பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 07, 2013

குஷ்பு ஜாக்பாட் பேட்டி

''தி.மு.க-வுக்கு ஸ்டாலின்தான் அடுத்த தலைவரா வரணும்னு கருணாநிதியே அறிவித்துவிட்டாரே?''

''நாமளே அப்படி ஒரு முடிவுக்கு வந்துடக் கூடாது. தலைவர் என்ன சொல்லியிருக்கார்னா, எனக்கு அப்புறம் சமூகப் பணிகளைத் தளபதி செயல்படுத்துவார்னுதான். தி.மு.க. தலைவரைத் தேர்ந்தெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா, தளபதிதான் அவரோட சாய்ஸ்னு சொல்லியிருக் கார். ஆனா, இறுதி முடிவைப் பொதுக்குழுதான் எடுக்கும். 'யார் கட்சித் தலைவர்’னு முடிவு பண்றப்போ, அதைப் பத்திப் பேசுவோம்.''

''ஆனா, அந்த அறிவிப்புக்கே அழகிரி பயங்கர எதிர்ப்புத் தெரிவிச்சாரே?''

'' 'நான் இதை ஏத்துக்க மாட்டேன்’னு அழகிரி அண்ணன் சொன்னாரா? தளபதியோ, அழகிரி அண்ணனோ, தலைவரோ... யாருமே அண்ணன், தம்பிக்குள் பிரச்னைனு சொல்லலையே. வெளியில சம்பந்தம் இல்லாதவங்க பேசிக்கிறதுக்குப் பதில் சொல்ல வேண்டியது இல்லை.''

''சரி... நீங்க உங்க கருத்தைச் சொல்லுங்க... ஸ்டாலின், அழகிரி, கனிமொழி... தி.மு.க. தலைவர் பதவிக்குப் பொருத்தமானவங்க யார்?''

''திரும்பவும் சொல்றேன்... அதை பொதுக் குழுதான் முடிவு பண்ணும். தலை வர், பேராசிரியர் எல்லாரும் இது சம்பந்தமா கலந்து பேசி முடிவு எடுப் பாங்க. தலைவர் மட்டுமே முடிவு எடுத்துட்டதால, அடுத்த தலைவர் தளபதியாதான் இருக்கணும்னு அவசியம் இல்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம். உட்கட்சித் தேர்தல் நடக்கும். எல்லாரும் வாக்களிப்போம். எல்லாம் முறைப்படி நடக்கும். தி.மு.க - வில் சின்னச் சின்னப் பதவிகளுக்குக்கூட உட்கட்சித் தேர்தல் மூலம்தான் ஆட்களை நியமிப் பாங்க. ஆனா, என் வழி தலைவர் வழிதான்!''

''அதான் 'எனக்குப் பிறகு ஸ்டாலின்’தான்னு தி.மு.க. தலைவர் கருணாநிதியே சொல்லிட்டாரே?''

''எல்லார் விருப்பப்படிதான் தலைவர் தேர்ந்து எடுக்கப்படுவார்னு தலைவரே சொல்லியிருக்கார். கட்சியில அடிமட்டத் தொண்டனாஇருப்ப வங்களுக்குக்கூட தலைவரைத் தேர்ந்தெடுக்க உரிமை இருக்கு. தலைவர் முடிவு எடுத்துட்டா ரேனு யாரையும் தேர்ந்தெடுக்க முடியாது. கட்சியின் நலனுக்கு யார் பொருத்தமாஇருப்பாங் களோ, அவங்களை உட்கட்சித் தேர்தல் நடத் தித் தேர்ந்தெடுப்பாங்க.''

சில மணி நேரத்துக்கும் குஷ்பு வீட்டுக்கு எதிரில் 10 ஆண்களும், 10 பெண்களும் திரண்டார்கள். அவர்கள் குஷ்புவுக்கு எதிராக கோஷமிட்டனர். திடீரென்று வீட்டின் மீது சரமாரியாக கல் வீசி விட்டு ஓடி விட்டனர். குஷ்பு வீட்டுக்குள் நிறுத்தி வைத்திருந்த கார் கண்ணாடிகள் உடைந்தன. மதில் சுவரில் இருந்த விளக்குகளின் கண்ணாடிகளும் உடைந்தன. கல் வீசியவர்கள் யார் என்று தெரியவில்லை.

பேட்டி : நன்றி: விகடன்


தலைவரிடம் கூட்டணி பற்றி கேட்டுப்பாருங்கள் - கூட்டணி பற்றி கட்சி பொதுக் குழுவில்தான் முடிவு செய்வோம் என்று சொல்கிறார். அடுத்த தலைவரையும் அதுமாதிரிதானே நியமிக்க வேண்டும் இதில் குஸ்பூ கேட்டதில் என்ன தவறு? குஷ்பு வீடு மதுரையில் இருந்தால் இது நடந்திருக்குமா ? தெரியாது !

9 Comments:

dr_senthil said...

அண்ணனா தம்பியா என்ற போட்டியில் உண்மையான தொண்டனுக்கு வாய்ப்பு இல்லாமல் ஆக்கிவிட்டார் ... உண்மையில் அங்கு ஜனநாயக முறையில் தேர்தல் நடந்தால் ஏதோ ஒரு மாவட்ட செயலர் கூட எளிதில் அவர்கள் இருவரையும் வென்று விட கூடிய வாய்ப்பு இருப்பது அறிந்து தான் தாத்தா இப்படி ஒரு மாஸ்டர் பிளான் போட்டு கட்சியை குடும்பத்திற்குள் வைத்துகொண்டார் -குஷ்பு சொன்னது போல் தேர்தல் நடந்தால் மூன்றாவதாக சேலம் அல்லது தென் மதுரை மா செ வெல்லலாம்

Anonymous said...

இத்த உடு!

இன்னிக்கு "திருப்தி திருமலை தேவஸ்தானத்தை இழுத்து மூடும் போராட்டம்" என சில தமிழ் (இன) காப்பாளர்கள், "போஸ்டர்" ஒட்டியுள்ளர்கள். நீ பர்மிச்சியன் கொடித்தியா?

இதுக்கு ஒரு வழி தெரிஞ்சாகனும்!

அந்தணன்

"ஆபத் பாந்தவா! அந்த ரக்ஷகா!" -

ராஜ பக்ஷே வுக்கு நீ என்ன கொடுக்கப்போற?

Anonymous said...

இத்த உடு!

இன்னிக்கு "திருப்தி திருமலை தேவஸ்தானத்தை இழுத்து மூடும் போராட்டம்" என சில தமிழ் (இன) காப்பாளர்கள், "போஸ்டர்" ஒட்டியுள்ளர்கள். நீ பர்மிச்சியன் கொடித்தியா?

இதுக்கு ஒரு வழி தெரிஞ்சாகனும்!

அந்தணன்

"ஆபத் பாந்தவா! அந்த ரக்ஷகா!" -

ராஜ பக்ஷே வுக்கு நீ என்ன கொடுக்கப்போற?

kothandapani said...

அதிமுகவில் எம்ஜிஆருக்கு பிறகு எப்படி ஜனநாயகப்படி ஜெயா தலைவர் ஆனாரோ, சோனியா எப்படி ஜனனயகபடி தலைவர் ஆனாரோ ,அப்படியே ஜனநாயகப்படி திமுகவிலும்
தலைவர் தேர்ந்து எடுக்கபடுவார். ஆனானப்பட்ட பிஜேபி யிலேயே ஆர் எஸ் எஸ்
சொல்பவர்தான் ஜனநாயகப்படி தலைவர் ஆகமுடியும் என்பது தற்போது வெட்ட வெளிச்சமனதே. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா ... குஷ்பூ கிட்ட அரசியல் கற்று கொள்ளும் நிலையில் மக்களும் இல்லை, IV யும் இல்லை விகடனும் இல்லை ...இதெல்லாம் ஒரு time pass தான் .

ஜெ. said...

குஷ்பு, கனிமொழி அணி என்று தான் நினைத்திருந்தேன்! அது இருக்கட்டும், குஷ்புவை கலைஞர்/ ஸ்டாலின் ஓரம் கட்டுவதாகச் சொல்லப்படுவதன் ‘முன்கதை’ என்ன? - ஜெ.

இந்த ப்ளாக் சைட்டின் ஒவ்வொரு பதிவுக்குப் பின்னும் ஃபேஸ் புக் கமென்ட்ஸ் (ஒரே செட் கமென்ட்ஸ்) வருவதை தவிர்க்க முடியாதா? பதிவுக்கு சம்பந்தம் இல்லாதவையும் வருகின்றன.
-ஜெ.

வாங்கோ காபி சாப்டுண்டே பேசலாம் .. said...

தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா என்று அடையாளப்படுத்திப் பேசக்கூடிய தலைவர்கள் பின்னால் சென்ற தி.மு.க., இன்று குஷ்பூ என்ற வட இந்திய நடிகையின் பின் செல்லும் நிலையில் இருக்கிறது.இது தான் பகுத்தறிவுன் பரிணாம வளர்ச்சி போலும்.

Anonymous said...

<< தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா என்று அடையாளப்படுத்திப் பேசக்கூடிய தலைவர்கள் பின்னால் சென்ற தி.மு.க., இன்று குஷ்பூ என்ற வட இந்திய நடிகையின் பின் செல்லும் நிலையில் இருக்கிறது.இது தான் பகுத்தறிவுன் பரிணாம வளர்ச்சி போலும். >>

அண்ணாவை தன் கட்சியின் பெயரில் வைத்துள்ள ஒரு கட்சிக்கு, கன்னடபிராமணரை தலைவியாக கொண்டுள்ளதற்கு, இது பரவால்லண்ணா..! விடுங்கோ.. வாங்கோ காபி சாப்பிட்டுண்டே பேசலாம்..!

Anonymous said...

nooru varuda congressa our italy penmani thalaiviaga kondullathu.so oru kannada brhamin thalaiviaga irupathil onerum thavaru illai. nalai khushbu kooda DMK thalaviagalam.
yarkandathu pinnalil one foreign penmnai Congress thalaivaragalam.
so just leave it pl vango idly oda kofee sappida and pesa

Anonymous said...

சோ அவர்களின் குமுதம் (ஒசாமஅசா) தொடரை இங்கு கட் பேஸ்ட் செய்து வெளியிடவும் - மிகவும் முக்கியமான தகவல்கள் (அவரது குடும்பத்தினர் பற்றி) பலரும் தெரிந்துகொள்ளவேண்டியவை

நன்றி