பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, August 10, 2012

டபுள் செய்திகள்

கோப செய்திகள் இரண்டு :
தமிழ் நாடு சட்டசபையில் நம்ம கேப்டனை அதிமுக எம்.எல்.ஏ ஒருவர் 'இது சினிமா இல்லை தம்பி' என்று ஓர் விவாதத்தில் சொன்னார். அப்போது இதை ஒரு பெரிய விஷயமாக யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஜெயா பச்சன் அசாம் கலவரம் குறித்து பேசிய போது புதுய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே பதில் கூறும் போது "அசாம் மாநில கலவரம் என்பது ஆபத்தான விஷயம். இது ஒன்றும் சினிமா சம்பந்தப்பட்டது அல்ல" என்று பதில் கூற ஜெயா பச்சன் கடுப்பாகி கடும் கோபத்தை வெளிப்படுத்த உடனே
ஷிண்டே மன்னிப்பும் கேட்டுவிட்டார். ஷிண்டே என்ன தான் காங்கிரஸ் மந்திரியாக இருந்தாலும் அவரின் நேர்மையை பாராட்ட வேண்டும். இதே மாதிரி தான் முன்பு மின்துறை அமைச்சராக இருந்த போது அமேரிகாவிலும் மின்வெட்டு வருகிறது அதனால் இந்தியாவிலும் மின்வெட்டு வருகிறது.. இதுல் தவறு இல்லை" என்றார். நாளைக்கு எங்காவது குண்டு வெடித்தால் இதே போல தான் ஏதாவது சொல்லுவார்.. இப்பேர்பட்ட அமைச்சரை பெற்றதற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

அத்வானிக்கு கொஞ்ச நாளாக பிஜேபி மேலே காண்டு உள்ளே நடக்கும் கேவலமாக சண்டைகளை பார்த்து கொதித்துப் போயிருக்கிறார். தன் வலைப்பதிவில் எழுதினார். பிறகு பார்லிமெண்ட் மழைக்கால கூட்டத் தொடரில் UPAவை 'சட்டவிரோதமான அரசு' என்று விமர்சிக்க உடனே சோனியாவிற்கு பயங்கர கோபம் வர உடனே டெலிவிஷன் அதை ஃபோக்கஸ் செய்ய தொடங்கியது. ( வாழக்கம் போல அத்வானி தன் பேச்சை வாபஸ் வாங்கி மன்னிப்பு கேட்டார் என்பது வேற விஷயம் ). இதில் என்ன வேடிக்கை என்றால் 2G ஊழல், மும்பை தாக்குதல், ஆதர்ஷ், கல்மாடி என்று எதற்கும் கோபப் படாமல் இருந்த சோனியா இதற்கு மட்டும் வெகுண்டெழ பார்லிமென்ட் கிடுகிடுத்துப் போனது. அத்வானி செய்த பெரிய தவறு தான் சொன்னதை வாபஸ் வாங்கியது தான்.

அத்வானிக்கு சில அறிவுரைகள் : முதலில் கர்நாடகா பிஜேபி அரசு சட்டவிரோத அரசு என்று சொல்லி பழகிபாருங்கள், பிறகு இரண்டு முறை பிஜேபி தலைவர் பதவியை அனுபவிக்க மாற்றம் செய்த பிஜேபியை விமர்சித்து பாருங்கள் பயிற்சி கிடைத்த பிறகு காங்கிரஸ் கூட்டணியை பற்றி விமர்சனம் செய்யுங்கள். இதில பெரிய காமெடி என்ன என்றால் சோனியாவின் ஆவேசத்தை கண்ட, தி.மு.க., - எம்.பி., டி.ஆர்.பாலு, மிக வேகமாக எழுந்து நரம்பு புடைக்க, அத்வானியை நோக்கி குரல் கொடுத்தார். மோடி இருந்தால் இந்த மாதிரி எழுந்து குரல் கொடுக்க யாருக்காவது தைரியம் இருக்குமா ?

டெசோ மாநாட்டு செய்திகள் இரண்டு:
அரசியல் சுயலாபத்திற்காக திமுக நடத்தும் டெசோ மாநாட்டை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெசோ மாநாட்டில் காங்கிரஸ்காரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என சென்னையில் மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.


தீப்பற்றி எரிந்த செய்திகள் இரண்டு:

பிரிட்டனின் பக்கம் இருக்கும் குடியிருப்பில் தங்கியிருந்த நபர் ஒருவர், ஈரமான தனது கால் உறைகள் மற்றும் இரண்டு ஜட்டிகளை மைக்ரோ ஓவனில் வைத்து உலர வைத்துள்ளார். அதிகப்படியான வெப்பத்தில் இந்த துணிகள் தீப்பற்றி, சமையலறை முழுவதும் பரவியது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சம்பந்தப்பட்ட நபரை மீட்டு, சமையலறையில் பரவிய தீயையும் அணைத்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஏ.டி.எம். மெஷினில் நேற்றிரவு குளிர்சாதனப் பெட்டியில் ஏற்ப்பட்ட மின்கசிவின் காரணமாக தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் மெஷினீல் வைக்கப்பட்டிருந்த 30 லட்சம் ரூபாய் எரிந்து கருகியது. பேசாம இதை படம் எடுத்து ராமலீலா மைதானத்தில் கருப்பு பணத்தை மீட்க உண்ணாவிரதம் இருக்கும் பாபா ராம்தேவிடம் காட்டிவிடலாம்.


டிப்ஸ் இரண்டு:

அரசு அதிகாரிகள் தங்கள் பணிகளை கடும் சிரத்தையுடன் மேற்கொள்ள வேண்டும். சிறிய அளவில் முறைகேடு செய்யலாமே தவிர, கொள்ளைக்காரர்கள் போல கொள்ளையடிக்கக் கூடாது என்று டிப்ஸ் கூறியுள்ளார் - உபி அமைச்சர் சிவ்பால் யாதவ்

டீ போடும் போது, டீத்தூளுடன் சர்க்கரையை சேர்த்து கொதிக்க விடாதீர்கள் டீயின் சுவை குறைந்து விடும். ஆனால் கீரை மசியல் செய்ய கீரையை கடையும் போது அதனுடன் கால் ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கடையவேண்டும்.

இன்னும் இரண்டு செய்திகள் இருக்கிறது அதை சொன்னால் பலருக்கு கோபம் வரும் அதனால்...உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லலாம் :-)

8 Comments:

Anonymous said...

First of all, a Prime Minister should be "Elected" by the people directly. Not "selected" by the crooks who are running the roost.
That system needs to be fixed immediately. Otherewise we are going to see far more worst people than a ' bearded Cat' (pun intended) becoming Prime Ministers pretty soon.

It is a very convenient system for both Congress and BJP since it serves them very well.

So called Indian Democracy is a joke. It is an absolute criminal system very well utilized by the thieves, crooks and criminals.

There is no hope. We've lost it.

Anonymous said...

'தமிழ் நாடு சட்டசபையில் நம்ம கேப்டனை அதிமுக எம்.எல்.ஏ ஒருவர் 'இது சினிமா இல்லை தம்பி' என்று ஓர் விவாதத்தில் சொன்னார்"அதற்க்கு கண் சிவந்து நாக்கை மடக்கி சொன்ன பதில் எந்த பத்திரிகையிலும் வரவில்லை,பூடகமாக‌ துக்ளகில் அது வந்தது.

திண்டுக்கல் தனபாலன் said...

இரண்டு செய்திகளும் அறிந்தேன்... மற்ற இரண்டு செய்திகளும் என்னவாக இருக்கும் என்று யோசிக்க வைத்து விட்டீர்கள்...

நன்றி....

vv said...

மோடி இருந்தால் இந்த மாதிரி எழுந்து குரல் கொடுக்க யாருக்காவது தைரியம் இருக்குமா ?

vv said...

மோடி இருந்தால் இந்த மாதிரி எழுந்து குரல் கொடுக்க யாருக்காவது தைரியம் இருக்குமா ?

மோடி..!

dr_senthil said...

சோனியா ஏன் கோவ பட வேண்டும்?
மோடி இருந்து இருந்தால் ? கதையே வேறு

கௌதமன் said...

இனிமேல், அத்வானி அவர்கள், முதலில் வாபஸ் வாங்கிக் கொண்டுவிட்டு,
பிறகு தான் கூறவேண்டிய கருத்துகளைக் கூறலாம். அப்போ கருத்து
மக்கள் மனதில் நிற்கும். வாபஸ் மீடியாவில் வலம் வந்துகொண்டிருக்கும்!

காப்பிகாரன் said...

குஜராத் ல நடந்த மாறி நாடு புல்லா நடக்கணும்னு இட்லிவடை கு ஆசையா அதான் மோடிய குப்டுரரோ