பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 27, 2013

ஒரு சிறுவனின் மரணம் - க்ருஷ்ண குமார்

இரண்டு பெரிய ஆண்கள் முன்னால் ஒரு சிறுவன் நிற்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள். அச்சிறுவன் தான் அந்த தவறைச் செய்திருக்க வேண்டும் என்று நம்பும் அவர்கள், கோபத்தில் அவனை அடிக்கத் தொடங்குகிறார்கள். தாங்கள் அவனின் ஆசிரியர்கள் என்பதால் அவனை அடிக்கும் உரிமை தங்களுக்கு இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். அச்சிறுவனுக்கு உதவ இப்போது எந்த நாதியும் இல்லை. அச்சிறுவன் உயர் சாதியா, தலித்தா அல்லது மலைவாழ் மக்களைச் சேர்ந்தவனா என்பதெல்லாம் இங்கே ஒரு பொருட்டே இல்லை. எந்த நாதியும் இல்லாமல் அவன் தனித்துவிடப்பட்டது தான் இங்கே பிரச்சனை. அந்த நொடியில், கொடுரமான விழைவுகளில் இருந்து அவனைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட எந்த ஒரு அமைப்பும் நெருங்க முடியாத தூரத்தில் இருக்கிறான். ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமை கோட்பாடுகளோ, சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய ஆணையமோ (National Commision for Protection of Child rights - NCPCR) அவனைக் காப்பாற்ற முடியாது. எப்படிப்பார்த்தாலும் இதில் அரசால் ஒன்றும் செய்ய முடியாது; ஏனென்றால் அதே அரசின் அதிகாரத்தைக் கொண்டு அதன் மேற்பார்வையில் தான், சிறுவனை இறக்கமில்லாமல் கண்டபடி அடிக்கும் இந்த இரண்டு பேரும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அரசாங்க பள்ளிகளிலோ அல்லது தனியார் பள்ளிகளிலோ எங்கே வேலை செய்தாலும் சரி, சிறுவர்களின் மனம் மற்றும் உடல் மீதான உரிமையை சட்டப்பூர்வமாக எடுத்துக்கொள்வது அரசாங்கத்திற்கு இருக்கும் அதிகாரத்தின் மூலம் தான்.

அந்த இருவரும் அச்சிறுவன் நிலைகுலைந்து விழும் வரை அவனை நையப்புடைத்திருக்கிறார்கள். அவனுடைய பெற்றோர் பக்கத்து நகரத்தில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கே மருத்துவர்கள் சிறுவனுடைய முதுகுத்தண்டு நொறுங்கியிருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்கள் பரிந்துரைத்த சிகிச்சை முறை செலவு பிடிக்கக்கூடியது என்பதால், அவனுடைய பெற்றோர் வேறோர் நகரத்தில் இருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கே, சிறுவன் இறந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார்கள். ஊடகங்களில் வந்த செய்திகளைப் பார்க்கும் போது, பள்ளியில் இருந்த வாளி உடைந்துவிட்டதை சிறுவன் தனது ஆசிரியர்களிடம் தெரிவித்திருக்கிறான்; அவனே உடைத்திருக்கக் கூடும் என்று அவர்கள் சந்தேகப்பட்டிருக்கிறார்கள். இது மத்தியப்பிரதேச மாநிலம் பீட்டுலில் இருக்கும் ஒரு அரசு பள்ளியில் நடந்த சம்பவம். ஒரு ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார், அடுத்தவரையும் வெகு விரைவில் போலீஸ் கைது செய்யக் கூடும். தொடந்து வழக்கு நடைபெறும் என்பதில் சந்தேகம் இல்லை. சிறுவர் உரிமைகளுக்கான தேசிய ஆணையம் தன்னுடைய விசாரனையை முடித்து, வழக்குக்கு வலுசேர்க்கக்கூடும். அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு, அனைவரும் சொல்வதுபோல், சட்டம் தன் கடமையைச் செய்யும். இந்த வழக்கு தன்னுடைய பாதையில் பயணிக்கத்தொடங்கியிருக்கும் போது, நாம் ஒரு புதிய கேள்வியை எழுப்பலாம், உடனடியாக பதில் கிடைக்கப்போவதில்லை என்றாலும் கூட நாம் கேள்வியை எழுப்பலாம்.

பள்ளிக்கூடங்களில் மாணவர்களை அடிப்பது குற்றம் என்பதால் இங்கே இவர் குற்றம் செய்தாரா என்ற சந்தேகமெல்லாம் இல்லை. புதிதாக உருவாக்கப்பட்ட கல்வி உரிமைச் சட்டம், பள்ளிக்கூடங்களில் மாணவர்களை அடிப்பதை தடை செய்யக் கோருகிறது; அதாவது ஆசிரியர்கள் சிறுவர்களை திருத்துகிறேன் பேர்வழி என்று அவர்களை அடிக்கக்கூடாது. அப்படி அடித்து, அதனால் காயமோ மரணமோ ஏற்பட்டிருந்தால் ஆசிரியர் குற்றவாளி என்பதில் சந்தேகமே இல்லை. இங்கே சட்டம் செய்ய வேண்டிய ஒரே வேலை, மாணவன் தண்டிக்கப்பட்டிருக்கிறான் என்பதையும், அதனால் தான் மரணம் நேர்ந்திருக்கிறது என்பதையும் உறுது செய்வது. பள்ளிக்கூடத்தில், ஆசிரியர் மட்டுமெ சிறுவர்களின் உடல் மேது அதிகாரம் எடுத்துக் கொள்ள முடியும்; அதுவும் கூட சிறுவர்களின் மூளை (அறிவு) அவர்களின் பொறுப்பு என்பதிலிருந்து அவர்கள் எடுத்துக் கொள்வது தான். ஆசிரியர் என்ற பொறுப்பில் அமர்த்தப்படுவதன் மூலம், பெரியவர்களுக்கு சிறுவர்களின் உடம்பு மீதான உரிமை (access) போய்ச் சேருகிறது. “ஆசிரியர்களை இந்தப் பொறுப்பில் அமர்த்துவது யார்?” என்பதே நாம் கேட்க வேண்டிய கேள்வி. இந்தக் கேள்வி, அந்தச் சிறுவனின் மரணத்திற்கு யார் காரணம் என்பதை நாம் புரிந்துகொள்ள உதவும்.

கடந்த இருபது வருடங்களில், சமூகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நிலையும் அவர்களின் அந்தஸ்தும் அதிகளவு மாறியிருக்கிறது. கல்வி உரிமைச் சட்டம் மாணவர்களின் நிலையை மேம்படுத்தியிருப்பதோடு, அரசாங்கத்துக்கும் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்திருக்கிறது; ஆனால் பள்ளிகளில் குழந்தைகளின் நலனுக்கும் அவர்களின் முன்னேற்றத்துக்கும் பொறுப்பானவர்கள் ஏழை கீழ்நிலை ஊழியராகவே இருக்கிறார்கள். குறிப்பாக மத்தியப்பிரதேசத்தில், தொடர்ந்த நிர்வாக குளறுபடிகளால், ஆசிரியர்களின் நிதி மற்றும் சமூக நிலைமை பெரிதும் மாறியிருக்கிறது. அரசியல் மாற்றங்களும் கொள்கை மாறுதல்களும் இவர்களின் நிலையை ஒன்றும் செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சி (1993-2003) தொடங்கி வைத்த தொடர் கொள்கை சீர்த்திருத்தங்களை தற்போதைய பி.ஜே.பி அரசும் தொடர்கிறது. ஆசிரியர்களுடைய வாழ்க்கையின் மாற்றங்கள் எப்போதுமே தேசிய அளவில் உருவாகும் கொள்கை முடிவுகளைப் பொறுத்தே இருந்திருக்கிறது.

1990களில், உள்ளூர் குழுக்களை தொடக்கப்பள்ளிகளை தொடங்க அனுமதிப்பதுடன் அப்பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கும் பொறுப்பை கிராம பஞ்சாயத்துக்களிடம் அளிப்பதன் மூலம் கல்வி அமைப்பில் மாற்றம் செய்ய முடிவு செய்தது. பல வழிகளில் ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியர்களை பணியில் அமர்த்த கொள்கைகள் மாற்றப்பட்டன. ஏற்கெனவே பணியில் இருக்கும் ஆசிரியர்களை தேயும் (dying cadre) ஊழியர்களாக நடத்த முடிவு செய்து, பழைய ஊதிய அளவில் எந்த புதிய ஊழியரையும் அமர்த்தக் கூடாது என்று முடிவு செய்தது. புதிய ஆசிரியர்களுக்கு சாதாரண பயிற்சியும் குறைவான சம்பளமும் தரப்பட்டது. இந்த ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வந்த போது, அதன் அரசியல் ஆதாயம் கருதி, பழைய ஊதியத்தைவிடவும் குறைந்த ஊதியத நிலைகள் உருவாக்கப்பட்டன. மற்ற வடஇந்திய மாநிலங்கள் இந்த ஆசிரியர்களிடம் பிரச்சனைகள் இருப்பதை ஒப்புக்கொண்ட போதும், மத்தியப் பிரதேச அரசு இவர்களை முழுமையான ஆசிரியர்களாக அங்கீகரித்தது. முதலில் மத்தியப் பிரதேசம் மட்டுமே இப்படியொரு ‘சிறந்த’ முறையைக் கையாண்டது. பின்னர் பீகாரும் இதையே பின்பற்றி, பணி நிறைவு அடையும் ஆசிரியர்களுக்கு பதிலாக இந்த குறைந்த ஊதியம் பெறும் ஆசிரியர்களை நியமித்தது.

மேலே சொல்லப்பட்ட வரலாறே, சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணிக்கு இருந்த மதிப்பு, கடந்த இருபது வருடங்களில் எப்படி குலைந்து போயிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளப் போதுமானதாக இருக்கும். கொஞ்சமாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்பவருக்கோ குழந்தைகளுக்கிடையில் பணி செய்ய விரும்புபவருக்கோ தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணி இன்றைக்கு ஏற்புடையதாக இல்லை. தேர்வு முறை என்பது இந்தப் பணிக்கு கட்டாயம் இருக்க வேண்டிய பண்புகளும் திறமைகளும் இருக்கிறதா என்பதை பார்ப்பதில்லை; ஒருவர் பெற்ற பட்டங்கள் மூலமே பணிக்கு அவர் தேர்வு செய்யப்படுகிறார். ஆனால் இந்த பட்டங்களுக்கும் அவர்களுடைய பண்புகளுக்கும் திறமைகளுக்கும் துளி கூடச் சம்பந்தம் இல்லை. இந்த பணிக்கு ஒருவரை தகுதியுடையவராக்கும் பயிற்சி வகுப்புகளின் பெறுமானம் மிக மிகக் குறைவு. இந்த பயிற்சியை அளிக்க அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களில் பல போலிகள் தாம். உச்சநீதிமன்றம், நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் அமைத்த ஒரு ஆணையம், மகாராஷ்டிரத்தில் கல்வியில் டிப்ளமோ பட்டம் வழங்கும் மொத்தமுள்ள முன்னூறு கல்வி நிறுவனங்களில் நாற்பத்தி நாலு மட்டுமே தகுதியுடையவை என்று கண்டறிந்தது. மற்ற மாநிலங்களிலும் நிலைமை இது மாதிரித்தான் இருக்கும். தொடக்கக் கல்வி ஆசிரியர் பணிக்கான இரண்டு வருட பட்டயப் (டிப்ளமோ) படிப்பில் சேர குறைந்தபட்ச தகுதி பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்ச்சி தான்.

ஆறு முதல் பதினோரு வயதுக் குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டிய ஒருவரிடம் உணர்வு முதிர்ச்சியோ அறிவு முதிர்ச்சியோ எதிர்பார்க்கப்படுவதில்லை. பயிற்சி என்ற பெயரில் இளைஞர்களை தேவையில்லாத சடங்குகளை எல்லாம் பின்பற்ற வைக்கிறார்கள், அதுவும் கூட தபால் மூலமாகவோ தொலைதூரக் கல்வி மூலமாகவோ தான் நடக்கிறது. தொடக்கப் பள்ளி ஆசிரியர் பயிற்சி வகுப்புகளில் உருப்படியானது என்று சொல்லக்கூடியது ஒன்றே ஒன்று தான். அது தில்லி பல்கலைக்கழத்தின் எட்டு கல்லூரிகளில் நான்கு வருடப் படிப்பாக பயிற்றுவிக்கப்படும் Bachelor of Elementary Education (B.El.Ed) தான். இந்த நல்ல படிப்பு மேலும் பல இடங்களில் பயிற்றுவிக்கப்படவேண்டும்; ஆனால், தில்லி பல்கலைக்கழகம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைத் தயாரிக்க இரண்டு வருட டிப்ளமோ படிப்பு ஒன்றை தொடங்கவிருப்பதாக கேள்விப்படுகிறோம். இரண்டு வருடம் என்ற குறைந்த காலத்தில் போதுமான கல்வியும் அதற்குவேண்டிய பயிற்சியும் போதுமான அளவு கிடைக்காது என்பதை உணர்ந்து அவர்கள் இந்த புதிய படிப்பை கைவிட வேண்டுமென்பதே என் விருப்பம்.

இப்போது மீண்டும் பீட்டுல் கதைக்கு வருவோம். சிறுவன் இறப்புக்கு யார் காரணம் என்று முடிவெடுக்க சட்டத்துறை அனைத்து ஆதாரங்களையும் திரட்டும் போது, இதில் மாநில அரசின் பொறுப்பும் கேள்விக்குள்ளாக்கப்படுமா? அச்சிறுவனை மூர்க்கமாகத் தாக்கிய ஆசிரியர்களை பணியில் சேர்த்துக் கொண்டதன் மூலம் அவனுடைய உடல் மீதான உரிமையை அவர்களுக்கு அளித்தது இந்த அரசாங்கமே. ஒரு சிறுவனின் நலத்தையும் உரிமையையும் இவர்கள் காப்பாற்றுவார்கள் என்று எந்த விதத்தில் அரசாங்கம் முடிவு செய்தது என்று நீதிமன்றம் அரசிடம் கேட்க வேண்டும். இந்த வேலையைச் செய்ய இவர்களுக்கு என்ன விதமான பயிற்சிகள் அளிக்கப்பட்டது என்பதையும் நீதிமன்றம் வினவ வேண்டும். ஆசிரியர் பணியை இவர்களால் சரியாகச் செய்ய முடியாததற்கு கட்டாயம் யாராவது விளக்கமளிக்க வேண்டும். சிறுவர்களின் நலனைக் காக்க வேண்டிய அரசாங்கம், அவர்களுக்காக ஆசிரியர்களைத் தேர்வு செய்வதில் கொண்டிருக்கும் மெத்தனப்போக்கே இது எல்லாவற்றுக்கும் காரணம் என்பது தான் பதிலாக இருக்கும். இந்த மெத்தனப் போக்கு, கல்வி உரிமைச் சட்டம் மற்றும் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் உயர்ந்த நோக்கங்களை ஒரு நாளும் நிறைவு செய்யாது.

(எழுதியவர் தில்லி பல்கலையின் கல்வியியல் துறையில் பேராசிரியராக இருப்பவர்; NCERTயின் முன்னாள் இயக்குனர்.)

மூலம் : http://www.thehindu.com/todays-paper/tp-opinion/the-death-of-a-small-boy/article4211581.ece

2 Comments:

R. J. said...

இது ஒரு தொடர்கதை. பள்ளியில் ஆசிரியருக்கு மாணவர் மேல் கொஞ்சம் கண்டிப்பு தேவை - ஆனால் அதற்கு எது லிமிட் என்று தெரியாமல் கண்முடித் தனமாக இருக்கும் காட்டு மிராண்டி ஆசிரியர்களும் இருக்கிறார்கள். அவர்களை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு தலைமை ஆசிரியருக்கே. ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் கல்வி அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அந்த அதிகாரியின் பொறுப்பு. ஒரு ஆசிரியரைப் பற்றி அறிய அவர் வகுப்பு எடுக்கும் எல்லா மாணவர்களிடமும் விசாரிக்கவேண்டும். அவருக்கு தலைமை ஆசிரியரோ, கரெஸ்பாண்டென்டோ சப்போர்ட் செய்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை வேண்டும். பள்ளியின் பெயர் போய்விடும் என்று எல்லோரும் மறைக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் இட மாற்றம் என்பதே தண்டனை! மாணவர்களை நல்வழிப் படுத்த வேண்டியவர்களில் சிலர் கொடுமைக் காரர்களாய் இருப்பது வேதனை. - ஜெ

Anonymous said...

பையனின் இழப்பு கவலை தருகிறது.

மோசமாக மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரை.