பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 04, 2013

நச் பூமராங் 4-2-2013

சைவத்திற்கு பதில் அசைவ 'பர்கர்': மெக் டோனால்டின் நிறுவனத்திற்கு ரூ.15 ஆயிரம் அபராதம் - செய்தி

ஆடர் கொடுக்கும் போது 'நான்'வெஜ் என்று அழுத்தி சொல்லியிருப்பார்.

சல்மான் ருஷ்டி படைப்பாளி அல்ல - 'சாத்தான்': முன்னாள் மத்திய மந்திரிசுல்தான் அகமது தாக்கு - செய்தி

சாத்தான் வேதம் ஓதுகிறது என்பதற்கு எதிர்பதம் அரசியல்வாதிகள்

அறிவிக்கைவிடுவது !

டேவிட்' படத்தை விமர்சித்தவரை நிர்வாணப்படுத்தினார்கள் ரசிகர்கள்! - செய்தி
 
பழிக்கு பழி - அவர் படத்தை தோலுரித்தார்; ரசிகர்கள் அவரை.

இந்தியா சிமென்ட்ஸ் துணைத் தலைவரானார் தோனி - செய்தி

இனி டீமில் விரிசல் விழுந்தாலும் கவலை இல்லை. சரி செய்துவிடலாம்.

விஸ்வரூப காட்சிகளின் ஒலி நீக்கத்தை அமெரிக்காவில் செய்கிறார்கள் - செய்தி
எதற்கு வீண் செலவு. பேசாம டிக்கெட்டுடன் கொஞ்சம் பஞ்சை கொடுத்திவிட்டு, குடிக்கும் சீன் வரும் போது "குடி பழக்கம் உடல் நலத்துக்கு கேடு" என்று சைடில் போடுவது மாதிரி போட்டுவிட்டால், கேட்க விரும்பாதவர்கள் காதில் பஞ்சு அடைத்து மியூட் செய்துக்கொள்ளாம்

2 Comments:

dondu(#11168674346665545885) said...

//எதற்கு வீண் செலவு. பேசாம டிக்கெட்டுடன் கொஞ்சம் பஞ்சை கொடுத்திவிட்டு, குடிக்கும் சீன் வரும் போது "குடி பழக்கம் உடல் நலத்துக்கு கேடு" என்று சைடில் போடுவது மாதிரி போட்டுவிட்டால், கேட்க விரும்பாதவர்கள் காதில் பஞ்சு அடைத்து மியூட் செய்துக்கொள்ளாம்//

எப்படி? தாவணிக் கனவுகள் சினிமாவில் அப்படி இப்படி என சீன்கள் வரும்போது, தனது தங்கைகள் அவற்றைப் பார்க்காமலிருக்க ஏதுவாக பாக்கியராஜ் காசுகளைத் தியேட்டர் தரையில் போட்டு, அவர்களை அவற்றை எடுக்கச் சொல்லுவாரே அம்மாதிரியா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Vikram said...

dondu avargale - have u got the required "permission" to quote the scene from the movie,before logging your comment??!!