பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 31, 2012

மூணு சீட்டு - எ.அ.பாலாஇட்லிவடை 10ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் சூழலில், நாமும் ஏதாவது ”குப்பையை” (இட்லிவடையை கொடுங்கையூருக்கு இணையாக வர்ணித்தது எழுத்தாளர் பாரா என்பதை நினைவு கூர்கிறேன்!) கொட்டுவோம் என்ற மிக உயர்ந்த எண்ணத்தில் இந்த இடுகை!

டிஸ்கிளைமர்: இவ்விடுகை ஸ்ரீராம் சிட்ஸ் நடத்தும் சீட்டு பற்றி என்று எண்ணி வந்தவர்கள் அப்பீட் ஆகிக் கொள்ளவும் :) சீட்டாட்டம் குறித்த பாலபாடம் பயின்றவரும், சீட்டாட்டத்தில் ரம்மி, டிரம்ப்ஸ் போன்ற ஒரு சில விளையாட்டுகள் தெரிந்தவர்களும் தொடர்ந்து வாசிக்கலாம். பெரும் ’ஜூதாடிகள்’ தெரிந்து கொள்ள இவ்விடுகையில் எதுவும் இல்லை.

ஒரு சீட்டுக்கட்டில் இருக்கும் 52 சீட்டுகளில், ஒவ்வொரு ஜாதியிலும் (இது பிரச்சினை பண்ணாத இஸ்பேட், ஆட்டின், டயமண்ட், கிளாவர் என்ற 4 ஜாதிங்க!) AKQJ 10 9 8 7 6 5 4 3 2 என்று 13 சீட்டுகள் இருக்கும். மூணு சீட்டை, ஒரு சீட்டுக்கட்டை வைத்துக் கொண்டு, மேக்ஸிமம் 17 பேர் விளையாடலாம் (17 * 3 = 51, 1 சீட்டு சும்மா). ஆனால், பொதுவாக 8லிருந்து 12 நபர்கள் ஆடினால் சுவாரசியமாக இருக்கும் (அனுபவம் பேசுகிறது). மூணு சீட்டை தொடர்ந்து ஒரு நாலைந்து நாட்கள் விளையாடினால், ஆனானப்பட்ட யுதிஷ்டிரர் விடாப்பிடியாக சூதாடி அனைத்தையும் தோற்றது குறித்த “நல்ல புரிதல்” ஏற்படும்!

ஆங்கிலேய துரைமார் ஆடிய போக்கர் (Poker) விளையாட்டின் இந்திய வடிவமாக மூணு சீட்டை கருதலாம். சீட்டுக்கட்டு குலுக்கப்பட்டு (shuffle) ஆட்டக்காரர் ஒவ்வொருவருக்கும் 3 சீட்டுகள் வழங்கப்படும். இது காசு வைத்து (stakes) ஆடப்படும் பந்தய விளையாட்டு என்பதில் சந்தேகம் கூடவே கூடாது. ஆடுபவர் தனது 3 சீட்டுகளை பிரித்துப் பார்த்து விட்டோ (SEEN) அல்லது பார்க்காமலோ (BLIND) "சூது” ஆடலாம்!

சீட்டுகள் குலுக்கப்படுவதற்கு முன்பே, ஆட்டக்காரர் ஒவ்வொருவரும், தீர்மானிக்கப்பட்ட ஒரு முன் தொகையை பொதுவில் செலுத்த வேண்டும். இதற்கு கிட்டி (KITTY) என்று பெயர். இந்த கிட்டி பணமும், தொடர்ந்து ஆடுபவர்கள் போடும் பந்தயத் தொகையும் (சீட்டைப் பார்த்து ஆடுபவர், Blindஆக ஆடுபவர் செலுத்தும் தொகையைப் போல ஒவ்வொரு ரவுண்டுக்கும் 2 மடங்கு!) இறுதியில் (அவரது மன அல்லது 3 சீட்டுகளின் வலிமையினாலோ) வெல்பவருக்கு போய்ச் சேரும். ஒரு ஆட்டம் என்பது பல (பந்தய) ரவுண்டுகள் செல்லும்.

3 சீட்டுகள் சரியாக அமையாதவர்கள், கிட்டிக்கு முன்பணம் தண்டம் அழுததோடு நிறுத்திக் கொள்ளலாம். ஆனால், சூது தரும் போதையால், அனுபவஸ்தர்கள் கூட 2-3 ரவுண்டுகள் ஆடி விட்டுத் தான் நிறுத்துவர். கிட்டியில், பணமும் தொடர்ந்து ஆடுபவர்கள் கட்டும் பந்தயத்தொகையால் கூடிக்கொண்டே போகும். கிட்டியில் இறைந்து கிடக்கும் பணத்தைப் பார்க்கையில் வரும் போதை சோமரசத்தை விட அலாதியானது ;-)

தனது கையிலுள்ள 3 சீட்டுகளின் மதிப்பை (எந்தெந்த வகை ”3 சீட்டு”களுக்கு என்ன மதிப்பு என்று பின்னால் வருகிறது) வைத்து ஒவ்வொரு சீட்டுக்காரரும், ஒவ்வொரு ரவுண்டுக்கும் குறிப்ப்ட்ட பந்தயத்தொகையை கிட்டிக்கு செலுத்தி தொடர்ந்து விளையாடலாம். இது Blindஆக ஆடும் கனவான்களுக்குப் பொருந்தாது. அவர்கள் “Seen" ஆக ஆடுபவரை தொடர்ந்து ஆட ஏற்றி விட்டு அல்லது டென்ஷன் பண்ணி துரத்தி விட்டு தங்கள் பணியை செவ்வனே செய்யும் கவலையற்ற மனிதர்கள். அவர்கள் சீட்டுகளை பார்த்து ஆடுபவரை விட பாதி மடங்கே பந்தயத்தொகை செலுத்துவதும் அதற்கு ஒரு காரணம்!

இப்படி, சிலபல ரவுண்டுகளில் சிலர் வெளியேறி விடுவர். பெருஞ்சூதாடிகளும், மதிப்பு மிக்க சீட்டுகளை வைத்திருப்பதாக கருதுபவரும் தொடர்ந்து ஆடுவர். 3 பேர் மிஞ்சியிருக்கும் கட்டத்தில், இருவர் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள வாய்ப்புண்டு, அவர்களில் அதிக மதிப்புள்ள சீட்டுகளை வைத்திருப்பவர் தொடர்ந்து ஆடுவார். இதற்கு Side Show என்று பெயர். இதனால் இருவர் மட்டுமே மிஞ்சுவர். அல்லது ஒவ்வொருவராக வெளியேறி, 2 ஆட்டக்காரர்களே எஞ்சும் நிலை நார்மலாகவும் நிகழலாம்.

2 ஆட்டக்காரர்களே மிஞ்சியிருக்கும் கட்டத்தில் மட்டும் தான் ஆட்டம் முடியும் தறுவாய்க்கு வரும். அதற்கு முன், (சைட் ஷோ தவிர்த்து) யாரும் யாரையும் சீட்டுகளை காட்டச் சொல்ல, அதாவது அவரவர் சீட்டுகளின் மதிப்பை அறிந்து ஆட்டத்தை முடிக்க, ஆட்ட விதிகள் அனுமதிக்காது! தைரியமிருந்தால் ஆடு அல்லது துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடு என்பதே 3 சீட்டின் தலையாய நோக்கமாகும்! ”செய் அல்லது செத்து மடி” என்பதை முன் வைக்கும் வீர விளையாட்டாகவும் இதைப் பார்க்க முடிகிறது அல்லவா ?!?!

இருவர் மட்டும் மிஞ்சியிருக்கும் இக்கட்டத்தில் கிட்டியில் பந்தயப்பணம் குவிந்திருக்கும்! அந்த இருவரில் ஒருவர், மற்றவரிடம் அவரது சீட்டுகளை காட்டுமாறு (show) கேட்டால் (கேட்காமல் இருவரும் கிட்டியில் பணத்தைப் போட்டு தொடர்ந்து ஆடிக்கொண்டும் இருக்கலாம்!) ஆட்டமும் முடிவுக்கு வந்து, இருவரில் யாரிடம் அதிக மதிப்புள்ள 3 சீட்டுகள் உள்ளதோ, அவரே வென்றவராக அறிவிக்கப்பட்டு, கிட்டியில் உள்ள மொத்தப் பணத்தையும் அவர் அள்ளிக் கொள்வார்! சம மதிப்பு எனில், ஷோ கேட்டவர் காலி!

வேடிக்கை பார்ப்பவர்களுக்கு இது கண்கொள்ளா காட்சி, ஆட்டத்தில் பணம் நிறைய விட்டவர்களுக்கு இது வயிற்றெரிச்சல்! ஒரே ஆட்டத்தில், நிறைய ஜெயிக்கலாம், நிறையவும் தோற்கலாம், 3 சீட்டில், இன்னொரு எ.கொ.ச உண்டு! ஆட்டத்தின் நடுவில், பந்தயத்தின் சூட்டைத் தாங்க முடியாமல் வெளியேறிய நபர், வென்றவரின் 3 சீட்டுகளை விட மதிப்புள்ள சீட்டுகளுக்கு சொந்தக்காரராக இருந்திருக்க வாய்ப்புண்டு!

இப்போது, 3 சீட்டுகளின் மதிப்பு குறித்து: (மேலிருந்து கீழாக) 4 சாதிகளுக்கும் ஒரே மதிப்பு தான்.

1. ட்ரிபிள் (TRIPLE): AAA முதல் 222 வரை

2. ஃப்ளாஷ் (FLASH) அல்லது ஒரிஜினல் ரம்மி (ஒரே ஜாதி): A23, AKQ, KOJ, ... 432 வரை

3. ரன் (RUN): ஃப்ளாஷ் போலவே, ஆனால் ஜாதி கலந்த 3 தொடர் சீட்டுகள்

4. கலர் (COLOUR): ஏதோ 3 சீட்டுகள், ஒரே ஜாதி (இருவரிடம், முதல் 2 சீட்டுகள் சம மதிப்பாக இருக்கையில், அதாவது ஒருவரிடம் டயமண்ட் 6,7, மற்றவரிடம் கிளாவர் 6,7 என்று வைத்துக் கொண்டால், யாரிடம் 3வது சீட்டு பெரியதாக உள்ளதோ, அவரே வென்றவர் ஆவார். 3வது சீட்டும் சம மதிப்பெனில், ”தைரியம் இன்றி” ஷோ கேட்டவர் காலி! இது, மேற்கூறிய ஃப்ளாஷ் மற்றும் ரன்னுக்கும் பொருந்தும்!

5. ஜோடி (PAIR): AA* முதல் 22* வரை. சம மதிப்பு ஜோடி எனில், 3வது சிட்டு முக்கியத்துவம் பெறுகிறது

6. டாப் (TOP): மேற்கூறிய எந்த வகையிலும் சாரா 3 சீட்டுகள் ஆட்டத்தின் கடைசியில் எஞ்சிய இருவரிடம் இருக்கும் சூழலில், 3 சீட்டுகளில் “டாப்” சீட்டு வின்னரை நிர்ணயிக்கும். டாப் சீட்டு சம மதிப்பெனில், மற்ற இரண்டு சீட்டுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

3 சீட்டு மன வலிமையை வளர்க்க பெரிதும் உதவுகிறது! 3 சீட்டு குறித்த ஆராய்ச்சிக் கட்டுரை இத்துடன் இனிதே நிறைவடைகிறது! இனி, Go .... Play ..... என்சாய் மக்களே :) ஜூதாடிகள் தங்கள் கலக்கல் அனுபவங்களை பின்னூட்டத்தில் பகிரலாம்.

எ.அ.பாலா
http://balaji_ammu.blogspot.com

இன்று ஹாலோவினுக்கு பாலாவின் பதிவு தான் சரியாக இருக்கும் என்று...

Read More...

ஏக் தா கட்கரி


எந்த புத்தில் எந்த பாம்பு இருக்கும் என்ற பழமொழி பிஜேபி கட்சிக்கு நிச்சயம் நன்றாக பொருந்தும். நிதின் கட்கரி மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு நிச்சயம் பாஜக மீது பூசப்படும் கரி. வாய் கிழிய ஊழல் பற்றி பேசிய பாஜக இப்போது தங்கள் கட்சி தலைவர் மீதே இப்படிப்பட்ட குற்றசாட்டு இருக்கும் போது வாய் மூடி மௌனமாக இருக்கிறது.

எல்லா பாஜக முடிவிலேயும் மூக்கை நுழைக்கும் ஆர்எஸ்எஸ் "ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ள பாஜ தலைவர் நிதின் கட்கரி பதவி விலக வேண்டுமா என்பதை அக்கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்" என்று ஜகா வாங்குகிறது.

அத்வானி வெளிப்படையாக தன் பிளாகில் எழுதுவார் ஆனால் இதை பற்றி மூச்சு விடவில்லை. இன்று மும்பைக்கு வந்து இறங்கிய கட்கரியிடம் ஊழல் குற்றச்சாட்டு பற்றி கேட்ட போது "ஏன் ராபர்ட் வதேராவுக்கு எதிராக விசாரணை இல்லை?" என்று எதிர் கேள்வி கேட்கிறார். நியாயமான கேள்வியாக இருந்தாலும், கட்கரி மீது உள்ள ஊழல் குற்றசாட்டுக்கு பதில் கிடையாது. பிஜேபி என்ற கட்சி அடுத்த முறை ஆட்சிக்கு வருவதை காட்டிலும் காங்கிரஸே வரலாம் என்பது என் எண்ணம்.

மோடி சசி தரூரின் தோழி சுனந்தா 50 கோடி மதிப்புள்ள கேர்ல் ஃப்ரெண்ட் என்று பேசுவதை விட்டுவிட்டு கட்கரி பற்றி டிவிட் செய்ய வேண்டும்.

கட்கரியிடம் இட்லிவடை கேட்க விரும்பும் ஒரே கேள்வி நீங்கள் ராபட் மாதிரி பிஸினஸ் செய்பவரா அல்லது பொதுவாழ்கையில் ஈடுபடும் அரசியல்வாதியா ?

எனக்கு என்னவோ இவரும், எடியூரப்பா, ரெட்டி சகோ போன்றவர்கள் சேர்ந்து பிஜேபியை வைத்து பிஸினஸ் செய்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.

Read More...

புயல் பெயர் கதை


புயலுக்கு யார் பெயர் சூட்டிகிறார்கள் என்று தேடியதில் கிடைத்த விஷயம் இது. புயலுக்கு 1945 ஆம் ஆண்டு முதல் பெயர் சூட்ட ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு பிராந்தியத்திற்கேற்ப அந்தந்தப் பகுதிகளில் உள்ள நாடுகள் இணைந்து இந்த பெயர்களைச் சூட்டி வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், இலங்கை, பாகிஸ்தான், தாய்லாந்து, மியான்மர், ஓமன், ஆகிய நாடுகள் இணைந்து பெயர்களை முடிவு செய்கின்றன. இந்தப் பெயர்கள் ஒவ்வொன்றாக சூட்டப்பட்டு வருகின்றன.

கடைசியாக முர்ஜான் என்று ஓமன் நாடு பெயர் வைத்தது. இந்த முறை பாகிஸ்தான். அடுத்து இலங்கை மகாசேன் என்று பெயர் சூட்டியிருக்கிறது (அது எப்போது வரும் என்று தெரியாது )

புயல்கள் பேரழிவை ஏற்படுத்துபவை. இந்த நிலையில், அவற்றுக்கு சூட்டுகிற சில பெயர்கள் குறிப்பிட்ட சாதி, மதம் கொண்ட மக்களின் உணர்வுகளை காயப்படுத்தக்கூடும் என்பதால் பொதுவாக புயலுக்கு பெயர் சூட்டுவதை தவிர்த்து வந்திருக்கிறோம் என்கிறார் இந்திய வானிலை ஆராய்ச்சி அதிகாரி.

பொதுமக்கள் இப்படி புயலுக்கு பெயரை சூட்ட விரும்பினால், அது குறித்து டெல்லியில் உள்ள வட்டார புயல் எச்சரிக்கை மைய இயக்குனருக்கு அனுப்பி வைக்கலாம் என்கிறார் சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் எஸ்.ஆர்.ரமணன்.

என்ன என்ன பெயர் சூட்டலாம் ?

25 வருடம் கழித்து வருவது என்றால் கமல்-முக்தா என்று வைக்கலாம்.
நேற்று வந்து இன்று கரையை கடக்கும் புயலுக்கு அருணகிரி-நித்தி என்று பெயர் சூட்டலாம்.


உங்களுக்கு தெரிந்த புயல் பெயர்களை கீழே பின்னூட்டத்தில் கொடுக்கலாம் !

Read More...

Tuesday, October 30, 2012

மேலும் நான்கு பேர்


சில நாட்கள் முன் அருண்பாண்டியன் மற்றும் சிலர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர். தொகுதி பிரச்சனை என்று குழந்தை கூட நம்பாத காரணம் சொன்னார்கள்.

அடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் 4 எம்எல்ஏக்கள், தொகுதிப் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரம் வாங்கித் தரும்படி சபாநாயகர் தனபாலிடம் அக்கட்சியின் கொறடா சந்திரகுமார் மனு அளித்தார்.

இன்று காலையில் மேலும் 4 எம்.எல்.ஏக்கள் தலைமைச் செயலகம் சென்று முதல்வர் அலுவலக அதிகாரிகளைச் சந்தித்து, தாங்களும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக தங்களுக்கும் நேரம் ஒதுக்கித் தரும்படி மனு கொடுத்தனர். ஆனால், அவர்களது மனுவை வாங்க, அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால், தாங்கள் மனுவை முதல்வருக்கு தபாலில் அனுப்ப உள்ளதாக நிருபர்களிடம் அவர்கள் தெரிவித்தனர்.

திடீர் என்று எல்லோருக்கும் தொகுதி மேல் பயங்கர பற்று வந்துவிட்டது. இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சும்மாவா சொன்னார்கள் ?

Read More...

எச்சரிக்கை - வங்க கடலில் புயல் அபாயம்


கேள்வி:- “நக்கீரன்” வார இதழிலேயே “யாருக்கு யார் எதிரி” என்ற தலைப்பில்தங்கள் துணைவியாரைப் பற்றியும், மகளைப் பற்றியும், மகன்களைப் பற்றியும் பரபரப்பு காட்சிகள் என்றெல்லாம் கட்டுரை வெளியிட்டிருக்கிறார்களே?


கருணாநிதி:- தம்பிகள் டி.ஆர். பாலு, பழனி மாணிக்கம் இருவருக்கும் இடையேஉருவான பிரச்சினையில் நான் உடனடியாக எழுதிய “உடன்பிறப்பு” கடிதத்திற்குப் பிறகு இருவருமே அமைதியாகி விட்டார்கள். பிரச்சினையும் முடிந்துவிட்டது. ஆனால் “நக்கீரன்” போன்ற பத்திரிகைகள் நம்முடைய இயக்கத் தலைவர் களின்பால் பரிவு கொண்ட ஏடுகள் என்று வெளியிலே சொல்லிக் கொண்டாலும், உள்ளூர அவர்களுக்கு இருக்கின்ற உணர் வினை வெளிக்காட்டிச் செய்தி வெளியிட்டிருக் கிறார்கள். இதில் வேதனையான வேடிக்கை என்னவென்றால், இந்தப் பிரச்சினை பேசப்பட்ட போது, இதில் துளியும் சம்மந்தம் இல்லாத என் துணைவியார் ராஜாத்தி அம்மையார் பற்றியும், என் மகள் கனிமொழியைப் பற்றியும் எழுதியிருப்பது வேதனை அளிக்கக் கூடியது. என் செய்வது? இருவரும் பார்ப்பன சாதியிலே பிறந்த பெண்களாக இருந்திருந்தால், தங்கள் மீது முன்போலப் பயங்கர வழக்குகள் பாயுமே என்ற பயம் இருந்திருக்கும். ராஜாத்தி அம்மாளும், கனிமொழியும், நானும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிற்றே; அதனால் எதையும் எழுதலாம் என்ற நெஞ்சுரமும் மனப்பான்மையும் “நக்கீரன்” போன்ற ஏடுகளுக்கு ஏற்பட்டதில் ஆச்சரியம் இல்லை. வாழ்க; தமிழ்ச் சமுதாயம்! வாழ்க, வாழ்கவே!

நன்றி: தினமணி

வங்க கடலில் மையம் கொண்டிருக்கும் புயல் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில், பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் புயல் உண்டாக கூடும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Read More...

Monday, October 29, 2012

மலர்கள் பேசினால்... - ச.சங்கர்

இன்ஸ்பெஸ்டர் ஆனந்த் ஹோனப்பாவுக்கு பெங்களூருவுக்கு அருகில் ஒரு சின்ன புறநகர் காவல்நிலையத்தில் வேலை பார்க்கிரோமென்ற வருத்தமெல்லாம் துளிக்கூடக் கிடையாது. அவ்வளவாக வீடுகள் இல்லாமல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இந்தக் குளு குளு பசுமையும், நாசியைத் துளைக்கும் புதிதாய்ப் பூத்த பூக்களின் நறுமணமும் கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் நகரங்களில் கிடைக்குமா?

ஆனந்துக்கு பூக்களென்றால் அவ்வளவு பிடிக்கும். காலேஜில் கூட தாவரவியல்தான் படித்தார்.அப்புறம் எப்படியோ ஒரு சந்தர்ப்பவசத்தால் போலிஸில் சேர்ந்துவிட்டார். வேலை பார்த்த போலிஸ் நிலையத்தைச் சுற்றி தோட்டம் போட்டு பூச்செடிகளைப் பராமரிப்பதும் அவரின் விடாமுயற்சியில் விளைந்ததுதான். ரோஜா,மல்லிகை,சம்பங்கி,ஹைட்ராஞ்சியா என எல்லாப் பூச்செடிகளும் பூத்துக் குலுங்கி மணம் கமழ்ந்தாலும், சின்னச் சின்ன பூக்கள் ஒன்று சேர்ந்து, ஒரு பெரிய பின்க் வண்ணப் பூப்பந்து போல காட்சியளிக்கும்கும் ஹைட்ராஞ்சியா மலர்களின் அழகு கண்ணைக் கொள்ளை கொள்ளும்.வசந்த காலம் தொடங்கி விட்டால் ஆனந்த் சின்னக் குழந்தை போல் குதூகலிப்பார்.

இந்த வருடம் செடிகள் பூக்கத் துவங்கிய போது ஆனந்திடம் எந்த உற்சாகமும் இல்லை. தன் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார்.தோட்டத்தையும் பூக்களையும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் எரிந்து விழுந்தார்.அவருடன் வேலை பார்த்த அனைவருக்குமே அவர் நிலைமை வருத்தமளிப்பதாக இருந்தாலும் அனைவருக்கும் அவரது இந்த நிலைமைக்கான காரணம் தெரிந்தே இருந்தததால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அவர் இன்னும் திருமதி சாரதா பசவப்பாவை மறக்கவில்லை.
ஆனந்தையும் சாரதாவையும் அறிமுகம் கொள்ள வைத்ததே இருவருக்கும் பூக்களின் மேலிருந்த அதீதக் காதல்தான்.போன வருடம்தான் சாரதாவும் பசவப்பாவும் மைசூர் ரோடில் உள்ள அந்த பங்களாவில் குடி புகுந்தார்கள்.வந்த கொஞ்ச நாட்களிலேயே அந்த பங்களாவின் முன்புறமிருந்த கேட்பாரற்றுப் பாழடைந்து கிடந்த தோட்டத்தை சாரதா மாற்றியிருந்த விதம் மாயவித்தை என்றுதான் சொல்லவேண்டும். பதியனிட்டு அரும்பி நிற்கும் ரோஜாக்களும்,பங்களாவின் சுவரைத் தழுவிப் படர்ந்து நிற்கும் முல்லைப் பந்தலும் நடுவிலுள்ள இடங்களிலெல்லாம் சீராக வெட்டப்பட்ட புல்வெளி என்று எங்கு திரும்பினாலும் பச்சைப் பசேல் என்று இரண்டே மாதத்தில் அந்தப் பங்களாவின் முன்புறத் தோற்றமே மாறிப்போயிருந்தது.காம்பவுண்ட் சுவரின் உள் புறமெங்கும் வரிசையாக ஹைட்ராஞ்சியா செடிகள் புதரைப் போல வளர்ந்து பின்க் நிறப் பூப்பந்துகளுடன் காட்சியளித்தது.

ஆனந்த் நாற்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் கட்டை பிரம்மச்சாரி.சாரதா அவரை விட இரண்டு அல்லது மூன்று வருடங்கள் சின்னவளாக இருக்கலாம்.ஆளை அடித்துப் போடும் அழகெல்லாம் கிடையாது.ஆனால் அவள் முகத்தில் நிரந்தரமாகக் குடியிருக்கும் வசீகரப் புன்னகை யாரையும் ஈர்க்கும் காந்த சக்தி கொண்டது.

தினமும் அவள் வீட்டு வழியாக ஜீப்பில் போகும் ஆனந்த் தோட்டத்தின் அழகையும் நேர்த்தியையும் ரசித்த படியே செல்வார். ஆனந்த் இயல்பிலேயே பெண்களோடெல்லாம் அதிகம் பேசிப் பழக்கமில்லாதவர்.அப்படிப்பட்டவர் ஒரு நாள் பொறுக்க முடியாமல் ஜீப்பை நிறுத்தி,அவள் வீட்டுத் தோட்டத்தில் நின்று கொண்டிருந்த சாரதாவிடம் போய் பக்கா போலிஸ் தொனியில் " இந்த ஏரியாவிலேயே அழகான தோட்டம் உங்களுடையதுதான் " என்று சொல்லிவிட்டு சாரதா பதில் சொல்வதற்குள் விடு விடுவென்று வந்து ஜீப்பில் ஏறிச் சென்றுவிட்டார்.சாரதா அதே புன்னகை தவழும் முகத்துடன் அவர் போன திசையை ஆச்சரியமாகப் பார்த்தாள். ஒரு பெரிய நட்பின் கோலாகலமான துவக்கமாக இல்லாவிட்டாலும் கூட , வாரம் ஒரு முறையாவது அந்த வழியாகப் போகும் போது ஜீப்பை நிறுத்தி தோட்டத்தை ரசிப்பதென்பது ஆனந்தின் பழக்கமாகிப் போனது.சாரதாவின் கனிவான புன்னகையும், அவர் வரும் போது தரும் தேநீர் பிஸ்கட் உபசரிப்பும் சாரதாவிற்கும் அவரது வருகை பிடித்தேயிருந்தது என்பதைக் காட்டியது.

ஆனால் பசவப்பாவை முதல் முறை பார்க்கும் போதே ஆனந்திற்கு ஏனோ பிடிக்காமல் போனது.அவரது சற்றே நீண்டு வளைந்த மூக்கும் ஆளைக் குத்தும் பார்வையும் கழுகை நினைவுபடுத்தும்.ஆனந்த் அவரிடம் தோட்டம் மற்றும் பூக்களின் அழகு பற்றிப் பேசும் போது பசவப்பாவின் முகம் போன போக்கே அவருக்கு இதிலெல்லாம் துளிக்கூட ஆர்வம் இல்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக்கியது.

"அவருக்கு இந்த தோட்டம் பூக்கள் இதிலெல்லாம் ஒரு ஈடுபாடும் இல்லை. ஆனால் எனக்குப் பிடிக்கும் என்பது வரை புரிந்து வைத்திருக்கிறார்.அது வரைக்கும் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.இவரும் மாதத்தில் பாதி நாள் வெளியூர் போய் விடுகிறார். நான் தனியாகப் பொழுதைக் கழிப்பதற்கு, இந்தத் தோட்டம்,செடி ,கொடி ,பூக்கள் மட்டும் இல்லை என்றால் எனக்கு இன்னேரம் பைத்தியமே பிடித்திருக்கும் " என்பாள் சாரதா.

சாரதாவிற்கும் ஆனந்துக்குக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு , காதல் சம்பந்தப்பட்டதெல்லாம் இல்லை என்று அந்த ஊருக்கே நன்றாகத் தெரியும்.இந்த நட்பை அப்படியெல்லாம் கிசு கிசுவாகத் திரித்துப் பேசக் கூட அவர்களுக்கு போரடித்தது.ஏனென்றால் ஆனந்த் ஒரு டிபிகல் போலிஸ்கரர்.சாரதாவோ காதல் கிசு கிசுவில் அடிபடும் அளவுக்கு அழகானவளும் அல்ல. அதனால் சாரதாவும் ஆனந்தும் அடிக்கடி சாரதா வீட்டுத் தோட்டத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தாலும் அவர்களது முதுகுக்குப் பின்னால் கூட யாரும் அவர்களது நட்பைப் பற்றி தவறாக கிசுகிசுப்பதில்லை. ஆனால் சில மாதங்களிலேயே இருவரது அடிமனத்திலும் அடுத்தவர் மேல் ஒரு ஈர்ப்பு உருவாகியிருந்தது.ஆனால் இருவருமே அதைப்பற்றி நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ அடுத்தவருக்கு உணர்த்த முற்பட்டது கூட இல்லை.

ஆனந்தின் மேல் ஏற்பட்டு விட்ட அதீத நம்பிக்கையில் சாரதா பேச்சுவாக்கில் எப்போதாவது தன் கணவர் பசவப்பாவைப் பற்றி சொல்வதுண்டு.அப்படி ஏதாவது சொன்னாலும் ,சொல்லக் கூடாததைச் சொல்லி விட்ட மாதிரி பாதியிலேயே பேச்சை மாற்றி விடுவாள்.அப்படி ஒரு முறை பசவப்பா பற்றிச் சொல்லும் போது சாரதா "அவருக்கு மனநிலை சரியில்லையோ என்று எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. ஏதாவது வியாதி என்றாலாவது சரி பண்னலாம்.ஆனால் இவருக்கிருப்பதோ யாராலும் சரி பண்ண முடியாத ஒரு நிலை..அளவுக்கு அதிகமாக எதிர்பார்த்தவனுக்கு எதுவுமே கிடைக்காத மாதிரி வாழ்க்கையின் மேல் எப்போதும் ஒரு வெறுப்பு.எதையும் பிடிப்பதில்லை யாரையும் பிடிப்பதில்லை" என்றாள்.

"ஏன்? வாழ்க்கையில் அவருக்கு எல்லாமும் தான் நிறைவாகக் கிடைத்திருக்கிறது..நீ உட்பட" என்றார் ஆனந்த் தனக்கே உரித்தான பாணியில் முகத்தில் அடித்தமாதிரி.
"அவருக்கு வீட்டுக்கு வரவே பிடிக்கவில்லை.வாயைத் திறந்து அப்படி ஒரு நாளும் சொன்னதில்லை.ஆனால் எப்பொழுது அடுத்த டூர் கிளம்புவோம் என்பது மாதிரியே பட்டும் படாமல் இருப்பார் "

"என்ன சொல்ல வருகிறாய் ? அவருக்கு உன்னைப் பிடிக்க....?" என்று கேட்க ஆரம்பித்து விட்டுப் பின் அடுத்தவரது அந்தரங்கத்தில் நுழைய முற்படும் தன் தவறை நினைத்து நாக்கைக் கடித்துக் கொண்டு கேள்வியைப் பாதியிலே நிறுத்திவிட்டார்.

"அவரை நான் எந்தக் குற்றமும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் அவரிடம் நான் எதுவும் கேட்பது கூடக் கிடையாது.ஏதாவது கேள்வி கேட்டாலும் அவருக்குப் பிடிக்காது.எரிந்து விழுவார். சில சமயம் அவரைப் பார்த்தலே எனக்குக் கொலை நடுக்கமாக இருக்கும்.இத்தனைக்கும் அவர் என்னை மிரட்டியதெல்லாம் கூடக் கிடையாது.அவரது செயல்பாடுகளே அப்படிக் கொடூரமானதாக இருக்கும் " என்றாள் குரலில் இழையாடும் சோகத்துடன்.

ஆனந்துக்கு சாரதாவின் மெல்லிய கைகளைப் பிடித்துக் கொண்டு ஆறுதல் சொல்லவேண்டும் போல இருந்தது,ஆனால் ஒன்றும் சொல்லாமல் மெளனமாக சாரதா கொடுத்த டீயை உறிஞ்சியபடி தோட்டத்தை வெறித்தார்.அது கிட்டத்தட்ட கோடையின் கடைசிக் காலம்.இருந்தும் தோட்டத்தில் பின்க் வண்ண ஹைட்ராஞ்சியா மலர்ப் பந்துகள் அழகாகப் பூத்துக் குலுங்கியிருந்தது.

செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி சாரதா சுடப்பட்டாள். .32 மிமி ரிவால்வரின் சத்தம் நடு நிசியில் அதிர்ந்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் அனைவரையும் எழுப்பி விட்டது.வெடிச்சத்தமும் பின் தீனமான அலறலும் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் சுதாரித்துக் கொண்டு காவல் நிலையத்துக்குப் போன் பண்ணுவதற்குள் காலம் கடந்து விட்டது. சாரதா இறந்து போன செய்தி மறுநாள் காலைதான் அவருக்குத் தெரிய வந்தது.அன்றிரவு ட்யூட்டியில் இருந்த கான்ஸ்டபிள் உடனே இரவோடிரவாக தனக்கு தகவல் தெரிவிக்காததற்காக ஆனந்த் இன்று வரை அவரை மன்னிக்கவில்லை.

அந்தக் கொலைக் கேசை விசாரித்த போது ஒரு பற்றற்ற மூன்றாம் மனிதரின் பாவனையுடன்தான் ஆனந்தின் விசாரணை இருந்தது.பசவப்பா சொன்ன கதையையும் அதே பாவனையில் தான் கேட்டுக்கொண்டாரேயன்றி வேரொன்றும் சொல்லவில்லை.
பசவப்பா "காலை 2 மணி இருக்கும் சாரதா முழித்துக் கொண்டு, கீழே ஹாலில் ஏதோ சத்தம் கேட்கிறதென்றாள்.அவளுக்கு இப்படியான பிரமையும் பயமும் அடிக்கடி வரும்.அதனால் நானும் எப்போதும் போல் கண்டுகொள்ளாமல் பேசாமல் படுத்துத் தூங்கு என்று சொல்லிவிட்டு ,தூங்கிப் போய் விட்டேன். இருந்தாலும் கொஞ்ச நேரம் கழித்து மனது சமாதானமாகாமல் சாரதா கீழே போய்ப் பார்த்திருக்கிறாள் போலிருக்கிறது.என்னத்தைச் சொல்ல? அன்றைக்கென்று அவள் பயம் உண்மையாகப் போய் விட்டது.கீழே ஒரு திருடன் இருந்திருக்கிறான்..அவளைப் பார்த்தவுடன் பயத்தில் சுட்டு விட்டான் என்று தோன்றுகிறது.சத்தம் கேட்டு நான் கீழே வரும் போது அவன் தப்பி ஓடிக்கொண்டிருப்பதைத்தான் பார்த்தேன் " என்றார்
"பார்க்க எப்படி இருந்தான்.?" என்றார் ஆனந்த்
"இருட்டில் ஓடும் முதுகுப் புறத்தைத் தான் பார்த்தேன்.அதனால் ஒரு அடையாளமும் சரியாகத் தெரியவில்லை."

ஆனந்த் அறையை நோட்டம் விட்டார்.அறையே தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டு உலுக்கியது போல் கலைந்து கிடந்தது. சந்தேகத்திற்கு இடமில்லாமல் யாரோ வந்து திருட முற்பட்டது போலான தடையங்கள்.ஆனால் கலைத்துப் போட்டு சுலபமாக யாராலும் இது போல தடையத்தை உருவாக்கவும் முடியும்.

தூண்டித் துருவி விசாரணையும் , தேடலும் தொடர்ந்தாலும் எந்தவிதமான உருப்படியான துப்பும் துலங்கவில்லை. வீட்டிலும் தோட்டத்திலும் பல இடங்களில் தேடியும் சந்தேகப் படும்படியான கைரேகையோ,சாரதாவைக் கொல்லப் பயன் பட்ட துப்பாக்கியோ வேறெந்தத் தடையமோ கூடக் கிடைக்கவில்லை.சொல்லப் போனால் கொலைகாரனைப் பற்றி எந்தச் சின்னச் சுவடும் இல்லை. உண்மையிலேயே ஒரு திருடன் வந்தானா? இல்லை பசவப்பாவே தன் மனைவியைக் கொன்றுவிட்டு நாடகமாடுகிறாரா என்ற கோணத்திலும் விசாரணை சென்றது. ஆனால் அதற்கான எந்த ஆதரமோ முகாந்திரமோ கூடக் கிடைக்கவில்லை.
ஆனந்த் தொடர்ந்து எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல்தான் விசாரணையை மேற்கொண்டார். அவரின் இதயத்தின் ஆழத்தில் ஏற்பட்ட வலியையோ ,கோபத்தையோ அதனால் எப்படியும் கொலைகாரனைப் பிடித்தே தீரவேண்டுமென்ற வெறியையோ யாராலும் உணரக்கூட முடியவில்லை.ஆனாலும் அவருடைய விசாரணையின் முடிவில் " திருட வந்த அடையாளம் தெரியாத நபரால் சுடப்பட்டு இறந்தார் ' என்றுதான் கேஸை மூட வேண்டி வந்தது. ஆனந்துக்கு இந்த முடிவில் உடன்பாடில்லையென்றாலும், குற்றவாளியைப் பிடிக்க ஒரு துரும்பு கூடத் தடையமாகக் கிடைக்காத நிலையில் அவரால் வேரொன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் அவரளவில் இந்த " அடையாளம் தெரியாத நபர் " யாரென்பது பற்றி எந்தச் சந்தேகமும் இல்லை. சாரதாவின் பயந்த முகத்துடன் சேர்த்து ,அந்தக் கொலைகாரனின் வளைந்த மூக்கும் ஆளைக் குத்தும் கழுகுப் பார்வையும் அவர் கனவில் வந்து பல நாள் அவரைத் தூங்க விடாமல் அடித்துக் கொண்டிருந்தது.

சாரதா இறந்த ஒரு மாதத்திலெல்லாம் பசவப்பா வந்த விலைக்கு பங்களாவை விற்று விட்டு போய்விட்டார்.மும்பையில் செட்டிலாகி விட்டார் என்று சிலரும் அமெரிக்கா போய் விட்டாரென்றும் பலவிதமான வதந்திகள்.

இந்த நிகழ்வுகளால்தான் ஆனந்திற்கு இந்த வருடம் வசந்தகாலத்தின் வருகையோ பூக்கள் பூக்கத் தொடங்கியதோ எந்தப் பெரிய மகிழ்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. ஆனாலும் வழக்கம் போல வசந்தம் அந்த வருடமும் வரத்தான் செய்தது.வழக்கம் போல் பலவிதமான பூக்களின் நறுமணம் காற்றில் கலந்து வந்து நாசியைத் துளைத்தது. ஒரு நாள் ஜீப்பில் போய்க் கொண்டிருந்த ஆனந்த் , முன்பு பசவப்பாவும் சாரதாவும் இருந்த வீட்டின் முன் ஒரு பெண் நிற்பதைப் பார்த்து ஜீப்பை அனிச்சையாக நிறுத்தினார்.

தோட்டத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து கிட்டத்தட்ட "சாரதா" என்று கூப்பிடப் போனார்.பிறகுதான் அந்தப் பெண்ணிற்கு அதிகம் போனால் பதினெட்டு வயதிற்குள் தான் இருக்கும் என்பதையும் சாரதாவாக இருக்க வாய்ப்பே இல்லை என்பதும் அவர் அறிவுக்கு எட்டியது. புதிதாகக் குடிவந்திருப்பவர்களின் மகளாக இருக்கவேண்டும்.
இதற்குள் அந்தப் பெண் இவரைப் பார்த்து "வணக்கம் அங்கிள் " என்றது.
ஆனந்த் " வணக்கம்,.அப்பா அம்மா வீட்டில் இல்லியா ?" என்றார். அந்தப் பெண் சற்றே கலவரமாகி " இல்லை..வெளியில் போயிருக்காங்க..ஏதேனும் விசாரணையா?..நாங்க இந்த வீட்டுக்கு வந்து கொஞ்ச நாள்தான் ஆகிறது " என்றாள் படபட்ப்புடன்.

ஆனந்த் அவரமாக " இல்லை..இல்லை சாதரணமாகத்தான் கேட்டேன் "என்றார்.
திரும்பவும் தனிச்சையான ஆர்வம் தொற்றிக் கொள்ள அந்தப் பெண் " இந்த வீட்டில் முன்பு நடந்த எல்லா விஷயங்களும் எனக்கும் தெரியும்.இன்னும் அந்தக் கொலைகாரனைப் பிடிக்க முடியவில்லை இல்லையா? " என்றாள்

"ஆமாம்..இன்னும் பிடிக்கவில்லை " என்றார் ஆனந்த் அசுவாரசியமாக
" இது மாதிரி ஒரு அழகான பூந்தோட்டத்தை இதற்கு முன்னால் நான் பார்த்ததே இல்லை .சாரதா மிக மென்மையானவராகவும் , பூக்களை அதிகம் நேசிப்பவராகவும் இருந்திருக்கவேண்டும்.இல்லையா? " என்றாள்.

" நீ சொல்வது முற்றிலும் உண்மை " என்று சொல்லிக் கொண்டே ஆனந்த் ,சாரதாவை முதன் முதலில் சந்தித்த நினைவுகள் தந்த சோகத்துடன் காப்பவுண்ட் ஓரமாக பந்துக் குவியலாகப் பூத்திருந்த நீல நிற ஹைட்ராஞ்சியா மலர்களை வாஞ்சையுடன் தடவினார். பின் ஏதோ நினைவுக்கு வந்தது போல் ,தூக்கி வாரிப் போட்டது போல் "நீல நிறம் " என்றார். திரும்பவும் அந்தப் பூக்களை உற்று நோக்கியவாறு "நீல நிற மலர்கள்.போனமுறை இந்தச் செடிகளில் பின்க் வண்ண மலர்கள் பூத்திருந்தன்.இப்போது நீல நிறத்தில் " என்றார்.
அந்தப் பெண் ஒன்றும் புரியாதவளாக " என்ன சொல்கிறீர்கள் " என்றாள்

உனக்கு ஹைட்ராஞ்சியா மலர்களைப் பற்றித் தெரியுமா ?"ஹைட்ராஞ்சியா மலர்கள் சாதாரணமாக பின்க் நிறத்தில் பூக்கும்.ஆனால் மண்ணில் இரும்புச் சத்து கூடுதலாக இருந்தால் அதன் காரணமாக அதே செடியில் மலர்கள் நீல நிறத்தில் பூக்கத் தொடங்கிவிடும் இதோ இந்த மலர்களைப் போல "

"சரி..இந்த மண்ணில் இரும்புச் சத்து கூடியிருக்கிறது போல் இருக்கிறது"
" ஆமாம்..இந்த செடிகளுக்கு அடியில் உள்ள மண்ணில் போன வருடத்தை விட இந்த வருடம் இரும்புச்சத்து கூடித்தான் இருக்கிறது" என்றார் கண்கள் பளபளப்பாக " ஒரு மண்வெட்டி கிடைக்குமா?" என்றார்.
ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் விழித்த அந்தப் பெண் மண்வெட்டியைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

மண்வெட்டியால் அந்த ஹைட்ராஞ்சியா செடிகளின் அடிப்பாகத்தைத் தோண்டி, அங்கு துருப்பிடித்த நிலையில் இருந்த .32 மிமி ரிவால்வரைக் கண்டெடுத்த போது ஆனந்தின் முகத்தில் பெரிதாக வெற்றி பெற்றுவிட்ட தோரணையெல்லாம் இல்லை.அந்த ரிவால்வர் பசவப்பாவுக்குச் சொந்தமானதென்றும் அதனால்தான் சாரதா கொல்லப்பட்டிருக்கிறார் என்று நிரூபித்து பசவப்பாவை தேடிப்பிடித்து தண்டனை வாங்கிக் கொடுத்த போதும் அவருக்கு பெரியதாக சந்தோஷமெல்லாம் ஒன்றும் இல்லை.

ஆனால் தானும் சாரதாவும் பெரிதும் நேசித்த ஹைட்ராஞ்சியா மலர்கள் வண்ண மாற்றத்தின் மூலம் தன்னுடன் பேசி சாரதாவின் கொலையாளியைக் கண்டு பிடிக்க உதவியது என்ற நினைப்பே அவருக்கு மன நிறைவைக் கொடுத்தது.

Henry Slesar எழுதிய A Cop who loved flowers என்ற கதையின் தழுவல்.

பின்குறிப்பு : கீழே பின்க் மற்றும் நீல ஹைட்ராஞ்சியா மலர்களின் படங்கள் கொடுத்துள்ளேன்.யாராவது இதன் தமிழ் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள் :)
- ச.சங்கர்அடுத்த வாரம் மண்டே மர்மங்கள் தொடருமா ?

Read More...

Sunday, October 28, 2012

இட்லிவடை பற்றி பா.ராகவன்

Read More...

Saturday, October 27, 2012

திரையுலகம் - எனக்குத் தெரிந்தவை! - அருண் வைத்யநாதன்


'அச்சமுண்டு அச்சமுண்டு' படம் புகழ் அருண் வைத்யநாதன் பலருக்கு தெரிந்திருக்கும். வலைப்பதிவு ஆரம்ப காலத்தில் 'அகர தூரிகை' என்ற தன் வலைப்பதிவில் எழுதிக்கொண்டிருந்தார். தனக்குச் சரியென்று தோன்றுவதை அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும், நகைச்சுவை கலந்தும் தன் எழுத்தில் வெளியிடுவார். 'நச் பூமராங்' நல்லா எழுதுவார். ஆரம்பத்தில் இட்லிவடையில் கூட எழுதியிருக்கார்.

அருண் ஐ டி வேலைக்காக அமெரிக்கா வந்த பொழுதிலும் தன் தணியாத தாகமான திரைப்படத் துறையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். நியுயார்க் ஃப்லிம் அகடமியில் படித்தும் சின்ன சின்னக் குறும் படங்களை எடுத்தும் வந்தார். அருண் இயக்கிய குறும் படங்கள் உலக அளவில் பல்வேறு அவார்டுகளை வென்றன. குறும் பட உலகில் ஒரு கவனிக்கத்தகுந்த இயக்குனரானார். இருந்தாலும் முழு நீளப் படம் ஒன்றை அதையும் தமிழில் எடுப்பது ஒன்றே அவர் கனவாக இருந்தது. 2005 அப்பறம் அவர் பிளாக் பக்கம் திரும்பி பார்க்கவில்லை. பிறகு அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரில்லர் படம் எடுத்தார் அருண் (தமிழ் வலைப்பதிவு வைத்திருந்தவர் வேற என்ன எடுப்பார் !). படத்தின் பிரிவியூவிற்கு என்னை அழைத்தார்... ஆனால் போக முடியவில்லை. படத்தில் நடித்த ஸ்நேகா, பிரசன்னா திருமணம் செய்துக்கொண்டார்கள். கைராசிக்காரர் !

அருணுடைய கனவு பல்வேறு போராட்டங்களுக்கு பின் 'அச்சமுண்டு அச்சமுண்டு' என்ற படம் மூலம் நனவாகியது. சீர்காழியைச் சேர்ந்த அருண், தற்பொழுது வசிப்பது சென்னையில்.

இட்லிவடையின் நீண்ட நாள் வாசகர் என்று சொல்லிக்கொள்வதில் அவருக்கு பெருமையா என்று தெரியாது ஆனால் இட்லிவடைக்கு பெருமை. அன்று முதல் இன்று வரை படம் எடுத்தாலும், எழுதினாலும் ஆத்மார்த்தமாக செய்வார்.

பிறந்த நாள் கொண்டாடும் இந்த நாளில் இட்லிவடைக்கு ஸ்பெஷலாக அவருடைய 'திரையுலகம் - எனக்குத் தெரிந்தவை!' என்ற கட்டுரையை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி
- இட்லிவடை

திரையுலகம் - எனக்குத் தெரிந்தவை! - அருண் வைத்யநாதன்

அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல் என்றால், முட்டாள்களின் கடைசிப் புகலிடம் சினிமா என்பது போல் ஒரு எண்ணம் பலருக்கு இருக்கிறது. 'பையனுக்கு படிப்பு வர மாட்டேங்குது சார் - பேசாம சினிமாவுல சேத்துடலாம்னு இருக்கேன்' என்று பலர் பேசும் போது, சிரிப்புத் தான் வருகிறது. திரையுலகில் மட்டும் தான் கலை, பணம், அரசியல், புகழ் என்று அனைத்தும் கொட்டிக் கிடக்கிறது. அமெரிக்கத் தொலைக்காட்சியில் தொடராய் வெளிவரும் 'Entourage' பார்த்தால், திரையுலகில் வெற்றி பெற என்னென்ன சவால்களை சந்திக்க நேர்கிறது என்பதைத் தெளிவாய் தெரிந்து கொள்ளலாம். அமெரிக்காவில் இருக்கும் பல விதிகள் இங்கு செல்லுபடியாகாது - ஆனால், அங்கு நடக்கும் அத்தனை தவறுகளும் இங்கு நடக்கிறது. சொல்லப்போனால், இதில் ஜெயிக்க அதிபுத்திசாலியாய் இருக்க வேண்டும் என்பது எனது கணிப்பு. எங்கேயாவது விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், பெரும்பான்மை தருணங்களில் நான் சொல்வது தான் நிஜம். நான் போன வருடமே ஒரு வசூல் கியாரண்டி நடிகரை எனது திரைக்கதை ஒன்றில் நடிக்க ஒத்துக் கொள்ள செய்தேன், ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தையும் அதே கதையில் ஆர்வம் கொள்ள செய்தேன். எல்லாம் அழகாய் சேர்ந்து வரும் போது, ஏதோ ஒன்று முட்டுக்கட்டை போடும். முக்கால்வாசி, அது சம்பள விஷயமாகத் தான் இருக்கும். ஒன்றல்ல, இரண்டல்ல இதே போல் மூன்று முறை ,மூன்று விதமான கதைகளுக்கு நடந்து முடிந்தது. கட்டிப்பிடித்து 'சூப்பர் சார்' என்று சொல்வதாகட்டும், அடுத்த நாளே தொலைபேசி மூலம் "அந்த காரெக்டர் அப்படியே மனசுலேயே இருக்கு சார்' என்று சொல்வதாகட்டும், 'பட்ஜெட் அனுப்பிட்டீங்கன்னா, படத்தை அனௌன்ஸ் பண்ணிடலாம்' என்று வாக்குறுதி கொடுப்பதில் ஆகட்டும் - யாருமே இங்கு சளைத்தவர்கள் இல்லை. ஆனால், இதையெல்லாம் மீறித் தான் இங்கு ஜெயிக்க வேண்டும். சொல்லப்போனால், இது போன்ற சங்கதிகள் நடக்காத இயக்குனர்களே இல்லை என்பது தான் நிதர்சனமே உண்மை. பலருக்குத் திரையுலகைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வமிருப்பதால், இதில் நுழைய வேண்டும் என்று சிலர் துடிப்பதால்…நான் சொல்லப் போகும் சில விஷயங்கள் இவர்களுக்குப் பயனுள்ளதாய் இருக்கலாம்.

(1) திரைக்கதை எழுதி ஒரு பவுண்ட் ஸ்கிரிப்ட் வைத்துக் கொள்ளும் மகாத்மாக்களுக்கு - நல்ல விஷயம் தான். அடிப்படையானதும் கூட! ஆனால், தமிழகத்தில் எந்தக் கதாநாயகனும், தயாரிப்பாளரும் அதை படிக்கப் போவதில்லை. எல்லோருக்கும் பிடித்த வார்த்தை 'நரேஷன்' - அதாவது குழந்தைக்கு சொல்வது போல் "சார்…படம் ஓப்பனிங்க்லேயே சார்…" என்று ஆரம்பிக்க வேண்டும். இங்கு படிப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எனவே, விவரித்தல் கலையை பால பாடமாய் பயின்று கொள்ளுதல் உங்கள் பி.பிக்கு நல்லது.

(2) ஒரு விஷயத்தை எழுதி முடித்தவுடனேயே, கடவுள் நம்பிக்கை இருந்தால் , ஓடிப் போய் அவர் முன் இரண்டு கைகளையும் கூப்பி வைத்து வேண்டி விட்டு, அடுத்த நிமிடமே அதை முறைப்படி பதிவு செய்து கொள்ளுதல் புத்திசாலித்தனமான விஷயம். திரை எழுத்தாளர்களுக்கான சங்கம் ஒன்று இருக்கிறது. 'அதெல்லாம் சுத்த ஹம்பக்' என்று பெருமூச்சு விடுபவர்கள், பல சமயங்களில் பிரச்சினை என்று ஒன்று வரும் போது எல்லோரும் கேட்கும் விஷயம் "ஏம்பா கதையை ரெஜிஸ்டர் பண்ணியிருக்கியா? அந்த டீடெய்ல்ஸ் கொடு" என்பது தான் என்பதை மறந்து விடக் கூடாது. நீங்கள் சூடம் ஏத்தி சத்தியம் அடித்தாலும், மேற்கொண்ட விஷயம் இல்லையெனில் பலவான் வெற்றி பெறுவார்.

(3) எனக்குத் திரையுலகம் கத்துக் கொடுத்த மிகப்பெரிய விஷயம் - பொறுமை. இங்கு எதுவுமே கிடுகிடுவென நடக்காது. ஒவ்வொரு திரைப்படமும் உருவாக ஒரு வருடம் முதல் மூன்று வருடம் வரைக் காத்திருந்தே ஆக வேண்டும். பெரிய பெரிய இயக்குனர்களுக்கே அது தான் விதி. ஒரு திரைப்படம் செய்து முடித்தவுடன் நீங்கள் கற்றுக் கொள்ளும் முதல் விஷயம் இதுவாகத் தானிருக்கும் - "திரையுலகில் மிக சுலபமான விஷயம் ஒரு கதையை எழுதுவது தான்!". "எப்பிடிடா இந்தப் படம் எல்லாம் எடுக்குறாங்க" என்று நீங்கள் கேட்கும் அத்துணை படங்களும், பல சவால்களை மீறி கஷ்டப்பட்டுத் தான், ஒரு பொறுமையான போராட்டத்திற்குப் பிறகே வெளியே வந்திருக்கிறது.

(4) உங்களுக்கு ஜால்ரா போடாத, கதையறிவு உள்ள சில நண்பர்களை …குறிப்பாய் எழுத்தைப் பற்றித் தெரிந்த நாலு நண்பர்களை உரைகல்லாய் வைத்துக் கொள்ளுதல் சாலச்சிறந்த விஷயம். அவர்கள் ஆயிரம் கேள்விகள் எழுப்பும் போது, உடனடியாய் பதில் சொல்லி சமாளிப்பீர்கள். ஆனால் அந்தக் கேள்வியில் நியாயமிருந்தால், தானாகவே உங்கள் மனம் அதை செப்பனிடுவதில் இறங்கும். இது மிக முக்கியம்! அதே சமயம் - எதை நீங்கள் மிக உறுதியாக நம்புகிறீர்களோ, அதை விட்டுக் கொடுக்காமல் இருக்கும் ஞானச்செருக்கும் வேண்டும். வாதத்துக்கும் விதண்டாவாதத்துக்கும் ஒரு மெல்லிய கோடு உண்டு - அது தான் உங்களின் லட்சுமண ரேகை!

(5) திரையுலகில் இருக்க நினைப்பவர்கள் இந்த ஐந்து விஷயங்களை படிக்க வேண்டும். மனிதர்களை, சமகால நிகழ்வுகளை, நல்ல இணையதளங்களை, புத்தகங்களை, திரைப்படங்களை! இது பால பாடம் - பலர் படிக்க மறுக்க பாடமும் கூட.

(6) ஆறுவது சினம். தகுதியற்றவர்களின் வெற்றியைப் பார்த்து சினம் கொள்ளும் நீங்கள், தகுதியானவர்களின் வெற்றியைக் காணும் போது மகிழ்ச்சி அடையும் பக்குவத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். "எல்லாம் லக்குப்பா!" என்று ஒற்றை வரியில் எதையும் முடிக்காதீர்கள். திரையுலகம் (ஏன், வாழ்க்கையே) - அந்த இரண்டு வார்த்தைகளில் அடக்கி விடக்கூடிய அளவுக்கு சுலபமில்லை. இந்தக் குணமானது, உங்களின் நாளைய வெற்றியின் போது மிகப் பிரயோஜனமாக இருக்கும்! ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பது போல், நல்வினை நாளைய வெற்றியில் கண்டிப்பாய் பங்கு பெறும்.

(7) மேலே சொன்ன ஒரு விஷயத்தில் ஊடுருவி பார்த்தால் ஒரு உண்மையும் இருக்கிறது - பணம். அதை சம்பாதிக்கும் பட்சத்தில் நம்பர் ஏழு உங்களை நெருங்காது (அந்தப் பாழாய்ப் போன விஷயம், சுலபமும் கிடையாது). விளம்பர உலகம், கார்ப்பரேட் பிலிம்ஸ் என்று பல விதமான முறையில் பணம் சம்பாதிக்கும் யுக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். "இவன் பொழச்சுப்பான்" என்ற நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுங்கள். அப்படி ஏதாவது சம்பாதித்தால், குடும்பத்தினரை ஒரு நல்ல டின்னருக்கு அழைத்து செல்லுங்கள். "மச்சி…ஒரு பீரடிப்போமோ" என்று இறங்காமல், இதை நீங்கள் செய்தால் அவர்கள் மனம் குளிர வாய்ப்புண்டு. குறிப்பாய், திருமணனமானவர்கள் கண்டிப்பாய் செய்ய வேண்டிய விஷயம் இது. நாளை நீங்கள் வெற்றி பெறும் போது, மாற்றி மாற்றி போன் அடித்து அதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளப் போவதும் அவர்கள் தான். இதன் உபரி விஷயம் - தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

(8) உங்களை சுற்றி உள்ளவர்கள் - குறிப்பாய் உறவினர்கள்,சில நண்பர்கள் சதா உங்களின் முயற்சிகளைக் கேள்வி எழுப்பிக் கொண்டே இருப்பார்கள். "ஏண்டா/டி, அவன்லாம் சூர்யாவோட படம் எடுக்கறான்…நீ ஏன் சூர்யாவைப் போய் பார்க்கக்கூடாது" என்பதில் ஆரம்பித்து, "ஹே, நம்மலாம் மிடில் க்ளாஸ், இது தேவையா" என்பது வரை பல விதமான 'எமோஷனல் பிளாக்மெயில்' மற்றும் 'அட்வைஸ் மழை" அவ்வப்போது இடியுடன் வந்து தாக்கும். இதிலிருந்து தப்ப ஒரே வழி தான் இருக்கிறது - நிலவில் ஜாகை மாற்ற வேண்டும், இன்னொரு வழியும் இருக்கிறது - "நேத்து நீ ஒரு ஐடியா சொன்னியே, சூப்பர்" என்று பேசும் நபர்களை உங்களை சுற்றி வைத்துக் கொள்ளுதல். டிரைவிங் லைசன்ஸுக்கு எட்டு போடுவது மாதிரி இது முக்கியம்!

(9) உங்களுக்கு ஒன்பதில் குரு இருந்தால்  சொந்தக் காசைப் போட்டு படம் எடுக்கமாட்டீர்கள் - ஏனெனில், தயாரிப்பாளராவது என்பது ஒரு கடுமையான சவால். அதுவும் குறிப்பாய் தமிழகத்தில்! தைர்யலஷ்மி உங்களோடு ஓவர் டைம் போட்டு தோழியாய் இருக்க வேண்டும். தயாரிப்பாளர் மற்றும் இயக்கம் என்று முதல் படத்தில் இறங்கும் போது, இயக்கம் கண்டிப்பாய் அவதிப்படும். ஒரு நல்ல தயாரிப்பாளர் கிடைப்பது எவ்வளவு பெரிய மனோபலம் என்பது கிடைக்கும் போது தான் தெரியும். 'அவர் முதல் படத்திலே தயாரித்தாரே…இவர் வெற்றி பெற்றாரே' என்று உடனே விவாதத்தில் இறங்க வேண்டாம். எல்லா விஷயத்திலும் விதிவிலக்குகள் உண்டு - அவை விதியாகா!

(10) 'இது தான் ஜெயிக்கும்' என்று சிலர் சொல்லும் சூத்திரங்களைக் கேட்டு, ஜெயித்த படத்தின் சாயலில் எதுவும் எழுதாதீர்கள். பத்தில் ஒரு படம் வெல்லும் ஒன்பது படம் ஊற்றிக்கொள்ளும் . பலரைத் திரும்பி பார்க்க வைக்கும் படங்கள், வித்தியாசமான களத்தோடு தைரியமாய் முயற்சிக்கப்பட்டவை தான். ஹாலிவுட்டில் எழுத்தாளர்கள் ஒன்று சொல்வார்கள் "Give me the same, but different!" - மேஜர் சுந்தர்ராஜன் போல் இதைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். தினமும் நான்கு பக்கங்கள் எழுதுவது என்பதைக் கொள்கையாக வைத்துக் கொள்ளுங்கள் - ஃபேஸ்புக், டிவிட்டரில் எழுதுவது இதில் சேர்த்தி கிடையாது.

இதையெல்லாம் படித்து, பின்பற்றி படமும் எடுத்தால், மறக்காமல் எனக்கும் தகவல் தெரியுங்கள் - வெற்றி நிச்சயம், அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

இட்லி வடை பத்து ஆண்டுகளாய் நடத்தப்பட்டு வருகிறதென்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. நான் அதிகம் படிக்கும் வலைத்தளங்களில் இதுவும் ஒன்று. கொஞ்சம் அடிக்கடி எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும். பத்தாவது பாயிண்டையே அவரின் வாழ்த்து செய்தியாய் அளித்து, மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.


பி.கு :- "எல்லாம் சரி, உங்களோட அடுத்த படம் எப்போ?" என்று கமெண்டாதீர்கள்!. மூடி மறைத்து பின்பு பூதாகரமாய் வெளியே தெரிய, திரைப்படம் என்பது 2ஜி ஊழல் இல்லை - ஒவ்வொரு நாளும் உழைத்து வருகிறேன். கண்டிப்பாய் கூடிய விரைவில் எல்லாம் கூடி வந்ததும் சொல்வேன். எனக்கு வேண்டியது எல்லாம் நல்லுள்ளங்களின் வாழ்த்துக்கள் மட்டுமே :)


Read More...

இன்று இட்லிவடைக்கு பிறந்தநாள் !இன்று இட்லிவடைக்கு வாழ்த்து சொன்ன ( அட்லீஸ்ட் இதுக்கு அப்பறம் சொல்லுங்க ) அனைவருக்கும் நன்றி.

Read More...

ஏர்டெல் சூப்பர் சிங்கர் யார் ?

கட்சி-1: நல்ல சங்கீதம் தெரிந்தவர்கள் ஓரம்கட்டபட்டு உங்களுக்குப் பிடித்தவர்களுக்கு ஓட்டு மூலம் சூப்பர் சிங்கர் ஜூனியர் என்ற பட்டத்தை எஸ்.எம்.எஸ் மூலம் தேர்ந்தெடுப்பது எப்படி நியாயமாகும்? ரஜினி மாதிரி ஸ்டைல் பண்ணும் ஒருவரை தேர்ந்தெடுப்பதும், கமல் மாதிரி நல்ல கலைஞர்களை ஓரம்கட்டுவதும் சரியா ?

கட்சி-2: ஆஜித் கமல் மாதிரி ஒரு பிறவி கலைஞன், அவனுக்கு சங்கீத பின்புலம் எதுவும் இல்லை, ஆனால் வெளுத்து வாங்குகிறான். முறைப்படி சங்கீதம் கற்றுக்கொண்டால் அவன் இருக்க வேண்டிய இடமே வேற.

நான் இதை எல்லாம் டிவியில் ஒருநாளும் பார்த்து அழுகாத கட்சி. நீங்கள் எந்த கட்சி?

Read More...

Friday, October 26, 2012

துப்பறியும் கதை - சதீஷ்

விகடனில் தற்போது வரும் துப்பறியும் கதைகள் மாதிரி நாமும் எழுதலாம் என்று முடிவு செய்தேன். எங்கள் ஊர் பக்கம் மின்சாரம் மாதிரி கிணறு கிடையாது. ஏன் தண்ணீர் தொட்டி கூட கிடையாது. வெறும் குடம் தான். குடத்தில் யாரும் விழுந்து இறந்து போக முடியாது. அதனால் என்ன எழுதாலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்த போது விகடனில் வந்த இந்த அறிவிப்பை என் நண்பர் சுட்டிக்காட்டினார்.


அந்த அறிவிப்புக்கு கீழே 'பெயர் வேண்டாமே ப்ளீஸ்' என்ற பெயர்(?)க்கு கீழே இருக்கும் இந்த கேள்வி என்னை அதிகம் ஈர்த்தது.

எனக்கும் இதே  பிரச்சனை இருப்பதால் இதை எழுதியது யார் என்று துப்பறிய முடிவு செய்தேன்.

முதலில் விகடன் அலுவலகத்துக்கு ஃபோன் செய்து உங்க 24.10.12 விகடனில் பக்கம் 75ல் இந்த கேள்வியை எழுதியது யார் என்று கேட்டேன்.
"நீங்க யார் ?"
சொன்னேன்
"சாரி உங்களுக்கு பதில் சொல்ல முடியாது அது ரகசியம்" என்று போனை வைத்துவிட்டார்.
நான் "ஹலோ ஹலோ" என்று கொஞ்ச நேரம் பேசிவிட்டு நானும் வைத்துவிட்டேன்.

விடவில்லை திரும்பவும் போன் செய்தேன்.
இந்த சமயம் பெண் குரலில் பேசினேன். ஆனால் விகடனில் இருப்பவர்கள் புத்திசாலிகள். அவர்களும் பெண் குரலில் பேசினார்கள்.
திரும்பவும் அதே சாரி.

விகடனில் எனக்கு தெரிந்த நண்பர்களிடம் கேட்டேன். அவர்கள் 'டைம் பாஸ்' இதழுக்கு பிஸியாக கூகிளில் படம் சேகரிப்பதாக ஜகா வாங்கினார்கள்.

விடவில்லை

அடுத்தது தமிழகத்தில் இருக்கும் எல்லா கல்லூரிகளுக்கும் கடிதம், ஈ-மெயில் எழுதினேன். எல்லோரிடமும் பதில் கேள்வி வந்தது. "எந்த வருஷம் படிக்கும் மாணவர், எந்த குருப்..." இது தெரிந்தால் நானே கண்டுபிடித்துவிடுவேன்.

கடைசியாக அந்த கேள்விக்கு பதில் சொன்ன டாக்டரை தொடர்பு கொண்டேன். அவர் நேரில் கன்சல்டேஷனுக்கு வாங்க பேசலாம் என்றார்.
ஊசி போட்டுவிட போகிறார் என்று பயந்துக்கொண்டு அங்கே போகவில்லை.

என்ன செய்யலாம் என்று யோசிக்கும் போது....துப்பறியும் கதைகளை பற்றி ஆய்வு செய்து முழம் நீளம் எழுதிய கட்டுரை ஒன்றை படிக்க நேர்ந்தது. தப்பு செய்தவன் ஏதாவது ஒரு தடையத்தை வைத்துவிட்டு போவான் என்று அதில் ஒரு வரி இருந்து. திரும்பவும் அதே விகடன் பக்கத்தை படித்தேன்.

கண்டுபிடுத்துவிட்டேன்.

முழு விகடன் பக்கத்தையும் கீழே கொடுத்துள்ளேன். உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள் !

சதீஷ்
மதுரை

சரியான விடையை கண்டு பிடிப்பவர்களுக்கு அடுத்த வாரம் சக்தி விகடன் இலவசம் :-)

Read More...

ராஜன் (ஏமாற்றப்பட்ட) கதை

அமெரிக்க வாழ் இந்தியர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று இந்தியாவில் அவர்கள் விட்டு விட்டு வரும் நெருங்கிய சொந்தங்கள், முக்கியமாக பெற்றோர்கள். இளைமைப் பருவத்தில் கல்லூரிப் படிப்புக்காகவோ, ஐ டி வேலைக்காகவோ அமெரிக்கா வரும் பொழுது வேறு பல சிக்கல்களைச் சந்திக்க நேர்ந்தாலும் கூட இந்தியாவில் உள்ள குடும்பத்தில் அனேகமாக எந்தவிதக் குழப்பங்களும் இருக்காது. அப்பொழுது பெற்றோர்கள் சற்று இளமையாக இருப்பார்கள். பெரிய நோய்கள் எதுவும் இல்லாத பட்சத்தில் அவர்களைப் பிரிந்து வருவது அவ்வளவு சிரமமான காரியமாக இரு தரப்பாருக்குமே இருக்காது. காலப் போக்கில் திருமணம் புரிந்து பிள்ளைகளைப் பெறும் சமயங்களிலும் அதற்கு முன்பும் பின்புமாக பெற்றோர்களை இங்கு அழைத்து வந்து அமெரிக்கா சுற்றிக் காண்பித்து, பிரசவ சமயத்தில் உதவிக்கு வைத்துக் கொண்டு, பின்னர் பிள்ளைகளை வளர்க்கும் காலம் வரையிலும் அவர்கள் வந்து சென்று கொண்டிருப்பார்கள். பின்னர் பிள்ளைகள் வளர்ந்து பள்ளி இறுதி வகுப்புக்குச் செல்லும் முக்கியமான தருணத்தில் ஊரில் உள்ள பெற்றோர்களுக்கு வயதாகியிருக்கும், நோய் வாய்ப்பட்டிருப்பார்கள், கீழே விழுந்திருப்பார்கள், நடமாட்டம் குறைந்திருக்கும் இன்னும் ஏராளமான மூப்பின் காரணமான சிக்கல்கள் உருவாகியிருந்திருக்கும். அந்தக் காலக் கட்டத்தைச் சமாளிப்பது பெரும்பாலான அமெரிக்க இந்தியர்களுக்கு ஒரு பெரும் சவாலாக அமையும். இந்தப் பிரச்சினை அனேகமாக பிற நாட்டினருக்கு இருக்காது அல்லது அவர்களுக்கு வேறு வசதி வாய்ப்புகளும் சமூக வசதிகளும் இருக்கும். ஆனால் இந்தியாவின் சமூகக் கட்டமைப்பில் முதியோர்களின் பாதுகாப்பு அவர்களது வாரிசுகளின் பொறுப்பிலேயே விடப் படுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் இருப்பது போல மூத்தோர் ஓய்வூதிய சமூகப் பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டங்கள் இந்தியாவில் இருப்பதில்லை. இங்கு சமூக காப்பீட்டுத் திட்டம் என்பதே நம் கலாச்சாரம் தான். பெற்றோர்களை பிள்ளைகள் பாதுகாக்க வேண்டும் என்ற கலாச்சாரமே இந்தியாவில் வயதானவர்களின் எதிர்காலத்திற்கு ஓரளவுக்குப் பாதுகாப்பான அரணாக விளங்குகிறது. இது முற்றிலும் பாதுகாப்பான ஒரு அமைப்பு என்று சொல்லி விட முடியா விட்டாலும் கூட ஓரளவுக்கு இந்த சமூகப் பாதுகாப்பு இயங்கி வருவதை மறுக்க முடியாதுதான்.அமெரிக்கா வரும் இந்தியர்கள் இங்கு வீடு எல்லாம் வாங்கி வேலைகள் பல வாங்கி பச்சை அட்டை, குடியுரிமை எல்லாம் வாங்கி, பிள்ளைகள் பள்ளி இறுதியிலோ கல்லூரி செல்லும் வயதிலோ இருக்கும் பொழுதுதான் ஊரில் உள்ள பெற்றோர்களின் வியாதிகளும் வயதும் முற்றி அவர்களுக்கான துணையின் அவசியமும் ஏற்படும். அந்த இக்கட்டான சமயத்தில் பலரும் இங்கும் இருக்க முடியாமல் அங்கும் செல்ல முடியாமல் அங்கிருக்கும் பெற்றோர்களை அநாதவராக விடும் நிலையிலோ உடன் பிறந்தாரின் பொறுப்பிலோ உற்றாரின் பொறுப்பிலோ விட வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். உடன் பிறந்தவர்களே கூட ”நீ அமெரிக்காவில் வசதியாக வாழும் பொழுது நாங்கள் மட்டும் ஏன் வயதான பெற்றோர்களை கவனிக்க வேண்டும் ?” என்ற குடும்பப் பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்வார்கள். இந்த நிலை எல்லாம் தேவைப் படாமல் வயதானாலும் இறுதி வரை ஆரோக்யமாக வாழும் பெற்றோர்களும், உடன் பிறந்தவர்கள் அன்புடனும் கரிசனத்துடன் கவனித்துக் கொள்ளும் அதிர்ஷ்டம் அமையப் பெற்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பெரும்பாலான இந்தியர்களுக்கு ஒரு ஒரு மாபெரும் சிக்கலாக உருவெடுத்து நிரந்தரமாக ஊருக்குத் திரும்பும் நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். வயதான பெற்றொர்களை இங்கு அழைத்து வருவதும் ஒரு தீர்வு அல்ல, முதலில் விசா கிடைப்பது கஷ்டம் அப்படியே கிடைத்தாலும் இங்குள்ள மருத்துவச் செலவு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அதிகமானது. ஆகவே ஊரில் அவர்களைக் கவனித்துக் கொள்ள உரிய நபர்கள் இல்லாதபட்சத்தில் தங்கள் பிள்ளைகளின் படிப்பை அங்கு மாற்றிக் கொண்டு அவர்களை மன ரீதியாகவும், பழக்கப் படாத புதிய கல்விச் சூழலிலும் கொண்டு செல்கிறார்கள். இது அனேகமாக பெரும்பாலான இந்தியர்கள் எதிர் கொள்ளும் மாபெரும் சிக்கல்.

இந்த சிக்கலில் இப்பொழுது நானும் தள்ளப் பட்டிருக்கிறேன். மகள் பள்ளிப் படிப்பின் கடைசி இரு வருடத்தில் நிற்கும் பொழுது என் மனைவியின் தந்தை படுத்த படுக்கையாக விழுந்து விட்டார். எனது கிராமத்து வீட்டில் அவரைத் தங்க வைத்து சமையலுக்கு ஒரு உறவினரை ஏற்பாடு செய்திருந்தேன். அவரும் வீட்டளவில் நடமாடிக் கொண்டிருந்தார். 80 வயதில் மிக வேகமாக முதுமையை எட்டி விட்டார். முன்பு தாக்கிய ஒரு வித ஆர்த்ரைடிஸ் நோயால் பேச்சு, கை கால்களின் செயல் பாடு அனைத்தும் முடங்கி விட்டன. ஒருவர் உதவியில்லாமல் அவரால் நகர முடியாத நிலையை சென்ற வாரம் அடைந்து விட்டார். இது வரை அவ்வப் பொழுது பார்த்து உதவிக் கொண்டிருந்த நெருங்கிய உறவினர் அனைவரும் இனி எங்களால் கவனித்துக் கொள்ள முடியாது உடனடியாக ஊருக்கு வரவும் என்று அபாய அறிவுப்பு அளித்து விட்ட நிலையில் நாங்களும் ஊருக்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் ஊருக்கு வரும் வரையிலாவது 24 மணி நேரமும் உடன் இருந்து அவரைக் கவனித்துக் கொள்வதற்காக ஒரு உதவியாளரைத் தேடிக் கொண்டிருந்தோம். பலரும் கோட்டயத்தில் உள்ள ரெட் கிராஸ் அமைப்பை அணுகுமாறு அறிவுறுத்தினார்கள். அவர்களிடம் விசாரித்ததில் ஒரு மாதம் கழித்துதான் உதவி அனுப்ப முடியும் என்று சொல்லி விட்டனர். ஆதலால் மேலும் பல இடங்களிலும் விசாரித்துக் கொண்டிருந்தேன்.

அவசரகதியில் மேலும் இணையத்தில் தேடியதில் கோயமுத்தூர் ( New No:191/Old No 204 Dr.R.K.Road, Tattabad, Sivanandha Colony, Coimbatore-12, Phone: 9894637363.) என்ற முகவரியில் டாட்டாபாட் சிவானந்தா காலனியில் இருந்த ஏவிஜி ஹோம் நர்ஸ் சர்வீஸ் என்ற ஏஜென்சியில் மட்டும் உடனடியாக ஒரு உதவியாளரை அனுப்ப முடியும் என்று தெரிவித்தார்கள். அங்கிருந்த மகாலட்சுமி என்னும் அதன் உரிமையாளர் என்னிடம் பேசினார். நானும் கோயமுத்தூரில் உள்ள எனது உறவினர் ஒருவரை அனுப்பி விசாரிக்கச் சொன்னேன். அவரும் போய் விட்டு அவர்கள் நன்றாகப் பேசுகிறார்கள் முயற்சி செய்து பார்க்கலாம் நன்றாக இருந்தால் தொடரலாம் என்று சொன்னார். அவர்கள் 28 நாளுக்குச் சம்பளமாக 12000 ரூபாய் கேட்டார்கள். பணத்தைக் கட்டி விட்டு ராஜேஸ்வரி என்ற உதவியாளரை அழைத்துப் போவதற்காக ஊரில் இருந்து எனது இன்னொரு மாமாவை போகச் சொல்லிக் கேட்டுக் கொண்டேன். அவரும் உடனே கிளம்பி கோயமுத்தூர் போய் அந்தப் பெண்மணியை அழைத்துக் கொண்டு ஊரில் கொண்டு போய் எங்கள் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டார்.

சென்ற வியாழன், அக்டோபர் 18 அன்று வீட்டுக்கு வந்த அந்தப் பெண், ஞாயிறு அன்று மாலையில் வீட்டில் வேறு யாரும் இல்லாத தருணத்தில் பீரோவைத் திறந்து அதில் இருந்த வெள்ளிப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு என் நினைவில்லாமல் கிடந்த மாமனாரையும் தனியாக விட்டு விட்டு கரண்டு இல்லாத மழை நேர இருட்டைப் பயன் படுத்திக் கொண்டு வீட்டை விட்டு ஓடி விட்டார்.

வீடு திறந்து கிடப்பதையும், மாமா தனியாகக் கிடப்பதையும், பீரோ திறந்து கிடப்பதையும், துணிமணிகளும் பாத்திரங்களும் இறைந்து கிடப்பதையும் கண்ட உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் உடனடியாக என்னை அழைத்துத் தகவல் தெரிவித்தார்கள். உடனே நான் அந்த கோயமுத்தூர் ஏஜென்ஸியின் மகாலட்சுமியை அழைத்து விசாரித்தேன். அந்தப் பெண்மணி தனக்கு எதுவும் தெரியாது காலையில் மீண்டும் அழையுங்கள் என்றும் மழுப்பினார். மீண்டும் மீண்டும் அழைத்த பொழுது ராஜேஸ்வரியிடம் பேசியதாகவும் உடனே ஊருக்குத் திரும்பிப் போகச் சொல்லியிருப்பதாகவும் அவர் சாமான்களுடன் வீட்டுக்கே திரும்பி வந்து விடுவார் என்றும் கூறினார். ஆனால் இரவு முழுவதும் அந்தப் பெண் திரும்பவில்லை. மறுநாள் மீண்டும் அழைத்த பொழுது அவள் கோயமுத்தூருக்கே வந்து விட்டதாகவும், அவளுக்கு சாப்பாடு பிடிக்காமல் போனதால் திரும்பி விட்டதாகவும், யாரிடமும் சொன்னால், இருக்கச் சொல்லி வற்புறுத்துவார் என்பதினால் சொல்லாமல் வந்ததாகவும் கூறினார். மேலும் அவள் எந்தப் பொருளையும் திருடவில்லை என்றும் இருவரும் சாதித்தார்கள். நான் மீண்டும் அழைத்த பொழுது உன்னால் முடிந்ததைப் பார்துக் கொள். உன் வீட்டில் களவு போன பொருட்களுக்கு எல்லாம் நானும், அந்தப் பெண்ணும் பொறுப்பாக மாட்டோம், நீங்கள் கட்டிய பணத்தை மட்டும் திருப்பித் தருவோம் உன்னால் ஆனதைச் செய்து கொள் என்று மிகவும் திமிருடன் பேசினார். அதன் பின் என் கோவை உறவினரை அனுப்பி நாங்கள் கட்டிய பணத்தைத் திருப்பி வாங்கச் சொல்லி விட்டேன்.

இவர்களை நம்பி வயதான ஒருவரை ஒப்படைத்ததிற்கு அவரைத் தனியாக விட்டதுடன் அல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களையும் திருடிக் கொண்டு சென்றிருக்கிறார்கள். இந்த ஏஜென்ஸி நடத்தும் அந்த மகாலட்சுமியும் இந்தத் திருட்டுக்கு உடந்தையா என்பது தெரியவில்லை. அவர் பேசுவதைப் பார்த்தால் இருவரும் சேர்ந்து திட்டமிட்டே திருடியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. உடனடியாக் என் உறவினர்களை ஒரு புகார் கொடுக்குமாறு வற்புறுத்தினேன். ஆனால் மோசமான இந்தப் பெண்கள் தாங்கள் தப்பித்துக் கொள்வதற்காக எந்த எல்லைக்கும் போகக் கூடியவர்கள் என்பதினால் அவர்கள் என் உறவினர் மீது ஏதேனும் பொய் வழக்குக் கொடுத்து விடலாம் என்ற அச்சத்தினாலும் போலீஸ், கேஸ், வழக்கு என்று எதற்காகப் போக வேண்டும் என்ற கிராமத்தில் வசிப்பவர்களின் இயல்பான பயத்தினாலும் புகார் கொடுக்க வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டார்கள்.

அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. இப்படி ஒரு முதியவரை தவிக்க விட்டு விட்டு திருடிக் கொண்டு போனவர்கள் எந்த பொய் வழக்கையும் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். இவர்களை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை. மேலும் நமது போலீஸ் அமைப்பை பொது மக்கள் இயல்பாக அணுகவே தயங்கும் நிலையில் அவர்களது செயல்பாடுகளும் உள்ளது.

அதனால் குற்றம் நடந்த இடத்தில் எந்த புகாரையும் இது வரை எவரும் கொடுக்கவில்லை. ஆகவே நானே புகாரைக் கொடுக்க முடிவெடுத்தேன். நான் கோவை கமிஷனரின் வெப் சைட்டில் கீழ்க்கண்ட புகாரை இட்டிருந்தேன். கண்ட்ரோல் ரூமை அழைத்து விசாரித்த பொழுது அவர்கள் வெப் சைட். ஃபேஸ் புக் எல்லாம் பார்ப்பதில்லை எனவும் copcbe@yahoo.com என்ற முகவரிக்கு புகார் அனுப்பினால் பார்ப்போம் என்றும் சொன்னதன் பேரில் கீழ்க்கண்ட புகாரை அவர்களுக்கு மீண்டும் அனுப்பி வைத்தேன். இமெயில் எல்லாம் அவர்கள் படித்து அதன் படி நடவடிக்கை எடுப்பார்களா என்பதும் எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. நேற்று மீண்டும் அழைத்த பொழுது அது இன்னொரு டிப்பார்ட்மெண்ட் என்று கூறினார்களே ஒழிய புகார் வந்ததா அதன் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்ற விஷயம் எதையும் கமிஷரின் உதவியாளர் தெரியப் படுத்தவில்லை. தூத்துக்குடி எஸ் பி ஆபீஸுக்கு அழைத்து நான் இங்கிருந்து இமெயில் மூலமாகவோ ஃபாக்ஸ் மூலமாகவோ புகார் கொடுக்க விரும்புகிறேன் என்னு சொன்ன பொழுது நீங்க என்னனென்னமோ சொல்றீங்க எங்களுக்கு அதெல்லாம் தெரியாது வேண்டுமானால் நேராக வந்து புகார் கொடுக்கவும் என்று சொன்னார்கள். எஸ் பி யிடம் நேரடியாக பேச முடியவில்லை. இணையத்தில் கிடைக்கப் பெற்ற ஒரு மின்னஞ்சல் முகவரிக்கு புகாரை அனுப்பி வைத்திருக்கிறேன். அது உரியவர்களிடம் செல்லுமா என்பது தெரியவில்லை. இவர்கள் எவரிடம் இருந்தும் உரிய பதில் இன்னும் இரு நாட்களுக்குள் வராத பட்சத்தில் முதல்வரின் குறை தீர்ப்பு மையத்துக்கும் புகாரை அனுப்பி வைக்க உத்தேசித்துள்ளேன்.


எனக்கு காணாமல் போன வெள்ளிப் பாத்திரங்கள் பெரிய விஷயமில்லை. அதிக பட்சம் அவற்றின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் இருக்கலாம். ஆனால் இப்படித் துணிவாகத் துரோகம் செய்து விட்டு வயதான நோயாளியை அநாதரவாக விட்டு விட்டு வீட்டுப் பொருட்களையும் திருடிக் கொண்டு போன அயோக்கியர்கள் கண்டிப்பாக விசாரிக்கப் பட்டுத் தண்டிக்கப் பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அவர்கள் செய்த நம்பிக்கை மோசடியைத் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை. நாங்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.


இதைப் படிக்க நேரும் நண்பர்களில் பத்திரிகைத் தொடர்பு இருப்பவர்களும் கோவை போலீஸாரில் தொடர்பு இருப்பவர்களும் இந்த விஷயத்தில் மேல் நடவடிக்கை எடுக்க உதவுமாறு வேண்டுகிறேன். இனிமேலும் எந்த ஒரு அப்பாவிகளும் இவர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காகவாவது இந்த நிறுவனம் குறித்து பத்திரிகையில் செய்தி வெளியாகி மக்கள் எச்சரிக்கப் பட வேண்டும் என்று நினைக்கிறேன். ஆகவே உங்களுக்கு இந்தக் கோரிக்கையை வைக்கிறேன். இதை ஒரு தனிப்பட்ட நபரின் பிரச்சினையாக அணுகாமல் சமூகப் பாதுகாப்பு சம்பந்தப் ப்ட்ட பிரச்சினையாகக் கருதி உதவவும். என் பொருட்களைத் திரும்பப் பெறுவது முக்கியமே இல்லை. குற்றவாளிகள் கைது செய்யப் பட்டு இந்த நிறுவனம் முடக்கப் பட்டால் எதிர்காலத்தில் வேறு எவரும் இவர்களினால் ஏமாற்றபட மாட்டார்கள் என்ற ஒரே நோக்கத்தில் மட்டுமே இந்தக் கோரிக்கையை இங்கு இடுகிறேன்.


தயவு செய்து இந்த நிறுவனத்தின் மோசடி குறித்து எந்தப் பத்திரிகையிலாவது செய்தி வெளியிட்டு இந்த மோசடி நிறுவத்தினால் வேறு எவரும் பாதிக்கப் படாமல் தவிர்க்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏஜென்சி பற்றிய முழு விபரமும் கோவை கமிஷனருக்கு நான் அனுப்பிய இமெயில் புகாரையும் கீழே காணலாம். இது குறித்து வேறு எந்தத் தகவல் தேவையென்றாலும் உடனே தெரிவிக்கவும். இதைப் பத்திரிகையில் வெளியிடவும் போலீசாரை நடவடிக்கை எடுக்க வைக்கவும் உதவவும். குறைந்த பட்சம் இந்த மோசடி பற்றிய ஒரு செய்தியையாவது எந்தவொரு தினசரியிலாவது வெளியிட்டு இந்த திருட்டுக் கும்பலை மக்களிடம் அடையாளம் காண்பிக்க உங்களால் இயன்ற உதவியைச் செய்யவும். போலீசாரும் நடவடிக்கை எடுக்காமல் பத்திரிகைகளிலும் இந்தச் செய்தி வெளியாகாமல் போனால் மீண்டும் மீண்டும் இவர்கள் பல அப்பாவிகளையும் ஏமாற்றுவது தொடரும். பொது நலம் கருதியும் உங்கள் மேலான உதவியை இந்த விஷயத்தில் நல்கவும். இது குறித்து மேலும் தகவல்கள் தேவைப் பட்டால் தெரிவிக்கவும். அந்த ஏஜென்சி பற்றிய முழு விபரத்தையும் கீழ்க்கண்ட புகாரில் காணவும்.


முக்கியமாக கோவையில் வசிக்கும் நண்பர்கள் அனைவரும் கோவை போலீஸ் கமிஷனரிடம் நான் ஏற்கனவே அனுப்பியிருக்கும் எனது கீழ்க்கண்ட புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரவும். இந்த விஷயத்தை கோவை பத்திரிகைகளிடம் கொண்டு செல்லவும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். இதை எந்தப் போலீஸ் அதிகாரியாவது படிக்க நேர்ந்தால் உடனடியாக இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

நன்றி

ராஜன்


Dear Sir

My name is ThirumalaiRajan Sadagopan. I am a NRI living in California, CA, USA. As my father in law, Mr.Srinivasan, 80 year old retired Tashildhar was staying alone at our home in our native place in Thenthiruperai, Thoothukudi Dist has fell down and collapsed last week, we were searching for a home nurse help. As he was totally indisposed and required somebody to take care of even his basic needs we were looking for some urgent help. As we could not travel immediately to India, we were desperately searching for a nurse help till we reach India. We found an agency by name AVG Home Nurse Service in Coimbatore through a web site AVG Home Nurse Service .

This AVG Nurse Service is located at New No:191/Old No 204 Dr.R.K.Road, Tattabad, Sivanandha Colony, Coimbatore-12, Phone: 9894637363. I contacted this agency and spoke with one Mrs.Mahalakshmi, who is running this agency and placing nurse help to the customers. I also sent one of my relatives in Coimbatore to check with them. She collected Rs.12,000 as one month salary and immediately arranged for an assistant by name Rajeswari to help my uncle. She assured complete safety and integrity of her employee. One of my relatives went to Coimbatore and escorted that assistant Rajeswari to our home in Thenthiruperai village. She started her job of helping my uncle since last Thursday, Oct 18th and it was going well for the next three days.

On last Sunday evening around 6 PM, when there was no power at the entire village and when it was raining and my uncle was also unconsciously sleeping, she opened the safe in our house took all the silver items, some cash and ran away from the home by abandoning the indisposed old man. She did not inform my ailing uncle or anybody else and sneaked out of the village without any body's notice under the cover of dark rainy night. Fortunately that lady did not harm my uncle. She was talking to somebody over her cell phone for the whole day it seems. Further she was inquiring about the local people on the various routes. Cleverly using the cover of darkness, she just ransacked the safe and took the silver items and money and got away in stealth.

On seeing an unlocked home,abandoned patient and a ransacked steel cupboard, the neighbors and relatives got shocked and they immediately called me in the US and alerted me. I immediately called the AVG Nurse Service''s owner Mrs. Mahalakshmi and informed about the crime committed by her employee. Mahalakshmi feigned ignorance and was not giving us any convincing reply and asking us to wait and hold from complaining this incident to the police till morning. Mahalakshmi was kept promising us that her employee will come back to our come along with the stolen articles. But her employee never returned back. By Monday morning when i called Mahalakshmi again, she told her help reached back Coimbatore and both Mahalakshmi and Rajeswari claimed innocence and refused to take any responsibility. Mahalakshmi challenged me to go and complain to anybody. She told me audaciously that she can not be held responsible for her employee's crime. She returned the salary i paid to my relative but refused to recover and return the stolen goods from her employee and dared me to complain anywhere. She bluntly refused to take any guilt.

As my aged uncle in no position to talk fluently, write or make any complaint about the crime, I am making this complaint about AVG Nurse Service's owner Mahalakshmi and her employee Rajeswari. Silver items worth few kilos were stolen from our house and it may worth around 1 lakh rupees. As my uncle was unable to speak clearly and not in a position to inform us, we could not clearly ascertain the loss of any currency. I am not much concerned about the stolen goods. More than the lost articles, I'd like the perpetrators of the crime to be handled by law so that no future innocent victims will be robbed blind like this. As a responsible citizen I'd like to bring this incident to your notice and necessary actions.

I am making this complaint as an agency from Coimbatore has been involved in this crime and i don't want any further old or ailing people fell prey to this deceitfully fraudulent agency from Coimbatore. When we initially contacted Mahalakshmi, she assured complete safety and vouched for the integrity of her employee Rajeswari. I also thought she must have sent Rajeswari to us after doing a background check only. But after this incident happened Mahalakshmi's tone and replies were completely arrogant, reckless and non committal. I am not sure if Mahalakshmi is also part of this criminal act or not. Having sent a person she must have taken complete responsibility in recovering our valuables back and she must be made responsible for her employees crime against an innocent aged destitute person. From the way Mahalakshmi spoke to me and arrogantly refused to take any responsibility, I seriously doubt her motives too. Please investigate both the parties and bring the truth out from them. As the owner of that agency she can not completely absolve herself from the actions of her employee. Since Mahalakshmi claimed to know Rajeswari for the last four years I could not believe that the owner does not have any role in sending a criminal to our home as a help.

I request you to thoroughly investigate both Mahalakshmi and Rajeswari and retrieve the stolen goods from Rajeswari. More than retrieving my lost silver goods, I request you to prevent that agency from harming any further innocent victims like us. We believed in the words of Mrs.Mahalakshmi and handed over the life of an aged helpless person in her hands. She betrayed our faith and confidence in them. Our basic belief in fellow human beings and the complete reliance that we confided on her and her employee was utterly shattered. We are shell shocked by this breach of faith and most inhuman attitude of these people within three days of their services. My uncle is in a terribly shocked status and we living abroad some 10,000 miles away from home are helpless and terribly disturbed psychologically too. Sir, more than the stolen goods, it is the sense of betrayal and lack of basic humanity are perturbing us the most. We never expected such a daring crime could be committed against a fragile old man in this manner. Had that lady taken care of my uncle well till we reached India, I would have certainly rewarded may be with more valuable gifts than she has stolen from our home.

I request you to take suitable actions. Please let me know if you need any further information in this regard. As my uncle, the victim in totally indisposed and unable to communicate, I only has to make this complaint. You may contact me any time at the below contact coordinates for any additional information needed. Awaiting your response and actions in this regard.

Thanking You
Sincerely Yours
Thirumalairajan Sadagopan


Read More...

Thursday, October 25, 2012

நாயகன் 25


சில நாட்களுக்கு முன்

கமல் தி.ஹிந்துவில் நாயகன்-25ஆம் வருடம் பற்றி எழுதினார் அதிலிருந்து ஒரு பகுதி.


A little later, the producer-director Muktha Srinivasan, with whom I’d made films like Simla Special, said he wanted to make another film with me. I suggested Mani Ratnam’s name. He was amused because the hero usually suggests the name of the heroine in the film, and here I was recommending a director.

Mani told me two stories. One was a gangster story. He said it was based in Bombay. I said that was the way to go, because the film, then, would have a national reach. Muktha Films had a reputation for being tight-fisted. When Mr. Srinivasan heard that we wanted to shoot in Bombay, he wasn’t happy. He just wanted us to make a film — any film — that would net him a profit of Rs. 5 lakh. That is how he was used to working. Films were a business. He wasn’t interested in films as art.

But we said we’d shoot only part of the film in Bombay, and he half-heartedly agreed. Then, we wanted an international look for the action scenes. Unlike Tamil films of the time, Mani had marked out a separate budget for the action, around Rs. 12 lakh. We flew down Jim Allen, the action director and cinematographer, from England. He’d worked out the stunts for films like Sholay. But Mr. Srinivasan packed him off after three days, saying he couldn’t afford him. “We can’t keep spending like this,” he told me. “I think Hindi films have spoilt you.”

முழு பகுதி படிக்க இங்கே - http://www.thehindu.com/arts/cinema/of-course-velu-nayakan-doesnt-dance/article4008896.ece

இந்த பகுதிக்கு வந்த எதிர்வினை...


ஆளவந்தான் என்ற படத்தில் கார்ட்டூன் பகுதி வரும்... இதை பற்றி அந்த படத்தின் தயாரிப்பாளரை கேட்க வேண்டும்.

Read More...

Wednesday, October 24, 2012

நிதின் கட்கரி - யதிராஜன்


நிதின் கட்கரி, கடந்த சில நாட்களில் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவுக்குப் போட்டியாக மீடியாவில் அடிபடும் பெயர், பாஜகவின் அகில இந்தியத் தலைவர். பாஜகவின் தலைவராக இவரை அறிந்தவர்களை விட, இப்போது சமூக ஆர்வலர் (?) அர்விந்த் கெஜரிவால் இவர் மீது அடுக்கியிருக்கும் குற்றச்சாட்டுகளால் இவரை அறிந்து கொண்டிருப்பவர்கள் அநேகம். இவர் மீது கேஜரிவால் வைத்திருக்கும் பிரதானக் குற்றச்சாட்டு, இவர் நிர்வாகத் தலைவராக இருக்கும் பூர்த்தி பவர் & ஷுகர் நிறுவனத்திற்கு முறைகேடாக வந்துள்ள முதலீடுகள் பற்றியது. 2001 இல் துவங்கப்பட்ட பூர்த்தி க்ரூப் நிறுவனங்களில் சுமார் பத்தாயிரம் பங்கு முதலீட்டாளர்கள். இவற்றில் 19 நிறுவன்ங்கள் பூர்த்தி நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வைத்திருப்பதன் மூலம் இயக்குனர்களாக இருக்கின்றன (Share Directors). சிக்கல் துவங்குவது இங்கிருந்துதான்; இந்த பத்தொன்பது கம்பெனிகளில் சுமார் 16 கம்பெனிகள் “ஷெல் கம்பெனிகள்” என்பது கெஜரிவாலின் குற்றச்சாட்டு; அதாவது அந்நிறுவனங்களுக்கு வேறு எவ்விதமான வர்த்தகப் பரிவர்த்தனைகளோ, நடவடிக்கைகளோ கிடையாது, பெயருக்கு ஒரு நிறுவனம், அதன் பெயரில் முதலீடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த 16 நிறுவன்ங்களில் பெரும்பான்மையானவை கல்கத்தாவிலும், பம்பாயிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்டுள்ள முகவரியில் அம்மாதிரியான நிறுவன்ங்கள் செயல்படுவதற்கான சுவடே தெரியாத வகையில், பம்பாயின் சேரிகளிலும், கல்கத்தாவின் பின்தங்கிய பகுதிகளிலும் அம்முகவரிகள் இருக்கின்றன. அம்முகவரியில் பல்லாண்டுகளாக வசிப்பவர்களுக்கு அது போன்ற ஒரு நிறுவனம் அம்முகவரியில் பதிவு செய்யப்பட்டிருப்பதே புதிய தகவலாக இருக்கிறது (இவ்விவரங்கள் NDTV மற்றும் Times Of India போன்றவற்றில் வெளியாயின). தவிர இந்நிறுவன இயக்குனர்களில் கட்கரியின் கார் ஓட்டுனர் மற்றும் தனிச் செயலர் ஆகியோரும் அடங்குவர்.இதற்கெல்லாம் மேலாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, நிதின் கட்கரி மராட்டிய மாநில பொதுத் துறை அமைச்சராக 1995 முதல் 99 வரை பணியாற்றிய காலத்தில், ஐடியல் ரோட் பில்டர்ஸ் என்ற நிறுவனத்திற்கு சாலை போடும் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. கட்கரி மற்றும் ஏழு பேர் இணைந்து 2001 இல் பூர்த்தி நிறுவன்ங்களைத் துவங்கும்போது, அந்நிறுவனத்தில், ஐடியல் ரோட் பில்டர்ஸ் நிறுவனம் 2 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்குகிறது; அடுத்த ஆண்டே மேலும் 1.98 கோடி மதிப்பிலான பங்குகளையும் வாங்கி, மொத்தம் 6% பங்குகளைப் பெற்று ஒரு இயக்குனராக இணைகிறது. ஆக, பொதுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் வழங்கிய ஒப்பந்தங்களுக்கு, நன்றி தெரிவிக்கும் விதமாகவே IRB நிறுவனம் பூர்த்தியில் முதலீடு செய்துள்ளது என்பது ஒரு குற்றச்சாட்டு; தவிர, IRB யின் சேர்மன் கட்கரிக்கு நெருங்கிய நண்பர், இதை NDTV பேட்டியில் கட்கரியே ஒப்புக்கொண்டுள்ளார். ஆக நெருங்கிய நண்பருக்கு அமைச்சராக சகாயம் செய்ததால், நண்பர் திருப்பிச் செய்யும் ப்ராயச்சித்தம் என்ற வகையில் இப்படி குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பூர்த்தி நிறுவனங்களில் சேர்மனாக இருந்த நிதின் கட்கரி, பூர்த்தி நிறுவனங்களில் வைத்திருக்கும் மொத்தப் பங்குகளின் மதிப்பே வெறும் ரூபாய் 3100 தான். அடுத்ததாக பூர்த்தி நிறுவனங்களுக்கு வேறு நிறுவனங்கள் அளித்துள்ள கடன் தொகைகள், அவை சுமார் 164 கோடிகள், அவற்றில் 62 கோடி ரூபாய் அளவிலான கடன் தொகை திரும்பச் செலுத்தப்பட்டுவிட்டதாக்க் கூறப்படுகிறது. இது போன்ற குற்றச்சாட்டுகள் நிதின் கட்கரி முன்பாக வைக்கப்படுகின்றன.

, குற்றச்சாட்டு வெளியான நாள்முதலாகக் கூறி வருகிறார். மேலும், பூர்த்தி நிறுவனங்களின் சேர்மன் பதவியிலிருந்து தான் 14 முன்பாகவே விலகிவிட்டதாகவும், விலகியதன் பொருட்டு, அளிக்கப்பட்ட ராஜிநாமா கடிதம், செபிக்கு அனுப்பப்பட்டுள்ள நகல், முறைகேடுகள் தொடர்பான சில விளக்க ஆவணங்கள், தனது சொத்து தொடர்பான ஆவணம் ஆகியவற்றையும் தனது NDTV பேட்டியின்போது நிதின் கட்கரி காண்பித்து விளக்கமளித்தாராயினும், சில நெருடலான கேள்விகள்..முதலீடு செய்துள்ள 16 ஷெல் நிறுவனங்கள் போலியான முகவரியில் பதிவு செய்யப்பட்டிருப்பது தொடர்பான கேள்விக்கு, நிறுவனங்களின் முகவரி மாறியிருக்கலாம் என்ற பதில் அவ்வளவு ஏற்புடையதாக இல்லை. தவிர 10000 முதலீட்டாளர்களின் முகவரியும் தான் அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றார். முற்றிலும் வாஸ்தவம், ஒரு நிறுவனத்தின் சேர்மன், தனது நிறுவனத்தின் அனைத்து சிறு, குறு முதலீட்டாளர்களையும் தனிப்பட்ட முறையில் அறிந்து வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, அது சாத்தியமும் அல்ல. ஆனால், நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை தன்னகத்தே வைத்து, நிறுவனத்தின் இயக்குனராக இருக்கும் முதலீட்டாளர்களை நிறுவனத்தின் (முன்னாள்) சேர்மன் என்ற முறையில் அறிந்து வைத்திருப்பது அவசியமல்லவா?நிறுவனத்தின் (முன்னாள்) சேர்மனே வெறும் 100 பங்குகள்தான் வைத்திருக்கிறாரென்ற நிலையில், அவருடைய கார் ஓட்டுனரும், செயலரும் எவ்வாறு நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக இருக்க முடிகிறது? தவிர, இவருடைய ஓட்டுனர் 2010-11 ஆம் காலகட்டத்தில் வேறு ஆறு நிறுவனங்களிலும் இயக்குனராக இருந்திருக்கிறார் என டைம்ஸ் இந்தியா தெரிவிக்கிறது.இவர்கள் தவிர, வேறு நான்கு பெரும் முதலீட்டாளர்களும் சந்தேகத்திற்கிடமானவர்களாக மீடியா செய்திகள் தெரிவிக்கின்றன. ஒருவர் கட்கரியின் கல்லூரித் தோழர், இன்னொருவர் நிதின் கட்கரியின் வீடு அமைந்துள்ள பகுதியில் கடை வைத்திருப்பவர்; இன்னொருவர் நிதின் கட்கரியின் மகனின் பள்ளித் தோழர்; மற்றொருவர் நிதின் கட்கரியின் தனிச் செயலராக இருந்தவர், கட்கரி அமைச்சராகப் பதவி வகித்த காலகட்டத்தில்.மேலே குறிப்பிட்டுள்ளவை சில நெருடலான விஷயங்கள். ஆயினும், நிதின் கட்கரியின் விளக்கம்/சமாதானங்களும் ஏற்கக் கூடியதேயாயினும், முழுமையான விசாரணைக்குப்பின், முறைகேடுகள் ஏதுமல்ல என்று நிரூபணம் செய்ய வேண்டியது ஒரு தேசியக் கட்சியின் தலைவர் என்ற முறையில் அவருக்கு தார்மீக்க் கடமையுண்டு. எந்த நிறுவனத்திலும், யார் வேண்டுமாயினும் பங்குதாரராக முடியும் என்ற அவரது வாதமும் சரியானதே. இவர் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் IRB நிறுவனம் ஒப்பந்தங்களைப் பெற்றிருக்கிறது; இவர் பிறகு நிறுவனம் துவங்கும்போது அதில் முதலீடு செய்வதால், இவரால் அந்நிறுவனம் ஆதாயமடைந்திருக்கலாம் என்று எழுப்பக் கூடிய சந்தேகங்களை ஒதுக்கித் தள்ளுவதற்கில்லை. அதற்கு முறையான விசாரணை அவசியம், அதற்கும் கட்கரி தயாரென்றே தெரிவித்துள்ளார்.இவையனைத்தும் ஒருபுறமிருக்க, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு, நிதின் கட்கரி எங்கும் ஓடி ஒளியாமல், தானாகவே அனைத்து மீடியாக்களுக்கும் நேரடியாக, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்ததோடு, எவ்விதமான விசாரணைக்கும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவே காங்கிரஸ் தரப்பில், சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு, வாத்ராவோ, அல்லது சோனியாவோ, ப்ரியங்காவோ யாரும் நேரடியாக எவ்வித பதிலையும் அளிக்க முன்வரவில்லை. அதற்கு பதிலாக காங்கிரஸின் மத்திய அமைச்சர்கள், கபில் சிபல், சிதம்பரம், அம்பிகா சோனி, கூட்டணித் தலைவர்கள் ஷரத் பவார் போன்றோர் வாத்ராவின் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துப் பேசி வருகின்றனர். வாத்ரா சோனியாவின் மருமகன் என்ற அந்தஸ்தைத் தவிர, மத்திய அரசில் எவ்விதமான பங்கும் “நேரடியாக” இல்லாதவர் என்ற நிலையில் அவரை ஆதரிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கும், மந்திரி ப்ரதானிகளுக்கும் எங்கிருந்து வந்தது?இதில் பெரிய வேடிக்கை என்னவெனில், சிதம்பரம் கூறும்போது, வாத்ரா ஒரு ப்ரைவேட் சிட்டிஸன் என்றார். ப்ரைவேட் சிட்டிஸனுக்கு ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையும் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் என்ன? பாரதத் திருநாட்டின் ஒவ்வொரு தனிநபர் மீதான புகார்களுக்கும், இதுவரை ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையும் சேர்ந்து வக்காலத்துக் குரல் கொடுத்ததாகத் தெரியவில்லையே?வாத்ரா மீதான விசாரணைக்கே அவசியமில்லை என ப.சிதம்பரம் அடித்துக் கூறுமளவிற்கு, வாத்ரா அப்படியென்ன முக்கியத்துவம் வாய்ந்தவர், சோனியாவின் மருமகன் என்ற காரணத்தைத் தவிர? சோனியாவின் மருமகன் என்பதால் அவர் இந்திய சட்ட்திட்டங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று காங்கிரஸும், மத்திய அரசும் நிறுவ முனைகிறதா? இந்தியாவின் ஜனாதிபதி ஒருவர்தான் எவ்விதமான குற்ற விசாரணைகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டவர். மற்ற அனைவரும் சட்டத்திற்கு முன் சமமே எனும் நிலையில் வாத்ரா மீதான குற்றச்சாட்டுகளுக்கு, விசாரணை ஏதுமில்லாமலேயே அவர் பரிசுத்தர் என சான்றளிக்கும் அவசியம் காங்கிரஸ் அமைச்சர்களுக்கு எங்கிருந்து வந்தது?நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கார்பொரேட் விவகாரத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, கட்கரி நிறுவனத்தின் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நட்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் வாத்ரா விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்படுமா என்ற கேள்விக்கு, “நோ காமெண்ட்ஸ்” என்று பதிலளித்தார். இது எவ்வாறு பதிலாகும்? எதிர்கட்சித் தலைவருக்கு ஒரு நியாயம், சோனியாவின் மருமகனுக்கு ஒரு நியாயமா?கட்கரி மீதான புகார்கள் விசாரணைக்குரியவை. தவறுகள் நிரூபிக்கப்பட்டால், அதில் தொடர்புடைய நபர்களும், நிறுவனங்களும் சட்டத்திற்குட்பட்டு தண்டனைக்குரியவை; அதே சமயம் வாத்ராவும் அவருடைய DLF நிறுவனத்துடனான பரிவர்த்தனைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளும் விசாரணைக்குரியவை. வேடிக்கையாக, கட்கரி மீதான குற்றச்சாட்டுகளை விட, வாத்ரா மீதான குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்களும், குற்றச்சாட்டின் தன்மையும் மிகுந்த வலுவுடையவை. இதற்கு ஐஏஎஸ் அதிகாரி அஷோக் கெம்கா அளித்துள்ள அறிக்கைகள், வாக்குமூலங்கள் அதிகம் வலுசேர்ப்பவை. விசாரணைக்கு உத்தரவிட்ட அடுத்த இருதினங்களில் பணியிடமாற்ற உத்தரவு கிடைத்த்தும் வெளிப்படையான ஒன்று. இவ்வாறு தன் முதுகில் அப்பியிருக்கும் சாக்கடைச் சகதியை கழுவ வக்கற்ற காங்கிரஸ் அரசாங்கம், ஊழல் ஒழிப்பு பற்றி பேசுவது விந்தையிலும் விந்தை.

NDTV யின் கட்கரி தொடர்பான உண்மை கண்டறியும் முனைப்பு காங்கிரஸிற்கு அதன் மீதான அளவுகடந்த விசுவாசத்தைக் காட்டுகிறது. கட்கரியை சரமாரியாக கேள்விகேட்ட NDTV, இதுவரை வாத்ராவை ஏன் தனது ஸ்டூடியோவிற்கு அழைத்து எவ்விதமான கேள்வியும் கேட்கவில்லை. குறைந்தபட்சம், தொலைபேசியில் கூட அழைத்து, புகார் தொடர்பான விளக்கங்கள் பெற முயற்சிக்கவில்லையே? இது தொடர்பாக ட்விட்டரில், கட்கரியைப் பேட்டி கண்ட ஸ்ரீநிவாஸன் ஜெயினைக் கேட்டதற்கு, வாத்ரா எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை பதிலை பொதுவாகச் சொன்னார். காற்று புக முடியாத இடத்திலும் புகுந்து புறப்படும் இந்த சேனலுக்கு வாத்ராவின் இருப்பிடம் பற்றி தெரியாத்தை நம்ப வேண்டிய கட்டாயம் நமக்கு! இவ்வளவு சர்ச்சையிலும் குற்றச்சாட்டுகளிலிக்கும் வாத்ரா நேரடியாக எவ்வித பதிலையும் அளிக்காமல் ஓடி ஒளிந்து கொள்வார், அவரை உத்தமன் என்று காங்கிரஸ் அமைச்சர்கள் கூறுவதை மீடியாக்களும் வெட்கமின்றி திரும்பத் திரும்ப ஒளிபரப்புகின்றன.

திக்விஜய் சிங், வீரப்ப மொய்லி போன்றவர்கள் தொடர்ந்து கட்கரி தொடர்பான முறைகேடுகள் விசாரணை செய்யப்படும் என்று சொல்லியும், விசாரணைக்கான உத்தரவை இந்த நிமிடம் வரை மத்திய அரசு வழங்கியதாகத் தெரியவில்லை; வழங்குமெனவும் நம்ப முடியவில்லை. ஏனெனில் கட்கரியை விசாரித்தால், வாத்ரா விவகாரத்தையும் விசாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மத்திய அரசு தள்ளப்படும். குஜராத் மற்றும் ஹரியாணா தேர்தல்கள், எதிர்வரவிருக்கும் 2014 மக்களவைத் தேர்தல் ஆகியவற்றை சந்திக்க வேண்டிய சூழலில், ஏற்கனவே பாழ்பட்டுக் கிடக்கும் பெயரை, வாத்ரா விசாரணையின் மூலம் இன்னமும் பாழ்படுத்திக் கொள்ள காங்கிரஸ் நிச்சயம் விரும்பாது. அப்படியே வாத்ரா விவகாரத்தில் சிபிஐ விசாரணை மேற்கொண்டாலும், அதன் முடிவு என்னவாக இருக்குமென்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே. இதற்கு மேல் என்ன சொல்வது?


இந்த கட்கரி, வாத்ரா அமளிகளுக்கு நடுவில் இன்னொரு வேடிக்கை. சமூக ஆர்வலரும், புதிய அரசியல்வாதியுமான கேஜரிவால், அனுதினமும் யாராவது ஒருவர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியபடியே சென்று கொண்டிருக்கிறார். முதலில் வாத்ரா, பிறகு சல்மான் குர்ஷித், அவ்வரிசையில் கட்கரி. ஒருவர் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்துவிட்டு, அடுத்த நபரைத் தேடிப் போய்விடுகிறார். இதனால் முந்தைய விஷயங்கள் மறக்கப்படுகின்றன, அல்லது மறக்கடிக்கப்படுகின்றன. மீடியாக்கள் வாத்ராவையும், குர்ஷித்தையும் விட்டுவிட்டு இப்பொழுது பிரதானமாக கட்கரியைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறது. வேடிக்கையாக, கெஜரிவாலின் இன்னும் பெயர்வைக்கப்படாத கட்சியின் பெரும்தலைகளான பிரபல வக்கீல் ப்ரசாந்த் பூஷன் மற்றும் சமூக ஆர்வலர் (?) அஞ்சலி தமானியா மீதே நில மோசடிப் புகார்கள் எழுந்துள்ளன. அவை தொடர்பாகக் கூறிய கேஜரிவால், ஒரு “Internal Lokpal” அமைத்து விசாரணை நடத்தப் போவதாகவும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் இன்னும் பெயரே வைக்கப்படாத கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். ஹஸாரேவும், கேஜரிவாலும் இப்பொழுது தனித்தனியாக ஊழலுக்கெதிரான அமைப்புகள் தொடங்கிய நிலையில், எதிர்காலத்தில் அஞ்சலி தமானியாவும், ப்ரசாந்த் பூஷணும் ஊழலுக்கெதிராகவும், கேஜரிவாலுக்கெதிராகவும் அமைப்புகள் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

பேசாமல் எடியூரப்பா, கட்கரியும் பிஜேபியை விட்டு வெளியே போய் தனி கட்சி தொடங்கலாம் அல்லது காங்கிரஸில் சேரலாம். இந்த முன்னாள் ஆர்.எஸ்.எஸ் வீரர்களை நித்தியானந்தாவை தூக்கி போட்ட மாதிரி போட்டால் பிஜேபி பிழைக்கும்!

Read More...

Monday, October 22, 2012

நட்பின் வரலாறு


வழக்கமாக கோபிநாத் நீயா நானாவில் வரும் சிறப்பு விருந்தினர் பேசுவதைவிட அதற்கு முன்பும் பின்பும் வரும் விளம்பரங்கள் அதிக நேரம் வரும். ஆனால் நேற்று பார்வையாளர்களை விட கவிஞர் மனுஷ்யபுத்திரனும், திருச்சி சிவாவும் நிறைய பேசி, நட்பை போஸ்ட்மார்ட்டம் செய்தார்கள்.

வரலாறு முக்கியம் அதானால் நட்பு குறித்து சில கவிதைகள் இங்கே

சிநேகிதிகளின் கணவர்கள்

சிநேகிதன்களின் மனைவிகள்

கணவனின் சினேகிதி


யாரும் நட்பு குறித்து பயப்பட வேண்டாம். டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது ...!

Read More...

இட்லிவடையும் நானும் - ஸ்ரீராம்

எத்தனை புது 'ஐட்டங்'கள் வந்தாலும் அப்புறமும் மனம் நாடுவது.

அதாவது இட்லிவடையில் இன்று எதுகுறித்து பதிவு வந்திருக்கிறது என்று பார்க்காமல் விடுவதில்லை! ஹோட்டலில் 'நான்', மலேஷியன் பரோட்டா என்று வெட்டினாலும் சம்பிரதாயமாக ரெண்டு இட்லி ஒரு வடையில் தொடங்குவது போல!

இட்லிவடைக்குத் தொட்டுக் கொள்ள எத்தனையோ ஐட்டங்கள்... சினிமா முதல் இலக்கியம் வரை. எல்லாமே ஒவ்வொரு சுவை.

ஸ்பெஷல்கள் மூன்று!

-நிறைய பேருக்கு ப்ளாக் தொடங்க முன்னுதாரணம். 'எங்களு'க்கும் இன்ஸ்பிரேஷன்!

-இதுவரை முகம் காட்டாத சுவாரஸ்யத்தைத் தொடர்வது ஸ்பெஷல்!

-வாசகர்களின் படைப்புகளை வெளியிட்டு சிறப்பிப்பதிலும் முன்னோடி.


பிடித்தது...

பயமில்லாத அல்லது தயக்கமில்லாத விமர்சனங்கள்...

மனம் நோகாத நகைச்சுவைகள்..

பதிவுகள் சுருங்கச் சொல்லி நிறைய விளங்க வைப்பது..


நீண்ட நாள் கேள்வி...

-ஏன் இட்லிவடை யார் பதிவிலும் பின்னூட்டமிடுவதில்லை?!
பதில்: திண்டுகல் தனபாலனிடம் டியூஷன் எடுத்திவிட்டு வருகிறேன்
-மற்ற தளங்களைப் படிப்பதுண்டா?
பதில்: உண்டு
-'எங்கள்' பற்றி என்ன அபிப்ராயம்?
பதில்: லிங்க் கொடுங்க படித்துவிட்டு சொல்லுகிறேன் :-)


சந்தோஷம்..

என்னுடைய கேள்வி ஒன்றுக்கு இட்லிவடை பதிலளித்திருப்பது!


ஆர்வம்..1

மண்டே மர்மங்கள், சண்டேன்னா ரெண்டு, மை டியர் பாடி கார்ட் முனீஸ்வரன், போன்ற பதிவுகள் தொடருமா என்று..

ஆர்வம் 2

கதைகள் இட்லிவடையில் போட மாட்டீர்களா?

முதலிரவு கதை படித்திருப்பீர்கள். அது சரி இப்ப கதை யார் எழுதுகிறார்கள் ?


கவிபாடு..

இட்லிவடை..
எத்தனை ஈடு?
சமீபத்தில் இல்லை சூடு..
ஆனாலும் இன்னும்
இதற்கில்லை
ஈடு!
கேட்கலாம் எல்லோரும் சேர்ந்து
பழைய மாதிரி பதிவுகள் போடு! (ங்கள்)
இதைப் போடுவதும் போடாததும்
உங்கள் பாடு!


இட்லி வடையுடனான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் நேரத்தில் ஒன்று தோன்றுகிறது. பிடித்த லிஸ்ட், காபி பேஸ்ட் பதிவுகள் (உதாரணத்துக்கு, விகடனில் வந்த அசோகமித்திரன் பேட்டி, துக்ளக்கில் வந்த கட்டுரைகள்) என்று சொல்லப் போகும் நேரத்தில் இங்கு இட்லிவடை பற்றி எல்லார் எழுதுவதும் ஒன்றுபோல் இருக்கும் சாத்தியக் கூறுகள்.

அரசியலுக்கும் அண்மைச் செய்திகளுக்கும் நிறைய முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்.கதைகளோ கவிதைகளோ சமையல் பகுதிகளோ இல்லை. இதை வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று கொள்கையாகவே வைத்திருக்கிறீர்களா?

பதில்வராது என்று தெரிந்தாலும் ஓரிரு கேள்விகள்.

நீங்கள் யார்?!! ஆனால் இதைத் தெரிந்து கொண்டு எனக்கு ஒன்றும் ஆகப் போவதில்லைதான்! தெரிந்து கொள்ளாதவரைதான் கவர்ச்சி என்பதும் புரிகிறது.

துக்ளக்கில் உங்கள் பங்கு என்ன?! (வாரா வாரம் வாங்கிப் படிப்பதைத் தவிர! நிறைய கொடி பிடிப்பது போலப் படுகிறது!)

புத்தகக் கண்காட்சி பற்றி பதிவுகள் படித்திருக்கிறேன். படித்த அல்லது புதிய புத்தகங்கள் பற்றிய பதிவுகள் உங்களிடமிருந்து வரவேண்டும் என்று விருப்பம். அறிமுகம் போலவோ அல்லது விமர்சனமாகவோ...
பதில்: இருக்கவே http://omnibus.sasariri.com/ அங்கே போய் பாருங்கள்.

இட்லிவடையில் அதிகம் ஹிட் வாங்கும் பகுதி ராசிபலன் பதிவு தான் அதை யாரும் வெளிப்படையாக சொல்லுவதில்லை :-)

Read More...

Friday, October 19, 2012

வடையும் நானும் - சி.சரவணகார்த்திகேயன்

(ஆனந்த) விகடனும் நானும் என பிரபலங்கள் எழுதியது போல் (இட்லி) வடையும் நானும் என நான் எழுதுவதே கட்டுரைத் தலைப்பின் உள்ளுறை உவம விளக்கம் (இட்லியை விட எனக்கு வடை தான் பிடிக்கும் என்பதால் செய்யப்பட்டிருக்கும் ஓரவஞ்சனை என யாரும் எண்ணி விடலாகா என்பதற்காகவே இந்த விளக்கம்).

இட்லி வடை என்கிற வர்ச்சுவல் பண்டத்தின் தொடர் அல்லது தீவிர நுகர்வோன் அல்லாத ஒருவனின் அனுபவம் மற்றும் பார்வை இப்பதிவு எனக் கொள்ளலாம்.

நான் இணையத்தில் எழுத வந்த புதிதில் (2007ம் ஆண்டின் இறுதி) இட்லி வடை வலையுலகில் பிரபலமாக இருந்தது என்றாலும் ஏனோ அதைப் படிக்கவில்லை. பின் குமுதம் இதழ் சிறந்த 10 வலைப்பூக்கள் எனப் பட்டியலிட்டு, அதில் இட்லி வடை முதலிடம் வந்த போதுதான் சுதாரித்து அதைக் கவனிக்கத்தொடங்கினேன்.


இட்லி வடை தளம் பற்றிய என் ஆரம்பகால அபிப்பிராயம் அது பத்திரிக்கைகளில் வரும் சில "குறிப்பிட்ட" செய்திகளை அப்படியே தரவிறக்கிக் தரும் ஒரு வலைப்பூ என்பது தான். எனது கூகுள் ரீடரில் கூட "CopyPaste" என்ற ஃபோல்டரில்தான் இதை வைத்தேன். பிற்பாடு அவ்வப்போது வாசிக்க நேர்ந்த போது தான் சில அங்கதமான கமெண்ட்களுடன் (அவற்றில் ஆங்காங்கே ஒருபக்க சார்பு இருந்தாலும்) சமகால நிகழ்வுகளை ரசனையாய் ஆவணப்படுத்தும் பணியைச் செய்து வருவது புரிந்தது.

பிற்பாடு இதே விஷயத்தை பலர் தம் வலைப்பூக்களில் செய்தாலும், இப்போது ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மைய நாடியே இது போன்ற அரசியல் செய்திகளைப் பகடி செய்வது தான் என்றாகி விட்டாலும் இவற்றுக்கெல்லாம் இணைய முன்னோடி சந்தேகமின்றி இட்லி வடை தான்.

யோசித்துப் பார்க்கும் போது இட்லி வடையை மேலோட்டமாகக் காப்பி பேஸ்ட் வேலை என அலட்சியமோ உதாசீனமோ செய்ய வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது. எல்லோருக்கும் எல்லா இதழ்களும் பத்திரிக்கைகளும் வாசிக்க வாய்ப்பதில்லை. இட்லி வடை அவற்றில் வந்த சில முக்கிய செய்திகளை தன் பாணியில் கோடிட்டுக் காட்டும் ஒரு customised mashup-ஆக செயல்பட்டு வருகிறது.

இட்லி வடைக்கு எவை முக்கியமான செய்திகளாகப் படுகிறது என்பதோடு அவரவர்க்கு முரண் இருக்கலாம். ஆனால் சேவையை மறுதலிப்பதற்கில்லை.

இப்போதும் இட்லி வடையில் வரும் அத்தனை பதிவுகளையும் வாசிப்பதில்லை. விஷயம் எதைப் பற்றியது என்பது பொறுத்துத் தான் படிப்பது; மற்றபடி ரீடரில் மேலோட்டமாக ஸ்க்ரோலி விடுவதே வழக்கம் (பெரும்பாலான வலைப்பூக்களை இப்படித் தான் 'வாசிக்கிறேன்'. தினசரி கிடைக்கும் 15 நிமிடங்களில் சப்ஸ்க்ரைப் செய்து வைத்திருக்கும் 500 வலைப்பதிவுகளின் அத்தனை புதிய இடுகைகளையும் பார்வையிட வேண்டும் என்கிற அழுத்தத்தின் நீட்சியான வாசக பாவமே இது).

ஆனால் அத்தனை அவசரத்திலும் இட்லி வடையின் எந்தக் கடைசி வரி மஞ்சள் கமெண்ட்டையும் மிஸ் பண்ணுவதேயில்லை. ஒருவகையில் இட்லி வடையின் பிரதான அடையாளமே அது தான். புதிய படங்களின் FIR விமர்சனங்களையும் விடுவதில்லை. சென்னைப் புத்தகக் கண்காட்சி குறித்து ஒவ்வொரு வருடமும் இட்லி வடையில் வெளியாகும் தொடர் பதிவுகளையும் வாசித்து விடுவேன்.

விருந்தினர் பக்கத்தை இட்லி வடையின் முக்கிய USPஆகப் பார்க்கிறேன். ஒரு குறிப்பிட்ட எல்லை வரை இட்லி வடைக்கு பன்முகத்தன்மையை அளித்ததில் இதற்கு முக்கியப்பங்குண்டு. சமீப முதலிரவுக்கதை வரை அதைத்தொடர்கிறேன். ச.சங்கர் என்பவர் எழுதிய மண்டே மர்மங்கள் தொடரும் ஒரு நல்ல முயற்சி.

ஹரன் பிரசன்னாவுக்கு இட்லி வடையுடன் என்ன தொடர்போ யான் அறிந்திலன். ஆனால் அவர் பெயரை அடிக்கடி இதில் பார்க்கிறேன். நானும் அவரும் பேசியதில் இட்லி வடை இதுவரை வந்ததில்லை. போலவே கிழக்கு பதிப்பகமும் அதன் முன்னாள் இந்நாள் அங்கத்தினர்களான பா.ராகவன், பத்ரி சேஷாத்ரி போன்ற பெயர்களும் அவ்வப்போது வருகின்றன. ஓ பக்கங்கள் ஞாநியும் ஆங்காங்கே!

இட்லி வடையின் கவர்ச்சி என்பது அது யாரென்றே தெரியாத anonymityயில் இருக்கிறது. பேயோனின் ஆரம்பக் கவர்ச்சி கூட இந்த அடிப்படையிலானதே. ஒருமுறை நண்பர் ஒருவர் "இட்லி வடை யூஎஸ்ஸில் இருக்கிறார்" என்று சொல்ல, சாட்டில் பேசிய போது அதை விசாரித்தேன். "இருக்கலாம்" என்றார்.

புன்னகைத்துக் கொண்டேன்.

யாராயிருந்தால் என்ன! இட்லிக்கும் வடைக்கும் நதிமூலம் ரிஷிமூலம் எதற்கு? வாய்க்கு ருசியாகவும் வயிற்றுக்கு சொகுசாகவும் இருந்தால் போதாதா, என்ன!

*

“இட்லி வடை பற்றிய ஒரு கட்டுரை எழுதித் தர முடியுமா?" என்று அவர் கேட்ட போதே “திட்டி எழுதினாலும் போடுவேன்” என்றும் சொல்லி இருப்பதால் அவரது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் பொருட்டு சில விஷயங்கள் பேச விரும்புகிறேன்.

என் வரையில் இட்லி வடையின் அரசியல் நிலைப்பாடு குறித்த பிம்பம் அது ஒரு பிராமணிய, இந்துத்துவ தளம் என்பதே. ஒரு காலத்தில் திராவிட, பின் கம்யூனிஸ அனுதாபியாக இருந்து மீண்ட பின்புலத்தில் இது எனக்கு உவப்பளிக்காத விஷயம்.

நரேந்திரமோடி, ஜெயலலிதா, சுப்ரமணியம்சுவாமி, சோ, என்.ராம், இராமகோபாலன் போன்றவர்களையும், அவர்களைப் பற்றி (மட்டும்) அதிகம் பேசுபவர்களையும் இந்த லேபிள் ஒட்டிப்பார்க்கும் என் புரிதல் தூரத்துக் காட்சிப்பிழையாகவும் இருக்கலாம்.

எழுத்தாளர் என்றாலே அசோகமித்திரன், தினசரி என்றாலே தி ஹிந்து, மேகஸின் என்றாலே துக்ளக், வலைதளம் என்றாலே தமிழ் ஹிந்து, கட்சி என்றாலே இந்து முன்னணி என்று இட்லி வடை முன்வைக்கும் பெயர்கள் இதை மீண்டு மீண்டும்
செய்கின்றன. இட்லி வடை பற்றிய சுய அறிமுகத்தில் "பிடித்த புத்தகம்: சமைத்து பார் (அல்லையன்ஸ் பதிப்பகம்)" என்று தன் அரசியல் நிலைப்பாட்டின் சுயபகடி போன்ற பாவனையில் அந்தப் பதிப்பகத்தை முன் நிறுத்துவது ஓர் உதாரணம். இட்லி வடை தளத்தின் Custom Google Searchல் ‘இந்து’ என்ற வார்த்தையை இட்டுத் தேடினால் வரும் பதிவுப் பட்டியல் மட்டும் 10 பக்கங்களைத் தொட்டு நிற்கின்றன!

இதனால் இட்லி வடையில் சில விஷயங்கள் monotonous-ஆகத் தோன்றுகின்றன. இட்லி வடை இதைத் திட்டமிட்டு செய்யவில்லை என்று வைத்துக்கொண்டாலும் கூட இந்த நிலைப்பாட்டை விரும்புபவர்கள் இட்லி வடையை இந்தப் பிரத்யேக அடையளத்தின் காரணமாக தமக்குப் பிடித்த வாசிப்பாகக் கொள்வது நடக்கிறது.

*

என் முதல் புத்தகம் சந்திரயான் விளம்பரமும், என் முதல் கவிதைத்தொகுதியான பரத்தை கூற்று நூல் வெளியீட்டு நிகழ்வின் அழைப்பிதழும் என் வேண்டுகோளின் படி இட்லி வடையில் வெளியானது. இப்படி ஆர்வமுள்ளோரை என் எழுத்துக்கள் பரவலாய்ச் சென்றடைய ஒரு பாலமாக இட்லி வடை இருந்திருக்கிறது. அதற்கு என் ப்ரியத்தையும் நன்றியையும் இங்கே பதிவு செய்கிறேன். பின் கொஞ்சம் தினங்கள் முன் குங்குமம் இதழில் வெளிவந்து கொண்டிருக்கும் எனது ச்சீய் பக்கங்கள் தொடர் தொடர்பான ஒரு பத்தி கருத்து இட்லி வடையில் வெளியானது.

இது வலைப்பூக்களுக்கான காலமில்லை. சமூக வலைதளங்கள் அவ்விடத்தை அராஜகமாய் ஆக்ரமித்துக் கொண்டு வருகின்றன. ட்வெண்டி-20யால் ஒன்-டே பிரபலம் இழந்து வருவதைப் போன்றது தான் இதுவும். இந்த அவசரங்களுக்குப் பிறந்த தலைமுறையினர் நிறைந்திருக்கும் சூழலிலும் ஒன்பது ஆண்டுகளைக் கடந்து இன்னமும் கம்பீரமாய் நின்று கொண்டிருப்பதும் தனக்கான வாசகர்களைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருப்பதும் வெகுநிச்சயமாய் சாதனை தான்.

இட்லி வடை தளத்தை இணையம் உள்ளளவும் நீடித்து இயங்க வாழ்த்துக்கிறேன்!

- சி.சரவணகார்த்திகேயன்
http://www.writercsk.com/

‘இந்து’ என்ற வார்த்தையை இட்டுத் தேடினால் வரும் பதிவுப் பட்டியல் மட்டும் 10 பக்கங்களைத் தொட்டு நிற்கின்றன!.... கலைஞர் என்று தேடி பாருங்க இன்னும் அதிகமாக வரும் :-)

Read More...

Thursday, October 18, 2012

இட்லியும் நானும் ! - கௌதமன்

எங்கிருந்தோ வந்தார், இட்லிவடை நான் என்றார்!
அவரை நான் பார்த்ததில்லை. அப்பப்போ கூகிள் சாட்டில் வருவார் சுருக்கமாக
ஏதோ கேள்வி கேட்பார். நடப்பது 'கனவா, நனவா' என்று நான் சுதாரிக்கும்
முன்பாக பதிலை வாங்கிக் கொண்டு காணாமல் போய் விடுவார்.

எனக்கு பதின்ம வயதுகளில் இட்லி பிடிக்காது. யாரேனும் கேட்டால், 'அதுல
என்ன இருக்கு? வெறும் மாவு, வேகவைத்த மாவு' என்பேன். ஆனால்
வேலையில் சேர்ந்த பின், அதிகாலை எழுந்திருந்து, காலைக் கடன்கள் முடித்து,
அசோக் லேலண்டுக்கு அவசரம் அவசரமாகக் கிளம்ப வேண்டிய நிர்பந்தத்தில்

இருந்த நாட்களில், இட்லி போன்ற ஒன்று, வரப்ரசாதமாகவும்,
இன்றியமையாததாகவும் போய்விட்டது!

ஆனால், இட்லி வடையைப் பார்த்த மாத்திரத்தில், எனக்குப் பிடித்துப் போனது.
நான் இணையத்தில் உலா போக ஆரம்பித்த வருடம், 1999. அப்போ வலைப்பூ
பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது. இ-மெயில் சேவைக்கு மட்டும் இணைய
இணைப்பைப் பயன்படுத்தி எல்லோருக்கும் மெயில் அனுப்பி, பெற்று,
மகிழ்ந்திருந்தேன். அப்பொழுது யாஹூ தேடு பொறியில் எனக்கு வேண்டிய
சில தேடு சொற்களைக் கொடுத்து, அலுவகத்திற்கு, வேண்டிய சில (FMEA, ISO
Audit, ISO certification, competitor's products etc etc) விவரங்களை
தரவிறக்கம் செய்து, அலுவலகத்தில் அச்சிட்டுக் கொண்டது உண்டு.

அலுவலகத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பின்பு, கி பி இரண்டாயிரத்து
ஆறாம் ஆண்டிலிருந்து இணைய உலா நேரம் அதிகரித்தது. ஆனால்
அப்பொழுதும், தமிழ் வலைப் பக்கங்கள் அதிகம் என் கண்களில் படவில்லை.

ஆகஸ்ட் இரண்டாயிரத்து ஏழில், இணையத்தின் உதவியோடு, இட்லி சுடலாம்
என்று எதேச்சையாக தேடு பொறியில் இட்லி என்று கொடுத்து, தேடிய பொழுது
என் க(ண்)ணினியில் பட்டதுதான் இட்லிவடை பதிவு. சொடுக்கிப் படித்துப்
பார்த்தேன். ஆஹா சுவாரஸ்யமான பதிவுகள்!

நகைச்சுவை, கிண்டல், புதிய விவரங்கள், அரசியல், சினிமா, புகைப்படங்கள் -
'எல்லாமே இருக்கு, நல்லாவே இருக்கு' என்று தெரிந்தவுடன், என்
நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு எல்லோருக்கும் இ வ பதிவை
பரிந்துரைத்தேன்.

ஆகஸ்ட் இருபதாம் தேதி இரண்டாயிரத்து ஏழாம் வருடம், உறவினர்
எல்லோரும் உறுப்பினராக இருக்கும் யாஹூ குழுவுக்கு நான் அனுப்பிய
மின்னஞ்சல் இது:

On 8/20/07, kggouthaman [kgg0114@dataone.in] wrote: (இந்த
மின்னஞ்சல் முகவரி இப்பொழுது புழக்கத்தில் இல்லை)

http://idlyvadai.blogspot.com/
just try the link above for swarasyam + humour in tamil
kgg.

இதைப் பார்த்த என் சகோதரியின் பையன் கோபுலு, உடனடியாக இட்லிவடை
பதிவின் ரசிகன் ஆகிவிட்டான். தமிழ் படிக்கத் தெரிந்த உறவினர்கள்,
நண்பர்கள், எல்லோருக்கும் இட்லிவடை பதிவு பற்றி சொல்ல ஆரம்பித்தேன்.
அதற்கப்புறம் சுமார் ஓராண்டு காலம், இணைய இணைப்பு/ தொலைபேசி
இணைப்பு கிடைக்காத ஒரு 'மூலைக்காடு' அபார்ட்மெண்டில் இருக்கவேண்டிய
நிலைமை. ஒரு ஏர்டெல் டேடா மோடம் வைத்துக் கொண்டு, சிக்கனமாக சில
பைட்டுகள் ஏற்றுமதி, இறக்குமதி செய்து பிழைத்துக் கொண்டிருந்தேன்.

இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டிலிருந்து, புதிய வீட்டில், எல்லா இணைப்புகளும்
கிடைத்தன. நாள்தோறும் இட்லிவடை (இணையத்திலும்) காபி (வீட்டிலும்)
சுவைக்கக் கிடைத்தன. சற்றேறக் குறைய அந்த நேரத்தில்தான், 'நெட்டிலே
தமிழில் தட்டச்சுவது எப்படி?' என்று அழகி முதல் கலப்பை வரை அகலமாக
உழுது கண்டுபிடித்துக் கொண்டிருந்தேன்.

பதிவுகளில் கருத்துரைகள் பதிக்கும் வழி தெரியாமல், இட்லிவடை பதிவில்,
என்னென்னவோ முயற்சிகள் செய்து கொண்டிருந்தேன். அப்போ கூகிள
என்னுடைய உதவிக்கு வந்தது. ஏதோ சில கேள்விகள் கேட்டு, என்னை ஜி
மெயில் கணக்கு ஆரம்பிக்கச் சொல்லி, ப்ளாகர் ப்ரொபைல் உருவாக்கி, எனக்கு
நல்வழி காட்டியது. அன்று தொடங்கி இட்லிவடை பதிவில் கருத்துரைகள் பதிய
ஆரம்பித்தேன். வலைப்பூ உலகில் என்னுடைய (கருத்து) எழுத்துப் பயணம்
இட்லிவடையில்தான் தொடங்கியது. அது மட்டும் அல்ல, திசைகள் பற்றி,
'ஆரம்பப் பாடங்கள்' என்ற தலைப்பில், ஒரு (நகைச்சுவை?) கட்டுரை எழுதி,
அதை இட்லிவடை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தேன். அது ஜூன்
மாதம் (2009) இட்லி வடையில் பதிவாக வெளிவந்தது. அது பதிவுலகின் மீது
எனக்கு பயங்கரக் காதலை ஏற்படுத்திவிட்டது!

கட்டுரையை முடிக்கும் முன்பாக, எனக்கு இட்லி வடை பதிவில் பிடித்தவை
எவை, பிடிக்காதவை எவை, எதிர்பார்ப்பது என்ன என்று சொல்ல
முயற்சிக்கிறேன்.

பிடித்தவை:
* நகைச்சுவை பதிவுகள் (காப்பியடித்தவை / காப்பி அடிக்காத ஒரிஜினல்கள்
எல்லாமே!)
* புதிய தகவல்களை அளிக்கின்ற பதிவுகள் - எந்த துறையாக இருந்தாலும்.
* இட்லி / முனி கடிதங்கள் - அப்போதைய செய்திகளை, அந்தாதி போல
கோர்வையாக கொடுக்கின்ற நேர்த்தி.
* பரபரப்பு செய்திகளை உடனுக்குடன் பதிவாக்கி விடும் சுறுசுறுப்பு (இப்போ
இது கொஞ்சம் மிஸ்ஸிங்)
* பிரபலங்கள் இறந்துவிட்டால், இட்லி வடையில் உடனே அஞ்சலி படத்தில்
தோன்றுவார்கள். (பிரபலங்கள் காலமாவது பிடித்த செய்தி இல்லை, அதற்கு
இட்லிவடை சுறுசுறுப்பாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டுவதுதான்
கவனத்தை ஈர்க்கும் அம்சம்)
* கருத்துரைகள் எதையும் இ வ மறைப்பதோ மாற்றுவதோ இருட்டடிப்பு
செய்வதோ இல்லை (என்னைப் பொருத்தவரை)

எனக்குப் பிடிக்காதவை?
* சினிமா செய்திகளுக்குக் கொடுக்கப்படும் அதிக முக்கியத்துவம்.
* (நகைச்சுவை கலக்காத) சீரியஸ் விளையாட்டு விமரிசனங்கள்.
* சில விஷயங்களைத் தொடங்குவார்கள். ஆனால் தொடர மாட்டார்கள்.
சன்டேனா ரெண்டு, திங்கட்கிழமை கட்டுரைகள் (ய ரா ஜ ச?) etc etc - no
consistency in purpose. (As if I am like that !!)

எதிர்பார்ப்பது என்ன?
தினமும் ஒரு பதிவு - அதுவும் மேலே கூறப்பட்டுள்ள, எனக்குப் பிடித்த வகைப்
பதிவுகளாக!!

ஒற்றை இலக்க (ஒன்பது) ஆண்டுகள் முடித்து, இரட்டை இலக்க ஆண்டினைத்
தொடங்கும் இட்லிவடை பதிவை இன்று போல் என்றும் வாழ்க என்று
வாழ்த்துகின்றேன்.

அன்புடன்,
கௌதமன்.
எங்கள் ப்ளாக்.
engalblog.blogspot.in


"விருப்ப ஓய்வு பெற்ற பின்பு..." இட்லிவடை படிக்க தானோ என்று ஒரு நிமிஷம் பதறினேன் ... நல்ல வேளை அப்படி எதுவும் இல்லை!

Read More...

Tuesday, October 16, 2012

சாட்டை FIR(?)


சாட்டை படத்தின் விமர்சனம் இல்லை. ஆனால் அந்த படம் சம்பந்தமாக போலீஸ் போட்ட நிஜ FIR !

அந்த செய்தி எந்த நாளிதழ்களிலும் வரவில்லை அதனால் இங்கே .... 

செய்தி இது தான் - சென்னை சிதம்பரம் போகும் தனியார் பேருந்து ஒன்று கிளம்பிய அரை மணி நேரத்தில் 'சாட்டை' படத்தை பேருந்தில் ஓட விட்டிருக்கிறார் கண்டக்டர். கொஞ்ச நேரத்தில்.... நடுவழியில் பேருந்தை நிறுத்தி போலீஸ் திருட்டு டிவிடியில் (விசிடி எல்லாம் இப்போது இல்லை ) படத்தை போட்ட கண்டக்டரை கைது செய்தனர்.


போலீஸ் இவ்வளவு துரிதமாக செயல்பட்டதற்கு காரணம் பஸ்ஸில் இருந்த ஒருவர் - அவர் தான் அந்த படத்தின் தயாரிப்பாளர் !

Read More...

Dial for books - ஒரு கடிதம்

அன்புள்ள இட்லிவடை அவர்களுக்கு,
உங்களுடைய இன்றைய பதிவு படித்தேன். டயல் ஃபார் புக்ஸ் ல் என்னுடைய அனுபவம் இது :

" Poorva Magic, Miracles and Mystical Twelve " என்ற ஆங்கில புத்தகம் (East West Books (Madras) P Ltd., வெளியீடு) எனக்கு தேவைப்பட்டது. இந்த கடை எங்கே இருக்கிறது என்று தெரியாததால் & இந்த புத்தகம் தமிழில் கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு என்று book fair போயிருந்தபோது தெரிந்திருந்ததால் அவர்களிடம் போனில் விசாரித்த போது டயல் ஃபார் புக்ஸ் நம்பர் கொடுத்து அங்கே கேட்க சொன்னார்கள்(it was in the middle of August this year )

நானும் அந்த நம்பரில் விசாரித்தேன். ஆனால் அவர்கள் தமிழ் புத்தகங்கள் மட்டுமே கிடைக்கும் என்று சொல்லி விட்டார்கள். :-(

( இந்த புத்தகம் பன்னிரு ஆழ்வார்கள் பற்றி தன் பேத்திக்கு தாத்தா சொல்லுகிற மாதிரி கதை. )

உங்கள் ப்ளாக்கில் இப்போதுதான் டயல் ஃபார் புக்ஸ் விளம்பரம் பார்த்து விட்டு அந்த போன் நம்பர் & எனக்கு கிழக்கு பதிப்பகம் கொடுத்த நம்பர் இரண்டும் ஒன்றுதான் என்று cross check செய்து விட்டு இதை எழுதுகிறேன்.

கண்டிப்பாக குற்றம் சொல்ல இதை எழுதவில்லை. இந்த புத்தகம் டயல் ஃபார் புக்ஸ் சிஸ்டம் மூலம் கிடைத்திருந்தால் ரொம்பவே சந்தோஷப்பட்டு இருப்பேன். இதை தமிழ் தெரியாத US குழந்தைக்கு ஒரு கிப்டாக கொடுக்க நினைத்திருந்தேன். இதையும் போனில் பேசியவரிடம் சொல்லிப்பார்த்தேன்.

உங்கள் மூலம் எல்லா மொழி புத்தகமும் கிடைக்கிற மாதிரி இதை விரிவு படுத்தினால் நன்றாக இருக்குமே என்ற ஆவலில் தான் இதை உங்களுக்கு எழுதினேன்.

உங்கள் ப்ளாக் முகப்பில் வைத்திருக்கும் கொலு மிகவும் அருமை. எங்கள் வீட்டிலும் கொலு வைத்திருக்கிறோம். அவசியம் குடும்பத்துடன் வரவும்.
நடுவில் சில நாள் கம்ப்யூட்டர் வேலை செய்யாததால், இனிமேல் தான் உங்கள் மற்ற பதிவுகள் படிக்க வேண்டும்.

நன்றி
[ ]


பத்ரி இதற்கு பதில் சொல்லுவார் என்று நினைக்கிறேன். இட்லிவடைக்கு ஒரு பதிவு எழுதி தந்தால் அந்த புத்தகம் உங்க வீடு தேடி வரும் :-)

Read More...

Monday, October 15, 2012

ஃபிலிப்கார்ட்டின் கதை

ஏப்ரல் மாதம் தி.ஹிந்துவில் ஃபிலிப்கார்ட் பற்றி ஒரு கட்டுரை வந்தது. அன்பர் ஒருவர் எனக்கு மொழிபெயர்த்து தந்தார்(அவருக்கு நன்றி) அது கீழே.

சில வாரங்களுக்கு முன் ஃபோர்ப்ஸ் இந்தியா ஃபிலிப்கார்ட் பற்றி நெகடிவ் கட்டுரை ஒன்று எழுதியிருந்தது ( அதன் லிங்கையும் கீழே தந்துள்ளேன் )

தமிழில் இது போல கட்டுரைகள் அவ்வளவாக வருவதில்லை.

“என்னுடைய ரகசிய சாண்டாவிடமிருந்துதான் அது எனக்கு கிறிஸ்த்துமஸ் பரிசாக கிடைத்தது; அதன் மூலம் பலவற்றுள் ஒன்றை தேர்வு செய்ய முடிந்தது, சவுகரியம், ஒரு புதிய உறவு எல்லாம் கிடைத்தது”, மும்பையிலிருக்கும், 26 வயது திட்ட நிர்வாகியான நவீத் அன்சாரி, இப்படித்தான் ஃபிலிப்கார்ட்டுடனான தனது முதல் உறவைப் பற்றிக் கூறுகிறார். நகரத்தில் பெரும்பாலானவர்கள் பார்க்கும் பணியில் இருக்கும் அவருக்கு, நேரம் குறைவாகவே இருக்கிறது; அவரும் மற்றவர்களைப் போலே சவுகரியத்தை விரும்புகிறார். அதனால், ஃபிலிப்கார்ட்டின் இ-வவுச்சர் அவருக்கு வரப்பிரசாதமாகத் தோன்றியது. இந்த பரிசு தான் அவர் மின்வணிகத்தில் முதலடி எடுத்து வைக்கவைத்திருக்கிறது; அவருடைய பயணம் இப்போது தான் தொடங்கியிருக்கிறது.

இன்றைக்கு பல இந்தியர்கள் ஆர்வமுடன் மின் சில்லறை வணிகத்தை பற்றிக் கொள்கிறார்கள். c போன்ற பிரபல தளங்கள், ஆஃப்லைன் வாடிக்கையாளர்களை, இணையத்தில் நல்ல பேரங்களை வேட்டையாடுபவர்களாக மாற்றியிருக்கின்றன. “எனக்கு, ஃபிலிப்கார்ட்டில் பணம் செலுத்துவது எளிதாக இருப்பதால் அது ஒரு நல்ல தேர்வாகத் தெரிகிறது, மேலும் அத்தளத்தில் இருக்கும் பல்வகையான பொருட்கள், கூடுதல் நன்மையாக எடுத்துக் கொள்கிறேன்.” ஃபிலிப்கார்ட்டைப் பொறுத்தவரை, ஆன்லைனில் பொருள் வாங்குவதால் கிடைக்கும் மகிழ்ச்சியையும் சவுகரியத்தையும் இன்னும் பல வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்வதே. அந்நிறுவனத்தில் தலைமைச் செயல் அலுவலரும் நிறுவனர்களில் ஒருவருமான சச்சின் பன்சால் (இன்னொருவர் பின்னி பன்சால்), வாடிக்கையாளர் சேவையின் பலத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டவர். “இந்திய வாடிக்கையாளருக்கென்றே பிரத்யேகமான தயாரிப்பை உருவாக்க வேண்டுமென்ற எங்கள் சின்ன ஆசை, இன்றைக்கு எங்களுடைய கற்பனையைத் தாண்டி வளர்ந்திருக்கிறது” என்கிறார் சச்சின். ஃபிலிப்கார்ட்டின் வரலாற்றைக் கொஞ்சம் நோக்கினால் தெரியும், முதலில் அது விலைகளை ஒப்பிட்டுப்பார்க்கும் தளமாத்தான் தொடங்கப்பட்டது, ஆனால் ஒப்பிட்டுப்பார்க்க போதிய மின்வணிகத் தளங்கள் அப்போது இல்லை. அப்போது, ஐஐடி தில்லியிலும் பின்னர் அமேசான்.காம்-லும் சகாக்களாக இருந்த இரண்டு பன்சால்களும், “ஏன் ஒரு மின்வணிகத் தளத்தை தொடங்கக் கூடாது?” என்று யோசித்தார்கள். இப்படித்தான் ஃபிலிப்கார்ட் உருவானது. எட்டாயிரம் டாலர் முதலீட்டில் தொடங்கிய இந்தச் சின்ன ஆசை, இன்றைக்கு நூறுமில்லியன் டாலர் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. நிறுவனர்களுக்கு, வாடிக்கையாளருக்கான இணைய வெளியில் இருக்கும் ஆர்வம், அந்த பிராண்டிலும் வெளிப்படுகிறது; வாடிக்கையாளர் சேவைக்கும் அவர்களுடைய திருப்திக்கும் மறுபெயராய் விளங்குகிறது ஃப்லிப்கார்ட். ‘வாடிக்கையாளர் புன்னகைப்பதற்கு முன்னரே அவர் உங்கள் வாடிக்கையாளர் ஆகிவிட்டதாய் நினைத்துவிடாதீர்கள்’ என்பதே நிறுவனத்தில் செயல் மந்திரம். அதை அவர்கள் வெற்றிகரமாக செயல்படுத்தவும் செய்கிறார்கள்.

மின்வணிகம் என்பது வாடிக்கையாளர்களின் மனதை மிக வேகமாக ஆக்கிரமித்துக் கொண்டுவருகிறது. பெருநகரங்களில் நேரமின்மையே, ஆன்லைனில் பொருள் வாங்குவதற்கான பெரிய காரணியாக இருக்கிறது. மற்றொரு பக்கத்தில், பல்வேறு வகையான பொருட்களைப் பெற முடிவதால், சிற்றூர் மற்றும் சிறுநகரங்களில் இருப்பவர்களை ஆன்லைன் பக்கம் இழுக்கிறது. தங்களுடைய கடைகளில் போதுமான சரக்கை கொள்முதல் செய்துவைப்பது பெரிய சில்லறை வணிகர்களுக்கு சவாலாகவே இருக்கிறது. பெரும்பாலும் வாடிக்கையாளர்களால் தங்களுக்கு விருப்பமான பொருளைப் வாங்க முடியாததும், அவர்களை மின் சில்லறை வணிகத்தின் பக்கம் வர வைக்கிறது. ”புத்தகங்களை நேரடியாகக் கடைகளில் போய் வாங்குவதைத் தான் நான் விரும்புவேன், ஆனால் இதுவரை, மற்ற இடங்களில் கிடைபப்தற்கு அரிதான, மங்கா எனும் ஜப்பானிய இலக்கியத்தை ஃபிலிப்கார்டால் மட்டுமே தர முடிந்திருக்கிறது. மேலும் ஆன்லைனில் வாங்குவது, மலிவாகவும் இருக்கிறது. அந்த தளத்திற்கு நான் அடிக்கடி போவேன்”, என்று ஜெய்ப்பூரைச் சேர்ந்த ரித்திம்மா தோஷின்வால் என்ற உள்ளடக்க எழுத்தாளர் கூறுகிறார்.

இதைப் போன்ற அனுபவங்கள் மூலம் பெருநகரங்களைத் தாண்டியும் ஃப்லிப்கார்ட் பிரபலமடைந்திருப்பதை புரிந்து கொள்ளலாம். “2011-2012ம் வருடத்தில் நூறுமில்லியன் டாலருக்கு மேல் வருவாயை அடைவோம். 2015ல் ஒரு பில்லியன் டாலரை அடைய விரும்புகிறோம். ஆனால் இப்போதைய போக்கைப் பார்க்கும் போது, அதை விரைவிலேயே அடைந்துவிட முடியும் என்று தோன்றுகிறது,” என்று ஃப்லிப்கார்ட்டின் தலைமை இயக்க/செயல்பாட்டு அதிகாரியான பின்னி சொல்கிறார். “சாதாரண சில்லறை வணிகத்திலும், ஆன்லைன் சில்லறை வணிகத்திலும் விழுமியங்கள் மாறுகின்றன. பொருளை தொட்டு உணர்ந்து வாங்குவதே நேரில் சென்று பொருள் வாங்க உற்சாகமூட்டுகிறது. ஆன்லைனைப் பொறுத்தவரை சவுகரியமே முன்னால் நிற்கிறது. இரண்டுமே வளர்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன,” என்கிறார் சச்சின்.

ஒரு ஆன்லைன் தொழில் பிழைக்க, உறுதியான பின்புல அமைப்பு இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் ஒரு வாடிக்கையாளர் பரிமாற்றைத்த முடித்தவுடன், இந்த பின்புல அமைப்பே எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறது. ஃபிலிப்கார்ட், முதலில் வலைதளத்தின் மூலம் பெறப்படும் ஆர்டர்களுக்கு, பொருட்களை சப்ளையர்களிடமிருந்து வாங்கி அதை வாடிக்கையாளருக்கு அனுப்பி வந்தது. ஆனால், காலப்போக்கில், அவர்கள் வேர்ஹவுஸ் மாதிரிக்கு மாறிவிட்டார்கள். இப்போது நிறுவனம் தனக்கென்று சொந்த வேர்ஹவுஸ்களையும் அவற்றுக்கான பொருள் இருப்புப் பட்டியலையும் வைத்திருக்கிறது. விற்பனை முன்னோட்டம் பொருள் இருப்பை தீர்மானிக்கிறது; மீதமிருக்கும் பொருள், விற்பனை நிலவரத்தைச் சொல்லிவிடுகிறது; இதுவொரு வட்டம். “சுமார் 60 முதல் 70 சதம் வரையிலான டெலிவரி எங்களுடைய சொந்த வலைப்பின்னல் மூலமே நடக்கிறது,” என்கிறார் சச்சின். இந்த அமைப்பு, ஒட்டுமொத்த பொருள் அனுப்புதலை தங்களது கைக்குள் வைத்திருக்க முடிகிறது என்று அவர் நம்புகிறார்.

பொருட்களை கொண்டு சேர்ப்பதில் ஏற்படும் தாமதமோ அல்லது தவறான பொருளைக் கொண்டு சேர்ப்பதோ தான் இந்நிறுவனத்திற்கு பிரச்சனை. வாடிக்கையாளரை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் என்பதால், இந்தப் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் வெகுநாள் வைத்திருக்க முடியாது. "இப்படித் தவறாக அனுப்பப்படும் பொருட்களை பிந்தொடர்வது பெரிய சவால் தான். சரியாக கொண்டு சேர்க்கப்படாத ஆர்டர்களின் சுவடுகளைத் தேடுவதே பெரிய வேலை, அவற்றுக்கான செலவும் அதிகம்”. அதனால் தான் ஃப்லிப்கார்ட் வாடிக்கையாளர் சேவையில் அதிக கவனம் செலுத்துகிறது; ’எங்களுடய் சேவையை இன்னும் சிறப்பானதாக்குக்குவோம்’ என்பதே அவர்களுடைய சித்தாந்தம். பின்னி சொல்கிறார், “எங்கள் சங்கிலித் தொடரிலும் தொழில்நுட்பத்திலும் செய்யப்படும் பெரிய முதலீடுகள் மூலம், எங்களால் பெரிய பொருள் கிடங்குகளையும் செயல்முறையை தன்னியமாக்கவும் முடியும். எங்களுடைய பெரிய நோக்கம், இந்தியா பொருள் வாங்கும் முறையை மறுவடிவம் செய்வதே.”

மாறாத வாடிக்கையாளர் சேவையே ஃபிலிப்கார்ட்டின் தனித்தன்மை. சரியான நேரத்தில் சிறந்த முறையில் செய்யப்படும் சேவையின் மூலம் அடையும் வாடிக்கையாளர் திருப்தியை தள்ளுபடிகள் மூலம் அடைந்துவிட முடியாது என்று அதன் நிறுவனர்கள் நம்புகிறார்கள். அதே போல், நம்பகத்தன்மையை உருவாக்குவதற்கும் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலம் ஃப்லிப்கார்ட், வாடிக்கையாளரோடு நிகழ்நேரத்தில் தொடர்பில் இருக்கிறது. மின்வணிகத்தின் முன்னோடியான இவர்களுக்கு, நேர்மையே எல்லாவற்றைக் காட்டிலும் சிறந்த கொள்கையாக இருக்கிறது. "அந்த இடத்திலேயே முடிவுகளை எடுக்க எங்கள் வாடிக்கையாளர் சேவை நிர்வாகிகளை பயிற்றுவித்திருக்கிறோம். வாடிக்கையாளரின் கவலைகளைத் தீர்ப்பதன் மூலமும், எங்களுடைய தவறுகளை ஒப்புக்கொள்வதன் மூலமும், வாடிக்கையாளர் நலனுக்கு நாங்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை அவர்களுக்குப் புரிய வைக்கிறோம். எங்களுடைய தொழிலில் பொருளைக் கொண்டு சேர்க்கும் விதம் தான் மகிழ்ச்சியைத் தரமுடியும்,” என்கிறார் சச்சின்.

வாழ்வழியாக ஃபிலிப்கார்ட்டைப் பற்றிச் சொல்லப்படும் விஷயங்கள் அவர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயரை வாங்கித்தந்திருக்கிறது. மற்ற இடங்களிலும் அவர்கள் முன்னணியில் தான் இருக்கிறார்கள். சமீபத்தில் லெட்ஸ்பை.காம்-ஐ வாங்கியதன் மூலம் அவர்கள் வளர்ச்சிவேகம் அதிகரிக்கும். பின்னியின் நீண்ட காலத் திட்டத்தில், நிறுவனமே நடத்தும் பொருள் கொண்டு சேர்க்கும் நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதும், ஒத்த கருத்துடைய தொழில் நிறுவனங்களோடு கூட்டு சேர்வதும் அடங்கும். “எங்களுடைய இலக்கை அடைய உதவும், கூட்டுக்கு நாங்கள் தயார்” என்கிறார் அவர். மின்வணிகத்தில், வென்ச்சர் முதலீடுகள் அதிகமாகி வருவது இருவருக்கும் மகிழ்ச்சியே, “ பின்புலத்தை இன்னமும் உறுதியாக்க நிறைய முதலீடுகள் வர வேண்டும்” என்கிறார் சச்சின்.

எல்லா தொழில்முனைவர்களைப் போலே இவரும், ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு புதுமை மிக முக்கியம் என்று அபிப்ராயப்படுகிறார். வாடிக்கையாளரின் சவுகரியத்திற்காகவும் அவருக்கு விருப்பமான முறையை பயன்படுத்துவதற்து உதவியாகவும், கேஷ்-ஆன் -டெலிவரி மற்றும் வாடிக்கையாளர் இடத்திலேயே கடன் அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. டிஜிட்டல் களத்திலும் நிறுவனத்தின் இடத்தை விரிவுபடுத்த flyte என்ற இசையை பணம் செலுத்தி தரவிறக்கிக் கொள்ளும் சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். எழுநூறுக்கு மேற்பட்ட வகை இசையையும் 55 மொழிகளுக்கு மேலும் mp3 வடிவில் வாடிக்கையாளர் வாங்கமுடியும். DRM என்று அழைக்கப்படும் digital rights management இல்லாக இந்த கோப்புகளை, எந்த கருவிகளில் வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் இசைக்க முடியும்.

புதுமை என்பது தொழில்துறையின் ஒரு அம்சம் மட்டுமே. இன்றைய தேதியில், பாரம்பரியமானதோ நவீனமானதோ, ஒரு தொழிலுடைய இடம், அது எந்தளவுக்கு திறமையாக தகவல்களைக் கையாள்கிறது என்பதில் தான் இருக்கிறது. ஃபிலிப்கார்ட் தங்களிடம் இருக்கும் தகவல்களின் மூலம் வாடிக்கையாளர் எண்ணங்களை எப்படிப் புரிந்துகொள்கிறது? மின்வணிகம் என்பது இப்போது தான் வளர்ந்து வருவதால், முந்தைய காலத்தைப் புரட்டிப் பார்த்துத் தெரிந்து கொள்ள ஒன்றுமேயில்லை. எனவே, தகவல்களைச் சேகரித்து அவற்றை அலசுவது, நிறுவனத்தின் வருங்கால செயல்பாடுகளை திட்டமிட அவசியமானது. இந்த முறை வாடிக்கையாளருக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் உண்டாக்குகிறது; ஏனென்றால், வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு தேவையான பொருத்தமான பேரங்களைப் பெறுகிறார்கள். சச்சின் சொல்கிறார், ”வாடிக்கையாளரின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வதில் தான் எங்களுடைய உழைப்பு முழுதும் செலவிடுகிறோம், மின்வணிகத்தை உயர்த்த எங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் செய்கிறோம்”

இந்த தொழிலில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் ஏராளம், அதே போல் தான் தோல்வியும். ஆலோசக நிறுவனமான டெக்நோபார்க் அட்வைசர்ஸ், இன்றைய தேதியில் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார மதிப்பு $600 மில்லியன் என்றும், 2020 அது $70 பில்லியனாக உயர்வதற்கான சாத்தியம் இருக்கிறது என்கிறார்கள். மின்வணிகத்தில் அனுபவமுள்ளவரும், ஆரம்ப காலத்திலேயே தொடங்கப்பட்ட இந்தியாபிளாசா.காம் -ன் நிறுவனரும் தலைமை செயல் அலுவலருமான கே.வைத்தீஸ்வரன், இந்தத் தொழிலை ஒரு மராத்தானோடு ஒப்பிடுகிறார். “இது நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தைப் போன்றது அல்ல. உலகளவில், நாங்கள் குறைய மார்ஜின் வைத்து தான் செயல்படுகிறோம், இருந்தும் உண்மையான வளர்ச்சியை நாங்கள் காண்கிறோம்.” இன்றுவரை, நூறு சதம் வெற்றி என்பதற்கான ஃபார்முலா இல்லை. இந்த மாராத்தானில் ஃபிலிப்கார்ட் தனியார் பங்கு நிறுவனங்களாக அக்சல் பார்ட்னர்ஸ் மற்றும் டைகர் க்ளோபல் உதவியோடு தான் ஓடிக்கொண்டிருக்கிறது; இந்த இரண்டு நிறுவனங்களும் $150 மில்லியனை இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். வரிக்கு பிந்தைய லாபம் இல்லையென்றாலும் கூட, இந்த இரண்டு நிறுவங்களும் பங்கு கொண்ட பிறகு, ஃபிலிப்கார்ட்டின் நிதி மதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. லெட்ஸ்பை.காம்-ஐ வாங்கியதன் மூலம் ஃபிலிப்கார்ட் உள்ளூர் ஆன்லைன் சந்தையை கைப்பறும் ஃபிலிப்கார்ட்டின் நோக்கம் தெளிவாகியிருக்கிறது. வளர்ந்துவரும் வாடிக்கையாளர் எண்ணிக்கை, இணைய அறிவு கொண்ட மக்கள் மற்றும் ஆர்வத்தோடு இறங்கும் நிதி நிறுவனங்கள் எல்லாம் சேர்ந்து ஃபிலிப்கார்ட்டை அமேசான்.காம்-ற்கான இந்தியாவின் சவாலாய் நிறுத்தக்கூடும்.

இந்தியர்களை ஆன்லைன் வணிகத்திற்கு இழுத்துவருவது ஒரு அற்புதமான வேலை. புதிய திட்டங்கள், தரமான பொருட்கள் மற்றும் கச்சிதமான வாடிக்கையாளர் சேவையை தரும் நிறுவனங்கள் மட்டுமே பிழைக்க முடியும். இந்த வருடங்களில், மின்வணிகத்தில் நாயகனாக உயர்ந்திருக்கும் ஃபிலிப்கார்ட், இந்த இடத்தை அடைந்தற்கு புத்திசாலித்தனமோ அல்லது இயல்பறிவோ காரணமாக இருக்கலாம். ஃபிலிப்கார்ட் அனுபவத்தை மொத்தமாகச் சொல்ல, பூனேவின் விற்பனையியல் மாணவரான அபிஷேக் ஆஸ்தானா ஒரு கவிதையே எழுதியிருக்கிறார். மாஸ்டர்கார்டின் பிரபல விளம்பரத்தை இவர் கொஞ்சம் மாற்றியிருக்கிறார், “சில பொருட்களை நீங்கள் ஆன்லைனில் வாங்க முடியாது.... மற்ற எல்லாவற்றுக்கும் ஃபிலிப்கார்ட் இருக்கிறது!”

தி ஹிந்து கட்டுரை - http://www.thehindu.com/arts/magazine/article3290735.ece
ஃபோர்ப்ஸ் இந்தியா கட்டுரை - http://forbesindia.com/article/boardroom/can-flipkart-deliver/33240/0


இன்று உடுமலை.காம், டயல் ஃபார் புக்ஸ், சென்னைஷாப்பிங்.காம் போன்ற நிறுவனங்களை பற்றியும் ஒரு கட்டுரை எழுதலாம்.. யாராவது முயற்சி செய்யலாம் !

Read More...