பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 04, 2013

திகைக்கிறார் போலீஸ் பொன்னுசாமி - - அறிஞர் அண்ணா

அதோ! உயர்ந்த உருவமும், நீண்ட மீசையும் கொண்டு மிடுக்கான தோற்றத்துடன் வரும் போலீஸ் பொன்னுசாமியை அறியாதார் இரார். போக்கிரி! சாக்கிரி! கொலைகாரன், கொள்ளையடித்தவன்! எல்லாம் அவருக்குத் துரும்பு போல, விட மாட்டார்! திறமையைப் பாராட்டி ‘மெடல்’கள் கூட அளிக்கப்பட்டிருப்பவர்!!

அவருக்குச் சட்டம் என்றால் சட்டம் தான்! - அவ்வளவு கடமையுள்ளம் கொண்ட நல்லவர். யாருக்கும் பணிய மாட்டார். இலஞ்சம், ஊழல் இதெல்லாம் அவருக்கு வேம்பு. அப்படி வாங்குவதால், அரசாங்கம் தண்டிக்கும் என்கிற பயத்தை விட, நாளைய தினம் இறந்தபிறகு நடக்குமே ‘எமதர்மனின் விசாரணை’ அதற்காக மிகவும் அஞ்சுபவர்! நெற்றியில் பள பளவென்று மின்னும் நாமமே சொல்லும், அவர் எவ்வளவு பக்திமான் என்பதை! ”யாராயிருந்தா நமக்கென்ன சார்? டூட்டின்னா டூட்டிதான்! பணக்காரனாயிருந்தா அவன் வீட்டிலே பலே கில்லாடின்னா, இரண்டு குத்திலே அலறனும்” என்று துணிச்சலோடு சொல்வார். ஆனால் கோயில் குருக்களைக் காணும்போது, போலீஸ் தொப்பியைக் கழட்டிவிட்டு அவர் கும்பிடத் தவறமாட்டார். டி.எஸ்.பியை விட அய்யருக்கு போலீஸ் பொன்னுசாமியிடமிருந்து அதிக மரியாதை கிடைக்கும்! அவ்வளவு சனாதன நம்பிக்கையுள்ளவர்.

அவருக்கு இப்போது ஒரு சிக்கல்! பக்கத்து கிராமத்துக்கு, ஒரு ’கேசை’ப் பிடிக்க போக வேண்டும் - கொலைக்கேஸ் அல்ல!


கலியாணக் கேஸ்! ஆமாம், முதல் தாரம் இருக்கும்போது, இரண்டாம்தாரம் செய்து கொள்ள ஒருவர் முனைவதாகப் போலீஸ் இலாகாவுக்குத் தகவல் எட்டியிருக்கிறது. சட்டம் என்றால் சட்டம் தானே, அவருக்கு. அதனால் புறப்படப் போகிறார் கிராமத்துக்கு. சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்து ஒரு தினுசான ஆசாமி! அவருக்கு, பொன்னுசாமியைப் பற்றி அதிகம் தெரியும்!! கொஞ்சம் குறும்பு சுபாவம் உள்ள்வர்.

அதனால் பொன்னுசாமி ‘ஸ்டேஷனிலிருந்து’ விடைபெற்றுக் கொண்டு வீட்டுக்குப் போகும்போது கூப்பிட்டார் அவரை.

“பொன்னுச்சாமி”

“சார்..”

“உனக்கு என்ன ‘டூட்டி’ ஞாபகம் இருக்கிறதா?”

“கிராமத்துக்குப் போய் இரண்டாம்தாரக் கலியாணத்தை தடுத்து அந்த ஆளை ‘அரெஸ்ட்’ செய்து கொண்டு வர வேண்டிய டூட்டி சார்...!”

“ஊம். உம்முடைய பத்து வருஷத்து சர்வீசிலே சட்டத்தை மீறிய யாரையும் நீர் பிடிக்காமல் விட்டதுண்டா?”

“கிடையாது சார்... இவருக்குச் சட்டம்னா சட்டம்தாங்க!”

“அதை மீறுகிற யாரையும் விட மாட்டீரே?”

”அண்ணன் தம்பின்னா கூட விடமாட்டேங்க - முதலிலே கையில விலங்கைப் பூட்டிடுவேன்..”

“ரொம்பச் சரி... ஒரு பெண்டாட்டி இருக்கும்போது இன்னொரு பெண்டாட்டியைக் கட்டிக்கறது தப்பு தானே?”

“சட்டப்படி தப்பு சார் - தப்பு”

“சரி, இது என்ன? பாரும்..”

பார்த்தார், பொன்னுச்சாமி.

ஏன் விழிக்கிறார் அப்படி? ஏன் அவர் முகம் ஒரு தினுசாகப் போய்க் கொண்டிருக்கிறது? முகத்திலே ஏன் அவ்வளவு வியர்வை? அப்பப்பா மிகவும் சோகத்துடன் அல்லவா காணப்படுகிறார்!

விஷயம் இதுதான். பெரிய தெரு பீமராயர் வீட்டில் நாளைக்கு ருக்மிணி கலியாணமாம்! விசேஷ போலீஸ் பந்தோபஸ்து வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தார், பீம ராயர். ருக்மிணி என்பது, பீமராயருடைய பெண்ணல்ல; சாட்சாத் எம்பெருமான் கிருஷ்ண பரமாத்மாவினுடைய மனைவி ருக்மிணிதான்! அந்த ருக்மிணிக்கு மீண்டும் கலியாணம்.

நோட்டீசைக் காட்டிக் கேட்கிறார் சப்-இன்ஸ்பெக்டர் “என்ன பொன்னுசாமி! பாமா இருக்கறப்ப இந்த கிருஷ்ணன் இன்னொரு பெண்ணைக் கட்டிக்கலாமா?”

“கிருஷ்ணன் சாமிங்க”

“சாமி தப்புத் தண்டா செய்யலாமா பொன்னுச்சாமி! சட்டம்னா சட்டம் தானே?” - கேட்கிறார், சப் - இன்ஸ்பெக்டர்! விழிக்கிறார், பொன்னுச்சாமி.

பாவம், என்ன பதில் சொல்வார், அவர்?! எந்தச் சாமிதான் ஒரு மனைவியோடு வாழ்வதாக இருக்கிறது, நமது புராணத்தில்!! ஊம்... ‘அரெஸ்டு’ செய்வதென்றால், சட்டப்படி போலீஸ் பொன்னுச்சாமி, எந்தக் கடவுளைத்தான் விட்டு விட முடியும்? சிக்கலான விஷயம் தானே! திகைக்கும் பொன்னுசாமியால் என்ன பதில் சொல்ல முடியும்! திகைக்கிறார்.

நேற்று அண்ணா நினைவு நாள். கழகங்கள் அவர் சிலைக்கு மாலை தூவ, நமக்கு அந்த மூட நம்பிக்கை கிடையாது அதனால் இந்த சிறுகதை!

நமக்கு இந்த கதையை அனுப்பிய அநங்கனுக்கு நன்றிகள்

12 Comments:

Dr Rama Krishnan said...

The writer of this story and the publisher IV are plain imbeciles. Both should educate themselves about the basics of Hinduisim, Prakriti and Purusha of Brhamam before mouthing off with idiotic,brain dead statements.

Anonymous said...

மனைவி, துணைவி என்று வைத்திருக்கும் ‘அண்ணா’வின் தம்பிகளுக்கு இச்சிறுகதை சமர்ப்பணம். சூப்பர் இட்லி. சும்மா ‘நச்’னு இருக்கு.

Anonymous said...

// Blogger rk said...

The writer of this story and the publisher IV are plain imbeciles. Both should educate themselves about the basics of Hinduisim, Prakriti and Purusha of Brhamam before mouthing off with idiotic,brain dead statements.//

மூடிகிட்டு போ

Arun Ambie said...

மனைவி, துணைவி, இணைவி, துணை மனைவி, இணை துணைவி என்று சுற்றம் சூழ குலாவும் கடமையும் கண்ணியமும் தட்டுப்பாடு மிக்க தம்பியர்க்கும், சுந்தரகோஷை ஆட்கொண்ட இங்கர்சால்களுக்கும் பேரறிஞர் அண்ணாவின் இந்தப் பேச்சு சமர்ப்பணம்.

Anonymous said...

Well. the writer of this story was the precedent for the two wifes culture in tamilnadu !!!!!!!!!!!!

ஜெ. said...

//Well. the writer of this story was the precedent for the two wifes culture// அண்ணாதுரைக்கு 2 மனைவிகளா? அன்பழகனுக்கும் 2 மனைவிகள் என்று சமீபத்தில்தான் தெரிந்துகொண்டேன்! நல்ல வேளை. வாரிசுகள் இந்த விஷயத்தில் அப்பாவை பின் பற்றவில்லை!)

Anonymous said...

RK தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லை (ஆங்கிலம் தெரியாததினால் அல்ல, ஏனென்றால் ஆங்கிலம் சுமாராக தெரியும்!). இந்த கதையை எழுதியவர் பேரறிஞர் அண்ணா. அவரை விமர்சிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இட்லி வடை ஒரு வஞ்சப்புகழ்ச்சியுடன் அதை பிரசுரித்து தனது மஞ்சள் மகிமையையும் வெளிப்படுத்தியுள்ளார். இதில் தாங்கள் என்ன குற்றம் கண்டீர் ? சொல்லிலா அல்லது பொருளிலா ??

கல்யாணராமன்

Dr Rama Krishnan said...

"மூடிகிட்டு போ"
@ Anonymous.Congrats. Your statement shows your Dravidian congenital hatred for anything Hindu and Hinduism.I cannot expect sophisticated cultural inputs from Dravidian mob.Please carry on the trait.
@கல்யாணராமன்
Thanks for tongue in cheek statement.

Subramanian said...

why get emotional about this?

Half baked article,the real answer from ponnusamy shud not that is samy,it is that the laws of krishna were different.

The constable is not working under the rules of the old law but the new law.

anyway hinduism clearly says raman senjadha seyyi,krishnan sonnadha seyyinnu.

Anonymous said...

ஓ.. அய்யாமாருகளுக்கு எல்லாம் கிருஷ்ணன் தான் பிடிச்ச கடவுள் போல. அதான் ராமனைத் திட்டுறாக. கிருஷ்ணருக்கு ”மண்டகப்படி” தவறாமச் செய்யுறாக. அவர் வாழ்ந்தபடி இவுகளும் வாழனும் நினைக்குறாக.

எனிவே அண்ணா “நாமம்” வாள்க.

Kannan said...

எம் ஆர் ராதா ஒரு வசனம் உண்டு (இந்த ரீதியில்) "கோவில்ல தீய தொட்டு கண்ணுல ஒத்திக்கிற, வீட்டுல தீ பத்திகிட்டா ஏண்டா ஐயோ அம்மான்னு குதிக்கிற". முட்டாள்களை அதாவது சிந்திக்க வசதி இல்லாத பகுத்தறிவாளர் குஷியாகும் வசனம். படம் பார்த்து வெளியே வரும் பொழுது கேட்டேன் (எனக்கு தி.க. நண்பர்களும் உண்டு), "அப்போ உன் பொண்டாட்டி கைய மருத்துவர் தொட்டாலும் பக்கத்துக்கு வீட்டுகாரன் தொட்டாலும் ஒன்னும் சொல்ல மாட்ட? அப்படி தானே! ரெண்டு பேரும் கைய தானே தொட்டு பாக்குறாங்க!". அவர் பதில் சொல்லவில்லை. யோசிக்க ஆரம்பித்தது தெரிந்தது.

வாங்கோ காபி சாப்டுண்டே பேசலாம் .. said...

கழக இலக்கியங்களில் கலை நயம், பொருள் நயம், சொல் நயம்,கருத்து நயம் இருக்கும் என்று நினைத்தது நமது தவறு.
அவர்கள் பேச்சிலும் எழுத்திலும் ஒன்று காம ரசம் இருக்கும்,அல்லது ஹிந்து மத துவேஷம் தெரியும்.வெள்ளைக் காரர்களுக்கு ஒத்து ஊதியே வயிறும் வங்கிக் கணக்கும் வளர்த்தவர்கள் அவர்கள்.அப்படி தமிழ்ப்பணி ஆற்றினார்கள்.