பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 20, 2013

வைகோ - ஜெ - திடீர் சந்திப்பு


அப்போது, நெடுஞ்சாலையில், வடக்கு நோக்கி முதல் அமைச்சருடைய வாகனங்கள்

வந்து கொண்டு இருந்தன. தடுப்புச் சுவர் இல்லாத ஒரு இடைவெளியில், திடீரென்று முதல் அமைச்சருடைய கார் வலதுபுறமாகத் திரும்பியது. முதல் அமைச்சர், கார் ஓட்டுநரிடம் கையைக் காட்டி, காரை நிறுத்தச் சொல்லுவது தெரிந்தது.

அதைப் பார்த்து வைகோ அருகில் செல்லுவதற்குள், காரின் கதவைத் திறந்து முதல்

அமைச்சர் கீழே இறங்கி விட்டார். வெயில் நெருப்பாகத் தகித்துக் கொண்டு இருந்தது.

இருவரும் ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.

வைகோ நலமாக இருக்கின்றீர்களா? இவ்வளவு கஷ்டப்பட்டு நடந்து வருகின்றீர்களே?

என்று முதல் அமைச்சர் கேட்டார். ஆம்; நலமாக இருக்கிறேன்; வெயிலுக்காகத்தான் தலைப்பாகை கட்டி இருக்கின்றேன். நீங்கள் நலமாக இருக்கின்றீர்களா? என்று வைகோ கேட்டார். அதைக் கேட்டுப் புன்னகைத்த முதல்வர், நான் நலமாக இருக்கிறேன்; எங்கள் ஊருக்கு வந்து இருக்கின்றீர்கள். சாப்பிட்டு விட்டீர்களா? என்று கேட்டார்.

சாப்பிடவில்லை. பையனூரில்தான் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று வைகோ கூறினார்.

இதுதானே பையனூர். எங்கே சாப்பிடப் போகிறீர்கள்? என்று முதல் அமைச்சர் கேட்டார்.

உடனே மல்லை சத்யா, இங்கே ஒரு வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது என்று சொன்னார்.பாலவாக்கம் சோமு, வேளச்சேரி மணிமாறன் உள்ளிட்டோரை, முதல் அமைச்சருக்கு வைகோ அறிமுகப்படுத்தினார். உங்கள் நடைபயணத்தின் கோரிக்கை என்ன? என்று முதல் அமைச்சர் வைகோவிடம் கேட்டார்.

முழு மது விலக்குதான் எங்கள் கோரிக்கை என்றார் வைகோ.அதன்பின் முதல் அமைச்சர், உங்கள் தாயாரையும், உங்கள் துணைவியாரையும், பிள்ளைகளையும் நான் நலன் விசாரித்ததாகச் சொல்லுங்கள் என்றார். அதற்கு வைகோ நன்றி தெரிவித்ததுடன், உங்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றேன். 100 ஆண்டுகள் நீங்கள் நலமாக, வெற்றிகரமாக வாழ என் வாழ்த்துகள் என்றார். அதற்கு முதல் அமைச்சர், மிகவும் நன்றி என்றார்.

நாங்கள் நடந்து வருகின்ற இந்தப் பயணத்தில், காரை நிறுத்தி எங்கள் நலன் விசாரித்ததற்கு மிக்க நன்றி என்று வைகோ கூறினார். அதன்பிறகு, அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து விட்டு முதல் அமைச்சர் சென்றார். மரத்தால் செய்யப்பட்ட படிக்கட்டு இல்லாமலேயே காரை விட்டு முதல் அமைச்சர் இறங்கியதும், குடை இல்லாமலேயே ஏழு நிமிடங்கள் வெயிலில் நின்று பேசியதும், அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இதுகுறித்து செய்தியாளர்கள் வைகோவிடம் கேட்டதற்கு, அரசியலில் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் கூட்டணியில் இல்லை என்றாலும் அரசியல் தலைவர்கள் ஒருவருக்கொருவர் நலன் விசாரித்துக் கொள்ளும் அரசியல் நாகரிகத்தை முதல் அமைச்சர் நடைமுறைப்படுத்தி இருப்பது மகிழ்ச்சிக்கு உரியது என்றார்.


தனியா நான் வேற எதற்கு ?

16 Comments:

Sathyaseelan said...

அரசியல் நாகரீகம் !!! பொறுத்திருந்து பாப்போம்.
- சத்தியசீலன்@கிறுக்கல்கள்100

Anonymous said...

அம்மா என்றால் அன்பு :-)

dr_senthil said...

முழு மது விலக்கு அமல் படுத்த அம்மாவும் நடைபயணம் மேற்கொண்டாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை... அரசியல இதெல்லாம் சாதரணமப்பா... ( சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் நடப்பது உடல்நலத்திற்கு நல்லது )

சிந்திப்பவன் said...

முதலமைச்சரின,
காரை விட்டு இறங்கி பேசிய, நாகரீகத்திற்கும்,

வைகோவின்,
தலைப்பாகையை
அவிழ்க்காமல் பேசிய,
தைரியத்திற்கும்

பாராட்டுக்கள்

Anonymous said...

I WOULD LIKE TO KNOW WHAT NANJIL SAMPATH IS GOING TO COMMENT ABOUT THIS IN HIS NEXT MEETING?

SUPPAMANI

Anonymous said...

I WOULD LIKE TO KNOW WHAT NANJIL SAMPATH IS GOING TO COMMENT ABOUT THIS IN HIS NEXT MEETING?

SUPPAMANI

Anonymous said...

I COULD NOT UNDERSTAND WHY THE HONOURABLE CHIEF MINISTER NOT GREETED FOR THE SUCCESS OF VAIKOS NADAIPAYANAM, WHEN SHE HAS GREETED ALL HIS FAMILY MEMBERS AND RELATIVES ?

R.S.MANI

Anonymous said...

@ R.S.Mani

Amma has wished well for the success of nadai payaNam

Anonymous said...

தாத்தா சும்மா இருக்க மாட்டாரே
வவுறு எரியுமே
எதையாவது கொளுத்திப் போடுவாரு பாருங்க
ஆமா இந்த சம்பத் சம்பத்னு ஒருத்தரு இருந்தாரே, அவுரு (ஒருவேளை அதிமுக + மதிமுக கூட்டணி வந்தா) இனிமே என்னா செய்வாரு?

நல்லூரான் said...

//பாலவாக்கம் சோமு, வேளச்சேரி மணிமாறன் உள்ளிட்டோரை, முதல் அமைச்சருக்கு வைகோ அறிமுகப்படுத்தினார்//

அச்சச்சோ எல்லாரையும் அம்மா நோட் பண்ணிட்டாங்களே ... இனோவா கார் வாங்க order போட்டு இருப்பாங்களே

R. J. said...

ஆமாம், வைகோவின் நடைப் பயணத்திற்கான நோக்கத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்ட அம்மா என்ன சொன்னாராம் - கவனிக்கிறேன் என்றா, போக்கத்து வெயிலில் அலையாதீர்கள் என்றா? வைகோ மேற்கொண்டு நடைபயணத்தை தொடர்ந்தாரா அல்லது அம்மாவைப் பார்த்த சந்தோஷத்தில் தொண்டர்களை டாஸ்மாக் அனுப்பிவிட்டு காரில் திரும்பிவிட்டாரா? உணமையிலேயே இந்த நடைப் பயணத்தின் நோக்கம் அரசின் கவனத்தை கவர்வதற்காக என்றால், எதிபார்க்காமல் அது நடந்தே விட்டது. மேற்கொண்டு பயணம் அவசியமில்லை.

உண்மையிலேயே அம்மா வரும் வழியில் வைகோ மற்றும் தொண்டர்களை நடக்க விட்டார்களா? தலைப்பாகையின் கீழ் வைகோவின் 'டூப்' இல்லையே?

-ஜெ .

”தளிர் சுரேஷ்” said...

உலகமே நாடகம்!

Anonymous said...

இன்னோவா - வை திருப்பி கேட்டால் குடும்பத்துடன் தீ குளிப்பேன் -- நாஞ்சில் சம்பத் கண்ணீர் பேட்டி

tekvijay said...

பூரண மதுவிலக்கு கோரி நடைபயனம் மேற்கொள்ளும் வைகோவுக்கு, டாஸ்மாக்கிற்கு சரக்கு சப்ளை செய்யும் மிடாஸ் சாராயக்கம்பெனி ஓனருடன் என்ன பேச்சு வேண்டி கிடக்கு?!

- ட்விட்டரில் படித்தது!

kothandapani said...

என்ன IV கொஞ்ச நாளா பேச்சு மூச்சே காணோம் . ஜெ - வைகோ சந்திப்பு shock லே இருந்து இன்னும் மீளவே இல்லையா ..... அட அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா ....

வாங்கோ காபி சாப்டுண்டே பேசலாம் .. said...

இரண்டு தலைவர்கள் சுமுகமாகப் பேசிக்கொள்வது இன்று ஒரு அதிசயிக்கத்தக்க ஒரு விஷயமாக உள்ளது. அந்த அளவு நாம் முன்னேறி உள்ளோம். பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி வியக்க வைக்கிறது !