பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 31, 2013

2013!

இந்த ஆண்டு அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி, ஐந்து ரூபாய்க்கு சாம்பார் சாதம் என்று சாப்பிட்டுவிட்டு டிவிட்டர், ஃபேஸ்புக் மக்கள் எல்லாம் விமர்சனம் எழுதினார்கள். அம்மா குடிநீர், பேருந்து என்று எல்லாவற்றிலும் இலைச்சின்னம் போட்ட போது சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆகும் வரை அதே டிவிட்டர் ஃபேஸ்புகில் கூவினார்கள்.

ஜீரணம் ஆகாத விஷயம் டெல்லி தேர்தல்தான். இவர்கள் எல்லாம் எங்கே வர போகிறார்கள் என்று நினைத்த பலருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி டெல்லியில் 28 சீட் வந்த போது அதிர்ச்சியில் முழுகினார்கள். பிஜேபி அனுதாபிகள் இது எல்லாம் சும்மா டெல்லி தேர்தல் என்பது முனிசிபல் தேர்தல் மாதிரி என்று சப்பைக் கட்டு கட்டினார்கள். சிம்பு-நயன் சேர்ந்த போது பலருக்கு ஏற்பட்ட எரிச்சல் போல இவர்களுக்கு ஏற்பட்டது ஏனென்பதை உளவியல் நிபுணர்களின் ஆராய்ச்சிக்கு விட்டுவிடலாம்.

அடுத்த ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயம் சரியாக சச்சின் ரிடையர் ஆகிறேன் என்று சொன்னவுடன் அவருக்கு பாரத் ரத்னா அறிவிப்பு. காங்கிரஸ் கட்சியிலும் சிலர் ‘தீயாவேலை செய்யணும் கொமாரு’ மாதிரி இருக்கிறார்கள் என்று நம்பத் தூண்டியது.

தீயா வேலை செய்து ஆனால் டப்பாவான படங்களில் கடல், தலைவா, இரண்டாம் உலகம், அழகு ராஜா என்று சில உருப்படி(யில்லாதது)கள் வந்தது. தியேட்டர் காலியாக இருந்தாலும் நண்பர் சுரேஷ் கண்ணன் கர்ம ஸ்ரதையுடன் பார்த்துவிட்டு இலக்கியப் பத்திரிகைகளில் அதைப் பற்றி எழுதி ஏதோ சம்பாதித்த்து ஒரு பெரிய சாதனை என்றே சொல்ல வேண்டும். தலைவா படத்தில் “டைம் டூ லீட்” என்ற வாசகம் ஏதோ பெரிய கெட்ட வார்த்தை மாதிரி ஆகி விஜய் அதை எடுத்து படத்தை 15 நாள் கழித்து நெட்டில் வந்த பிறகு தமிழ் நாட்டில் ரிலீஸ் செய்தார். டைம் டூ லீட் என்ற வாசகம் “டைம் டீ ப்லீட்” என்று மாற்றியிருக்கலாம்.

அடுத்த பெரிய சாதனை என்று இந்த வருடம் பார்த்தால் மோடிக்கு சேர்ந்த கூட்டம் தான். அந்தக் கூட்டங்களில் அசால்டாக அதுவும் பிரதமர் வேட்பாளர் சில வரலாற்று உளறல்களை ஆங்காங்கே உதிர்த்துவிட்டுச் சென்றார். அவருடைய கூட்டத்தை ஷேர் செய்த மாமிகள் இதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. சென்னையில் பரவலாக எல்லா பகுதிகளிலும் ஆட்டோக்கள் மீட்டர் போட்டு ஓடுவது இன்னொரு சாதனை.

லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் தம் கட்சியைக் கலைத்துவிட்டு திமுகவில் மீண்டும் இணைந்ததை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் திமுகவிற்கு ஒரு ஓட்டும் முகவிற்கு ஒரு மஞ்சள் சால்வையும் லாபமாகக் கிடைத்தது இந்த வருட சாதனை. டி ஆர் சார், நீங்க உபயோகிக்கும் பேஸ்டில் உப்பு இருக்கா?

அடுத்த பெரிய சாதனை என்று பார்த்தால், தமிழ் சினிமா 100 விழாவிற்கு கலைஞரை அழைக்காமல் மறந்து போனது தான். அதில் கலந்துக்கொண்ட பேசிய பல நடிகர்கள்/நடிகைகள் எல்லோரும் “இங்க எல்லாருக்கும் டபுள் ரோல்தான். போதுமா?” என்று சொல்லாமல் சொன்னார்கள்.

”இங்க எல்லாருக்கும் டபுள் ரோல் தான் போதுமா” என்ற வசனம் பல அரசியல் கட்சித் தலைவர்களும் உபயோகித்தார்கள். இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் ப.சி.கருத்தரங்கில் பேச, டெஸோ என்று கோபாலபுரத்தில் சிலர் கிளம்பினார்கள். இலங்கை காமன் வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொண்டால் அதற்கான விளைவை மத்திய அரசு சந்திக்க வேண்டிவரும்!’ என்று கருணாநிதி எச்சரித்தார். இந்தியாவில் இருந்து யாருமே கலந்துகொள்ளக் கூடாது’ என்று தமிழகச் சட்டசபையும் தீர்மானம் நிறைவேற்றியது. எல்லா டிவியிலும் தோன்றும் டி-ஷர்ட் கவிஞர் சக்கரைப்பொங்கலுக்குpப் பெருங்காயம் போடலாமா? என்ற விவாதத்துடன் இதையும் விவாதித்தார். இதை எல்லாம் கண்டுகொள்ளாமல், தன்மானத் தமிழன் அஞ்சலியைக் காணும் என்பது போன்ற முக்கியமான செய்திகளில் உண்மையைத் தேடத் தொடங்கினான்.

விஷி என்று பலர் செல்லமாக அழைத்த ஆனந்த் சென்னையில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் நார்வே நாட்டின் கார்ல்சனிடம் தோல்வியடைந்தார். நம்மூரில் ரிலீசான ஓநாயும் ஆட்டுக்குட்டியும் வெற்றி பெற்றது. இளையராஜா இசை ஓஹோ என்று பலர் உணர்ச்சிவசப்பட்டார்கள். தமிழர்களுக்கு உணர்ச்சிவசப்படச் சொல்லியா தரவேண்டும்?

சென்னையின் பெருமையை நிலைநாட்ட சென்னை எக்ஸ்பிரஸ் படமும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முயன்று கொண்டு இருக்க ஒசைப்படாமல் குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் சிக்கி, என்.சீனிவாசனுக்கு செக் வைக்க முயற்சித்த ஸோ கால்ட் நம்பர் 1 மீடியா ஒன்றும் செய்ய முடியாமல் திக்குமுக்காடியது. மன்மோகன்சிங்கே அர்நாபிடம் பயப்படுவார் ஆனால் சீனிவாசன் விஸ்வரூபமெடுத்து ஐபிஎல் பார்த்த மக்களை மூடர் கூ(ட்)டம் ஆக்கினார்.

ஒருவழியா சச்சினுக்கு ரிட்டயர்மென்ட்குடுத்து இளைஞர் படையுடன் சௌத்ஆஃப்ரிக்கா சென்று உதை வாங்கியது இந்த வருஷக்கடைசியின் ஹைலைட். ஈஷ்வர் பாண்டேக்கு எல்லாம் சான்ஸ் குடுக்கும் நம்ம செலக்டர்கள் பூனம் பாண்டேக்கும் குடுக்கலாம்.

நாளை பிறக்கும் வருஷத்தில் இதெல்லாம் நடக்குமா/பார்ப்போமா/கிடைக்குமா என்று இட்லி வடை ஏங்கும் விஷயங்கள்:

பிரச்சனை இல்லாமல் கர்நாடகாவிலிருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீர்
தமிழக அரசியல் கட்சி தலைவர்களின் இலங்கை தமிழ்ர்கள் பாச அறிக்கை
கரண்ட் கட் இல்லாத தமிழ் நாடு
மன்மோகன் சிங் ராஜினாமா
ஊழலை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற சோனியாவின் அறிக்கை
கோச்சடையான், விஸ்வரூபம்-2 மற்றும் ஜில்லா
ஒரே அணியில் ராமதாஸ், விஜயகாந்த் அவர்கள் தோற்ற பின் விடும் அறிக்கை
திராவிடக் கட்சிகளிடம் தொங்காத காங்கிரஸ்
பிரதமராக மோடி

அப்டியே, தொடர்ந்து இட்லிவடை பதிவுகள். எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

Read More...

நம்மாழ்வார் - அஞ்சலி

அஞ்சலி

Read More...

Friday, December 27, 2013

2013 டாப் 5 படங்கள்

2013ல் உங்களுக்கு பிடித்த 5 படங்களை வரிசைப் படுத்துங்களேன்.

2013ல் மிக மோசமான 5 படங்களையும் வரிசைப் படுத்தலாம்.

Read More...

Wednesday, December 25, 2013

கருப்பு பூனை



அன்புள்ள இட்லிவடை,

எது உண்மையான தமிழ் புத்தாண்டு, இது உண்மையான பொங்கல் திருநாள் ? இதை அனுமதிக்கலாம் ? என்று என் நண்பன் ஒருவன் கேட்கிறான்

விஜயவேகன்

விஜயவேகன்
யார் அந்த மடையன்? அவனையெல்லாம் ராணி முத்து தினசரி நாட்காட்டியை ஒரு முறை முழுக்க வாசிக்கச் சொல்லவேண்டும், அப்போதுதான் அடங்குவான்.

தமிழில் எழுதப்படிக்கத்தெரிந்தவர்களை விட இலக்கணமேதைகள் ’இலவசமாக’ கிளம்பிவிட்டார்கள்.  அரசு கொசுமருந்து மாதிரி ஏதாவது புகை கண்டுபிடித்து அடிக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

இவ

இது சேர்ந்தாலும் சேராவிட்டாலும் விஜயகாந்துடன் கலைஞர் சேர்ந்துவிடுவார்

Read More...

Friday, December 20, 2013

நாக்கு முக்க..! நாக்கு முக்க.!

கப்பல் முழுகும் போது முதலில் தப்பிப்பது அதில் உள்ள எலிகள்தான் என்று கூறுவார்கள். திமுக இனி காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது என்று சொன்னபோது இது தான் நினைவுக்கு வந்தது.

இதை ஏன் இவ்வளவு தாமதமாக அதுவும் இன்னும் தேர்தலுக்கு 100 நாட்களே இருக்கும் போது இதை கலைஞர் அறிவித்தார் என்று பார்த்தால் ஒரு வாரத்துக்கு முன்தான் தேர்தலில் பிஜேபி வெற்றி பெற்ற நியூஸ் வந்தது.

சரி பிஜேபிக்குத் தாவலாம் என்றால் அங்கே வாஜ்பாயி இல்லையே என்று தவிக்கும் கலைஞர் தற்போது மோடி ரொம்ப நல்லவர் வல்லவர் என்று ஆங்கில தினசரிக்கு பேட்டி கொடுத்துவிட்டு மாலையே பிஜேபியுடன் கூட்டணி கிடையாது என்றும் அறிவித்துவிட்டு முஸ்லீம் ஓட்டுக்களைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்துள்ளார். இலங்கை பிரச்சனை, சேது பிரச்சனைக்கு பாலுவை டெல்லிக்கு அனுப்பிவிட்டு கனிமொழி பிரச்சனைக்கு தானே டெல்லிக்கு சென்று சோனியாகாந்திக்கு மலர் கொத்து கொடுத்தார்!

இலங்கை பிரச்சனை, கனிமொழி, ராசா கைது என்று பல பிரச்சனைகளை அடுக்கிவிட்டு இனிமேல் உங்களுடன் உறவு எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டார். கொஞ்ச நாளைக்கு முன் கனிமொழிக்கு எம்.பி பதவி கிடைக்க வேண்டும் என்று மணிமேகலையை அசிங்கப்படுத்தினார். அவரும் காங்கிரஸ் எம்.பிக்கள் ஐந்து பேரை திமுகவிற்கு ஓட்டுப் போட்டு விஜயகாந்தைக் கழட்டிவிட்டார்.

தற்போது அதிமுக, திமுக என்ற இரண்டு கட்சிகளும் காங்கிரஸ், பிஜேபியுடன் கூட்டணி இல்லை என்ற நிலையில் பின்னவர்கள் இருவரும் கேப்டன் பக்கம் சாய முல்வார்கள். அதிமுகவிற்கு அம்மா தான் எல்லாம், அவர் தான் இந்தியாவின் பிரதமர் ஏன் அமெரிக்காவின் பிரதமர் கூட என்று சொல்லிடுவார்கள்.

தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் அதிமுக கடைசி நிமிடத்தில் பிஜேபியுடன் கூட்டணி என்று அறிவித்து அதிகபட்சமாக 8 சீட்களைக் கொடுத்தாலும் கொடுப்பார்கள். இன்றைய நிலைமையில் கூட்டணியோ தனித்தோ எப்டிப் போட்டி போட்டாலும் திமுக 10 இடங்களில் வெற்றி பெற்றால் பெரிய விஷயம். அதற்கு கீழே கிடைத்தால் பொது மக்களாகிய நாம் நிச்சயம் பரம ஸந்தோஷப்பட வேண்டும்.


தற்போது நிம்மதியாக இருக்கும் ஒரே நபர் பிரணாப் முகர்ஜி தான். நல்ல வேளை ஜனாதிபதியாக்கி விட்டார்கள். இல்லையென்றால், இப்போ மெட்ராஸ் வரும் போது கோபாலபுரத்திலோ சிஐடி காலனியிலோ கலைஞரைத் தாஜா செய்ய வேண்டியிருந்திருக்கும். தப்பித்தார்.

Read More...

Tuesday, December 17, 2013

அப்பாடா !

கேள்வி:– பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாரதீய ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என்று பொதுக்குழுவில் கூறப்பட்டதே? அப்படி என்றால் தி.மு.க. தனித்து போட்டியிடுமா?

கலைஞர் பதில்:– ஆமாம். தி.மு.க. தனித்து போட்டியிடும்.


கச்சேரியில் தனி ஆரம்பிக்கும் போது மக்கள் எழுந்து போவார்கள். அதே போல தான் இங்கே நடக்க போகிறது.


கேள்வி:– தி.மு.க. தலைமையில் 3–ம் அணி உருவாவது போல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் கூறியுள்ளாரே?

கலைஞர் பதில்:– அவர் சொன்னதற்கு மகிழ்ச்சி. 3–வது அணி அமைய வாய்ப்பு உள்ளது.

சும்மா ஒரு சால்வையை போர்த்திவிட்டு இப்படி பேசியதற்கு இவருக்கு ஒரு சீட்டு உண்டு, இல்லை என்றால் இதயத்தில் நிச்சயமாக !


Read More...

Monday, December 16, 2013

காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி இல்லை: கருணாநிதி

பொதுக்குழுவில் காலையில் இருந்து பேசிய அனைவரும் நரேந்திர மோடி மீது மக்களுக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறினர். ஆனால் எனக்கோ (கருணாநிதி), அன்பழகனுக்கோ, ஸ்டாலினுக்கோ அந்த ஈர்ப்பு ஏற்படவில்லை.

நரேந்திர மோடிக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கலாம். அந்த விளம்பரங்களையே பார்த்து நீங்கள் (திமுகவினர்) அதிர்ச்சி அடைந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

வாஜ்பாயோடு முடிந்துவிட்டது: பாஜகவுடன் நாம் கூட்டணி வைக்காதவர்கள் இல்லை. வாஜ்பாய் போன்ற மாபெரும் தலைவர்கள் இருந்தபோது பாஜகவுடன் கூட்டணி வைத்தோம். அமைச்சரவையில் இடம்பெற்றோம்.

கன்னியாகுமரியில் காமராஜருக்கு மணிமண்டபம் வைக்க வேண்டும் என்று வாஜ்பாயிடம் கேட்டோம். அப்போது வாஜ்பாய் அருகில் இருந்த அதிகாரிகள், கடற்கரை அருகில் வைப்பதால் இயற்கை சூழல் பாதிக்கப்படும். அதனால் அங்கு வைக்க வேண்டாம் என்று கூறினர்.

ஆனால் காமராஜருக்கு அந்த இடத்தில் வைப்பதுதான் சிறப்பாக இருக்கும் என்று வலியுறுத்தினோம். அதை வாஜ்பாய் ஏற்றுக்கொண்டார். அப்போது இருந்தது மனிதாபிமான பாஜக தலைமை. தற்போது அப்படிப்பட்ட பாஜக இல்லை.

ஒரு கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு முன்பு யார் தலைவர் என்பதையும் கவனித்துப் பார்க்க வேண்டும். எங்களைப் பொருத்தவரை வாஜ்பாயோடு பாஜகவின் வரலாறு முடிந்துவிட்டது. பாஜகவுடன் கூட்டணி இல்லை.

நன்றிகெட்ட காங்கிரஸ்: இப்படிக் கூறுவதால் காங்கிரஸýடன் கூட்டணி என்று நினைத்துவிடாதீர்கள். ஜீரோ ஜீரோ என்று ஏகப்பட்ட ஜீரோக்களைப் போட்டு அலைக்கற்றை ஊழலில் திமுக ஈடுபட்டதாக காங்கிரஸ் நம்மைச் சிக்க வைத்தது.

ராசா, கனிமொழி ஆகியோரை சிறையிலடைத்தனர். அந்தக் காயம் நீங்கா வடுவாக நம் மனதில் உள்ளது.

இது தனிப்பட்ட ராசாவுக்கு ஏற்பட்ட காயம் இல்லை. திமுகவுக்கே ஏற்பட்ட காயமாகும்.

சிபிஐ யார் கையில் இருக்கிறது. அதை எப்படிப் பயன்படுத்தினார்கள் என்பதையெல்லாம் அறிவோம்.

எனவே, நன்றிகெட்ட காங்கிரúஸாடு மீண்டும் கூட்டணி அமைக்கமாட்டோம். தனித்தே கூட போட்டியிடுவோம். ஆனால் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் தனித்து நின்றாலும் வெற்றிபெற முடியும்.

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்படும். அந்தக் குழுவிடம் உங்கள் (திமுகவினர்) கருத்துகளைத் தெரிவியுங்கள். எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பதையெல்லாம் அந்தக் குழுவினர் முடிவு செய்து கூறுவர் என்றார் கருணாநிதி.

நன்றி: தினமணி.

நன்றி: கலைஞர்

Read More...

Sunday, December 15, 2013

கங்குலி !

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்புத் தருவதாக, பாஜக விடுத்த அழைப்புக்கு, முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் கங்குலி மறுப்பு தெரிவித்துள்ளார் என்ற செய்தியை படித்திருப்பீர்கள். இந்த அழைப்பு நரேந்திர மோடியிடம் இருந்து என்று சில செய்திகள் சொல்லுகிறது.



பாஜகவின் நிலமை இவ்வளவு மோசமாக போய்விட்டதா ?

Read More...

Wednesday, December 11, 2013

நான்கு மாநிலத் தேர்தல்களும் தமிழ் நாட்டுக் கூட்டணியும் - 3 - விஸ்வாமித்ரா


இந்த வெற்றிகளுடன் மட்டுமே மோடியை பிரதமராக்க வேண்டிய நாட்டை ஊழல் பெருச்சாளிகளிடமிருந்து விடுவித்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய் நீண்ட பணி முடிந்து விடவில்லை. அவர்களின் கடுமையான உண்மையான சவாலான பயணம் இனிதான் துவங்கவிருக்கிறது அதற்கு இந்த வெற்றிகள் ஒரு கிரியாவூக்கியாக இருக்கும். மோடியின் அயராத உழைப்பினாலும் அபாரமான பேச்சாற்றலினாலும் மக்களுடன் தன்னை தொடர்பு படுத்திக் கொள்ளும் திறமையினாலும் குஜராத்தில் அவரது சாதனைகளினாலும் பெரும்பாலான இந்திய மக்களிடம் அவர் நெருக்கமாகச் சென்றடைந்திருக்கிறார் என்பதை இந்த வெற்றிகளும் அவருக்குத் தொடர்ந்து கூடி வரும் பிருமாண்டமான கூட்டங்களும் உணர்த்துகின்றன.

மூன்று மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்து டெல்லியில் ஆட்சியை பிடிக்க வாய்ப்புகளுடன் முன்ணணியில் இருக்கும் பி ஜே பி செய்ய வேண்டியது என்ன?



ஆனால் அவரது அயராத அதி சக்தி பிரசாரங்கள் மட்டுமே பி ஜே பி க்கு வெற்றியைப் பெற்றுத் தந்து விட முடியாது என்பதை டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஏற்படுத்திய தடையினாலும் சட்டிஸ்கரில் அனுதாப அலை உருவாக்கிய எதிர்ப்பினாலும் பி ஜே பி உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் செல்ல வேண்டிய கடினமான சவால்கள் நிறைந்த பாதை இனிமேல்தான் துவங்கவிருக்கிறது.



இந்த நான்கு மாநிலங்களின் லோக்சபா சீட்டுக்கள் மூலமாகவும் தேர்தலின் பொழுது மோடி அலை உருவாக்கவிருக்கும் எதிர்பார்ப்பு காரணமாகவும் பி ஜே பி க்கு கிட்டத்தட்ட ஒரு 60 இடங்கள் வரை இந்த வெற்றிகளின் மூலமாக இப்பொழுது உறுதி செய்யப் பட்டுள்ளன என்று இந்தத் தேர்தல்களின் முடிவுகள் உணர்த்துகின்றன. ஆனால் அவர்கள் இன்னும் 200 சீட்டுகளுக்கு வழி கண்டு பிடிக்காதவரை வெற்றி அருகில் கிடையாது என்பதை உணர வேண்டும்.

1. ஏற்கனவே ஜெயித்த இந்த 3 மாநிலங்களிலும் மிகச் சிறப்பான ஆட்சியை தொடர்ந்து வழங்க வேண்டும். எந்தவிதமான பிரச்சினைகளிலும் அதன் மந்திரிகள் சிக்கிக் கொள்ளக் கூடாது. ம பி, ராஜஸ்தான், சட்டிஸ்கர் டெல்லியில் மத்தியிலும் பி ஜே பி ஆட்சிக்கு வர நீங்கள் ஆதரவளித்தால் மட்டுமே மாநிலங்களில் எங்களால் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்பதை மக்களிடம் தொடர்ந்து சொல்லி அவர்கள் அனைவரும் பெரும் அளவில் மத்தியில் மோடிக்கு ஆதரவளிக்கும் விதமாக தயார் செய்து வர வேண்டும். அது முதல் படி.

2. இந்தத் தேர்தல்களில் ஏற்கனவே குறைந்த வித்தியாசங்களில் தோற்ற பாராளுமன்றத் தொகுதிகளை அடையாளம் கண்டு அங்கு நல்ல வேட்ப்பளர்களை நிறுத்த வேண்டும். அந்தத் தொகுதிகளின் குறைகளை உடனடியாக நீக்கி அந்த மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று தங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முனைப்பாக முயல வேண்டும் இது இரண்டாவது படி.

3. வட மாநிலங்களான டெல்லி, குஜராத், ராஜஸ்தான், ம பி,பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே பி ஜே பி ஓரளவுக்கு வலுவான நிலையில் உள்ளன. அந்த மாநிலங்களின் முழு இடங்களையும் வெற்றி பெற தீவீரமாக முயல வேண்டும்.


4. உ பி, பீஹார், ஹரியானா, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஜார்க்காண்ட் ஆகிய பிற வட மாநிலங்களில் பி ஜே பி யின் பெரும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். இவற்றைச் செய்து விட்டால் அனேகமாக மத்தியில் ஆட்சியை மோடி பிடிப்பது உறுதி செய்யப் பட்டு விடும். உ பி யிலும் பீஹாரிலும் சேர்த்து மொத்தம் 120 இடங்கள் உள்ளன. அவற்றில் 60 இடங்களில் வெற்றி பெறுவதன் மூலமாக தென்னாட்டில் ஏற்படவிருக்கும் இழப்பைச் சரிக் கட்டலாம். மோடிக்கு இரு மாநிலங்களிலும் கூடும் கூட்டங்களையும் ஆதரவையும் கணக்கில் எடுக்கும் பொழுது 60 இடங்களில் வெற்றி என்பது சாத்தியம் என்றே தோன்றுகிறது.


5. மஹாராஷ்ட்ராவில் நிலவும் ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி அலையைப் பயன் படுத்திக் கொள்வதுடன் சிவசேனாக் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதன் மூலமாக கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. அதற்காக மோடி சிவசேனா கட்சிகளை இணைப்பதில் தன் முழு சக்தியையும் பயன் படுத்த வேண்டும். மஹாராஷ்ட்ராவில் முழு வெற்றி சிவசேனா இணைப்பின் மூலமாகவே சாத்தியம்.


6. அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பி ஜே பி யின் எண்ணிக்கையை அதிகரிக்க முயல வேண்டும். அதுவும் சாத்தியமானதே அங்கும் மோடி அலை வீசத் துவங்கியுள்ளது. இரு மாநிலங்களிலும் குறைந்த பட்சம் ஒரு 10 இடங்களை வெல்லும் வாய்ப்பு உள்ளது


7. ஒடிசா, ஆந்திரா, தமிழ் நாடு, கேரளா, மே வங்கம், வட கிழக்கு மாநிலங்களில் பி ஜே பி அதிகமாகச் செய்யக் கூடியது எதுவும் இல்லை. அங்கு ஏதேனும் இடங்கள் கிடைக்குமானால் அவற்றை போனசாகக் கருதிக் கொள்ளலாம். முக்கியமாக உ பி மற்றும் பீஹாரில் மோடிக்குக் கிடைக்கும் ஆதரவே பி ஜே பியின் வெற்றியை உறுதி செய்யப் போகிறது.

8. கர்நாடகாவில் எடியூரப்பாவை சில நிபந்தனைகளுடன் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வது அவசரமாகச் செய்ய வேண்டியது. டெல்லியில் ஹர்ஷ வர்த்தனை அறிவிக்க தாமதம் செய்தது போல கர்நாடகத்தில் வீணடிக்க முடியாது. கர்நாடகத்தின் 20 இடங்கள் அதன் மூலமாக மட்டுமே உறுதி செய்யப் படும். எடியூரப்பா மீதான வழக்குகள் முடியும் வரையில் அவருக்கு பதவிகள் ஏதும் இருக்காது என்ற நிபந்தனையின் பேரில் அவரை மீண்டும் இணைக்க வேண்டியது கர்நாடகத்தில் 20 இடங்களை வெல்லுவதற்கு அவசியமான ஒன்று. அவரைத் தொடர்ந்து அவமானப் படுத்தி ஒதுக்கி வைப்பது தேவையற்றது. ராஜ்நாத் சிங்கும் மோடியும் இந்த விஷயத்தில் உறுதியான நிலைப்பாட்டை உடனடியாக எடுக்க வேண்டியது அவசியமாகிறது. இல்லாவிட்டால் 20 இடங்களில் 5 மட்டுமே சாத்தியமாகும்.


9. ஆந்திராவில் உள்ள குழப்பமான சூழலில் நாயுடுவுடன் கூட்டணி வைத்தாலும் கூட பி ஜே பி க்கு அதிக பட்சமாக ஒரு 20 இடங்கள் பெறும் சாத்தியம் உள்ளன. அதற்கான கூட்டணியை வலுப்படுத்த வேண்டும்

9. கேரளத்தில் ஒரு இடம் கிடைத்தால் அதை போனசாகக் கருதிக் கொள்ள வேண்டும்

தமிழ் நாட்டைப் பொருத்தவரை நகர்ப்புறங்களில் மோடிக்கு பெரும் ஆதரவு அலை ஒன்று மறைமுகமாக உருவாகி வருகிறது. கிராமப் புறங்களிலும் அவரது பெயர் தெரியத் துவங்கியுள்ளது. ஆனால் அவற்றை ஓட்டுக்களாக மாற்றக் கூடிய தொண்டர் கட்டுமானம் பி ஜே பிக்கு அவ்வளவாக இல்லை. தமிழ் நாட்டின் இன்று முக்கியமான பிரச்சினைகள் மின்சாரமின்மை, தென் மாவட்டங்களில் தொழில்கள் இன்மை, ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியின்மை, நீர் பிரச்சினைகள் ஆகியவை. இந்த அனைத்து விஷயங்களிலும் எப்படி குஜராத்தில் மோடி மகத்தான வளர்ச்சியை சாதித்துக் காட்டியிருக்கிறார் என்பதை தமிழ் நாட்டு பி ஜே பி தொண்டர்கள் தமிழ் நாட்டு மக்களிடம் எடுத்துச் சென்று சினிமாக்களாகவும் குறும் படங்களாகவும் பிரசார கையேடுகளாகவும் கொண்டு சேர்ப்பிக்க வேண்டு. மக்களைப் புரிய வைக்க வேண்டும்

மேற்கண்ட மாநிலங்களின் நிலமைகளை வரும் நாட்களில் விரிவாகக் காணலாம்.

தமிழ் நாட்டில் பி ஜே பியின் நிலை என்ன? யாருடன் கூட்டணி?


இன்றைய சூழலில் தமிழ் நாட்டில் பி ஜே பியுடன் சேர வை கோவின் கட்சியும், பா ம க வும் மட்டுமே தயாராக உள்ளன. தமிழ் நாட்டில் யாருடன் கூட்டணி என்பதை பி ஜே பி முடிவு செய்யும் இடத்தில் இல்லை. தி மு க பி ஜே பியுடன் கூட்டணி வைக்க ஆர்வமாக இருக்கிறது. தி மு க எப்பொழுதுமே மூழ்கும் கப்பலில் இருந்து குதித்து அடுத்தக் கப்பலில் தொற்றிக் கொள்வதையே தொழிலாகக் கொண்ட ஒரு குடும்பக் கட்சி. அதனுடன் சேர்வது பா ஜ க வின் ஒரு சில தலைவர்களுக்கு உவப்பானதாக இருந்தாலும் தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பொது மக்களிடம் இன்று மோடி அலை காரணமாக தமிழ் நாட்டில் பி ஜே பி மீது உருவாகி வரும் ஆதரவு அனைத்தும் அது தி மு க வுடன் கூட்டணி வைக்கும் பட்சத்தில் ஒரே நாளில் மறைந்து விடும். மேலும் அகில இந்திய அளவிலும் பி ஜே பி தி மு க கூட்டணி கடுமையான எதிர் விளைவுகளை ஏற்படுத்தி மோடியின் ஆதரவில் ஓட்டை விழச் செய்து விடும். இதையெல்லாம் தமிழ் நாட்டு பி ஜே பி தலைவர்கள் உணர்ந்துள்ளார்களா என்பது தெரியவில்லை. அவர்கள் பி ஜே பி தொண்டர்கள் ஃபேஸ்புக்குகளில் செய்யும் குமுறல்களை படிக்கிறார்களா? கணக்கில் கொள்கிறார்களா என்பது தெரியவில்லை. ஒரு வேளை தமிழ் நாட்டில் பி ஜே பி தி மு கவுடன் கூட்டணி வைக்கும் பட்சத்தில் அது தற்கொலை முடிவாக மட்டுமே இருக்க முடியும். அவர்களுக்கு வளர்ந்து வரும் ஆதரவு அனைத்தும் பொசுங்கி அழிந்து விடும் சொந்தக் கட்சிக்காரர்கள் கூட ஓட்டுப் போட முன் வர மாட்டார்கள். ஆகவே பி ஜே பி மிகுந்த எச்சரிக்கையுடன் கூட்டணியை கையாள வேண்டிய நேரம் இது. வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தி மு கவுடன் கூட்டணி வைத்துத் தாழியை அவர்கள் உடைத்து விடக் கூடாது. நாலாறு மாதமாய் மோடி என்னும் குயவனைத் தேடிக் கொண்டு வந்த ஆதரவுப் பானையை தி மு கவுடன் கூட்டணி வைத்துப் போட்டுடைத்து விட முடியாது. இதை தமிழ் நாட்டு பி ஜே பி தலைவர்கள் உணர வேண்டும்.


தமிழ் நாட்டில் இயல்பான கூட்டணியாக அதிமுகவும் பா ஜ கவுமே இருக்க முடியும். மத வன்முறை மசோதா எதிர்ப்பு, ராமர் சேது திட்ட எதிர்ப்பு போன்ற பல் விஷயங்களில் இரு கட்சிகளும் ஒத்த கொள்கை கொண்டுள்ளன. வேறு பெரிய கொள்கை வித்தியாசங்கள் ஏதும் இரு கட்சிகளிடமும் கிடையாது. ஆகவே அ தி மு கவுடனான கூட்டணியே 40 இடங்களையும் வெல்லக் கூடிய வெற்றிக் கூட்டணியாக இருக்கும்.

ஆனால் ஜெயலலிதா எப்பொழுதுமே மத்திய அரசியலில் புத்திசாலித்தனமாக முடிவு எடுத்தவர் அல்லர். சோனியாவுடன் சேர்ந்து வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்த்தது முதல் இன்றைக்கு 40 இடங்களைப் பெறக் கூடிய ஒரு அரிய வாய்ப்பையும் சில முட்டாள்த்தனமான முடிவுகளினாலும் தவற விட்டுக் கொண்டிருக்கிறார். மத்திய அரசியலில் அவர் எடுக்கும் தவறான முடிவுகளினாலேயே அவர் பல வருடங்களாக மத்திய அரசில் இடம் பெற முடியாமல் போனது. இந்த முறையும் அவர் அதே தவறைச் செய்கிறார்.


அதிமுக தனியாக நின்றால் ஒரு 27 இடங்களில் அதிக பட்சமாக ஜெயிக்க முடியும். ஆனால் ஜெயலலிதா தன்னால் தனியாக நின்று 40 இடங்களையும் ஜெயித்து விட முடியும் என்று கனவு காண்கிறார். அப்படி ஒரு 35 இடங்களையாவது ஜெயிக்கும் பட்சத்தில் மத்திய அரசில் முக்கியமான கட்சியாக வந்து எந்தக் கட்சிக்கும் மெஜாரிடி இல்லாத சூழலில் பிரதமர் பதவியை அடைந்து விடலாம் என்ற கனவில் ஆழ்ந்திருக்கிறார். கனவு காண்பது அவர் உரிமை. ஆனால் கனவுகளில் மிதந்து கொண்டு யதார்த்தத்தை தவற விட்டுக் கொண்டிருக்கிறார்.

இன்று தமிழ் நாட்டில் மோடிக்கு வளர்ந்து வரும் ஆதரவை அவர் சரியாக கணிக்கத் தவறி வருகிறார். மோடியுடனான கூட்டணி நிச்சயமாக 40 இடங்களையும் அவருக்கு பெற்றுத் தரும். பி ஜே பி க்கு ஒரு 5 இடங்களை ஒதுக்கினாலும் கூட அவ்ருக்கு தனியாக அதே 35 இடங்களும் மத்திய ஆளும் கட்சியில் ஒரு முக்கியமான இடமும் கிடைக்கும். அவர் தனியாக நின்று பெறும் இடங்களை விட அதிகமான இடங்களை பி ஜே பி யுடனான கூட்டணியின் மூலமாக அவரால் பெற முடியும் என்பதே இன்றைய யதார்த்த நிலை. ஆனால் அவர் எப்பொழுதும் போலவே நிதர்சனத்தைக் கணிக்கத் தவறி தவறான முடிவு எடுத்து வருகிறார். நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகளைக் கண்டும் அவர் இன்னமும் தனது தப்புக் கணக்கை மாற்றிக் கொண்டதாகத் தெரியவில்லை.

பி ஜே பி யுடன் கூட்டணி வைக்கத் தவறி ஒரு 27 இடங்களைப் பெறும் பட்சத்தில் மத்தியில் பி ஜே பி அரசு அமையும் பட்சத்தில் ஜெயலலிதாவும் தமிழ் நாடும் மீண்டும் மத்திய ஆட்சியில் இருந்து விலகி நிற்க நேரிட்டு தமிழ் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும். மீண்டும் மீண்டும் தன்னை மத்திய அரசியலில் இருந்து அந்நியப் படுத்திக் கொள்ளும் தற்கொலை முடிவுகளையே ஜெயலலிதா எடுத்து வருகிறார்.


பா ஜ க வுடன் கூட்டணி வைத்து மோடி அலையைப் பயன் படுத்திக் கொண்டு ஜெயலலிதா 40 இடங்களை வெல்லும் பட்சத்தில் மத்திய அரசில் முக்கியமான கூட்டணி கட்சியாக இடம் பிடித்து முக்கியமான துறைகளை பெறும் அரியதொரு வாய்ப்பை தன் கனவுகளினால் தவற விட்டு வருகிறார். கூட்டணி வைப்பதன் மூலமாக 35 இடங்களில் வெற்றி பெற்று முக்கியமாக ரெயில்வே, நீர் பாசானம் போன்ற துறைகளைப் பெறுவதன் மூலமாக தமிழ் நாட்டிற்கு பெரும் நிதி ஒதுக்கீடுகளையும் வளர்ச்சித் திட்டங்களையும் அவர் பெற்றுத் தரலாம்.

இன்று தமிழ் நாட்டில் ரயில் திட்டங்களுக்காகவும் நதி நீர் இணைப்புத் திட்டங்களுக்காகவும் முறையான நிதி ஒதுக்கீடு செய்யப் படுவதில்லை. தொடர்ந்து காங்கிரஸ் அரசாங்கம் தமிழ் நாட்டை பழி வாங்கியே வருகிறது. மின்சாரத்தில் தமிழ் நாடும் ஒரு இருண்ட மாநிலமாக இருக்கிறது. விவசாயத்திற்குத் தேவையான நதி நீர் கிடைப்பதில்லை. எந்தவொரு முக்கியமான ரெயில்வே திட்டமும் தமிழ் நாட்டில் நிறைவேற்றப் படுவதேயில்லை. இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க ஜெயலலிதா ,முன் உள்ள ஒரே வழி பி ஜே பியுடன் கூட்டணி வைப்பது மட்டுமே. இந்த நான்கு மாநிலங்கள் சொல்லும் செய்தியை அவர் புரிந்து கொள்ளத் தவறி தனது பிரதமர் கனவில் மிதப்பார் என்றால் உள்ளதும் போய் மீண்டும் மத்திய அரசில் இருந்து விலகி தன்னையும் தன் மாநிலத்தையும் துயரத்துக்குள்ளாக்கி விடுவார். இதைத் த்விர்க்கும் வல்லமை ஜெயலலிதா ஒருவரிடம் ம்ட்டுமே உள்ளது.

ஆனால் அவர் மத்திய அரசியலில் இதுவரை தன் ஆணவத்தினாலும் தவறான கனவுகளினாலும் தனக்கும் மாநிலத்திற்கும் பெரும் அழிவையே தேடித் தந்திருக்கிறார். ஊழல் குடும்பத்தை பி ஜே பி யின் அருகே நெருங்க விடாமல் தடுத்து அடுத்து வரவிருக்கும் பி ஜே பி ஆட்சியில் ஒரு பலமான இடத்தைப் பெறும் சக்தி அவரிடம் மட்டுமே உண்டு. பி ஜே பி உடனான கூட்டணி மட்டுமே அவருக்கும் தமிழ் நாட்டுக்கும் நன்மைகளைக் கொண்ர முடியும் என்பதை அவருக்கு யாராவது எடுத்துச் சொல்ல வேண்டும். சோ சொல்லியிருந்திருப்பார். ஆனால் கேடு காலம் வரும் பொழுது நல்ல அறிவுரைகள் எவர் காதிலும் ஏறுவதில்லை. மீறி அவர் புரிந்து கொண்டு கூட்டணி வைத்தால் அவருக்கும் தமிழ் நாட்டிற்கும் இந்தியாவுக்கும் பெரும் நன்மைகள் விளைவிக்கும்.

மத்தியில் பி ஜே பி மெஜாரிட்டிக்குத் தேவையான இடங்கள் குறையும் பொழுது தான் பேரம் பேசி அப்பொழுது தனக்கு உதவி பிரதமர் பதவி பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணமும் அவருக்கு இருப்பதாகத் தெரிகிறது. ஒரு வேளை பி ஜே பி தனியாகவே 280 இடங்களைப் பெற்று விட்டால் (அதற்கான சாத்தியங்கள் பலமாக உள்ளன) அவர் கனவில் மண் விழுவதுடன் தமிழ் நாட்டு நலன்களும் பாதிக்கப் படும் என்பதை அவர் உணர வேண்டும். தேர்தலுக்கு முன்பாக பி ஜே பியுடன் வைக்கும் கூட்டணியன்றி தேர்தலுக்குப் பின்னால் எதிர்பார்க்கும் கூட்டணிக்கு வைப்பது அவருக்கோ தமிழ் நாட்டுக்கோ எந்தவொரு நன்மையையும் பெற்றுத் தரப் போவதில்லை என்பதை யாராவது அவருக்கு உணர்த்த வேண்டும். தமிழ் நாட்டில் திறமையான மந்திரிகளைத் தேர்ந்தெடுத்து நிர்வாகம் செய்யத் தடுமாறுவது போலவே மத்திய அரசில் இடம் பெறும் வாய்ப்பையும் தன் தடுமாற்றத்தினால் தவற விட்டு வருகிறார்.


அப்படி தமிழ் நாட்டில் பி ஜே பி தனித்து விடப் பட்டு வை கோபாலசாமி மற்றும் ராமதாஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டால் 2 அல்லது 3 இடங்களைப் பெற வாய்ப்புள்ளது. ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தால் அதிக பட்சம் 5 இடங்கள் கிடைக்கும். ஆக தமிழ் நாட்டில் பி ஜே பி இழக்கப் போவது அதிகமில்லை மாறாக கூட்டணி வைக்காமல் போனால் ஜெயலலிதாவும் தமிழ் நாடும் இழக்கப் போவதுதான் அதிகம். ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தால் பி ஜே பி பெறப் போவது அதிகம் ஏதுமில்லை மாறாக ஜெயலலிதாவுக்கும் தமிழ் நாட்டுக்கும் பெரும் நன்மைகள் காத்திருக்கின்றன. ஆகவே பா ஜ க வுடன் கூட்டணி வைக்காமல் போவதினால் ஏற்படும் இழப்பு பி ஜே பி க்கு அல்ல. ஆனால் அதே பி ஜே பி தி மு கவுடன் கூட்டணி வைக்கும் தவறான முடிவை எடுக்கும் பட்சத்தில் தமிழ் நாட்டில் மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவில் ஏற்பட்டுள்ள மோடி அலையில் மிகப் பெரிய ஓட்டையை உருவாக்கி அகில இந்திய அளவில் பெரும் ஓட்டு இழப்புக்கு இட்டுச் சென்று வாராது வந்த மாமணியைத் தோற்கும் நிலைக்குத் தள்ளி விடும். அப்படி மோடிக்கு இருக்கும் வாய்ப்பை தவறான கூட்டணி முடிவுகள் மூலமாக தமிழ் நாட்டு பி ஜே பி தலைவர்கள் துரோகம் செய்து விட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

அதிமுக பி ஜே பியுடன் கூட்டணி வைக்கத் தவறும் பட்சத்தில் பி ஜே பி முன்னால் உள்ள ஒரே தேர்வு தி முக தவிர்த்த பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு டெல்லியில் ஆம் ஆத்மி தனியாக துணிவுடன் எதிர் கொண்டது போல தமிழ் நாட்டு மக்களை எதிர் கொள்வது ஒன்று மட்டுமே. அப்படி தனியாக நிற்கும் பட்சத்தில் தமிழ் நாட்டு மக்கள் நிச்சயமாக ஒரு ஐந்து தொகுதிகளிலாவது வெற்றியை அளிப்பார்கள் என்பது உறுதி. மாறாக ஒரு 10 சீட்டுகளுக்கு ஆசைப் பட்டு தி மு கவுடன் கூடா நட்பை மேற் கொண்டால் ஒட்டு மொத்த இந்தியாவிலும் பெரும் சரிவை பி ஜே பி சந்திக்கு அபாயம் உள்ளது.

பிற மாநில நிலவரங்கள் குறித்து வரும் மாதங்களில் விரிவாகப் பார்க்கலாம்

விஸ்வாமித்ரா

Read More...

Tuesday, December 10, 2013

நான்கு மாநிலத் தேர்தல்களும் நாளைய அரசியலும் - 2 - விஸ்வாமித்ரா

நான்கு மாநிலத் தேர்தல்களிலும் பி ஜே பி யின் வெற்றி மோடி உருவாக்கிய உணர்வலைகளின், எழுச்சியின் விளைவே. மோடியின் தனிப்பட்ட ஆளுமயினால் மட்டுமே ம பி யில் 8% அதிக ஓட்டுக்களும் ராஜஸ்தானில் 12% அதிக ஓட்டுக்களும் சட்டிஸ்கரில் 2% அதிக ஓட்டுக்களும் பெற்று பி ஜே பி வெற்றி பெற்றது. டெல்லியில் பி ஜே பி யின் சதவிகிதம் 2% குறைந்து போனதாகச் சொல்லப் பட்டாலும் மிக அதிக அளவில் 70% வாக்காளர்கள் ஓட்டுப் போட வெளி வந்தது இதுவே முதல் முறை. அது பெரும்பாலும் மோடியால் ஈர்க்கப் பட்ட வாக்கு வங்கியே. ஆனால் இந்தியாவின் ஆங்கில ஊடகங்கள் அனைத்தும் மோடியின் இந்த மாபெரும் சாதனையை, அலையை மறுக்கவே முயன்று கொண்டிருந்தன. மோடி மீதான ஆழமான வெறுப்பு அவர்களது நிகழ்ச்சிகளில் எதிரொலித்தது. மோடியின் தாக்கம் முற்றிலுமாக மறைக்கப் பட்டு தேவையற்ற ஒளி வெள்ளம் ஆம் ஆத்மி மீது மீடியாக்களினால் செலுத்தப் பட்டது. மோடியின் சக்தி ஏற்படுத்திய விளைவுகளை விடவும் அதிகமாக ஊடகங்களினால் கொண்டாடப் பட்டது ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியும் வெற்றியும் மட்டுமே. பி ஜே பி இரு பெரிய மாநிலங்களில் மிகப் பிரமிப்பான வெற்றியை மோடியின் சக்தியினால் பெற்றுள்ளது. ஆனால் அதைப் பற்றி பேச எந்தவொரு பீசெக்குலார் மீடியாவும் திட்டமிட்டு மறந்து விட்டன. அதை ஒரு பெரிய சாதனையாக அவர்கள் கருதாமல் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி குறித்தே முக்கியத்துவம் அளித்தார்கள். ஆம் ஆத்மி கட்சியின் மீதான பாசத்தால் அதை ஊடகங்கள் செய்யவில்லை. மாறாக மோடியின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் விதமாக மட்டுமே ராஜஸ்தான், ம பி வெற்றிகளைப் பற்றி விரிவாக எந்தவொரு சேனலும் பத்திரிகையும் அலசாமல் தவிர்த்து தன்களது காங்கிரஸ் விசுவாசத்தை காட்டிக் கொண்டனர். மோடியின் தாக்கத்தினால் ஏற்பட்ட பி ஜே பி யின் ஓட்டு வளர்ச்சியைப் பற்றி பேசாத அதே ராஜ்தீப்பும், கோஸ்வாமியும், ப்ரோக்கர் பரக்கா தத்தும் காங்கிரஸ் தோல்விக்கு ராகுலைப் பொறுப்பாக்காமல் அவரை பத்திரமாக பாதுகாத்து அவர் மீது எந்தவிதமான விமர்சனங்களும் எழாமல் பாதுகாத்தனர். மொத்தத்தில் மீடியாக்கள் இந்த தேர்தல் முடிவுகளை மிகவும் கேவலமாகவும் ஒரு தலைப் ப்ட்சமாகவும் மோடி எதிர்ப்பாகவும் கையாண்டனர். சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடும் என்று நினைத்துச் செயல் பட்டனர்.



ஆம் ஆத்மி கட்சியின் தற்காலிக வெற்றியை பி ஜே பி உட்பட எந்தவொரு கட்சியும் சரியாக கணிக்கவில்லை என்பதே உண்மை. மோடி மட்டும் டெல்லியில் பிரசாரம் செய்து அதற்கு அணை போட்டிருக்காவிட்டால் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கூடப் பிடித்திருக்கக் கூடும். ஆம் ஆத்மி கட்சிக்கான அடித்தளத்தை ஏற்கனவே அன்னா ஹசாரே பலமாக எழுப்பி வைத்து விட்டுப் போயிருக்கிறார். அவர் ஏற்படுத்திய அடித்தளத்தில் இன்று இந்தக் கட்சியை வலுவாக கேஜ்ரிவால் உருவாக்கிக் கட்டியெழுப்பியுள்ளார். ஆனால் இது இந்திய அரசியலில் முதன் முறை அல்ல. ஏற்கனவே அஸ்ஸாம் கணசங் பரிஷத், வி பி சிங் போன்று ஊழல்களை எதிர்க்கக் கிளம்பி ஊழல் அரசியலிலும் பிரிவினைவாத அரசியலிலும் மூழ்கிப் போன கட்சிகளை இந்தியா பல முறை கண்டுள்ளது. இந்தக் கட்சியும் அப்படி மாறுவதற்கான அறிகுறிகள் இப்பொழுதே தோன்றுகின்றன.

ஆம் ஆத்மி கட்சி தன்னை தூய்மையான கட்சி என்றும் பொது வாழ்வில் நேர்மை, வெளிப்படையான நிலைப்பாடு ஆகியவற்றை போற்றும் கட்சி என்றும் விளம்பரப் படுத்துகிறது. ஆனால் அது பெற்ற நன்கொடைகளுக்கான முறையான கணக்கு வழக்குகளை அது வெளிப்படையாகச் சொல்ல மறுக்கிறது. பாக்கிஸ்தான் உட்பட பல நாடுகளில் இருந்தும் அதற்கு நிதி வந்துள்ளது. முக்கியமாக பிற நாடுகளில் புரட்சியைத் தூண்டி விடும் அமைப்புகள் அதற்கு நிதி அளித்துள்ளன. அன்னா ஹசாரேவும் தன் போராட்டத்தில் திரட்டப் பட்ட நிதியை கேஜ்ரிவால் திருடிக் கொண்டு விட்டதாக புகார் சொல்லியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி வெளிப்படையாகவே சிறுபான்மையினருக்கு சலுகை அளிக்கும், இஸ்லாமிய பயங்கரவாதிகளை ஆதரிக்கும் மதவாத அரசியலைச் செய்து வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ், கம்னியுஸ்டு கட்சிகளுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் எந்தவொரு வித்தியாசமும் கிடையாது. காங்கிரஸ் போலவே இஸ்லாமிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் உறவை வைத்துக் கொண்டுள்ளது அவர்களது ஆதரவைக் கோரியுள்ளது. மதவாத அரசியலில் வேறு எந்தவொரு கட்சியைப் போலவே ஈடுபட்டு வருகிறது ஆம் ஆத்மி கட்சி. ஓட்டுக்காக சிறுபான்மையோருக்கு மட்டும் சலுகை அளிக்கும் அரசியலைச் செய்யும் எந்தவொரு கட்சியும் இறுதியில் ஊழல் கட்சியாக முடிவதே இந்தியாவின் அரசியல் வரலாறு. அதற்கு இந்தக் கட்சியும் விதி விலக்கல்ல என்றே அதன் நடவடிக்கைகளைக் காணும் பொழுது தோன்றுகிறது.

ஆம் ஆத்மியின் முக்கிய தலைவரான பிரசாந்த் பூஷன் காஷ்மீரை பாக்கிஸ்தானுக்கு அளிக்க வேண்டும் என்று பேசி வருபவர். ஹைதராபாத் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்காக ஆஜராகி அவர்களை விடுவிக்கப் போராடி வருபவர். பயங்கரவாதிகளின் வழக்குகளில் ஆஜராவது மூலமாக இஸ்லாமிய ஓட்டுக்களைப் பெற முயற்சிக்கிறார்கள். மேலும் பல்வேறு சந்தேகமான குற்றசாட்டுகளுக்கு உள்ளானவர். மாவோயிஸ்ட்களுடனும் ஆம் ஆத்மி கட்சி தொடர்பு கொண்டு அவர்களது ஆதரவையும் பெற்று வருகிறது இந்த ஆம் ஆத்மி கட்சி. சிறையில் உள்ள இஸ்லாமியக் குற்றவாளிகளை மட்டும் விடுதலை செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சர் உத்தரவிட்ட பொழுது அது குறித்து தன் கருத்தைச் சொல்ல கேஜ்ரிவால் மறுத்து அது போன்ற ஒரு மதவாத உத்தரவுக்கு ஆதரவாகச் செயல் பட்டிருக்கிறார். ஊழல் ஒழிப்பை விட மக்களின் அடிப்படை பாதுகாப்பு முக்கியமானது என்பதை இந்த கட்சியினர் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆக வெளிநாடுகளில் இருந்து சந்தேகமான முறைகளில் நிதி திரட்டுதல். மைனாரிடிகளை மட்டுமே தாஜா செய்யும் அரசியல், இந்திய விரோதப் போக்கு. மாவோயிச ஆதரவு என்று அபாயகரமான ஒரு கட்சியாக ஆம் ஆத்மி கட்சி ஆரம்பம் முதலாகவே வளர்ந்து வருகிறது. இதன் வளர்ச்சி இப்பொழுது டெல்லிக்கும் நாளைய இந்தியாவுக்கும் அபாயகரமானதாகவே முடியும். நேபாளத்தின் மாவோயிஸ்டுகளின் வளர்ச்சிக்கும், அஸ்ஸாமில் ஊழல் கட்சியாக முடிந்த அஸ்ஸாம் கணசங் கட்சிக்கும் இந்தக் கட்சிக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.

டெல்லியின் படித்த நடுத்தர வர்க்க மக்கள் ஊழல் எதிர்ப்பு ஒன்றை மட்டுமே பிரதானமாகக் கருதி இந்தக் கட்சியை வளர்த்து விடுகிறார்கள். பெரும்பாலான படித்த நடுத்தரவர்க்கத்தினரிடமும் இடது சாரி கொள்கைகளினால் மூளைச் செய்யப் பட்டு மனநோயாளிகளாக மாறியவர்களிடமும் பி ஜே பி மீது ஒரு விதமான ஆழமான வெறுப்பை நம் ஊடகங்கள் உருவாக்கியுள்ளன. அப்படியான வாக்காளர்களுக்கு இந்த ஆம் ஆத்மி கட்சி ஒரு மதவாதம் இல்லாத நேர்மையான கட்சியாகவும் தங்களின் கவுரவத்திற்கு ஏற்றவொரு கட்சியாகவும் தோற்றமளித்து கவர்ந்து விட்டிருக்கிறது. ஆனால் இந்தக் கவர்ச்சியை அதனால் அதிக நாட்கள் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்பதையே அதன் சந்தேகமான நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. ஊழலில்லாத நேர்மையான ஆட்சி ஒரு நாட்டிற்கும் மாநிலத்திற்கும் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு வளர்ச்சித் திட்டங்களும் மிக முக்கியமானவை. ஆனால் போராட்டங்களுக்கும் ஊழல் ஒழிப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் ஆம் ஆத்மி கட்சி டெல்லிக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து எதையும் அதிகமாகப் பேசவில்லை. டெல்லியின் மாபெரும் சாக்கடையாக மாறி விட்ட யமுனை நதியைச் சுத்தப் படுத்துவது குறித்தோ அதன் சேரிப் பகுதிகளை சீரமைப்பது குறித்தோ அதன் போக்குவரத்து பிரச்சினைகள் குறித்தோ அதிகமாக அலட்டிக் கொள்ளவில்லை.

ஆகவே ஆம் ஆத்மி கட்சியின் இந்த வளர்ச்சி ஒரு தற்காலிகமான நீர்க்குமிழி வளர்சியாக மட்டுமே இருக்கப் போகிறது. டெல்லி பெரும்பாலும் படித்த நகர்ப்புற வாக்களர்களினால் ஆன ஒரு மாநிலம். ஆனால் இந்தியாவின் பிற மாநிலங்கள் அனைத்து பெரும்பாலும் கிராமப் புறங்களினால் ஆனவை. அங்கு கட்சியைக் கட்டி எழுப்பக் கூடிய அடிப்படை தொண்டர்களும் கட்டுமானங்களும் இந்த ஆம் ஆத்மி கட்சியிடம் கிடையாது. டெல்லி போன்ற ஒரு சில நகர்ப்புறங்களில் சில தாக்கங்களை இந்தக் கட்சியினால் எழுப்ப முடியும். நகர்ப்புற வாக்காளர்களின் பொதுப் புத்தியைப் பயன் படுத்தி 28 இடங்களில் ஜெயித்தும் விட்டிருக்கிறார்கள். அவர்கள் உண்மையாகவே நாட்டின் மீது அக்கறை உள்ளவர்களான ஒரு கட்சி என்றால் அவர்கள் செய்ய வேண்டியதும் கூடியதும் என்னவாக இருக்க வேண்டும்?

டெல்லில் ஏற்கனவே பா ஜ க அதிக இடங்களைப் பெற்று 32 சீட்டுகளுடன் முன்ணணியில் இருக்கின்றது. அது மக்கள் அளித்துள்ள தீர்ப்பு. மேலும் ஒரு 7 இடங்களில் நூறு ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது. ஆகவே மக்களின் ஆதரவினைப் பெற்ற கட்சியும் ஆட்சி அமைக்க அருகதையுள்ள கட்சியாகவும் பி ஜே பி வந்துள்ளது. அப்படியானவொரு நிலையில் ஆம் ஆத்மி கட்சி பி ஜே பி கட்சியை ஆட்சி அமைக்க அனுமதிப்பதே டெல்லியின் மீது அக்கறையுள்ள ஒரு கட்சி செய்யும் செயலாக இருக்க முடியும்.

மாறாக பி ஜே பி ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சி அனுமதிக்க மறுக்குமானால் எந்தவொரு கட்சியும் ஆட்சியை பிடிக்க முடியாத நிலை ஏற்படும். அதன் விளைவாக டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி கொணரப் படும். ஜனாதிபதி ஆட்சி என்பது டெல்லியின் லெஃப்டினண்ட் கவர்னரின் தலைமையில் மத்திய அரசை ஆட்சி செய்யும் காங்கிரஸின் நேரடி ஆட்சியாகவே இருக்கும். ஆக மக்களால் அனேகமாக பெருவாரியான இடங்களில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஒரு கட்சியின் உரிமையை மறுப்பதன் மூலமாக ஆம் ஆத்மி கட்சி கொல்லைப் புற வழியாக காங்கிரஸ் ஆட்சிக்கே வழி வகுக்கிறது. இது ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸின் முகமூடி கட்சி., பினாமி கட்சி என்ற குற்றசாட்டை வலுவாக்குகிறது.

ஆம் ஆத்மி கட்சியின் இந்த பிடிவாதத்தினால் ஆறு மாதங்கள் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்ய இடம் ஏற்படுத்தித் தந்து மறைமுகமாக காங்கிரஸ் கட்சிக்கு உதவி செய்கிறது. மேலும் மறு தேர்தல் நடத்துவதன் மூலமாக பல கோடி வீண் செலவுக்கு நிர்பந்திக்கிறது. ஊழலை ஒழிப்பதற்காகக் கிளம்பிய கட்சி பொது மக்களின் வரிப்பணத்தை வீணாகச் செலவு செய்ய கட்டாயப் படுத்துகிறது. வீணாக ஒரு தேர்தல் நடத்தக் கட்டாயப் படுத்துவதும் ஒரு வகையில் பொது ம்க்களின் வரிப்பணத்தின் மீதான அநாவசிய செலவுதானே? ஊழலினால் விரையமாகும் வரிப்பணத்திற்கும் இதற்கு என்ன வித்தியாசம் ? இதுதான் நேர்மையான ஆட்சியைத் தரப் போகும் கட்சியின் லட்சணமா?


ஆம் ஆத்மியின் தலைவர் கேஜ்ரிவால் 100 கோடிகள் செலவானாலும் பரவாயில்லை மறு தேர்தல் நடத்தப் பட வேண்டும் என்று எந்தவிதமான பொறுப்பும் இல்லாமல் பேசியுள்ளார். சரி மறு தேர்தல் நடத்தி அதன் முடிவுகளும் இது போலவே வந்தால் மீண்டும் ஒரு தேர்தலைக் கோருவாரா? இவர் ஊழல் ஒழிப்பின் மூலமாகச் சேமிக்கப் போகும் பணத்தை விட இந்த தேர்தல் செலவு பெரும் விரயம் அல்லவா? இன்று 100 கோடி செலவு ஒரு பொருட்டில்லை என்று சொல்பவர் தன் வெற்றிக்காக எதையுமே ஒரு பொருட்டாக மதிக்காமல் போகலாம் அல்லவா? ஆணவத்தின் உச்சமான பேச்சு அது.


டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி என்ன செய்திருக்க வேண்டும்?


உண்மையாகவே பொது மக்களின் வரிப்பணத்தின் மீது அக்கறையுள்ள கட்சியாக ஆம் ஆத்மி கட்சி இருக்குமானால் அது ஏற்கனவே ஒரு சீட் குறைவாக இருக்கும் பா ஜ க வை ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும். அதன் பின்னால் தங்களது கொள்கைகளை பா ஜ க மூலமாக நிறைவேற்ற முயல வேண்டும். ஒரு வேளை பா ஜ க ஊழல் செய்தாலோ தவறிழைத்தாலோ ஆம் ஆத்மி கட்சியின் பிரதான நியாயமான கொள்கைகளை செயல் படுத்த மறுத்தாலோ அப்பொழுது அதன் ஆதரவை விலக்கிக் கொள்வதே நேர்மையான யோக்கியமான மக்கள் நலனில் அக்கறையுள்ள ஊழலை எதிர்க்கும் ஒரு கட்சியின் செயல்பாடாக இருக்கும். ஆனால் அதையெல்லாம் பயங்கரவாதிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு வெளிநாடுகளில் நிதி திரட்டும் ஒரு கட்சியிடம் நாம் எதிர்பார்க்க முடியாது.

மறு தேர்தல் நடத்தும் நிலைக்கு ஆம் ஆத்மி கட்சி தள்ளியுள்ளது. இதனால் ஏற்படப் போகும் பல நூறு கோடிகளுக்கான செலவுக்கும் அவர்களே பொறுப்பேற்க வேண்டும். மேலும் இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸின் ஊழல் ஆட்சி தொடரப் போகிறது அதற்கான விலையையும் இந்த ஆம் ஆத்மி கட்சியே கொடுக்க வேண்டி வரும். ஆகவே இப்பொழுதைக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியின் சதியாலோசனைகளின் படி மீண்டும் டெல்லியின் ஆட்சி காங்கிரஸ் கட்சியிடமே ஒப்படைக்கப் படவிருக்கிறது. இது பொறுப்பற்றதனத்தின் உச்சம். மக்களின் தீர்ப்பை மதிக்காத ஆணவப் போக்கு மட்டுமே. மறு தேர்தல் நடத்தி அநாவசிய செலவுகளுக்கு தள்ளிய குற்றத்துக்காகவும் காங்கிரஸுடம் மறைமுக கூட்டணி வைத்துக் கொண்டு மீண்டும் காங்கிரஸ் ஆட்சியையே உப கவர்னர் மூலமாகத் தொடர அனுமதித்த குற்றத்திற்காகவும் அடுத்த ஆறு மாதங்களில் இந்தக் கட்சி கடுமையான விலையைக் கொடுக்கப் போகிறது.

டெல்லியில் பி ஜே பி என்ன செய்ய வேண்டும்?


பி ஜே பிக்கு அதிக எண்ணிக்கையை மக்கள் வழங்கியுள்ளார்கள். அதைக் கொண்டு ஆட்சி அமைக்க உரிமை கோர வேண்டும். அவர்கள் ஆம் ஆத்மி கட்சியால் தோற்கடிக்கப் படுவார்கள். அதன் மூலமாக ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பற்றத்தனத்தை மக்களிடம் விளக்கலாம். அனுதாப அலையை உருவாக்கலாம். பதவியேற்க முன் வராமல் இருப்பது நல்ல முடிவு அல்ல. ஆம் ஆத்மி கட்சி உண்மையாகவே மாநில நலனுக்கான கட்சி அல்ல அது மறு தேர்தல் மூலம் சில நூறு கோடி செலவுகளை விரயமாக்கப் போகிறது என்பதை வெளிக்காட்ட ஆட்சி அமைக்கக் கோருவது அவசியமானது. இதை பி ஜே பி கவனமாகக் கையாள வேண்டும்.

அடுத்த ஆறு மாதங்களில் தேர்தல் வரும் பொழுது அதற்குள்ளாக பா ஜ க தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். நல்ல வேட்ப்பாளர்களை நிறுத்த வேண்டும். ஹர்ஷ வர்த்தன் மக்களுடன் தன் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆம் ஆத்மி கட்சியின் மறைமுகமான காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டை மக்களிடம் விளக்க வேண்டும். தோல்வி அடைந்த ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்காளர்களை நேரடியாக சந்தித்து ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பற்றதனத்தினால் ஏற்படும் செலவு குறித்தும் காங்கிரஸ் ஆட்சி தொடர்வது குறித்தும் விரிவாக விளக்க வேண்டும். ஒவ்வொரு வார்டு வாரியாக கட்சியை வலுப்படுத்த வேண்டும். மேலும் மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வரும் பொழுது அதே கட்சி டெல்லி மாநிலத்திலும் இருந்தால் மட்டுமே அதன் முழுமையான வளர்ச்சி சாத்தியம் என்பதை விளக்க வேண்டும். குறைந்த வாக்கு வித்தியாசங்களில் தோற்ற இடங்களில் அதிக பட்ச முனைப்பைக் காட்ட வேண்டும். டெல்லிக்கு மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிக்கு வருவதன் மூலமாக என்னென்னெ திட்டங்களைச் செய்யப் போகிறோம் என்பதை பவர் பாய்ண்ட் பிரசெண்ட்டேஷன் மூலமாக தெருமுனைகளில் விளக்க வேண்டும். அப்படிச் செய்தால் ஆறு மாதம் கழித்து வரவிருக்கும் மறு தேர்தலில் பி ஜே பி முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடிக்க வழியிருக்கிறது. இந்தத் தேர்தலில் பி ஜே பி பல தவறுகளைச் செய்திருக்கிறது. மோடி அலை மட்டும் இல்லாமல் போயிருந்தால் 20 சீட்டுக்களைக் கூட அது பெற்றிருந்திருக்காது. சரியான வேட்ப்பாளர்களை தேர்வு செய்யவில்லை.முதல்வர் வேட்ப்பாளரை முன் கூட்டியே அறிவிக்கவில்லை. டெல்லி தலைவர்கள் முழு முனைப்புடன் வேலை செய்யவில்லை. இந்த்க் குறைகளையெல்லாம் அடுத்த ஆறு மாதங்களில் களைந்து கொண்டால் நிச்சயமாக 50 இடங்களுக்கும் மேலாக பெற்று பெரு வெற்றி அடைய முடியும். அந்த இலக்கு நோக்கி அவர்கள் நகர இந்த கால அவகாசம் உறுதுணையாக இருக்கும். அது வரை ஆம் ஆத்மி கட்சியின் மறைமுக ஒத்துழைப்புடனும் துரோகத்துடனும் காங்கிரஸ் கட்சியே டெல்லியில் தன் ஆட்சியைத் தொடரப் போகிறது. அதற்கான முழு பொறுப்பும் ஆம் ஆத்மி கட்சியையே சாரும். மக்கள் நலனில் அக்க்றையுள்ள உழல் காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொள்ளும் ஒரு கட்சி செய்யக் கூடிய காரியம் அல்ல அது.

மேலும் 6 மாதங்களுக்குப் பிறகு மத்திய தேர்தலுடன் மாநில தேர்தல் நடைபெறும் பொழுது மக்கள் மோடிக்கான ஆதரவுடன் பி ஜே பி யை முழு மெஜாரிட்டியுடன் டெல்லியில் ஆட்சியில் அமர்த்துவார்கள். அதுவரை ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸுடனான தன் கள்ளக் காதலைத் தொடரட்டும் அதை பி ஜே பி மக்களிடம் வெளிச்சம் போட்டுக் காட்டட்டும்.



Read More...

Monday, December 09, 2013

நான்கு மாநிலத் தேர்தல்களும் நாளைய அரசியலும் - 1 - விஸ்வாமித்ரா

கிட்டத்தட்ட ஒரு சாம்ப்பிள் பொதுத் தேர்தல் என்ற அளவில் இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. ஒவ்வொரு முறையும் வரவிருக்கும் பாராளுமன்றப் பொதுத் தேர்தல்களுக்கு ஒரு ஆறு மாதங்களுக்கு முன்னால் சில மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல்களின் முடிவைக் கணிக்கும் ஒரு முன்னெச்சரிக்கைத் தேர்தல்களாக அமைகின்றன. ஆனால் முந்தயத் தேர்தல்களை விட இந்த முறை இந்த சட்டசபைத் தேர்தல்கள் பெருத்த எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தின. அதன் காரணம் மோடி என்னும் ஒரு விதி சமைப்பவரின் வருகை. இந்தத் தொடரில் நான்கு மாநிலத் தேர்தல்களில் மோடி ஏற்படுத்திய தாக்கம், ஆம் ஆத்மியின் பங்கு, வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இந்த முடிவுகள் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள், தமிழ் நாட்டில் உருவாக வேண்டிய கூட்டணிகள் ஆகியவை குறித்து ஒரு விரிவான பார்வையை இந்த கட்டுரை அளிக்கவுள்ளது






இந்த நான்கு மாநிலத் தேர்தல்களில் பி ஜே பியின் வெற்றியில் மோடியின் பங்கு என்ன?



மோடியின் செல்வாக்கு குஜராத்தில் மட்டுமே செல்லுபடியாகும். மோடியினால் குஜராத்துக்கு வெளியே பெருத்த ஆதரவு அலையை பி ஜே பிக்கு உருவாக்க முடியாது. மோடிக்கு எந்தவிதமான செல்வாக்கும் கிடையாது அவர் ஒரு வெத்து வேட்டு மட்டுமே. மோடி சொல்லி பிற மாநில சட்டமன்றத் தேர்தல்களில் எந்தவிதமான மாற்றமும் வந்து விடப் போவதில்லை. மோடி அலை என்று எதுவும் கிடையவே கிடையாது என்று தொடர்ந்து காங்கிரஸின் பிரசார ஏஜெண்டுகளாகச் செயல் பட்டு வரும் ஊடகங்கள் ஊளையிட்டுக் கொண்டிருந்தன. மோடி அலை எதுவும் வீசவில்லை என்று மீண்டும் மீண்டும் பொய்களைச் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள் சில அஞ்ஞாநிகள்.

இதற்கு முன்பாக நடந்த பல தேர்தல்களில் மோடி பிரசாரம் செய்தும் பெரிய மாற்றம் எதையும் அவர் ஏற்படுத்தியிராததும் உண்மையே. ஆனால் இப்பொழுது மோடியை பா ஜ க தன் பிரதமர் வேட்ப்பாளராக அறிவித்துள்ள நிலையில் அவர் மீது நாடு முழுவதும் மக்களுக்கு ஆர்வமும் மரியாதையும் பெருத்த அளவில் உருவான நிலையில் இந்த மாநிலத் தேர்த்ல்கள் மிக முக்கியமாக அவதானிக்கப் பட்டன. இந்த மாநிலத் தேர்தல்கள் மோடியின் செல்வாக்கினை கணிக்கும் ஒரு பாரோ மீட்டராகவே கருதப் பட்டது. ஆக வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல்களில் இந்த சட்டசபைத் தேர்தல்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை விட மோடி ஏற்படுத்தவிருக்கும் தாக்கத்தை அளவிடும் ஒரு கருவியாகவே இந்தத் தேர்தல்கள் கருதப் பட்டன. மோடிக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அன்னா ஹசாராவினால் ஏற்படுத்தப் பட்ட ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் அரசியல் வடிவம் எந்த அளவில் நகர்ப்புற மாநிலமான டெல்லியில் தன் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை அளவிடும் தருணமாகவும் இந்தத் தேர்தல் அமைந்து விட்டபடியால் இந்தத் தேர்தல்கள் ஒரு முக்கியமான அளவீட்டுத் தேர்தலாக மாறி விட்டன.

பல்வேறு விதமான தேர்தல் கணிப்புகளின் படியே முடிவுகளும் வந்துள்ளன. இந்தத் தேர்தல்களில் மோடியின் பங்கும் அவரது பலத்த தாக்கமும் பா ஜ கவின் வெற்றிகளுக்கு ஆதாரமானவையாக இருந்தன. இதை அரசியல் அறிவு இல்லாத மூடர்களினால் மட்டுமே மறுக்க முடியும்.

மோடி அலை உண்மையா?:

இந்தத் தேர்தல்களில் மோடி அலை இருந்ததா? அதனால் பெருத்த மாறுதல்கள் நிகழ்ந்தனவா? மோடியினால் பா ஜ க வுக்கு பெருத்த ஆதரவினைத் திரட்ட முடிந்ததா?

இந்தக் கேள்விகளுக்கு காங்கிரஸ் ஆதரவு மீடியாக்களும் காங்கிரஸ் இடதுசாரி ஆதரவாளர்களும் ”நிச்சயம் இல்லை” என்று பதில் சொல்கிறார்கள். இது கண் முன்னே வீசிக் கொண்டிருக்கும் ஒரு சுனாமியை அதன் மையத்தில் நின்று கொண்டு காண மறுத்து அப்படி எதுவுமே நடக்கவில்லையென்று சொல்லும் புரட்டு, தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் மோசடி மட்டுமே. மோடி விளைவு இந்தத் தேர்தல்களில் பெரும் அளவு இருந்தது என்பதே அசைக்க முடியாத ஆணித்தரமான உண்மை.

மிசோரம் தவிர்த்து பிற நான்கு மாநிலங்களில் மோடி செப்டம்பர் மாதம் துவங்கி தேர்தலுக்கு முதல் நாள் வரை ஓய்வின்றி சூறாவளி பிரசாரங்கள் செய்து வந்தார். டெல்லியில் துவங்கி போபால் ஆஜ்மீர் என்று அவரது ஒவ்வொரு கூட்டங்களுக்கும் லட்சக்கணக்கில் மக்கள் அலை அலையாக வரத் துவங்கினார்கள். டெல்லியில் நடந்த அவரது பிரமாண்டமான கூட்டமும் போபாலில் நடந்த அவரது கின்னஸ் சாதனையேற்படுத்திய கூட்டமுமே வரவிருக்கும் தேர்தல்களின் முடிவினைச் சொல்லி விட்டன. மத்திய பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் அவருக்கு கூடிய கூட்டங்கள் அங்கு பா ஜ க பெரும் வெற்றியை அசுர வெற்றியை வரலாற்று வெற்றியை பெறப் போகின்றது என்பதை உறுதியாகச் சொல்லின. ஆக மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் பா ஜ க பெற்ற வெற்றியின் அளவு மிகப் பிருமாண்டமான வெற்றியின் பின்னால் மோடி என்னும் ஒரு சக்தி இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை

டெல்லியைப் பொருத்தவரை எப்பொழுதுமே பா ஜ க வுக்கு எளிதான வெற்றி அமைந்தது கிடையாது. இழுபறி அல்லது தோல்வி என்பதாகவே இருக்கும். அதிலும் இந்த முறை ஆளும் கட்சியின் மெகா ஊழல்களையும் செயலின்மைகளையும் கற்பழிப்புகளையும் அதனால் மக்களிடம் ஏற்பட்ட கடும் எதிர்ப்பையும் பகிர்ந்து கொள்ள அன்னா ஹசாரே துவக்கிய இயக்கத்தின் அரசியல் பிரிவான ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே பெரும் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்திருந்தது. பா ஜ க கட்ச்யின் முதல்வர் வேட்ப்பாளர் யார் என்பதை கடைசி வரையிலும் அந்தக் கட்சி அறிவிக்கவில்லை. உள்கட்சி குழப்பங்கள் நிலவி வந்தன. கிட்டத்தட்ட டெல்லி சட்டசபை தேர்தலை அந்தக் கட்சி கை கழுவி விட்டிருந்த நிலையில் மோடியின் வருகை பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தியது. அதிகம் பிரபலமாகாத முதல்வர் வேட்ப்பாளரும், உரிய முனைப்பும் தயாரிப்பும் இல்லாமையும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு நவீன எதிர்கட்ச்சியையும் மீறி பா ஜ க இந்த அளவு வாக்குகளைப் பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவானதன் ஒரே காரணம் மோடி ஏற்படுத்திய தாக்கம் மட்டுமே என்பது உறுதி. மோடியின் பிரசாரம் டெல்லியில் இல்லாமல் போயிருக்குமானால் பா ஜ க ஒரு 25 சீட்டுகளுடன் வழக்கம் போலவே தேங்கிப் போயிருந்திருக்கும். மோடியின் அலை அந்தக் கட்சியை அங்கு பிரதான கட்சியாக முன்னிறுத்தியது என்பதே உண்மை நிலவரம். டெல்லியில் ராகுலின் கூட்டத்திற்கு எவரும் வரவில்லை. காசு கொடுத்து அழைத்து வந்தவர்களும் அவர் பேச ஆரம்பித்தவுடன் கலைந்து சென்றனர். மோசமான கூட்டங்களைக் கண்டு சோனியா, ராகுல், மன்மோகன் ஆகியோரது பொதுக் கூட்டங்கள் ரத்து செய்யப் பட்டன. மாறாக அங்கு நடந்த ஒவ்வொரு மோடியின் பொதுக் கூட்டத்திற்கும் மைதானங்கள் நிரம்பி வழிந்தன. முதல் கூட்டத்திலேயே 3 லட்சத்திற்கும் மேலானோர் மோடியைக் கேட்க்கக் கூடினார்கள். டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்கக் கூட்டங்களுக்குக் கூடிய அளவில் மோடிக்காக மட்டுமே மக்கள் லட்சக்கணக்கில் குவிந்தனர். அப்பொழுதே டெல்லியில் பா ஜ க வின் வெற்றிக்கான அடித்தளம் இடப் பட்டது. இருந்தாலும் அந்த அலை ஆம் ஆத்மி கட்சியின் புது செல்வாக்கால் லேசாக தடுத்து நிறுத்தப் பட்டது. மோடியின் பிரசாரம் இல்லாமல் இருந்திருந்தால் பி ஜே பி தனிப் பட்ட பெரும்பான்மை கட்சியாக அங்கு உருவாகியிருக்காது என்பதே உண்மை நிலவரம்.

அடுத்தாக மத்திய பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் மோடி ஏற்படுத்திய தாக்கம். ராஜஸ்தானைப் பொருத்தவரை அங்கு ஆட்சி செய்த அஷோக் ஜெலோட் மீது பெரிய அளவிலான அதிருப்தி ஏதும் இல்லாமல் இருந்தது. இருந்தாலும் அங்கு வழக்கமாக நிகழும் ஆட்சி மாற்றம் போலவே இந்த முறையும் நிகழ்ந்து பி ஜே பி தான் வழக்கமாகப் பெறும் நூற்றிச் சொச்ச இடங்களைப் பெற்று ஜெயித்திருக்கும். ஆனால் அங்கு மோடிக்குக் கிடைத்த வரவேற்பும் அவர் சென்றவிடமெல்லாம் கூடிய கூட்டமும் ஆரவாரமும் மக்களின் ஏகோபித்த ஆதரவும் அங்கு ஒரு பெரும் மோடி ஆதரவு சூறாவளியை பெரும் ஆழிப் பேரலையை அங்கு உருவாக்கி ராஜஸ்தான் மாநில வரலாற்றில் என்றும் இல்லாத அளவு எந்தவொரு கட்சியும் இது வரைப் பெற்றிராத அளவு 199க்கு 162 இடங்களைப் பெற்று காங்கிரஸ் கட்சியை இருந்த இடம் தெரியாமல் ஆக்கியுள்ளது. மோடியின் தொடர் பிரசாரங்களும் அவர் ஏற்படுத்திய கடுமையான தாக்கமும் மட்டுமே பி ஜே பி க்கு இந்த பிருமாண்டமான ஆதரவு அலையை அங்கு உருவாக்கியுள்ளது. இதை வெளிப்படையாக ராஜஸ்தான் முதல்வராகப் போகும் விஜயராஜே சிந்தியா ஒத்துக் கொண்டுள்ளார். ஆக மோடி அலை டெல்லியை விட ராஜஸ்தானில் பெரும் அளவில் வீசியுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி என்னும் தடுப்பையும் மீறி வீசிய அந்த அலை ராஜஸ்தானில் அது போலவே உருவான மீனா மக்களின் கட்சியையும் காங்கிரஸ் கட்சியையும் சுத்தமாகத் துடைத்தழித்துள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் பா ஜ கவின் வெற்றி அதன் முதல்வரின் ஆளுமையினாலும் அவரது எளிமையான பண்பினாலும் ஓரளவுக்குத் திருப்தியாக அளித்த ஆட்சியினாலும் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவினையும் பெற்று ஏற்கனவே உறுதி செய்யப் பட்டிருந்த ஒன்று. ஆனால் அங்கு போபால் நகரில் மோடியின் பேச்சைக் கேட்ப்பதற்காக கிராமப் புறங்களில் இருந்தெல்லாம் கிளம்பி கிட்ட்டத்தட்ட 7 லட்சம் மக்கள் கூடியிருந்தார்கள். கின்னஸ் சாதனையாக அந்தக் கூட்டம் பேசப் பட்டது. அந்தக் கூட்டத்தில் மோடிக்கு ஏற்பட்ட்ட எழுச்சிமிகு ஆதரவினைக் காணும் பொழுதே இந்த முறை அங்கு பி ஜே பி யின் வெற்றி வழக்கமான சாதாரண வெற்றியாக இருக்கப் போவதில்லை என்பது உறுதி செய்யப் பட்டது. எதிர்பார்த்தது போலவே மோடிப் பேரலை அங்கும் தன் தாக்கத்தை அழுத்தமாகப் பதிவு செய்து மிகப் பெரும் வெற்றியை அங்கு பா ஜ க பெற்றுள்ளது. 230 இடங்களில் 165 இடங்களை பி ஜே பி அங்கு பிடித்துள்ளது. மோடியின் பிரசாரம் அங்கு நடந்திருக்காவிட்டால் குறைந்த அளவிலான ஆளும் கட்சி எதிர்ப்புகளும் பெரும் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லாமையும் அங்கு பி ஜே பி க்கு வழக்கமான 120 இடங்களைப் பெற்றுத் தந்து ஒரு சாதாரண வெற்றியாக இருந்திருக்கும் ஆனால் அங்கு வீசிய மோடி அலை அந்த வெற்றியை 165 இடங்களுக்குக் கொண்டு சென்றுள்ளது. ஆக மத்தியப் பிரதேசத்திலும் கூட மோடியின் அலை எந்தவிதமான எதிர்ப்பையும் மீறி மிகப் பலமான ஒரு புயலாக வீசியுள்ளது உண்மை.

சட்டிஸ்கர் மாநிலத்தின் நிலவரம் வேறு விதமானது. அங்கு பெரும்பகுதியான தொகுதிகள் பழங்குடியினர்களும், காடுகளுக்குள் மறைந்த தொலைதூர கிராமப்புறங்களினாலனவை. அங்கு மோடி, சோனியா, ராகுல் போன்ற எவரையும் அங்குள்ள கிராமப்புறப் பகுதியினருக்குத் தெரியாது. மாவோயிஸ்டுகளின் ஆக்ரமிப்புகளில் உள்ள பெரும்பாலான தொகுதிகளுக்கு பிரசாரம் செய்யக் கூடச் செல்ல முடியாத சூழல் நிலவும் ஒரு மாநிலம். மாவோயிஸ்டுகளின் பயங்கரவாதத் தாக்குதல்களையும் பழங்குடியினரை மதம் மாற்றம் செய்யும் கிறிஸ்துவ மிஷனரிகளின் செல்வாக்க்கையும், சுரங்க மாஃபியாக்களின் அச்சுறுத்தல்களையும், காங்கிரஸ் கட்சியின் கடும் எதிர்ப்பையும் மத்திய அரசின் ஆதரவின்மையையும் மீறி ஒரு கடுமையான சூழலில் கடந்த இரு தேர்தல்களில் வென்று தன்னால் இயன்ற வரை கூடுமானவரை நல்லதொரு ஆட்சியை நேர்மையாக வழங்க முயற்சித்து வருகிறார் முதல்வர் ரமன் சிங். அங்கு அவருக்கு காங்கிரஸ் கட்சியும் அதன் ஊழல் மிகுந்த தலைவரான அஜித் ஜோகியும் பெரும் எதிர்ப்பை வழங்கிய எதிர்க்கட்சி என்றால் மறைமுகமாக நான்கு எதிரிகளை அவர் எதிர் கொண்டு ஆட்சி செலுத்த வேண்டிய நிலையில் இருந்து வந்தார். இருந்தாலும் தன் ஆட்சிக்கு உட்பட்டு மக்களுக்குச் செல்ல வேண்டிய பொது வினியோகத்தை ஊழல் இல்லாமல் திறம்பட நிர்வாகித்ததினாலும் நக்சல் பிடிகளில் இல்லாத இடங்களில் ஓரளவு வளர்ச்சிகளை ஏற்படுத்தியதினாலும் தன் செல்வாக்கை தக்க வைத்திருந்தார். ஆனால் மாவோயிஸ்டுகளின் கொடூரமான தாக்குதல்களினால் ஏராளமான காங்கிரஸ்காரர்கள் கொல்லப் பட்டிருந்த நிலையில் அவர் ஏற்கனவே எதிர் கொண்டு வந்த ஐந்து எதிர்ப்பு சக்திகளையும் மீறி ஆறாவதாக காங்கிரஸ் மீதான அனுதாப அலை என்ற ஒரு எதிர் சக்தியையும் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. அந்த நிலையில் அவருக்குக் கை கொடுத்த ஒரே வெளி ஆதரவு மோடி ஏற்படுத்திய ஆதரவு அலை மட்டுமே. அதுவுமே சட்டிஸ்கரின் சிறு நகரங்களில் மட்டுமே மோடியின் ஆதரவு அலை செல்லுபடியானது. அங்கு மோடியினால் அதிகம் ஊடுருவ முடியவில்லை. இருந்த போதிலும் மோடியின் அலையும் பிரசாரமும் இல்லாமல் போயிருந்தால் அங்கு வீசிய அனுதாப அலையில் காங்கிரஸிடம் ரமன் சிங் தோல்வியைத் தழுவியிருந்திருப்பார். மோடியின் அலை குறைந்த பட்ச தாக்கத்தை ஏற்படுத்தியது சட்டிஸ்கர் மாநிலத்தில் மட்டுமே. ரமன் சிங்கின் நூலிழை வெற்றிக்கு அந்த குறைந்த பட்ச அலை நிச்சயம் உதவியாகவே இருந்தது

டெல்லியில் பி ஜே பி யின் வாக்கு வங்கி 3% குறைந்திருப்பதாக வல்லுனர்கள் சொல்வார்கள். மேலும் பிற மாநிலங்களிலும் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கவில்லையென்றும் ஆதலால் மோடி விளைவு ஏதும் இல்லை என்றும் இந்தக் கணிதப் புலிகள் சாதிப்பார்கள். உண்மை என்னவென்றால் அனைத்து மாநிலங்களிலும் ஓட்டுப் போட்டவர்களின் சதவிகிதம் அதிகரித்துள்ளது. அந்த அளவுக்கு மக்களைப் பெரும் அளவில் வாக்குச் சாவடிகளுக்குக் கொண்டு வந்தது எது என்பதை இவர்கள் பேச மாட்டார்கள். பெரும்பாலும் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று ஓட்டுப் போட ஆர்வம் இல்லாத மக்களையும் கூட பெரும் அளவில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஓட்டுப் போட வைத்தது மோடி என்னும் மகத்தான ஆளுமையும் அவர் உருவாக்கிய உத்வேகமும் மட்டுமே. மோடி அலை உருவாகாமல் இருந்திருந்தால் அவர் ஏற்படுத்திய மகத்தான எழுச்சி உருவாகாமல் இருந்திருந்தால் 70% அளவுக்கு மக்கள் பெரும் அளவு திரண்டு ஓட்டுப் போட்டிருக்க வாய்ப்பில்லை. ஆகவே வெறும் புள்ளி விபரக் கணக்குகளுடன் நின்று விடாமல் ஒட்டு மொத்த வாக்காளர்களின் சதவிகிதத்தையும் சேர்த்து நோக்க வேண்டும்.

பா ஜ கவுக்கு ஏற்கனவே இருந்த சட்டமன்ற உருப்பினர்கள் 142 பேர்கள். இந்தத் தேர்தல்களில் மூலமாக அதன் எண்ணிக்கை 212 பேர்களாக அதிகரித்துள்ளது. 71 சதவிகிதம் கூடியுள்ளது. இது மோடி அலை இல்லாவிட்டால் எது மோடி அலை? கண்ணிருப்பவர்கள் காணட்டும் காதிருப்பவர்கள் கேட்க்கட்டும் மனம் இருப்பவர்கள் உணரட்டும்

தொடரும்...

Read More...

Sunday, December 08, 2013

டெல்லி தேர்தல் நிலவரம்





Read More...

Friday, December 06, 2013

ஏ.கே. கங்குலி

தினமும் டீசல், பெட்ரோல் விலை உயர்வு என்ற செய்திகள் மாதிரி பாலியல் குற்றமும் இப்போது அடிக்கடி வருகிறது.

இணைய தள பிளாக்கில் அவர் எழுதிய கட்டுரையில் நீதிபதியின் பெயரை குறிப்பிடாமல் அவர் இந்த சம்பவம் பற்றி எழுதியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட குழுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் அமைத்தார்.

அந்த குழு பெண் பயிற்சி வழக்குரைஞரிடம் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. கங்குலி நடந்துகொண்ட விதம் பாலியல் ரீதியானதுதான் என உச்ச நீதிமன்ற விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

சில கேள்விகள்:
1. சட்டம் படித்த அந்த பெண் ஏன் போலீஸுக்கு போகாமல் இதை முதலில் பிளாகில் எழுதினார் என்று தெரியவில்லை.
2. சம்பவம் நடந்தபோது, முன்னாள் நீதிபதியும் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மேற்கொண்டு எந்த நடவடிக்கையையும் எடுக்க வேண்டியதில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குற்றம் நடந்தது என்று தெரிந்தால் ஏன் அவர்களே போலீஸுக்கு 'suo moto' FIR பதிவு செய்ய சிபாரிசு செய்யக்கூடாது ? குற்றம் நடந்த போது அவர் உச்ச நீதிமன்ற பணியில் இல்லை என்றால் ஏன் விசாரணைக் குழு மாட்டும் அமைக்க வேண்டும் ?
3. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு முன்னாள் இது Trial by Media மாதிரி இருக்கிறது. 2G கேஸுக்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா ?
4. இதே மாதிரி எல்லா வழக்குகளுக்கும் சீக்கிரம் தீர்ப்பு வந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் ?


எல்லோரும் அவர்களுடைய கிரகங்கள் எல்லாம் எப்படி இருக்கிறது என்று பார்த்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.

Read More...

Thursday, December 05, 2013

சும்மா ஒரு மஞ்சள் !


தனிப்பட்ட ரசனையில் இட்லிவடையில் வரும் பதிவுகள் எனக்கு உவப்பானவை அல்ல. இதில் வரும் பல விஷயங்கள் யாருக்காக எழுதப்படுபவை என்று மிகத் தெளிவாகத் தீர்மானம் செய்யப்பட்டு எழுதப்படுபவை. இப்படிக்கு நேர்மையான சரக்கு மாஸ்டர்

Read More...

கருத்து கணிப்பு - தமிழக அரசியல் கணக்கு

டில்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதில் எந்த ஆச்சரியமும் இல்ல. காங்கிரஸ் ஒழிந்தால் போதும் என்ற மக்கள் எண்ணமும் மோடி போன்ற ஒருவர் பிரதமராக வந்தால் நன்றாக இருக்கும் என்ற ஆசையும் தான் இதற்கு காரணம். டில்லியில் பலர் க்யூவில் நின்று ஓட்டு போட்டு காங்கிரஸை வெளியே தள்ள முடிவு செய்துள்ளார்கள். வாழ்த்துகள்.

இதனால் தமிழகத்துக்கு என்ன லாபம் வர போகிறது என்று பார்க்கலாம். இந்த தேர்தல் வெற்றி 2014ல் வரும் தேர்தலுக்கு டிரைலர் மாதிரி என்று பலர் சொல்லுகிறார்கள். அது உண்மை தான். தமிழக தலைவர்கள் இதை பார்த்து தான் கூட்டணி கணக்கை போட ஆரம்பிப்பார்கள். அம்மா பற்றி தெரியாது ஆனால் கலைஞர் நிச்சயம் போட ஆரம்பித்திருப்பார்.

சோவின் மகன் திருமண விழாவில், மோடி மற்றும் கலைஞர் பங்கேற்க வாய்ப்புள்ளது என்றும், இந்த இரு தலைவர்களின் சந்திப்பு, திமுக.,பாஜ., கூட்டணிக்கு ஒரு பாலமாக அமையும் என்று ஒரு வதந்தி வந்துக்கொண்டு இருக்கிறது. ஜெயலலிதா மோடியை இதுவரை சந்திக்காமல் நழுவிவருகிறார் அதனால் பா.ஜ + திமுக கூட்டணி அமைந்தாலும் அமையலாம்.

இயற்கையான கூட்டணி என்று அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை மக்கள் நம்பினார்கள், ஆனால் மோடி, பிரதமர் வேட்பாளர் என, அறிவிக்கப்பட்ட பின், அம்மா தான் பிரதமர் என்று ஒரு குழு உசுப்பேற்றி 3வது அணி என்ற பேச்சு வர தொடங்கியது. கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் சேர்ந்து மூன்றாவது அணியுடன் போட்டி என்று முடிவு செய்தால் அதைவிட முட்டாள் தனம் வேறு இருக்க முடியாது. பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட பின் மோடியை பற்றியும், பா.ஜ., பற்றியும் விமர்சிப்பதை கலைஞர் தவிர்த்து வருகிறார் என்பதையும் பலர் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

பா.ஜ + திமுக கூட்டணி அமைந்தால் தமிழ் நாட்டு மக்கள் யாருக்கு ஓட்டு போடுவார்கள் ?

Read More...

Wednesday, December 04, 2013

ஏன் இந்த பழக்கம் ?

திருமணமான பெண்கள், கணவன் சாப்பிட்ட பின் அதே தட்டிலோ அல்லது இலையிலோ உண்ணுவார்கள். அது ஏன் என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள். ( தற்போது இந்த வழக்கம் அவ்வளவாக இல்லை ! )

பெண்களும் பதில் சொல்லலாம் !

Read More...

Tuesday, December 03, 2013

அப்படியா ?

‘நேருவுக்குப் பதில் பட்டேல் பிரதமர் ஆகியிருந்தால் நாட்டின் தலையெழுத்து மாறியிருக்கும்’ என்று மோடி பேசியதை விமர்சித்து, ‘மறக்கப்பட்ட வாக்குறுதி’ என்ற கட்டுரையை எழுதினார் ‘ஹிந்து’ பத்திரிகையாளர் வித்யா சுப்பிரமணியம். அந்தக் கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை விமர்சித்து பட்டேல் எழுதிய கடிதத்தைப் பற்றி ஆதாரபூர்வமாகக் குறிப்பிட்டிருந்தார். இதனால் கடுப்படைந்த சங்கக் குடும்பத்தினர் பத்திரிகையாளருக்கு அலைபேசி மூலமாக அசிங்கமாகப் பேசி கொலை மிரட்டலும் விட்டிருக்கின்றனர். வித்யா காவல்துறையில் புகார் செய்ய தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. எந்தெந்த நம்பர்களில் இருந்து மிரட்டல் வந்தது என்று பார்க்கும்போது பெரும்பாலான அழைப்புகள், தமிழ் நாட்டிலிருந்து அதுவும் கோவையிலிருந்து வந்திருப்பது தெரியவந்தது. இதுபற்றிய விவரங்களை தில்லி காவல்துறை தமிழக அரசுக்கு அனுப்பியிருந்தும் கோவை காவல்துறை இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்வதில் ஆர்வம் காட்டாமல் சுணக்கம் காட்டுகிறது என்கிறார்கள். இது என்ன அரசியலோ?

நன்றி: கல்கி

'சமூக வலைதளங்களை இளைஞர்கள் சரியான விதத்தில் கையாளுகிறார்களா?''

'' 'பெரும்பாலும் இல்லை’ என்கிறார்கள் என் நண்பர்கள். வியாபாரத்துக்கு உரியதாக அது மாறிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். எனக்கென்று ஒரு தளம் இருக்கிறது. www.prapanchan.in - முடிந்தால் பாருங்கள். பயப்பட வேண்டாம். நான் உதவி கேட்பது இல்லை!''


''தமிழ்ச் சூழலில் முழுநேர எழுத்தாளராக இருப்பது சரியா... தவறா?''

''அது ஒரு தற்கொலை முயற்சி! மக்கள், இன்னும் இலக்கியத்தையும் இலக்கிய ஆசிரியரையும் அடையாளம் காணவில்லை. நாலாம் தரங்களில் அவர்கள் திருப்தி காண்கிறார்கள். அவர்களின் சேகரிப்பில் பாரதி, புதுமைப்பித்தன் முதல் இன்றைய நல்ல எழுத்தாளர்கள் இல்லை. என்னிடம் வருகிற இளைஞர்கள் பலரை ஊருக்கு அனுப்பி இருக்கிறேன். 'அவமானப்படாமல், சோற்றுக்கும் ஒரு கூரைக்கும் ஏதோ ஒரு வேலையைச் செய்துகொண்டு, பிறகு இலக்கியம் படையுங்கள்’ என்றே சொல்கிறேன். வாழ்க்கைக்கு உத்தரவாதம் தேடிக்கொள்ளாதவர்கள், நல்ல இலக்கியத்தைக் குறைவாகவே படைக்க முடியும். எதன் பொருட்டு பட்டினியையும் அவமானத்தையும் எழுத்தாளன் ஏற்கிறானோ, அந்தப் படைப்புக் காரியமே சாத்தியமாகாமல் போகும். முத்தம் கொடுத்துப் பசியாற முடியாது; பசியோடு காதலிக்கவும் முடியாது.

ஒரு நல்ல எழுத்தாளன், பட்டினியால் சாவது இல்லை; அவமானத்தால் சாகடிக்கப்படுகிறான். தமிழ்ச் சூழல் இப்போது பயங்கரமானதாக மாறிக்கொண்டிருக்கிறது. சாதி, குழு மனப்பான்மை, துரோகம், புறக்கணிப்பு போன்றவை, படைப்புலகில் இன்று கொசுக்கள் போல அடர்ந்து இருக்கின்றன. கவசங்களோடும் ஆயுதங்களோடும் வாழவேண்டிய காலம் சமீபத்துக் கொண்டிருக்கிறது!''

நன்றி: ஆனந்த விகடன், பிரபஞ்சன் பதில்கள்.


Read More...

Sunday, December 01, 2013

சில செய்திகள்... பல கேள்விகள்


'என் கணவர் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாதவர். பாவிகள் அவரைத் துள்ளத்துடிக்க அவர் வேலை செய்த கோயிலிலேயே வெட்டிக் கொன்னாங்க. கொலையில சம்பந்தப்பட்டவங்க பெரிய இடம்னு தெரிஞ்ச பிறகும் விடாம வழக்கை நடத்த ஒத்துழைப்பு தந்தோம். ஒருநாள், விசாரணைக்காக போனபோது நீதிமன்ற வளாகத்திலேயே வெச்சி மூணு பேர், 'சாட்சியத்தை மாத்தி சொல்லலைன்னா உன் பிள்ளைங்களை ஆசிட் தொட்டியில வீசிடுவோம். அடையாளம் தெரியாம போயிடுவாங்க’னு மிரட்டினாங்க. கோயில்ல வெச்சி ஒரு உயிரைப் பறிக்கத் துணிஞ்சவங்க... இதையும் செய்திடுவாங்கங்கன்னு பயந்து போனேன். அவருதான் போயிட்டாரு... என் பிள்ளை களையாவது காப்பாத்து வோம்னு நீதிமன்றத்துல மாத்திச் சொல்லவேண்டியதாகிடுச்சி'' - சங்கர ராமன் மனைவி ஜூவில்.

கொலை, கொள்ளை வழக்குகள் அதிகரிக்காமல் தடுக்க புதுக்கோட்டை அருகே மாத்தூர் காவல் நிலையத்தில் போலீஸ்சார் சிறப்பு யாகம். - செய்தி

ஜனவரி 21ஆம் தேதி முதல் தமிழகத்தில் கள் இட்லி, கள் தோசை, கள் ஊத்தப்பம், கள் பனியாரம், கள் ஆப்பம் உள்ளிட்ட விற்பனை தொடக்கம் - செய்தி


Read More...

Thursday, November 28, 2013

ஒரு பக்க விளம்பரம்

இன்று வந்த தி.ஹிந்து ஆங்கில பத்திரிகையில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் வெளியிட்டுள்ள ஒரு பக்க விளம்பரம்
http://ow.ly/i/3ReV1

Read More...

சங்கராச்சாரியார் வழக்கு - ஒரு மீள்பார்வை! - எஸ். குருமூர்த்தி

புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றம், சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சாரியார்கள் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி, ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி உள்ளிட்ட 23 பேரையும் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கி விடுதலை செய்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு நேற்று (நவம்பர் 27, 2013) வெளிவந்தவுடன் கடந்த 2004 நவம்பர் மாதம் சங்கராச்சாரியார் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த பரபரப்புகளையும், அநாகரிகமான விமர்சனங்களையும் எண்ணிப் பார்க்கத் தூண்டியது.

சங்கராச்சாரியாருக்கு எதிராக என்னென்ன விமர்சனங்கள் எழுப்பப்பட்டன, எப்படிப்பட்ட கேலியும் கிண்டலும் செய்யப்பட்டன என்பதையும், திராவிடக் கொள்கையாளர்களாலும், கட்சியினராலும், ஏன் தங்களை மதச் சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்ளும் ஊடகங்களாலும், சமுதாயப் பிரமுகர்களாலும் காஞ்சி சங்கர மடமும், சங்கராச்சாரியார்களும் தரம் தாழ்த்தி சித்திரிக்கப்பட்டனர் என்பதையும் இப்போது நினைத்தாலும் முகம் சுளிக்க வைக்கின்றன.



சங்கராச்சாரியார்தான் குற்றவாளி என்று விசாரிக்காமலேயே முடிவுசெய்தது போதாதென்று, ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி பற்றி இல்லாததும் பொல்லாததுமாக எத்தனை எத்தனையோ அபவாதங்களை வேறு எழுப்பினார்கள். இதில் இறை நம்பிக்கை இல்லாத திராவிடக் கட்சிகளின் பங்களிப்புக்கு எள்ளளவும் குறைவில்லாதது, நமது ஊடகங்களின் பங்களிப்பு. இதனால் மனம் புண்பட்ட லட்சக்கணக்கான காஞ்சி மடத்தின் பக்தர்களும், ஆன்மிக நாட்டமுள்ளவர்களும் வெளியில் சொல்ல முடியாமல் மனதுக்குள் விம்மி விம்மி அழுததும், ஆறுதல் சொல்ல ஆளில்லாமல் மெüனமாக அதையெல்லாம் சகித்ததும் எளிதில் மறந்துவிடக் கூடியவையா?

காஞ்சி சங்கரமடமும், சங்கராச்சாரியார் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதியும் பல்வேறு விதமான விமர்சனங்களுக்கும், கண்டனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளானபோது, இந்து மதத்தின் அடித்தளத்தை உடைத்துவிட வேண்டும் என்று சில நலம் விரும்பிகள் முனைந்தபோது, "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் மட்டும்தான் உண்மையின் பக்கம் நின்றது. ஆதாரமில்லாமல், காழ்ப்புணர்ச்சியால் இறையுணர்வின், ஆன்மிகத்தின் எதிரிகள் ஒன்றுபட்டு சங்கர மடத்தையும், சங்கராச்சாரியாரையும் பொய்யான குற்றச்சாட்டை ஆதாரமாகக் கொண்டு பழிவாங்க முற்பட்டபோது, உண்மை என்று தான் நம்பிய கொள்கைக்காகத் துணிந்து போராடியதும் "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழ் மட்டுமே!

மடமும் சங்கராச்சாரியார்களும் எந்தவித ஆதாரமுமில்லாமல் காயப்படுத்தப்படுகிறார்கள், போதிய சாட்சியமில்லாமல் அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது என்பதை நாங்கள் மட்டுமே உறுதியாகச் சொன்னோம். இப்போது, போதிய ஆதாரங்களோ, சாட்சிகளோ இல்லாமல் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது என்று புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை, சங்கராச்சாரியார் கைதான போதே "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' தெரிவித்திருக்கிறது.

"வழக்கு செத்துவிட்டது. எப்போது, யார் இறுதிச்சடங்கு செய்வது?' என்று தலைப்பிட்டு சங்கரராமன் கொலை வழக்கு பற்றிய ஐந்து தொடர் கட்டுரைகள் "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் வெளியானது. சங்கராச்சாரியார் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி கைது செய்யப்பட்ட தீபாவளி தினத்திலிருந்து 12-ஆவது நாளான நவம்பர் 24, 2004 அன்று எழுதப்பட்ட அந்தக் கட்டுரைத் தொடரின் முதல் கட்டுரையிலேயே இந்த வழக்கு எந்தவித ஆதாரமோ, சாட்சியமோ இல்லாமல் தொடுக்கப்படுகிறது என்பதை விளக்கமாவே எழுதி இருந்தேன்.

""சங்கராச்சாரியார் மீது தொடுக்கப்பட்ட இந்த வழக்கு பலமில்லாதது என்பது மட்டுமல்ல, ஆரம்பம் முதலே அடிப்படை ஆதாரமும் இல்லாதது. அது மட்டுமல்ல, இட்டுக்கட்டப்பட்டதும் கூட. ஆமாம், சங்கராச்சாரியார் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதியைக் குற்றவாளியாக்க வேண்டும் என்பதற்காகவே புனையப்பட்ட வழக்கு இது'' என்று தொடங்கியது அந்தக் கட்டுரை.

""காவல்துறையினர் தாங்கள் அடையாளம் கண்ட சங்கராச்சாரியார்தான் குற்றவாளி என்று நிரூபிக்க முடியாமல் ஆதாரங்களைத் தேடி அலைகிறார்கள். ஆதாரமும் சாட்சியங்களும் கிடைக்கவில்லை என்பதற்காக விட்டுவிடவும் முடியவில்லை. சாட்சியங்களை இட்டுக்கட்டி எப்படியாவது வழக்கை ஜோடித்துவிட எல்லா முயற்சிகளும் செய்கிறார்கள். ஆனால், வழக்கு ஆரம்பத்திலேயே தோற்றுவிட்டது. காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோதே, காக்கியின் சாயம் வெளுத்துவிட்டது. எந்த இரண்டு குற்றவாளிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சங்கராச்சாரியாரை சங்கரராமன் கொலையில் முதல் குற்றவாளி என்று காவல்துறை தங்களது வழக்கை ஜோடித்திருந்ததோ, அந்த இருவருமே, நாங்கள் காவல்துறையால் வற்புறுத்தப்பட்டதால் தரப்பட்ட வாக்குமூலம் இது என்று சொன்னபோதே, வழக்கு தோற்றுவிட்டது'' என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

இப்போது சங்கரராமன் கொலை வழக்கிலான தீர்ப்பு அதையேதான் கூறுகிறது. "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் நான் எழுதிய அந்தக் கட்டுரைத் தொடரில் ஒன்று - "அபிமன்யு போல நிராதரவாக நிற்கும் சங்கராச்சாரியார்!'. அந்தக் கட்டுரையில், தன்மீது அபாண்டமாக சுமத்தப்பட்டிருக்கும், கொலைப் பழியால் திகைத்துப்போய் செய்வதறியாமல் நிற்கும் சங்கராச்சாரியாரை, இறை மறுப்பாளர்களும், இந்துமத வெறுப்பாளர்களும், திராவிடக் கட்சியினரும், போலி மதச் சார்பின்மையைக் கொள்கையாகக் கொண்ட சமூக சிந்தனையாளர்களும், அரசியல் கட்சிகளும் வல்லூறுகளைப் போலக் கொத்திக் குதறக் காத்திருக்கிறார்கள். காவல்துறையினரால் கட்டவிழ்த்து விடப்படும் புனையப்பட்ட செய்திகளையும், அபாண்டமான குற்றச்சாட்டுகளையும் நமது ஊடகங்களும், திராவிட இயக்க பிரச்சார இயந்திரமும் சங்கராச்சாரியாரைக் களங்கப்படுத்தவும், அசிங்கப்படுத்தவும் முனைந்து செயல்படுகின்றன. வழக்கால் ஏற்படும் பாதிப்பை விட இதுபோன்ற ஆதாரமற்ற தவறான பிரசாரங்களால் ஏற்படுத்தப்படும் கருத்துருக்கள்தான் சங்கராச்சாரியாருக்கு அதிக களங்கம் ஏற்படுத்துகின்றன'' என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

"ஏதோ சங்கராச்சாரியார் ஒரு மிக மோசமான கிரிமினல், தரம் கெட்டவர் என்பதுபோன்ற கருத்தை நீதிமன்றத்திற்கு ஏற்படுத்த, மிகவும் மோசமான குற்றங்களில் ஈடுபடும் கிரிமினல்களின் வாக்குமூலங்களை வலுக்கட்டாயமாகக் காவல்துறை பெறுகிறது' என்று "இந்த வழக்கை மறு விசாரணை செய்யாமல், நீதி கிடைக்காது' என்கிற கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

டிசம்பர், 3 2004-இல் எழுதியிருந்த கட்டுரையில், எப்படி இந்த வழக்கு ஒரு கொலை குற்றத்தின் புலன் விசாரனை என்கிற நிலையிலிருந்து விலகி, சங்கராச்சாரியாரைத் தனிப்பட்ட முறையில் தரம் தாழ்த்துவதையும், காஞ்சி சங்கர மடத்தின் மரியாதையைக் குலைப்பதையும்தான் குறிக்கோளாக கொண்டிருக்கிறது'' என்று எழுதி இருந்தேன். ""தீர்ப்பு எப்படி வந்தாலும் சரி, எதிர்பாராமல் ஏற்பட்டிருக்கும் தாக்குதல்களால் விக்கித்து வாயடைத்துப்போய் நிற்கும் காஞ்சி சங்கர மடத்திற்கு எதிராக நடக்கும் யுத்தமாகக் காவல்துறை இந்த வழக்கை மாற்றிவிட்டிருக்கும் நிலையில், பல மிகப்பெரிய தவறுகளுக்கு இது வழிகோலியிருக்கிறது. சமுதாயத்தில் ஆன்மிக மடங்களின் மரியாதை சீர்குலைக்கப்படுகிறது. மத நம்பிக்கையே தகர்க்கப்படுகிறது. குற்றப் புலனாய்வாக இல்லாமல், மத நம்பிக்கையையும், காஞ்சி சங்கர மடத்தின் புகழையும் தகர்க்கும் செயலாக இது மாறிவிட்டிருக்கிறது'' என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

""மதச்சார்பின்மை பேசும் ஊடகங்கள் நீதிபதி ரெட்டியின் எச்சரிக்கைக்கு செவிசாய்க்குமா?'' என்பது 2005 ஜனவரி 14ஆம் தேதி நான் எழுதிய கடைசி கட்டுரையின் தலைப்பு. கைது செய்யப்பட்டபோது காஞ்சி சங்கராச்சாரியார் ஒரு தொழிற்சாலையில் விருந்தினர் விடுதியில் தங்கி இருந்ததால், அந்தத் தொழிற்சாலையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஒரு கொலையுடன் அவரைத் தொடர்புபடுத்தி யாரோ தொடுத்த வழக்கில் நீதிபதி நரசிம்ம ரெட்டி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பளித்தார். அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து அவர் அளித்த தீர்ப்பில், 2,500 ஆண்டு பாரம்பரியமிக்க ஒரு ஆன்மிக அமைப்பின் மரியாதைக்கும் புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில், ஊடகங்களில் பரபரப்பு ஏற்படுத்துவதற்காக செய்யப்படும் நடவடிக்கைகளைக் கடுமையாகச் சாடியிருந்தார் நீதிபதி ரெட்டி.

""தனிநபர்கள் மட்டுமல்ல, சில இயக்கங்களும், ஏன் அரசு இயந்திரமே கூட நமது பாரம்பரியப் பெருமைகளைச் சிறுமைப்படுத்தவும், புகழ்பெற்ற நிறுவனங்களைக் களங்கப்படுத்தவும், குற்றப்படுத்தவும் முயற்சிப்பது வேதனைக்குரியது. தேசத்தையே நிலைகுலைய வைத்திருக்கும் காஞ்சி சங்கர மடத்திற்கு எதிரான பிரசாரங்களை எப்படி மனித உரிமை, நீதி, நேர்மை, சுய மரியாதை என்றெல்லாம் பேசும் நபர்களும், அமைப்புகளும் பார்த்துக் கொண்டு மௌனம் காக்கின்றன என்பது வியப்பாக இருக்கிறது. அன்று கெüரவர்கள் சபையில் பாஞ்சாலிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எள்ளளவும் குறைவானதல்ல இப்போது காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி மீது கட்டவிழ்த்து விடப்படும் பிரசாரங்களும், ஆதாரமில்லாத அபவாதங்களும்'' என்றும் நீதிபதி ரெட்டி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

சங்கராச்சாரியார் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதியும், காஞ்சி சங்கர மடமும் உண்மையை எடுத்துரைக்க வாய்ப்புக்கூட அளிக்கப்படாத அந்த தர்மசங்கடமான நிலையில், உண்மையின் பக்கம் நின்று குரலெழுப்பிய ஒரே ஊடகம் "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' மட்டுமே!

அதற்கு எனக்குத் தரப்பட்ட வெகுமதிதான் வாரண்டு அனுப்பப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டது. "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகை அலுவலகம் சோதனையிடப்பட்டது. இந்தக் கட்டுரைகளின் தமிழாக்கத்தை வெளியிட்ட "துக்ளக்' இதழும் சோதனையிடப்பட்டது. வழக்கம்போல, நீதிமன்றம் தலையிட்டுத் தடை வழங்கியதால் எங்கள் தலை தப்பியது.

என்னை விசாரணை செய்த விசாரணை அதிகாரியிடம், "எந்த அடிப்படையில் நீங்கள் சங்கராச்சாரியாரைக் குற்றவாளி என்று கருதுகிறீர்கள்?' என்று நான் கேட்டேன்.

அதற்கு அவர் அளித்த பதில்-- ""கொலை செய்யப்பட்டவர், சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதிக்குத் தொடர்ந்து அவரை விமர்சித்தும் குற்றம் சாட்டியும் கேவலப்படுத்தும் விதத்திலும் கடிதங்கள் எழுதியவண்ணம் இருந்திருக்கிறார். அதனால், அவரை ஜயேந்திர சரஸ்வதி கொலை செய்வதற்கான காரணம் இருக்கிறது!''

""இந்தக் காரணத்தால் சங்கரராமனை சங்கராச்சாரியார் கொலை செய்திருக்கக் கூடும் என்று நீங்கள் கருதுவதானால், அதற்கு முன்னால், சங்கராச்சாரியாருக்கு வேண்டாத வேறு யாராவது இதையே காரணமாக வைத்து சங்கரராமனைக் கொலை செய்து அந்தப் பழியை சங்கராச்சாரியார்மீது சுமத்திவிடவில்லை என்பதை நீங்கள் உறுதிப்படுத்தி இருக்க வேண்டும். செய்தீர்களா?'' என்று நான் கேட்டேன்.

அவரிடம் பதில் இல்லை. மெüனமாக இருந்தார். நான் மீண்டும் அதே கேள்வியை கேட்டேன். முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்டார்.

கிரிமினல் குற்ற விசாரணையில், விசாரணை அதிகாரி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னால், அது தொடர்பான எல்லா சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து, விசாரித்து, அவை எதுவுமே சாத்தியமில்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்க வேண்டும் என்பதை அவரிடம் விளக்கினேன். அப்படிச் செய்யாமல் போனால், வழக்கு தோற்றுவிடும் என்று நான் சொன்னதை அவர் காதில் வாங்கிக் கொள்ளவே தயாராக இருக்கவில்லை.

காஞ்சி சங்கராச்சாரியாரை எப்படியாவது குற்றவாளியாக்கி சிக்க வைக்க வேண்டும் என்பதில் மட்டும்தான் குறியாக இருந்தார்களே தவிர, அதற்குப் போதிய ஆதாரங்களும் சாட்சியங்களும் இருக்கின்றனவா என்பதை எல்லாம் உறுதிப்படுத்தும் மனநிலையில் காவல்துறை இருக்கவில்லை. அதன் விளைவுதான் இந்த மிகப் பெரிய சமுதாய, பண்பாட்டு இழப்பு.

ஒரு மேன்மையான, பாரம்பரியமிக்க ஆன்மிக நிறுவனம் மட்டுமல்ல, அதன் லட்சக்கணக்கான வன்முறையை விரும்பாத, சமாதானத்தை நேசிக்கும் விசுவாசிகளும் காயப்பட்டிருக்கிறார்கள். இந்து மதம் கேவலப்படுத்தப்பட்டது. நமது கலாசாரமும், மத நம்பிக்கையும், தரம்தாழ்த்தப்பட்டன. ஆன்மிக வழிகாட்டிகள் ஆஷாடபூதிகளாக சித்திரிக்கப்பட்டனர். காரணமில்லாமல் அவர்கள் மீது சேற்றை வாரி இறைத்தனர். இதன் பின்னணியில் அரசியல் மட்டுமல்ல, நமது பண்பாட்டையும், வாழ்க்கை முறையையும், ஆன்மிக சிந்தனையையும் சிதைக்கும் சதியும் இருந்தது.

சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி உள்ளிட்ட 23 குற்றவாளிகளும், போதிய ஆதாரமோ சாட்சியங்களோ இல்லாததால் விடுதலை செய்யப்பட்டார்கள் என்கிறது தீர்ப்பு. குற்றவாளி யார், அவர் ஏன் தண்டிக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பப்படும்.

நீதிமன்றத்தின் முன்னால் இன்னார் குற்றவாளி என்று காவல்துறை சிலரை குற்றம்சாட்டி நிறுத்துகிறது. அவர்களைக் குற்றவாளிகளாக்கவோ தண்டிக்கவோ போதிய சாட்சியங்கள் இல்லை. உண்மையான குற்றவாளி கிடைக்கவில்லை, அதனால் உங்களை தண்டிக்கிறேன் என்று நீதிமன்றம் இவர்களை தண்டிக்க முடியாது. விடுதலைதான் செய்ய முடியும்.

அப்படியானால் உண்மையான குற்றவாளி யார்? விசாரணை அதிகாரியிடம் 2004 ஆம் ஆண்டு நான் எழுப்பிய அதே கேள்வியை காவல்துறை எழுப்பினால் ஒருவேளை அதற்கு விடை கிடைக்கக் கூடும். ஆனால், காலம் கடந்துவிட்ட பிறகு ஆதாரங்களையும், சாட்சிகளையும் தேடிக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. அப்போதே செய்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை?

ஆரம்பத்திலிருந்தே, காவல்துறைக்கு சங்கரராமனைக் கொலை செய்த உண்மைக் குற்றவாளியைக் கைது செய்வதில் இருந்த அக்கறையைவிட, காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதியின் மீது பழி சுமத்தி, அவரைக் குற்றவாளியாக்கி, காஞ்சி சங்கரமடத்தின் மரியாதையையும், இந்து மதத்தின் மீதான நம்பிக்கையையும் குலைப்பதில்தான் ஆர்வம் இருந்தது என்பதுதான் உண்மை. அதைத்தான் புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதிப்படுத்தி இருக்கிறது.

சங்கரராமன் கொலை வழக்குத் தீர்ப்பின் பின்னணியில் காவல்துறையினர், அரசு, ஊடகங்கள், சமுதாய சிந்தனையாளர்கள் என்று ஒவ்வொருவரும் தங்கள் மனசாட்சியைத் தொட்டு பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள். சங்கராச்சாரியாருக்கு எதிராக, காவல் துறையினருக்கு ஆதரவாக, சங்கர மடத்திற்கு எதிராக புழுதிவாரி இறைத்துக் கேவலப்படுத்தும் இயக்கமே நடத்தினார்களே, அவர்கள் தங்களது செயல்களை, இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் சற்று மீள்பார்வை செய்வார்களா?

நன்றி: தினமணி

Yellow

Read More...

Wednesday, November 27, 2013

அருஷி - சங்கரராமன்

தனக்கு தற்கொலை செய்துக்கொள்ள பயமாக இருக்கிறது என்று சங்கரராமன் கூலிப்படையை நியமித்து தன்னை வெட்டி தள்ள நியமித்தார் என்று கூட நினைக்க தோன்றுகிறது. ஜெயேந்திரர் மவுன விரதம் இருப்பதாக கூறுகிறார், சட்டமும் மவுனமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

டெல்லியில் 14வயது சிறுமியும் வேலையாளும் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நிமிடத்துக்கு நிமிடம் கவர் செய்த மீடியா சங்கரராமன் கொலை வழக்கை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. 80க்கும் மேல் சாட்சிகள் பல்டி அடித்த வழக்கில் எல்லோரும் நிரபராதிகள் என்று கோர்ட் அவர்களை விடுதலை செய்திவிட்டது. இத்தனைக்கும் பட்டப்பகலில் இந்த கொலை நடந்துள்ளது. ஆனால் ஆருஷி கொலை வழக்கில் சாட்சியே இல்லாமல் தண்டனை கிடைத்துள்ளது.

9 வருடம் கழித்து குற்றவாளிகளை எங்கே பிடிக்க போகிறார்கள்.

இனி அடித்த மேல் கோர்ட் அதற்கு பிறகு அடுத்த மேல் கோர்ட் என்று இழுத்தடித்து சங்கரராமன் என்று ஒருவர் முன்பு வாழ்ந்தார் என்று கண்டுபிடிக்க போகிறார்கள். அவ்வளவு தான்.

Read More...

காதல் ஜாதி

காதலுக்காக பல தியாகங்களைச் செய்தவர்களின் பல நூறு காதல் கதைகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். எதுவுமே மதாய் தூபே என்கிற மதாய் தோம் என்பவருடைய காதலுக்கீடாகாது. மதாய் தூபே, பிஹாரிலுள்ள ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தன்னுடைய காதலுக்காக தன்னுடைய சமூகத்தை எதிர்த்து, ஜாதியைத் துறந்து, சுக்மோனா என்ற பெண்ணை மணந்திருக்கிறார். அதுவுமெப்படி? சமூகக் கட்டுப்பாடுகளை மீறி, தன் காதலுக்காக அப்பெண்ணினுடைய ஜாதியையே தன்னுடையதாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். அப்பெண், சுக்மோனா, பிறப்பால் மயானத்தில் தகனத்தை மேற்கொள்பவருடைய பெண்ணாவார். மிகவும் தாழ்த்தப்பட்டதாகக் கருதப்பட்ட குலத்தைச் சேர்ந்தவர். "தோம்" என்பது இவர்களது குலப்பெயர்.

மதாய் தூபே, ஒரு ஆசாரமான மிகவும் பணக்கார பிஹாரி பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்; ஏராளமான நிலபுலன்களுக்கு அதிபதியான குடும்ப வாரிசு. இவர்களது நிலத்தையொட்டிய மயானக் காட்டில்தான் சுக்மோனாவுடைய தந்தை, தன்னுடைய தகனத் தொழிலை மேற்கொண்டு வந்தார். அதில் வரும் சொற்ப வருமானத்தில்தான் சுக்மோனாவுடைய குடும்ப ஜீவிதம். சுக்மோனா, தினமும் தூபேவினுடைய வயலைக் கடந்துதான், தன்னுடைய தந்தைக்கு உணவு கொண்டு செல்லும் வழக்கம். அடிப்படையில் இருந்த குல வேறுபாடுகள் காரணமாக, இவர்களிருவரும் தினமும் சந்திக்க நேர்ந்தாலும், பேசிக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் நேர்ந்ததில்லை. ஆனால் அன்றைய தினம், சூரியனின் தாக்கம் காரணமாக, சுக்மோனா உணவு சுமந்து செல்லும் வேளையில், தூபேவினுடைய வயலில் மயங்கிச் சரிகிறார். இதைக் கண்ணுற்ற தூபே, சமூகத்தின் சகல வேறுபாடுகளையும் மறந்து, சுக்மோனாவைத் தன் குடிலுக்குத் தூக்கிச் சென்று, மயக்கம் தெளிவித்து ஆசுவாசப்படுத்துகிறார். இங்கிருந்துதான் இக்காதல் துவங்குகிறது.

இவர்கள் காதலுக்கெதிராக, தூபேவின் சமூகம் கொதித்தெழுகிறது. அக்காலத்தில், சுக்மோனா போன்ற குலத்தில் தாழ்த்தப்பட்ட பெண்களை, உயரிய குலத்தைச் சார்ந்தவர்கள் "சேர்த்துக்" கொள்வது வழக்கம். ஆனால் திருமணமென்பதெல்லாம் நினைத்தே பார்க்க இயலாதது. ஒரு பிராமண குலத்தைச் சார்ந்தவன், பிணம் எரிக்கும் தொழிலைச் செய்பவருடைய மகளை மணப்பதா? முடியவே முடியாது; குலத்தை விட்டு ப்ரஷ்டம் செய்வோம், சொத்தில் உரிமை கோர முடியாது என்று தூபே தனது சமூகத்தாலும், குடும்பத்தாலும் பலவாறாக காதலைத் தியாகம் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார். இவையெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, தூபே, சுக்மோனாவை மணக்கப் போவதாக வெளிப்படையாக அறிவிக்கிறார். எந்தவொரு நிர்பந்தத்தை முன்னிட்டும் தமது காதலுக்கு துரோகம் செய்ய தூபே விரும்பவில்லை. முடிவாக வீட்டை விட்டும் வெளியேற்றப்படுகிறார்.

சுக்மோனாவின் பார்வையில் தூபே மிகவும் வித்யாசமாகத் தெரிந்தார். பொதுவாக, அவருடைய வயதொத்த, உயர்குல வாலிபர்கள், தங்கள் குலப் பெண்களை ஒரு போகப் பொருளாகவே நினைத்து, பலருடைய வாழ்க்கையைச் சீரழித்துக் கைவிட்டுள்ள நிலையில், தூபே தன்னுடைய காதலில் மிகவும் உறுதியுள்ளவராக இருந்தார்.

இக்காதலில் கடினமான கட்டம் இனிமேல்தான் என்பதை தூபே அறிந்தவராக இல்லை. வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டும், சமூகத்தை விட்டு பகிஷ்கரிக்கப்பட்ட நிலையில், தூபே, சுக்மோனாவின் தந்தையை அணுகிறார், அவரைத் திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தைத் தெரிவிக்கும் நோக்குடன். காதலுக்காக சமூகத்தையும், அந்தஸ்து மற்றும் சுகபோகங்களை இழந்ததை சுக்மோனாவின் தந்தையிடம் தெரிவிக்கிறார். ஆனால் சுக்மோனாவின் தந்தை மசியவில்லை. எதிர்ப்புக் குரல்கள் அவர்கள் சார்ந்த சமூகத்திடமிருந்து இன்னமும் பலமாக இருந்தன. நீங்கள் பிராமண குலம், நாங்களோ தாழ்த்தப்பட்ட குலம்; நீங்கள் புலால் மற்றும் மதுவைத் தொடாதவர்; நாங்களோ அதிலேயே புழங்குபவர்கள். ஆகையால், என்னுடைய பெண்ணை நீங்கள் மணமுடிப்பதில் உறுதியாக இருந்தால், எங்கள் ஜாதியை நீங்கள் ஏற்று கொண்டு, நீங்களும் எங்கள் தொழிலில் ஈடுபட வேண்டும். இதற்கு முன்னர் சில நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

தன் காதலில் சற்றும் உறுதியிழக்காத தூபே, அனைத்திற்கும் சம்மதம் தெரிவித்தார்.

முறைப்படியான ஜாதி மாற்றச் சடங்கிற்கு முன்னதாக, தூபே செய்ய வேண்டியதாக, தோம் சமூகத்தினர் விதித்த நிபந்தனைகள்...

* பன்றியிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி ஆகியவற்றை உண்ண வேண்டும்;
* மது அருந்த வேண்டும்;
* மயானத்தில் பிணத்தினை தகனம் செய்ய வேண்டும்;
* கிராமத்தில் யாசகம் செய்ய வேண்டும்;
* தோம் சமூகப் பெண்கள் குளித்து முடித்த அழுக்கு நீரை அருந்த வேண்டும்;
* பன்றிகளை வளர்க்க வேண்டும்!!

பிராமண குலத்தில் பிறந்து, இறைச்சி மற்றும் மதுவை கனவிலும் அறியாத தூபே, இந்நிபந்தனைகளத்தனையையும் நிறைவேற்றி, தம் காதலை வென்றெடுத்தார். முறையான ஜாதி மாற்றச் சடங்கிற்குப் பிறகு, மதாய் தூபே என்ற பெயரை மதாய் தோம் என்று மாற்றிக் கொண்டு, பிறகு வாழ்நாள் முழுவதும் ஒரு மயானத்தில் தகனம் செய்பவராகவே வாழ்ந்தார்.

சிறிது காலத்திற்குப் பின்னர், தனது சொந்த ஊரான சலேம்பூரை விட்டு, கஜ்ராஜ்கன்ஜ் என்ற ஊருக்கு இடம்பெயர்ந்தார். அங்கும் பிராமண சமூகத்தவர் அதிகமாக இருந்தபடியினால், அங்கும் பகிஷ்கரிக்கப்பட்டார். ஒரு பிரிட்டிஷ் அரசர், தன் காதலுக்காக ஒரு சாம்ராஜ்யத்தை இழந்தார். ஷாஜஹான் தனது காதலுக்காக தாஜ்மஹாலை எழுப்பினார்; ஆனால் மதாய் தோமிடம் இழப்பதற்கு ராஜ்யம் இல்லை, காதலுக்காக தாஜ்மஹாலையும் எழுப்பவில்லை; ஆனால் தனது கலாசாரத்தைத் தியாகம் செய்தார். எப்போது, இன்றைய காலகட்டம் போலல்லாமல், சமூகக் கட்டுப்பாடுகளும், சாதீய வேறுபாடுகளும் மிகவும் கடுமையாக இருந்த காலகட்டத்திலேயே.

இது உண்மைக்கதையென்று நம்பக் கடினமாக இருக்கலாம். ஆனால் மதாய் தோமும், சுக்மோனாவும் சில பத்தாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து மடிந்தவர்கள்தாம். தம்முடைய காதல் வாழ்க்கையை தொடர்ந்த இவர்கள் இறந்தது 1965 இன் சமீபத்தில்தான். இவர்களுடைய வாரிசுகள் இன்னமும் சட்கி சசோரி கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர், தம்முடைய பெற்றோரின் நினைவுகளைத் தவிர, அவர்களின் காதலினைப் பறைசாற்றும் வேறெந்த நினைவுச் சின்னங்களும் அற்று.

("The Hindu" வில் வெளியான இக்கட்டுரையின் ஆங்கில மூலத்தை எழுதியவர், Dr. கவிதா ஆர்யா, வாரணாசியின் ஆர்யா மகிளா கல்லூரியில் துணைப் பேராசிரியையாகப் பணிபுரிகிறார்.)

நன்றி - The Hindu ( http://www.thehindu.com/opinion/open-page/a-love-story-stranger-than-fiction/article5384027.ece )
மொழிபெயர்ப்பு உதவி: யதிராஜ சம்பத் குமார்.

இந்த கதையை படித்து முடித்த பின் என்ன ஒரு inspiration என்று எண்ணம் முதலில் வரும் ஆனால் நிதானமாக யோசித்தால், மதம் மாறலாம் ஆனால் காதலினால் Common Sense கூடவா போய்விடும் என்று நினைக்க தோன்றுகிறது ? எதற்கு அழுக்கு தண்ணீரையும், மதுவையும் அருந்த வேண்டும் ?

Read More...

Friday, November 22, 2013

S.Balaji in DC





எச்சரிக்கை: எ.அ.பாலா செஸ் பற்றி இட்லிவடையில் ஒரு தொடர் எழுதினாலும் எழுதுவார்
வாழ்த்துகள்

Read More...

'மட்டும்' போஸ்ட்


இந்தியாவின் பிரபலமான தெஹெல்கா பத்திரிகை ஆசிரியரான தருண் தேஜ்பால் அவர்கள் பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டை அடுத்து தற்காலிகமாக பதவி விலகியிருக்கிறார். - செய்தி

விகடனில் ஏதாவது பிரச்சனை என்றால் அதை குமுதம் ரிப்போட்டர் கண்டுக்கொள்ளாது. அதே போல குமுதம் பத்திரிகையில் ஏதாவது பிரச்சனை என்றால் ஜுவி கண்டுக்கொள்ளாது. இதே போல தான் மற்ற பத்திரிகைகளும். ஒரு பெண்ணை இழுவு படுத்திவிட்டு சாதாரணமாக 6 மாச லீவில் போகிறேன் என்பதற்கு எந்த பத்திரிகையும் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை குறிப்பாக கண்டிக்கவும் இல்லை. ஞாநி கூட வருத்தப்படிகிறார், கண்டிக்கவில்லை. ஆனால் நித்தியானந்தா செய்த செயலுக்கு எல்லா பத்திரிகையும் செய்த ஆர்பாட்டம் பற்றி நினைத்து பார்க்க வேண்டும்.

இது தான் பத்திரிக்கை தர்மம். இந்த தர்மம் பத்திரிகையில் மட்டும் தான் நிகழும்.


முதல்வர் ஜெயலலிதாவை நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில், 'துக்ளக்' பத்திரிகை ஆசிரியர் சோ சந்தித்து, தன் மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார். நேற்று காலை, 11:15 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை, சோ சந்தித்தார். இருவரின் சந்திப்பு, 15 நிமிடம் நீடித்தது. சந்திப்பின்போது சோ, தன் மகனின் திருமண அழைப்பிதழை கருணாநிதியிடம் வழங்கினார். -



தமிழகத்தில் இப்படி ஒரு செயலை செய்ய கூடிய ஒரே மனிதர் சோ மட்டும் தான் என்று நினைக்கிறேன்.

Read More...

Wednesday, November 20, 2013

தலை வால் ஜோக்


"கனடா, பிரிட்டன், மோரீஷஸ், ட்ரினிடாட், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும், உலகத் தமிழர்களும் தெரிவித்த எதிர்ப்புக்குப் பிறகும் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றுள்ளது. அந்த மாநாட்டின் ஒரே சிறப்பு ராஜபட்சவுக்கு ஏற்பட்ட நெருக்கடியான நிலையும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுக்குக் கிடைத்த சர்வதேச கவனமும் ஆகும்.

உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்கள் நெஞ்சங்களிலும் கேமரூன் இடம்பெற்றுவிட்டார். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளைக் கண்டிக்கும் வகையில் இந்தியா சார்பில் ஒரு துரும்புகூட காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காது என்று மன்மோகன் சிங் அறிவித்திருந்தால் அந்தப் புகழ் அவருக்குக் கிடைத்திருக்கும்.

ராஜபட்சவுக்குத் தலையையும், தமிழர்களுக்கு வாலையும் காட்டி ஏமாற்ற நினைத்ததைப் போல இரண்டுங்கெட்டான் நிலையில், தான் (மன்மோகன் சிங்) செல்லவில்லை என்றும், சல்மான் குர்ஷித் தலைமையிலான குழு செல்லும் என்றும் பிரதமர் முடிவு எடுத்தார். இந்த முடிவை எடுத்த போதாவது, இலங்கை அரசால் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமைகளைக் கண்டிக்கும் வகையில்தான் "நான் (மன்மோகன் சிங்) மாநாட்டில் பங்கேற்கவில்லை' என்று பிரதமர் அறிக்கை விடுத்திருக்கலாம்.

ஆனால் டேவிட் கேமரூன், ஈழத்தமிழர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், இலங்கை ராணுவம் செய்து வரும் கொடுமைகளைக் கண்டிக்கும் வகையில் விசாரணைக் குழு ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும், இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை அவசியம் என்றும் கேமரூன் வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் பணியை மத்திய அரசு செய்திருந்தால், தமிழ்ச் சமுதாயம் நன்றி செலுத்தியிருக்கும்.

குர்ஷித் செய்தது என்ன? தமிழர்களின் கோரிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு, மாநாட்டில் பங்கேற்ற சல்மான் குர்ஷித் செய்தது என்ன? தமிழர்களுக்கு ஆறுதலும் கூறவில்லை. இலங்கை மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறவில்லை. தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தொடர்பாக மாநாட்டில் கர்ஜிக்கவும் இல்லை.

சல்மான் குர்ஷித்துக்கு என்ன கவலை? மாண்டதெல்லாம் தமிழ் மக்கள்தானே' என்று கருணாநிதி கூறியுள்ளார்.


கலைஞர் தமிழ் பரிட்சை எழுத போகிறார். எல்லாம் True or False வகைக் கேள்விகள். அவருக்கு பயங்கர சந்தோஷம். உடனே கையில் இருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டிவிட்டு தலை வந்தால் 'சரி' வால் வந்தால் 'தப்பு' என்று எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதிவிடுகிறார். உண்ணாவிரதம் போல உடனே பரிட்சையை முடித்துவிட்டார். பிறகு திரும்பவும் நாணயத்தை சுண்ட ஆரம்பிக்கிறார். அப்போது அங்கே வரும் ஆசிரியர் "என்ன நடக்கிறது?" என்று கேட்க பரிட்சையை முடித்துவிட்டேன்.... எல்லா விடைகளும் சரியா என்று திரும்ப verify செய்துக்கொண்டு இருக்கேன் என்றார்.

Read More...

Tuesday, November 19, 2013

முருகேசனை வாழ்த்துவோம் !

தற்போது நான் விரும்பி படிக்கும் பத்திரிகை குங்குமம் என்று சொல்லலாம். குமுதம், விகடனை சும்மா ஒரு முறை பார்க்கலாம். ஆனால் குங்குமம், கல்கியில் பார்த்துவிட்டு ஏதாவது உபயோகமாக படிக்கலாம்.

இந்த வார குங்மத்தில் வந்த இந்த கட்டுரை சச்சினின் பாரத ரத்தனா போன்ற செய்தளில் அடுத்த வாரம் காணாமல் போய்விடும். இட்லிவடை வாசகர்களுக்கு இந்த கட்டுரையை இங்கே தருவதில் மகிழ்ச்சி.


நன்றி: குங்குமம்


பாரத ரத்தினங்கள் !

Read More...

Sunday, November 17, 2013

பாரத ரத்னா சச்சின் - விஷி ஆனந்த் சாதனையாளர் இல்லையா? - எ.அ.பாலா

சச்சின் ஓய்வு பெற்ற நாளே, 40 வயதிலேயே, அவரது கிரிக்கெட் சாதனைக்காக, இந்திய அரசு அவருக்கு நாட்டின் மிக உயரிய சிவில் விருதான பாரத ரத்னாவை வழங்கி கௌரவித்துள்ளது. இது சரி தான், இல்லை, நாட்டுக்காக அவர் ஆற்றிய தொண்டு என்ன, நாட்டுக்கு நல்வகையில் பங்களிக்காத அந்த கிரிக்கெட் சாதனைக்கு பாரத ரத்னாவா என்று கேட்டு, இது சரியில்லை என்று இரு தரப்பு வாதங்களை பார்க்க முடிகிறது. ஒப்புக்குச் சப்பாணியாக, அவருக்கு மட்டும் விருது கொடுத்தால் பிரச்சினை வரக்கூடும் என்று கருதி, (எப்போதோ கொடுத்திருக்க வேண்டிய) CNR ராவ்-க்கும் இப்போது சேர்த்து வழங்கியுள்ளது நல்ல நகைச்சுவை.

நாட்டுக்கு ஏதாவது ஒரு வகையில், கண்கூடாக பலன் தரும் சிலபல சாதனைகளை செய்தவர்களுக்கு மட்டும் தான் விருது என்றால், ஏற்கனவே (சமீப காலகட்டத்தில்) பாரத ரத்னா வழங்கப்பட்டவர்களில் சிலபலர் தேற மாட்டார்கள் என்பதை கவனிக்க வேண்டும். சச்சின் உட்பட இதுவரை 43 நபர்கள் இவ்விருதை பெற்றுள்ளனர். அப்பட்டியலில், 10 தென்னிந்தியர்கள் (அதிலும் முதல் மூவர் 1954-லிலேயே விருது பெற்றவர்கள் என்பதை நினைவு கொள்க!) மட்டுமே இருப்பதில் பெரிய ஆச்சரியம் ஏதும் இல்லை! ’தெற்கு தேய்கிறது, வடக்கு வாழ்கிறது’ என்ற கூற்று இன்று வரை பொருந்துகிறது!

இது போன்ற ஓரவஞ்சனையை காரணம் காட்டியே, பிரபல பாடகி எஸ்.ஜானகி, சென்ற வருடம் பத்மபூஷன் விருதை ஏற்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் காரணங்களுக்காகவே எம்ஜியாருக்கும், ராஜிவ் காந்திக்கும் பாரத ரத்னா தரப்பட்டது என்ற பேச்சிலும் நியாயமான காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நாட்டுக்கு தொண்டு, அதனால் விளைந்த நன்மை ஆகியவை மட்டுமே பாரத ரத்னா விருதுக்கான அளவுகோல்கள் அல்ல. ஒரு மனிதர், ஒரு துறையில் செய்த உயர்ந்த/ஒப்பில்லாத சாதனையை கௌரவப்படுத்தும் விதமாகவும் அது வழங்கப்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.


அத்தகைய நோக்கில், சச்சினுக்கு விருது வழங்கப்பட்டது சரியே என்றாலும், அவரை விட விளையாட்டுத் துறையில் அதிகம் சாதித்த, இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர், இந்தியாவின் ஒரே செஸ் வைரம், இந்தியாவின் (ஏன் ஆசியாவின்) ஒரே உலக செஸ் சேம்பியன் (5 முறை பட்டம், கடந்த 6 ஆண்டுகளாக undisputed Chess champion of the World) விஸ்வநாதன் ஆனந்துக்கு வழங்காமல், சச்சினுக்கு மட்டும் வழங்கியதற்கு நியாயமான காரணங்கள் எதுவுமில்லை என்பது நிதர்சனம்!

மேலே குறிப்பிட்டதில், World என்று வலியுறுத்தியதில் ஒரு காரணமுள்ளது. உலகில் 8 (ஒப்புக்குச் சப்பாணி நாடுகளை விட்டு விடலாம்) நாடுகள் மட்டுமே விளையாடும் கிரிக்கெட்டில், ஒரு டீம் விளையாட்டில், சச்சின் சாதித்ததைக் காட்டிலும், 120 நாடுகளில் விளையாடப்படும், அன்றிலிருந்து இன்று வரை கடுமையான போட்டி நிலவி வரும், தனிமனித விளையாட்டான செஸ்ஸில் ஆனந்த் சாதித்தது மிக மிக மிக அதிகம் என்பதை அவர் சாதனைகளை உற்று நோக்கினாலே போதும்.

2012-ல் நான் எழுதிய இடுகையிலிருந்து சில விஷயங்களை பகிர்கிறேன்.



”இந்தியாவின் முதல் உலக ஜூனியர் செஸ் சேம்பியன், முதல் கிராண்ட் மாஸ்டர், முதல் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர், துரித ஆட்டம், காய்களை பார்க்காமல் ஆட்டம், மொத்தப் புள்ளிகள் என்ற 3 பிரிவுகளிலும் உலகப் பிரசத்தி பெற்ற ஏம்பர் செஸ் டோர்னமண்ட் பட்டத்தை தனியொருவராக வென்ற முதல் செஸ் ஆட்டக்காரர் என்று பல முதல்கள் ஆனந்தின் செஸ் வாழ்க்கையில் விரவி இருக்கின்றன. அதோடு, இந்தியாவின் ஒரே உலக செஸ் சேம்பியன், கோரஸ் டோர்னமண்ட் பட்டத்தை 5 முறை வென்ற ஒரே மனிதர், மைன்ஸ் செஸ் பட்டத்தை 7 ஆண்டுகள் தொடர்ச்சியாக வென்ற ஒரே ஆட்டக்காரர் என்று நாம் பிரமிக்கத்தக்க “ஒரே” ஒருவர் ஆனந்த் மட்டுமே. மிக உயரிய விருதாக கருதப்படும் செஸ் ஆஸ்கார் பட்டத்தை ஆனந்த் 6 முறை வென்றுள்ளார்.

இந்தியாவின் இரண்டாம் உயரிய விருதான பத்ம விபூஷனையும் ஆனந்த் பெற்றிருக்கும் நிலையில், ஒரு விளையாட்டு வீரருக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டுமெனில், அதற்கு ஆனந்த் ஒருவரே மிக்க தகுதி படைத்தவர் என்று தாராளமாக சொல்ல முடியும்.”

மேலும், கடந்த 22 ஆண்டுகளாக ஆனந்த் நிகழ்த்தியுள்ள சாதனைகளால் இந்தியாவில் செஸ் விளையாட்டில் பெரும் ஆர்வம் ஏற்பட்டு, ஒரு செஸ் புரட்சியே நடந்துள்ளது. இப்போது இந்தியாவில் 34 கிராண்ட் மாஸ்டர்களும், 70-க்கும் மேற்பட்ட இண்டர்நேஷனல் மாஸ்டர்களும் உள்ளனர். பணம் அதிகம் புழங்காத செஸ் விளையாட்டில், இத்தகைய மறுமலர்ச்சியை, ஆனந்த் தனியொரு மனிதராக நிகழ்த்திக் காட்டியுள்ளார் என்றால் அது மிகையில்லை. இதை நிகழ்த்தியும், 27 ஆண்டுகளாக, இன்று வரை (44 வயது வரை) இந்தியாவின் தலை சிறந்த ஆட்டக்காரராக விளங்கி வருகிறார்! இவற்றுக்கும் மேல், ஆனந்த் எவ்வகையான சாதனை செய்து, பாரத ரத்னாவுக்கு ஏற்புடையவராக ஆக முடியும் என்று புரியவில்லை.

சௌரவ் கங்குலி, ஆனந்த் வெளிநாட்டில் (ஸ்பெயின்) அதிகம் தங்கி இருப்பதால், அவருக்கு பாரத ரத்னா வழங்க ஒரு தயக்கமிருக்கலாம் என்று கூறியிருப்பதை ஏற்க இயலாது. வெளி நாட்டவரான நெல்சன் மண்டேலாவுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டிருக்கும்போது, வெளிநாட்டில் தங்கியிருக்கும் “இந்திய” ஆனந்துக்கு வழங்குவதில் என்ன தயக்கம்! ஆனந்த் வட இந்தியராக இருந்திருந்தால், அவரது மகா சாதனைகளுக்கு அவருக்கு இந்நேரம் பாரத ரத்னா வழங்கப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது.

சச்சினுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டதற்கு, கிரிக்கெட் பிரபல விளையாட்டு என்பதனால், என்ற கூற்றை ஓரளவு தான் ஏற்க முடியும். பாரத ரத்னா பீம்சென் ஜோஷி மாமேதை என்பதில் ஐயமே இல்லை. ஆனால், அவரது ஹிந்துஸ்தானி இசையை எத்தனை சாதாரணர்களால் புரிந்து ரசிக்க இயலும். அதனால், பிரபலம் என்பது அளவுகோல் ஆகாது. உண்மை என்னவெனில், ஆனந்த் போல அல்லாமல், சச்சினின் இமேஜ் திறமையாக உருவாக்கப்பட்டு பேணிக் காக்கப்பட்டது. மீடியாவும் அதில் பங்களித்தது.

ஆனந்த், தனது ஒவ்வொரு பெரும் வெற்றிக்குப் பிறகு, மீடியாவில் தோன்றி, அதற்கான அவரது உழைப்பை, சிரமங்களைப் பற்றி பெரிய அளவில் பேசியதில்லை. அதனால், செஸ் விளையாட்டு குறித்து ஓரளவு அறிந்தவர் மட்டுமே, அவரது ஹிமாலய சாதனையின் வீச்சை புரிந்து கொள்ள முடிகிறது. மேலும், சச்சினுக்கு பல மும்பை (சினிமா, அரசியல், தொழில்துறை) பிரபலங்களின் ஆதரவு சதாசர்வ காலமும் இருந்து வருகிறது. தெற்கில் இருக்கும் பிரபலங்களும், இந்திய செஸ் ஃபெடரேஷனும் இது போன்ற ஒரு status-ஐ ஆனந்துக்கு ஏற்படுத்த தவறி விட்டனர். இதனாலேயே, ’சச்சினுக்கு பாரத ரத்னா’ என்பது கடந்த 2 ஆண்டுகளாக கேட்பது போல ஆனந்துக்கு பாரத ரத்னா என்ற கோரஸ்/கோஷம் எந்த மட்டத்திலும் பெரிதாக கேட்காததற்கு இன்னொரு முக்கியக் காரணம்.

காங்கிரஸ் கட்சி ஏற்கனவே சச்சினை ராஜ்யசபா உறுப்பினராக ஆக்கியுள்ளது. இப்போது, சரியான சூழலில், அவருக்கு பாரத ரத்னா வழங்கி அவரை காங்கிரஸ் அனுதாபியாக மாற்றியிருக்கிறது. மெல்ல மெல்ல, அவரை தேர்தல் பிரச்சாரத்துக்கு ஓரளவுக்கு பயன்படுத்திக் கொள்ள ஒரு யுக்தியாக இது இருக்கலாம். நன்றியுணர்ச்சி சச்சினுக்கு மட்டும் இல்லாமல் இருக்குமா?!? இறுதியாக, சச்சினுக்கு பாரத ரத்னா வழங்கக்கூடாது என்பதல்ல வாதம். அவரை விட மகத்தான (விளையாட்டில்) சாதனையாளரான உலக செஸ் சேம்பியன் விஸ்வநாதன் ஆனந்துக்கு வழங்காததில் உள்ள நியாயமின்மையும், அரசியல் சார் ஓரவஞ்சனையும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.



இந்த இரண்டு கட்டுரைகளை (ஒன்று ஆனந்த் பற்றி, ஒன்று சச்சின் பற்றி) கட்டாயம் வாசிக்கவும்.

Viswanathan Anand is as precious as Sachin Tendulkar -----
http://www.rediff.com/sports/slide-show/slide-show-1-viswanathan-anand-is-as-precious-as-sachin-tendulkar/20131109.htm#5

Master Blaster or Master Laster: A revisionist look at Sachin Tendulkar’s career -----
http://www.livemint.com/Opinion/PKgPHTk5wKn8DZLRpCtCyK/Master-Blaster-or-Master-Laster-A-revisionist-look-at-Sachi.html

- எ.அ.பாலா

மேலே கையில் ஆனந்த் போட்டோ வரையற அன்னிக்கு ஆனந்துக்கு பாரத ரத்னா. அது வரைக்கும் யாரும் 'கை' கட்சியை திட்டாதீங்க.

Read More...

Saturday, November 16, 2013

சச்சின் !

குட் பை சச்சின் - நன்றி

Read More...

Friday, November 15, 2013

கலி முற்றிவிட்டது


"Jesus Sahasranama has its roots in the Syriac prayers of primitive Christians. Its form is derived from the Vedic hymns. Every epithet of the Divine contains quantum of 'esse' and the recital of holy names is conducive to mystical experience."

மேலும் தகவல் இங்கே : http://jesusmantra.com/

இவ்வளவு நல்ல விஷயங்கள் நடக்கிறது ஆனால் இதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல், ஈவெரா சரியா, ஈவேரா சரியா என்று அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்... கலி முற்றிவிட்டது

Read More...