பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 01, 2013

கடல் - FIR ( ஜெய் ஹனுமான் )


மணிரத்னத்தின் படம், கார்த்திக்கின் மகன் நடிக்கும் முதல் படம், ராதாவின் இரண்டாம் மகள் அறிமுகம் எல்லாவற்றிற்கும் மேலாக பாட்டையா திரு.பாரதிமணி அவர்கள் முதலமைச்சராக வேடம்கட்டாத படம் என பல சிறப்புகளை மனதில் கொண்டு சென்ற எங்களுக்கு மணிரத்னம் சொல்லாமல் சொன்னதோ நான் பழைய மணிரத்னம் இல்லைப்பா என்றதுதான்.

சர்ச்சில் வேதம் படிக்க வரும் நண்பர்கள் அர்ஜூனும், ஒருகாலத்திய பெண்களின் கனவுக்கண்ணன் அரவிந்தசாமியும். அர்ஜூன் ஒரு பெண்ணுடன் இருப்பதைப் பார்க்கும் அரவிந்தசாமி அர்ஜூனைப் போட்டுக்கொடுக்க அவருக்கு அந்த பாதிரிகள் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படுகிறார். இதிலிருந்து கதை ஆரம்பாம் வழக்கமான தமிழ் படம் மாதிரி போகிறது.

அர்ஜூன் :-

வயதான களை முகம் முழுக்க, கடலில் கள்ளக்கடத்தல் செய்கிறார், ஆளைப் போட்டுத்தள்ளுகிறார். வில்லனாக வசனம் பேச முயல்கிறார். நடிக்க என அவருக்கு ஏதுமில்லை.

அர்விந்த்சாமி :-
பாதிரியாக வருகிறார். வேடம் நன்றாகவே இருக்கிறது. வயதான முகத்தில் இரு பெரிய பருக்கள் அவருக்கு மிச்சமீதி இருக்கும் அழகையும் கெடுக்கின்றன. நடிப்பில் ஸ்கோர் செய்ய என ஏதுமில்லை.

கௌதம் கார்த்திக் (நடிகர் கார்த்திக் மகன்): கொஞ்சம் உருப்படியான பாத்திரம். ஏன், எதற்கு என்றுதான் தெரியவில்லை. அவரது சிறுகுழந்தைப் பருவத்தில் நடித்திருக்கும் பொடியன் நன்றாய் நடித்திருக்கிறான். இவர் அநாதையாய் தெருவில் வளர்ந்தவரை அர்விந்த்சாமிதான் எடுத்து வளர்க்கிறார். அர்ஜூன் சதியால் அ.சாமி கொஞ்சகாலம் ஜெயிலில் இருக்கும்போது அர்ஜூனுடன் சேர்ந்து பலரைக் கொல்கிறார், படகுகளில் தாவித்தாவி ஓடுகிறார். சரியாகப் பயன்படுத்தினால் நன்றாய் வரவாய்ப்பு உண்டு. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை கொஞ்சம் நினைவுபடுத்துகிறார்.

துளசி நாயர் (ராதாவின் இரண்டாவது மகள்). 15 வயதுப் பெண்ணாம். நம்பத்தான் கஷ்டமாக இருக்கிறது, அபரிமிதமான வளர்ச்சி. தமிழ்நாட்டுக்கு அடுத்த ஹன்சிகா மோத்வானியாகவோ அல்லது குஷ்புவாகவோ வலம்வர வாய்ப்பு அதிகம். கொஞ்சூண்டு மனநிலை பிறழ்ந்தவராய் வருகிறார். கொஞ்சம் நடிக்கிறார். அர்ஜூனின் வேண்டாத மகளாய் வருகிறார். முகத்தில் மட்டும் கொஞ்சம் களை.

பாட்டையா – பாரதிமணி


இந்தப்படத்தின் ஆகச்சிறந்த சிறப்பு இவர் முதலமைச்சராக வரவில்லை. வேதக்கல்லூரியின் முதல்வர் ஆக வருகிறார். அர்ஜூன், அ.சாமிக்குப் பிறகு அறிமுகமாகிறார் படத்தில்.

ஒளீப்பதிவு : அருமை. கடல்புறத்தையும், அதன் மக்களையும், கடலையும் அருமையாக பதிவு செய்திருக்கிறது. அதுவும் கார்த்திக் மகன் முதன் முதலில் கடலில் செல்வதை படமாக்கிய விதம் அருமை. படகின் முன்னால் கேமெராவைக் கட்டி எடுத்ததுபோன்ற துல்லியம். அதேபோல இறுதிக்காட்சியிலும் நன்றாக எடுத்திருக்கிறார்கள். கிராஃபிக்ஸாய் இருக்க வாய்ப்புகள் அதிகம். லொகேஷன்கள் எல்லாம் அருமை.

கதை, வசனம் :-


நமது ஜெயமோகன் தான் எழுதி இருக்கிறார். ஆனால் ஏரல் பகுதி வசனங்கள் மனதில் பதியவேயில்லை. மேலும் நச்சென மனதில் தைக்கும்படியான வசனங்களும் இல்லை. கதை என்ற வஸ்து எனக்குத் தெரிந்து இல்லை. இதைப் புத்தகமாக படித்திருந்தால் நன்றாய் இருந்திருக்குமோ என்னவோ.

பாடல்கள் மற்றும் நடனம் :-

பாடல்கள் வைரமுத்து, கார்க்கி, அடியே…. என்ன எங்க நீ கூட்டிப்போற பாட்டும் மற்றும் நடனமும் அருமை,
கடல்புற மக்களின் வாழ்க்கைதான் இது என்று சொன்னால் ஓக்கே, ஆனால் மனதைக் கவரும்படி அது இல்லை என்பதே உண்மை. என்ன சொல்ல வருகிறார் என்பது யாருக்காவது புரிந்தால் சொல்லுங்கள். மணிரத்னம் என்ற நல்ல கலைஞனின் இந்த வீழ்ச்சி மனதுக்கு கஷ்டமாய் இருக்கிறது. ராவனனுக்கு அடுத்து வந்த இந்தப்படமும் சுமாருக்கும் கீழே. இந்தப் படத்தில் என்ன இருக்கிறது என தேடி எடுத்து சொல்ல ஒரு கூட்டம் இருக்கும் ,அவர்களுக்காய் காத்திருக்கிறேன்."போதும்டா.. படத்தை போடுங்க" என்று மக்கள் இறுதிக்காட்சியில் கத்தியது கிலியாக இருந்தது. திரைக்கதைக்கு ஒரு சோறு


மார்க் 4.25/10 ( இது இட்லிவடையை கன்சல்ட் செய்து போட்ட மார்க் )

ஆரம்பத்தில் அரவிந்த் சாமி ஊருக்குள் வரும்போது டேப்ரெகார்டரில் மக்களை பேச வைப்பது நல்ல காமெடி. ஆனால் படத்தைப் பார்த்துவிட்டு மக்கள் இந்தப்படத்துக்கா இப்படி அரக்கப் பரக்க ஓடி வந்தோம் என்பதுதான் இந்தப் படத்தின் பெரிய காமெடி

- ஜெய் ஹனுமான்

13 Comments:

dr_senthil said...

சிறிது காலத்திற்கு முன்பு மணிரத்னம் தமிழ் சினிமாவை பற்றி கொடுத்த பேட்டியை நினைவு கூர்ந்தால், அவரை வாழவைத்த தெய்வங்களை எவ்வாறு அவமதிப்பு செய்துள்ளார் என்று தெளிவாகும்.. வெகு சாதாரண இயக்குனரை யார் உச்சத்துக்கு கொண்டு செல்ல உதவினார்கள் என்பது யாவரும் அறிந்ததே.. இனி அவரது படத்தில் நடிக்க கால்ஷீட் இல்லாத நடிகர்களே முன் வருவார்கள்

Subramanian said...

Hi, went for the first show of the movie yesterday and was dissapointed. The movie does not pull you into it with the way of story telling. How we used to be crazy of manirathnam in the 90's. after kannathil mutahmittal none of his 3 movies were good. you need a strong writer who understands films like Sujatha or Balakumaran to make good movies. The movie could have been made only with A.samy & Arjun leaving out the extra baggage. Then it would have been more focussed.

Subramanian said...

This film is Ravanan part 2.

In the movie their is a dialogue where gautham asks Thulasi " dont you know what sin is"

The comment in the theatre was " we chose to watch this movie - that is sin".

Anonymous said...

This is our problem. We can never learn to comment objectively. In every comment there has to be a gossip or வம்பு. திருந்துங்கப்பா.

Anonymous said...

கடல் என்பதால் அனுமனை அழைத்து FIR கொடுக்க சொல்லி உள்ளீர்களா

kothandapani said...

மணிரத்தினத்தின் படம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதது எதிர் பார்த்ததே . இது இயற்கையின் நியதியே. அவர் திரைக்கு வந்த போது மற்றவர்களை விட மாற்றி சிந்தித்தால் ஜெயித்தார். அனால் தற்போது stale ஆக ஆகிவிட்டார். தற்போதைய சூழலில் அவரைவிட புதுமையாக செயல் படுபவர்கள் இன்று ஜெயிதுகொண்டு உள்ளார்கள். ஒரு காலத்தில் தொடர்ச்சியாக ஹிட் கொடுத்து கொண்டிருந்த பாரதிராஜக்களும் ,பக்கியராஜக்களும் இன்று ஜெயிக்க முடியவில்லையே. பழையன கழியதலும் புதியன புகுதலும் காலத்தின் கட்டாயம்..

சிவ.சரவணக்குமார் said...

நாம் அவுட் டேட் ஆகிட்டோம்கிறத இந்த பெருங்கள்லாம் எப்பத்தான் புரிஞ்சுக்குமோ?...இதுக்கு பில்ட் அப் வேற...

sidharth said...

அட ! "கடல்" அதுக்குள்ள ரிலீஸ் ஆயிடுச்சா ? "மீனவர்கள்" தடை கேட்டு போராட்டம் , அப்புறம் தடை .. இதெல்லாம் கிடையாதா? இதுதானே லேட்டஸ்ட் பேஷன் !

Anonymous said...

இந்த படத்த போயி விஸ்வரூபத்துக்கு போட்டியா இருக்குமுன்னு சொன்னாங்களே! கமலுக்கே கடல் ஊத்திக்கும்னு தெரிஞ்சதாலதான் கவலைப்படல!

ஜெயக்குமார் said...

இட்லிவடையின் சரக்கு மாஸ்டர்களில் ஒருவர் இன்று முகப்புத்தகத்தில் பதிந்த கடல் விமர்சனம்..

//Watching kadal. First half extra ordinary. A great experience. Waiting for 2nd half.

- Prasanna// இது மொதல்ல சொன்னது..

படம் முடிஞ்ச உடனே குடுத்த அப்டேட் கீழே :-

//Second half padu mokkai. No story development at all and it travels in a very cliche way. Climax - we are cursed. Total movie is a storyless crap. Sorry guys. :)//

Anonymous said...

ஆமாங்...இந்த படத்துக்கு எதுக்கு அரவிந்தசாமி? சுப்ரமணியசாமி போதுமே.

balakrishnan said...

மணிரத்னம் இனி படம் எடுக்கவே வேண்டாம்.கடலில் எந்த சிறப்பும் இல்லை.இவரிடம் சரக்கு இல்லை.பேசாமல் கமலிடம் அசிஷ்ட்டேன்டாக சேரலாம். இளையராஜா இல்லாமல் இவரால் படமெடுக்க முடியாது என்பது மீண்டும் நிருபித்து விட்டார்.ரஹ்மான் இருந்தும் அவரால் பாடல்கள் மட்டுமே தர முடியுமே தவிர படத்துக்கு உயிர் குடுக்க முடியாது.சமீப காலமாக ராஜாவின் இசை பற்றி எல்லோரும் விமர்சித்தாலும் இது போல சொதப்பலான படங்கள் கூட தரமான படமாக மறு உருவம் தர ராஜாவால் மட்டுமே முடியும்.

balakrishnan said...

மணிரத்னம் இனி படம் எடுக்கவே வேண்டாம்.கடலில் எந்த சிறப்பும் இல்லை.இவரிடம் சரக்கு இல்லை என்பது கடல் பார்த்தல் புரியும்.பேசாமல் கமலிடம் அசிஷ்ட்டேன்டாக சேரலாம். இளையராஜா இல்லாமல் இவரால் படமெடுக்க முடியாது என்பது மீண்டும் நிருபித்து விட்டார்.ரஹ்மான் இருந்தும் அவரால் பாடல்கள் மட்டுமே தர முடியுமே தவிர படத்துக்கு உயிர் குடுக்க முடியாது.சமீப காலமாக ராஜாவின் இசை பற்றி எல்லோரும் விமர்சித்தாலும் இது போல சொதப்பலான படங்கள் கூட தரமான படமாக மறு உருவம் தர ராஜாவால் மட்டுமே முடியும்.