பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 11, 2013

பாகிஸ்தான் அரசியல் வரலாறு - வாசிப்பனுபவம் சுபத்ரா


குமுதம் வார இதழில் தொடராக வெளிவந்து பலரின் பாராட்டுகளைப் பெற்றது திரு. பா. ராகவன் எழுதிய ‘பாகிஸ்தான் அரசியல் வரலாறு’. அவற்றைத் தொகுத்து ஒரு புத்தகமாக ‘மதி நிலையம்’ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. வாசிக்கத் தொடங்கிய முதல் அத்தியாயத்திலேயே ஒரு பரபரப்பு நம்மைத் தொற்றிக்கொள்கிறது.

ஒரே தாயின் வயிற்றில் பிறந்த இரட்டையர்கள் போல ஆங்கிலேயரிடமிருந்து சுதந்தரம் பெற்றுப் பிரிந்த இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு சகோதர நாடுகளும் அடித்துக் கொள்வது ஒரே ஒரு “காஷ்மீரு”க்காக. அந்தக் காஷ்மீர் மொத்தமும் ஒரு காலத்தில் ரூ.60 லட்சத்திற்காக விற்கப்பட்டது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

இந்தியாவுடனும் சேராமல் பாகிஸ்தானுடனும் சேராமல் “காஷ்மீர் எங்கள் பரம்பரைச் சொத்து” என்று பிடிவாதமாகக் கூறிவந்த மன்னர் ஹரிசிங் இறுதியில் இந்தியாவுடனான இணைப்பு ஒப்பந்தத்தில் எவ்வாறு கையெழுத்திட்டார்? இந்தியாவிற்கு முன் பின் வந்தேயிராத சர் சிரில் ராட்கிளிஃப் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானை எவ்வாறு பிரித்தார்? புதிதாகப் பிறந்த பாகிஸ்தான் குழந்தை ஜின்னாவின் திடீர் மறைவிற்குப் பிறகு எவ்வாறு வளர்ந்தது? I.S.I. எப்படி எதற்காக உருவானது? பாகிஸ்தான் அரசியலில் ராணுவம் என்ன பங்கு வகிக்கிறது?

காஷ்மீர் பிரச்சனைக்குச் சுமுக தீர்வு காண்பதற்காக இந்தியா வரவிருந்த அப்போதைய பாகிஸ்தான் அதிபர் ஆயூப்கானை எது தடுத்தது? 1965-ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போருக்கு “ஆபரேஷன் கிப்ரால்டர்” என்று பெயர் வைத்தது ஏன்? புகழ்பெற்ற தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டது என்ன? பாகிஸ்தானிடமிருந்து பங்களாதேஷ் விடுதலை பெறும் காட்சியில் இந்தியா ஏன் வந்தது? அதில் அதிரடிப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? அது வழிவகுத்த 1970 பாகிஸ்தான் போரை இந்தியா எவ்வாறு கையாண்டது?

பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் மிக முக்கியவராகக் கருதப்பட்ட ஜூல்பிகர் அலி புட்டோ எந்நிலையில் தூக்கிலிடப்பட்டார்? அவரது மகள் பேனசிர் புட்டோ எந்நிலையில் ஆட்சி நாற்காலியில் அமர்ந்தார்? கடத்தல் மன்னன் தாவூத் இப்ராஹிம் மும்பையில் வேரூன்றியது எப்படி? தாலிபான்களுக்கும் I.S.I.க்கும் இருந்த தொடர்பு என்ன? நவாஸ் ஷெரிப் ராணுவத் தளபதியாக பர்வேஸ் முஷாரஃப்பை ஏன் நியமித்தார்? 2001-ல் முஷாரஃப் இந்தியாவுடன் நிகழ்த்திய அமைதிப் பேச்சுவார்த்தை என்ன ஆனது? அமெரிக்க – ஆப்கன் யுத்தத்தில் பாகிஸ்தானின் பங்கு என்ன?

இவை போக, காஷ்மீரைத் தவிர இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் வேறு என்னென்ன பிரச்சனைகள் நிலவுகின்றன? உலகின் மிக முக்கிய தீவிரவாத இயக்கங்கள், பாகிஸ்தானின் தேர்தல் முறைகள் என எண்ணற்ற விசயங்கள் அடங்கிய ஒரு புத்தகம் இது.

இந்தியா சுதந்தரம் பெற்றது 1947. அதற்கென ஒரு அரசியல் அமைப்புச் சாசனம் (Constitution) உருவாகியது 1950-ல். ஆனால் இந்தியாவிற்கு ஒரு தினம் முன்பு சுதந்தரம் வாங்கிய பாகிஸ்தானுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் எழுதத் தேவைப்பட்டது ஏறத்தாழ பத்து வருடங்களாம்...! இந்தியாவிற்கு இணையான அல்லது இந்தியாவைவிடச் சிறந்த ஒரு வல்லரசாக உருவாகும் வாய்ப்பை பாகிஸ்தான் இழந்து பின்தங்கியது எதனால்? இது போன்ற எண்ணற்ற தகவல்களும் இந்நூலில் புதைந்து கிடக்கின்றன.

புத்தகத்தைப் படித்து முடித்த பின்னர் பாகிஸ்தான் மீது இதுவரை இருந்துவந்த உணர்வுகள் மாறி அது நம் சகோதர நாடு என்ற எண்ணம் எனக்கு மேலோங்கிவிட்டது ஏன் என்று தெரியவில்லை.. :-)


- சுபத்ரா
http://subadhraspeaks.blogspot.in

:-)

15 Comments:

Prem said...

Thanks for the review..appreciate if someone can add the link where we can get this book..preferably ebook..thanks a lot in advance.

Unknown said...

எதுக்கு இந்த வேண்டாத வேலை?

எந்த முஸ்லீமாவது தான் பாகிஸ்தான்காரன் இல்லை என்று நினைக்கிறானா?
காபிர்களின் கழுத்தை வெட்டுவது கடமை என்று தானே நினைக்கிறார்கள்

முதல்ல இந்த சகோதரத்துவத்தை உடையுங்கள்

Prem said...

I got the link..and ordered one..
https://www.nhm.in/shop/100-00-0000-514-8.html

R. J. said...

/ அது நம் சகோதர நாடு என்ற எண்ணம் எனக்கு மேலோங்கிவிட்டது ஏன் என்று தெரியவில்லை.. :-)// அண்ணன் தம்பின்னா அடிச்சுக்கணும்னு நமக்குத் தான் தெரியுமே! ஆமா , பாகிஸ்தானுக்கு ஒருநாள் கழித்து நமக்கு சுதந்திரம் கிடைச்சதால நாம தம்பி தானே? - ஜெ

Anonymous said...

Good and interesting review :) Seems u r doing promo for this book :):):)

Muthu

ரசிகன் said...

சுபத்ரா என்ன இவ்ளோ நாளா ஆள காணோம்? வந்துட்டீங்களா இருங்க படிச்சிட்டு வரேன்

ரசிகன்

ரசிகன் said...

நல்ல பதிவு. நன்றி. நானும் புத்தகத்தை வாங்க போகிறேன்.

ரசிகன்

இப்னு அப்துல் ரஜாக் said...

Very nice article.

vijayaustin said...

Thanks for sharing the link. Me too placed order. Any idea how long it would reach since this is my first order.

vijayaustin said...

Thanks for sharing. Have ordered one for me

Anonymous said...

சுபத்ராஜி,

அரசியல் செய்பவர்கள் தான் அடித்துக் கொள்ள நினைக்க வேண்டும். சாராசரி மனிதர்களுக்கு மனிதநேயம் தான் முதலில் முகம் காட்டும்.

சகோதர தேசமென்று நினைத்த அளவிற்கு சரி தான்.அந்த சகோதர தேசத்தை பாராட்டி கவிதை மட்டும் எழுதிவிடாதீர்கள் ..... அந்த ”அண்ணா” தேசத்திற்க்கு சமகாலத்தில் இருக்கும் பிரச்சனைகளே போதும்.

என் மறுபக்கம் said...

அழகான ஆய்வு கட்டுரை, அனால் எதோ விடுபட்டது போன்று ஒரு உணர்வு, உங்கள் எழுத்து வன்மையால் அந்த புத்தகத்தை படிக்கச் வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளீர்கள்,

But ஜெய்சங்கர் கூறியது போல் இது வேண்டாத வேலை,

சொல்லில் குற்றம் இல்லை பொருளில் ...........

மதிப்பெண் :34.999/100

என் மறுபக்கம் said...

அழகான ஆய்வு கட்டுரை, அனால் எதோ விடுபட்டது போன்று ஒரு உணர்வு, உங்கள் எழுத்து வன்மையால் அந்த புத்தகத்தை படிக்கச் வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளீர்கள்,

But ஜெய்சங்கர் கூறியது போல் இது வேண்டாத வேலை,

சொல்லில் குற்றம் இல்லை பொருளில் ...........

மதிப்பெண் :34.999/100

சிவ.சரவணக்குமார் said...

//பாகிஸ்தான் மீது இதுவரை இருந்துவந்த உணர்வுகள் மாறி அது நம் சகோதர நாடு என்ற எண்ணம் எனக்கு மேலோங்கிவிட்டது ஏன் என்று தெரியவில்லை..//

இப்படியே செண்டிமெண்ட்ட ஓவரா பிழிஞ்சிக்கிட்டே இருங்க.......அவனுக எல்லைய தாண்டி வந்து நம்ம ஆளுங்க தலைய வெட்டி எடுத்துக்கிட்டுப்போய் ஃபுட்பால் விளையாட‌ட்டும்...... நீங்களும் உங்க விமரிசனமும்.........போங்கம்மா........ போய் இனிமேலாவது புத்தியோட பொழைக்கப்பாருங்க......

சிவ.சரவணக்குமார் said...

//பாகிஸ்தான் மீது இதுவரை இருந்துவந்த உணர்வுகள் மாறி அது நம் சகோதர நாடு என்ற எண்ணம் எனக்கு மேலோங்கிவிட்டது ஏன் என்று தெரியவில்லை..//

இப்படியே செண்டிமெண்ட்ட ஓவரா பிழிஞ்சிக்கிட்டே இருங்க.......அவனுக எல்லைய தாண்டி வந்து நம்ம ஆளுங்க தலைய வெட்டி எடுத்துக்கிட்டுப்போய் ஃபுட்பால் விளையாட‌ட்டும்...... நீங்களும் உங்க விமரிசனமும்.........போங்கம்மா........ போய் இனிமேலாவது புத்தியோட பொழைக்கப்பாருங்க......