பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 06, 2013

டோண்டு ராகவன் - அஞ்சலி


நண்பர் டோண்டு ராகவன் நம்மை விட்டு போய்விட்டார் என்று பாலா பதிவை படித்த போது சோகமாக இருந்தது.

'சமீபத்தில்'  துக்ளக் ஆண்டு விழா பற்றி அவருடன் செய்த சாட் உரையாடல். .கடைசியில் இட்லிவடை யார் என்று சொல்லியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

Dondu: வணக்கம். உங்கள் ஒலிப்பதிவு நாடாவைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
me: நீங்க போயிருந்தால் உங்க கிட்ட அப்டேட் எழுதி போடலாம் என்று இருந்தேன் :-)
Dondu: போக இய்லவில்லை எனக்கு அதில் மிக வருத்தம்
me: கடைசி 30 நிமிடம் விட்டு விட்டேன் கூடிய சீக்கிரம் போட முயற்சி செய்கிறேன்.
Dondu: இதுவரைக்கும் வந்ததே அருமையாக உள்ளது
me: ஒரு மணி நேரம் இருக்கிறது. 6:30 - 8மணி
AM Dondu: சீக்கிரம் அதையும் எதிர்பார்க்கிறேன்
me: நிச்சயம் சார் ஏதோ என்னால் முடிந்தது !
Dondu: இலங்கை பற்றி இப்போது கேட்டுக் கொண்டிருக்கிறேன்
me: சரி. ஏதாவது பிரச்சனை இருந்தால் சொல்லுங்க.
நான் கேட்க வில்லை முழுவதும். அப்படியே போட்டுவிட்டேன்.
Dondu: கண்டிப்பாக
me: நன்றி
Dondu: hats off to you for your efforts
me: வருட வருடம் போடுகிறேன். அடுத்த வருடம் பார்க்கலாம்
Dondu: பொங்கல் வாழ்த்துக்கள்.
me: நீங்க சூப்பரா எழுதுவீங்க அடுத்த வருடம் போனீர்கள் என்றால் இட்லிவடைக்கு அனுப்ப வேண்டும்.
அட்வான்ஸ் ரிசர்வேஷன்
Dondu: கண்டிப்பாக செய்கிறேன்
சேர்ந்தே கூட போகலாமே
me: :-)
Dondu: ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கும்
உங்கள் ரகசியத்தைக் காப்பாற்றுவேன்
me: :-). சரி
Dondu: 38-வது நிமிடத்தில் உள்ளேன். நமது எம்ஜீஆர் பற்றி பேசுகிறார்

அஞ்சலி

32 Comments:

பிரகாஷ் said...

Shocking :(
அவரது ஆன்மா சாந்தியடைவதாக

Vino said...

shocking rest in peace

Ram said...

RIP

Krishnan said...

Oh God ! really shocking. May the Lord Makara Nedunkuzhai Kathar he adored embrace him and give solace to his grieving family.

Krishnan said...

Oh God ! really shocking. May the Lord Makara Nedunkuzhai Kathar he adored embrace him and give solace to his grieving family.

கௌதமன் said...

அதிர்ச்சியான செய்தி. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

வரதராஜன் said...

வருத்தம் அளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

M Arunachalam said...

I am shocked. I pray to the Almighty to give strength to his family to bear this loss. May his soul rest in peace.

Arun

sury siva said...திரு ராகவன் அவர்கள் ஆத்மா சாந்தி அடைய நாம் பிரார்த்திப்போம்.

நம்மைச் சுற்றி நடக்கும் பல்வேறு நிகழ்வுகளிலே நமக்கு உடன்பாடு இல்லையெனினும், பல்வேறு
காரணங்களினால் நாம் அதைப்பற்றி கருத்து வெளிப்படுத்துவது இல்லை.

எனக்குத் தெரிஞ்ச சில காரணங்கள்.

எனக்கு நேரம் இல்லை
எனக்கேன் வம்பு , பிரச்னைலே போல் வலுவிலே நான் ஏன் மாட்டிக்கணும் ?
நான் எதுனாச்சும் சொல்லி என்னை நாலு பேர் திட்ட இதெல்லாம் எனக்கு வேணுமா,
எனக்கு ஏற்கனவே ஏகப்பட்ட ஜோலிகள், கவலைகள், சிக்கல்கள் இருக்கும்போது, இன்னொன்றிலும் ஏன் அனாவசியமாக‌
மாட்டிக்கொள்ளவேண்டும்
நான் சொல்லி யாரு கேட்கப்போறாக, வூட்டுல கூட கேட்கறது கிடையாதே
உலகத்தை நான் திருத்த முடியுமா ! நம்ம நல்லவர்களாக இருந்துட்டு போவோமே
அதர்மம் என்று ஒன்று நிசமாவே இருந்தாஅ, அதுக்குத் தான் பகவான் அப்பப்பா புறப்பாருன்னு இருக்கே...
யாரோ ஏதோ சொல்லிட்டு போறாக, நாம உண்டு நம்ம ஜோலி உண்டு அப்படின்னு இருப்போம்.
நமக்கு எல்லோருமே வேண்டும்.
உலகம் அப்படின்னா அப்படித்தான் இருக்கும்.
உனக்கு இது பத்தி சொல்லணும் அப்படின்னா உனக்கு எதுனாச்சும் ஆதாயம் இருக்கா ?
அட ! எழுதறதா முடிவு எடுத்தாலும் நாசூக்கா எழுதிட்டு போயேன் ! வெளிப்படயா சொல்லணுமா ?

இந்த அத்தனை காரணத்தையும் தூக்கிப்போட்டு விட்டு, நம்ம அலட்சியமா இருந்துட்டா யாரய்யா செய்வாக அப்பட்டின்னு
துணிஞ்சு செயல்பட்ட மனசு ராகவோனட மனசு.

ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி கூட அவரோட ஃபோன் நம்பரை வாங்கி அவருடன் பேசினேன். அப்ப அவர்
ஏதோ ஒரு காரசாரமான பதிவு போட்டு இருந்தார்.
யதார்த்த வாதி பகுஜன விரோதி அப்படின்னு ஒரு வசனம் இருக்கே... இந்த உடம்ப வச்சுண்டு
இதெல்லாம் தேவையா... அப்படின்னு எல்லாம் சொல்லிப்ப்பார்த்தேன்.

நான் அப்படித்தான் இருப்பேன் அப்படின்னு சொன்னார்.

ஒரு பக்கம் அத வீம்பு அப்படின்னு சொன்னாலும் இன்னொரு பக்கம் இத அசாத்ய துணிச்சல்
அப்படின்னு சொல்றது. நம்ம செய்யற காரியம் சரி, எது வந்தாலும் எந்த நஷ்டம் வந்தாலும்
உடலுக்கு பொருளுக்கு , துணிஞ்சு அதுலேயே நிப்போம் அப்படின்னு இருக்கறது,

மனசார சொல்லப்போனா நம்மிடையே பலருக்கிட்ட இந்த துணிச்சல் இருக்காது. என்ன . அப்படி அந்த துணிச்சல் இல்லை என்கிறதை . பகீரங்கமா ஒத்துக்கொள்ள மாட்டோம். அவ்வளவு தான். சொல்லவேண்டியத யாரு ஒத்துப்பார்களோ அவங்ககிட்ட மாத்திரம் சொல்லிட்டு மனசு வேதனையை தீத்துப்போம்.

உலகத்தாரது யதார்த்த விதி இது. இதிலிருந்து மாறுபட்டவர் திரு ராகவன். அவர் கருத்துக்களில் பல நம்மில் பலருக்கு சரி யாக இல்லை. சில கருத்துக்களில், சொல்லியது சரி என்றாலும் சொல்லும் விதம் சரி இல்லை என்று நினைத்தோம்.

ஒன்றே ஒன்று நாம் யாவரும் நினைக்கிறோம். அது அவரது துணிச்சல்.

அவரது துணிச்சலை பாராட்டுவோம்.

சுப்பு ரத்தினம்
www.subbuthatha.blogspot.in

Koothur Sriram said...

It was a real shock to hear the sad news. He has impressed one and all with his boldness. Let us pray for his soul to rest in peace.

பூவண்ணன் said...

மிகவும் வருத்தம் அளிக்கும் செய்தி .அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

பாரதி மணி said...

இன்று என் ஃபேஸ்புக்கில் போட்ட பதிவு:

இன்று காலை டோண்டு ராகவன் மரணச்செய்தி கேட்டவுடன், மனசுக்கு சங்கடமாக இருந்தது. பதிவர் துளசி கோபால் விருந்துக்கு வந்திருந்தவரை அடையாளம் தெரியவில்லை. அப்படி இளைத்திருந்தார். அப்போது நான் அவருக்கு கையெழுத்துப் போட்டுக்கொடுத்த என் புத்தகத்தை சிலாகித்து, மூன்றாவது முறையாக இருவாரங்களுக்கு முன் நிறைய போனில் பேசினார்.

பழக்கதோஷம் காரணமாக, இன்றும் அவரது ப்ளாக் போய் கீழ்க்கண்ட செய்தியைப்போட்டேன்:

//டோண்டு சார்,

நீங்கள் மறைந்த நாளன்று, உங்கள் பக்கத்துக்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்துபவன் நானாகத்தான் இருக்கமுடியும்.

அங்கேயும் இதே மனத்திடத்துடன் உங்கள் பணிகளைத்தொடரவும்.

We will miss you, Dondu! God bless you!

Bharati Mani
06.02.2013//

உடனே கணினியில் இப்படி ஒரு செய்தி வந்தது:

//உங்கள் கருத்துரை சேமிக்கப்பட்டது, வலைப்பதிவு உரிமையாளரின் ஒப்புதலுக்கு பின்னர் காண்பிக்கப்படும்.//

”வலைப்பதிவு உரிமையாளர்” பார்த்திருப்பார் என நம்புகிறேன். God bless you, Dondu!

k.rahman said...

my sincere condolences to the departed's family. rest in peace.

ராமுடு said...

I m shocked.. Great personality to move with. RIP.

ஸ்ரீராம். said...

மிகவும் வருத்தமான செய்தி.

Loganathan - Web developer said...

நான் விரும்பி படிக்கும் வலைப்பூவை எழுதியவர். மிகவும் வருத்தமான செய்தி.

Dhas said...

May his soul rest in peace!

ரிஷபன்Meena said...

திரு.டோண்டு ராகவன் அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தான் சொல்ல வருவதை வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று டோண்டு அவர்களைப் போன்று
நேரிடையாகச் சொல்லக் கூடியவர்களை இனையத்திலும் வாழ்க்கையிலும் பார்ப்பது மிகவும் அறிது.

”வாடிக்கையாளரை அனுகும் முறைகள்” பற்றிய பதிவுகளில் அவர் எழுதிய அனுபவப் பாடங்கள் எந்த பள்ளியிலும் படிக்கக் கிடைக்காது. அந்த பதிவுகள் படித்த பிறகே charity என்று ஜல்லியடித்து ஏமாற்றுபவர்களிடமிருந்து எப்படி ஒதுங்குவது என்பதறிந்தேன்.

டோண்டு அவர்களுக்கு இவ்வளவு சீக்கிரம் அஞ்சலி சொல்ல வேண்டி வந்ததை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.

rkajendran2 said...

மிகவும் வருத்தம் அளிக்கும் செய்தி .அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

”தளிர் சுரேஷ்” said...

ஆழ்ந்த அஞ்சலிகள்!

Kulasekaran said...

His demise was sudden and sad.

Condolences to the bereaved family

I came to read his blog just a few years ago; and on many subjects posted comments travestying his views. He allowed all. I even corrected his Tamil once; he obliged that. On some occasions, I charged him with not being true to his religion. His return comments were sober.

The last comment about him was that I wrote in Govi Kannan's blog just a few weeks ago making the same accusation. He responded decently explaining himself. Others would have responded with quite vituperative comments. A rare quality about him is that he never stood on false prestige. He accepted his mistakes if they were bona fide.

He is not a real casteist. Under provocation he used to describe himself as a Vadagalai Iyengar but it is a show in order to tease his critics, as his close readers are aware. He never boasted about his identity. At bottom he felt one with others; and moved with them easily as evident from his relationship with Tamil bloggers w/o any discrimination, although he himself faced discrimination in one bloggers meeting.

In the altercation between him and the psychiatrist Dr Rudran and his wife, DR understood their agony and became aware he was wrong in targeting them. He apologized. Not content with mere words, he met the DR in a bloggers meeting and reconciled with him and published the photo of embrace in his blog. The reconciliation was heartfelt.

If he had had a close direct meeting with his infamous enemy Moorthy, that person would have been taken in by DR's broad mindedness. The young man mistook him for a casteist. The elder would have himself taken that step to move closer and made the younger understand. But I do not know exactly why he didn't. The bitter experience DR had wouldn't have occurred.

More often he was accused of being arrogant. But I felt in him there was deep down overwhelming humility and compassion for all. I never met him but would have liked to meet. Coz I came to TN recently and don't live in Madras.
But his end, though sudden, yet had some premonition. That I felt to my sorrow in reading his blog post in which he bid Farwell to the flesh ! (pennasai). To me, it said not merely the flesh, but the world too.

A simple man w/o any pretensions, he lived according to his conscience. It is difficult to live like that. As far as I know, he achieved that distinction. Tamil blogosphere was illuminated by him. That illumination is now dimmed.

If I were to tell him now that DR, here has come a Brahmin inveterate hater, his reply would be: 'So what, still I love you!"

That is being a true Brahmin, isn't? What more qualifications a Vadagalai Iyenagar needs? Has he not lived upto the five codes ?

DR, may the God of Shrivaikuntam (Magara Nedungulzahi Kaathar) take you and care for you!

“Break, break, break
On thy cold grey stones O sea!
I would that my tongue could utter
The thoughts that arise in me!”

-Kulasekaran

enRenRum-anbudan.BALA said...

கருத்து வேறுபாடுகள் (முக்கியமாக ஈழம்)எங்களுக்குள் இருந்தபோதிலும், என்னளவில் அவர் ஒரு மாமனிதர் !!! பழகுவதற்கு நல்லவர், இனிமையானவர், போலித்தனம் துளியும் இல்லாதவர்.

எ.அ.பாலா

Cinema Virumbi said...

திரு. டோண்டு ராகவன் அவர்களின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

சினிமா விரும்பி

http://cinemavirumbi.blogspot.in

Subramanian said...

Sorry to hear that Mr. Dondu Raghavan passed away. I was a regular reader of his blog for many years now. He had a straight forward way of putting across his views and did not try to be politically correct. I will definetly miss visiting his blogs. Let God give the strength to his family for overcoming this loss.

Madhavan Srinivasagopalan said...

RIP...

சுபமூகா said...

>> me: நீங்க சூப்பரா எழுதுவீங்க அடுத்த வருடம் போனீர்கள் என்றால் இட்லிவடைக்கு அனுப்ப வேண்டும்.
அட்வான்ஸ் ரிசர்வேஷன்

இதைப் படித்த போது கண் கலங்கி விட்டது. அருமையான அஞ்சலி!!

R. J. said...

Regrettably I didn't follow his blog site regularly and my knowledge about him is only through IV site. (I did visit Mr. D'Ragavan's site couple of times but didn't follow it up on a regular basis.) After reading the eulogies here, I fell bad of not knowing him more closely. My heartfelt condolences to the bereaved family. I read about his cancer in his own writing after all the chemo and radiation sessions and I had wished him then for a return to healthy life soon. God has not been listening to my prayers and those of his family members and numerous friends. May his soul RIP. - R. J.

Vikram said...

this was my response to one of his comments in IV couple of days back -
"dondu avargale - have u got the required "permission" to quote the scene from the movie,before logging your comment??!!"

cant believe he is no more :-(

Anonymous said...

இ.வ சுட்டியுள்ள எ.அ.பாலாவின் வலைத்தள பிளாக் கவுண்ட்டர் எண்ணிக்கை ஒரு நாளில் 1700-க்கும் மேல் எகிறியிருக்கிறது. டோண்டு தமிழ் வலை உலக சச்சின் தெண்டுல்கர் என்பது அன்னாரின் மரணத்திலும் நிரூபணம் ஆகியிருக்கிறது. RIP

எஸ்.கே said...

டோண்டு மிக இன்டெரெஸ்டிங்கான மனிதர். ஐஸ் ஹவுஸ் பகுதியில் இருக்கும் ஒரு நூல் நிலையம் செல்லும் வழியில் சில முறை என் வீட்டுக்கு வந்திருக்கிறார். ஒரு முறை எங்கள் வீட்டில் செய்த மோர்க்கூழை மிகவும் விரும்பி சாப்பிட்டார் ("அடில பொருக்கு தட்டி இருக்குமே அதை கொஞ்சம் போடுங்கோ").

அவர் பேசுவது பெரும்பாலும் வலைப்பதிவு பற்றியே இருக்கும். அதை மாற்றி சில சமயம் நாங்கள் Terry Pratchett நாவல்களைப் பற்றியும் கதைத்திருக்கிறோம்.

ஒரு துணிச்சலான பிராமணரை இழந்துவிட்டோம்!

எஸ்.கே

Anonymous said...

Every weekend, I browsed his site for the past many years. It's a great loss. Great man and very very open stand on the discussed issues. Thanks Dondu for all the sharing

my sincere condolences to the departed's family

Anonymous said...

ஆழ்ந்த அனுதாபங்கள் இட்லிவடை தேசிகன்!!!