பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 08, 2012

சூடா ஒரு டாக் - சாரு நிவேதிதா பேட்டி

Keywords: Jeyamohan, S.Ramakrishnan, Facebook, Rajini, Sex Scam, Nithi etc.,

15 Comments:

Anonymous said...

சாரு - ஜெமோ சண்டை ? விவரம் தெரிந்தவர்கள் விளக்கவும். சாரு, ஜெமோவின் புத்தகத்தை கிழித்து எறிந்தாரா ?

ஜெமோ மனுஷ்யபுத்திரன் அவர்களை இப்படி திட்டியது மிக மிக தவறு! ஜெமோ தனது எந்த கட்டுரையில் இப்படி எழுதினார்? லிங்க் இருந்தால் கொடுங்கள்.

ரஜினி பற்றி சாருவின் பதில்கள் 100% சரி !

new get-up of charu rockss!!

- Charu rasigan

பிரபாகர் said...

சாரு ஒரு வெத்து வேட்டு என்பது தெளிவாக தெரிகிறது.

கேள்விகள் நேரடியானது… ஆனால் அதற்குண்டான பதில்கள் அர்த்தமில்லாதது, ஆழமில்லாதவை…

இன்றும்…….. ஆன்மீகமா பகுத்தறிவா என தெளிவாக முடிவெடுக்க முடியாத இயலாமையை என்னவென்று சொல்வது. அவரே சொல்கிறார்... ஆரம்பத்தில் வள்ளலார், விவேகானந்தர் கொஞ்சம் பாதாஞ்சலி… அதனால் நான் ஆன்மீகவாதி, அப்புறம் கொஞ்சம் புஸ்தகம் வாசிச்ச உடனே ஆன்மீகம் இல்ல பகுத்தறிவு வாதி, அப்புறம் நித்யாவ பார்த்தவுடனே மிஸ்டிக் எக்ஸ்பிரியன்ஸ்…, சோ ஆன்மீகம், நித்யா ரஞ்சிதா மேட்டர்ல மாட்டிக்கிட்டவுடனே… அத விட்டாச்சு…. இப்ப ஆன்மீகம் இல்ல....

சரி அப்ப நாளைக்கு.... நீங்கள் என்ன சொல்வீர்கள்... இதே ஆன்மீக மறுப்பு தொடருமா... ஏன்யா ஒரு நித்யானந்தாவ வைச்சு ஆன்மீகத்த இல்லே இருக்குன்னு சொன்னா .....

அடேயப்பா..... எவ்வளவு புரிதல் இருக்கிறது உங்களிடத்தில்.. என்பது எங்களுக்கு புரிகிறது.

பாதாஞ்சலி படிச்சேன் என சொல்கிறீர்கள், யோக சூத்திரத்தை பற்றியும், அதை பற்றிய தெளிவும் இருந்தால் இப்படி நொண்டிக் குதிரை ஏறுமா தங்கள் தெளிவு….

அப்படியென்றால் பாதாஞ்சலி யோக சூத்திரத்தை படித்து புரிந்தது அந்த அளவில் தான் என அர்த்தம் கொள்ள வேண்டியிருக்கிறது.

எழுத்தாளன் என்பவன் யார். வாசகருக்கு சிந்தனை செய்ய தூண்டும் விஷயங்களை சொல்பவனே அவன். யோசிக்க தெரியாத உங்களுக்கு அடுத்தவருக்கு சொல்லும் அருகதை எங்கிருந்து வந்தது.

ஏன்யா குடிக்கிற என்றால்.... குடி தீமையானது தான், அது நல்லதில்ல என சொல்கிறீர்கள்... ஆனால் நான் குடிப்பேன்... 15 நாளைக்கு ஒரு தரம்.. அது செலிபிரேஷன் என்றால் எந்த வகையில் இதை சேர்ப்பது...

மறுபடியும் கேள்வி வைக்கப்படுகிறது, குடிப்பது தவறுதானே, இது உங்களை வாசிப்பவருக்கு ஒரு மோசமான முன்னுதாரணம் தானே என்றால்….

நான் 18 மணி நேரம் உழைக்கிறேன், தியானம் பண்றேன், வாக்கிங் போறேன், அப்புறம் குடிக்கிறேன்…. நீங்க ஏன் குடிக்கிறத மட்டும் பிடிக்கிறீங்க என்கிறார்.


சாட்டிங் செய்ததை பற்றி கேட்ட போது, இது சதி, அரசியல் விளையாட்டு என்றெல்லாம், சப்பை கட்டு கட்டி, இத பத்தி பேசாதீங்க எனும் ரீதியில் சொல்வது சொதப்பல்.

அவரது பயம் அஞ்சி நடுங்கும் தன்மையும் வெளியில் தெரிகிறது.

புத்தகத்தை கிழித்து வீசினேன், அதுவும் நண்பனுக்காகத்தான் எனச் சொல்வதே தான் வீரமானவன் என சொல்லிக் கொள்ளும் ஒரு தொடை நடுங்கி தனமே என்பது ஆழமாய் வீரமானவனுக்கு தெரியும்.

வீரம் என்றுமே பேசியதில்லை.... குரைக்கும் எந்த ஒரு ஜீவனும்....

இவர் போன்ற இலக்கிய காமெடியன்களை, காமத்தை ஒரு கடைச்சரக்காய் விற்று பிச்சை எடுக்கும் பெருமான்களை எட்ட நின்று பார்ப்பதை கூட தவிர்க்க வேண்டும்.

ரெங்கசுப்ரமணி said...

The background music is better than the interview.

Anonymous said...

சாரு பொய் சொல்லமாட்டார் என்பது உண்மை, ஆனால் அவருக்கு சம்மந்தம் இல்லாதவர்களைப் பற்றி எழுதும்போது மட்டுமே!!! இவரையோ அல்லது இவரை சார்ந்தவர்களை பற்றி எழுதும்போது அடிக்கடி பொய் சொல்வார்... facebook-ல் இவர் அந்த பெண்ணுடன் chat செய்ததாக சொல்லப்படுவது, வேண்டுமென்றே யாரோ இவரை மாட்டி விடுவதற்காக செய்ததாம்.... நம்பிட்டோம்.... (கனிமொழி ஆட்கள் செய்தார்கள் என்று சொல்கிறார்... அப்படியானால் கனிமொழி பற்றி மோசாமாக அந்த chat-ல் சொல்லப்பட்டுள்ளதே... அது எப்படி?)
இவர் சில வாரங்களுக்கு முன், win tv -க்கு அளித்த பேட்டியில்... அலெக்ஸ் பால் மேனன் இவருடைய வாசகர் என்று ஒரு பத்திரிக்கையில் எழுதி இருந்ததாக சொன்னார் ... எந்த பத்திரிகை அது? ஒரு நண்பர் அவருடைய FB வாசகர் வட்டத்தில் எழுதிய விஷயத்தை ........ அப்பா...... சாரு பொய்யே சொல்ல மாட்டார்... அலெக்ஸ் பால் மேனன் இவருடைய வாசகர் தான்... இல்லை என்று சொல்லவில்லை.... வாசகர் வட்டத்தில் ஒரு நண்பர் சொன்னார் என்று சொன்னால் ஒரு கெத்து இருக்காது என்று நினைத்து பத்திரிக்கையில் வந்தது என்று அடித்துவிட்டாரே..... சூப்பர்.... சாரு சாருதான்.. அவர் மறந்து அல்லது தெரியாமல் சொல்லிவிட்டார் என்று சொல்லி வக்காலத்து வாங்குவார்கள் இவரது அடிமைகள் ... ஏதாவது ஒரு பத்திரிக்கையில் ஒரு மூலையில் இவரது பெயர் வந்தாலே அவர் அதை விருப்பமில்லாமல் (என்று சொல்வார்) அவர் தளத்திலும் FB வாசகர் வட்டத்திலும் போட்டு ஒரு கலக்கு கலக்கி விடுவாரே?

Anonymous said...

/சூடா ஒரு டாக்/

this means sooda oru TALK or sooda oru DOG :))))

Anonymous said...

'ஜூட்டு போலே, கவ்வா காட்டே' (அல்லது) 'எத்தனை சாருக்களடா இப்பூவுலகில்!"
- 'கவின்ஜர்' சாராயசிம்மன்.

சாரு,
கொஞ்சம் படிச்சாரு
கொஞ்சம் நடிச்சாரு.
சண்ட புடிச்சாரு
சந்தி சிரிச்சாரு.
சாட்டிங்குல புடிச்சாரு
மீட்டிங்குல கடிச்சாரு.
நித்திய அணைச்சாரு
அவரையே ஒதச்சாரு.
தண்ணிய அடிச்சாரு
பன்னிய புடிச்சாரு.
சாரு உன்னைக் கடித்து வைக்குமுன்
ஓடிப்போடா கூறு கெட்டவனே.....

dr_senthil said...

சாருவின் சிந்தனைகளின் சராசரி வயது குறைந்துகொண்டே வருகிறது. விரைவில் அவர் அம்புலிமாமாவில் கதைகள் எழுத போகிறார்.

Anonymous said...

'ஜூட்டு போலே, கவ்வா காட்டே' (அல்லது) 'எத்தனை சாருக்களடா இப்பூவுலகில்!"
- 'கவின்ஜர்' சாராயசிம்மன்.

சாரு,
கொஞ்சம் படிச்சாரு
கொஞ்சம் நடிச்சாரு.
சண்ட புடிச்சாரு
சந்தி சிரிச்சாரு.
சாட்டிங்குல புடிச்சாரு
மீட்டிங்குல கடிச்சாரு.
நித்திய அணைச்சாரு
அவரையே ஒதச்சாரு.
தண்ணிய அடிச்சாரு
மென்னியப் புடிச்சாரு.
சாரு உன்னைக் கடித்து வைக்குமுன் இங்கிருந்து
ஓடிப்போடா கூறு கெட்டவனே.....

kothandapani said...

ஒரு சாருவின் பேட்டியால், எத்தனை சாருக்கள் வெளியே வந்து விழுகின்றார்கள்..... அப்பப்பா.......

சிந்திப்பவன் said...

Anything and everything about Mr.Charu is a waste of time.You could have instead put an obituary on Mr."Ennatha Kannaiah" which would have been more appropriate and sensible.

திரட்டு.கொம் said...

வணக்கம் ,
உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி.
www.thiraddu.com

Anonymous said...

'ஞான பீட' விருது வழங்கும் விழாவில் ஜெயகாந்தன் கூறினார். "நான் நாத்திகனாக இருக்க வேண்டும் என்பது கடவுளின் விருப்பம் போல்" கண்ணதாசன் கூறியதாக இதை கூறினார். அடுத்த வார்த்தையாகவே ஜெயகாந்தன் இந்த வார்த்தை கூறினார் "நல்ல சூனியம் தான் நல்ல ஞானம்" .

இந்த பெட்டியில் சாரு கூறிய ஆத்திக நாத்திக விளக்கமும் இதே வகையை சார்ந்ததுதான். அவரவர் வாழ்க்கையின் நேரடி அனுபவங்களை வைத்தே இந்த கருத்தை கூறுகிறார்கள். இந்த மூவருமே எழுத்தை தன் வாழ்க்கையாக மாற்றிக் கொண்டவர்கள்.

(1. நான் ஒன்னும் குரு வாசக சபையை வெச்சுகிட்டு என் பின்னாடியே வாருங்கள் சீடர்களேன்னு சொல்றதில்ல. என்னோடைய எழுத்தின் அடிப்படை நோக்கமே என்னை கேள்விக் கேளுங்கள். என்னை மட்டுமல்ல எல்லாவிதமான நிர்வாகங்களையும் கேள்விக் கேளுங்கள்.
2. நான் ஒரு text வெச்சிருக்கேன் அதை நீங்க re create பண்ணனும் அதான் என் ஆசையே
3. என்னுடைய 400 பக்க நாவலை எடுத்துக் கொண்டீர்களானால் அதுல ஒரு ஐம்பது பக்கம் மட்டும் தான் sex இருக்கும் மீதி முன்னூறு பக்கத்திலையும் ஒரு குருவி ஒரு நாய் இன்னும் பலதறப்பட்டட மனிதர்களை பற்றியும் இருக்கும். இது வெளிவராத சப்ஜக்ட் என்பதால் எல்லோரும் அந்த ஐம்பது பக்க sex பத்தியே பேசுறாங்க.)

நான் எழுதிய இந்த பகுதி உங்களுக்கு புரியவில்லை என்றால் நீங்கள் மனிதர் தானா என்பதை சுயப் பரிசோதனை பார்த்துக் கொள்ளுங்கள். (நித்யா)

Anonymous said...

நடு நடுவே தமிழில் அறிவுப்பு செய்யும் குரல் யாருடையது? சகிக்கவில்லை. அவ்வளவு தமிழ்ப் பிழைகள். தமிழ்க் கொலைகள்.

சாரு நிவேதிதாவின் குரல் நித்தியானந்தாவின் குரலைப் போலவே மென்மையாக, வசியப்படுத்துவதாக உள்ளதை யாராவது கவனித்தீர்களா?

:-)

கௌதமன் said...

சாரு நிவேதிதாவின் 'நடிகை சுஷ்மாவுடன் ஒரு பேட்டி' கதையை, சின்னத் திரையில், (ஜெயா டி வி - இதயம் தொட்ட கதைகள் - மறு ஒளிபரப்பு) சமீபத்தில் பார்த்தேன். நன்றாக இருந்தது.

Anonymous said...

Vidalaikalai vitil poochikalaga veenakki kondu, ulvattam velivattam yena vesham pottu public foruma public toiletaga vubayokikm pinnaveenathua kothanaar Charu. Ilakkiyathai ouiraga parkum tamil samoogathai sadum saniyanee keralvil sendru mandiyidu.