பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, February 17, 2013

சன்டேனா இரண்டு (17-2-13) செய்திவிமர்சனம்இந்த வாரம்....இரண்டிலும் இரண்டு.செய்தி # 1


இரண்டு பெரிசுகள் இந்த காதலர் தினத்தின் அகில இந்திய அளவில் பெருமளவில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்கள்.முதலாமவர், அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி ஒருவர்.


இவர் உலகின் வயதான தந்தை என்ற பெருமையை பெற்றுள்ளார். இவரது பெயர் கரம்சித் ராகவ். வயது 94. இவரது மனைவி சகுந்தலாவிற்கு 59 வயதாகிறது. இவர்களுக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மிகவும் வயதான தந்தைக்கு பிறந்தாலும், அந்த குழந்தை மற்ற குழந்தைகளைப் போல் ஆரோக்கியமாகவே உள்ளது.


"இந்த தள்ளாத வயதில் எப்படி உங்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடிந்தது?" என்ற கேள்விக்கு,கரம்சித் "காலையில் எழுந்தவுடன் மூன்று லிட்டர் பால் குடிப்பேன்.புரோட்டா, சப்பாத்தி, அரிசி சாதம் இவற்றையும் பதம் பார்ப்பேன். கண்டிப்பாக தினமும் உணவில் அரை கிலோ நெய் சேர்த்துக் கொள்வேன்" என்று கூறியுள்ளார்."இன்னும் பத்தாண்டுகள் என் மகனுடன் விளையாடுவேன். இன்னொரு குழந்தை பெற்றுக் கொண்டாலும் ஆச்சர்யப்பட தேவையில்லை. அந்த அளவிற்கு உடல் ஆரோக்கியத்துடன் உள்ளேன்" என்கிறார்.இரண்டாமவர், பீகாரை சேர்ந்த இந்தி பேராசிரியர். 60 வயதான இவர், தன்னுடைய வகுப்பு மாணவியான ஜூலி என்ற 23 வயது இளம் பெண்ணை மணந்து கொண்டு இருக்கிறார். கவனிக்க, இது முழுக்க முழுக்க காதல் திருமணம். இது நடந்தது 2006 ஆம் ஆண்டில்.இந்த வருடம் அவர் காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் அவர் ஒரு பள்ளிக்கூடம் ஒன்றை அவரது சொந்த ஊரான பாகல்பூரில் ஆரம்பிக்க இருக்கிறார்."உலகின் முதல் காதல் பள்ளிக்கூடம் இதுதான்" என்று கூறுகிறார் இவர். இந்த பள்ளிக்கூடம் மூலமாக காதலின் மகத்துவம் குறித்து அனைத்து வயதினருக்கும் கற்றுக்கொடுக்க இருக்கிறார் இந்த பெருசு.காதலுக்கு 'இரண்டு' இல்லை என்று புரிகிறது.

ஒன்று, கண். இன்னொன்று வயது..

செய்தி # 2


இரண்டு .ஆய்வுகள் படித்தேன்.முதலாவது இந்தியாவின் "பொருளாதார முன்னேற்றம்(?)" பற்றியது.தேசியக் குற்றங்கள் பதிவு ஆணையத்தின் (NCRB) புள்ளியியலின்படி 1995க்கும் 2011க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், , வன்புணர்ச்சிக் கொடுமைகள் 50 சதவீதமும், கடத்தல் சம்பவங்கள் 100 சதவீதமும் வரதட்சணைக் கொலைகள் 50 சதவீதமும் குடும்ப வன்கொடுமைகள் மூன்று மடங்காகவும் பாலியல் இழிவுபடுத்தல் இருமடங்காகவும் அதிகரித்தன என்று தெரிவிக்கிறது இந்த சர்வே.இரண்டாவது சுதந்திரம் முதல் ஒயாமல் இருக்கும் காஷ்மீர் பற்றியது.இம்மாநிலத்தின் பாதுகாப்பு ஆலோசகர்கள் இரண்டு ராணுவக் கமாண்டர்கள் (15 corps மற்றும் 16 corps). காஷ்மீர்ப் பள்ளத்தாக்கின் ஜனத்தொகை 35 லட்சம். ஆனால், அங்கு 5 லட்சத்துக்கும் அதிகமான ராணுவ மற்றும் துணை ராணுவத்தினர் எங்கும் நிறைந்துள்ளனர். 50 மீட்டரிலிருந்து 100 மீட்டர் இடைவெளியில் இவர்கள் ஏகே47 துப்பாக்கிகளுடன் நின்றுகொண்டிருக்கிறார்கள்.


காஷ்மீர் மக்களுக்கு பயமெல்லாம் தீவிரவாதிகளைவிடத் துப்பாக்கி ஏந்தி ரோந்திலிருந்த இந்த ராணுவத்தினர்மீதுதான் அதிகமிருந்தது. இவர்களுக்குள்ள வரம்பற்ற அதிகாரத்தால் யாரையும் எப்போது வேண்டுமானாலும் எந்த வாரண்டும் இல்லாமல் கைதுசெய்யலாம், கொல்லலாம், மாயமாக மறைய வைக்கலாம். அதற்காக யாருக்கும் - இந்திய நாடாளுமன்றத்துக்குக்கூட - பதில் சொல்லத் தேவையில்லை.


எல்லையற்ற இந்த அதிகாரத்தை அவர்கள் யார்மீது செலுத்தினாலும் அவர்கள் பயங்கரவாதிகள் என்று முத்திரைகுத்தப்படுவார்கள். எனவே, கொலை, கற்பழிப்பு, பணம் பறிப்பு போன்றவை மலிந்துள்ளன. கிராமப்புறங்களில் இவர்களது கெடுபிடிகள் சற்று அதிகம். கிராமப்புறங்களில் உள்ளவர்கள் வெளியில் செல்லும்போதும் திரும்பி வரும்போதும் சோதிக்கப்படுவார்கள்.ராணுவத்தினரின் ஆணைப்படி நடக்கவில்லை என்றால், அந்தக் கிராமவாசிகளுக்கு ஆபத்து வந்துவிடும். பல இடங்களில் எங்கள் வாகனம் நிறுத்தப்பட்டு நாங்கள் விசாரிக்கப்பட்டோம். எங்கள் அடையாள அட்டைகள் சோதிக்கப்பட்டன. இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்றவுடன் ராணுவத்தினருக்குச் சற்று நிதானம் வந்துவிடும். கடந்த 18 வருடங்களில் 80,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 20,000 பேரைத் தீவிரவாதிகள் கொன்றனர். ராணுவம் கொன்றது 60,000 பேருக்கும் அதிகம்.இந்தியர்கள் வேறு, காஷ்மீரிகள் வேறு என்னும் எண்ணம் காஷ்மீரின் எல்லாத் தரப்பு மக்களிடமும் வயதினரிடமும் வலுவாக உள்ளது. 'இந்திய ராணுவம் அயல்நாட்டு ராணுவம். அது எங்கள் நாட்டை ஆக்கிரமித்து அடக்குமுறையில் ஈடுபட்டு வருகிறது' என்னும் கருத்தே அவர்களிடம் காணப்படுகிறது. இந்தியாவின் மேல் அவர்களுக்கு வெறுப்பும் விரோத மனோபாவமும்தான். இந்திய ராணுவமும் காஷ்மீர் மக்களைச் சொந்த நாட்டு மக்களைப் போலல்லாமல் அடிமைகளைப் போல நடத்துகிறது.இப்படி போகிறது இந்த ஆய்வு."காஷ்மீரில் இந்தியா,பாகிஸ்தான், தனி நாடு என்று ஒரு நேர்மையான ஒரு பொது வாக்கெடுப்பு எடுத்தால் இந்தியாவுக்கு மூன்றாவது இடம்தான் கிடைக்கும்" என்று என்னிடம் சொன்னார் துபாயில் என்னுடம் பணியாற்றிய, காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தை சேர்ந்த ஒரு நண்பர்.எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தீர்க்கவே முடியாத பிரச்சனைகள் என்று ஒரு வாக்கெடுப்பு எடுத்தால், முதலிடத்தில் காஷ்மீர் இருக்கும். அடுத்த இரண்டு இடங்களில் காவேரி நதியும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் பிரச்சனயும் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
(நன்றி, இனி அடுத்த வாரம்)-இன்பா

11 Comments:

Unknown said...

அருமை. 3 லிட்டர் பாலை 90 வயசு கிழவன் குடிக்குறானா? முதல்ல அவனை எத்தி்யோப்பியாவுக்கு அனுப்புங்க

Prabu said...

காஷ்மீர் பற்றி பேசி உங்க வெப்சைட்க்கு நீங்களே ஆப்பு வெச்சுக்காதீங்க.

கொஞ்ச நாள் முன்னாடி savithababi'nnu ஒரு கில்மா வெப்சைட் இருந்துச்சு, அதுல காஷ்மீர் தீவிரவாதி வர்ற மாதிரி ஒரு கற்பனை கதை இருந்துச்சு.. அதுக்கே கொஞ்ச நாள்ல சொல்லாம பொல்லாம block பண்னிட்டாங்க...

R. J. said...

// செய்தி # 1: .. மாநிலத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி ஒருவர்..// // "காலையில் எழுந்தவுடன் மூன்று லிட்டர் பால் குடிப்பேன்.புரோட்டா, சப்பாத்தி, அரிசி சாதம் இவற்றையும் பதம் பார்ப்பேன். கண்டிப்பாக தினமும் உணவில் அரை கிலோ நெய் சேர்த்துக் கொள்வேன்" // இவரை ஏழை என்று சொன்னால் நாமெல்லாம் எப்படி அழைக்கப்படலாம்!

செய்தி # 2:

//எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தீர்க்கவே முடியாத பிரச்சனைகள் என்று ஒரு வாக்கெடுப்பு எடுத்தால், முதலிடத்தில் காஷ்மீர் இருக்கும். அடுத்த இரண்டு இடங்களில் காவேரி நதியும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் பிரச்சனயும் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.//

தமிழ்நாட்டில் இந்த தேர்தல் நடத்தினால், இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, ஈழப் பிரச்சினை தான் முதல் இடம் பெரும்! அது நம் நாட்டுப் பிரச்சனையாகத்தான் பார்க்கப்படுகிறது!

'காஷ்மீர்' பற்றி பா.ரா. / சுபத்ரா போன்றோர் என்ன எழுதினாலும் இங்கு யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்பது நிஜம்.

ராணுவத்தின் ஸ்பெஷல் அதிகாரம் நீக்கப்படவேண்டும் என்று தான் காஷ்மீர் மட்டுமல்ல, வட மேற்கு மாநிலங்களிலும் போராட்டம் நடக்கிறது. இந்த ராணுவ அதிகாரிகள் என்று தம் "கோஸி " அலுவலகங்கள் / பங்களாக்கள் / க்ளப்கள் / கோல்ப் மைதானங்கள் / ராணுவ பேரங்கள் இடம் இருந்து வெளி வந்து, field க்கு போகிரார்களோ அப்போதுதான் ராணுவ வீரர்களின் ( ? ) அக்கிரமம் ஒழியும்.

-ஜெ .

keyven said...

ஹரியானா கெழவன பார்த்தா, நெய் குடிச்சி ஒடம்ப தேத்துன மாதிரி தெரியல. வேற எதையோ பெருசாக்கிகிட்ட மாதிரி இருக்கு.. அமெரிக்காவுல இதுக்கெல்லாம் மவுசு ஜாஸ்தி.. நடிக்க ஆளு தேவையாம்.. அங்கன இந்த ரெண்டு பெருசையும் அனுப்புங்கோ....

லெமூரியன்... said...

காஸ்மீர் என்பது ஒரு தனி நாடுதான்...
உலக நாடுகள் இன்றும் இந்திய ஆக்கிரமிப்பு காஸ்மீர் என்றுதான்
குறிப்பிடுகின்றன.....

காஸ்மீர் மட்டுமல்ல...
நாகலாந்தும் கூட ஆக்கிரமிர்ப்பிற்குட்ப்பதுதான் ...
தடி எடுத்தவன் தண்டால் காரன் என்கிற கதையாக கேள்வி கேட்க்க அண்டை நாடுகள் முயன்றால் உடனே அமெரிக்காவின்
கால்களில் சாஷ்டங்கமாக விழுந்து விடுவது இந்திய கூட்டமைப்பின் வாடிக்கை...

Anonymous said...

Can someone eat half a kilo ghee everyday? What a big joke. This is total crap.

PALANIAPPAN said...

படத்தில் அவருடைய உடம்பைப் பார்க்கும்போது தினம் அரை கிலோ நெய் உணவில் சேர்ப்பவர் மாதிரி தெரியவில்லையே

PALANIAPPAN said...

படத்தில் அவருடைய உடம்பைப் பார்க்கும்போது தினம் அரை கிலோ நெய் உணவில் சேர்ப்பவர் மாதிரி தெரியவில்லையே

PALANIAPPAN said...

படத்தில் அவருடைய உடம்பைப் பார்க்கும்போது தினம் அரை கிலோ நெய் உணவில் சேர்ப்பவர் மாதிரி தெரியவில்லையே

Anonymous said...

//அருமை. 3 லிட்டர் பாலை 90 வயசு கிழவன் குடிக்குறானா? முதல்ல அவனை எத்தி்யோப்பியாவுக்கு அனுப்புங்க//

மீசை இருக்கிறவன் முறுக்கு சாப்பிடறான் உங்ககளுக்கு ஏங்க சார் காண்டு.....


Anonymous said...

//எல்லையற்ற இந்த அதிகாரத்தை அவர்கள் யார்மீது செலுத்தினாலும் அவர்கள் பயங்கரவாதிகள் என்று முத்திரைகுத்தப்படுவார்கள். எனவே, கொலை, கற்பழிப்பு, பணம் பறிப்பு போன்றவை மலிந்துள்ளன. கிராமப்புறங்களில் இவர்களது கெடுபிடிகள் சற்று அதிகம். கிராமப்புறங்களில் உள்ளவர்கள் வெளியில் செல்லும்போதும் திரும்பி வரும்போதும் சோதிக்கப்படுவார்கள்.//

இந்த ஆய்வை யார் செய்தார்கள் என்று தெரியப்படுத்தினால், இதில் எத்தனை சதவீதம் டிஸ்கவுண்ட் செய்தால் உண்மை கிடைக்கும் என்று அறிய எளிமையாய் இருக்கும்.

தமிழ் நாட்டிலேயே இது போல் கொடுமைப்படுத்தப்படுகிறோம் என்று கூக்குரலிடத் தயங்காத பிரசார பீரங்கிகளை தமிழ் இனையத்திலேயே பார்க்கலாம்.

இந்த ஆய்வை முழுக்க பொய்னு நிறுவ முயலவில்லை ஆனா...........