பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 30, 2013

கல்கியின் புதிய அவதாரம்


இந்த வார கல்கி விகடன் சைஸுக்கு வந்திருக்கிறது. "பெரிதினும் பெரிது கேள்" என்று விளம்பரப்படுத்தி. தன்னைப் புதுப்பித்துக்கொள்ள கொண்டுள்ளது என்று சொன்னாலும், Content கிட்டத்தட்ட அதே மாதிரி தான் இருக்கிறது.

கையில் எடுத்தால் ரத்னா கபே இட்லி மாதிரி மெல்லிசாக இருக்கிறது. அப்படி தான் இருக்கும், ஆனால் உள்ளே பரப்பளவு அதிகம் என்று சொல்லுகிறார்கள்.இட்லி மெல்லிசு ஆனால் நிறைய சாம்பார் என்று சொல்லுவது மாதிரி !

பல நாள் கல்கி வாசகன் என்ற முறையில் எனக்கு இந்த மாற்றம் வருத்தமே. ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. அதே போல தான் கல்கிக்கும். உள்ளே இருக்கும் பகுதிகளை பார்க்கும் போது அட்டையை கழட்டிவிட்டால் எந்த பத்திரிக்கை என்று சொல்ல முடியாதபடி தான் இருக்கிறது.

கொஞ்ச நாளில் பழகிவிடும் என்றாலும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. 

ஞாநி ரொம்ப நாள் கழித்து தன்னுடைய ஓ-பக்கங்களில் ராகுல் காந்தி பற்றி நகைச்சுவை கட்டுரை எழுதியுள்ளார் :-)


பிகு: கல்கியின் டிரேட் மார்க் பிள்ளையார் பத்திரிக்கை முழுவதும் தேடினால் கிடைக்கவில்லை. எங்கே சார் ?


10 Comments:

Simulation said...

கல்கி விகடனைக் காப்பியடிக்க பெரிதும் முயற்சி செய்து கொண்டிருகிறது. பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களிலிருந்து எடுத்துப் போடுவது, சினிமாவுக்கு முக்கியத்துவம், பிறகு இடதுசாரி சிந்தனையாளர்கள்ப் பேடி காண்பது என்று. இப்போது உருவத்திலும்.

Simulation said...

கல்கி விகடனைக் காப்பியடிக்க பெரிதும் முயற்சி செய்து கொண்டிருகிறது. பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களிலிருந்து எடுத்துப் போடுவது, சினிமாவுக்கு முக்கியத்துவம், பிறகு இடதுசாரி சிந்தனையாளர்கள்ப் பேட்டி காண்பது என்று.

இப்போது உருவத்திலும்.

dr_senthil said...

Who bought it?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கல்கியை நானும் படித்தேன். விகடன் சைஸ் என்று நீங்கள் சொல்வதை ஏற்க முடியவில்லை.
இந்தியா டுடே அல்லது புதிய தலைமுறை சைஸ் என்று குறிப்பிடலாம்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

பரப்பளவு பெரிதென்று சொல்லப்பட்டுள்ளது. அட்டையை கழட்டிவிட்டால் எந்த பத்திரிகை என்று கண்டுபிடிக்க முடியாது என்பது ஒப்புக் கொள்ளலாம். (பத்திரிக்கை சரியல்ல, பத்திரிகை)

Arun Ambie said...

கமலஹாசன் படம் அட்டையில் இருப்பதால் இல்லாத விநாயகர் எதற்கு என்ற எண்ணம் கல்கிக்கும் வந்து விட்டதோ??

E said...

இட்லி வடை "logo" கூட மாத்திட்டீங்க ? அடுத்த "தடை" வந்துண்டே இருக்கு ? கிண்டில இருந்து 18A பஸ் பிடிச்சேங்கன்னா high court ஸ்டாப்ல இறக்கிவிடுவாங்கோ..

R. J. said...

100% நான் உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன்! ஞாநி அவர்களின் கட்டுரையைப் பற்றிய கருத்து உட்பட. பேட்டிகள் படு மொக்கை. மிக ஏமாற்றமாக உணர்ந்தேன். - R. J.

R. J. said...

Who is there in today's IV mast head? Looks like Sathyaraj. Did he say anything on the Viswarupam issue? - R. J.

Ram said...

Raghul gandhiyin nagaichuvai arputham