பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 06, 2013

சாதா குழந்தை To சூப்பர் குழந்தை - 1


வணக்கம் இட்லி வடை வாசகர்களே.

சாதா To சூப்பர் குழந்தை மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
இந்தத் தொடரை எழுதும் நான் பிரபல குழந்தை உளவியல் நிபுணரோ அல்லது நரம்புவியல் மருத்துவரோ அல்ல.

பிறந்து வளர்ந்தது மதுரை மண்ணில். வேலைக்காகக் கால்நடை மருத்துவம் சேர்ந்து, மார்க்கெட்டிங்கே என் மனதிற்குகந்தது என்று உணர்ந்து எம்.பி.ஏ பயின்று தற்போது பெங்களூரில் ஒரு தனியார்க் கம்பெனியில் மார்க்கெட்டிங் மேனேஜராகப் பணிபுரிகிறேன்; ஒன்றே கால் வயதுக் குழந்தையின் தந்தை.அந்தக் குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டி,அதற்கான பயிற்சிகள், வாசிப்புகளில் இறங்கி, நான் அறிந்து கொண்டதை, தமிழ் கூறும் நல்லுலகத்துக்குப் பரிமாற விரும்பியதன் விளைவே இந்தத் தொடர்.

குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு மட்டும் தான் என்றில்லை- எல்லோருக்குமே இது அவசியமானது என்பதைப் போகப் போகப் புரிந்து கொள்வீர்கள்.

ஒரு குழந்தையின் வாழ்வின் முதல் நான்கைந்து வருடங்களில் அதற்கு என்ன நிகழ்கிறது என்பதைப் பொறுத்தே அந்தக் குழந்தையின் எதிர்காலம் அமையும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் பட்டுள்ளது.

அப்படியான அந்த முக்கியமான காலகட்டத்தில் சரியான முறையில் குழந்தைகளை வளர்ப்பது எப்படி? அதன் மூளை வளர்ச்சியை,படைப்பூக்கத்தை மேம்படுத்துவது எப்படி ? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையாக வருவதே இந்த “சாதா குழந்தை To சூப்பர் குழந்தைத் தொடர்.

அன்புடன்
டாக்டர்.பிரகாஷ்.
www.rprakash.in

போன வாரம் விஜய் டிவியில் பெற்றோர்கள் கோபம் வந்தால் தங்கள் செல்லங்களை செல்லமாக எருமை, கழுதை, நாயே என்று திட்டுவதாக  சொன்னார்கள். அதனால் குழந்தை டாக்டர் இந்த தொடரை எழுதுவதை விட கால்நடை டாக்டர் எழுதுவது தான் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் :-) கருத்துக்கள் வழக்கம் போல வரவேற்கப்படுகிறது...

7 Comments:

Unknown said...

Good, expecting his writing in idlyvadai.

Anonymous said...

சாரி சார். அந்த இண்டெர்னெட் டாக்டர் ப்ரகாஷ் இவர்தானா? வெளில வந்துட்டாரா?

R. J. said...

With due respects and regards, is this site meant for such serials? Have you considered if most of your readers will be benefited by these? There are numerous books and specialists to help such parents with new born / young children. I am sorry if I had offended you / Dr. Prakash by my comment. - R. J.

krishna said...

Dr.Prakash, will it be posted on ur webpage too?
Expecting eagerly to read it.
Please continue

krishna said...

Awaiting your writings on this eagerly... Pls continue...

Anonymous said...

I am eagerly awaiting your episode, please post it and I am sure you will be posting it on a fixed interval without us to worry too much without knowing when the next episode be posted :-)

dr_senthil said...

குழந்தைகளை முதலில் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் பின்பு உலகை வெல்லலாம்- நானேதான்