பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 01, 2013

விஸ்வரூபம் - No Strings attached!கமல் - அரசு - இஸ்லாமிய தலைவர்கள் பேச்சு வார்த்தை நடந்து முடிந்து இறுதியில் விஷ்வரூபம் வெளிவந்துவிட்டாலும் அதற்குப் பின்னணியில் நிகழ்ந்த விசயங்கள் நமக்கு உணர்த்துவது என்ன?

தமிழ்த் திரையுலகிற்கும் தமிழக அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை நாம் அறிவோம். காலம்காலமாக சினிமா பிரபலங்கள் அரசியலில் ஜொலிப்பது கண்கூடு. முதல்வர், எதிர்கட்சி தலைவர், உப எதிர்கட்சி தலைவர் எல்லாம் சினிமாவிலிருந்து வந்தவர்கள். இதில் பெருமைப்பட ஒன்றும் இல்லை. இதன் பின்புலத்தை ஆராய்ந்து பார்த்தால் தமிழ்த் திரையுலகு என்னவொரு பரிதாப நிலையில் இருக்கிறது என்பது புரியும்.

யார் ஆட்சியில் அமர்ந்தாலும் அவர்களுக்குப் பணிந்து நடக்க வேண்டிய சூழ்நிலை. அரசியலை விட்டு வெகுவாக ஒதுங்கியிருக்கும் வெகு சிலரைத் தவிர மற்றெல்லோருமே திமுக (அ) அதிமுக ஆகிய இரு கட்சிகளுள் ஒன்றிடம் இணக்கமாக இருப்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. நடிகர்கள், நடிகைகள், பாடலாசிரியர்கள், எழுத்தாளர்கள் என்று யாரை வரிசைப்படுத்தினாலும் அவர்களுடன் ஏதாவது ஒரு கட்சி கொடியை சம்பந்தப்படுத்திவிடலாம். சாமர்த்தியமாக இரு கட்சிகளுக்கும் சலாம் போட்டு கல்லாவை நிரப்புபவர்களும் இல்லாமல் இல்லை.

புதிதாக யார் ஆட்சிக்கு வந்தாலும் ஏதோ ஒரு காரணம் சொல்லி, நேரு விளையாட்டு அரங்கத்தில் டான்ஸ் பாட்டு என்று ஆட்சியில் இருப்பவருக்கு திரைத்துறையினர் பெரிய நன்றி நவிலல் நிகழ்ச்சி ஒன்றை அரங்கேற்றுவார்கள். முதல்வர் நிவாரண நிதிக்கும் அவ்வப்போது சில தொகைகள் கைமாறும். தற்போது அத்தகைய நிகழ்ச்சி இன்னும் அரங்கேறவில்லை என்பதே தற்போதைய ஆளும் கட்சிக்கு அவர்களிடத்தில் அத்தனை வரவேற்பு இல்லை என்பதைக் காட்டுகிறது. ஆனால் இன்னும் மூன்று வருடங்கள் பார்க்க வேண்டும்.

திரையுலகப் பிரபலங்கள் அப்போதைய ஆளுங்கட்சியுடன் இணக்கமாக இருப்பதில் தவறேதும் இல்லை. இருவருக்கும் win-win நிலைமை தான். இவர்களுக்குக் காரியம் எளிதில் நிறைவேறும். அவர்களோ தங்கள் கட்சிகளை சினிமா பிரபலங்களால் மேலும் மெருகூட்டிக் கொள்ளுவார்கள். பிரச்சனை எப்போது ஆரம்பம் என்றால் திரைத்துறையினர், ஆளும் கட்சிக்கு எதிரான ஒரு அரசியல் நோக்கோடு இருக்கும் போதுதான்.

அரசியல் காரணங்களால் திரையுலகப் பிரபலங்கள் பாதிக்கப்படுவது இது முதன்முறையல்ல. 1973-ல் வெளிவந்த எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ அப்போதைய ஆளும் தி.மு.க.வால் தமிழ்நாட்டில் அல்லோல கல்லோலப் பட்டது. ஆனால் தடைகளை மீறி வெளிவந்தபின் அது ஒரு பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்.

இதேபோல் கடந்த தி.மு.க. அரசின் போது தனது ‘காவலன்’ படம் வெளியாவதில் பெரும் பிரச்சனையைச் சந்தித்தார் நடிகர் விஜய். சன், ரெட் ஜெயண்ட், க்ளவுட் நைன் என கலைஞரின் குடும்பம் இத்துறையை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்க தியேட்டர்கள் கிடைப்பதே பெரும்பாடாக இருந்தது. விரைவில் அம்மா ஆட்சிக்கு வந்ததும் ‘வேலாயுதம்’, ‘நண்பன்’ எனப் பெரும் வெளியீடுகள் பட்டையை கிளப்பின. ‘விஷ்வரூப’த்தைப் போன்ற கதைக்களனோடு எடுக்கப்பட்ட ‘துப்பாக்கி’க்குக் கூட பல இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்து தடைகள் வந்தாலும் வந்த வேகத்தில் அவை மறைந்துவிட்டன.

தென்னிந்திய திரைப்படத் தொழிற்சங்கத் தலைவர் சரத்குமாரும் இதற்கு விதிவிலக்கல்ல. அப்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வுடன் இணக்கமாக இருந்த பொழுதில் அவரது ‘நாட்டாமை’ படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்த போதே ஜெயா டிவியில் வெளிவந்த கூத்து நடந்தது. அதன் பிறகு தி.மு.க.வில் இணைந்த அவர் 2002-ல் ராஜ்ய சபை எம்.பி. பதவி வரைக்கும் சென்று 2006-ல் மறுபடியும் அ.தி.மு.க.வில் இணைந்து கொண்டார். தி.மு.க. ஆட்சியில் விஜய் சந்தித்த அதே நிலைமை தான் சரத்குமாருக்கும். தமிழ்த் திரையுலகில் வாய்ப்புகளே கிட்டாத நிலையில் மலையாளத் துரைக்குச் சென்று வாய்ப்பு தேட வேண்டிய நிலை. ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் தனது கட்சியை அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்த்து மறுபடியும் தயாரிப்பு, நடிப்பு என்று களமிறங்கிவிட்டார் அவர்.

இந்தக் கூத்தில் அகப்பட்ட மற்றொருவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. தி.மு.க. காலத்தில் அவர் செய்த கூத்துகளால் இன்று வேலையே இல்லாமல் சும்மா இருக்கிறார். இதேபோல் எண்ணற்ற நபர்கள். சிலர் மீண்டு வந்துவிட்டனர். சிலரோ அப்படியே முடங்கிவிட்டனர்.

அரசியல் விளையாட்டில் திரைத்துறையினர் காய்களாக நகர்த்தப்படுவதற்கு அவரவர்களே காரணம் என்று கமல் சொல்லியிருப்பது உண்மையென்றே படுகிறது. திரையுலகில் வெற்றி பெற வேண்டுமென்றால் தனக்கென்ற அரசியல் கொள்கைகளைச் சற்று ஒதுக்கி வைத்தால் தான் முடியும். ஒரே நேரத்தில் இரண்டு பக்கங்களிலும் goal அடிக்கமுடியாது. ஒன்று, திரைத்துறையினர் அரசியல் கட்சிகளின் நிபந்தனைகளுக்கும் சலுகைகளுக்கும் உடன்பட வேண்டும். இல்லையென்று சொல்லுபவர்கள் அதன் விளைவுகளைச் சந்தித்தே ஆக வேண்டும்.

இந்நிலையில் தமிழ்த் திரைத்துறையினர் bollywood-இடமிருந்து கற்றுக் கொள்ள சில விசயங்கள் உள்ளன. முன்பு mafia கும்பலிடம் மாட்டிக்கொண்டு தவித்த பாலிவுட் பிரபலங்கள் அத்துரையின் சிலரது கடின முயற்சியால் அவற்றிலிருந்து வெளியேறி வந்தனர். பாலிவுட்டின் இன்றைய வெளிப்படையான நடைமுறைகள் அதனை உணர்த்துகிறது.

எப்படியோ, எல்லாம் நன்றாக முடிந்துவிட்ட வேளையில் கமல் இழந்து போன தனது நிம்மதியைத் திரும்பப் பெறுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். விஸ்வரூபத்தால் கமல் ஒரு பெரிய உண்மையை உணர்ந்துக்கொண்டார், நமக்கு உணர்த்தியுள்ளார். வெட்டுப்பட்ட விஸ்வரூபமே சாட்சி!

While you can't pull someone's string in TN, you can freely pull strings that Brahmin's wear. Definitely no strings attached !


( பட குறிப்பு Ref: http://www.firstpost.com/politics/vishwaroopam-again-shows-the-ugly-truth-of-cinema-in-tn-608979.html )

19 Comments:

Anonymous said...


ஆடைதனை மாற்றி ஆடைதனை மாற்றி

ஜாடைதனை மாற்றி ஜாடைதனை மாற்றி

வேடங்கள் பலபோட்டு வேடிக்கை காட்டிய

நாடகங்கள் பார்த்தோம் நாயகன் எனச்சொன்னோம்

நாடுதனை விட்டுவேறு நாடுதனை நாடி

ஓடுகின்ற எண்ணம் உன்னிடத்து உண்டெனில்

ஓடிவிட்டுப் போயேன் உனையார் தடுத்தார்

ஓடுகின்ற எண்ணம் இருக்கின்ற நீயும்

நாடுதனை ஏசிவிட்டு நச்சுமொழி பேசி

வேடமிட்டு திரியும் வேடதாரி வேசியே

ஊடகத்து வெளிச்சம் உன்போல் எனக்கு

மேடையோடு இல்லாது மங்கலாக இருக்கலாம்

நாடுதனை துதிக்கும் நான் சொல்லுகின்றேன்

கேடுகெட்ட வேடதாரி போடா வெளியே !

Courtesy: சந்திரமௌலீஸ்வரன் விஸ்வநாதன்

Anonymous said...

MAMA - VIRKU NAMMA MAMI VAITHA AAHPU.

NAKEERAN HEAD LINES ABOUT VISHWAROOPAM....


MURALI

Unknown said...

அதுக்காக எல்லா நஷ்டத்தையும் தாங்க கமல்ஹாசன் என்ன காந்திஜியா?

ரெங்கசுப்ரமணி said...

கடைசி மஞ்சள் கமெண்டை யாராவது தமிழில் மொழிமாற்றி கொடுங்கப்பா எனக்கு புரியல. என்ன மாதிரி ஆங்கில அறிவில்லாதவர்கள் என்ன செய்வார்கள்.

கௌதமன் said...

விஸ்வரூபம், கமல், அரசு - எல்லாம் எப்படியோ எதுவோ ஆகட்டும். ஆனால் விஸ்வரூபம் படம் பற்றி மட்டும் பத்துப் பதிவுகள் இட்ட இட்லி வடையின் மகத்தான சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் என்று நினைக்கின்றேன்!

Anonymous said...

கடந்த 45 வருடங்களாக சினிமாக்காரர்களே தமிழ் நாட்டை ஆண்டு வருவது கேவலம். படிப்பறிவு இல்லாதவர்கள், கைநாட்டுகள் அமைச்சர்களாக நாட்டை ஆண்டபோதும் தமிழகம் முன்னணி வரிசையில் இருப்பது தமிழ் மக்களின் சளைக்காத உழைப்பினால் மட்டுமே. இந்த நிலை என்று மாறும்? படித்தவன், சினிமாக்காரன் அல்லாதவன் எப்போது முதலமைச்சராக ஆவது?
போதும் இவர்கள் ஆண்டது! ஒரு புது இயக்கம் ஆரம்பமாகட்டும்.

Anonymous said...

தன்னை மட்டும் மற்றும் தன் திறமையை மட்டும் நம்பும் ஒரு தமிழ் நடிகர் கமல். மற்றவர்களை போல் ரசிகர்களை படம் வரும் நேரத்தில் உசுப்பி விடாமல், ஹைப் பண்ணாமல் (நான் எப்போ தூங்குவேன், எப்படி தூங்குவேன்னு எனக்கு தெரியாது ஆனா கண்டிப்பா டெய்லி தூங்குவேன் அப்படிங்கற மாதிரி), தனது ரசிகர்களை மூல தனம் ஆக்காமல் தன்னை மட்டும் நம்புகின்ற ஒரு "தன்னம்பிக்கையானவர்" ! hats off!

Unknown said...

//நான் எப்போ தூங்குவேன், எப்படி தூங்குவேன்னு எனக்கு தெரியாது ஆனா கண்டிப்பா டெய்லி தூங்குவேன் அப்படிங்கற மாதிரி//

நூத்துல ஒரு வார்த்தை. வெட்டுங்கடா அந்த லூஸுப்பயல

ரிஷபன்Meena said...

தேவர் மகன் -நல்ல டைமிங்..அருமை.. கடைசியில் பாக்யராஜ் வேற...

உலக நாயகன் முதலில் உணர்ச்சி வசப்பட்டாலும் ரஜினி போல் அட்டக்கத்தி அல்ல என்று புரியவைத்தார்.

R. J. said...

சந்திரமௌலீஸ்வரன் விஸ்வநாதன் - இந்த கடுமை தேவையில்லாதது. உங்கள் தேசப்பற்று புரிகிறது. ஆனால் நீங்கள் கமல் என்னும் தனி மனிதன் எவ்வளவு காயப் பட்டிருப்பான் என்று புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள். வருத்தத்தில் சொன்னதாக அவரே சொன்ன பின் இந்த கடுமை நிச்சயம் தேவையில்லை. - ஜெ

Anonymous said...

The Tamil book திருவரங்கன் உலா by S. Venogopalan is a novel that provide all the details of Islamic atrocities done in Srirangam, and how the devotion of Hindus protected the religion.

All Tamilians must read the 3 volume book to know their own history and how faith protects us.

Contact details to get the book:

லக்‌ஷ்மிஸ்ரீ பதிப்பகம்
எண். 848, 91-வது செக்டார்
கே.கே. நகர், சென்னை - 600 078

செல்: 9283111632

போன்: 2366 2331/32/33

Anonymous said...

சந்திரமெளலீஸ் பாய்,
நாட்டுப் பற்று இருக்கலாம் ஆனால் இது போல் பித்து இருக்கக்கூடாது.

மின்சாரம் மின்சாரம்-ங்கற வஸ்துவை கண்ணில் காட்ட மாட்டேங்கறாங்க...
ஒரு பிஸ்கோத்து படத்து ராத்திரியோட ராத்திரியா அப்பீல் பண்றாங்க...

ஏங்கண்ணு பொங்க வேண்டிய விஷயத்தில் அல்லாம் பொத்திக்கிட்டு இருக்க வேண்டியது....ஒரு அடிமை கிடைச்சிட்டா போதும் அவனுக்கு தர்ம அடி போட வேண்டியது.

கமல் சொல்லியதில் ஏன்னா தப்பு ? ஒருத்தனை குறிவைச்சு அடிப்பீங்க ஆனா அவன் வலிக்குதுன்னு கூட சொல்லக்கூடாதோ?

நீங்க உங்க வேலைய ஒழுங்கா பார்த்துட்டு போங்கன்னு சொல்லவரலை...அப்படி இருந்தா நல்லா இருக்கும்னு தான் சொல்றேன்.Anonymous said...

மின்சாரம் மின்சாரம்-ங்கற வஸ்துவை கண்ணில் காட்ட மாட்டேங்கறாங்க...
ஒரு பிஸ்கோத்து படத்து ராத்திரியோட ராத்திரியா அப்பீல் பண்றாங்க..

Anonymous said...

Vedadhari vesi//
J vai appadi solla kkoodaadhu Chandra !

Anonymous said...

fantastic man...bold and beautiful !

Anonymous said...

அப்பாவியின் சந்தேகங்கள்:
1. தணிக்கை குழு மெம்பர்கள் ஒரிஜினலா,
2. படம் முழுக்க பார்த்தாங்களா,
3. புது தணிக்கை குழு அமைக்க வேண்டாமா படத்தை மறுபடி அவர்கள் பார்த்து மறு தணிக்கை சான்று தர வேண்டாமா.
4. அல்லது தவறான குற்றசாட்டுக்கு நவநீதக்ர்ஷ்ணன் மன்னிப்பு கேட்பாரா.

Anonymous said...

விலையில்லா மிக்சி, கிரைண்டர்களை முழுமையாக பயன்படுத்தவேண்டும் அமைச்சர் சம்பத் பேச்சு ----- கரெண்ட் தேவையில்லா மிக்சி , கிரைண்டர்களை கொடுத்தால் முழுமையாக பயன்படுத்தலாம் --மக்கள்(கரண்ட் வரும் என்று இன்னமும் நம்பும் )

Anonymous said...

To save srirangam temple from tippu sultan's attack, temple authorities gave huge amount/ornaments to tippu. ( ref; koilolugu)
if anybody writes shortly about Tippu, the greatest freedom fighter, we will come to know something.

Anonymous said...

95 கோடி .. 30 கோடி ...படத்தை பற்றி பேசுவதை விட ரூபா'வைப்பற்றிதான் நிறைய பேசுகிறார்கள்.

விஸ்வ ...ரூபா ...ரூபா ...ரூபா!

கல்லா கட்டட்டும்...நல்லா கட்டட்டும்...

பேஸ் புக்'கில் பல யூத்துகள் ஆந்த்ரா போய்,க்யூவில் மணிக்கணக்கில் நின்று படம் பார்த்து வந்ததை சரித்திர சாதனையாக , "தம்ப்ஸ் அப்"புடன் போஸ்ட் செய்கிறார்கள்.

என்னால் ஆந்திராவரை போக முடிந்து,க்யூவில் நிற்க முடிந்தால் ,திருப்பதி பெருமாளிடம் போய் ,இந்த நாட்டை காப்பாற்ற, நல்லெண்ண பிரார்த்தனை செய்யலாமென்று இருக்கிறேன்.