என் பேர் ஜீவா. என்னுடைய படம் இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. இதற்கு முன்பு விஜய் சாருடன் நண்பன் படத்தில் நடித்தேன். மிஷ்கின் பல மாதங்களுக்கு முன் கூப்பிட்டார் ஒரு படம் பண்ண. ஓப்பனிங் சீன் சொன்னவுடன் அட நல்லா இருக்கே என்று ஒத்துக்கிட்டேன்.
முதல் சீன்ல முகமூடி திருடர்கள் ஹைடெக் கருவி எல்லாம் வைத்துத் திருடுவார்கள். ஆனால் அவர்கள் கொள்ளை அடிப்பது எல்லாம் கிழவர்கள் கிழவிகள் இருக்கும் வீடுகள். எவ்வளவு ஹைடெக் என்றாலும் வீட்டில் உள்ளவர்களை கொலை செய்ய அவர்கள் உபபோகிக்கும் ஆயுதம் சுத்தியல். நான் கூட டைரக்டரைக் கேட்டேன்.அவர் "என் படம் என்றால் வித்தியாசமா இருக்க வேண்டும்... அதனால்" என்று சொல்லிவிட்டார்.
படத்தில் என் பெயர் புருஸ் லீ. அட நிஜமாதாங்க. இதற்காக நான் குங்பூ எல்லாம் கத்துக்கிட்டேன். முகமூடி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று பல விதமாக யோசித்தோம். சூப்பர் மேன் மாதிரி ஜட்டியை வெளியே போட்டுக்கொண்டா அல்லது பேட் மேன் மாதிரி பெரிய காதுகளுடனா அல்லது ஸ்பைடர் மேன் மாதிரி நைலான் டிரஸ்ஸா என்று பயங்கர குழப்பம். இதை எல்லாம் கலந்து ஒரு உருவம் செய்துவிடலாம் என்று முடிவு செய்தோம்.
வீட்டைத் திருடும் கும்பலைக் கண்டுபிடிக்க போலீஸ் கஷ்டப்படுகிறது. கமல் படம், ரஜினி படம், ஏன் அஜித் படம் என்று எல்லா தமிழ் படங்களிலும் திருடர்களைக் கண்டுபிடிக்கும் முன் ஒரு வட்ட மேஜையை சுற்றி டிஸ்கஸ் செய்ய வேண்டும். அதே போல இங்கே நாசர் மற்றும் பெரிய பெரிய ஆபிசர்கள் எல்லாம் ஆலோசனை செய்கிறார்கள். ஆனா படத்தில் நான்தானே ஹீரோ? எனக்கு குங்ஃபூ வேற தெரியும். அதனால் அவர்களை நான் தான் சண்டை போட்டுப் பிடிக்கிறேன்.
சார் எனக்கு பாட்டு எல்லாம் கிடையாதா என்று கேட்டேன், உடனே இரண்டு பாட்டுகள் வைத்து விட்டார். ஒன்று குத்து பாட்டு (மஞ்சள் புடவை இல்லாமல்), இன்னொன்று காதல் பாட்டு சுவிஸ் எல்லாம் சுற்றி பார்த்தாச்சு.
படத்தில் காதல் என்று சொன்னவுடன் தான் நினைவுக்கு வருது, நான் காதலியிடம் ப்ரபோஸ் செய்யப் போன இடத்தில் அவர் அப்பா, அதான்சார் நாசர், சுட்டுக் கொல்லப்பட, நான் தான் கொலை செய்தேன் என்று என் மேலே பழிவிழுகிறது. அப்பறம் என்ன என்று உங்களுக்கே தெரியும். கடைசியாக, என்னை முகமூடி இல்லாமல் கூட அழகாகக் காண்பித்த கேமராமேனுக்கு நன்றி.என் பெயர் பூஜா ஹெக்டே, இந்த படத்தில் நான்தான் ஹீரோயினாம் . மணிரத்தினம் படத்தில் வரும் அதிகப்பிரசங்கி மாதிரியான கேரக்டர். பாருங்க காருக்கு வெளியே யாராவது வாழைப்பழத் தோலியை தூக்கி போட்டால் அதைப் பொறுக்கி அவர்கள் காருக்குள்ளே தூக்கி போட்டுவிடுவேன். படத்தில் என் அப்பா நாசர். மேலே ஜீவாவே கதையை சொல்லிவிட்டார். எனக்கும் சொல்ல ரொம்ப விஷயம் இல்லை. அதே மாதிரி தான் படத்திலும் அதிகமாப் பேச மாட்டேன், அதிகமா வர மாட்டேன். ஜீவாவின் தாத்தாவுக்குக் கொடுத்த முக்கியத்துவம் கூட எனக்கு இல்லை. பை.
நான் தான் ஜீவாவோட தாத்தா. எனக்கு ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வரும் சைன்டிஸ்ட் தாத்தா மாதிரி ரோல். எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று சொன்னேன். "சார் சால்டரிங் அயன் வைத்து ஏதோ ஒரு சர்க்யூட் பத்தவையுங்க.. மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டார். அதே போல என்னுடன் இன்னொரு தாத்தா அவர் தான் ஜீவாவிற்கு முகமூடி தைத்து தருவார். எனக்கு முகமூடி ரோல் கிடையாதா என்று கேட்டேன்.. உடனே உங்களுக்கு இல்லாமலா என்று க்ருஸ்துமஸ் தாத்தா மாதிரி ஒரு வேஷம் கொடுத்தார் கடைசியில். என்னை யங்காக் காண்பிக்க பர்முடா போட்டுக்கொள்ளச்சொன்னார். நான் பெரிய நாடக நடிகன் அதே மாதிரி இந்த படத்திலும் நடித்திருக்கேன்.
நான் தான் படத்தின் வில்லன். எனக்கு பெரிய வேலை இல்லை. ரிப்ளக்டர் ஸ்டிக்கர் ஸ்டிக்கார் ஒட்ட வைத்த சுத்தியலை வைத்து எல்லோரையும் கொலை செய்வேன். எதுக்கு சுத்தியலில் ரிப்ளடர் ஸ்டிக்கர் என்று கேட்கலாம் அப்ப தான் இருட்டு சீனில் ஒழுங்கா தெரியும் ? ! கடைசியில் ஹீரோ கையில் அடிப்பட்டு படம் பார்க்கும் உங்களுக்கு முன்னால் நான் செத்து போகிறேன்.
நான் முகமூடி படம் பேசுகிறேன். படத்தில் வசனம் எல்லாம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. எனக்குப் பிடித்த ஒரே நல்ல வசனம் படம் ஆரம்பிக்கும் முன் "புகைபிடித்தல் உடல் நலத்துக்கு கேடு" என்று வரும் பாருங்க அது மட்டும்தான். கேமரா முதல் இரண்டு மூன்று காட்சிகளில் நல்லா இருக்கு. திரைக்கதை மிஷ்க்கின். முதல் பாதி மூச்சா போகும் வரை ஓ.கே. அதற்கு பிறகு அவருக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை. இத்தனைக்கும் அவர் சமீபத்தில் சாருவுடன் சண்டை கூடப் போடவில்லை. இசை சில இடங்களில் நல்லா இருக்கு ஆனால் சில இடங்களில் ஒரே இரைச்சல். பல இடங்களில் திடீர் என்று ஆரம்பித்து திடீர் என்று முடிகிறது. இதுக்கு மேல சொல்லிக்கற மாதிரி ஒண்ணுமே இல்லை.மொத்தத்தில் முகமூடி மூக்கு ஷார்ப். மூவி மொக்கை.
மார்க் 5/10
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Friday, August 31, 2012
முகமூடி - FIR
Posted by IdlyVadai at 8/31/2012 11:29:00 PM 9 comments
Thursday, August 30, 2012
திருவாதவூர் வாழும் வரலாறு
அன்புள்ள இட்லி வடை நண்பருக்கு,
வணக்கம்.
நான் கபிலன், மதுரை காமராஜ் பல்கலைகழக கல்லூரியில், கணினி துறையில் உதவி பேராசிரியாராக பணி புரிந்து வருகிறேன் ... என்னுடைய சொந்த ஊர் "திருவாதவூர்" ..ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு .. அதே போல் எங்கள் ஊருக்கும் வரலாறு உண்டு .. அது எப்படி அழிந்து கொண்டு வருகிறது ... பல பிரச்சனை களுக்கும்,எதிர்ப்புகளுக்கும் இடையில் " திருவாதவூர் வாழும் வரலாறு" என்ற ஆவணப்படத்தை பதிவு செய்து மார்ச் மாதம், 2011 , மதுரை யாதவர் கல்லூரியில் வைத்து வெளியிடப்பட்டது... இந்த பதிவை பார்த்து எங்கள் உருக்கு அருகில் உள்ள கிராமங்கள் தங்கள் ஊரில் உள்ள பதிவுகளை பாதுகாக்க ஆரம்பித்துள்ளனர் .... பல கல்லுரி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர் ... இப்பொழுது தான் இந்த குவாரி பிரச்சனை வெளி உலகிற்கு வந்துள்ளது .. இப்பொழுது இந்த ஆவணப்படம் நம் இட்லிவடையில் வந்தால் சரியாக இருக்கும் ..
" திருவாதவூர் வாழும் வரலாறு"
அறிவிப்போம்… நமது தொன்மையின்னை… உறவுக்கும்… உலகுக்கும்…
வாய்ப்பு இருந்தால் இந்த ஆவணப்படத்தை வெளியிட்டு சிறப்பு செய்ய வேண்டும் ..இட்லிவடை வாசகன் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன் ... நன்றி
Part 1 - http://www.youtube.com/watch?v=BJ9QG1rKqEs&feature=plcp
Part 2 - http://www.youtube.com/watch?v=Trs0CErCadk&feature=plcp
பத்திரிக்கை செய்திகள்
http://www.hindu.com/2011/04/04/stories/2011040460110200.htm
http://mdmk.org.in/sites/default/files/sangoli/2011/06/Sangoli-2011-06-24.pdf (31 Page)
--
Dr.Kabilan.P
Assistant Professor
Department of Computer Science
Madurai Kamaraj University College
ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல பதிவை இட்லிவடையில் போட்ட திருப்தி!
Posted by IdlyVadai at 8/30/2012 12:50:00 PM 14 comments
Labels: சிறந்த கட்டுரை, விருந்தினர், வீடியோ
Wednesday, August 29, 2012
நீயும் இந்திரா…..நானும் இந்திரா! - பாரதி மணி
போன டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த உயிர்மை 100-வது இதழ் வெளியீடும், சீனு ராமசாமியின் காற்றால் நடந்தேன் கவிதைத்தொகுப்பு வெளியீடும் ஒரே விழாவாக நடந்தேறியது.
உயிர்மை 100-வது இதழை வெளியிட்டுப்பேசிய மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அதிக நேரம் உட்காரமுடியாதென்ற காரணத்தால் உடனே வீட்டுக்குப் போய்விட்டார். அடுத்தநாள் என்னை தொலைபேசியில் அழைத்து, உயிர்மை 100-வது இதழில் வந்திருந்த எனது கட்டுரையை சிலாகித்துப்பேசிவிட்டு, தான் போனபிறகு, விழாவில் யாரெல்லாம் என்ன பேசினார்கள் என விசாரித்தார். என் பங்குக்கு நான் ‘சீனு ராமசாமியின் கவிதைத்தொகுப்பைப்பற்றி பேச வந்த நடிகர் விவேக் உங்கள் பெயரை தவறாக இந்திரா செளந்தர்ராஜன் என்று சொல்லிவிட்டு, உடனே தவறைப்புரிந்துகொண்டு, இந்திரா பார்த்தசாரதி என்று திருத்திக்கொண்டார்’ என்று ‘போட்டுக்கொடுத்தேன்’! இதைக்கேட்ட இ.பா. கொஞ்சமும் வருத்தமில்லாமல், ‘என் பெயர் ராசி அப்படி! அந்தக்காலத்தில் நா. பார்த்தசாரதியும், இப்போது இந்திரா செளந்தர்ராஜனும் தான் என் எதிரிகள்!’ என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு இரு சம்பவங்களை நினைவு கூர்ந்தார்:முன்பொரு சமயம் இ.பா.வும், நா.பா.வும் பம்பாய் தமிழ்ச்சங்கத்தாரால் ஒரு விழாவுக்கு அழைக்கப்பட்டு, பம்பாய் போயிருந்தனர். அங்கே அவர்கள் பேசப்போகும் ஒரு நிகழ்ச்சியில், பார்வையாளராக வந்திருந்த வாசகர் ஒருவர் மேடையேறி, வலுக்கட்டாயமாக இந்திரா பார்த்தசாரதியின் வலது கையைப்பிடித்து, விரலில் ஒரு புது மோதிரத்தை போட்டுவிட்டு, ‘சார்! இது ‘குறிஞ்சி மலர்’ எழுதிய கைக்கு!’ என்று சொல்லி கும்பிட்டாராம். திகைப்படைந்த இ.பா. மோதிரத்தை கழட்டி அவர் கையில் கொடுத்து, ‘குறிஞ்சி மலர்’ எழுதிய கை அவர்ட்டே தான் இருக்கு!’ என்று நா.பா.வை கை காட்டினாராம்!
ஒருமுறை இ.பா. கும்பகோணம் போயிருந்தபோது, கலை விமர்சகர் தேனுகா இவரை தெருவில் பார்த்ததும், பக்கத்திலிருந்த, தான் வேலை பார்க்கும் வங்கிக்கு அழைத்துப்போய், தனது வங்கி மானேஜருக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். மானேஜர் மிகுந்த மகிழ்ச்சியோடு, மாலை வாங்கிவரச்செய்து, மரியாதை செய்துவிட்டு, ‘சார்! என் மனைவி உங்களோடெ பெரிய விசிறி! உங்க கதையெல்லாம் விழுந்து விழுந்து படிப்பா!.....நீங்க அவசியம் நம்ம வீட்டுக்கு வரணும். அவ ரொம்ப சந்தோஷப்படுவா!’ என்று இரவு விருந்துக்கு அழைத்திருந்தார். விருந்துக்குப்போன இ.பா.வுக்கு ராஜ உபசாரம். வடை பாயசத்துடன் சமைத்திருந்தார் மானேஜர் மனைவி. ‘சார்! உங்க சிறுகதை, நாவல், மாதாந்திர ராணி எல்லாம் ஒண்ணு விடாமெ படிச்சிருக்கேன். ‘மர்ம தேசம்’ சீரியல் வந்தால், டி.வி.யை விட்டு நகரமாட்டேன்!’ என்றதும் தான் இ.பா.வுக்கு ஓஹோ…. இது ராங் நம்பர் என்பது புரிந்தது. ‘அம்மா! அவர் வேறே……நான் வேறே…….நீங்க சமைச்சு வச்சது இந்திரா செளந்தர்ராஜனுக்கு….இப்போ அவர் எங்கே இருக்கார்னு எனக்குத்தெரியாது. எம்பேர் இந்திரா பார்த்தசாரதி. நானும் ஒரு எழுத்தாளன் தான்! எனக்கு சாப்பாடு உண்டா….இல்லியா?’ என்று அவருக்கே உரிய நக்கலோடு கேட்டிருக்கிறார்!
படங்கள்:
(1)இ.பா.வும் நானும்! - 2004
(2)இ.பா.வும் நானும்! - 2010
Posted by IdlyVadai at 8/29/2012 09:23:00 AM 15 comments
Labels: அனுபவம், எழுத்தாளர்கள், பாரதி மணி
Tuesday, August 28, 2012
ரா.கி.ரங்கராஜன் அஞ்சலி கட்டுரைகள் - 2
Posted by IdlyVadai at 8/28/2012 03:01:00 PM 6 comments
சிவ சிவ
இயக்குநர் பார்த்திபன் வழக்கம் போல நக்கல் நையாண்டியுடன் பேசினார். அவர் தில்லுமுல்லு ரீமேக் விழாவில் பேசுகையில், சிவாவை விட புதுமுக நாயகி இஷா தல்வார் அழகாக இருக்கிறார். இதுமாதிரி ஒரு கதாநாயகி கிடைத்தால் சிவனே பார்வதியை தள்ளி வைத்து விட்டு ஒரு டூயட் பாடலை பாடி விட்டு வருவார் என்று பேசியிருந்தார்.
கடவுள் சிவனை, நடிகையுடன் சேர்த்துப் பேசி இந்து மதத்தவர்களின் நம்பிக்கையை இழிவுபடுத்திய நடிகர் பார்த்திபன் உடனடியாக தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.இல்லாவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று இந்து மக்கள் கட்சி எச்சரித்துள்ளது.
படத்துக்கும் செய்திக்கும் சம்பந்தம் இல்லை !
Posted by IdlyVadai at 8/28/2012 06:18:00 AM 10 comments
Sunday, August 26, 2012
ரா.கி.ரங்கராஜன் அஞ்சலி கட்டுரை - 1
அண்ணா நகர் டைம்ஸ் ( பாக்கியம் ராமசாமி ), மற்றும் குமுதத்தில் வந்த கட்டுரைகள்
கல்கியில் ராஜேஷ்குமார் எழுதியிருக்கார், யாராவது எனக்கு அனுப்பினால் இங்கே போடுகிறேன். நன்றி
கிளிக் செய்து படிக்கவும்.
Posted by IdlyVadai at 8/26/2012 08:34:00 PM 13 comments
விலாஸ்ராவ் என்ற வி.ஐ.பி நோயாளி - ஞாநி + சில ...
விலாஸ்ராவ் என்ற வி.ஐ.பி நோயாளி என்ற தலைப்பில் இந்த வார கல்கியில் ஞாநி எழுதியுள்ள இந்த கட்டுரை பலர் சரி என்று சொன்னாலும், நம் நாட்டில் க்யூ சிஸ்டம் மாறப்போவதில்லை.
கட்டுரை கீழே...
நிறைய பேர் என்னை ஒரு வி.ஐ.பி என்று கருதுகிறார்கள். பத்திரிகைகளில் எழுதுவதால்,டி.வி களில் தோன்றுவதால், பரவலாக பலருக்கு என் முகம் பரிச்சயமாகியிருப்பதால், நான் ஒரு வி.ஐ.பி என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
வி.ஐ.பி என்ற ஜாதியே இந்தியாவுக்கே உரியது. மேலை சமூகத்தில் அதை ஏறத்தாழ ஒழித்துவிட்டார்கள். எல்லாரும் சமம், எல்லாரும் வி.ஐ.பி என்ற பார்வை நம் சமூகத்தில் கிடையவே கிடையாது.
வி.ஐ.பி என்றால் என்ன அர்த்தம் ? எல்லா பொது இடங்களிலும் முன்னுரிமை, சலுகைகளுக்கு உரியவர் என்றே இங்கே அர்த்தம். ஏர்போர்ட்டில் ஒரு முறை லிஃப்டுக்காகக் காத்திருந்தபோது பார்த்தேன். இன்னும் சிலர் இருந்தார்கள். ஒரு சினிமாப்பாட்டுசக்ரவர்த்தி வந்ததும் எல்லாரும் ஒதுங்கி அவர் முதலில் லிஃப்டுக்குச் செல்ல வழி விட்டுவிட்டார்கள். இப்படிப்பட்ட முன்னுரிமைகளைப் பெறக் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள், உடற்குறையுடையோர் தவிர வேறு யாருக்கும் தகுதியில்லை என்பதே என் கருத்து.
நான் அடிக்கடி மருத்துவமனைகளுக்குச் செல்கிறேன். பரிசோதனை நிலையங்களுக்குப் போகிறேன். டோக்கன் வரிசைப்படி என் முறைக்காகக் காத்திருக்கிறேன். நான் ஐநூறு ரூபாய் பீஸ் கொடுக்கும் டாக்டரை சந்திக்க இரண்டு மணி நேரமெல்லாம் வரிசையில் காத்திருந்திருக்கிறேன். காத்திருக்கும் மற்றவர்களும் அதே பீஸ்தான் கொடுக்கிறார்கள். அவர்களும் காத்திருக்கிறார்கள்.
கியூவில் நிற்காமல் முன்னே செல்லும் உரிமையுடையவர் வி.ஐ.பி என்பது நம் சமூகத்தில் நிலவும் கிறுக்குத்தனம். இதை ஓட்டுச் சாவடியிலிருந்து ஏர்போர்ட் வரை எங்கேயும் பார்க்கலாம். தங்கள் முறை வருவதற்காகக் காத்திருக்கக் கூட முடியாத நிலை ஒரு வி.ஐ.பிக்கு என்னதான் இருக்க முடியும் ? மலம் கழிக்கும் அவசரத்தை தவிர வேறெதற்கும் இந்த சலுகையைத் தரமுடியாது.
வி.ஐ.பியின் நேரம் பொன்னானது. அந்த நேரத்தில் அவர் சமூக மேம்பாட்டுக்காக உழைப்பது வீணாகிவிடும் என்றெல்லாம் கற்பனையாக சொல்லப்படுகின்றன. இந்த வி.ஐ.பி கலாசாரத்தை எல்லா இடங்களிலும் நிச்சயம் ஒழித்துக் கட்டவேண்டும்.
குறிப்பாக மருத்துவத் துறையில் ஒழித்துக் கட்ட வேண்டியிருக்கிறது. வி.ஐ.பிகளால் சாதாரண மனிதர்களுக்கு ஏற்படும் தொல்லைகள் கொஞ்சநஞ்சமல்ல. சுமார் 29 வருடங்களுக்கு முன்னால் என் அம்மா ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அதிகாலையில் இறந்துபோனார். அந்த வார்டுக்குப் பக்கத்து வார்டில் ஒரு முன்னாள் அமைச்சர் சாவதற்கு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். என் அம்மா இறந்த உடனே மருத்துவமனை ஊழியர்கள் அடுத்த நிமிடமே பிணத்தை எடுத்துக் கொண்டு ஓடும்படி என்னை துரத்தினார்கள். காரணம் செத்துக் கொண்டிருக்கும் வி.ஐ.பியைப் பார்க்க சாகப் போகும் சில வி.ஐ.பிகள் அடுத்த சில நிமிடங்களில் வந்துவிடுவார்களாம். அப்போது வார்டில் பிணம் இருக்கக்கூடாதாம். மாடியிலிருந்து அம்மாவின் உடலை கீழே எடுத்து செல்ல ஸ்ட்ரெச்சர் கேட்டேன். வரவில்லை. அம்மாவின் உடலை என் இரு கைகளில் ஏந்திக் கொண்டு படிகளில் இறங்கி வெளியே வந்தேன். நான் வெளியேறவும் வி.ஐ.பிகளின் கார்கள் நுழையவும் சரியாக இருந்தது !
சிகிச்சையில் ஒரு வி.ஐபிக்கு முன்னுரிமை உண்டா என்ற கேள்வி இந்த வாரம் மனதில் அலை மோதியது. காரணம் மத்திய அமைச்சரும் முன்னாள் மராட்டிய முதல்வருமான விலாஸ்ராவ் தேஷ்முக்தான்.
மரணப்படுக்கையில் இருந்த விலாஸ்ராவுக்கு கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் முழுக்கக் கெட்டுவிட்டன. அவற்றை உறுப்பு தானமாக வாங்கி அவருக்குப் பொருத்தி அவரைக் காப்பாற்ற முடியுமா என்று அவர் குடும்பத்தினர் முயற்சி செய்தார்கள்.
உறுப்பு தானத்தில்தான் வி.ஐ.பி பிரச்சினை நுழைகிறது. இந்தியாவில் உறுப்பு தானம் செய்பவர்கள் மிக மிகக் குறைவு. மூளைச் சாவு ஏற்பட்டதும் உறவினர் சம்மதத்துடன் ஒருவரின் உறுப்புகளை எடுத்துப் பயன்படுத்த அனுமதிக்கும் சட்டமே நம் நாட்டில் தாமதமாகத்தான் வந்தது.
எப்போதுமே தேவைப்படும் உறுப்புகளின் எண்ணிக்கையை விட, கிடைக்கும் உறுப்புகளின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். எனவே உறுப்பு பொருத்தப்படவேண்டிக் காத்திருப்போர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. உறுப்பு கிடைக்கக் கிடைக்க வரிசைப்படி அளிக்கப்படுகிறது. இதுதான் தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலங்களிலும் பின்பற்றும் நடைமுறை.
விலாஸ்ராவ் இந்தப் பட்டியலில் முதலில் இருக்க வாய்ப்பே இல்லை. அவருக்கு முன்பே பலர் காத்திருந்தார்கள். ஆனால் விதிகளை வளைத்து விலாஸ்ராவுக்கு ஒரு கல்லீரலையும் சிறுநீரகத்தையும் பெற்றுவிடமுடியுமா என்று கொஞ்சம் முயற்சிகள் நடந்திருக்கின்றன.
காத்திருப்போரில் யாருக்கு முன்னுரிமை தருவது என்பதற்கு ஒரு நடைமுறை இருக்கிறது. திடீரென உடல்நலம் குலைந்து உடனடியாக மாற்று உறுப்பு பொருத்தப்படாவிட்டால் இறந்துவிடும் ஆபத்தான நிலையில் இருப்பவரை அக்யூட் நோயாளி என்று சொல்வார்கள். இவர்களிலும் மிக அவசர நிலையில் இருக்கும் சிலரே முன்னுரிமைக்கு உரியவர்கள். நீண்ட காலமாக உடலின் ஒவ்வொரு பாகமாகப் பழுதடைந்து மெல்ல மெல்ல சீர்குலைந்துவந்த நிலையில் இருப்போர் க்ரானிக் எனப்படுவோர். இவர்கள் முன்னுரிமைக்கு உரியவர்கள் அல்ல.
விலாஸ்ராவ் தேஷ்முக்கின் கல்லீரல் பழுதாகிப் பல காலம் ஆயிற்று. அதன் பின் அதில் புற்று நோயும் ஏற்பட்டது. அவரது சிறுநீரகங்கள் பழுதடைந்தன. அவர் கிரானிக் நோயாளி நிலையில் இருந்தவர்.
வி.ஐ.பி என்பதற்காக அவருக்கு முன்னுரிமை தர மாற்று உறுப்புகள் தொடர்பான சட்டங்களில் ஒரு வழியும் கிடையாது. அவ்வளவு ஏன், இந்தியாவின் எந்த சட்டத்திலும் வி.ஐ.பி என்ற வரையறையோ யாருக்கும் சலுகையோ கிடையாது.
எனவே விலாஸ்ராவை க்ரானிக் கேட்டகரியில் இல்லாமல், ஹைப்பர் அல்ட்ரா க்ரிட்டிகல் கேஸ் என்று அவர் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனை அறிவித்தது. அந்த முன்னுரிமை பெற்றும் கூட, இன்னமும் அறுவை சிகிச்சைக்கு தயாராக இல்லாத நிலையிலேயே அவர் காலமாகிவிட்டார்.
மும்பையில் கல்லீரல் பெற இயலாத நிலையில் அவரை சென்னைக்குக் கொண்டு வந்து இங்கே விதியை வளைக்க ஏதேனும் செய்யமுடியுமா என்ற முயற்சி நடந்திருக்கிறது. இங்கேயும் சிரமம் என்றபோது மறுபடியும் மும்பையில் முயற்சித்தார்கள். உறுப்பு தான விதிகளின்படி வி.ஐ.பி என்று யாரும் இல்லை. எனவே அவரை வி.ஐ.பியாகக் கருதி முன்னுரிமை தந்து உறுப்பை ஒதுக்கீடு செய்யமுடியாது என்று மும்பையில் சொல்லிவிட்டார்கள். ஆனால் க்ரானிக் நிலையில் இருந்த அவர் உறுப்பு கிடைக்கும் முன்பே காலமாகிவிட்டார்.
அமெரிக்கா, மும்பை, சென்னை, ஏர் ஆம்புலன்ஸ் என்றெல்லாம் அலைந்து விலாஸ்ராவுக்கு உறுப்பு தானம் பெற்று பொருத்த முயற்சித்தவர்கள் , அவர் இறந்தபின் அவரது கண்களையோ உடலையோ கூட தானமாகத் தரவில்லை. இதுதான் நம் சமூகத்தின் வி.ஐ.பி மனநிலை : எனக்கு எல்லாரும் தரவேண்டும். நான் யாருக்கும் எதையும் தரமாட்டேன் !
மருத்துவ சிகிச்சை பெறுவதில் வி.ஐ.பிக்கு முன்னுரிமை என்று எதுவும் இருக்க முடியாது. எல்லா உயிரும் சமமானவை என்பதே சரியான கோட்பாடு. ஆனால் நாம் உயிர்களை வி.ஐ.பி உயிர் , சாதா உயிர் என்று பிரித்தே நடத்துகிறோம்.
விலாஸ்ராவ் தொடர்பாக வெளியான இணைய செய்திகளில் கமெண்ட் அடித்த பல வாசகர்கள் , விலாஸ்ராவ் ஆதர்ஷ் ஊழலில் தொடர்புள்ள நபர். அவர் இருந்தால் என்ன, இறந்தால் என்ன என்றெல்லாம் எழுதியிருந்தார்கள். இதுவும் தவறான அணுகுமுறைதான். ஊழலில் தொடர்புடையவர் செத்து ஒழியட்டும் என்று விடமுடியாது. அவரை நீதிக்கு முன் நிறுத்தி குற்றத்தை நிரூபித்து தண்டிப்பதுதான் சரியான வழி. எந்த மனித உயிரும் காப்பாற்றப்படவேண்டியதுதான் – விலாஸ்ராவ் உட்பட. ஆனால் விலாஸ்ராவ் வி.ஐ.பி என்பதால் முதலில் காப்பாற்றப்படவேண்டும் என்பதே தவறான அணுகுமுறை.
உண்மையில் எல்லா உயிர்களையும் சமமாக மதித்து கவனிப்பவர்கள் மருத்துவமனையில் இருக்கும் நர்சுகள்தான். எங்கிருந்துதான் இப்படி அற்புதமான நர்சுகள் வருடந்தோறும் புதிதுபுதிதாக வந்துகொண்டே இருக்கிறார்கள் என்று ஒவ்வொரு முறை மருத்துவமனைகளில் அட்மிட் ஆகும்போதும் வியக்கிறேன். அவர்கள்தான் நம் நாட்டு மருத்துவத்துறையின் மிகப் பெரிய சொத்து.
( நன்றி: கல்கி )
இந்த கட்டுரை தொடர்புடைய செய்தி இரண்டு
செய்தி 1:
சென்னை கோவளம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ஜீவா என்ற 30 வயது பள்ளிக்கூட கார் டிரைவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஆம்புலன்ஸ் வேன் மோதி படுகாயம் அடைந்து சென்னை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் உறுதி செய்தனர். உடனே ஜீவாவின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை விலாஸ்ராவ் தேஷ்முக்கிற்கு தானமாக பெற டாக்டர்கள் முயற்சி மேற்கொண்டனர். இரவு 9 மணி அளவில் ஜீவாவின் குடும்பத்தினர் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த டாக்டர்கள் தேஷ்முக்கிற்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடு செய்தனர். பெரிய ஆஸ்பத்திரியில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கு கல்லீரலை எடுத்துச்சென்று தேஷ்முக்கிற்கு பொருத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் விரைந்து செய்யப்பட்டன.
நள்ளிரவில் டாக்டர்கள் பெரிய ஆஸ்பத்திரிக்கு வந்தபோது, ஜீவாவின் உறவினர்களின் தயக்கம் மற்றும் விபத்து வழக்கு போன்ற காரணங்களால் கல்லீரலை தானமாக பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் அதிகாலை 2.45 மணிக்கு ஜீவா இறந்துவிட்டார்.
அவருடைய இதய துடிப்பு அடங்கி விட்டதால் அதன்பிறகு ஜீவாவின் கல்லீரலை எடுத்து தேஷ்முக்கிற்கு பொருத்த முடியாது. இதனால் துரதிர்ஷ்டவசமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை கைநழுவிப்போனது.
செய்தி 2
டிவிட்டர் இணையதளத்தில் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், "கல்லீரல் பாதிப்பால் சிகிச்சைப் பெற்று வரும் விலாஸ்ராவுக்காக, விபத்தில் மூளைச் சாவு ஏற்பட்ட உடலில் இருந்து கல்லீரலை தானமாகப் பெற வேண்டும் என்று குஜராத் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார். கல்லீரலைத் தானமாகப் பெற அதிகாரிகள் மிகுந்த முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக, டிவிட்டர் இணையதளத்தில் உடனடியாக 150 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். கல்லீரல் தானம் தேவைப்படும் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவரைவிட, அமைச்சர் முக்கியத்துவம் வாய்ந்தவரா என்று சிலர் இந்த நடவடிக்கையை விமர்சித்தும் உள்ளனர்.
அடுத்த பிரதமாராக வர இருப்பவர் இது போன்று உணர்ச்சிவசப்பட கூடாது. அவர் நாட்டுக்கு பிரதமர் அரசியல்வாதிகளுக்கு இல்லை.
Posted by IdlyVadai at 8/26/2012 07:34:00 AM 11 comments
Labels: அரசியல், கட்டுரை, பத்திரிகை, மருத்துவம்
Wednesday, August 22, 2012
கமலாவும் நானும் - புத்தக விமர்சனம் சுபத்ரா
“கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்ற ஒரு பழமொழி உண்டு. 1960-களில் குமுதம் இதழில் ‘கடுகுச் செய்திகள்’ எழுதத் தொடங்கிய திரு.பி.எஸ்.ரங்கநாதன் அவர்கள் ‘கடுகு’ என்ற புனைப்பெயரினால் தமிழ் இலக்கிய உலகில் அனைவராலும் அறியப்படுபவர். எளிமையாக இருக்கும் அவரது எழுத்து நடையில் நகைச்சுவை இழையோடியிருக்கும். ‘கடுகு’ வலைத்தளத்தைப் பின்தொடரும் நான் அவரது “கமலாவும் நானும்” புத்தகம் கையில் கிடைத்ததும் ஆசையோடு படிக்கத் தொடங்கினேன்.
கண்ணுக்குத் தெரியாத ஒர் அணுவிற்கு உள்ளே எவ்வளவு சக்தி மறைந்து இருக்கிறது? அதேபோல் தான் ‘கடுகு’ என்ற பெயரும். புத்தகத்துக்கு உள்ளே போவதற்கு முன் சமீபத்தில் மறைந்த திரு.ரா.கி.ரங்கராஜன் அவர்களின் அணிந்துரை. 206 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்தில் சுமார் 100 பக்கங்களில் “நானும்” கட்டுரைகள். கல்கி, குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி., சாவி, தேவன், சுஜாதா போன்ற பலருடன் ஏற்பட்ட தன் அனுபவங்களை மிகவும் சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார். அப்பக்கங்களைப் புரட்டிப் படித்த எனக்கு அவர்மேல் ஒரு வியப்பு அல்லது திகைப்பு ஏற்பட்டதில் ஆச்சர்யமில்லை.
அடுத்த 40 பக்கங்களில் எனக்குப் பிடித்த ‘கமலா புராணம்’ கதைகள். மீதி பக்கங்களில் சில கொசுறு கதைகள்.
கடுகு அவர்கள் குமுதத்தில் எழுதத் தொடங்கியதற்கு முன்னரே ‘கல்கி’ இதழில் அவரது ‘பொன் விளையும் பூமி’ என்ற கட்டுரை எழுத்தாளர் கல்கி அவர்களாலே வெளியிடப் பட்டிருக்கிறது. இரண்டு வருடங்கள் கல்கியுடன் பழகிய வாய்ப்பு கிட்டிய இவர் தனது டெல்லி இல்லத்திற்கு வைத்திருக்கும் பெயர் ‘கல்கி’. தமிழின் “குந்தவி, வந்தியத்தேவன், ராஜராஜன், தாரிணி, கரிகாலன், பொன்னியின் செல்வன்” போன்ற எழுத்துருக்கள் (fonts) இவர் உருவாக்கியவையே!
தனது எழுத்துத் திறமையை ஊக்கப்படுத்தியதில் கல்கிக்கு அடுத்ததாகக் குமுதம் ஆசிரியர் திரு.எஸ்.ஏ.பி. அவர்களைப் பற்றிக் கூறியிருக்கும் இவர், ஓர் அத்தியாயத்தில் ரா.கி.ர., பாக்கியம் ராமசாமி மற்றும் புனிதனுடன் குமுதம் அலுவலகத்தில் இருந்த அனுபவத்தைச் சொல்லியிருப்பார். காகிதங்கள், ப்ரூஃப்கள் என்று விரவியிருந்த அந்த அறைகளில் ‘அச்சு மை’யின் வாசனையை ‘உலகின் மிக உயர்ந்த சென்ட் மணத்தைவிட உயர்ந்த வாசனை’ என அவர் குறிப்பிட்டதில் இருந்து பத்திரிகைகளில் எழுதும் ஒரு டிபிகல் எழுத்தாளரின் ஆர்வமும் ஈடுபாடும் புலனாகியது.
1968-ல் தினமணிக் கதிரிலும் எழுதத் தொடங்கிய கடுகு, அதன் ஆசிரியரும் பிரபல நகைச்சுவை எழுத்தாளருமான திரு.சாவி அவர்களை மிகவும் கவர்ந்த தனது எழுத்துகளால், கதிரின் ஆஸ்தான எழுத்தாளராக விளங்கியதைக் கூறியிருக்கிறார். கதிரில் பிரபலமாகிய இவரது ‘கேரக்டர் கட்டுரைகள்’ பின்னால் குங்குமம் இதழிலும் தொடர்ந்திருக்கின்றன! அப்போது டெல்லியில் இருந்ததால் சுஜாதா அவர்கள் கதிரில் தொடர்கதை எழுதத் தொடங்கியிருந்த காலத்தில் அவரது படைப்புகளையும் வாங்கி அவற்றைச் சென்னைக்கு அனுப்புவதையும் இவர் வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.
விகடன் அலுவலகத்திற்குச் சென்று தேவனைச் சந்தித்த இவரது அனுபவம் சுவாரசியமானது. மவுண்ட்ரோடில், வாலாஜா ரோடு சந்திப்பு மூலையில் அன்றைய அலுவலகம் இருந்ததாம். (நிற்க, தற்போது அந்த இடத்தில் ஓரு “இட்லி-வடை” ஹோட்டல் இருப்பதாக நினைவுகூறுகிறார் இவர்). அப்போதைய விகடனில் ‘கேள்வி-பதில்கள்’ தொடரில் ஆசிரியரிடம் ஸ்ரீமான் பொதுஜனம் கேள்விகள் கேட்பதாய் அமைந்திருக்கும். ஆசிரியரை நேரில் சந்திக்கச் சென்ற இவர் ஒரு துண்டு காகிதத்தில் “ஸ்ரீமான் பொதுஜனம்” என்று எழுதி மடித்து ஒருவரிடம் கொடுத்திருக்கிறார்! அதைப் படித்த தேவன் அவர்களும் உடனே இவரை வரச்சொல்லிப் பார்த்ததில் ஏதும் ஆச்சர்யப்படுவதற்கில்லை! 2006-ல் ‘தேவன் அறக்கட்டளையினர்’ சார்பில் கடுகு அவர்களுக்கு ‘தேவன் விருது’ கிடைத்திருப்பது கூடுதல் தகவல்.
இந்த “நானும்” சீரீஸில் என்னை மிகவும் கவர்ந்தது “ஸ்ரீதரும் நானும்” தான். ஏனென்று புத்தகத்தைப் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். கல்யாணப் பரிசு, வெண்ணிற ஆடை, காதலிக்க நேரமில்லை, நெஞ்சில் ஓர் ஆலயம், இளமை ஊஞ்சலாடுகிறது, நினைவெல்லாம் நித்யா போன்ற பல வெற்றிப் படங்களைத் தந்த ‘சித்ராலயா ப்ரொடக்ஷன்ஸ்” ஸ்ரீதருக்கும் கடுகு அவர்களுக்கும் சுமார் 65 வருட ஆழமான நட்பு!
எம்.எஸ். அம்மாவைக் கடுகு அவர்கள் சந்திக்கச் சென்றதும் ஆர்வமூட்டும் ஒரு அத்தியாயம். பக்தியிலும் இசையிலும் ஊறியதால் அவர்களின் முகத்தில் தெரிந்த தெய்வீகக் களையும், சாந்தமான முகமும், பரிவையும் பாசத்தையும் பிரதிபலிக்கும் புன்முறுவலும் என இவர் குறிப்பிட்டிருப்பது மயிர்கூச்சரியச் செய்தது. “எம்.எஸ்.அவர்களைப் பார்த்தோம் என்று கூறுவது தவறு. தரிசித்தோம் என்று தான் சொல்ல வேண்டும்!” என்று எழுதியிருப்பார்.
“சிவாஜி கணேசன் அவர்களும் நானும்” என்னும் அத்தியாயத்தில் அவரது நாடகங்களைப் பார்க்கச் சென்றதும், அங்கே டேல் கார்னகியின் “How to win friends and influence people” புத்தகத்தின் உத்திகள் எந்த அளவுக்கு வேலை செய்தன எனவும் அவர் கூறியிருப்பது நல்ல நகைச்சுவை. “டைரக்டர் பாலச்சந்தரும் நானும்” பகுதியில் ‘வறுமையின் நிறம் சிறப்பு’ படத்திற்குத் தமிழ்நாடு அரசின் பரிசு கிடைத்தபோது முதன்முதலில் அவர் கடுகு அவர்களைத் தொலைபேசியில் அழைத்துச் செய்தியைத் தெரிவித்ததாக வந்த இடம் மனம் நெகிழச் செய்தது. அந்த அத்தியாயம் முழுவதுமே மிகவும் விறுவிறுப்பாகச் செல்லும் பகுதி.
கடுகு அவர்களும் அவரது மனைவியும் ஒரு வருட காலம் உழைத்து ‘நாலாயிரத் திவ்யப் பிரபந்த’ப் பாசுரங்களைப் பதம் பிரித்து அழகாக ஒரு புத்தகமாக குறைந்த விலையில் வெளியிட்டிருக்கிறார்கள். பல காபிகள் விற்றுவிட்ட அந்தப் புத்தகத்தை சுஜாதா அவர்கள், “புத்தகச் சந்தையில் நான் வாங்கிய ஒரே ரத்தினம்” என்று எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தின் இரண்டு பாகங்களையும் எப்போதும் தனது மேஜையில் சுஜாதா வைத்திருப்பார் என்று ‘சுஜாதா தேசிகன்’ சொன்னதாக அந்த அத்தியாயத்தில் கடுகு குறிப்பிட்டிருப்பார்.
Calligraphy துறையிலும் கடுகு அவர்களுக்கு மிகுந்த ஆர்வத்தைப் பற்றி ஓர் அத்தியாயம் உண்டு. கணினியும் இணையமும் பிரபலமாகிய நாட்களில் தமிழ் எழுத்துகளைத் திரையில் பார்ப்பது எத்தனை சுவாரசியாமனது என நம்மால் யூகிக்க முடியும். வாசன், மதன், குஷ்பூ, அழகியின் ‘சாய் இந்திரா’, சிவகாமி, புலிகேசி, ஆனந்தி, காவேரி, தாமிரபரணி, பாலாறு, வைகை, பொன்னி, பொருனை எனப் பல எழுத்துருக்களை இவர் உருவாக்கியுள்ள கதைகள் அடங்கிய அந்த அத்தியாயம் சிறப்பானது.
“ஆவிகளும் நானும்” (ஆ.வி. இல்லை), “டயரியும் நானும்” தொடர்ந்து “நகைச்சுவையும் நானும்” அத்தியாயம் மிக முக்கியமானதாக எனக்குப் பட்டது. அந்தப் புத்தகத்தைத் தொடர்ந்து நான் படிக்கும் ஒவ்வொரு எழுத்திலும் கடுகு அவர்கள் சொன்ன கருத்துகள் கண்முன் வந்துபோவதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். ‘நகைச்சுவை எழுதுவது எப்படி’ என்ற கட்டுரையைத் தான் நான் இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். அவ்வளவு சிறந்த கருத்துகள்.
“குஷ்வந்த் சிங்கும் நானும்” பகுதியும் அதில் “ILLUSTRATED WEEKLY”-யை இவர் வேறுமாதிரி பிரித்து எழுதியிருப்பதும் சிரிப்பூட்டுபவை. தாகூர், மெர்லின் மன்றோ, கார்ல் மார்க்ஸ் ஆகியவர்கள் காலமான சமயம் வீக்லியும் இருந்து, அதன் ஆசிரியராக குஷ்வந்த் சிங்கும் இருந்திருந்தால் ‘ஆசிரியர் பக்கத்’தில் அவர் எப்படி எழுதியிருப்பார் என்று ஒரு ஆங்கிலக் கட்டுரையைக் கடுகு அவர்கள் அழகாக எழுதியிருப்பார். மறுவாரமே அதை ‘ஆசிரியர் பக்கத்’தில் வெளியிட்ட குஷ்வந்த் சிங் தன்னுடைய ஜோக் புத்தகத்திலும் அதனைச் சேர்த்திருக்கிறாராம்.
இதற்கடுத்து புத்தகத்தில் வருபவை கமலாவின் பிரதாபங்கள். அவற்றின் சுவாரசியத்தை நீங்கள் படித்துத் தான் தெரிந்துகொள்ள முடியும். தொச்சு கதாப்பாத்திரமும், பின்னால் வரும் ‘ப்ரியம்வதா’ கதாப்பாத்திரமும் என்றும் மனதில் தங்குபவை. இவ்வளவு சொன்ன பிறகும் நான் எழுதாமல் விட்ட விஷயங்கள் பல அடங்கிய புத்தகம் இந்தக் ‘கமலாவும் நானும்’. ஒரே வார்த்தையில் சொல்வதானால் “சுவாரசியம்” என்று சொல்லலாம்.
நீண்ட தூர ரயில் பயணத்தின் போது இந்தப் புத்தகத்தை வாசிக்க நேரிட்டது மேலும் இனிய அனுபவமாக இருந்தது எனக்கு! ஆசிரியர் கடுகு பி.எஸ்.ரங்கநாதன் அவர்களுக்கும் எனது நன்றி மற்றும் நமஸ்காரங்கள்!
இந்த புத்தகம் எங்கே கிடைக்கும் எனக்கு ஒரு காப்பி கிடைக்குமா ?
Posted by IdlyVadai at 8/22/2012 10:08:00 PM 23 comments
Labels: சுபத்ரா, புத்தகவிமர்சனம்
Tuesday, August 21, 2012
ஆன் லைன் புத்தகம் வாங்க - Chennai Shopping
அன்புள்ள இட்லி வடைக்கு,
வணக்கம்.
தமிழ் புத்தக விற்பணை இணையம் ஒன்றினை தொடங்கி நடத்தி வருகிறோம். அதன் முகவரி http://www.chennaishopping.com/ . பயன்படுத்திப்பாருங்கள். பிடித்திருந்தால் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளவும். 200ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்தால், சேர்க்கை இலவசம். நாவல்கள், கதைகள், சிறுவர்கள் பகுதி என பல வகைகள் உள்ளன. தேடுதல் எளிது. நெட்பேங்கிங் பயன்படுத்தலாம். கேஷ் ஆன் டெலிவரி உண்டு. உங்களது கருத்துக்களை அனுப்புமாரு கேட்டுக்கொள்கிறேன்.
- balachandar muruganantham
Posted by IdlyVadai at 8/21/2012 12:08:00 PM 2 comments
Labels: ஓசி விளம்பரம், புத்தகம்
Monday, August 20, 2012
சொல்வதற்கு அஞ்சேல் -(அருள்மிகு) சுப்பிரமணிய சுவாமி
Keywords: பிராமின், விடுதலை புலி, கருணா+நிதி, தமிழ், சமஸ்கிருதம், ஹிந்து கலாச்சாரம்.... மேலும் பல
Posted by IdlyVadai at 8/20/2012 02:26:00 PM 11 comments
அப்படியா ?
Posted by IdlyVadai at 8/20/2012 09:03:00 AM 6 comments
Labels: செய்தி
Saturday, August 18, 2012
Friday, August 17, 2012
Tuesday, August 14, 2012
@kalaignar89
இந்த வாரம் விகடனில் வந்த கனிமொழி பேட்டியில்
”ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தி.மு.க-தான் அதிகமாகக் காயப்படுகிறது… கவனிக்கிறீர்களா?”
”கவனிக்கிறோம். ஆனா, நீங்களோ நானோ பட்டப்படிப்பை முடிச்சிருக் கோம்னா, அதுக்கான உழைப்பைக் கொட்டினது திராவிட இயக்கங்கள்தான். ஒரு கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துக்கிட்டு உங்களோட எண்ணங்களை இறக்கிவைக்க முடியுதுன்னா… அதுக்கான வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்தது திராவிட இயக்கங்களின் வியர்வைதான். ஆரம்பத்தில் இணையத்தை நாங்க அசட்டையா அணு கியது உண்மைதான். ஆனா, இப்போ இயக்கத்துக்கு எதிரான விமர்சனங்களுக்குப் பதில் கொடுக்கிறோம். ஆக்கபூர்வமா விவாதிக்கிறோம். எதிர்காலத்துல சமூக வலைதளங்கள் தி.மு.க-வின் கொள்கைப் பரப்புத் தளங்களா இருக்கும்.”
@kalaignar89
Posted by IdlyVadai at 8/14/2012 03:28:00 PM 21 comments
Monday, August 13, 2012
வலி தந்த வாலியார்!
‘மரங்கள் தங்களுக்குள் முனகிக் கொண்டன;
நம்மை வைத்துப் பல சிலுவைகளை உருவாக்கும் மனிதன்
அவர்களிடமிருந்து ஏன் ஒரு இயேசுவை மறுபடி உருவாக்கவில்லை?’
***
மறி ஆடே! செம்மறி ஆடே!
மேய்ச்சலுக்குப் போகிறாயா? போ!
அங்கே நல்ல மூலிகைத் தழைகள் மலிந்து கிடக்கின்றன.
அவைகளை மேய்! தப்பித் தவறி விஷப் பூண்டுகளில்
வாய் வைத்துவிடாதே!
ஜாக்கிரதையாகப் போ! அவசரப்படாதே! நீ
வேகமாய் ஓடி முட்டியில் அடிபட்டு விழுந்தால்
என் கண்களில் முட்டிக்கொண்டு கண்ணீர் வரும்.
அங்கே சுவரோரமாய்ப் படுத்துக் கொள்!
ஆனந்தமாய் அசைபோடு; விடியும் வரை
நிதானமாய் நிம்மதியுடன் தூங்கு.
விடிந்த பின்னர்தானே
பக்ரீத்?!
***
ரயில்கள் மட்டுமல்ல; மனிதர்களும் கூடத்தான்
கை இறங்கியவுடன் - நம்
கை இறங்கியவுடன்
ஓடத் தொடங்குகிறார்கள்!
***
அஞ்ஞானத்தை அறுக்க வந்த
பெரிய’வாள்’.
***
கவிஞர் வாலியை அணுஅணுவாக ரசித்தவன் நான். அவரது ‘தரை மேல் பிறக்க வைத்தான்...’ பாடலை சின்ன வயதிலிருந்து இன்று வரை நான் அத்தனை உருகி உருகிக் கேட்டு ரசிப்பதற்குக் காரணம் டி.எம்.எஸ்-ஸின் குரல் மட்டும் இல்லை; வாலியின் அற்புதமான வரிகளும்தான்! விகடனில் அவர் எழுதிய அவதார புருஷன், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம், ராமானுஜ காவியம் இவற்றையெல்லாம் பாராட்டிச் சொல்வதற்கும் ஒரு தகுதி வேண்டும்; அது எனக்கில்லை.
துக்ளக்கில் கவிஞர் வாலி தொடர்ந்து எழுதி வரும் ‘எனக்குள் எம்.ஜி.ஆர்.’ தொடரையும் அப்படித்தான் நான் ரசித்துப் படித்துக்கொண்டு இருந்தேன்; இருக்கிறேன்.
ஒரு அத்தியாயத்தின் இறுதியில்...
’எம்.ஜி.ஆரை எந்தக் காரணமுமின்றித் தன் ஏட்டில் இடையறாது வசைபாடி வந்தார். அந்த இரண்டெழுத்துப் பத்திரிகையாளரைப் பற்றி’ அடுத்த இதழில் தான் எழுதப்போவதாக அவர் கொடுத்திருந்த குறிப்பு கூட என்னை அவ்வளவாக பாதிக்கவில்லை. சாவி சாரைப் பற்றி எழுதப் போகிறார் என்பது புரிந்தது. ஆனால், சாவி சாரைத் தாக்கி எழுதினாலும், தனக்கே உரிய சிலேடையில் ரசிக்கும்படியாக எழுதுவார் என்றுதான் நானும் ஆவலோடு காத்திருந்தேன்.
ஆனால்...
சாவி சார் பற்றி வாலி எழுதியிருந்த ஒவ்வொரு வரியைப் படித்தபோதும் ஒரு முறம் நெருப்பை அள்ளி என்னுள் கொட்டினாற்போன்று இருந்தது.
‘எம்.ஜி.ஆரைப் பற்றி ஏனோதானோவென்றும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்றும் மனம் போனபடியெல்லாம் எழுதிக்கொண்டிருந்த பத்திரிகையாளர் - திரு.சாவி!’ என்று தொடங்கியிருந்த அந்தக் கட்டுரையில், சாவி சாரை வேதாளம், மாடு என்றெல்லாம் உதாரண உவமைகளால் குத்தியிருந்தார் வாலி.
கடைசி வரைக்கும் கலைஞர் கருணாநிதியின் ஆப்த நண்பராக விளங்கியவர் சாவி. கலைஞர் தலைமையில் நடந்த தனது புத்தக வெளியீட்டு விழாவில் கலைஞரைப் புகழ்ந்து, நன்றி பாராட்டிப் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து கோமா ஸ்டேஜை அடைந்து, அப்படியே உயிர் துறந்தவர் அவர். அப்படிப்பட்டவர் தமது நண்பராகிய கலைஞருக்குப் பரம அரசியல் எதிரியாக விளங்கிய எம்.ஜி.ஆரைத் தாக்கிச் செய்தி வெளியிட்டதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. அது எம்.ஜி.ஆருக்கும் சாவிக்கும் இடையே இருந்த கோப தாபம்!
ஆனால், ‘ஊருக்கெல்லாம் வெளிச்சம் போடக் கொடுத்த பணத்திலே தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்துவிட்டார் நகரசபையிலே... ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார், தாங்கள் வாழ்வதற்கு ஊர்ப் பணத்தில் வீடு கட்டினார்...’ என்றும், ‘மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார், தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்’ என்றும், ‘ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணிவிடாதே, பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்துவிடாதே! ஒரு நாள் இந்த நிலைமைக்கெல்லாம் மாறுதல் உண்டு, அந்த மாறுதலைச் செய்வதற்குத் தேர்தல் உண்டு’ என்றும் தேர்தல் நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக, அன்றைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியைத் தாக்கிப் பாடல் எழுதிய வாலி அவர்கள் - பின்னர் தனது மருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொண்டதற்கு நன்றிக் கடனாகவும், தன்னை பத்மஸ்ரீ விருதுக்குப் பரிந்துரைத்ததற்கு நன்றிக் கடனாகவும், காவியக் கவிஞர் என்று பட்டம் கொடுத்ததற்கு நன்றிக் கடனாகவும் கலைஞரின் ஜால்ராவாக மாறிப்போன வாலி அவர்கள் - எம்.ஜி.ஆரைத் தாக்கி சாவி செய்தி வெளியிட்டார் என்று இப்போது கோபப்படுவதில் உள்ள நியாயத்தை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை.
கலா ரசிகன் தனது தினமணி கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல், முதல்வர் பதவியில் கருணாநிதி இருக்கும் வரை, ’இமை மூடாப் பணி செய்யும் சி.எம்.’ என்று பாடிப் புகழ்ந்துவிட்டு, ஆட்சி மாறிய அடுத்த கணமே முதல்வர் ஜெயலலிதாவை ‘ரங்கநாயகி’ என்று வர்ணித்துத் துதிக்கும் சந்தர்ப்பவாதம் சாவி சாரிடம் இருந்ததில்லை.
வாலி தமது கட்டுரையில் வேறு ஒரு விஷயத்தையும் குறிப்பிட்டுள்ளார். ‘கண்ணதாசன் காலமான பிறகு, தனக்கு அரசவைக் கவிஞர் பதவி கிடைக்க வேண்டும் என்று இரண்டெழுத்துக் கவிஞர் ஒருவர் இரவு பகலாக ராமாவரம் தோட்டத்து வாசலில் தவம் கிடக்கிறார்’ என்று ஒரு கிசுகிசு செய்தியை சாவி தனது பத்திரிகையில் வெளியிட்டுவிட்டாராம். ஆனால், வாலி ஒருநாளும் அப்படித் தவம் இருந்தது கிடையாதாம்!
எம்.ஜி.ஆரே இவருக்கு எம்.எல்.ஏ. சீட் வழங்க முன்வந்தபோதும் மறுத்துவிட்டாராம். ‘அப்படிப்பட்ட நானா அரசவைக் கவிஞருக்கு ஆசைப்பட்டு அவர் தோட்டத்துக்கு அலைந்திருப்பேன்?’ என்று கேட்டிருக்கிறார்.
நல்லது! அப்போதே அதற்கு ஒரு மறுப்பு அறிக்கை விட்டிருந்தால் அத்தோடு முடிந்துபோயிருக்குமே விஷயம்? இத்தனை நாள் கழித்து, காய்த்துப் போன சிரங்கைச் சொறிய வேண்டிய அவசியமென்ன?
கிசுகிசுக்கள் இல்லாத பத்திரிகை உண்டா? சில செய்திகள் அரசல்புரசலாக காதுக்கு வரும். அவற்றின் சுவாரஸ்யம் கருதி நிருபர்கள், உதவி ஆசிரியர்கள் எல்லாம் சேர்ந்து அதை ஒரு கிசுகிசு செய்தியாக்கி வெளியிடுவது பத்திரிகைகளில் வழக்கம்தான். ஒவ்வொன்றிலும் ஆசிரியரின் தலையீடு, சம்மதம் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆசிரியரின் நேரடி கவனத்துக்கு வராமலும் பல துணுக்குச் செய்திகள், சிறு கட்டுரைகள் அரங்கேறுவதுண்டு.
மேற்படி செய்தியும் அப்படிப்பட்டதுதான்! ஒரு சாதாரண கிசுகிசு. அதை ஏதோ பெரிய கொலைப் பழியையே தன் மீது சாவி சுமத்திவிட்டாற்போல் வாலி அய்யா அவர்கள் இத்தனை காலம் கழித்து ஊதிப் பெரிதாக்கியிருப்பதன் காரணம் எனக்கு விளங்கவில்லை.
மூப்பனார் வீட்டில் வைத்து சாவி சாரை வாலி சந்தித்தாராம். ‘என்னைப் பற்றி நையாண்டி செய்து எழுதிய ஒரு பத்திரிகையாளரைப் பல பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே, அருணாசலம் ஸ்டூடியோவிலே ஓங்கி ஒரு அறை அறைஞ்சேன்! உங்க வயது கருதி வாய் வார்த்தையோடு விடறேன்’ என்றாராம்.
இப்படிச் சொல்ல வாலிக்கு நாக்கூசாமல் போனது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. இதை எடிட் செய்து வெளியிட சோ-வுக்கு மனமில்லாமல் போனது ஏன் என்றும் புரியவில்லை. அது வாலியின் தனிப்பட்ட கருத்து என்பதாக நினைத்து வெளியிட்டிருக்கலாம். ஆனால், இதற்கு முன்னரும் ஒரு சமயம் வாலி அவர்களின் கட்டுரையை வெளியிட்டுவிட்டு, அது குறித்த தனது கருத்தை வேறு பக்கத்தில் பதிந்திருந்தார் சோ. இப்போதும் அப்படி ஏன் செய்திருக்கக்கூடாது என்பதே என் கேள்வி.
மற்ற அரசியல் தலைவர்களை நையாண்டி செய்வது போலவே ஆரம்பக் காலத்தில் பெருந்தலைவர் காமராஜையும் நையாண்டி செய்தவர்தான் சோ. அவருக்குப் பெருந்தலைவரின் மேன்மையைப் புரியவைத்து, சோ-வை காமராஜின் அபிமானியாக மாற்றியவர் சாவி சார்தான். ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்று தலைப்புக் கொடுத்து, கவியரசு கண்ணதாசனை இந்து மதத்தைப் பற்றி எழுதச் செய்து, அவருக்குப் புதியதொரு பரிமாணத்தைக் கொடுத்தவர் சாவி சார்தான். ‘குறளோவியம்’ என்று தலைப்புக் கொடுத்து, கலைஞரை குறள் விளக்கம் எழுதச் சொல்லி வெளியிட்டவர் சாவி சார்தான். ‘கவிராஜன் கதை’ என்று தலைப்புக் கொடுத்து பாரதியார் பற்றி வைரமுத்துவை எழுதச் செய்தவர் சாவி சார்தான்.
சாவியின் மேன்மை புரிந்தவர் சோ; சாவி சாரின் மீது மதிப்பு வைத்திருப்பவர்தான் சோ. அவரின் துக்ளக் பத்திரிகையில், வாலி குறிப்பிட்டுள்ள சம்பவத்தில் இடம்பெற்றுள்ள எம்.ஜி.ஆர்., சாவி, மூப்பனார் யாரும் இன்று உயிரோடு இல்லை; வாலி சொல்லியிருப்பதெல்லாம் எத்தனை சதவிகிதம் உண்மை என்று அறிய! அப்படியிருக்க, போகிற போக்கில் எந்த ஆதாரமுமே இல்லாமல் சாவி சார் மீது வாலியார் சேறு வாரி இறைப்பதற்குத் தனது பத்திரிகையின் பக்கங்களை எப்படி ஒதுக்கினார் சோ என்பது இன்னமும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு.
‘...இப்படிக் கவிஞர் சொல்லி முடித்ததும் ஆசிரியர் சாவி, வாலியின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டார் என்று யாராவது சொன்னால், அதற்கு எப்படி ஆதாரமோ சாட்சியோ இல்லையோ, அது போலக் கவிஞர் வாலியின் பதிவுக்கும் சாட்சி கிடையாது’ என்று நெத்தியடியாக தினமணி நாளேட்டில், வாலியின் சேற்றுக் கட்டுரை குறித்த தனது நீண்ட கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் கலா ரசிகன். இவர் வேறு யாருமல்ல; தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்தான். நான் சாவியில் பணியாற்றிய காலத்தில் எனக்கு சீனியராக இருந்தவர் வைத்தியநாதன். சாவி சார் மீது பெருமதிப்பும் மரியாதையும் கொண்டவர். சாவியிடம் நான் கோபித்துக்கொண்டு வேலையை விட்டு நிற்கும்போதெல்லாம் என்னை ஆற்றுப்படுத்தி, சாவி சாரின் பெருமையைச் சொல்லி, என்னை நெறிப்படுத்தியவர்.
பத்திரிகை தர்மம் பற்றியும், பத்திரிகையாளர்களிடம் தாம் வைத்திருக்கும் மரியாதை பற்றியும்கூட வாலி அந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கிறார். ஆனால், பத்திரிகை சொல்லாத ஒன்றை மேடையில் திரித்துக் கூறி, ‘அறிவு கெட்டவனுங்க’ என்று அந்தப் பத்திரிகையை வாலி திட்டியது எனக்குத் தெரியும்.
வாலியால் வசை பாடப்பட்ட அந்தப் பத்திரிகை வேறு எதுவுமல்ல; ஆனந்த விகடன்தான்!
1993-ஆம் ஆண்டு, ‘இந்து’ படத்தின் ஆடியோ காஸெட் வெளியீட்டு விழா. அந்தப் படத்தில் வாலி எழுதிய ‘எப்படி எப்படி... நீ சமைஞ்சது எப்படி’ என்கிற பாடல் படு விரசமாக உள்ளதென்று ஒரு சர்ச்சை எழுந்தது.
அதற்கு பதில் சொல்கிறாற்போன்று வாலி அந்த விழாவில் பேசினார். “கதைக்கும் கதையோட காரெக்டருக்கும் ஏத்தாப்ல பாட்டு எழுதறேன். இதிலே தப்பே இல்லை. பொழுது போகாதவங்கதான், சினிமா பாடல்களில் இலக்கியம் இருக்கா இல்லையான்னு பட்டிமன்றம் நடத்தி நேரத்தை வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. இங்கே நான் ஒரு வியாபாரி. மாஸுக்கும் (MASS) காசுக்கும் பாடல்களை எழுதற வியாபாரி. இதிலே இலக்கியத்தைப் பார்க்காதீங்க. இலக்கியத்திலே என் புலமையைக் காட்டறதுக்குக் கம்பன் கழகம் மாதிரி வேற இடங்கள் இருக்கு. அங்கே நீங்க வேற வாலியைப் பார்க்கலாம்” என்றவர் அடுத்துப் பேசியதுதான் ஹைலைட்!
“சூரியன் படத்துலே ‘லாலாக்கு டோல் டப்பிமா’ன்னு ஒரு பாட்டு. பவித்ரன் என்கிட்டே இந்த மாதிரி எஸ்டேட்ல வேலை செய்யறவங்க பாடற பாட்டுக்களை காஸெட்டுல பதிவு பண்ணிக் கொண்டு வந்து போட்டு எழுதச் சொன்னாரு. சொல்லப்போனா அந்தப் பாட்டையே அவர்தான் எழுதினார். பாட்டுக்கு வவுச்சர்ல கையெழுத்துப் போட்டதுதான் நான். இந்த லட்சணத்துலே ஆனந்த விகடன் பத்திரிகையிலேயிருந்து யாரோ வந்து, அதுக்கு அர்த்தம் கேட்டாங்க. எனக்குத் தெரியாதுன்னு உண்மையைச் சொன்னேன். அவங்க போய் ‘வாலிக்குத் தலைக்கனம். சொல்ல மாட்டேங்கறார். ஆணவம் பிடிச்சவர்’னு எழுதிட்டானுங்க.. அறிவுகெட்டவனுங்க..!
இலக்கியத்தைப் பொறுத்தமட்டில் நான் வண்ணத் தமிழ் மழலைக்குப் பாலூட்டும் தாய்; சினிமாவிலே விட்டெறியும் எலும்புக்கு வாலாட்டும் நாய்” என்று பேசினார்.
இந்த விழா நிகழ்ச்சி, ஆனந்த விகடனில் கட்டுரையாக வெளியானது. அதன் இறுதியில் கட்டம் கட்டி, பின்குறிப்பாக ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் அவர்கள் கொடுத்திருந்த செய்தியைக் கீழே தருகிறேன்.
‘லாலாக்கு டோல் டப்பிமா’ என்ற பாடல் வரிகளுக்கு அர்த்தம் கேட்டு நமது நிருபர், கவிஞர் வாலியிடம் பேசியபோது, ‘எனக்குப் பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுக்கும் பழக்கம் இல்லை’ என்றே சொன்னார். அதன்படி, “இன்னொரு பாடலை எழுதிய வாலி, பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் பழக்கம் எனக்கு எப்போதுமே இல்லை என்று சொல்லிவிட்டதால், அதற்கு இசையமைத்த ‘தேவா’வைச் சந்தித்தோம்” என்றுதான் 17.1.93 ஆனந்த விகடனில் பிரசுரித்திருந்தோம். அன்று அவர் கூறியதையே வெளியிட்டிருந்தோம். இன்று, அது அவருக்கு ‘அறிவுகெட்டத்தனமாக’ப் படுகிறது! -ஆசிரியர்.
அன்றைக்கு ‘லாலாக்கு டோல் டப்பிமா’ பாடலையே பவித்ரன்தான் எழுதினார் என்று சொன்ன வாலியார், லேட்டஸ்ட் விகடன் பதில்களில் ‘இந்த வார்த்தைகளைப் பிடிக்க அவ்வளவாக மூளை வேண்டாம். இசையின் துள்ளு நடையைத் திரும்பத் திரும்ப செவியில் வாங்குகையில் இது போன்ற PHONETIC WORDS மனதில் உதயமாகும்’ என்று பதில் சொல்லியிருக்கிறார். எனில், அந்தப் பாடலை உண்மையில் யார்தான் எழுதினார்கள். வாலியா, பவித்ரனா?
லேட்டஸ்ட் விகடனில், “கவிஞர், பாடலாசிரியர் தாண்டி வாலியின் இன்னொரு முகம் என்ன?” என்கிற கேள்விக்கு, “கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் - அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன் எனும் கண்ணதாசன் வரிகளுக்கேற்ப மனத்தைப் பக்குவப்படுத்தி வைத்திருக்கும் ஒரு ஸ்திதப் பிரக்ஞன்” என்று பதில் சொல்லியிருக்கிறார் வாலி. சிரிப்புத்தான் வருகிறது.
- நன்றி: ரவி பிரகாஷ்
.
அதெல்லாம் பெரியவங்க சமாச்சாரம்... :-)
Posted by IdlyVadai at 8/13/2012 06:22:00 PM 20 comments
Saturday, August 11, 2012
டெசோ கடிதங்கள்
டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த மத்திய அரசு திடீர் அனுமதி வழங்கியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள புதிய கடிதத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழ் நாட்டுக்கும் இந்திய நாட்டுக்கும் இந்த மாதிரி மாநாடுகள் நல்லதில்லை!
Posted by IdlyVadai at 8/11/2012 02:14:00 PM 10 comments
Labels: அரசியல்
பத்ரி கலைஞர்
"...இந்திய திருநாட்டின் பாதுபாப்புக்கு எதிரான சீன அச்சுறுத்தல்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருவதற்காகத்தான் டெஸோ மாநாடு...." முரசொலி
ஏன் கலைஞர் கருணாநிதிமீது இவ்வளவு வன்மம்? ஏன் இத்தனை தரக்குறைவான வார்த்தைகள்? - பத்ரி
எப்படி புரியாமல் போச்சு ?
Posted by IdlyVadai at 8/11/2012 01:58:00 PM 3 comments
Friday, August 10, 2012
டபுள் செய்திகள்
கோப செய்திகள் இரண்டு :
தமிழ் நாடு சட்டசபையில் நம்ம கேப்டனை அதிமுக எம்.எல்.ஏ ஒருவர் 'இது சினிமா இல்லை தம்பி' என்று ஓர் விவாதத்தில் சொன்னார். அப்போது இதை ஒரு பெரிய விஷயமாக யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஜெயா பச்சன் அசாம் கலவரம் குறித்து பேசிய போது புதுய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே பதில் கூறும் போது "அசாம் மாநில கலவரம் என்பது ஆபத்தான விஷயம். இது ஒன்றும் சினிமா சம்பந்தப்பட்டது அல்ல" என்று பதில் கூற ஜெயா பச்சன் கடுப்பாகி கடும் கோபத்தை வெளிப்படுத்த உடனே
ஷிண்டே மன்னிப்பும் கேட்டுவிட்டார். ஷிண்டே என்ன தான் காங்கிரஸ் மந்திரியாக இருந்தாலும் அவரின் நேர்மையை பாராட்ட வேண்டும். இதே மாதிரி தான் முன்பு மின்துறை அமைச்சராக இருந்த போது அமேரிகாவிலும் மின்வெட்டு வருகிறது அதனால் இந்தியாவிலும் மின்வெட்டு வருகிறது.. இதுல் தவறு இல்லை" என்றார். நாளைக்கு எங்காவது குண்டு வெடித்தால் இதே போல தான் ஏதாவது சொல்லுவார்.. இப்பேர்பட்ட அமைச்சரை பெற்றதற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.அத்வானிக்கு கொஞ்ச நாளாக பிஜேபி மேலே காண்டு உள்ளே நடக்கும் கேவலமாக சண்டைகளை பார்த்து கொதித்துப் போயிருக்கிறார். தன் வலைப்பதிவில் எழுதினார். பிறகு பார்லிமெண்ட் மழைக்கால கூட்டத் தொடரில் UPAவை 'சட்டவிரோதமான அரசு' என்று விமர்சிக்க உடனே சோனியாவிற்கு பயங்கர கோபம் வர உடனே டெலிவிஷன் அதை ஃபோக்கஸ் செய்ய தொடங்கியது. ( வாழக்கம் போல அத்வானி தன் பேச்சை வாபஸ் வாங்கி மன்னிப்பு கேட்டார் என்பது வேற விஷயம் ). இதில் என்ன வேடிக்கை என்றால் 2G ஊழல், மும்பை தாக்குதல், ஆதர்ஷ், கல்மாடி என்று எதற்கும் கோபப் படாமல் இருந்த சோனியா இதற்கு மட்டும் வெகுண்டெழ பார்லிமென்ட் கிடுகிடுத்துப் போனது. அத்வானி செய்த பெரிய தவறு தான் சொன்னதை வாபஸ் வாங்கியது தான்.
அத்வானிக்கு சில அறிவுரைகள் : முதலில் கர்நாடகா பிஜேபி அரசு சட்டவிரோத அரசு என்று சொல்லி பழகிபாருங்கள், பிறகு இரண்டு முறை பிஜேபி தலைவர் பதவியை அனுபவிக்க மாற்றம் செய்த பிஜேபியை விமர்சித்து பாருங்கள் பயிற்சி கிடைத்த பிறகு காங்கிரஸ் கூட்டணியை பற்றி விமர்சனம் செய்யுங்கள். இதில பெரிய காமெடி என்ன என்றால் சோனியாவின் ஆவேசத்தை கண்ட, தி.மு.க., - எம்.பி., டி.ஆர்.பாலு, மிக வேகமாக எழுந்து நரம்பு புடைக்க, அத்வானியை நோக்கி குரல் கொடுத்தார். மோடி இருந்தால் இந்த மாதிரி எழுந்து குரல் கொடுக்க யாருக்காவது தைரியம் இருக்குமா ?
டெசோ மாநாட்டு செய்திகள் இரண்டு:
அரசியல் சுயலாபத்திற்காக திமுக நடத்தும் டெசோ மாநாட்டை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெசோ மாநாட்டில் காங்கிரஸ்காரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என சென்னையில் மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
தீப்பற்றி எரிந்த செய்திகள் இரண்டு:
பிரிட்டனின் பக்கம் இருக்கும் குடியிருப்பில் தங்கியிருந்த நபர் ஒருவர், ஈரமான தனது கால் உறைகள் மற்றும் இரண்டு ஜட்டிகளை மைக்ரோ ஓவனில் வைத்து உலர வைத்துள்ளார். அதிகப்படியான வெப்பத்தில் இந்த துணிகள் தீப்பற்றி, சமையலறை முழுவதும் பரவியது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சம்பந்தப்பட்ட நபரை மீட்டு, சமையலறையில் பரவிய தீயையும் அணைத்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஏ.டி.எம். மெஷினில் நேற்றிரவு குளிர்சாதனப் பெட்டியில் ஏற்ப்பட்ட மின்கசிவின் காரணமாக தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் மெஷினீல் வைக்கப்பட்டிருந்த 30 லட்சம் ரூபாய் எரிந்து கருகியது. பேசாம இதை படம் எடுத்து ராமலீலா மைதானத்தில் கருப்பு பணத்தை மீட்க உண்ணாவிரதம் இருக்கும் பாபா ராம்தேவிடம் காட்டிவிடலாம்.
டிப்ஸ் இரண்டு:
அரசு அதிகாரிகள் தங்கள் பணிகளை கடும் சிரத்தையுடன் மேற்கொள்ள வேண்டும். சிறிய அளவில் முறைகேடு செய்யலாமே தவிர, கொள்ளைக்காரர்கள் போல கொள்ளையடிக்கக் கூடாது என்று டிப்ஸ் கூறியுள்ளார் - உபி அமைச்சர் சிவ்பால் யாதவ்
டீ போடும் போது, டீத்தூளுடன் சர்க்கரையை சேர்த்து கொதிக்க விடாதீர்கள் டீயின் சுவை குறைந்து விடும். ஆனால் கீரை மசியல் செய்ய கீரையை கடையும் போது அதனுடன் கால் ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கடையவேண்டும்.
இன்னும் இரண்டு செய்திகள் இருக்கிறது அதை சொன்னால் பலருக்கு கோபம் வரும் அதனால்...உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லலாம் :-)
Posted by IdlyVadai at 8/10/2012 01:48:00 PM 8 comments
Labels: செய்திகள்
Wednesday, August 08, 2012
சூடா ஒரு டாக் - சாரு நிவேதிதா பேட்டி
Keywords: Jeyamohan, S.Ramakrishnan, Facebook, Rajini, Sex Scam, Nithi etc.,
Posted by IdlyVadai at 8/08/2012 08:45:00 AM 15 comments
Monday, August 06, 2012
Team Anna dissolved
The Law of Conservation of Mass
If we dissolve some sugar in water, the mass of the solution will be precisely equal to the sum of the masses of the sugar and the water. This and an infinite number of similar experiments show that the mass of a body is an unchangeable property. No
matter how the body is crushed or dissolved, its mass remains fixed.
However the recent experiment conducted by Anna in dissolving his team has to be seen what results it yields - we need to wait and watch whether the general mass remains unchanged or not.
Posted by IdlyVadai at 8/06/2012 07:54:00 PM 10 comments
Sunday, August 05, 2012
Very Very Angry Bird
நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதாவும் கைலாச யாத்திரை சென்றிருப்பது குறித்து எந்த தகவலும் எனக்கு தெரியாது. அதை முறைப்படி அவர் எனக்கு தெரிவித்து இருக்க வேண்டும். - மதுரையில் இருக்கும் ஆதீனம்
Posted by IdlyVadai at 8/05/2012 07:43:00 AM 9 comments
Saturday, August 04, 2012
மர்மச் சாவும் மனிதனின் பீதியும்.
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் தம்பா விமான நிலையம் முந்தைய நாள் வரை அமைதியாக இருந்தது, கலகலப்பாக இருந்தது…. ஆனால் அன்று அதே விமான நிலையத்தை கலவரமும், பயமும் மழை மேகம் போல சூழ்ந்து கொண்டது. விமான நிலைய சிப்பந்தி தான் முதலில் அதை கவனித்தார்.
தூரத்தில் இருந்து பார்த்த போது, பிரதான ஓடுதளத்தில் குப்பைகள் சில இருந்தன. தொலை நோக்கு கருவியின் உதவியோடு, அருகில் பார்த்த போது கொஞ்சம் விபரிதமாக பட்டது. அவைகள் பறவைகள். ஒன்றல்ல இரண்டல்ல சில நூறு பறவைகள். அதுவும் கொத்து கொத்தாய் செத்து இருந்தன. மரணத்துக்கான காரணம் தெரியவில்லை. தன் மேலதிகாரிக்கு இதை தெரிவித்து விட்டாலும் கூட, இன்னும் அந்த சிப்பந்தி அதை குறித்து யோசித்து கொண்டுதான் இருந்தான்.
அந்த ஏர்போர்ட் பரபரப்பானது. இந்த மர்ம சாவு குறித்து பல வித ஊகங்கள், பல சிந்தனைகள் என்றாலும் எதுவும் ஒரு ஆணித்தரமான காரணத்துக்கு இட்டு செல்லவில்லை. பல திசைகளில் இதன் ஆய்வுகள் முடுக்கி விடப்பட்டன. அனைவரும் இது குறித்து கவலையானார்கள். இந்த மர்ம சாவு, தொடர்கதையாக நீண்டது. அது அவர்களை மேலும் கவலைக்குள்ளாக்கியது.
சம்பவம் நடந்து இருவாரங்களான பின் முதல் முறையாக, இன்று அதன் காரணம் பௌதியல் ரீதியாக விளக்கப்பட்டது.
பூமியின் வட துருவம் தன் நிலையில் இருந்து கொஞ்சம் நகர்ந்து விட்டது.
பூமியின் பரப்பில் உள்ள மின் காந்த தன்மையை நிச்சயிப்பது இந்த இரு துருவங்களில் இருக்கும் காந்த சக்தியே. துருவங்களின் இடம் சற்றே நகர்வதால், இரு துருவங்களில் இருக்கும் எதிர் எதிர் காந்த சக்தி மாற்றம் அடைகிறது. அதன் விளைவாக சில மாறுதல்கள் பூமியில் தவிர்க்க முடியாததாக ஆகி விடுகிறது. காந்த மின் அலை மாற்றம், ஸோலார் விண்ட் எனப்படும் சக்தியிலும் மாறுதல் கொண்டு வருகிறது. இச்சக்தி பூமியில் உள்ள பல அடிப்படைகளுக்கு அஸ்திவாரம்.
ஏன் பிரபஞ்சத்தில் உள்ள சில விஷ வாயுக்களை பூமியின் பரப்பில் வர விடாமல் தடுக்கும் ஒரு தடுப்பு சுவராக கூட இந்த சக்தி செயல்படுகிறது.
சமீபத்தில் வட துருவத்தில் ஏற்பட்ட சிறு இட மாறுதலே இந்த குழப்பங்களுக்கு காரணம். அப்படியென்றால், துருவங்கள் இப்படியெல்லாம் மாறுமா, பொதுக்குழு செயற்குழு கூட்டாமல் தாந்தோன்றியாய் பூமி முடிவெடுக்குமா என யோசிப்பவருக்கு… இல்லையாம் ஒவ்வொரு 1000 வருடங்களுக்கு ஒரு முறை இப்படி இடம் மாறுவது இயல்பாம். 1000 வருசத்துக்கு ஒருதடவை இப்படி ஆக்ஸில் அசைஞ்சு கொடுக்கிறது பைலாவில இருக்காம்… என்ன இப்படி மாறும் போது, சில விஷ வாயு கசிவு இருக்குமாம்,…
இப்போதைக்கு தம்பா விமான நிலையத்தின் பிரதான ஓடுதளத்தை மட்டும் ஒரு வாரம் மூடிவிட்டு, மாறிய வட துருவத்தை அனுசரித்து சில மார்க்கிங்கை மாற்றி வண்ணம் தீட்டி, நிலைமையை சரி செய்து விட்டார்கள். இதனால் பயணிகளுக்கோ, விமானத்துக்கோ எந்த ஆபத்தும் இல்லை எனவும் உத்திரவாதம் தந்துவிட்டதால், நாமும் பெருமூச்செறிந்து வரும் வாரத்திற்கு சினிமா டிக்கெட் கிடைக்குமா என நெட்டில் துளாவலாம்…. ஃபேஸ் புக்கில் லைக் போடலாம்.
அறிவியல் காட்டிய சில விளக்கங்கள் கேட்டு நம் மனம் ஆறுதல் அடைகிறது. சரி என சாதாரணமானாலும், ஒரு விசயத்தில் நாம் உஷாராக இருப்பது அவசியம். எது, உலகம் குறித்தா… காந்த சக்தி குறித்தா…. அல்ல அல்ல….. உலகம் முடிகிறது எனவே மனந்திரும்புங்கள் என பெந்தே கோஸ்தே வாதிகளும், யோகா குருமார்களும் சாமியார்கள், நம்மிடையே இதுபற்றி சொல்லி கிலி உண்டாக்கி தத்தம் கல்லா நிரப்பலாம்.
http://www.naturalnews.com/030996_bird_deaths_pole_shift.html#ixzz224zGzcuJ
http://phys.org/news/2011-01-tampa-airport-runways-renumbered-due.html
- லாரன்ஸ் பிரபா
அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்தை இதனால் தான் முடித்துக்கொண்டாரா ?
Posted by IdlyVadai at 8/04/2012 06:39:00 AM 9 comments
Labels: கட்டுரை, விருந்தினர்
Thursday, August 02, 2012
"நான் யாருக்கும் தாழ்ந்தவன் இல்லை!" - அசோகமித்திரன் பேட்டி
சின்ன அறை. சுவரில் பெருமாள், சமயபுரம் மாரியம்மன், ராமர், சீதை என்று ஏகப்பட்ட கடவுளர் படங்கள். சின்ன கட்டில். அதையட்டி மேஜை. சுற்றிலும் புத்தகங்கள். தமிழின் மகத்தான படைப்பாளி அசோகமித்திரனின் உலகம் இப்போது இவ்வளவுதான். ''சமீபத்தில் ஓர் இலக்கிய விழாவுக்குச் சென்றிருந்தேன். பேசி முடிக்கும்போது, 'இத்துடன் விடைபெறுகிறேன்...’ என்று சொன்னேன். விழாவில் இருந்த ஒரு கவிஞர் உடனே பதறிப்போய், 'நீங்கள் நூறாண்டு வாழ வேண்டும்’ என்று சொன்னார். இப்போது எனக்கு 81 வயது ஆகிறது. நூறாண்டு வாழ்வதைவிடக் கொடுமையான தண்டனை இருக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை...'' - கண்களை இடுக்கிச் சிரிக்கிறார்.
''இந்த வயதில் இருந்து பார்க்கும்போது, வாழ்க்கை எப்படி இருக்கிறது?''
''ரொம்பச் சோர்வாக இருக்கிறது. தள்ளாமையும் வியாதிகளும் வலியும் கொல்கின்றன. உலகம் விடை கொடுத்துவிடாதா என்று காத்திருக்கிறேன்.''
''வாழ்க்கை ஒரு சாமானியனுக்கும் படைப்பாளிக்கும் ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கிறதா?''
''ஷேக்ஸ்பியரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால், கவித்துவமாக ஏதாவது சொல்லி இருப்பார். படைப்பாளி என்ன பெரிய படைப்பாளி? அவரவர் வாழ்க்கை அவரவருக்கு.''
''உங்கள் 60 ஆண்டு எழுத்து வாழ்க்கை திருப்தியைத் தருகிறதா?''
''இதுவரைக்கும் 9 நாவல்கள், முந்நூற்றிச் சொச்ச சிறுகதைகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். என்னுடைய எழுத்து மேல் திருப்தி இருக்கிறது. வாழ்க்கை மேல் புகார்கள் கிடையாது. ஆனால், என் எழுத்தைப் படித்துவிட்டு எழுத்தாளனாகப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டு யாராவது என்னைப் பார்க்க வந்தால் மட்டும் எனக்குப் பொல்லாத கோபம் வரும். 'போடா மடையா... உருப்படியாக ஏதாவது வேலையைத் தேடிக்கொள்’ என்று கத்தத் தோன்றும். நான் எப்படியோ வாழ்ந்துவிட்டேன்... எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கை. மற்றவர்களுக்கு இந்தக் கஷ்டம் வேண்டாம்.''
''தமிழ், ஆங்கிலம்... இரண்டிலுமே சிறப்பாக எழுதக் கூடியவர் நீங்கள். ஆனால், தமிழைச் சுற்றியே உங்கள் படைப்பு உலகத்தை அமைத்துக்கொண்டீர்கள். ஏன்?''
''1952-ல் நான் எழுத வந்தேன். அப்போது, தமிழில்தான் செய்ய வேண்டியது நிறைய இருப்பதாகத் தோன்றியது. அதற்கு நிறையப் பேரின் தேவையும் இருந்தது. தமிழைத் தேர்ந்தெடுத்தேன்.''
''புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, கு.பா.ரா. எனப் பலர் அந்தக் காலகட்டத்திலேயே புதுப் புது முயற்சிகளில் ஈடுபட்டு இருந்தார்கள்... இல்லையா?''
''ஆமாம்; ஆனால் அது தொடக்கம்தான். செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருந்தது.''
''எழுத்தையே நம்பி வாழ்ந்தவர் நீங்கள்... பிரபல பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதுவது, சினிமாவுக்கு எழுதுவதுபோன்ற பிரயாசைகள் உங்களிடம் இல்லை. எப்படி வாழ்க்கையை நடத்தினீர்கள்?''
''சிரமம்தான். எஸ்.எஸ்.வாசனும் என்னுடைய தகப்பனாரும் நெருங்கிய சிநேகிதர்கள். அந்த நட்பில்தான் என்னை ஜெமினி ஸ்டுடியோவுக்கு வேலைக்கு வரச் சொன்னார் வாசன். ஒரு கட்டத்தில் அந்த வேலை எனக்குப் பிடிக்காமல் போனது. வெளியே வந்தால் வேறு வேலை கிடைக்கவில்லை. முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களை அப்போதெல்லாம் அரைக் கிழம் என்று சொல்லி வேலைக்கு எடுக்க மாட்டார்கள். பத்திரிகைகளில் கதை எழுதினேன். சன்மானம் குறைவு. கஷ்டப்பட்டேன். ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதுவதில் ஓரளவுக்கு வருமானம் வந்தது. ஆனால், என் மூன்று மகன்களைப் படிக்கவைப்பதில் பெரிய சிரமம் இருக்கவில்லை. அரசுப் பள்ளிக்கூடங்கள், இனாம் பள்ளிக்கூடங்களில்தான் மூவரும் படித்தார்கள். அதே சமயம், அன்றைக்கு அங்கு நல்ல கல்வி கிடைத்தது. இன்று அதை எல்லாம் கற்பனையே செய்ய முடியாது. என்னுடைய 'தண்ணீர்’ நாவலைப் படமாக்க வேண்டும் என்று இயக்குநர் வஸந்த் ரொம்பவும் ஆசைப்பட்டார். என் எழுத்து சினிமாவுக்குச் சரியாக வராது என்று சொல்லிவிட்டேன்.''
''ஆங்கிலத்தில் எழுதுவது ஒரு படைப்பாளிக்குப் பெரும் பிரபலத்தைத் தருவதாக நினைக்கிறீர்களா?''
''அமிதவ் கோஷ், கிரண் தேசாய் போன்றவர்கள் ஆங்கிலத்தில் எழுதி சர்வதேச அங்கீகாரம் பெற்று இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் இங்கிலாந்திலும் அமெரிக்கா விலும் படித்தவர்கள். அதுவும் அவர்களுடைய வெற்றிக்கு ஒரு காரணம்.''
''இதிகாசங்களும் புராணங்களும் நிறைந்த இந்தியாவில், தத்துவ விசாரணைகளைக் களமாகக்கொண்ட ராபர்டோ கலாஸோவின் 'க’ போன்றோ, ஒரு பெரிய பரப்பில் இயங்கும் மார்க்வெஸின் 'ஒன் ஹன்ட்ரட் இயர்ஸ் ஆஃப் சாலிட்யூட்’ போன்றபடைப்பு கள் குறிப்பிடத்தக்க அளவில் வரவில்லையே... ஏன்?''
''முதலில், அப்படிப்பட்ட முயற்சிகளில் இறங்க ஒரு படைப்பாளிக்குப் பெரிய துணிச்சல் வேண்டும். இரண்டாவது, சமூகத்தில் அதற்கான தேவை இருக்க வேண்டும். இதிகா சங்கள், புராணங்கள் எல்லாம் இருப்பது வாஸ்தவம்தான். மக்களின் அன்றாட வாழ்வில் அவற்றுக்கு என்ன மதிப்பு இருக்கிறது என்பதும் முக்கியம் இல்லையா? ஆனால், பெரிய தளத்தில் இயங்கும் படைப்புகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. மார்க்வெஸினுடைய 'ஒன் ஹண்ட்ரட் இயர்ஸ் ஆஃப் சாலிட் யூட்’டை விடவும் அவருடைய 'தி ஜெனரல் இன் ஹிஸ் லாபரின்த்’ அற்புதமான படைப்பு.''
''பொதுவாகவே, தமிழ்ப் படைப்பாளிகள் சமகால வரலாற்றைப் பற்றி அலட்டிக்கொள்வது இல்லை... நீங்கள் உட்பட. ஏன்?''
''சம கால வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியவில்லை. சம காலத்தின்மீது - இன்றைக்கு நடந்துகொண்டு இருக்கும் ஒரு விஷயம் சரியானதா, தவறானதா என்று முடிவெடுக்கக் குறைந்தது 20 வருஷங்கள் தேவைப்படுகின்றன. அதற்குள் அடுத்த சம காலம் வந்துவிடுகிறது. இன்றைய அரசியல் செயல்பாடுகளைப் பற்றி இன்றைக்கே ஒரு முடிவுக்கு வந்து எழுதிவிடுவது பெரும்பாலும் தவறாகவே முடிகிறது.''
''தமிழில், சிறுகதைக்குக் கிடைத்த வெற்றிகள் நாவலுக்கும் கவிதைக்கும் கிடைக்காமல் போனது ஏன்?''
''ஒரு மேற்கோள் உண்டு... 'ஒரு வாசகனும் இல்லாத கவிஞன், கவிஞனே இல்லை’ என்று. நாவல்கள், கவிதைகளைவிடவும் இங்கு சிறுகதைகளே அதிகமாக பத்திரிகைகளில் வெளியிடப்படுகின்றன; அதிகமான வாசகர் களைச் சிறுகதைகளே சென்று அடைகின்றன. எதை விரும்பிப் படிக்கிறார்களோ, அதை எழுதுகிறோம். உங்கள் கவனம் எங்கே இருக்கிறதோ, அங்கேதான் சாதிப்பீர்கள்.''
''இப்போதும் முன்புபோல வாசிக்கிறீர்களா?''
''எந்தச் சூழலிலும் வாசிப்பை விட முடியாது. ஒரு நாளைக்கு அரை மணி நேரம் எழுதுவேன். எப்படியும் வாரத்துக்கு இரண்டு புத்தகங்களாவது வாசித்துவிடுவேன்.''
''ஒரு வாசகராக உங்களை மிகவும் பாதித்த படைப்புகளைச் சொல்லுங்கள்?''
''உ.வே.சா-வின் 'என் சரித்திரம்’, நாமக்கல் கவிஞரின் 'என் கதை’, கல்கியின் 'தியாக பூமி’, புதுமைப்பித்தனின் 'சித்தி’, சரத்சந்தர் சாட்டர்ஜியின் 'சந்திரநாத்’, அலெக்சாண்டர் டூமாஸின் 'தி கவுன்ட் ஆஃப் மான்டிகிறிஸ்டோ’, சார்லஸ் டிக்கன்ஸின் 'எ டேல் ஆஃப் டு சிட்டிஸ்’.
''கடந்த ஒரு நூற்றாண்டில் இந்திய அளவில் மகத்தான இலக்கியச் சாதனையாக எதைச் சொல் வீர்கள்?''
''தாகூரின் 'கோரா’.''
''ஒரு விமர்சகராக நீங்கள் கறாராகச் செயல்பட்டது இல்லை என்ற குற்றச்சாட்டு உண்டு...''
''ஏன் கறாராகச் செயல்பட வேண்டும்? விமர்சகனாக அடையாளப்படுத்திக்கொள்ளக் கூட நான் பிரியப்பட்டது இல்லை.''
''உங்கள் அளவில் நல்ல இலக்கியத்துக்கான வரையறை என்ன?''
''மனிதன் மீது அக்கறை காட்டுகிற எல்லாமே இலக்கியம்தான். மனிதர்களைப் பிரிக்கிற எதுவுமே இலக்கியம் இல்லை.''
''தமிழில் இப்போது எழுதுபவர்களில் நம்பிக்கை அளிப்பவர்களாக யாரைக் கருதுகிறீர்கள்?''
''ஜெயமோகன். அவருக்கு இருக்கும் அனுபவங்களும் வாசிப்பும் இன்னும் அவரைப் பெரிய உயரங்களுக்குக்கொண்டு செல்லும் என்று நினைக்கிறேன். ஆனால், படைப்புகளைத் தாண்டி அவர் எழுது வதும் பேசுவதும்... ம்ஹூம்...''
''தமிழ் இலக்கியத்தில் இவ்வளவு சின்ன கூட்டத்தில் இவ்வளவு அரசியல் ஏன்?''
''எங்கே அரசியல் இல்லை? எழுத்துத் துறையில் மட்டும் கூடாதா என்ன? சந்தோஷப்படுங்கள். வேறு எங்கும்தான் சுதந்திரம் இல்லை... எழுத்துலகத்திலாவது இருக்கிறதே என்று!''
''உங்களை நீங்கள் சுயவிமர்சனம் செய்துகொள்வது உண்டா? உங்கள் படைப்புகளை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?''
''ஒவ்வொருவருக்கும் அது அவசியம் இல்லையா? எல்லாக் காலங்களிலுமே என்னை சுயவிமர்சனம் செய்துவந்திருக் கிறேன். உலகத் தரத்தில் என் எழுத்துகளை ஒப்பிடச் சொன்னால், நான் யாருக்கும் தாழ்ந்தவன் இல்லை என்றுசொல்வேன்.''
''எழுத்தையே வேலையாக்கிக்கொண்டது வரை பல விஷயங்களில் ஜெயகாந்தனுடன் ஒப்பிடத் தக்கவர் நீங்கள். ஆனால், அவருக்குக் கிடைத்த வசதியோ, அங்கீகாரங்களோ உங்களுக்குக் கிடைக்க வில்லை. இதை எப்படி உணர்கிறீர்கள்?''
''இங்கு உள்ள அரசியல் சூழ்நிலைகள் அப்படி. இங்கு எழுத்தாளன் மட்டும் பார்க்கப்படுவது இல்லையே? அவனுடைய அப்பா யார் என்பதில் தொடங்கி, அவனை அங்கீகரித்தால் நமக்கு என்ன கிடைக்கும் என்ற கணக்கு வரை எல்லாம் முக்கியம். சொல்லப்போனால், எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா என்று எல்லோரையுமே வசை மாறிப் பொழிந்தவர் ஜெயகாந்தன். ஆனால், அவருடைய வசை மழைகூட இவர்களுக்குப் பூ மழையானது!''
''நாட்டுநடப்புகள், அரசியல் போக்குகள்பற்றி நீங்கள் அதிகம் விமர்சித்தது இல்லை...''
''வாழ்க்கையோடு முட்டி மோதி நின்றவன் அல்ல நான். வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்தவன். அரசியலையும் அப்படித்தான் பார்த்தேன்.''
''இந்திய நடுத்தர வர்க்கத்தைப் பற்றி அதிகம் எழுதியவர் என்ற முறையில் சொல்லுங்கள்... நம்முடைய நடுத்தர வர்க்கம் கைவிட வேண்டிய விஷயங்கள் என்னென்ன?''
''இந்திய நடுத்தர வர்க்கத்தால் எதையும் கைவிட முடியாது. அவர்கள் இந்த நிலையிலேயே இருப்பதைத்தான் ஆளும் வர்க்கம் விரும்புகிறது. அதுதான் யார் யாரை எந்தெந்த நிலையில் வைக்கலாம் என்று தீர்மானிக்கவும் செய்கிறது.''
''சமூகத்தில் ஒருபுறம் அற உணர்வுகளுக்கு மதிப்பே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது. மறுபுறம் கோயில்கள், திருவிழாக்களில் கூட்டம் குவிகிறது; சாமியார்கள் சாம்ராஜ்யங்களை உருவாக்குகிறார்கள். ஓர் இறைநம்பிக்கையாளராக இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''தமிழ்நாட்டில் எந்த ஆட்டோவிலாவது மீட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறதா? ஆனால், சபரிமலை சீஸனில் போய்ப் பாருங்கள். ஆட்டோக்காரர்களில் முக்கால்வாசிப் பேர் மாலை போட்டு இருப்பார்கள். திருப்பதியில் பெருமாள் உண்டியலில் லட்ச லட்சமாகப் போடும் முதலாளிகளில் பாதிப் பேர் தன்னுடைய தொழிலாளிகள் வயிற்றில் அடிப்பவர்கள். மக்கள் அற உணர்வையும் ஆன்மிகத்தையும் பிரித்துவிட்டார்கள்.''''திடீரென ஒரு நாள் விஞ்ஞானிகள் கடவுள் இல்லை என்பதை அறிவியல்ரீதியாக நிரூபித்து அறிவித்தால், அதற்குப் பின் இந்த உலகம் எப்படி இருக்கும்?''
''நான் ஒரு நாள் கோமாவில் இருந்திருக்கிறேன். அந்த நாளை ஞாபகப்படுத்திப் பார்க்கும்போது, ஒன்றுமே இல்லாத சூழலில் இருந்த மாதிரிதான் உணர்கிறேன். கிட்டத்தட்ட சாவுக்குப் பிறகான நிலை அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
நாம் ஒன்றுமே இல்லை என்பதுதான் பெரிய உண்மை. என்னுடைய சாம்பலைக் கூடத் திரும்பிப் பார்க்காதீர்கள் என்றுதான் என் குடும்பத்தாருக்கே சொல்லி இருக் கிறேன். இந்த உலகத்தை ஏதோ ஒரு சக்தி, அவன் அல்லது அவள் அல்லது அது ஆள்கிறது என்று நம்புகிறோம். அதுவும் இல்லாமல் போனால்... எனக்குச் சொல்லத் தெரியவில்லை!''
பேட்டி: தமிழ்மகன், சமஸ்
படங்கள் : உசேன்
நன்றி: விகடன்
தமிழ் எழுத்தாளர்கள் படிக்க வேண்டிய பேட்டி...
Posted by IdlyVadai at 8/02/2012 10:37:00 PM 14 comments
Labels: எழுத்தாளர்கள், பத்திரிகை, பேட்டி
லைஃப் ஜாக்கெட்
Posted by IdlyVadai at 8/02/2012 06:48:00 PM 13 comments
Wednesday, August 01, 2012
யார் (உண்மையான) நம்பர் 1
போன வார குமுதம் நம்பர் 1 அட்டைப்படமும் இந்த வாரம் அரசு பதில்களில் அதற்கு காரணம் நீங்கள் தான்! என்று போட்டிருக்கிறார்கள். உண்மையான நம்பர் 1 யார் என்று நீங்கள் முடிவு செய்யலாம்.
(மற்றவை என்றால் அது என்ன என்று பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.)
Posted by IdlyVadai at 8/01/2012 09:21:00 PM 14 comments
Labels: பத்திரிகை, வாக்கெடுப்பு