பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, August 18, 2012

ரா.கி.ரங்கராஜன்அஞ்சலி

25 Comments:

பத்மநாபன் said...

எழுத்தாளரின் ஆன்மசாந்திக்கு பிரார்த்தினைகள். அவர் எழுத்தாக தமிழ் உள்ளங்களில் என்றும் இருப்பார்…http://aanandhavaasippu.blogspot.in/2011/01/blog-post.html

Anonymous said...

IT IS TOTALLY UNJUSTIFIED. YOU SHOULD WRITE SOME THING ABOUT A GREAT WRITER.
HE WROTE SO MANY NOVELS AND SHORT STORIES.
HE WAS ONE OF THE IMPORTANT FACTOR FOR KUMUDAM MAGAZINE'S SUCCESS.
HIS NOVELS WERE MADE FILMS AS SUMAITHANGI, IDHU SATHIYAM.
HE IS NOT HAVING ANY POLITICAL CONNECTION AND BECAUSE OF HIS "JATHI", NO AWARDS GIVEN TO HIM.
HE WROTE HIS BIOGRAPHY ( FIRST PART) IN KUMKUMAM.
I WISH IDLY VADAI SHOULD WRITE MORE ABOUT HIM.
I AM HIS ARDENT FAN.
GOPALASAMY SAUDI ARABIA

sharan said...

மிக சிறந்த எழுத்துகளுக்கு சொந்தக்காரர்.. ரா.கீ மறைந்தாலும் அவரது எழுத்துக்கள் என்றும் அழிவதில்லை.

Ganpat said...

இது போன்ற மேதைகள் தோன்றுவது அபூர்வம்.அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கும் ஒரு எளிய வாசகன்.
பி.கு:
இவரின் புனைபெயர்கள்:
டி.துரைசாமி
கிருஷ்ணகுமார்
வினோத்

Ganpat said...

இது போன்ற மேதைகள் தோன்றுவது அபூர்வம்.அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கும் ஒரு எளிய வாசகன்.
பி.கு:
இவரின் புனைபெயர்கள்:
டி.துரைசாமி
கிருஷ்ணகுமார்
வினோத்

”தளிர் சுரேஷ்” said...

எழுத்துலக ஜாம்பாவானுக்கு இதயம்கனிந்த அஞ்சலி!

”தளிர் சுரேஷ்” said...

இன்று என் தளத்தில்
அஞ்சு ரூபாயில் 180 கிமீ செல்லும் ஸ்கூட்டர்
http://thalirssb.blogspot.in/2012/08/180.html
பொரியரிசி கல்யாணம் ! பாப்பா மலர்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_18.html

வல்லிசிம்ஹன் said...

இவர் போல எழுதுபவர்கள் இனிக் கிடைப்பது அபூர்வம்.
மனமார்ந்த அஞ்சலிகள்.

Anonymous said...

ரா.கி.ரவுக்கு அஞ்சலிகள்.

அனானி plz go through this link

http://tamilonline.com/thendral/morecontent.aspx?id=128&cid=2&aid=7252

” - ஹம்ஸா’ என்ற பெயரில் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதியதும், துரைசாமி என்ற பெயரில் துப்பறியும் கதைகள் எழுதியதும் ரங்கராஜன்தான். அது தவிர, சூர்யா, 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' போன்ற பல புனை பெயர்களில் அவர் நிறைய எழுதியிருக்கிறார். கிருஷ்ணகுமார் என்ற புனைபெயரில் ”கோஸ்ட்”, ”எனக்குள் ஒரு ஆவி” போன்ற தலைப்புகளில் இவர் எழுதிய அமானுஷ்யத் திகில் தொடர்கள் அக்காலவாசகர்களால் மறக்க இயலாதவை. மொழிபெயர்ப்பிலும் சாதனை படைத்திருக்கிறார். புகழ்பெற்ற நாவலான பாபிலானை பட்டாம்பூச்சி என்றும், இன்விசிபிள் மேனை கண்ணுக்குத் தெரியாதவன் காதலிக்கிறான் என்றும் தொடர்களாக எழுதியிருக்கிறார். காதல் மேல் ஆணை (டேனியல் ஸ்டீல்), லாரா (ஷிட்னி செல்டன்), ஜெனிபர் போன்றவை வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. ஷிட்னி செல்டன் தமிழகத்தில் பலருக்குத் தெரியக் காரணம் ரா.கி.ரங்கராஜன்தான் என்று சொன்னால் அது மிகையில்லை. - “

Anonymous said...

ஒளிவதற்கு இடமில்லை எழுதியவர் எழுத்துக்களுக்கு மறைவற்கு இடமில்லை.

Anonymous said...

எழுத்தாளர் ராகிரா ஆன்மா அமைதி கொள்க!

யோவ் சவூதி அரேபியா கோபாலசாமி,அவர் மேல உமக்கு அவ்வளோ அபிமான புஷ்பம் இருக்குன்னா நீரே ஒரு கட்டுர எழுத வேண்டியாதானே? கம்பியூட்டர் முன்னாடி உக்கார்ந்து கேப்ஸ் லாக் ஆண் பண்ணி நாட்டம பண்ணணுமோ?
உமக்கு தின்ன சோறு செரிக்க இ.வ தான் வெத்தலையா??

இராஜராஜேஸ்வரி said...

"ரா.கி.ரங்கராஜன்"ஆன்மசாந்திக்கு பிரார்த்தினைகள்.

R. J. said...

Just recently Mr. Ganesh had reproduced a hilarious article by Raa.Ki.Ra. in his site and I was glad to recall his contribution to decent journalism. I am sure he would have been troubled by the decay to his 'Kumudam' now. May his soul rest in peace. - R. J.

VaiKo said...


பத்திரிகையாளராக, ‘சக்தி’யில் பணியைத் தொடங்கி, தம் வித்தக எழுத்துகளால், தமிழ்மக்களின் இதயம் நிறைந்த ரா.கி.ரங்கராஜன், தம் பெயரை மறைத்துக் கொண்டு, தம் முகத்தையும் வெளிப்படுத்தாமல், 42 ஆண்டுகளாக, குமுதம் ஆசிரியர் குழுவில் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாகப் பணி ஆற்றியவர். அதில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும், எழுத்தின் மேல் கொண்ட தணியாத காதலால், எழுதுவது எப்படி? என்று, இளம் எழுத்தாளர்களுக்கு, எழுத்துக்கலையைக் கற்றுத்தர நூல் எழுதியவர்.

குமுதத்தின் புகழ்பெற்ற அரசு பதில்களில், நடுநாயகமான ‘ர’ என்ற எழுத்துக்குச் சொந்தக்காரர்தான், நம்முடைய ரங்கராஜன். குடந்தையில் பிறந்து, தமிழ் அன்னையின் மீது தணியாத பற்றுக்கொண்டு, காலமெல்லாம் எழுதிக் குவித்தவர். இவருடைய எழுத்து ஓவியத்தில் புகழ் பெற்றவை திரைப்படமாக வந்த இது சத்தியம், சுமைதாங்கி, போன்ற காலத்தை வென்ற காவியங்கள் ஆகும்.

பேரறிஞர் அண்ணா அவர்கள், அடையாறு புற்று நோய் மருத்துவமனையில், தாம் இறப்பதற்கு முன்பு கடைசியாக வாசித்துக் கொண்டு இருந்த, தி மாஸ்டர் கிறிஸ்டியன் என்ற மேரி கோரெல்லியின் நாவலை மொழிபெயர்த்து, அண்ணாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துகின்ற வகையில், குமுதம் இதழில் வெளியிட்டார். உலகப் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் வாழ்க்கை வரலாறையும் எழுதினார். இளைஞர்களுக்கு வழிகாட்டியாக, தன்னம்பிக்கை ஊட்டுகின்ற வகையில் எழுதி வந்தார். அவரது எழுத்தில் இழையோடும் நகைச்சுவை, வயிறு குலுங்க வைக்கும்.

தம் பெயரை மறைத்துக் கொள்வதற்காக, மோகினி, சுந்தர பாகவதர், சூர்யா, ஹம்சா, துரைச்சாமி, கிருஷ்ணகுமார், மாதவி, வினோத் என்று அவ்வப்போது தோன்றிய பெயர்களில் எல்லாம் தன் படைப்புகளை வெளியிட்ட ரங்கராஜன், தம்முடைய உண்மை முகத்தையும், பெயரையும் வெளிப்படுத்தியதே இல்லை. இப்படி புகழை விரும்பாத, ஒரு பற்று அற்ற ஞானியாக வாழ்ந்து மறைந்து உள்ள ரா.கி.ரங்கராஜன், தமிழ் எழுத்து உலகை அரை நூற்றாண்டுக் காலத்துக்கு மேல் அழகுபடுத்திய பெருமகன் ஆவார்.

அன்னாரது மறைவு, தமிழ் எழுத்து உலகத்துக்குப் பேரிழப்பு. அவர் உடலால் மறைந்தாலும், தம்முடைய எழுத்துகளால் தமிழ் அவர் ஏற்றி வைத்த இலக்கியச்சுடர் என்றும் அணையாது.


Dr Rama Krishnan said...

Sad to hear demise of a great writer.
By the way, I will prefer people stop using the term Athma Shanthi adiyatam". What does this mean?
Athma is always in Shanthi.

Sundu plus Eli said...

My very first favorite writer thiru ra ki avarkal.
May his soul rest in peace

Anonymous said...

IN THE NAME OF W.R SWARNALTHA (THERU VILAKKU)HE WROTE.
HIS TRANSLATED NOVEL IS PATTAM POOCHI ALSO
ACTUALLY I HAVE A LOT TO WRITE ABOUT HIM. FROM 1957 I WAS READING KUMUDAM. BUT I AM HAVING VERY POOR KNOWLEDGE IN COMPUTER. I DO NOT KNOW TYPING ALSO. WITH DIFFICULTY I AM WRITING COMMENTS.
PADAKU VEEDU IS HIS MASTER PIECE.
IN UNIQUE STYLE HE WROTE KRISHNA DEVA RAYAN NOVEL.
I REQUEST "ANANYMOUS" NOT TO MISUNDERSTAND ME.

GOPALASAMY SAUDI ARABIA.

Anonymous said...

IN THE NAME OF W.R SWARNALTHA (THERU VILAKKU)HE WROTE.
HIS TRANSLATED NOVEL IS PATTAM POOCHI ALSO
ACTUALLY I HAVE A LOT TO WRITE ABOUT HIM. FROM 1957 I WAS READING KUMUDAM. BUT I AM HAVING VERY POOR KNOWLEDGE IN COMPUTER. I DO NOT KNOW TYPING ALSO. WITH DIFFICULTY I AM WRITING COMMENTS.
PADAKU VEEDU IS HIS MASTER PIECE.
IN UNIQUE STYLE HE WROTE KRISHNA DEVA RAYAN NOVEL.
I REQUEST "ANANYMOUS" NOT TO MISUNDERSTAND ME.

GOPALASAMY SAUDI ARABIA.

Pas S. Pasupathy said...

பன்முக எழுத்தாளர் ரா.கி.ர-வின் ஒரு
கட்டுரை ( அவருடைய ‘கிருஷ்ணதேவ ராயன்’ நூல் பற்றிச் சொல்லும்) இங்கே:
http://s-pasupathy.blogspot.com/2012/08/1_19.html

Pas S. Pasupathy said...

பன்முக எழுத்தாளர் ரா.கி.ர -வின் ஒரு கட்டுரை இங்கே:
http://s-pasupathy.blogspot.com/2012/08/1_19.html

Ponniwinselvan said...

ரா.கி. ரங்க ராஜன் என்றால் குமுதம் குமுதம் என்றால்ராகி ரங்க ராஜன்- இது நான் 1971 முதல் குமுதம் வாசகன் ஆக இருந்த பொது மிக நன்றாக புரிந்துபோன சமாசாரம்.
அரசு என்பதில் நடு அவரே . அவரது புனைபெயர்கள் எத்தனையோ தெரியாது.தெரிந்தவை கிருஷ்ணகுமார் - [கோஸ்ட் கதைகள்], மோகினி-[வாளின் முத்தம் , தர்மங்கள் சிரிக்கின்றன] சுந்தர பாகவதர் -[நகைச்சுவை தோரணங்கள் ], துரைச்சாமி -[ஒளிவதற்கு இடமில்லை ]வினோத்-[பல்சுவை முக்கியமாக சினிமா ]லலிதா-[ அழைப்பிதழ்] மற்றும் கை இல்லாத பொம்மை, ராசி,ஹேமா ஹேமா ஹேமா ,பாப்பில்யான் எனும் பட்டாம் பூச்சி உட்பட ஏராளமான மொழி பெயர்ப்புக்கள் போன்ற படைப்புகளை வெளியிட்ட ரா.கி.ரங்கராஜன்மறக்க முடியாத மாமனிதர் - {தடத்தில் நடப்பவர் சாதாரண மனிதன் தடம் பதித்து செல்பவர் மாமனிதர்}இல்லையா நண்பர்களே ???!!!!!!!

Ponniwinselvan said...

ரா . கி . ர என்றால் 1971 இல் குமுதம் படிக்க ஆரம்பித்த பொது தெரியும் அவரது மோகினி [வாளின் முத்தம் , தர்மங்கள் சிரிக்கின்றன ]துரைசாமி [ஒளிவதற்கு இடமில்லை]லலிதா [அழைப்பிதழ் ] சரஸ்வதி ராமகிருஷ்ணன் [தாழம்பூ பங்களா]கிருஷ்ணகுமார் ,சுந்தர பாகவதர் ,வினோத் ........சொல்லி மாளாது - எத்தனை பெயர்கள் எத்தனை கதைகள் அம்மம்மாஹ் !!!!! அவரது பெரும்பாலான கதைகளை படித்த அகம்பாவம் எனக்கு ஏராளம் நிச்சயம் உண்டு அவர் எல்லோரையும் போல் தடத்தில் நடந்த சாதாரண மனிதர் அல்ல தடம் பதித்து சென்ற மாமனிதர் இல்லையா நண்பர்களே ???!!!!!!!

சிந்திப்பவன் said...

W.R SWARNALTHA is NOT R.K.R please!

Engal Blog said...

Our tributes to the Great writer R K R. His novel 3x2=7 (moovirendu aezhu) is one of the unforgettable one. W.R Swarnalatha is not RKR. Theruvilakku appeared in Anandhavikatan. Kumudham's aasthaana writers never wrote in other magazines those days.

Anonymous said...

AGAIN I AM TELLING W.R SWARNALTHA IS R.K R ONLY. PLEASE CONFIRM WITH ANANDA VIKADAN. I HAVE NO DOUBT ABOUT IT. IN ONE ARTICLE, R.K.R HIMSELF WROTE ABOUT IT.
BE CAUSE HE WROTE IN A.V, HE CHOSE THIS NAME.
GOPALASAMY SAUDI ARABIA