பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, September 19, 2012

டேட்ஸ் விநாயகர்


இந்த வருடம் வெங்கட்நாராயணா சாலையில் பேரிச்சம்பழத்தில் உருவான விநாயகரை செய்துள்ளார்கள். நேற்று இதை பார்க்க நல்ல கூட்டம் இருந்தது. வருடா வருடம் இதே இடத்தில் இந்த மாதிரி விதவிதமான பிள்ளையாரை பார்க்கலாம். ஒரு முறை கிரிக்கெட் விளையாடுவது மாதிரி கூட இருந்தது. இந்த பேரிச்சம் பழம் எல்லாம் எங்கிருந்து வந்தது ?

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம் இதனால் கூடியிருக்கிறது என்று சொல்லுகிறார்கள்

5 Comments:

பெசொவி said...

Wish you all, a HAPPY GANESH CHATHURTHI!

Unknown said...

UN Food & Agriculture Organisation அறிக்கையின் படி பேரிச்சை தயாரிப்பில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நான்காவது இடத்தில்தான் இருக்கிறது

வரிசையிலே எகிப்து, இரான், சௌதி அரேபியா முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன

kothandapani said...

ஒரு இந்து விழாவால் ஒரு முஸ்லிம் நாடு வளம் பெறுகிறது என்பது நல்ல மத நல்லிணக்க செயல்பாடே ........
விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் ......
( உங்கள் மஞ்சள் கமெண்ட் வயிற்று எரிச்சலால் இருக்காது என்று நம்பி ......)

அன்பு said...

வளைகுடா நாடுகளிடம் இருந்து நாம் வாங்கும் பெட்ரோலால் பெறாத வளத்தையா இந்த பேரீச்சம்பழத்தால் பெற்றுவிடப் போகிறது, போடுற கமெண்டை யோசிச்சு போடுங்கய்யா

Anonymous said...

மண், சாணி, மஞ்சள் என்றால் எளிதாக நீர் நிலையில் கரைத்து‍ விடலாம். நீரும் மாசடையாது. கெமிக்கல் பிள்ளையார் சற்று‍ டேஞ்சர். அது‍ போகட்டும். டேட்‌ஸ் பிள்ளையாருக்கு‍ அர்ச்சனை, ஆராதனை எல்லாம் ஒரு‍ பக்கம் இருக்கட்டும், ஸாரி நடக்கட்டும். இறுதியில் அவரது‍ கதி என்னவாகப் போகிறது. எங்காவது‍ கரைத்தால் நீர் என்னாவது? சரி பிய்த்து‍ பிய்த்து‍ பக்தர்களுக்கு‍ பிரசாதமாக கொடுப்பதாக வைத்துக் கொண்டால், அட ராமா (மறுபடியும்) ஸாரி அட பிள்ளையாரப்பா உனக்கு‍ ஒவ்வொரு‍ பிறந்தா நாளுமே திகிலாத்தான் இருக்கனும்னு‍ விதி போல.
பாபு
கோவை