியும்:
கர்ப்ப காலத்தில்:
நல்ல இனிமையான, மெல்லிய இசையை தொடர்ந்து கேட்கவும்
பச்சிளம் குழந்தைகள்:
மெல்லிய, சிறிய, தாலாட்டுப் பாடல்கள், நர்சரி ரைம்ஸ்களை, குழந்தைகளைக் குளிப்பாட்டுகையில், உடை அணிவிக்கையில், உணவு ஊட்டுகையில், உறங்க வைக்கையில் பாடலாம். திரும்பத் திரும்ப வரும் வாக்கியங்கள் இருப்பது குழந்தைகள் கிரகித்து மகிழ்வதற்கு எளிதாக இருக்கும். தாளத்துடன் கூடிய ரித்மிக் பாடல்களை, அவர்களை மிருதுவாகத் தட்டிக் கொடுத்தோ, அவர்கள் கைகளைத் தட்டச் சொல்லியோ கற்றுக் கொடுத்தால், மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்கள் அவர்களது பாணியில் பதிலுக்கு இசைப்பதைக் காணலாம்.
தவழும் குழந்தைகள்:
ஒன்றரை வருடம் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகள் சின்னச் சின்ன பாடல்களை விரும்புவர். ஞாபக சக்தி இன்னமும் முழுவதும் வளராத இந்தப் பருவத்தில் ஒரு சில வார்த்தைகளையே அவர்களால் நினைவில் கொள்ள முடியும்.நகர்வும், இயக்கமும் அவர்களுக்கு மிகவும் விரும்பத் தக்கதாகி, கையசைவுகளுடன் கூடிய நர்சரி ரைம்ஸ்கள் ஒரு ஆர்டர் படி நினைவில் கொள்ள வசதியாக இருக்கும்.மீண்டும் மீண்டும் சொல்லப் படும் ரைம்ஸ்களை நினைவில் வைத்திருந்து சொல்ல முடியும்.

பள்ளிக்கு முந்தைய குழந்தைப் பருவத்தில்: (pre-schoolers)
இந்தக் குழந்தைகள், நர்சரி ரைம்ஸ்,பாடல்கள்,அறிமுகமான பொருள்கள், பொம்மைகள்,விலங்குகள்,விளையாட்டு அசைவுகள், அறிமுகமான மனிதர்கள் என அனைத்தையும் விரும்புவர்.விரல், கைகளால் இசைக்கக் கூடிய கருவிகள், இசையுடனோ, அல்லது இல்லாமலோ ஒலிக்கும் பாடல்கள் போன்றவற்றை அறிமுகம் செய்யலாம்.இந்த காலகட்டத்தில், வெவ்வேறு இசையின் வெவ்வெறு வடிவங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். நாட்டுப் புறப் பாடல்கள், சிம்ஃபொனிகள், ஒபேராக்கள்,ராக் அன் ரோல், அவர்கள் பார்த்த படங்களின் சவுண்ட் ட்ராக்ஸ் என எல்லாவற்றையும் அறிமுகப் படுத்தவும்.அவர்களை வெவ்வேறு விலங்குகளாக உருவகப் படுத்தி, அந்த விலங்குகளின் ஒலிகளை, வெவ்வேறு வாகனங்கள், பறவைகள் போல ஒலி எழுப்பச் சொல்லி கற்றுத் தரவும்.பின்பு அவைகளை இசை வடிவில் அவர்களுக்குப் போட்டுக் காட்டவும்..

குழந்தைகளுடன் சிறு சிறு நடன் அசைவுகளை நீங்களும் மேற்கொள்ளவும். ஐந்து வயதிற்குள்ளாகவே, குழந்தைகளுக்கு நடனமாடக் கற்றுக் கொடுப்பது நல்லது. நடனம் என்றால், சரியான அபிநயம் பிடிக்க ட்ரில் வாங்குவது போன்ற கண்டிப்பான நடனம் அல்ல. குழந்தைகளே மகிழ்ந்து, அவர்கள் நம்மைப் பார்த்து இமிடேட் செய்யும், சில சமயம், அவர்கள் பாணியில் புதிய அசைவுகளைக் கொண்ட அவர்கள் மகிழ்ந்து சிரமமே இல்லாமல் செய்யும் நடனம்.
இசையும் , நடனமும், குழந்தைகளின் புலன்களுக்கு இனிமையாகவும், தாளகதியுடனும் இருத்தல் அவசியம். பாடலின் அர்த்தத்தை விட ஒலியின் அழகை அவர்களை ரசிக்க வைக்கச் செய்ய வேண்டும்.உயிர்ப்புள்ள அசைவுகளும், பதிவுகளும், அவர்கள் காதுகளையும், மனதையும் மகிழ்விக்கின்றன.தாள கதியில் இருக்கும் நடன அசைவுகள் உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிகின்றன.

இசையைக் கற்பிக்க சில டிப்ஸ்:
1.பாடல்களைப் பாடவும்: சூழ்நிலைக் கேற்றவாறு, உறங்க வைப்பதற்கோ, வெளியில் அழைத்துச் செல்கையிலோ அதற்கேற்ற விதமான பாடலைப் பாடவும். குழந்தை பாடா விட்டாலும், அதனுடன் தொடர்புடைய செயலை (கைதட்ட, தலையாட்ட) செய்ய ஏதுவாக இருக்கும்.
2.நீங்களே முழுப் பாடலையும் பாடவும். வரி வரியாக சொல்லித் தர முயற்சிக்காமல், முழுப்பாடலையும், குழந்தை கவனிக்குமாறு பாடவும்.ஒரே பாடலை பலமுறை பாடிக் காட்டவும்.
3.பாடலின் எல்லா வார்த்தைகளையும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க முயற்சிக்காதீர்கள்-எவ்வளவு தெரிகிறதோ அவ்வளவு பாடட்டும். அதுவே இன்பமாக இருக்கும்.
4.பாடலின் ராகம், டெக்னிக் போன்றவைகளை வலியக் கற்றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டாம்.அவர்கள் எப்படிப் பாடுகிறார்கள் என்பதை விட பாடுகிறார்கள் என்பது முக்கியமானது.
5.குழந்தையின் பாடலை ரெகார்ட் செய்து அவர்களுக்கு மீண்டும் போட்டுக் காட்டவும். அந்தப் பாடலுக்கே அவர்களை ஆடச் சொல்லவும்.
6.அவர்களுக்கு நன்கு தெரிந்த பாடல், ரைம்ஸில் அதில் வரும் பெயரை எடுத்து விட்டு, அவர்கள் பெயரைப் போட்டுப் பாடவும்.
உதாரணம்: ஜானி ஜானி எஸ் பாப்பா
7. மிக மெதுவாக, குழந்தை நீங்கள் விட்ட சொல்லை நிரப்புமாறு பாடவும்.
உதாரணம்: ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில்_____________ ஹவ் ஐ வொண்டர் வாட் யூ ______________
இசையுடன் அபரிமிதமான ஈடுபாட்டில் இருக்கும் குழந்தையின் அறிவு வளர்ச்சி அதிகரிப்பதோடு மட்டுமல்ல, பிற்காலத்தில் இசையை நன்கு ரசிக்கும் ஒரு இசை ரசிகனாகவும் அவனை மாற்றுகிறது.
எனவே, ஸ்டார்ட் ம்யூஸிக்
டாக்டர் பிரகாஷ்
www.rprakash.in


அப்பா: குழந்தைக்கு கணக்கு வரலை, அவனை மியூசிக் கிளாஸுக்கு அனுப்ப போறேன்.

அம்மா: அதுக்கு பதிலா டான்ஸ் கிளாஸுக்கு அனுப்பலம் கணக்கு இன்னும் நல்லா வரும்.

அப்பா: ஜோக் அடிக்காதே

அம்மா: நீங்கதாங்க முதல்ல ஜோக் அடிச்சீங்க !

13 Comments:

Anonymous said...

This yellow comment is too much...looks like a dis-respect to Dr.Prakash

R. J. said...

My son informe me that his wife has taken their 9 month old daughter to the 'Music' class. I was surprised. He clarified that it is a weekly session, the kids learn to clap hands first and slowly start enjoying music and then to learn. We are all brought by amma's lullabies and classical songs in the infant stage and then beautiful cine music of MSV, KVM and now we have 'graduated' to hear kuththu songs by with no lyrics! - R. J.

cho visiri said...

"நான் விட்ட இடத்திலிருந்து அவனும் ரே ரே என்று மழலையில் தொடரக் கேட்டிருக்கிறேன். குழந்தைகள்,தங்களை அறியாமலேயே ஒலியை உள்வாங்கி அதற்கு பதில் தருகின்றன"

That is really true. Twenty years ago my sister's daughter (at that time she about nine months old) used to reproduce the sounds of the same lengh/period. When I said (singing... I mean) Hm Hm Hm after two seconds Hm Hm Hm came from her. When I said (again I mean singing) Hmmm Hmmm Hmmm after about two seconds, she reciprocated with Hmmm Hmmm Hmmm andso on and so forth.
Today she is not a singer... but she stands first in her college B.E Final Year.

These things were repeatedly discussed by me with my brothers.....

Anonymous said...

fantastic...

Anonymous said...

Really useful post. Thank you.

Anonymous said...

excellent posts.. my friends asked me if this can be translated to english to make useful for wider audience...

Let me know if this posts can be translated to english.

”தளிர் சுரேஷ்” said...

பயனுள்ள ஆலோசனைகள்! பகிர்வுக்கு நன்றி!

BalajiS said...

என் குழந்தைக்கு ஒரு வயதில் இருந்து லாலி லாலி (சிப்பிக்குள் முத்து ) பாடி தூங்க வைப்பேன்.

After few months,
ஒரு நாள் அவள் மழலை மொழியில் (யாயி யாயி)ஒரு வரி முழுதும் அதே ராகத்தோடு பாடினாள் .

செல்வி said...

தமிழ அருமையா சொல்லிவிட்டு கடைசியா ஆங்கில பாட்டை சொல்லிவிட்டாரே!!!!!!!

"ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில்_____________ ஹவ் ஐ வொண்டர் வாட் யூ ______________" என்று

தமிழ எவ்வளவு அருமையனா பாட்டுக்கள் உள்ளன.. அம்மா இங்கே வா வா.... !!!!!!!!

ஜெயக்குமார் said...

நல்ல பதிவு. இப்படி கின்டல் செய்வதற்கு பதிலாக மஞ்சகமென்த் இல்லமல் இருப்பதே சிறந்தது

Anonymous said...

I WOULD LIKE TO COMMENTON POINT NO 6 WHICHSAYS ABOUT PUTTING THE CHILDS NAME IN RHYMES. IN FACT AS A FATHER I WAS NEVER EXPOSED TO SUCH IDEAS. BUT WHEN MY CHILDREN WERE 3 TO 5 YEARS OLD IUSED TO NAME ALL THE HEROS IN STORIES I TOLD AS THEM.THAT IS I USED MY SONS NAMES INSTEAD OF THE MAIN CHARACTERS NAMES. IT HAD A TERRIFIC EFFECT. THEY IMAGINED THEMSELVES TO BE GREAT MEN. THIS SHOWED IN THEIR ACADEMIC EXCELLENCE. BOTH OF THEM ARE PROUTS OF DAV GOPALAPURAM AND MY SECOND SON STOOD ALL INDIA FIRST IN 10TH.
MY FIRST SON IS A SURGEON AND GOT HIS SEAT IN TN THROUGH MERIT.
I WOULD ADVISE ALL PARENTS TO SPEND MAXIMUM TIME WITH THEIR CHILDREN AND TELL THEM ALOT OF STORIES. DONT GIE THEM BOOKS AND MAKE THEM READ THE STORIES. YOU TELL THE STORIES IN YOUR WORDS.
THE MORE YOU SPEND TIME WITH THEM THE BRIGHTER THEY WILL BECOME.
I AM AN ORDINARY MIDDLE CLASS PARENT. BY SPENDING TIME WITH MY CHILDREN I MADE THEM FIRST RANKING KIDS.
THEY DID NOT GO TO ANY COACING CLASSES OR SUMMER CAMPS OR SPECIAL SCHOOLS.
SHAPING THE FUTURE OF OUR CHILDREN IS IN OUR HANDS. PLEASE DONT HAND IT OVER TO THIRD PARTIES.

Vadivelan said...

Antha joke avasiyama intha postla... (looks like kamal's movie, unnecessary comments or joke in his film)

Good post. Thanks Dr. Prakash

Vadivelan said...

Antha joke avasiyama intha postla... (looks like kamal's movie, unnecessary comments or joke in his film)

Good post. Thanks Dr. Prakash