பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 06, 2013

டோண்டு ராகவன் சார் - எ.அ.பாலா

திரு.டோண்டு ராகவன் இயற்கை எய்தி விட்டது குறித்து என் வலைப்பதிவில் எழுதியிருந்தேன். அப்போதைய மனநிலையில் விரிவாக எழுதவில்லை. இன்று காலையில் அவரது மரணச்செய்தி கிடைத்தபோது, 4 ஆண்டுகளுக்கு முன் எனது அக்கா மகன் அகாலமாக ஒரு விபத்தில் மரணித்தபோது ஏற்பட்ட அதே வலியை / தாக்கத்தை உணர்ந்தேன். அதற்கு அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் ஒரு காரணம்.

திருவல்லிக்கேணியும், இந்து உயர்நிலைப்பள்ளியும் தான் எங்கள் 8+ ஆண்டுகளுக்கான நட்புக்கு அச்சாரமிட்ட விஷயங்கள். 2004-ல் என் இடுகை ஒன்றை வாசித்து விட்டு என்னை தொடர்பு கொண்டு வலைப்பூ தொடங்குவது மற்றும் தமிழ் தட்டச்சு பற்றி கேட்டறிந்து கொண்டு அன்று எழுத ஆரம்பித்தவர், இறப்பதற்கு 2 நாட்கள் முன் வரை ஓயாமல் (சுமார் 1000 இடுகைகள் இருக்கலாம்) எழுதி வந்திருக்கிறார். அவர் தொடாத சப்ஜெக்ட்டே இல்லை என்று தோன்றுகிறது. அது போல, கடைசி வரை ஏதாவது வாசித்துக் கொண்டே தான் இருந்தார்!

வாசிப்பனுபவம் அவரது மிகப்பெரிய பலம்! அதனால் அவரது தகவல்களில் தவறு காண்பது அரிது. அரசு நிறுவனத்தில் பொறியாளர் பதவியை உதறி விட்டு, தனக்குப் பிடித்தமான (பிரெஞ்சு, ஜெர்மன்) மொழிபெயர்ப்புத் தொழிலை இறுதி வரை மேற்கொண்டிருந்தவர். அவர் நேற்று தொடங்கிய மொழிபெயர்ப்பு பணி ஒன்று அவரது மடிக்கணினியில் அவருக்காக காத்து கொண்டிருக்கிறது! கடுமையான உழைப்பாளி அவர்.

போலி டோண்டு விவகாரத்தின்போது (அதில் அவர் நேரவிரயம் செய்திருப்பினும்) அவரது மன உறுதி பளிச்சிட்டதை பலரும் ஒப்புக் கொள்வர். தனது கருத்துகளின் மேலிருந்த பிடிப்பால், பலமுறை வலைப்பூ விவாதங்களில் அவர் ஈடுபட்டிருந்தாலும், தனிப்பட்ட அளவில் பலருடனும் இனிமையாக நட்பாகப் பழகியவர் என்பதை நான் அறிவேன். போலித்தனம் துளியும் இல்லாதவர். அவருடன் நெருங்கிப் பழகியவன் என்ற முறையில், யாரையும் அவர் நிந்தித்துப் பேசி நான் கேட்டதில்லை. அவரவர் கருத்து அவரவருக்கு என்று போய்க்கொண்டே இருந்தவர்.

அதோடு, அவர் சாதீயவாதியும் கிடையாது, அவருக்கு ஈகோவும், கர்வமும் கிடையாது என்று உறுதியாக என்னால் கூறமுடியும். ஆனால், அவர் மரணத்திற்குப் பின் அவர் குறித்து எந்த தர்க்கமும் செய்ய நான் நிச்சயம் விரும்பவில்லை.

அவரது மரணத்திற்கு பாலபாரதி, நைஜீரியா ராகவன், லக்கிலுக், உண்மைத்தமிழன், ரஜினி ராம்கி ஆகியோர் வந்திருந்தனர். பாலா ‘உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர் டோண்டு சார், அதுவே அவரது தனித்துவமான சிறந்த பண்பு’ என்றார். உ.தமிழன் டோண்டுவைப் போல் எழுத இனி ஆள் கிடையாது என்றும், அவரது மரணம் தமிழ் வலையுலகுக்கு பெரும் இழப்பு என்றும் வருந்தினார். ர.ராம்கி, போலி டோண்டு விவகாரத்தில் தான் சிக்கியிருந்தால், தமிழ் இணையத்தை விட்டே ஓடியிருக்கக்கூடும் என்று டோண்டுவின் மனத்திண்மையை வலியுறுத்திப் பேசினார்.

புற்று நோய்க்கு எதிரான தனிப்பட்ட போராட்டத்திலும் அவரது அந்த மனத்திண்மையை பார்க்க முடிந்தது. தனக்கு கேன்ஸர் என்பதையே நோய் வந்து ஒரு 3 மாதங்களுக்குப் பின் தான் (சொல்லாவிட்டால் பின்னால் நான் கோபப்படுவேன் என்பதற்காக) தயங்கித் தயங்கி என்னிடம் தெரிவித்தார். எனக்கு தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதனை அறிமுகம் செய்து வைத்தவரும் அவரே! அதுவே, என் நவதிருப்பதி விஜயத்துக்குக் காரணமாக அமைந்தது. ஆன்மீகம் பற்றி டோண்டு அவர்கள் அதிகம் எழுதியிராவிட்டாலும், பெருமாள் மேல் ஆழ்ந்த பக்தியும், நம்பிக்கையும் கொண்டவர். என் திருப்பாவை இடுகைகளின் ரசிகர் அவர், பலமுறை மனதார பாராட்டியும் இருக்கிறார்.

“உங்கள் தாயார் ரொம்ப கஷ்டப்பட்டு உங்களை ஆளாக்கியிருக்கிறார். அவரை கடைசி வரை நீங்கள் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்” என்று என் வீட்டுக்கு வரும்போதெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார். என் மகள்களை (அவருக்கு வாய்க்காத) பேத்திகளாக பாவித்து அன்பு செலுத்தியிருக்கிறார். என் தந்தையும், என் மனைவியின் தந்தையும் என் மகள்கள் பிறப்பதற்கு முன்னமே இறந்து போனதால், என் மகள்களுக்கு அறிமுகமான முதல் தாத்தா (இந்த அடைமொழி அவருக்குப் பிடிக்காதிருந்தபோதிலும்) டோண்டு ராகவன் சார் தான்!

டோண்டுவிடம் சிலபல குறைகள் இருந்திருக்கலாம். ஆனால் அவரது பிரத்யேக குணங்களான, கடும் உழைப்பு, நிறைந்த வாசிப்பனுபவம், போலித்தனமின்றி நட்பு பாராட்டும் / உதவும் குணம், மன உறுதி, சிறந்த அறிவாற்றல், அசாத்திய மொழித்திறமை ஆகியவற்றை 8 ஆண்டுகளூக்கும் மேலாகஅருகிலிருந்து கவனித்தவன் என்ற வகையில், அவர் ஒரு மாமனிதர் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

ஒரு 7 மாதங்களுக்கு முன் டோண்டு குடும்பத்துடன் மகர நெடுங்குழைக்காதனை தரிசிக்க சென்றபோது, உடல் நிலை சற்றே சரியில்லாத காரணத்தால், அவரை மதுரையிலேயே விட்டு விட்டு அவரது குடும்பத்தினர் மட்டுமே தென் திருப்பேரை சென்று பெருமாளை தரிசித்ததாக அவரது துணைவியார் என்னிடம் கூறினார். டோண்டு சாரின் அந்த மனக்குறையை மகரநெடுங்குழைக்காதனே நிவர்த்தி செய்தது தான் விசேஷமான விஷயம். 2 மாதங்களுக்கு முன் டோண்டுவை தன்னிடம் வரவழைத்து அவருக்கு திவ்யமான தரிசனத்தை வழங்கியிருக்கிறார். மகரநெடுங்குழைக்காதன் மீது அவருக்கு இருந்த பரமபக்தி அத்தகையது!


எந்தரோ மகானுபாவுலு, அந்தரி கி வந்தனமுலு -- டோண்டு ராகவன் சாரின் ஆன்மா சாந்தியடைய நான் வணங்கும் பரமபத நாயகனை வேண்டிக் கொள்கிறேன்!

எ.அ.பாலா

மற்றவர்கள் எழுதியது
டோண்டு ராகவன் - அஞ்சலி..! - உ.தமிழனின் சிறந்த அஞ்சலி -


டோண்டு சாரின் ஜெயா டிவி நேர்முகம்


பிரபல வலைப்பதிவாளர் டோண்டு ராகவன் மரணம்


'சமீபத்தில்' நண்பர் டோண்டு இராகவன் இழப்பு !திரு.டோண்டு ராகவன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்  . -


சாதி இனிஷியல் மாதிரி - யுவகிருஷ்ணா


டோண்டு ராகவன் - பத்ரி சேஷாத்ரி


நண்பர் 'டோண்டு' ராகவன் - மதிபாலா


டோண்டு ராகவன் இன்று நம்மிடம் இல்லை!


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....


Dondu Raghavan Sir, We miss you!!


அமரர் டோண்டு ராகவன்..


டோண்டு சார்


டோண்டு ராகவன்.


சென்று வாருங்கள் டோண்டு


பதிவர் திரு டோண்டு ராகவன்!


மூத்த பதிவர் டோண்டு ராகவன் மறைவின் நினைவாக


23 Comments:

Subramanian said...

Sorry to hear that Mr. Dondu Raghavan passed away. I was a regular reader of his blog for many years now. He had a straight forward way of putting across his views and did not try to be politically correct. I will definetly miss visiting his blogs. Let God give the strength to his family for overcoming this loss.

Subramanian said...

Sorry to hear that Mr. Dondu Raghavan passed away. I was a regular reader of his blog for many years now. He had a straight forward way of putting across his views and did not try to be politically correct. I will definetly miss visiting his blogs. Let God give the strength to his family for overcoming this loss.

phantom363 said...

May his soul rest in peace. I will miss Dondu and his blogs.

”தளிர் சுரேஷ்” said...

ஆழ்ந்த அஞ்சலிகள்! அவரது ஆத்மா சாந்தியடையட்டும்! அவர் வணங்கும் மகர நெடுன்குழை நாதனின் திருவடிகளை அவர் அடையட்டும்!

பொன்.முத்துக்குமார் said...

மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. வலைப்பூ உலகில் மிகவும் active-ஆகவும் தொடர்ந்தும் இயங்கிக்கொண்டிருந்த மனிதர் இப்படி திடீரென கிளம்பிச்சென்றுவிடுவார் என்று நினைக்கவில்லையே.

E said...

Excellent article! What does this "எந்தரோ மகானுபாவுலு, அந்தரி கி வந்தனமுலு" mean Bala?

R. J. said...

Heartfelt condolences to you and the family of Sri Dondu Raghavan. - R. J.

Anonymous said...

//நெடுன்குழை நாதனின் //

SSuresh

டோண்டு இருந்திருந்தால், அதை" மகர நெடுங்குழை காதன்" என்று திருத்தி இருப்பார்

Surya said...

சற்றுக் கூட போலித்தனம் இல்லாத உள்ளதை உள்ளபடிக் கூறும் துணிவு கொண்ட ஒரு நல்ல மனிதர். அவரைப் பிரிந்து துன்புற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

ரிஷபன்Meena said...

// 4 ஆண்டுகளுக்கு முன் எனது அக்கா மகன் அகாலமாக ஒரு விபத்தில் மரணித்தபோது ஏற்பட்ட அதே வலியை / தாக்கத்தை உணர்ந்தேன்//

உறவினரோ நெருங்கிய நண்பராகவோ இல்லாத ஒருவரின் மறைவு, அதுவும் நேரில் பார்த்தோ பேசியதோ இல்லாத ஒருவரின் மரணம் இந்த அளவுக்கு என்னைப் பாதிக்கும் என்று நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.

அவரின் அஞ்சலியை இவ-யில் பார்த்ததுமே எவ்வளவு நேர்மையான மனிதர் போய்விட்டாரே என்று என்னம் தான் எழுந்தது. இரங்கல் பதிவுகள் அனைத்திலும் அவரின் நேர்மைதான் சிலாகிக்கப்படுகிறது.

Anonymous said...

May his soul Rest in Peace.

Anonymous said...

i saw this highlighted in yellow in kadugu blog

நாக்கில் ஈரம் வறண்டாலும் நல்ல உள்ளங்களின் நெஞ்சில் ஈரம் என்றும் வறண்டு போகாது.

This is like your trademark manja comment behavior , so i think Kadugu is IV

Dondu sir missed this clue.Pavam

Anonymous said...

May his soul rest in peace. A man who was never afraid of being politically incorrect in today's politically correct world.

Anonymous said...

i saw this highlighted in yellow in kadugu blog

நாக்கில் ஈரம் வறண்டாலும் நல்ல உள்ளங்களின் நெஞ்சில் ஈரம் என்றும் வறண்டு போகாது.

This is like your trademark manja comment behavior , so i think Kadugu is IV

Dondu sir missed this clue.Pavam

Unknown said...

We are very sorry to hear the sad news of passing away of Sri Narasimhan Raghavan(Dondu Raghavan). Myself and wife are regular visitors to his blogspot.
He was always forthright and was fearless in expressing his views on matters.We will miss him and his postings. We pray to the Almighty to give his family enough strength to bear this loss.

Unknown said...

We are very sorry to hear the sad news of passing away of Sri Narasimhan Raghavan(Dondu Raghavan). Myself and wife are regular visitors to his blogspot.
He was always forthright and was fearless in expressing his views on matters.We will miss him and his postings. We pray to the Almighty to give his family enough strength to bear this loss.

Unknown said...

We are very sorry to hear the sad news of passing away of Sri Narasimhan Raghavan(Dondu Raghavan). Myself and wife are regular visitors to his blogspot.
He was always forthright and was fearless in expressing his views on matters.We will miss him and his postings. We pray to the Almighty to give his family enough strength to bear this loss.

சீனு said...

கேள்விப்பட்ட கணம் மிகுந்த அதிர்ச்சியுற்றேன்.

டோண்டுவை அறிந்தது 'போலி' டோண்டு விவகாரத்திலே. அதில், அவர் செயல்பட்ட விதம்/தைரியம் நம்மால் முடியுமா என்ற சந்தேகமே.

ஆரம்பத்தில் தி.நகரில் இரு வீட்டில் நடந்த வலைப்பதிவாளர்கள் சந்திப்பில் தான் அவரை முதலும் கடைசியுமாக பார்த்தது. இவ கூட யாருக்கும் தெரியாமல் அவசரக்குடுக்கையாக அங்கு வந்திருந்தவர்களின் புகைப்படத்தை அப்லோட் செய்து வாங்கிக்கட்டிக் கொண்டது ஏதோ நேற்று நடந்தது போல இருக்கிறது.

அவரோட வலைப்பூவிற்கு சென்றால், இறப்பதற்கு கொஞ்ச நேரம் முன்பாக கூட பின்னூட்டமிட்டிருக்கிறார் போல.

அவர் இறந்த தகவல் தெரிந்திருந்தால் அவரை சென்று பார்த்திருக்கலாம் தான் :(

ConverZ stupidity said...

The Dear Departed. Though I have difference opinion on few aspects, personally he is a nice man to move with.

Anonymous said...

Very Sorry to hear this. I am regular follower of his blog. Very Straightforward and bold personality.

Praying god to give strength to his family and friends to overcome this loss. - Raghav

Anonymous said...

i am verysorry.i am a regular follower of Dondu.he is a bold personality.may his soul rest in peace.

Ganesh said...

அன்னார் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்!

radhakrishnan said...

டோண்டு சாரின் நிடீர் மறைவை குறித்து
மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.25 ம்தேதி
ஜனவரி அன்று மதுரைக்கு வந்திருப்பதாக
எனக்கு செல்பேசினார்.உடம்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு டிராவல்
பண்ணும் அளவுக்கு இருக்கிறது என்று
திடமாக க் கூறினார்.அவர் புரோகிராமைத் தெரிந்துகொண்டு பிறகு
சென்று பார்க்கலாம்என்றுநினைத்திருந்தேன். ஆனால் முடியவில்லை
எப்பேர்ப்பட்ட ஆளுமை? அவர் மறைவு பதிவுலகத்திற்கு ஈடு செய்யவியலாத இழப்பு. எனது இதயபூர்வமான அஞ்சலிகள்