பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 15, 2013

ரிப்போட்டர், குஷ்பு கண்டனம்.நிச்சயம் கண்டிக்க வேண்டிய அட்டைப்படம். நீதிமன்றம் கூட போகலாம்.

திமுகவும் சளைத்தவர்கள் இல்லை பல்வேறு மாநாட்டு பேச்சுக்களை பார்த்தால் ஜெயலலிதாவை பற்றிய பேச்சுக்கள் பிரசுரிக்க கூட முடியாதவை. அப்போது திமுக தலைவர்கள் அந்த பேச்சுக்களுக்கு கைதட்டி சிரித்தவர்கள் தானே ?

39 Comments:

கானகம் said...

குசுப்புவின் ட்விட்டுகளும் அவரது தரத்தைச் சொல்கின்றன.. வாழ்க ஜனநாயகம்

Unknown said...

தி.மு.க. கூட்டத்தில் பேசினார்கள் என சொல்லி சப்பை கட்டு கட்டுவது தவறானது. ஒரு பெண்ணை (இரண்டு குழந்தைகளுக்கு தாய் , ஒருவரின் மனைவி ) இப்படி பகிரங்கமாக கேவலமாக சித்தரிப்பது வன்மையாக கண்டிக்க வேண்டியது.

Murugavel S said...

மிக தவறான கண்ணோட்டம்... குஷ்புவின் கருத்துக்கள் தவறில்லை.. கருணாமேல் அளவுக்கடங்கா கோபம் தான் குமுதம் ரிப்போர்டருக்கு , அதற்காகவெல்லாம், இந்த கருத்து..மிக மோசம்..தரம்தாழ்கிறது.. ரிப்போர்ட் சமீபகாலமாக.. குமுதத்தின் நீண்ட, நெடும்கால வாசகன் என்ற முறையில் இது சரியில்லை... முருகவேல் சண்முகம்

Murugavel S said...

மிக தவறான கண்ணோட்டம்... குஷ்புவின் கருத்துக்கள் தவறில்லை.. கருணாமேல் அளவுக்கடங்கா கோபம் தான் குமுதம் ரிப்போர்டருக்கு , அதற்காகவெல்லாம், இந்த கருத்து..மிக மோசம்..தரம்தாழ்கிறது.. ரிப்போர்ட் சமீபகாலமாக.. குமுதத்தின் நீண்ட, நெடும்கால வாசகன் என்ற முறையில் இது சரியில்லை... முருகவேல் சண்முகம்

கிருஷ்ண மூர்த்தி S said...

குசுப்பூ அம்மிணி ட்விட்டரில் பொங்கித் தீர்த்திருக்கிறார்.திருச்சியில் செருப்பால் அடித்தவர்களிடம் ககட்டமுடியாத கோபத்தை குமுதம் ரிபோர்டர் மீது கொட்டித் தீர்த்திருக்கிறார்!அம்மிணி உப்யோகித்திருக்கிற வார்த்தைகள் ஒன்றும் அவ்வளவு தரமானதாக இல்லை! அம்மிணி முடிந்தால் கோர்ட்டுக்குப் போகட்டும், என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்!அது வேறு விஷயம்!

ஆனால் என் சந்தேகமே வேறு! திமுக ஆனதும் பெண்ணாலே! கண்ணீர்த்துளிகள் என்று பெரியார் மணியம்மை திருமணத்தை ஒட்டி எழுந்த சர்ச்சையில் தான் என்பது மறந்து போய்விட்டதா என்ன?

அதேபோல திமுக அழிவதும் பெண்ணாலே என்பது வரலாற்று நகைமுரண்! அது மணியம்மை வேடமிட்டு நடித்த குஷ்பூவோ, அதிர்ஷ்டப் பெண் கனிமொழியோ நேற்றுவரை சர்ச்சையில் சிக்காமல் இருந்த துர்கா ஸ்டாலின் முதல் முறையாக குஷ்பூ கருத்து சொன்ன விவகாரத்தில் பொங்கியதோ எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், இல்லை என்று பூசி மெழுகி மறைக்கப் போகிறார்களா?

க ரா said...

ஒரு விசயத்தை பற்றி பேசினால் அதை மட்டும் பேசுவது போதுமானதில்லையா ? உடனே எதுக்கு, தி.மு.க்.... அ.தி.மு.க எல்லாம்.. இங்கே அதிமுகவை தவிர்திருப்பது எதனால்.. இட்லிவடையும் 66ஏ க்கு பயப்படுகிறதா ?

Anonymous said...

எங்கூர்ல ஒரு பழமொழி சொல்வாய்ங்க
நெருப்பில்லாமப் புகையுமான்னு. என்னவோ ஏதோ, யாருக்குத் தெரியும். எப்படியோ நல்லது நடந்தாச் சரி.

முல்லாவின் குல்லா said...

ஒரு வேள, தமிழ்நாட்டு வாக்காளர்கள் 2016 தேர்தல்ல, ஜெயலலிதாவா, குஷ்புவான்னு முடிவு பண்ண வேண்டி வருமோ?

ராமுடு said...

This is totally wrong and unacceptable. Being a writer, they can't write whatever they like. This is not the freedom of writing. After S.A.P, it goes lower & lower.

R. J. said...

ரிபோர்டர் கட்டுரை படிக்கவில்லை, அதற்கு அவசியமில்லாத முதல் பக்கம். மிகக் கீழ்த்தரம். அரசியல்வாதிகள் வேறு விஷயம். அதிலும் ரெண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்பது பலமுறை நிரூபிக்கப் பட்டுவிட்டது. அப்படியிருந்தும் ஒரு பத்திரிக்கை இன்ஹா அளவு தாழ்ந்துபோனது அம்மா கட்சி ஆதரவு இல்லாமல் இருக்க முடியாது. இது கோர்ட்டுக்கு நிச்சயம் போகும். இன்னும் நாறும். இப்போது நடிகர் சங்கம் என்ன செய்யும்? சரத் யார் பக்கம் என்று முகம் காட்டியே ஆக வேண்டும். - ஜெ

Muthu said...

ஏற்கனவே இருக்கும் பல்வேறு இதழ்களாலும் இணைய இதழ்கள் மற்றும் வலைப்பதிவுகளின் பெருக்கத்தாலும் எங்கே தனது ஆட்டம் அடங்கிவிடுமோ என்ற பயத்தில் என்னவானும் செய்து பரபரப்பில் இருக்கவேண்டும் என்று குமுதம் செய்த கேவலமான செயலாக இருக்கவேண்டும். முன்பே அது மஞ்சள் பத்திரிக்கை தரத்தில்தான். இப்போது அதை உறுதிப்படுத்துவது போலவே இருக்கிறது.

ஆனால் குஷ்பு சொன்ன இந்த கருத்து-தான் என்னை சிரிக்க வைத்துவிட்டது. சபாஷ்.

"These ppl r nothing less than pimps who make money by selling a woman's name n her dignity"

If those who sell a woman's name and dignity can be called "nothing less than pimps" what can we call that "woman" who's readily willing to sell her name n dignity ?

Come on Kushboo, கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல்லெறியலாமா ?

Anonymous said...

THE COVER PICTURE IS BAD.
KUSHBOO'S COMMENTS ARE EQUALLY BAD OR EVEN WORSE. THEY DONOT GIVE HER THE SOPHISTICATION SHE CLAIMS TO HAVE.
WHERE WAS SHE WHEN NAKKEERAN PUBLIHED A DEROGATORY ARTICLE ON JAYALALITHA.CROSSING PARTY LINES SHE MUST HAVE OBJECTED IN HER CAPACITY AS A WOMAN.
KARUNANIDHI IS REAPING WHAT HE HAS SOWN. DID HE NOT INSULT THE CHARACTER OF JAYALALITHA IN THE ASSEMBLY.
ENTIRE NORTH IS GOSSIPPING ON RAJA AND KANIMOZHI
KUSHBOO WILL BECOME A FEMALE VADIVELU AND DIS - OWNED BY DMK SHORTLY. BEING A FEMALE SHE WILL BE THROWN OUT AFTER ALL SCANDALS THAT IS USUAL IN DMK.
IT IS NEWTONS THIRD LAW.AFTER GETTING TO FAME THRU JAYA T.V. SHE DITCHEDIT. NOW SHE IS PAYING FOR HER UN-GRATEFULNESS.

Anonymous said...

நான் மிகவும் சிறுவன், எப்போதோ யாரோ சொல்லியதாக நினைவு, "நான் முற்றும் துறந்த முனிவனும் இல்லை, அவள் ஒன்றும் பத்தினியும் இல்லை"

E.Arunmozhidevan said...

Krishna Moorthy S

//நேற்றுவரை சர்ச்சையில் சிக்காமல் இருந்த துர்கா ஸ்டாலின் முதல் முறையாக குஷ்பூ கருத்து சொன்ன விவகாரத்தில் பொங்கியதோ//


துர்கா ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையோட லிங்க் எனக்கு வேனும். கொஞ்சம் கொடுக்க முடியுமா ப்ளீஸ்

Anonymous said...

mokka yello comment. seems idlyvadai also trying to become yellow with the yello comment..you may not like dmk but dont try to justify everything.. - SP

சிவ.சரவணக்குமார் said...

திமுக வே ஒரு சகதிக்குட்டை......அதில் போய் ஐக்கியமாகும் முன் இந்த அறிவு இருந்திருக்கவேண்டும் குஷ்பு அவர்களே......... [ உங்க கடந்த காலத்துக்கு தகுதியான கட்சின்னுதானே போய் சேர்ந்தீங்க ?] இப்போ குத்துது குடையுதுன்னா எப்படி?

குமுதம் ரிப்போர்ட்டரின் செயல் அநாகரீகம் என்று கொந்தளிக்கும் நண்பர்களே........ மேற்படி ஹேஷ்யம் உண்மையாகவும் வாய்ப்பிருக்கிறது......ஒருவேளை அப்படி நடந்துவிட்டால் முகத்தை எங்கே கொண்டுபோய் வைத்துக்கொள்வீர்கள்?

பொதுவாகவே திராவிட இயக்கங்களின் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இருப்பதில்லை.......ஊரெல்லாம் முதியவர்கள் இளம்பெண்களை திருமணம் செய்வதை கண்டித்து முழங்கிய ஈ.வெ.ரா கடைசியில் மணியம்மை என்ற இளம்பெண்ணை திருமணம் செய்தார்......ஊருக்கெல்லாம் இவர் செய்து வைத்த '' சுயமரியாதைத்திருமணம் '' அல்ல.....பதிவுத்திருமணம் செய்தார்....... இவங்க எல்லாம் அப்பவே அப்படி.........

gandhi said...

ரிப்போர்டர் கட்டுரை படிக்கவில்லை, அதற்கு அவசியமில்லாத முதல் பக்கம். மிகக் கீழ்த்தரம். முன்பே அது மஞ்சள் பத்திரிக்கை தரத்தில்தான். இப்போது அதை உறுதிப்படுத்துவது போலவே இருக்கிறது.அரசியல்வாதிகள் வேறு விஷயம். அதிலும் ரெண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்பது பலமுறை நிரூபிக்கப் பட்டுவிட்டது. அப்படியிருந்தும் ஒரு பத்திரிக்கை இந்த அளவு தாழ்ந்துபோனது அம்மா கட்சி ஆதரவு இல்லாமல் இருக்க முடியாது. இது கோர்ட்டுக்கு நிச்சயம் போகும். இன்னும் நாறும். இப்போது நடிகர் சங்கம் என்ன செய்யும்? சரத் யார் பக்கம் என்று முகம் காட்டியே ஆக வேண்டும், நடிகர் சங்கத்தில் இருந்து பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதையும் ,
விளம்பரங்கள் கொடுப்பதையும் சிறிது காலம் நிறுத்தி வைக்க வேண்டும் .
ஒரு பெண்ணை ஒருவரின் மனைவி, இரண்டு குழந்தைகளுக்கு தாய் , இப்படி பகிரங்கமாக கேவலமாக சித்தரிப்பது வன்மையாக கண்டிக்க வேண்டியது.
இவர்கள்(இப்படி எழுதும் நிருபர்கள், ஆசிரியர்கள் ) வீட்டு பெண்களைப் பற்றி இப்படி
வந்தால் இவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்து வெளியிட வேண்டும் ,
அதை விடுத்து விற்பனைக்காக என்று போனால் , மக்கள் இது போன்ற பத்திரிகைகள்
வாங்குவதை நிராகரிப்பதன் மூலம் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்
என்பதே என் போன்றவர்களின் கருத்தாக இருக்கும்.........

Anonymous said...

.ஒருவேளை அப்படி நடந்துவிட்டால் முகத்தை எங்கே கொண்டுபோய் வைத்துக்கொள்வீர்கள்?

k.rahman said...

.ஒருவேளை அப்படி நடந்துவிட்டால் முகத்தை எங்கே கொண்டுபோய் வைத்துக்கொள்வீர்கள்?

even if it is true why we should be bothered about it? isnt it their personal life? we heard a lot about jaya and sasi also. but then it is none of our business. same applies to this case also.

Anonymous said...

தரம் தாழ்ந்தது குமுதம் மட்டுமல்ல...இட்லி வடையும் தான்...!
உங்கள் வீட்டுப்பெண்கள் என்றால் இப்படி எழுதுவீர்களா கனவான்களே..! முதுகெலும்பில்லாத முட்டாள் ஆண்களே..!
-கமலாயதாக்ஷி

Anonymous said...

<< Anonymous said...
நான் மிகவும் சிறுவன், எப்போதோ யாரோ சொல்லியதாக நினைவு, "நான் முற்றும் துறந்த முனிவனும் இல்லை, அவள் ஒன்றும் பத்தினியும் இல்லை" >>

“அவள் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளது உங்கள் தமக்கையையா ? மனைவியையா ..இல்லை உங்கள் குடும்பத்தினர் யாரையாவதா ?
கேடு கெட்ட அனானி மனிதா ..பதில் சொல்..! பெண் என்றால் அவ்வளவு கேவலமா உனக்கு...!
-கமலாயதாக்ஷி


இராமனாதன் said...

குமுதம் பழனியப்பசெட்டியாரிடமிருந்து ஐயங்காரிடம் போன போதே “ஜெ” விசுவாவாசம் தொடங்கி விட்டது. குமுதம் அட்டைப்படம் எதிபார்த்த ஒன்றுதான்.
பாரதி தான் அப்போதே பாடி விட்டானே..!
பேராசைக்காரனடா ......பான் ; அவன் ஏது செய்தும் காசு பெறப்பார்ப்பான்..!
- இராமனாதன்

R. J. said...

//.... மேற்படி ஹேஷ்யம் உண்மையாகவும் வாய்ப்பிருக்கிறது......ஒருவேளை அப்படி நடந்துவிட்டால்...// This is the cover of Kumudam Reporter and not Kumudam Jothidar. An individual can have his opinion and express it the way he feels (and be ready to face music as applicable), but a magazine cannot do this. Then you start calling it yellow journalism. - R. J.

Avargal Unmaigal said...

பாலியல் விஷத்தை கக்கி சமுகத்தை சீரழிக்கும் குமுதம் ரிப்போர்ட்டருக்கு உலக தமிழர்களின் சார்பில் கடும் கண்டணம் http://avargal-unmaigal.blogspot.com/2013/02/blog-post_15.html

ஆளூர் ஷாநவாஸ் said...

குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் கலைஞரையும் குஷ்புவையும் இணைத்து எழுதப்பட்டுள்ள
கேவலமான கட்டுரையை படித்ததும்
பேரதிர்ச்சி அடைந்தேன்.

அன்னை மணியம்மையாரை இழிவுபடுத்தி
1980 களில் தமிழகத்தின் வீதிகளெங்கும்
பட்டிமன்றங்களை நடத்திய இந்து முன்னணியின் வெறித்தனத்தை இன்று குமுதத்திடம் கண்டேன்.

ஆரியத்தின் வேருக்கு வெந்நீர் ஊற்றிய
பெரியாரின் தமிழ் மண்ணில்
பார்ப்பனத் திமிருக்கு இன்னமுமா பாடை கட்டப்படவில்லை? என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்.

பெரியார் இருந்திருந்தால் இப்போது
என்னென்ன நடந்திருக்கும்
என்பதை மனத்திரையில் ஓடவிட்டு அகமகிழ்ந்தேன்.

எதுவுமே நடக்காமல் தமிழகம்
அமைதியாய் இருப்பதைக் கண்டு
வேதனையில் துடிக்கின்றேன்.

ஆளூர் ஷாநவாஸ்

Anonymous said...

இதுதான் பத்திரிக்கை சுதந்திரமா? இது போன்ற பத்திரிகைகள் தடை செய்யப்பட வேண்டும்!!! தரம் தாழ்ந்து எழுதும் பத்திரிகை வியாபாரிகளை சட்டம் கடுமையாக தண்டிக்கவேண்டும்.

சுதந்திரம் said...

இது தான் கட்டற்ற கருத்து சுதந்திரத்தின் பின்விளைவு. கருத்து சுதந்திரம் என்பதை எந்தளவுக்கு சினிமாக்காரர்களும் மூன்றாம் தர பத்திரிகைகளும் பயன்படுத்துகின்றன என்பதை இன்றைக்கு குமுதம் ரிப்போர்ட்டர் காட்டியிருக்கிறது. நக்கீரனும் ஜூனியர் விகடனும் இதற்கு சற்றும் சளைத்ததல்ல.

உடன்பிறப்பு said...

விஸ்வரூபம் பிரச்சனை எப்படி சினிமாக்காரர்களின் முஸ்லிம்கள் குறித்த குரூர ரசனைக்கு எவ்வாறு முற்றுப் புள்ளி வைத்ததோ அதை போன்று இந்த மாதிரியான மூன்றாம் தர பத்திரிகையான குமுதம் ரிப்போர்ட்டர் (நக்கீரன், ஜூனியர் விகடன் போன்றவைகளும் இதில் அடக்கம்) பத்திரிகைக்கு தக்கவொரு பாடத்தை கொடுக்கும் வண்ணம் போராட்டத்தை உடன்பிறப்புக்கள் முன்னெடுக்கட்டும். சினிமா பயங்கரவாதமும் ஊடக பயங்கரவாதமும் ஒழியட்டும். உண்மை வெல்லட்டும்.

தமிழர்கள் said...

குமுதம் அல்ல அதே மாதிரி பத்திரிகை அனைத்தும் தமிழகத்தில் நடமாட விடக்கூடாது.மனம் கெட்ட தமிழகம் ஒரு 90 வயது தலைவனை நாக்கில் நரம்பு இல்லாமல் பேனாவில் ஈரம் இல்லாமல் எழுத தைரியும் இருக்குது என்றால் அப்ப மானம் கெட்ட தமிழர்கள் தானே நான்.

பழுத்த மரம் said...

விடுங்கள் கலைஞரே.. பழுத்த மரம் தான் கல்லடிபடும்.
நிறைந்த குளத்தைத் தேடித்தான் நாய்கள், நரிகள் வரும்.

உங்களை நாங்கள் நம்புகிறோம். அவர்கள் கூறும் கருத்துக்களை இங்கு யாரும் நம்புவதில்லை.

ஆயிரம் கைகள் மறைத்தாலும் அந்த ஆதவனை மறைக்க முடியுமா..? எங்கள் ஆண்டவனை அழிக்க முடியுமா..??

Anonymous said...

என் தமக்கை குஷ்பூ மனைவியருக்கு பத்தினி ( கற்பு ) தன்மை தேவை இல்லை என்று எங்களை பக்குவபடுத்திவிட்டார். இந்திராகாந்தி அவர்களை மதுரை இல் இரத்தம் வடிய தாக்கிவிட்டு மாதவிடாய் பற்றி பேசிய வார்த்தைகள் பற்றி என்ன சொல்ல........... யசோதா MLA சட்டசபையில் கேட்ட கேள்விக்கு சொன்ன பதிலை திரும்பி இங்கே சொல்ல முடியாது.................. அவிழ்த்து ........... தூக்கி ........ -//கேடு கெட்ட அனானி மனிதா ..பதில் சொல்..! பெண் என்றால் அவ்வளவு கேவலமா உனக்கு...!//-

Anonymous said...

தன்னுடைய ஒழுக்கமான நடிப்பினால் தமிழகத்தை தரம் உயர்த்திய இந்த பெண்மணி, வாய் கிழிய ஒழுக்கம் பற்றி பேசுவது சிரிப்பைதான் வர வைக்கிறது

Anthanan said...

ஒரு காலத்தில் "பாப்பாத்தியை பொது உடைமையாக்கு!" என்ற கோஷத்தை ஒரு சுவர் விடாமல் நீங்கள் எழுதி தள்ளி உங்கள் சமூக நீதியை பறை சாற்றியபோது சம்பந்தப் பட்டவர்கள் உள்பட யாருமே கண்டனம் செய்ய வில்லையே? அது சரி, பெரியார் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்? "வெங்காயம், கற்பு என்பதே பெண்ணுக்கு தேவையில்லை என்கிறபோது இந்த சர்ச்சையே அனாவசியம்" என்றிருப்பார் அல்லது ஒரு கூட்டம் கூட்டி தன எடைக்கு எடை டிமாண்ட் உள்ள பொருளாக உங்கள் போன்றவர்களிடம் வாங்கிக் கொண்டிருப்பார்! இதில் பார்ப்பனத் திமிர் எங்கிருந்து வந்தது, சொல்லுங்களேன்?

Anthanan said...

ராமநாதன், 71 பிறகு 77 - இந்த இரண்டு தேர்தல்களின் போது 'திமுகவின் அட்டூழியங்கள்'என்ற தலைப்பில் 169 தொடங்கி நடந்த பல சம்பவங்களை தொகுத்து சிறப்பு மலராக வழங்கியபோது குமுதம் செட்டியார்கள் கை வசம்தான் இருந்தது. மீண்டும் 96இல் திமுகவுக்கு அதரவு தந்தபோது பேட்டி காணப் போன கலைஞர் கருப்பு சோபாவில் வீற்று இருந்ததை பளிங்குக் கல்லில் வைக்கப்பட்ட ரோசாவுடன் ஒப்பிட்ட மாலன்தான் ஆசிரியர் என்று நினைவு. ஒரு பலமான வோட்டு வங்கி இல்லாதவர்கள் என்பதற்காக எங்களை இந்தக் காய்ச்சு காச்சறீன்களே?

SUBBARAMAN R said...

பெரும்பாலான ஊடகங்கள் உண்மையை சொல்லாமல் இருக்க காசு அல்லது பொய்யாக சொல்ல காசு என மோசடி செய்கிறார்கள்..

இவர்களுக்கு காசு கிடைத்தால் பெற்ற அன்னையையும், மனைவியையும் விற்க தயங்க மாட்டார்கள். இவர்கள் செய்தது டெல்லி பாலியல் வன்கொடுமைக்கு குறைந்தது இல்லை. கடவுள்தான் இவர்களை திருத்த வேண்டும்.

Bala said...

எந்த லட்சணத்தில், பாரதத் திருநாட்டில் ஊழல் அரசியல்வியாதிகளும், நடிகர்களும், அவர்களது ரசிகப் பைத்தியங்களும், பணத்துக்கு பேயாய் அலையும் மருத்துவர்களும், வக்கீல்களும், போலிச்சாமியார்களும், அவர்களது பக்த கோடிகளும், பொதுச்சொத்தை நாசம் செய்யும் ரவுடி மாணவர்களும், பெண்ணை போகப்பொருளாக எண்ணும் அயோக்கியர்களும் இருக்கிறார்களோ, அதே லட்சணத்தில் தான், மீடியா மங்குனிகளும் இருக்கிறார்கள்.

ஆகவே எதற்கு இத்தனை கொந்தளிப்பு ! அதோடு, குஷ்பூ டிவிட்டரில் செய்தியை வெளியிட்ட பத்திரிகையின் குடும்பம் சார்ந்த பெண்களை இழிவுபடுத்தியிருப்பது, அவரது ‘உயர்ந்த’ தரத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. பெண்ணுக்கு பெண் தான் முதல் எதிரி.

லெமூரியன்... said...

அட பல்லிருக்குறவன் பக்கோடா திங்கிறான்...

நீங்க ஏன்பா பொரண்டு உருள்றீங்க...

விடுங்கப்பா....

மனுஷன் நிம்மதியா இருந்துட்டு போகட்டும்....

அப்டியாசும் தமிழ் தமிழர்னு ஏமாத்திர
வித்தையை கொஞ்சம் மறந்து இருக்கட்டுமே...

Anonymous said...

//
எந்த லட்சணத்தில், பாரதத் திருநாட்டில் ஊழல் அரசியல்வியாதிகளும், நடிகர்களும், அவர்களது ரசிகப் பைத்தியங்களும், பணத்துக்கு பேயாய் அலையும் மருத்துவர்களும், வக்கீல்களும், போலிச்சாமியார்களும், அவர்களது பக்த கோடிகளும், பொதுச்சொத்தை நாசம் செய்யும் ரவுடி மாணவர்களும், பெண்ணை போகப்பொருளாக எண்ணும் அயோக்கியர்களும் இருக்கிறார்களோ, அதே லட்சணத்தில் தான், மீடியா மங்குனிகளும் இருக்கிறார்கள்.
//
சரி தான். இந்த கேடு கெட்ட நாட்டுல ஒரு சப்பை மேட்டருக்கு எதுக்கு இத்தனை கலாட்டா .. ஆவேசம் .. அறச்சீற்றம்

cho visiri said...//யசோதா MLA சட்டசபையில்//
If my memory does not fail me... it wasnot Yasoda .... it was Anantanayaki...
Inany case other words are correct and the MK has two measures - one for himself and other for others....

Forget or f*** it