இந்த வாரம்.... மது,மாது.
செய்தி # 1
மங்காத்தா படத்தில் நடிகை திரிஷா மது குடித்துவிட்டு தள்ளாடுவது போல ஒரு காட்சி வரும். படத்தின் பெரிய வெற்றிக்கு 'தல' யை விட தலையாய காரணமே நான் தண்ணி அடிப்பது போன்று வரும் இந்த காட்சிதான் என்கிறார் திரிஷா.
தற்போது திரை அரங்குகளில் ஒடிகொண்டிருக்கும் "சமர்" படத்திலும் அது போன்ற, அவர் குடிக்கும் காட்சி இடம் பெற்று இருக்கிறது.
மங்காத்தா படத்தில் நடிகை திரிஷா மது குடித்துவிட்டு தள்ளாடுவது போல ஒரு காட்சி வரும். படத்தின் பெரிய வெற்றிக்கு 'தல' யை விட தலையாய காரணமே நான் தண்ணி அடிப்பது போன்று வரும் இந்த காட்சிதான் என்கிறார் திரிஷா.
தற்போது திரை அரங்குகளில் ஒடிகொண்டிருக்கும் "சமர்" படத்திலும் அது போன்ற, அவர் குடிக்கும் காட்சி இடம் பெற்று இருக்கிறது.
"நான் மது அருந்தும் காட்சி இருந்தால் அந்த படம் ஹிட்டாகிறது என்று பலர் என்னிடம் கூறினர். அதை நான் இயக்குனர் திருவிடம் தெரிவித்தேன். அதன் பிறகு தான் சமர் படத்தில் நான் மது அருந்தும் காட்சி வைத்தனர். அந்த காட்சியில் நடித்ததில் எனக்கு கஷ்டமாகவே இல்லை. ஏன் என்றால் அந்த காட்சியில் நான் மது அல்ல பெப்சி தானே குடித்தேன்" என்றார்.
"மாடர்ன் பெண்கள் மது அருந்துவது சரியா, தவறா என்று கேட்டதற்கு அவர், அது அவரவர் இஷ்டம். அதில் நாம் தலையிடக் கூடாது என்றார் அவர்.
நிஜவாழ்க்கையில் அவர் மது அருந்தும் வழக்கம் உள்ளவர் எனபது தெரிந்ததே. ஒரு புத்தாண்டு கொண்ட்டாடத்தில் ரோட்டில் நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு, காவல்துறையினரிடமே அவர் தகராறு செய்து இருக்கிறார்.
சமிபகாலமாக இளம்பெண்கள் மற்றும் கல்லூரிமாணவிகள் மத்தியில் மது அருந்தும் பழக்கம் நம் தமிழகத்தில் அதிகரித்து வருவதாக ஒரு புள்ளி விவரம் பார்த்தேன்.
ஒருமுறை சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தின் லேடீஸ் ஹாஸ்டலுக்கு ஒரு மருத்துவ கல்லூரி மாணவியின் பிறந்த நாள் கொண்ட்டாத்திற்க்கு, ஒரு ஆட்டோ முழுவதும் திணறும் அளவுக்கு பீர் பாட்டில்கள் மற்றும் விஸ்கி பாட்டில்கள் ஆர்டர் செய்யப்பட்தை நானே நேரில் அறிந்து இருக்கிறேன்.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று முழங்கி தொடங்கப்பட்ட திராவிட கழகங்கள் "எங்கும் குடி யாவரும் குடி" என்று ஒரு மிகப் பெரிய புரட்சியை(?) நடத்தி, அடுத்த தலைமுறையின் அஸ்திவாரத்தையே அரித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
“விடிந்தும்
தொடரும் இருட்டு
பெண்ணுலகில்.
பண்பாட்டிற்க்கும்
பெண் விடுதலைக்கும்
அர்த்தம் புரியாத காரணத்தால்”.
திராவிட கழகங்கள் வழிமொழிந்த மது கலாச்சாரத்தை பெண் சமுதாயத்தில் முன்மொழிகிறார்கள் த்ரிஷா போன்ற பணத்தில் கொழுத்த சினிமா நடிகைகள்.
வாழ்க திராவிடம்! வளர்க தமிழ்நாடு.
செய்தி # 2
எல்லா வித அறிதல்களோடு விரிகிறது என் யோனி" என்று ஒரு கவிதை வரி மூலம் இலக்கிய உலகை அதிர வைத்தார் பெண் கவிஞர் சல்மா.
தனது கவிதை நூலுக்கு "முலைகள்" என்று தலைப்பு வைத்து கவனம் எழுத்துலகில் கவனம் பெற்றார் மற்றொரு பெண் கவிஞரான குட்டி ரேவதி.
இவர்களை போன்று, கவிஞர் அனார் மற்றும் கவிஞர் மாலதி மைத்ரேயி ஆகியோர் துணிச்சலுடன் பெண்களின் காமத்தை தங்களின் கவிதைகள் மூலம் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வரிசையில் நான் படித்த இரண்டு கவிதைகளை இங்கே தருகிறேன்.
ஒவ்வொரு கால்களிலும்
காமம் நடன ஊற்றாகி
கொடுக்கில் விசம் ஏற்றி . . . மயக்கி
மோகத் திளைப்பில் சுருளும்
ஆண் சிலந்தியைக் கலவி
ஆற அமர ஆசையாய். . . என்ன சுவையாய். . .
கொன்று. . .
இரத்தம் உறுஞ்சுகிறாள் பெண் சிலந்தி
- அனார்
கொழுத்த களிநண்டுகள்
அலையும் அலையாத்திக்காட்டில்
செம்பவள சில்லென
ஒளிர்ந்துகொண்டிருக்கிறதென் யோனி
சிறுசுடரென எரிகிறதென் யோனி
கரும்திரையென நிற்கும் வானில்
சிலாக்கோல்கள் போன்ற
சுரபுன்னைகாய்கள் நீரைக் கிழித்து
சேற்றில் விழும் சத்தம்
மிகமிகச் சன்னமாகக் கேட்கிறது
அப்போது.
- மாலதி மைத்ரேயி.
"குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்."
- இது ஆண்டாள் திருப்பாவையில் நாச்சியார் திருமொழி. 'பஞ்சசயனம் என்பது அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தையில், தன் மனைவியின் மார்பின் மீது தலை வைத்து தூங்குகிறானாம் கண்ணன். எழுவானா? அவள் தான் எழ விடுவாளா?' என்று கேட்கிறார் ஆண்டாள்.
ஆண்டாள் - காமத்தை பதிவு செய்வதில் மாலதி மைத்ரேயி போன்ற இன்றைய பெண் கவிஞர்களுக்கு ஒரு முன்னோடி என்று கூறலாமா??
(நன்றி, இனி,அடுத்தவாரம்)
-இன்பா