பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, June 29, 2012

திருடனுக்குத் தேள் கொட்டினால்....

யாரையோ திருப்திப் படுத்துவதற்காக நாம் பேசிய பேச்சு நமக்கே வினையாக முடியும் என்பதை ப.சிதம்பரம் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார். 2008 நவம்பர் 26 ஆம் தேதி பம்பாயில் பாகிஸ்தான் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட எட்டு தீவிரவாதிகளுள் அஜ்மல் கஸாப் என்ற பயங்கரவாதியைத் தவிர அனைவருமே கொல்லப்பட்டனர். இந்த சதிவேலைக்கான வலை பின்னப்பட்டதில் பாகிஸ்தான் அரசாங்கம், அதன் உளவுத்துறையான ISI, மற்றும் லஷ்கர் ஈ தொய்பா ஆகியோருக்கு பங்கிருப்பது பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில் உறுதியானது. அன்றிலிருந்து இன்றுவரை பாகிஸ்தானுடன் இதில் தொடர்புடையவர்களை ஒப்படைக்குமாறு மன்றாடும் படலம் நடந்து கொண்டுதானிருக்கிறது, ஆயினும் இதுவரை எதுவும் உருப்படியாக நடந்தபாடில்லை. இத்தாக்குதலின் சூத்ரதாரியான லஷ்கரின் தலைவன் ஹஃபீஸ் ஸயீத் வெகு தோரணையாக பாகிஸ்தானில் அங்குமிங்கும் வலம் வருகிறார், பொதுக் கூட்டங்களில் உரை நிகழ்த்துகிறார்.


இத்தாக்குதல் நடந்து கொண்டிருக்கும்போதே, ஆளுங்கட்சியைச் சேர்ந்த திக்விஜய் சிங் இது ஆர் எஸ் எஸ்சின் சதி வேலை; கர்கரே இறப்பதற்கு 2 மணிநேரம் முன்னதாக தம்மை தொலைபேசியில் அழைத்து, ஆர்.எஸ்.எஸ் மூலம் தனக்கு மிரட்டல் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். தவிர, ப.சிதம்பரமும், தம் பங்கிற்கு இது உள்ளூர்காரர்களின் வேலை என்று தீர்ப்பு வழங்கினார். அன்றுமுதல் இன்று வரை பாகிஸ்தான் இதையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அஜ்மல் கஸாபின் குடியுரிமை அடையாள அட்டை கிடைத்தபிறகே அவன் பாகிஸ்தானி என்றே ஒப்புக் கொள்ள நேர்ந்த்து பாகிஸ்தானுக்கு, அதற்கு முன்புவரை அவன் பாகிஸ்தானியே அல்ல என்று வாதிட்டு வந்தது. இவ்வாறு ஒவ்வொரு நிலையிலும் இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் முகத்திரை தொடர்ந்து கிழிக்கப்பட்டு வந்துள்ள நிலையிலும், இந்தியாவிலுள்ள ஸ்திரமாக முடிவெடுக்கத் தெரியாத, முதுகெலும்பில்லாத பிரதமரால் பாகிஸ்தானுக்கு எதிராக எதுவும் செய்ய முடியவில்லை.


இந்நிலையில் அத்தாக்குதலில் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து உத்தரவுகளை வழங்கிய, லஷ்கரின் இந்தியப் பிரிவின் முக்கியத் தளபதி, இந்தியாவைச் சேர்ந்த சையத் ஜபியுதீன் அன்ஸாரி என்கிற அபு ஜிண்டால் என்ற அபு ஹம்ஸா தில்லியின் இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் சுமார் 43 மாத தேடுதல் வேட்டை ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இவனை விசாரித்ததில், பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் ISI க்கு உள்ள தொடர்பை இவன் உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. தாக்குதல் நடவடிக்கைக்குப் பிறகு கராச்சியிலுள்ள ரகசிய உத்தரவுகள் வழங்கிய இட்த்தை ISI தகர்த்து விட்ட்தாகவும் இவன் தெரிவித்துள்ளான். தாக்குதலுக்குப் பிறகு சில காலத்தில் பாகிஸ்தான் பாஸ்போர்டில் செளதிக்குப் பயணம் செய்து, லஷ்கருக்கு ஆள் சேர்க்கும் பணியிலீடுபட்ட இவனை, சில சில்லறை ஏமாற்று குற்றங்களில் செளதி அரசு கைது செய்ததும், பாகிஸ்தான் இவனை தன் நாட்டில் செய்த குற்றங்களுக்காக தேடப்படும் குற்றவாளி என செளதியிடம் தெரிவித்து, அவனை திரும்பப் பெற்றுக் கொள்ள முனைந்த முயற்சி தோல்வியடைந்தது. கடைசியில் அவனாகவே பாகிஸ்தானிய பாஸ்போர்டில் இந்தியாவிற்கு பயணம் செய்யும் தகவல் கிடைக்கப்பெற்று, தில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.


ஆனால் பாகிஸ்தான் இப்பொழுது இவன் இந்தியர் என்றும், உங்கள் உள்நாட்டுப் பாதுகாப்பில் ஓட்டை என்றும், ஹிந்து தீவிரவாதிகள் வளர்கிறார்கள் என்றும் ப்ளேட்டைத் திருப்பிப் போகின்றனர். நமது அமைச்சர்களும் திருடனுக்குத் தேள் கொட்டியது போல் செய்வதறியாது திகைத்துள்ளனர். இந்த அபு ஹம்ஸாவே பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து அஜ்மல் கஸாபிற்கு செல்பேசியில் தாக்குதல் உத்திகளையும், உத்தரவுகளையும் வழங்கியுள்ளான். தவிர, அஜ்மல் கஸாபிற்கு ஹிந்தியும் போதித்து வந்துள்ளான் பாகிஸ்தானிலுள்ள பயிற்சியகத்தில். அபு ஹம்ஸா கைது செய்யப்பட்ட செய்தியறிந்த கஸாப் அதிர்ச்சியடைந்த்தாகவும், தொடர்ந்து கைது விவரங்களை கேட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


பெரும்பான்மை ஹிந்துக்களைச் சாடினால் சிறுபான்மை முஸ்லிம்களின் ஓட்டுக்களைப் பெற்று விடலாம் என காங்கிரஸ் கட்சி தரந்தாழ்ந்த அரசியலில் ஈடுபட்டு வருகிறது. அதற்குத் தோதாக திக்விஜய் சிங் மற்றும் ப.சிதம்பரம் போன்றவர்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் இந்த ஹிந்து தீவிரவாதக் கருத்து. இதுவரை இந்தியாவில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் ஹிந்து தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது இதுவென்று எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில், தொடர்ந்து ஹிந்து தீவிரவாதம் என்பதை காங்கிரஸ் வலியுறுத்தி வந்த்து. இப்பொழுது பாகிஸ்தானும் அதையே திருப்பிச் சொல்கிறது. இதில் பாகிஸ்தானைக் குறை கூற வழியில்லை. ஏனெனில் இது இங்கிருந்து ஆரம்பிக்கப்பட்ட பிரசாரம்; அதை அவர்கள் சாமர்த்தியமாக தங்களது தவறை மறைக்கப் பயன்படுத்திக் கொள்கின்றனர், அவ்வளவே!


கைது செய்யப்பட்ட அபு ஹம்ஸாவுக்கு இனி பொதுமக்கள் வரிப் பணத்தில் சிக்கன் பிரியாணியும், மட்டன் சுக்காவும் கொடுத்து பல கோடி ரூபாய் செலவில் பாதுகாப்பளித்து சொகுசுச் சிறையில் காவல் வைப்பர்.

ஜிண்டால் கைதானதை அறிந்ததும் கசாப் கடும் அதிர்ச்சி அடைந்தான் என்று இன்று செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. இவர்களை இன்னும் இந்திய அரசு உயிருடன் வைத்துள்ளது என்பது கூட நமக்கு அதிர்ச்சி தான், ஆனால் நாம் என்ன செய்ய முடியும் ? பிரதமர் என்ன செய்வார் ?

தீவிரவாதம் ஒழிக்கப்படும் என்று பிரதமர் சுதந்திர தினப் பிரகடனம் செய்வார், ஐம்பதாயிரம் போலிஸார் பாதுகாப்பிற்கு மத்தியில். வாழ்க ஜனநாயகம், வாழ்க காங்கிரஸ், வளர்க காங்கிரஸிற்கு ஓட்டளிக்கும் மக்கள்!

Read More...

Tuesday, June 26, 2012

3 பட விமர்சனம் - ஜெயக்குமார்

தமிழ் சினிமாவின் சாபக்கேடுகளில் ஒன்று நல்ல படம் வருவதில்லை என எல்லோரும் எப்போதும் குற்றம் சாட்டிக்கொண்டே இருப்பது. நல்ல படங்கள் வந்தால் அதை வரவேற்பதில் காட்டும் அக்கறையைவிட அதை குப்பை எனச் சொல்வதற்கென ஒரு கூட்டம் உருவாகிவந்திருக்கிறது. மூன்று ( ௩ ) சினிமா வெளிவந்தபோது அதைப் பற்றி வந்த வியாபார ரீதியான எதிர்மறை விமர்சனங்களை பார்த்தும், ஐஸ்வர்யா திரைப்படத்தின் இயக்குனர் என்பதாலும் அதைப் பார்க்காமல் தவிர்த்து வந்தேன். பொதுவாக தனிப்பட்ட ஆட்கள் மீது திட்டமிட்டு பரப்பப்படும் அல்லது தன்னை உயரத்தில் வைத்துக்கொண்டு அதாகப்பட்டது காசு கொடுத்து படம் பார்க்கும் ஒரே தகுதியே சினிமாத்துறையில் இருப்பவர்களைப் பற்றி எந்தவித கருத்தும் சொல்லும் உரிமையில் அவர்களை கேவலப்படுத்துவது. ஒரு படம் சிறந்த படமா இல்லை சராசரிப் படமா எனத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக அப்படத்தின் வருமானத்தை கொண்டு அளவிடுவதும் தொடர்ச்சியாக நாம் செய்துவரும் தவறுகள். ஐஸ்வர்யாவுக்கு நடந்ததுகூட Charecter assasination தான். மூன்று ( 3) படத்துக்கு வந்த திரைப்பட விமர்சனங்களைவிட அப்படத்தினால் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஏற்பட்ட மன உழைச்சலும், அந்தப் படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்திற்காக அவரை தயாரிப்பாளர்கள் நெருக்கியதாக சொல்லப்படும் விஷயங்களே பரபரப்பை நம்பிச் செயல்படும் பத்திரிக்கைகளுக்கும் நமக்கும் போதுமானதாக இருந்தது.



தனுஷ் :-

இந்தப் படத்தில் தனுஷுக்கு கிடைத்திருக்கும் வேடம் சாதாரணமானதுதான். ஆனால் எவ்வளவு இயல்பாகச் செய்ய முடியுமோ அவ்வளவு இயல்பாக அந்த "ராம்" ஆகவே மாறிவிடுகிறார். கொஞ்சல் ஆகட்டும், வருத்தங்களை காண்பிப்பதில் ஆகட்டும், மனநிலை பிறழ்ந்தது எனத் தெரிந்தவுடன் அவர்காட்டும் முக பாவங்களாகட்டும், கலக்குகிறார். குறையென அவர் பாத்திரத்தில் சொல்வதற்கு எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. தான் ஒரு மசாலா நடிகன் இல்லை என ஒவ்வொரு படத்திலும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். அடுத்த கமல், ரஜினி என்றேல்லாம் சொல்லி அவரைக் கேவலப்படுத்தக் கூடாது. தனுஷ் தமிழ் திரையுலகின் ஒரு தனி நாயகனாக வலம் வரும் காலம் தொலைவில் இல்லை. மூன்று படம் அவரது திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களில் ஒன்று. மிகச் சிறப்பான காட்சிஎனில் " நான் பைத்தியமாடா? எனக் கேட்டு அவர் காண்பிக்கும் முக பாவங்கள். மிக்கிய முக்கியமாக ஹீரோயிசம் ஏதுமின்றி நடித்தது.

ஸ்ருதி :-

நிச்சயமாக இப்படி ஒரு நடிப்பை இந்தப் பெண்ணிடம் எதிர்பார்க்கவே இல்லை. கண்களின் அழகை எல்லாம் வர்ணிக்க முடியாது. அவ்வளவு அழகு. சிறு வயது ஸ்ருதியின் நடிப்பும், விடலைக் காதலை மிக இயல்பாக நடித்துச் செல்வதிலும் மிளிர்கிறார். அப்படியே தனுஷுடனான திருமணத்திற்குப் பிறகும். காதல் பொங்க வாழ்வதிலும், தனுஷிடம் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி அறிந்தும் அதைப்பற்றி முழுதும் தெரியாமல் தவிப்பதிலும் கலக்குகிறார். வழக்கமாக கிண்டலாகச் சொல்லப்படும் கெமிஸ்ட்ரி தனுஷுக்கும் ஸ்ருதிக்கும் இடையில் கச்சிதமாக பொருந்துகிறது. உண்மையில் காதலித்து கைப்பிடித்து மகிழ்வுடன் வாழ்வோருக்கு இந்தப்படம் அவர்கள் வாழ்க்கையை மீண்டும் திரையில் பார்க்கும் அனுபவத்தைத் தரும். கண்கள் கலங்குவதிலும், அழும்போதும் நம் மனதை இனம்புரியாத சோகம் கவ்விக்கொள்கிறது. ஸ்ருதியின் அழுகை நிச்சயம் சினிமாத்தனம் இல்லை. மனதை பிசையும் கஷ்டத்தை நினைத்து அழும் மிகச் சோகமான அழுகை. படம் பார்த்து வெகுநேரம் வரை அவரது அழுகை மனதைவிட்டு அகலவே இல்லை. அடுத்து கலக்கப்போகும் நடிகைகளில் இவருக்கும் மிக முக்கிய இடம் இருக்கிறது. அவரது அழகு, உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தும் கண்கள், மிக முக்கியமாக இயல்பான நடிப்பு அவரை தமிழ் சினிமாவின் உச்சங்களை நோக்கி அழைத்துச் செல்லும். மசாலாப் படங்களில்கூட தனது சிறப்பான நடிப்பால் கலக்கப்போகிறார் என்பது மட்டும் நிச்சயம்.

ஐஸ்வர்யா :-

வாய்ச்சவடால்கள் இல்லாமல் அழுத்தமான திரைப்படத்தின் மூலம் தானும் ஒரு சிறந்த பெண் இயக்குனர்தான் என சொல்லாமல் சொல்கிறார். அமர்க்களமான ஆரம்பம். ரஜினி தனது மகளைப் பற்றி பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இயல்பான திரைக்கதையும், சீரான ஓட்டமும், நடிகர்களின் தேர்வும், காட்சிகளின் கோர்வையும் என ஒவ்வொன்றிலும் சிறப்பாக செய்திருக்கிறார். அருமையான இயக்கம். வணிக லாபங்களுக்காக குத்துப்பாட்டோ, தேவையற்ற சண்டைகளோ இன்றி ஒரு நிறைவான படத்தை அளித்திருக்கிறார். வழக்கமாக முதல் படத்தில் எல்லோரும் கலக்குவதுதான் , அடுத்தடுத்த படங்களிலும் இதே போல சிறப்பாகச் செய்வதில்தான் வெற்றி இருக்கிறது. இந்தப்படத்திற்கு ஸ்ருதியை தேர்ந்தெடுத்தது அவரது புத்திசாலித்தனம்.

கதை :-

இரு விடலைக் குழந்தைகள் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். நாயகனுக்கு மனப்பிறழ்வு நோய் இருப்பது திருமணத்திற்குப் பிறகு நண்பன் மூலம் தெரிய வருகிறது. அதை தனது காதல் மனைவி அறிந்தால் மிக வருத்தபடுவாள் எனச் சொல்லாமல் மறைத்து மனப்பிறழ்வின் உச்சத்தில் தற்கொலை செய்துகொள்கிறான் நாயகன். ஏன் தனது கணவன் தற்கொலை செய்துகொண்டான் என்பதை நண்பன் மூலம் அறிய வருகிறாள். அதுதான் மொத்தக் கதையும். நாயகி காதலுடன் வாழ்ந்த காலங்கள் அவளது பிளாஷ்பேக்கிலும், நாயகனின் நண்பன் நாயகன் ஏன் இறந்தான் எனச் சொல்லும் பாகம் என இரு பாகங்களாக கதை சொல்லப்படுகிறது.

ரோகினி, பிரபு மற்றும் பலரும் நடித்துள்ளனர். வொய் திஸ் கொலைவெறி பாடலும் இந்தப் படத்தில்தான். அது மட்டும்தான் மசாலா ஐட்டம். மற்றபடி இது ஒரு முழுமையான திரைப்படம் .

குறைகள் :-

இவ்வளவு பெரிய வியாதியில் அவதிப்படும் தனது மகன் குறித்து பெற்றோர்களுக்கு கூட தெரியவில்லை என்பது.
தனுஷ் ஸ்ருதிக்கு பாரில் வைத்து தாலிகட்டுவதாக காட்டி இருக்க வேண்டாம். ஆரம்பத்துலையே இந்த முற்போக்கு ஆகாது.

கல்யாணம் செய்துகொள்ளப்போகிறேன் என்றதும் நாயகனின் அப்பா ( பிரபு) உடனே சரி எனச் சொல்வதும். ( நமக்கெல்லாம் இப்படி ஒரு அப்பா இருந்தா?)

மிக அழகான ஒரு திரைப்படம் பார்த்த ஒரு திருப்தி. குறிப்பாய் உச்சத்தில் இருந்தா பாலுமகேந்திரா எடுத்த படம் பார்த்த உணர்வு.



எதிர்மறை விமர்சனங்கள் மூலம் குழியில் தள்ளப்பட்ட ஒரு நல்ல திரைப்படம்.

- ஜெயக்குமார்
http://jeyakumar-srinivasan.blogspot.com/

இதற்கு மஞ்சள் கமெண்ட் போட்டு வேஸ்ட் செய்ய விரும்பவில்லை :-)

Read More...

Monday, June 25, 2012

Jailbahro நான் யாரோ

@icarusprakash டிவிட் 1: sir, what is jailbharao? RT @JAnbazhagan At South Chennai cadres meet in Anbagam now, discussing on Jailbahro starting from 4th July.

@khushsundar டிவிட் 2: @karthi_1 @psankar @janbazhagan don't u have Hindi as subject in schools in TN? Let's not argue for the sake of it.. :)

@அழகிரி இன்று பதில்: சிறை நிரப்பும் போராட்டத்துக்கு எங்களுக்கு அழைப்பு இல்லை. மத்திய அமைச்சர்களாக இருப்பதால் திமுக தலைமையிடம் கேட்டுத்தான் அது குறித்து முடிவு செய்ய முடியும்.

@ksnagarajan
@icarusprakash thats Hindi word which is derived from Sanskrit which is derived from Tamil. All is Tamil. Everywhere Tamil.

Read More...

மண்டே மர்மங்கள் (2) - ச.சங்கர்

டூரின் சவப்போர்வை (The Shroud of Turin )
இந்த உலகத்தில் ஒரு துணி இவ்வளவு சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்குமென்றால் அது இத்தாலியில் டூரின் நகரில் புனித ஜான் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் இறந்தவர்களது உடலை அடக்கம் செய்யும் போது உடலைச் சுற்றப் பயன்படுத்தப் படும் ஒரு பழைய சவப்போர்வைதான். 1578 ஆம் ஆண்டிலிருந்து அதாவது கடந்த 450 ஆண்டுகளாக ஒரு சிவப்பு பட்டுத்துணியில் சுற்றப்பட்டு வெள்ளிப் பேழையில் வைக்கப் பட்டிருக்கிறது.

கிட்டத்தட்ட 14 அடி நீளமும் 3.5 அடி அகலமும் கொண்ட அந்தத் துணியில் அப்படி என்ன அதிசயம் என்கிறீர்களா? அதில் ஒரு மனிதனின் முன்பக்க, பின்பக்க உருவம் பதிந்திருக்கிறது.
நீளமான ஒரு துணியில், ஒரு உடலை நீட்டுவாக்கில் படுக்க வைத்து அதே துணியின் மீதப் பகுதியால் அந்த உடம்பைத் தலையிலிருந்து போர்த்தினால் அந்த உருவத்தின் பதிவு அந்தத் துணியில் ஏற்பட்டால் எப்படி இருக்குமோ அது மாதிரியான தோற்றம் பதிந்திருக்கிறது.



இதை வெறும் கண்களால் பார்க்கும் போது ஃபோட்டோ நெகடிவ் பிரதியில் எப்படித் தெரியுமோ அப்படி தெரிகிறது. ஃபோட்டோ எடுத்து அதன் நெகடிவில் பார்த்தால் நிழல் போல உருவம் துல்லியமாகத் தெரிகிறது.

இந்தத் துணிக்கும் அதில் பதிந்திருக்கும் உருவத்துக்கும் மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்று இந்நேரம் ஊகித்திருப்பீர்களே!!! ஆம்.. ஏசுநாதர் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட பிறகு அவரது உடலை மூடப் பயன்பட்ட துணி என்றும் அதில் பதிந்துள்ள உருவம் சாட்சாத் ஏசுவினுடையதுதான் எனவும் நம்பப்படுவதால் தான் அதற்கு இத்தனை மவுசும் அது உண்மையா இல்லையா என்று தொடரும் மர்மமும்.
சரி..அது எப்படி அந்த உருவம் ஏசுவினுடையதுதான் என நம்ப என்ன ஆதாரம்? அந்த உடல் அந்தத் துணியில் சுற்றப்படுவதற்கு முன் மிகவும் சித்திரவதைக்குள்ளான அடையாளங்களும், ரத்த தடயங்களும் அதில் பதிந்துள்ள மாதிரி காட்சியளிக்கிறது. ஏசுவை யூதர்கள் சிலுவையில் அறைந்த போது என்னென்ன கொடுமைகள் செய்தார்களென்று படித்த அல்லது சினிமாவில் பார்த்த காட்சியை நினைவுக்குக் கொண்டு வந்து பாருங்கள். அவருடைய தலையில் முள் கிரீடம் வைத்தால் எப்படித் தலையில் காயம் உண்டாகுமோ அப்படிப்பட்ட காயத்தினால் ஆனது போல ரத்த அடையாளங்கள் அந்தத் துணியில் பதிந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் ஏசுவை சிலுவையில் அறைந்த போது ஆணியால் உண்டான ஓட்டைகள் காலிலும், இரண்டு கை மணிக்கட்டுக்களிலும் (பொதுவாக நம்பப்படுவது போல் சிலுவையில் அறையப்படும் போது உள்ளங்கையில் ஆணிகள் அடிக்கப்படுவதில்லையாம், ஏனென்றால் சிலுவையைத் தூக்கி நிறுத்தும் போது உடலின் பாரம் தாங்காமல் உள்ளங்கை சதையை பிய்த்துக் கொண்டு உருவம் கீழே விழுந்து விடுமாம்.அதனால் ரோமானிய காலத்தில் மணிக்கட்டில்தான் ஆணி அடிப்பார்களாம் ) இருந்ததும் அதிலிருந்து வெளிவந்த ரத்தச் சாயலும் கூட இந்தத் துணி உருவத்தில் பதிந்துள்ளதாம். இதையெல்லாம் வைத்து மத நம்பிக்கையாளர்கள் இது ஏசு நாதர் உடலை மூட பயன்பட்ட சவத்துணி என்றும் அதில் பதிந்துள்ள உருவம் அவருடையதுதான் என திடமாக நம்புகிறார்கள்.



மறுதரப்போ இது மத நம்பிக்கையைத் தூண்ட ஏற்படுத்தப்பட்ட ஒரு நாடகம் என்று ஆணித்தரமாக வாதிடுகிறார்கள்.இதற்கு இவர்கள் தரப்பில் எடுத்துக் காட்டப்படும் ஆதாரங்களையும் அதற்கு நம்பிக்கையாளர்கள் தரப்பில் சொல்லும் விளக்கங்களையும் (அடைப்புக் குறிக்குள்) பார்க்கலாம். 1) இது ஏசுவினுடையதுதான் என்றால் அவர் இறந்த 1500 ஆண்டுகளாக எங்கிருந்தது? இது பற்றி ஏன் பைபிளிலோ வேறெதிலுமோ எந்தக் குறிப்பும் இல்லை.( 9 மற்றும் 10ஆம் நூற்றாண்டுகளில் பைசாந்தைன், கான்ஸ்டான்டிநோபில் போன்ற இடங்களில் சில குறிப்புகள் உள்ளன. மேலும் கடவுளரின் பொருட்கள் அனைத்தும் எல்லா புராணங்களிலும் மனித ரூபங்களாக சித்தரிக்கப் படுவது போல் (புரிதலுக்காக என்னுடைய லோக்கல் உதாரணம்- விஷ்ணு பகவான் கையிலுள்ள சக்கராயுதம் சக்கரத்தாழ்வார் எனும் ரூபமாக வழிபடப்படுவது போல்) இந்தத் துணியும் வெள்ளை ஏஞ்சல் என குறிக்கப்பட்டுள்ளது என்றும் மேரி மக்டலீன் ஏசு உயிர்தெழுந்த அன்று பார்த்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ள வெள்ளை ஏஞ்சல், அவர் இந்தத் துணியை/அதில் ஏசு உருவத்தை பார்த்ததைக் குறிப்பதே என்கிறார்கள்)

2) 1998 ஆம் வருடம் உலகின் 3 வெவ்வேறு விஞ்ஞானக் கூடங்களால் கார்பன் டேட்டிங் முறைப்படி இந்தத் துணியின் காலம் ஆராயப்பட, அந்த மூன்று முடிவுகளுமே இந்தத் துணி 1350 ஆம் வருடத்துக்கு முந்தையதாக இருக்க வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக கூறியிருக்கின்றன (பரிசோதனைக்கு எடுக்கப் பட்ட சாம்பிளே தப்பு. பதினைந்தாம் நூற்றாண்டு வாக்கில் இந்தத் துணி வைக்கப் பட்டிருந்த தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தத் துணியின் சில பகுதிகள் எரிந்து ஓட்டையாகி விட்டன .இந்த சேதமடைந்த பகுதிகளை அங்கிருந்த கன்னிமார் ஒருவர் ஊசி நூல் கொண்டு தைத்திருக்கிறார் (இதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. 19-ஆம் நூற்றாண்டில் அப்படித் தைக்கப்பட்ட பகுதியிலிருந்து நூல் அப்புறப்படுத்தப்பட்டு துணி அதன் பழைய நிலையிலேயே தீ பட்ட ஓட்டைகளுடன் ரெஸ்டோர் செய்யப்பட்டுள்ளது- இந்த ஓட்டைகளைப் படத்தில் காணலாம்).கார்பன் டேட்டிங்கிற்கு எடுக்கப் பட்ட மாதிரி நூல் பிற்காலத்தில் துணியைத் தைக்கப பயன்பட்ட நூலின் பகுதி, அதனால்தான் பிற்காலத்தையது போல் முடிவுகள் கிடைத்துள்ளன)

3) எந்த ஒரு உடலையும் துணியில் சுற்றினாலும் அந்தத் துணியில் அந்த உருவம் பதியாது. அதுவும் உதடு கண்கள் போன்ற உள்ளடங்கிய பகுதிகள் கூட துல்லியமாகப் பதிய வாய்ப்பே இல்லை.அப்படியானால் அந்தக் காலத்தில் எத்தனையோ உடல்கள் மீது போர்த்தப் பட்ட சவப்போர்வைகள் உள்ளன அதிலெல்லாம் எந்த உருவமும் பதியவில்லை. இது வேண்டுமென்றே ஸ்டார்ச், கெமிகல் போன்றவற்றைக் கொண்டு ஒரு உருவத்தைப் பதிய வைத்து அது ஏசுநாதர்தான் என்று நம்ப வைத்து மதத்தைப் பரப்பும் பம்மாத்து வேலை. (செயற்கையான முறையில் செய்விக்கப்பட்டதென்றால் விஞ்ஞானம் வளர்ந்து விட்ட இன்றைய காலகட்டத்தில் கூட அது போன்று ஒரு உருவத்தைத் துணியில் பதிப்பித்துக் காட்ட முடியவில்லையே. மேலும் மூன்றாம் நாள் ஏசு உயிர்த்தெழுந்தபோது ஏற்பட்ட பிரகாசத்தின் காரணமாக உடல் பாகங்களின் மிக நுணுக்கமான பதிவுகள் துணியில் ஏற்பட்டுள்ளன- photo flash&energy theory)

4) இந்தத் துணியில் உள்ள கறைகள் மனித ரத்தம் இல்லை கெமிகல் சமாச்சாரம். (ரத்தம் தான்..ஆய்வில் ஹிமோக்ளோபின் உறுதி செய்யப்பட்டுள்ளது )
இப்படியாக முடிவில்லாத் தொடர்கதையாகப் போகிறது இந்த வாதங்கள். இதில் எந்தத் தரப்பு வாதத்தையும் புறந்தள்ளி விட முடியாதபடிக்கு இரண்டு பக்கமுமே படித்தவர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள் உள்ளதால் இன்னும் மெய்யா பொய்யா என்று நிரூபணமாகாமலேயே அவிழாத மர்ம முடிச்சாகவே தொடர்கிறது டூரின் சவப்போர்வை.
எது எப்படியோ 2010-ஆம் ஆண்டு பொது மக்கள் பார்வையிட 45 நாட்கள் அனுமதிக்கப் பட்ட போது, அந்த 45 நாட்களில் உலகமெங்கிலும் இருந்து வந்து இந்த டூரின் சவப்போர்வையைப் பார்த்துச் சென்றவர்களின் எண்ணிக்கை மட்டும் 20 லட்சம் பேர்.

அடுத்த மண்டே அன்று மர்மங்கள் தொடரும்...

-ச. சங்கர்

மினி மர்மம்: போன சனிக்கிழமை பெங்களூரில் ஒரு பூங்காவில் சில உருவங்கள் தெரிந்ததாம் :-)

Read More...

Saturday, June 23, 2012

சகுனி FIR

எச்சரிக்கை: Saguni movie என்று கூகிள் இமேஜில் தேடினால் முதலில் வருவது எல்லாம் தெலுங்கு சகுனிகள்.

கதை விக்ரம் நடித்த தூள் படத்தைப் போன்றது. அரசியல் பேட் பாய் பிரகாஷ்ராஜூக்கு எப்படி கமல்(க்கண்ணன்) நோஸ்கட் கொடுக்கிறார் என்பது தான் கதை.



பலத்த கைத்தட்டலுக்கு இடையில் சந்தானத்தின் பெயரைப் பார்க்க முடிகிறது. கார்த்தி வரும் முதல் காட்சியை விட சந்தானம் வரும் காட்சிக்கு மக்கள் விசில் அடிக்கிறார்கள்.

வழக்கம்போல ரஜினி ரசிகர்கள் தங்கள் பெயருக்கு முன்பு 'ரஜினி' என்று வைத்துக்கொள்ளுவதைப் போல இதில் சந்தானத்தின் பெயர் ரஜினி (அப்பாத்துரை). கார்த்தி கமல். ரஜினி-கமல் காம்பினேஷனில் முதல் பாதி காமெடியாக போகிறது. ஆனால் சில சமயம் சந்தானம் அடிக்கும் பஞ்ச் காமெடி கொஞ்சம் ஓவர் டோஸ். ரஜினி-கமல் ஒன்றாக உச்சா அடிக்கும் காட்சி படத்துக்குத் தேவையே இல்லை.

படத்தில் எல்லோரும் நடிக்க, கார்த்தி மட்டும் நடிக்காமல் சும்மா வந்துவிட்டு போகிறார். கார்த்தி ஏதோ சாப்ட்ஃவேர் ஆசாமி கெட்டப்பில் ஃபார்மல் உடையில் லேப்டாப்புடன் வருவது எரிச்சலூட்டும் காமெடி. ராதிகா வரும் காட்சியில் 'அட' சொல்ல வைக்கிறது. அதுவும் அவர் மேயராக பதவி ஏற்கும் காட்சி அவர் காட்டும் முகபாவம் அவருடைய அனுபவத்தை காண்பிக்கிறது. ஆனால் மேயராகிவிட்ட பிறகு இரண்டு மூன்று முறை போனில் பேசுகிறார். பிறகு அவர் மேயர் வேலையில் பிஸியாகிவிடுவதால் காட்சிகளில் வரவில்லை.

ராதிகாவிற்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவராக கோட்டா ஸ்ரீனிவாசராவ் வலம் வருகிறார். படம் தெலுங்கில் எடுப்பதால் இவரைக் கொண்டு வந்துவிட்டார்கள், புத்திசாலிகள்!

மரத்தடி சாமியாராக, பிறகு ஜக்கி போல பணக்கார சாமியாராக நாசரும் வந்துவிட்டு போகிறார்.

பிரகாஷ் ராஜ் வில்லனாக அவரின் முந்தைய படங்களில் எப்படி நடித்தாரோ அதே மாதிரி ரெடிமேட் நடிப்பை எல்லா ஃபிரேமுலும் தந்துவிட்டுப் போகிறார். வித்தியாசம் என்றால் அவருடைய கண்ணாடி ஃபிரேம் தான். இதுவரை போடாத ஃபிரேம்.

இசை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்க வைக்கும் படம். வாங்கின காசுக்கு கையில் இருக்கும் எல்லா வாத்யங்களையும் உபயோகிக்க வேண்டாம் என்று ஜி.வி.பிரகாஷுக்கு யாராவது சொன்னால் தேவலை. மகா எரிச்சல். பாடல்களும் அதே ரகம்.

கிட்டத்தட்ட எல்லா வாரப் பத்திரிக்கையிலும் ஹீரோயின் ப்ரணீதா படம் அட்டையில் வந்ததால் அவர் ஏதோ புதுமுகம் மாதிரியே தெரியவில்லை. கண்ணைத் தவிர பெரிதாக ஒன்றும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தமிழ்ப் படத்தில் சண்டை இல்லாமல் இருக்கக் கூடாது என்று சில சண்டைக் காட்சிகளை உள்ளே நுழைத்திருக்கிறார்கள். கமல் என்ற பெயர் வைத்த காரணத்தாலோ என்னவோ அனுஷ்கா, ஆண்டரியா போன்ற பார்ட்டிகள் வந்துவிட்டு போகிறார்கள்.

பிரகாஷ்ராஜ் தான் செய்த கெட்ட காரியம் அனைத்தையும் லிஸ்ட் போட, இதை வீடியோ எடுத்து கார்த்தி அவரை மடக்குவார் என்று நாம் நினைத்தால், கிரண் மீண்டு வருவது படத்தில் உள்ளே ஒரே டிவிஸ்ட்.

கதை, திரைக்கதை, கொஞ்சம் சந்தானம் இருப்பதால் இத்தனை சுமாரான படத்தை சகித்துக்கொள்ள முடிகிறது.

இட்லிவடை மார்க் 5.3/10

டிப்ஸ்: படத்தின் முதல் சீனில் சன் டிவி வருகிறது, அதனால் இந்த படம் சன் டிவியில் தான் வரும்.

இந்த விமர்சனம் படிச்சு இட்லிவடையை வீடியோவில் இருப்பது போல யாரும் அடிக்க வேணாம்.






Read More...

Thursday, June 21, 2012

மோடி, நிதீஷ் கேள்வி பதில்கள்

உண்மையைச் சொல்லுங்க சார். பிரதமருக்கு உங்க சாய்ஸ் யார்? இது என்ன கேள்வி?

இட்லிவடை வாசகர்கள் கிட்டத்தட்ட 87% பேர் ( பார்க்க ஓட்டு பெட்டி) மோதி தான் பிரதமராக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

மோதி ஹிந்துத்துவா வெறியர் ஆச்சே? அவர் வந்தால் உருப்படுமா?

எல்லோருக்கும் ஒரு மதம், ஜாதி இருக்க தான் செய்கிறது. அதை எல்லாம் கடந்தவன் என்று சொல்லுகிறவர்கள் எல்லாம் கீழ்ப்பாக்கத்தில் இருக்க வேண்டியவர்கள். "செக்யூலரிஸம் - அதாவது மதச்சார்பின்மை" என்று பிதற்றுபவர்கள் கூட அந்த அந்த தொகுதிக்கு அந்த மதம்/ஜாதியை வேட்பாளர்களை தான் நிற்க வைக்கிறார்கள்!. நிதீஷ் இன்று ஆரம்பித்திருக்கும் இந்த "செக்யூலரிஸம்" பஜனை பிஹாரில் இருக்கும் முஸ்லீம், கிறுத்துவ ஓட்டுக்களை நம்பி தான்.


உண்மையான "செக்யூலரிஸம் - மதச்சார்பின்மை" என்றால் என்ன சார்? புரியும்படி விளக்கவும். ?

தச்சம்யோ ராவ்ருணீ மஹே! காதும் யஞ்யாய!
காதும் யஞ்ய பதயே: தைவீ ஸ்வஸ்திரஸ்துந:
ஸ்வஸ்திர் மானுஷ்யேப்ய: ஊர்த்வம் ஜிகாது பேஷஜம்:
சந்நோ அஸ்துத்விபதே: சம்சதுஷ்பதே!
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்திஹி!



மனித சமுதாயம் நன்மை பெற வேண்டும்; செடி கொடிகளும், மூலிகைகளும் நன்கு வளர வேண்டும்; மரங்கள் ஆகாய மார்க்கமாக நெடிந்துயர்ந்து வளர வேண்டும்; இரண்டு கால் ஜீவராசிகள் நலம் பெற வேண்டும்; நான்கு கால் ஜீவராசிகள் நலம் பெற வேண்டும், எங்கும் அமைதி, அமைதி அமைதி என்பதே நிலவ வேண்டும்.

இதுவே மேற்கூறிய புருஷ ஸுக்த ஸ்லோகத்தின் தமிழாக்கம். ஒரே வார்த்தையில் கூற வேண்டுமானால், “செக்யூலரிஸம்” அதாவது “மதச்சார்பின்மை” என்பதுதான் இதன் அர்த்தம்.

அப்படி என்றால் மதச்சார்பின்மை என்றால் மதவெறியர்கள் கிடையாதா ?

மேன்மையுடைய விஷயங்களை போதிக்கும் ஹிந்து ஸநாதன தர்மத்தைப் போற்றுபவர்களும், பரப்புபவர்களுக்கும் இன்றைய யுகத்தில் மதவெறியர்கள் என்றும் மதச்சார்புடையவர்கள் என்றும் பெயர் சூட்டப்படுகிறது. இத்தகைய திருப்பணியைச் செய்யும் மஹாகணம் பொருந்தியவர்கள் சாக்ஷாத் நமது அரசியல்வாதிகள்; இதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திருப்பணியைச் செய்பவர்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று போற்றப்படும் மீடியாக்கள். சுருக்கமாக மைனாரிட்டி மதங்களை (முஸ்லீம், கிறுஸ்துவர்களை) சப்போர்ட் செய்தால் அதுக்கு பெயர் மதசார்பின்மை.

நிதீஷ் குமார் - நரேந்திர மோதி பற்றி ஐந்து மார்க்கு ஒரு சிறு குறிப்பு?

இந்தியாவின் இரு ஆகச் சிறந்த அரசியல்வாதிகள் என்று போற்றப்படுபவர்கள் இவ்விருவரும். ஆட்சி செலுத்தும் தத்தமது மாநிலத்தின் அபிவிருத்திக்காக அயராது உழைக்கும் நேர்மையான அரசியல்வாதிகள் என்று பெயரெடுத்திருப்பவர்கள். இந்திய அரசியல் பற்றித் தெரியாதவர்கள் கூட மேற்கூறிய இரு முதல்வர்களையும், அவர்களிடையே நீண்ட காலமாக நடைபெற்று வரும் ஒரு தலைபட்சமான பனிப்போரையும் அறிவார்கள். நிதீஷ் குமார் மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் பெரும் தலைவர், பிஹார் மாநில முதல்வர்; நரேந்திர மோதி பாஜகவின் பெரும் தலைவர்களுள் ஒருவர், குஜராத் மாநில முதல்வர். மத்தியில் இவ்விரு கட்சிகளுமே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. வருகின்ற 2014 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இவ்விருவரில் யார் பிரதம வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணியால் முன்னிறுத்தப்படுவார்கள் என்று மீடியாக்கள் தலையைப் பிய்த்துக் கொண்டுள்ளன. இது பற்றி அந்தந்தக் கட்சிகளே இன்னும் கவலைப்பட ஆரம்பிக்கவில்லை என்பது வேறு விஷயம்.

நிதிஷ் குமார் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார்?
நிதிஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மதச்சார்பற்ற மற்றும் க்ளீன் இமேஜுடைய” ஒருவரே பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார், மேலும் தேர்தலுக்கு முன்னரே பிரதமர் வேட்பாளர் யாரென்று அறிவிக்க வேண்டுமென்றும் கருத்து கூறியுள்ளார். இதற்கு பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் தரப்பிலிருந்து கடும் ஆட்சேபங்கள் கிளம்பியுள்ளன. இன்னும் ஒரு படி மேலே சென்று, மோதி பிரதமர் வேட்பாளரென்றால், தே.ஜ கூட்டணியிலிருந்து வெளியேறவும் தயார் என்று அறிவித்துள்ளார். இதற்கு காரணம் தான் வரவில்லை என்றாலும் பரவாயில்லை, மோடி வர கூடாது என்று தமிழர்களிடம் உள்ள நல்ல குணம் போன்று இவரிடமும் இருப்பது தான் காரணம். இதற்கு இன்னொரு பெயர் வயிற்றிரிச்சல்.

மக்களிடம் நல்ல செல்வாக்கு உள்ள நிதிஷ் பற்றி இப்படி கூறலாமா?
பிஜேபியுடன் கூட்டணி அமைத்து சென்ற பிஹார் சட்டமன்றத் தேர்தலில் தொண்ணூருக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றார். ஆனால் பிறகு மோதி பிரசாரத்திற்கு வரக் கூடாது என்று வெளிப்படையாகவே நிதிஷ் குமார் பாஜகவிற்கு நெருக்கடி கொடுத்தது. பிஹார் வெள்ள நிவாரணத்திற்கென்று குஜராத் அரசாங்கம் சார்பில் வழங்கிய நிதியுதவியையும் திருப்பியனுப்பிய ஈனத்தனமான வாக்குவங்கி அரசியலில் ஈடுபட்டு தரந்தாழ்ந்த அரசியல் நடத்தியவர் நிதிஷ் குமார். மக்களுக்கு அனுப்பிய பணத்தை இவர் யார் வேண்டாம் என்று சொல்லுவது?

பிஜேபி என்ன செய்ய வேண்டும்?
நிதிஷ் மற்றும் பாஜகவில் உள்ளிருப்பவர்களின் கருத்துகளுக்கும் மோதியின் கருத்து வெறும் மெளனம் மட்டுமே. இன்று செய்தியாளர்கள் இதனை வருந்தி வருந்தி கேட்ட பிறகும், நிதிஷ் பற்றிய கேள்விகளைத் தவிர்த்து விட்டார் மோதி. ஏமாந்த மீடியாக்கள், அவர் பதில் கூறாமல் தவிர்த்ததையே தலைப்புச் செய்தியாக்கிவிட்டனர், வேறு வழியில்லை பாவம்.

அப்படிச் செய்தால் பிஜேபிக்கு பிரச்னை வராதா?
பிஜேபிக்கு தைரியம் இருந்தால், எங்கள் வேட்பாளர் மோதிதான். ஹித்துதுவா சார்பு இருந்தால் தப்பில்லை. ஹிந்துத்துவா தீண்டத்தகாத விஷயம் இல்லை. ஹிந்துக்களுக்கு இருக்கும் சகிப்பு தன்மை மற்ற மதங்களில் கிடையாது. பார்க்கப்போனால் இவர்கள் தான் அதிக செக்யூலர் என்று சொல்லி மோடியை அறிவிக்க வேண்டும். தேச நலம் முக்கியம் என்றால் இதைச்செய்தாக வேண்டும்.
காங்கிரஸ் பிரணாப் தான் குடியரசு தலைவர் என்று சொன்ன மாதிரி மோதிதான் அடுத்த பிரதமர் என்று அறிவிக்க வேண்டும்.

பிஜேபிக்கு இப்போது இருக்கும் சப்போர்ட்டை விட இன்னும் அதிக சப்போர்ட் கிடைக்கும்.

Read More...

Wednesday, June 20, 2012

நித்தீஷ் ? மோடி ? யார் உங்கள் சாய்ஸ்

சைடில் ஓட்டு பெட்டி இருக்கு. இது தொடர்பாக இட்லிவடை கட்டுரை விரைவில்..

Read More...

Tuesday, June 19, 2012

சும்மா பாருங்க ஜாலிக்கு



இவர் குடியரசு தலைவர் ஆனால் மும்பையில் பிடிபட்ட தீவிரவாதி முகமது அஜ்மல் அமிர் கசாப் என்ன நினைப்பார் ?

Read More...

Monday, June 18, 2012

மண்டே மர்மங்கள் (1) - ச.சங்கர்

இந்த கட்டுரையை எழுதிய ச.சங்கர் இயந்திரவியல் பொறியாளர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் துணைப்பொது மேலாளராக பணி புரிகிறார். தமிழ் ஆர்வலர், நிறைந்த வாசிப்பனுபவம் உள்ளவர். வலையில் அவ்வப்போது எழுதுபவர். மர்மங்கள் பற்றி எழுதுவதால் அதற்கு இட்லிவடை தான் பொறுத்தம் என்று நினைத்துவிட்டார் என்று நினைக்கிறேன். அதனால் இட்லிவடைக்கு அனுப்பியுள்ளார்.

அவருடைய வலைத்தளம்: http://ssankar.blogspot.in/

அன்புடன்
இட்லிவடை

உலகின் தொடரும் மர்மங்கள் -1

பிரி ரெயிஸ் வரை படம் - (Piri Reis Map)

1929 ஆம் ஆண்டில் சில வரலாற்று ஆய்வாளர்கள் துருக்கி அரச மாளிகையில் மான் தோலில் வரையப்பட்ட ஒரு வரை படத்தைக் கண்டெடுத்தனர்.அந்த வரை படத்தை ஆய்வு செய்ததில் அது ஒரு உண்மையான ஆவணம் என்பதும் துருக்கிய ஆட்டமோன் மன்னரது கடல் படையில் உயரதிகாரியாக (அட்மிரலாக) இருந்த பிரி ரெயிஸ் என்பவரால் 1513 ஆம் வருடம் வரையப்பட்ட வரை படத்தின் பகுதி என்பதும் தெரிந்தது.



பிரி ரெயிஸ் வரைபடக்கலையில் (கார்டோக்ராஃபி) பேரார்வம் கொண்டிருந்தார். தனது ஆர்வத்தூண்டலினாலும், தனது கடல் அனுபத்தில் கிடைத்த தகவல்கள், வரைபடத் துண்டுகள், நூலகத்தில் கிடைத்த வரைபடங்கள் குறிப்புகள் இவற்றைக் கொண்டு அவர் ஒரு வரை படத்தை தொகுத்தார், துருக்கி படையில் அவருடைய உயரிய அந்தஸ்துள்ள பதவியினால் புகழ் பெற்ற கான்ஸ்டான்டிநோபிலில் இருந்த அரச வம்சத்து நூலகத்திலிருந்த ஆவணங்களை அணுகிப் பார்வையிட வாய்ப்பு அவருக்கு இருந்ததும் இந்த வரை படத்தை சித்தரிப்பதில் அவருக்கு மிக்க உறுதுணையாகி விட்டது.

தென் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையையும், ஆப்பிரிக்காவின் வடக்குக் கடற்கரையையும் இன்னும் சில பகுதிகளையும் அந்த வரைபடத்தில் அவர் சித்தரித்திருந்தார். இத்தனைக்கும் அவர் தென் அமெரிக்கக் கடற்கரைக்குச் சென்றதோ அதைக் கண்ணால் கண்டதோ இல்லை. அவருடைய வரை படத்தில் காணப்படும் பல்வேறு குறிப்புக்களிலேயே பிரி ரெயிஸ் தன்னுடைய வரைபடம் பல்வேறு மூல வரைபடங்களிலிருந்து தொகுத்தெழுதப்பட்ட ஒன்றே என்றும் அவற்றில் சில மூல வரைபடங்கள் கி.மு 400 முதலாக அல்லது அதற்கும் முன்னால் எழுதப்பட்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு மூல வரைபடங்கள், குறிப்புகள் ,செய்திகள் இவற்றின் மூலமே தொகுத்தளிக்கப்பட்ட வரைபடத்தில், கண்ணால் காணாத இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ள துல்லியம் ஆச்சரியப்பட வைக்கும் ஒன்றாக இருக்கிறது.



கண்டெடுக்கப்பட்ட பிறகு மிகவும் விவாதத்துக்குள்ளான பிரி ரெயிஸின் வரைபடம் ஆப்பிரிக்காவின் மேற்குக்கடற்கரையையும், தென் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையையும் மற்றும் அண்டார்டிகாவின் வடக்குக் கடற்கரையையும் ??!! சித்தரிப்பதாக சில வரைபட வல்லுனர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் கருதுகிறார்கள். இதில் ஆச்சரியம் என்ன என்கிறீர்களா.. இந்த வரைபட காலத்தில் அண்டார்டிகா என்ற கண்டம் கண்டு பிடிக்கப் படவே இல்லை. வரைபட காலத்துக்கு சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே அண்டார்டிகா என்ற கண்டம் கண்டறியப்பட்டது. அதோடல்லாமல் அண்டார்டிகாவின் கடற்கரைப் பகுதியானது கிட்டத்தட்ட 1000 அடி கனமான பனியின் கீழ் மறைந்திருக்கிறது. அந்தப் பகுதியை யாராவது பார்த்திருந்து வரைபடத்தில் குறிக்க வேண்டுமானால், அது அந்தப் பகுதியில் பனியில்லாத காலமான கடைசி ice age காலத்திற்கு முற்பட்ட காலமாக இருந்திருக்க வேண்டும். அதாவது கிட்டத்தட்ட 6000 வருடங்களுக்கு முன்னால்.

நமக்குத் தெரிந்த வரலாற்றில் மனித நாகரீகம் தொடங்கியதே சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் தான். அப்படியானால் அதற்கும் முன்னால் நாகரீக வளர்ச்சியடைந்த, வரைபடங்களைத் துல்லியமாக கணிக்கக்கூடிய ஒரு சமூகம் இருந்ததா என்ற கேள்வி எழுந்து அதிர வைக்கிறது. அப்படி இருந்திருந்தால் எந்தச் சுவடும் இல்லாமல் எப்படி அழிந்திருக்கக் கூடும் என்ற கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை. அதோடல்லாமல் இந்த மூல வரைபடங்களை வரைந்தவர்களுக்கு உலகம் உருண்டை வடிவமானது என்ற அறிவும் இருந்திருக்கிறது. வரைபட இயலில் சிறந்த ஆய்வாளரான அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்லிங்டன் மலோரி என்பவர் கோள கோணவியல் திரிகோண கணிதம் (spherical Trigonometry) நன்கு அறிந்தவர்களால் இந்த வரைபடங்கள் வரையப்பட்டிருக்கிறதென்றும், ஆகாய விமானத்தில் பறந்து ஏரியல் சர்வேயில் பார்த்திருந்தால் மட்டுமே இவ்வளவு துல்லியமாக வரைய இயலும் என்றும் கூறியிருப்பது இன்னும் திகைப்பில் ஆழ்த்துகிறது.

மறுபக்கத்தில் இது அந்தக் காலத்தில் கிடைத்த மூல வரைபடங்கள், கடலோடுபவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் கொண்டு பிரி ரெயிஸினால் தொகுக்கப்பட்ட சாதாரண வரைபடமே அன்றி அசாதாரணமாக ஒன்றும் இல்லை என்று வாதிடுவோரும் உண்டு. பிரி ரெயிஸின் வரை படம் மிகத் துல்லியமானதல்ல.. தென் அமெரிக்காவின் கடற்கரையை (துல்லியமின்மை காரணமாக) வளைத்துக் காட்டப்பட்டிருக்கிறபடியால் அது அண்டார்டிகா கண்டத்தின் வட பகுதியைக் காட்டுவது போல் தோன்றுகிறதேயன்றி, அது அண்டார்டிகா கண்டத்தைக் காட்டவே இல்லை. மேலும் இது ஒரு ஆச்சரியகரமான வரைபடம் என்று வாதிடுபவர்கள் கேப்குட் என்ற அமெரிக்க அறிவியலாளரின் வாதத்தை மட்டுமே எடுத்து வைக்கிறார்களே அன்றி ஆய்வுகள் மேற்கொண்டு நிரூபணம் செய்யப்படவில்லை என்றும் எதிர் வாதிடுகின்றனர்.



எது எப்படியோ, சாதாரணமாக தொகுக்கப்பட்ட வரைபடமா அல்லது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த மனித இனத்துக்கு மிகவும் மேம்பட்ட அறிவியல் ஞானம் இருந்ததா என்ற கேள்விகளுக்கு விடையில்லாமல் இன்றும் அவிழ்க்க முடியாத ஒரு மர்ம முடிச்சாகவே நீடிக்கிறது பிரி ரெயிசின் வரைபடம்.

அடுத்த மண்டே அன்று மர்மங்கள் தொடரும்...

-ச. சங்கர்

Read More...

Saturday, June 16, 2012

குடியரசு தலைவர் கேள்வி பதில்கள் பகுதி-2

UPA கூட்டணியில் மம்தா தான் odd (wo)man out. ஏன் அப்படி நடந்துக்கொள்கிறார்?
குடியரசுத் தலைவர் பதவி ஒரு கௌரவமான பதவி. அவ்வளாவு தான். இதனால் எந்தக் கட்சிக்கும் ஒரு பிரயோஜனமும் இல்லை. இந்த கலாட்டா எல்லாம் கட்சிகளில் யாருக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்று அறிந்துக்கொள்ள மட்டுமே. மம்தா காங்கிரஸை சப்போர்ட் செய்வதால் பத்தோடு பதினொன்று என்று ஆகிவிடுவார். ஆனால் காங்கிரஸை எதிர்த்தால் அவருக்குப் பல நன்மைகள் இருக்கிறது.


புரியவில்லை. என்ன என்ன நன்மைகள்?
2014 தேர்தலில் நிச்சயம் காங்கிரஸ் மண்ணைக் கவ்வ போகிறது. காங்கிரஸ்க்கு எதிராக உள்ள ஓட்டுக்களைச் சேகரிக்க சரியான எதிர்கட்சி இப்போது இல்லை. அன்னா ஹசாரே இப்போது ராம் தேவ்வுடன் தொப்பையை ஆட்டிக்கொண்டு இருக்கிறார். பிஜேபி தலைமை தங்களுக்குள் ஆட்டம் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். மோடியைப் பிரதமராக இவர்கள் நிறுத்துவார்களா என்ற சந்தேகம் கூட எனக்கு இருக்கிறது. ஆமாம் மோடி தான் எங்கள் பிரதம மந்திரி வேட்பாளர் என்று ஏன் இன்னும் சொல்லாமல் இருக்கிறார்கள் ? மம்தா இப்போது UPA கூட்டணியிலிருந்து வெளியேற முதல் படி இது. காங்கிரஸ் அல்லாத கூட்டணியில் சேர்ந்துக்கொண்டு ஜெயிக்கதான் இந்தக்கூத்து எல்லாம்.

பிஜேபி ஏன் வாயை முடிக்கொண்டு இருக்கிறார்கள்?
பிஜேபிக்கு ஒரு நிலையான கொள்கை இல்லை. காங்கிரஸ் கூட்டணி ஊழல் கட்சி. அவர்கள் நிறுத்தும் எந்த உத்தமரையும் ஆதரிக்க மாட்டோம் என்று தைரியமாக சொல்ல வேண்டும். சொல்லவில்லை. சொல்ல மாட்டார்கள். மம்தாவிற்கு இருக்கும் தைரியத்தில் ஒரு சதவீதம் கூட இவர்களுக்கு இல்லை.

மம்தா நிச்சயம் காங்கிரஸ் கூட்டணியில் சேர மாட்டாரா? அப்படி என்றால் கூட்டணியில் இருக்கிறேன் என்று இன்று சொல்லியிருக்கிறாரே?
2014ல் இருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். ஜெகனுக்கு வாழ்த்துச் சொல்லி இதை உறுதிப்படுத்திவிட்டார். இப்போது கூட்டணியில் இருந்தால் மேலும் குடைச்சல் கொடுத்து இன்னும் வெறுப்பேத்தலாம். திமுக இப்போது கூட்டணியில் இருந்துக்கொண்டு சும்மா போராட்டம் என்று காலை சொல்லிட்டு, மாலை அப்படிச் சொல்லவே இல்லை என்று விளையாடவில்லையா? அது போல தான்.


திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருப்பது அவர்களுக்கு பிரயோஜனம் இல்லையா?
ஒரே நன்மை டி.ஆர்.பாலு டெல்லி போனால் சோனியா காந்தி, மன்மோகன் சிங்கிற்கு ஒரு மஞ்சள் சால்வை கிடைக்கிறது. அவ்வளவு தான்.


புதனன்று மம்தாவுடன் கலாம் என்று சொல்லிவிட்டு அடுத்த நாள் பல்டி அடித்துவிட்டாரே? இது சரியா?
என்ன சார் இவ்வளவு அப்பாவியா இருக்கிறீர்கள்? இது அரசியல். அவ்வளவு தான். மம்தாவுடன் பேசிவிட்டு சோனியா காந்தி வீட்டு இன்னொரு கதவு வழியாக போய் டிலீங் செய்தேன் என்று இன்று சொல்லியிருக்கார் முலாம் பூசின சிங். இவரை சிபிஐ கொஞ்ச நாளைக்கு ஒன்றும் செய்யாது. இவ்வளவு ஏன்? மாயாவதி கூட இதற்கே காத்துக்கொண்டு இருந்தவர் போல, பிரணாப் என்று சொன்னவுடன் எழுதி வைத்ததை 30 நிமிடத்தில் மீடியாவிற்கு முன்னால் ஒப்பித்துவிட்டார். இனி அவரையும் சிபிஐ ஒன்றும் செய்யாது.

சிதம்பரம் ஏன் சைலண்டா இருக்காரு? சந்தோஷமா சோகமா?
சிதம்பரம் போட்ட (ராஜ கண்ணப்பன் தொடுத்த தேர்தல் வழக்கில் போட்ட) மனுவைத் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். இந்த தீர்ப்பு இவருக்கு setback என்று எல்லா மீடியாவும் சொன்னது. ஆனால் அது ராஜ கண்ணப்பனுக்கு தான் பின்னடைவு என்று சொல்லியுள்ளார். பாவம் மனுஷன் பயங்கரமாக் குழம்பி போயிருக்கிறார். எனவே அவரை இந்த ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளாதீர்கள். இனி உளவு பார்க்கும் மைக்கை குடியரசு தலைவர் மாளிகையில் பார்க்கலாம்.


கலாமை கலகம் என்று அடித்த முகவை முமுக ஒன்றுமே கேக்கலையே ஏன்? இதுதான் மைனராட்டி தர்மமா?
ஹிந்துவைத் திருடன் என்று சொன்னார், ராமர் என்ன இஞ்சினீயராஎன்று கேட்டார். இதை எல்லாம் சீரியஸா எடுத்துக்கொள்ளக் கூடாது. நாளைக்கே அவர் வேறு ஒரு அர்த்தம் சொல்லுவார். முத்தமிழ் அறிஞர் அல்லவா ?. சங்கி மங்கி என்றால் என்ன மங்கி சங்கி என்றால் என்ன? எல்லாம் ஒரே அர்த்தம்தான். அது மாதிரிதான் இந்தப் பேச்சும்.


ராமதாஸ் திருமா இவர்கள் யாரும் கருத்தே தெரிவிக்கவில்லையே ஏன்?
சர்தாஜி ஜோக்ஸ்(கர்ஸ்) வடக்கே மட்டும் தான் இருக்க வேண்டுமா ?


மீடியா ஏன் முலாயம் சிங் செய்த இந்த பல்டியை கண்டுகொள்ள வில்லை?
ஆங்கில மீடியா முழுவதும் உள்ளூர காங்கிரஸ்கட்சிக்குதான் சப்போர்ட். வடிவேலு சொல்லுவதை போல "அவனா நீ" என்று இவர்களை பார்த்தால் சொல்ல வேண்டும்.

Read More...

Friday, June 15, 2012

புதிய டாப் 10 படங்கள்
























விரைவில்...

Read More...

ஒரு ஆஸ்பத்திரியில் ஒரு அப்பாவி! – சோ

பல வாசகர்கள் ‘சோவின் உடலுக்கு என்ன? குணமாகி விட்டதா? என்ன நடந்தது?’ என்றெல்லாம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘சோ’ ஆஸ்பத்திரியில் சுமார் 12 நாட்கள் இருந்து விட்டு, வந்தாகி விட்டது. தன்னுடைய அனுபவத்தை ‘சோ’ கூறுகிற கட்டுரை இது.


எம்.ஜி.ஆர். செத்துப் பிழைத்தவர். நான் உபதேச வெள்ளத்தில் மூழ்கி எழுந்தவன்.

ஆஸ்பத்திரியில் இருந்தாலும் இருந்தேன். ஓர் உபதேச மழையே என் மீது பொழிந்து விட்டது. எனக்கு உபதேசம் செய்யாதவர்களே யாரும் கிடையாது. எனக்கு வந்த நோய் ஒருபுறம் இருக்கட்டும். இந்த உபதேசப் பிரளயத்தைப் பார்ப்போம்.


என்னைப் பார்க்க வந்து சுமார் அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, இறுதியில் ‘இதோ பார்! யார் கிட்டேயும் அநாவசியமா பேசிக்கிட்டிருக்க வேண்டாம். யார் வந்தாலும் அஞ்சு நிமிஷத்துலே திருப்பி அனுப்பிடு. பேசாம படுத்துக்கிட்டிரு. அவங்களா போயிடுவாங்க. இல்லேன்னா அவனவன் அரை மணி நேரம் உட்கார்ந்துடுவான். அதுக்கு இடம் கொடுக்காதே. அது உனக்கு நல்லதில்லை. என்ன! போயிட்டு வரட்டுமா?’ என்று சொல்லி போனவர்கள் பலர்.

‘என்ன! போய்ட்டு வரட்டுமா?’ என்று எழுந்து நின்று, ஏதோ ஒரு யோசனை வந்தவர்களாக, சற்று நின்று ‘பேஷண்டை சும்மா தொந்திரவு பண்ணக் கூடாது. அந்த இங்கிதம் நிறைய பேருக்குத் தெரியறதில்லே!’ என்று பிரகடனம் செய்து விட்டு, மீண்டும் உட்கார்ந்து விட்டவர்கள் சிலர். இவர்கள் இருந்த அரைமணி நேரத்தில் பலவித உபதேசங்கள்.

‘இதோ பாரு! இந்தக் காலத்திலே டாக்டர்களை எல்லாம் நம்ப முடியாது. எல்லோரும் பணம் பண்றவங்க. அதுக்காக இல்லாத வியாதிக்கெல்லாம் மருந்து கொடுத்துக்கிட்டு இருப்பாங்க. நீதான் ஜாக்கிரதையா இருக்கணும்’.

இவர் போய், அடுத்து வருகிறவரின் உபதேசம், ‘டாக்டர் சொல்றபடி அப்படியே கேள். நமக்குத்தான் தெரியும்னு நினைச்சுக்கிட்டு எதையும் செய்யாதே. கண்டவன் சொல்றதை நீ கேக்காதே. டாக்டர் சொல்றதை அப்படியே கேளு.’

இன்னொரு ரகத்தினரின் உபதேசம் இப்படி: ‘நம்ம உடம்பு பத்தி நமக்குத் தெரியாதது, டாக்டருக்குத் தெரியுமா? அவங்க தெரிஞ்ச மாதிரி பேசறாங்கன்றதுக்காக அதை அப்படியே ஒத்துக்கக் கூடாது. நீ இன்டர்நெட் போட்டுப் பாரு. அவங்க சொல்ற டேப்லட், கேப்ஸ்யூல்... இதுக்கெல்லாம் என்ன எஃபெக்டுன்னு பாரு. அதோட ஸைடு எஃபெக்ட் பாத்தியானா உனக்கே பயம் வந்துரும். இந்த மாத்திரைய சாப்பிடறதாலே நல்லதா, இல்லே பெரிய ஆபத்தா அப்படின்ற கேள்வி வரும். அதனாலே ஒரு டாக்டர் சொல்றதோடு விட்டுடாதே. அவர் சொல்றதை நீ செக் பண்ணு. செகண்ட் ஒபினியன் கேளு. சில சமயம் தேர்ட் ஒபினியன் கூட தேவைப்படும். என்னா? ஜாக்கிரதை. என்ன? நான் போய் என் டாக்டரைப் பாக்கணும். இரண்டு வேளையா ஒரே வயத்து வலி. என்னன்னே புரியலை. அவரு மருந்து கொடுத்தார்னா டக்னு குணமாகும். போய்ட்டு வரட்டுமா, போறேன்’.

உபதேச வகைகள் இத்துடன் முடியவில்லை. இது வேறு வகை: ‘இந்த டாக்டர்ஸெல்லாம் ஆன்டிபயாடிக் கொடுப்பான். அது பெரிய விஷம். உடம்பை உருக்கிடும். இந்தக் கிருமிகள் எல்லாம் இருக்கே.... ரொம்ப இன்டெலிஜன்ட். அது இந்த ஆன்டிபயாடிக்குக்குப் பழகிடும். அப்புறம் அதுக்கு ஒரு இன்னொரு ஆன்டிபயாடிக் கொடுப்பான். அந்தக் கிருமி எல்லாம் அதுக்கு பழகிடும். அப்புறம் வேறொரு ஆன்டிபயாடிக் கொடுப்பான். அப்புறம் அதுக்கும் பழகிடும். இப்படியே இது போய்க்கிட்டே இருக்கும். அதனாலே இந்த டாக்டர்ஸே வேண்டாம். நீ பேசாம ஆயுர்வேதிக் ட்ரீட்மென்ட் எடுத்துக்கோ. ஒரு ஆபத்தும் கிடையாது. என்ன...! ஸ்லோ ப்ராஸஸ்! அவ்வளவுதான். பட், அதைப் பத்தி பரவாயில்லை. ஆறு மாசம், ஒரு வருஷம் ட்ரை பண்ணு. நல்ல எஃபெக்ட் இருக்கும். சூரணம், லேகியம், பஸ்பம் எல்லாம் கொடுப்பான். அதைச் சாப்பிடு. நல்ல பத்தியம் இரு. உனக்கு நிச்சயம் குணமாகும். வீணா இந்த மாடர்ன் மெடிஸன் வேண்டவே வேண்டாம்’ என்று ஒருவர்.

அடுத்த விஸிட்டர் : ‘இதோ பாரு! எவனாவது சொல்றான்னு கேட்டு, ஆயுர்வேதிக், சித்தா மெடிஸன் இதுக்கெல்லாம் போயிடாதே. வீண் வம்பு! சும்மாவானா எதையாவது கொடுத்துட்டிருப்பாங்க. ஒண்ணும் எஃபெக்ட்டே இருக்காது. கேட்டா இதெல்லாம் ஸ்லோ ஆக்டிங். நாங்க நோயை குணப்படுத்துறது மாத்திரம் அல்ல. இந்த நோயோட மூலத்தையே குணப்படுத்துறோம்னு சொல்வான். என்ன மூலத்தை குணப்படுத்துறது? இவங்களாலே வெறும் மூலத்த கூட குணப்படுத்த முடியாது. அதனால நீ அந்தப் பக்கமே போகாதே. நீ மாடர்ன் மெடிஸன்ஸையே நம்பு. அதுக்கு கைமேல பலன். ஒரு மாத்திரை போட்டியானா தலைவலி நிக்கறது, இன்னொரு மாத்திரை போட்டியானா வயித்து வலி நிக்கறது. அந்த அளவு ரிசர்ச் பண்ணியிருக்காங்க. அதனாலே நீ மாடர்ன் மெடிஸனை நம்பு. ஆயுர்வேதிக் எல்லாம் போய் மாட்டிக்காதே.’

அடுத்த உபதேசகர் இயற்கையின் நண்பர் : ‘பாரு! நான் சொன்னா நீ ஏத்துக்குவியோ இல்லியோ எனக்குத் தெரியாது. இந்த மாதிரி கபம், ஜுரம், உடம்பு வலி, குளிர் இதுக்கெல்லாம் பெஸ்ட் மெடிஸன் என்ன தெரியுமா? முடக்காத்தான் கீரையை எடுத்து, அதை நல்லா கிள்ளி, கடக்காத்தான் கீரையை போட்டு, அதையும் கலந்து, ஊதுவளை பிழிஞ்சி, வௌக்கத்தான் கீரையை கலந்து, கானாடுகாத்தான் காயை எடுத்து, அதை நல்ல சூரணமா அரைச்சு, இதை கஷாயமாக்கணும். ‘அதுக்கப்புறம்தான் விஷயமே இருக்குது. அதை அப்படியே வெச்சிரு. ஊறட்டும். இன்னொரு டம்ளர்லே என்ன பண்றே – ஆட்டுப் பாலை எடுத்துக்கோ! ஆட்டுப் பால்ல நீ நல்லா கோமியத்தைக் கலந்துக்கோ. அதுலே களாக்கா, எருக்கம் பூ இல்லே – எருக்கம் இலை – எருக்கம் பூ விஷம். அதைப் போட்டுக்காதே – எருக்கம் இலையை போட்டுரு. முன்னே வெச்ச பாரு கஷாயம்! அதை இதுலே போடு. அப்படிப் பண்ணியானா...’ என்னாகும் என்று அவர் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. எனக்கே புரிந்துவிட்டது. அதோடு வியாதி தீர்ந்தது. நானும் தீர்ந்தேன் என்று நினைத்துக் கொண்டேன்.

அடுத்தவர், வருவார். ‘டேய்!’ சுற்றுமுற்றும் பார்த்தார். ரூமில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டார். என்ன இருந்தாலும் ரூமில் யாரும் இல்லை. அவர் பேசுவதை நாற்காலி, கட்டில், டேபிள் போன்றவை கேட்டுவிடக் கூடாது என்பதுபோல், குரலை தாழ்த்திக் கொண்டார். ‘எவனோ ஏவல் வெச்சுப்புட்டான். உனக்கு வேண்டாதவன் நிறையப் பேர் இருக்கான். அவன்ல ஒருத்தன் ஏவல் வெச்சுட்டான். நான் விசாரிச்சுட்டேன். உன் நட்சத்திரத்துக்கு ஏவல்தான். தீர்மானமா சொல்லிப்புட்டான். இதுக்கு நாம என்ன செய்யணும்னா, உளுந்தூர்பேட்டையிலே ஒரு சாமியார் இருக்கார். அவர் கிட்டே போனா, நெத்தியிலே ஒரு எலுமிச்சம் பழத்தை வெச்சு ஒரு அடி அடிப்பார். அதை நசுக்கி அந்தச் சாறை எடுத்து, அவர் குடிச்சுடுவார். நம்ம மேலே வெச்ச ஏவல் எல்லாம் அவர்கிட்டே போயிடும். அவர் தாங்கிப்பார். அப்பேர்ப்பட்ட சித்தர். நேத்து உளுந்தூர்பேட்டையிலே இருந்தார். இன்னைக்கு எங்கே இருக்கார்னு தெரியாது. அவரைக் கண்டுபிடிச்சிட்டோம்னா அவ்வளவுதான். சூன்யத்தை எடுத்துடுவாரு. நமக்கு ஜெயம்தான். ஆனா, அவரை கண்டுபிடிக்க முடியாது.’ அடுத்தவர் வருவார். இவர் ஒரு மாடர்ன் ஆசாமி. ‘நம்மூர் ஆஸ்பிடல்களே பிரயோஜனம் இல்லடா. நம்மூர் டாக்டர்ஸும் பிரயோஜனம் இல்லை. இதை நம்பி என்ன பண்றது? பெரிய மனுஷங்களுக்கு உடம்புக்கு வந்தா என்ன பண்றாங்க? சிங்கப்பூர் போறாங்க, அமெரிக்கா போறாங்க. ஏன்? அங்கெல்லாம் நல்லா க்யூர் கிடைக்குது. அதனாலே நீயும் செலவப் பாக்காம, சிங்கப்பூர், அமெரிக்கானு எங்காவது போய் ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டு வா. அதான் பெஸ்ட்’.

‘செலவைப் பாக்காம...’ என்று அவர் சுலபமாகச் சொல்லி விட்டார். யார் செலவு? அது என் செலவு. அடுத்தவர், ‘இந்த ஏஜ்ல இப்படித்தான்டா வரும். நீ என்ன சின்னப் பையனா? அப்படித்தான் வரும். அதெல்லாம் சமாளிச்சுக்க வேண்டியதுதான். என்ன பண்றது? அவ்வளவுதான். என் சித்தப்பா ஒருத்தர் இருந்தார். அவருக்கு கிட்டத்தட்ட உன் வயசுதான். ஏதோ ஜுரம்ன்னாரு. அதுக்கெல்லாம் மருந்தெல்லாம் வாங்கி கொடுத்தோம். ரெண்டே நாள்! போய்ட்டார். ஸோ, இதுக்கெல்லாம் கவலைப்படாதே! என்ன இப்போ? வெறும் ஜுரம்தானே! மருந்து கொடுத்தா சரியாப் போயிடும். ரெண்டே நாள்!’ அடுத்தவர் என்னைப் பார்த்து திடுக்கிட்டு விட்டார். ‘டேய் என்னடா இது! இப்படி இளைச்சுப் போயிட்டே? மூஞ்சி வாடிப் போயிடுச்சு! உடம்பே எலும்பும் தோலுமா இருக்கு! என்னடா இது! என்ன ஆச்சு உனக்கு? பாத்தாலே பயமா இருக்கேடா! டேய்! என்ன பண்ண போறே நீ? சரி, சரி! பாத்துக்க ஒண்ணும் ஆகாது. ஒண்ணும் கவலைப்படாதே! ஜாலியா இரு! நேத்து இருந்தவன், இன்னிக்கு இல்லை! அதுக்காக பார்த்தா முடியுமா? தைரியமா இரு! கவலை கூடாது.’

அடுத்தவர் ‘இதோ பாரு! நிறைய ஃப்ரூட்ஸ் சாப்பிடு. தேன்ல பலாப்பழத்தை தோய்ச்சு சாப்பிட்டா, ரொம்ப ஹெல்த்தியா இருக்கும். ப்ரோட்டின் சாப்பிடு. நிறைய ப்ரோட்டின். அப்பப்ப அரைமணிக்கொரு தடவை பால்ல கலந்து புரோட்டின் பவுடர் சாப்பிடு. அதோட விட்டுடாதே. இளநீர் நிறையச் சாப்பிடு. ஒருநாளைக்கு ஏழு தடவை இளநீர் சாப்பிடு. வாட்டர் முக்கியம். ஒருநாளைக்கு எட்டு லிட்டர் குடிக்கணும்னு சொல்றாங்க. அது முடியலைன்னா எய்ட் லிட்டர்ஸாவது குடி. சாப்பிடு. அப்புறம் இந்த பாதாம் பருப்பு, வால்நட், பிஸ்தா இந்த மாதிரி நட்ஸ் எல்லாம் சாப்பிடு. மருந்தை விட இதெல்லாம்தான் குணம் தரும். ஏன்னா உடம்புலே ஸ்ட்ரென்த் வரும்.’

இவர் சொல்வதைக் கேட்டால், காலையிலிருந்து இரவு வரை சாப்பிடுவதற்குத்தான் நேரமிருக்குமே தவிர, வேறெதற்கும் நேரம் இருக்காது என்று எனக்குத் தோன்றியது. அடுத்தவர் பரோபகாரி. ‘மிளகு ரசத்திலே சீரகத்தைப் போட்டு, வெந்தயத்தைப் பொடி பண்ணி கலந்து, இஞ்சி கரைச்சு விட்டு, பெருங்காயத்தைப் போட்டு, புதினா இலையை நல்லா கசக்கிப் பிழிஞ்சி, அதையும் கலந்து, எலுமிச்சம் பழத்தை ஊத்தி.... கலந்த ரசம் இந்தா இதைச் சாப்பிடு. இதை முந்தா நேத்துக்கு முன் நாளே என் வொய்ஃப் என்கிட்டே கொடுத்தா. மறந்து போய் எங்கேயோ வெச்சுட்டேன். அப்புறம்தான் தெரிஞ்சது. கண்டுபிடிச்சேன். அதான் இருக்கட்டுமேன்னு கொண்டு வந்தேன். சாப்பிடு. ஜம்முன்னு இருக்கும். போய்ட்டு வரட்டுமா? திரும்பி வரேன் நானு’

அடுத்தவர் ‘என்னடா, கலைஞர் எப்படிப் பேசியிருக்கார் பாத்தியா? என்ன அர்த்தத்திலே அவர் பேசறாருன்னு புரியலையே? சி.எம். செய்யுறதுல்லாம் சரின்னுதான் நினைக்கிறீயா? சென்ட்ரல்ல என்ன ஆகும்னு நினைக்கிறே? பிரணாப் முகர்ஜி பிரசிடென்ட்டா வருவாரா? இல்லே அவரை கேபினட்ல இருந்து விடக் கூடாதுன்னு தீர்மானம் பண்ணுவாங்களா? என்னமோ தெரியலே! இந்த சைனாக்காரன் வேறே கொஞ்சம் கொஞ்சமா உள்ளுக்குள்ளே வந்துக்கிட்டே இருக்கான். இந்தியன் கவர்ன்மென்டே கவனிக்க மாட்டேங்குது. பாகிஸ்தான்காரனை பாரு! இந்த விஸா எல்லாம் தளர்த்த வேண்டாம்னு சொல்லிட்டான். சரிடா டேய்! உனக்கு இப்ப பாலிடிக்ஸ் எல்லாம் வேணாம். பாலிடிக்ஸ் எல்லாம் அநாவசியமா எதுக்கு உனக்கு? ஏன்டா, உனக்கு பாலிடிக்ஸ்..? இப்ப அதான் கவலையா உனக்கு? அதை மறந்துட்டு கொஞ்சம் பேசாம இரேன். அதான் நல்லது! வரட்டுமா? நியூஸ் பாக்கணும். பிரணாப் முகர்ஜி ஸ்டேட்மென்ட் வரப் போகுதுன்னு ஒருத்தன் சொன்னான். போய்ட்டு வரட்டுமா? பாலிடிக்ஸ மறந்துடு. வேண்டாம் உனக்கு.’

இதுக்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல், ஒருவர் ஒன்று சொன்னார். ‘இதெல்லாம் எதனால நமக்கு வருதுன்னு நினைச்சே? நீ என்ன மருந்து சாப்பிட்டாலும் இதெல்லாம் சரியாப் போகாது. இதை அனுபவிச்சுட வேண்டியதுதான். போன ஜன்மத்து பாவம்! வேற வழி கிடையாது. அனுபவிச்சுத்தான்டா ஆகணும். அது, தானா சரியாப் போகிற வரைக்கும் நீ என்ன்னா மருந்து சாப்பிட்டாலும் சரியாப் போகாது. நாமெல்லாம் இந்த யுகத்துலே கொஞ்சநஞ்ச பாவமா பண்ணியிருக்கோம்? அத்தனையும் அனுபவிக்க வேண்டாமா? அதுலே கொஞ்சம் கழியறது இப்படி! அதை நினைச்சு சந்தோஷப்படு. பாவம் 100 பர்சன்ட் இருந்தா, இந்த ஜுரத்துலே ஒரு பர்சன்ட்டாவது போகாதா?’ இன்னும் கொஞ்சம் தாராளமாக, இந்தப் பாவத்தில் 50 பர்சென்ட் போகும் என்று அவர் சொல்லியிருந்தாலாவது நிம்மதியாக இருக்கும். அதுகூட இல்லை. ஒரு பர்சன்ட்தான் போகும் என்று சொல்லி விட்டுப் போனார்.

இப்படிப் பல உபதேசங்கள்.

நெஞ்சில் கபம் இருந்ததால், அதை எடுக்க ஃபிஸியோதெரபிஸ்ட்கள் என்னை மார்பில் அடித்தார்கள். ‘பட் பட் பட்’ என்று நல்ல அடி. ஆண்கள் செய்கிற வரையில் இது சரியாகப் போயிற்று. ஒரு பெண் வந்து நன்றாக அடித்தார். அவர் அடித்து முடித்த பிறகு, அவரிடம் ‘அம்மா உனக்கு ஒரு வேண்டுகோள்’ என்றேன்.
‘என்ன ஸார்?’ என்று அவர் கேட்டார்.
‘என்னை அடித்ததை வெளியே சொல்லி விடாதீர்கள். பொம்பளையிடம் அடிபட்டவன் என்ற பெயர் வரும். தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன்.
அந்த அம்மையார் பெருந்தன்மையுடன் ‘நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்’ என்று சொல்லிவிட்டுப் போனார்.



அடுத்ததாக வந்த ஆள், ‘அந்த அம்மா வந்து உங்களை மார்லே பட் பட் பட்டுன்னு நல்லா அடிச்சுட்டாங்களாமே!’ என்று கேட்டார்.
‘யார் உங்களுக்குச் சொன்னது?’ என்றேன்.
‘அவங்கதான் சொன்னாங்க’ என்றார்.
சரி, ஒரு உபதேச வெள்ளத்தில் மூழ்கி எழுந்தேன். ஒருவழியாக உடல் குணமாகி, வீட்டிற்குச் செல்வதற்காக லிஃப்ட்டில் ஏறினேன்.
லிஃப்ட் பாய் ‘சார் வணக்கம்!’ என்றான்.
‘வணக்கம்’ என்றேன்.
‘உடம்பு நல்லாயிடுச்சா?’ என்றான்.
‘நல்லாயிடுச்சு’ என்றேன்.
‘போய்ட்டு வாங்க சார். எப்ப சார் திரும்பி வருவீங்க?’ என்றான்.
நல்ல ஆசி! என்று நினைத்து விடைபெற்றேன்.

இதற்கிடையில், என்னைக் கவனித்த டாக்டர்கள், டாக்டர் ராஜ்.பி.சிங்; டாக்டர் ராமசுப்ரமணியம்; டாக்டர் பிரபாகர் தியாகராஜன் தவிர - டாக்டர்கள் ரங்கபாஷ்யம், பாலசுப்ரமணியம், கணேஷ், ஸ்ரீதரன், விஜய் சங்கர் போன்றவர்கள் காட்டிய அக்கறையும், திறமையும் அசாத்தியமானது. ஏதோ தங்கள் வீட்டில் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு விட்டதைப் போல், அவ்வளவு அக்கறை காட்டினார்கள். அவர்கள் மட்டுமல்ல, அப்பல்லோவின் அதிபர் டாக்டர். பிரதாப் சி.ரெட்டி மற்றும் அவருடைய மகள் ப்ரீதா ரெட்டி உட்பட – அங்கிருந்த லிஃப்ட் பாய் வரை, என்னிடம் காட்டிய பரிவும், அக்கறையும் என்றும் மறக்க முடியாதவை. டாக்டர்களின் திறமை, அவர்களுடைய அனுபவம் என்னை மீண்டும் இயங்க வைத்தது. இதற்கிடையில், அப்படி இப்படி சமாளித்து, ‘துக்ளக்’ இதழை வெளிக்கொண்டு வர ‘துக்ளக்’ காரியாலயத்தில் உள்ளவர்களும் மிகவும் உதவினார்கள். கட்டுரைகளை சரி பார்ப்பது, தலையங்கம் எழுதுவது போன்ற வற்றைச் செய்தாலும், கேள்வி-பதில் எழுத முடியவில்லை என்பதால், இரண்டு இதழ்களில் அதை நிறுத்தினேன். அதில் வாசகர்களுக்கு வருத்தம் உண்டு. எனக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. இதைத் தவிர, வாசகர்கள் எத்தனை பேர், எனக்காக வேண்டிக் கொண்டார்கள், எத்தனை பேர் கோவில்களில் அர்ச்சனை செய்தார்கள், பிரசாதங்களை அனுப்பினார்கள் என்ற கணக்கைப் பார்த்தால், அதற்கு முடிவே கிடையாது. அத்தனை பேர் அவ்வளவு அக்கறை காட்டியிருக்கிறார்கள். ஒரு வாசகருடைய தகப்பனார் வந்து, என்னுடைய கையை பிடித்துக் கொண்டு, அழுது தீர்த்துவிட்டார். ‘எனது உயிர் போகட்டும், நீங்கள் பிழைக்க வேண்டும்’ என்றார் அவர். அப்படி ஒன்றும் என் உயிருக்கு ஆபத்து நேரிட்டு விடவில்லை. ஆனால் அவருக்கு அவ்வளவு ஆதங்கம்! சில பெரிய மனிதர்கள், விவரஸ்தர்கள் வந்து அழுதார்கள்! என் நண்பன் ஒருவன் கதறித் தீர்த்து விட்டான். இத்தனைக்கும் எனக்கு வந்த நோய் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியதே அல்ல.




முதல்வர் வந்து பார்த்தார். ஏற்கெனவே எனக்குக் கிடைத்த மரியாதை, பல மடங்கு கூடிவிட்டது. நான் ஒரு VIP ஆகி விட்டேன். Very Important Patient! ஓரிரு நாளைக்கு மேல் தொடர்ந்து படுத்தவன் இல்லை என்பதால், இந்த மாதிரி ஒரு மாதம் நீண்டு விட்ட நோய், எல்லோரையும் மிகவும் பாதித்து விட்டது. ஆளும் கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்கள், பல முக்கியஸ்தர்கள், நண்பர்கள், வாசகர்கள் என்று நேரில் வந்து பார்த்தவர்களுக்கும், பல வகைகளில் விசாரித்தவர்களுக்கும் வந்த வருத்தம், அவரவர்களைச் சூழ்ந்து விட்ட சோகம், கவலை எல்லாம் என்னை மிகவும் சிறிய மனிதனாக்கி விட்டது. நான் யோசித்துப் பார்த்தேன். ‘நாம் என்ன செய்து விட்டோம்? ஒரு பத்திரிகை நடத்துகிறோம். அதில் நமது கருத்துக்களை எழுதுகிறோம். அதை விற்கிறோம். பணம் சம்பாதிக்கிறோம். எழுதுகிற கருத்துக்கள் விலை போகாதது என்று சொல்லலாமே தவிர, அதற்கு ஒரு விலை வைத்து நான் லாபம் சம்பாதிக்கிறேன் என்பதை மறுப்பதற்கில்லை. அப்படிப்பட்டவனுக்கு இவ்வளவு பேர் அன்பும் பாசமும் காட்டுகிறார்கள் என்றால், அது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்!’ அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் என்று முன்பு நான் ஒரு புஸ்தகம் எழுதினேன். அதில் நான் கூறிய அதிர்ஷ்டங்களை எல்லாம் விட இப்படிப்பட்ட வாசகர்களைப் பெற்றிருக்கிறேனே, அதுதான் என் அதிர்ஷ்டம்!

ஆஸ்பத்திரியில் ஒரு தீர்மானத்திற்கு வந்தேன். ‘டாக்டர்கள் காட்டிய கருணையும் பரிவும், ஒருபுறம்; வாசகர்கள் காட்டிய அன்பு, அக்கறை – இவையெல்லாம் சேர்ந்து நாம் இதற்கு தகுதிதானா என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் என் மனதில் எழுப்பிக் கொண்டே இருந்தன. என்ன தகுதி இருக்கிறதோ, இல்லையோ, நாம் முடிந்தவரை இனி நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தேன்.

உத்தரேத் ஆத்மன் ஆத்மானம்
நாத்மானம் அவஸாதயேத்




‘தானேதான் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். தானே தன்னைத் தாழ்த்திக் கொள்ளக் கூடாது’ என்ற தீர்மானத்துடன், இனி இதுவரை இருந்ததை விட, ஓரளவாவது (பெருமளவில் முடியாது என்பது தெரியும்) நல்ல மனிதனாக உயர வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தேன்.

இது நன்றிப் பிரகடனம்!


நன்றி சொல்ல ஆரம்பித்தால், அதற்கு முடிவே இருக்காது போலிருக்கிறது. அவ்வளவு பேர்! அவ்வளவு நல்லவர்கள்! என்னிடம் பரிவு காட்டினார்கள்; அக்கறை காட்டினார்கள். முதலில் ஏதோ காய்ச்சல் என்று நினைத்துக் கொண்டு, நானாக எனக்குத் தெரிந்த மருந்துகளை வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அதில் ஆன்டிபயாடிக் மருந்தும் உண்டு. பத்து நாளில் உடம்பு நன்றாகக் கெட்டது. அதன் பிறகு ஜுரம், ஹை ஃபீவர், கபம், உடம்பு வலி, குளிர் என்று எல்லாம் வந்து விட்டன. இனி நம் வைத்தியம் செல்லாது என்று தீர்மானித்து டாக்டரிடம் போனேன். டெஸ்ட்கள் செய்தார்கள். சில மருந்துகளைக் கொடுத்தார்கள். இரண்டு மூன்று பேர் ஒருவருக்கு ஒருவர் கலந்து ஆலோசித்து மருந்துகள் கொடுத்தார்கள். இன்ஜெக்ஷன்கள் கொடுத்தார்கள். இப்படி பத்து நாள் போயிற்று.

இருபது நாளாயிற்று. உடம்பு சரியாகவில்லை. ஒரு ஸ்பெஷலிஸ்டிடம் அனுப்பினார்கள். அவர் அன்றே அப்போதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறிவிட்டார். அப்பல்லோவில் போய்ச் சேர்ந்தேன். இதற்கு முன்னால் நான், நோய் என்று ஆஸ்பத்திரியில் போய் படுத்ததில்லை. அங்கே சிகிச்சை ஆரம்பித்ததில் சுமார் ஐந்து நாட்களில் எல்லாம் சரியாகி விட்டது என்று நினைத்தபோது, ஏற்கெனவே எனக்கு இருந்த மூச்சு இரைப்பு மட்டும் போகவில்லை. இரவு தூக்கம் கிடையாது. அவ்வளவு மூச்சிரைப்பு. அதற்காக ‘லங் ஸ்பெஷலிஸ்ட்’டை கன்ஸல்ட் செய்ய வேண்டி வந்தது. மீண்டும் அப்பல்லோ! அங்கு சிகிச்சை தொடங்கியது. லங் ஸ்பெஷலிஸ்டுக்கு உதவியாக மனோதத்துவ ரீதியில் எனக்கு இருக்கக் கூடிய மன அழுத்தங்கள் விலக வேண்டும் என்பதற்காக, ஒரு டாக்டர்! இப்படி மூன்று டாக்டர்கள் கவனித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மூச்சிரைப்பு குறைந்தது. இரண்டாவது முறை கிட்டத்தட்ட 8 நாட்களுக்கு மேல் அப்பல்லோவில் இருந்தேன். பிறகு வீடு திரும்பினேன்.

நன்றி: துக்ளக்

Read More...

Thursday, June 14, 2012

முடிவுகள் நாளைக்கு


படத்தில் இருக்கும் சின்ன இடை யாருடையது ?




இடைத்தேர்தல் முடிவுகள் வந்த வண்ணம் இருக்கிறது இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் இடை சின்னதாக இருந்தாலும் வெற்றி பெரிதாக இருக்கிறது. இட்லிவடை வாசகர்கள் இவரின் இடையை சரியாக கணித்துள்ளார்கள் !

Read More...

குடியரசு தலைவர் கேள்வி பதில்கள்

குடியரசு தலைவராக யார் வருவார் ?
இன்றைய தேதியில் யார் வேண்டும் என்றாலும் வரலாம். அடிக்கடி வெளிநாடு பயணம், நடு ராத்திரி கதவை தட்டினாலும் கையெழுத்து போட ரெடியாக இருக்கணும். அவ்வளவு தான்.

மம்தா, முலாயம் நேற்று அடித்த லூட்டி ?

பிரதமர் மன்மோகன் சிங், அப்துல் கலாம், சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோரில் ஒருவரைக் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பரிசீலிக்கலாம் என்று பேட்டி அளித்துள்ளார்கள். மம்தா ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்க பார்க்கிறார்.
முதல் மாங்காய்: மன்மோகன் சிங் பிரதமாரக இருக்க லாயக்கில்லை என்று அப்பட்டமாக சொல்லிவிட்டார்.
இடதுசாரிகள் மீது உள்ள கோபத்தால் சோம்நாத் சாட்டர்ஜி பெயரை கொண்டு வந்து அடுத்த மாங்காயை அடித்துவிட்டார்.
ஏற்கனவே வெளிநாட்டு பிரஜை சோனியா பிரதமராக வர கூடாது என்ற சர்ச்சையில் கலாம் பெயர் இருக்கிறது அதனால் சோனியாவையும் தாக்கிவிட்டார்.

மன்மோகன் சிங் என்ன செய்ய வேண்டும் ?
பேசாம தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாதையாத்திரை போகலாம்.

பிஜேபி என்ன செய்ய வேண்டும் ?
பிஜேபி தங்கள் உட்கட்சி பிரச்சனைகளை மறந்து கொஞ்ச நாள் ஜாலியாக இருப்பார்கள். பாவம் அவர்களை விட்டு விடுங்கள். அவர்களுக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம்

திமுக காங்கிரஸ் பக்கம் இருக்கிறதே ?
அவர்களுக்கு வேறு வழி இல்லை. 2G வழக்கு முன்பு இலாக்காவை டிமாண்ட் செய்து வாங்கியவர்களுக்கு சும்மா பூச்சாண்டி காமிப்பது பொழுது போக்கு. கசப்பான கூட்டணி என்று புலம்பினாலும் Beggars can't be choosers! ஆனால் நேற்று கலைஞர் "பொறுத்திருங்கள். பின்னர் அறிவிக்கிறேன். " என்று சொல்லுகிறார். நல்ல தமாஷ்!

பிரணாப் முகர்ஜி என்ன செய்வார் ?
அவர் நிதி அமைச்சராக இருக்கிறார் என்றே மறந்துவிட்டது. கூட்டணியில் குழப்பம் என்றால் இவர் தான் பஞ்சாயத்து செய்து வைப்பார். குடியரசு தலைவராகிவிட்டால் அந்த பொறுப்பை யார் கவணிக்க முடியும் ? மன்மோகன் சிங் குடியரசு தலைவர் என்றால் பிரணாப் தான் பிரதம மந்திரி!


மம்தாவை எப்படி காங்கிரஸ் சமாளிக்கும் ?
காங்கிரஸ் முன்னிறுத்தும் வேட்பாளரை ஒருமனதாகத் தேர்வு செய்ய பாஜக-வின் ஒத்துழைப்பையும் காங்கிரஸ் ரகசியமாகக் கோருவதாகத் தெரிகிறது. இதற்கு பிரதி உபகாரமாக குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு பாஜக நிறுத்தும் வேட்பாளரை ஒருமனதாகத் தேர்வு செய்ய காங்கிரஸ் ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எல்லாம் அரசியலில்...

அப்துல் கலாம் ?
அவர் தான் குடியரசு தலைவர் என்று நினைக்கிறேன். ஜெயலலிதா, கருணாநிதி என்று எல்லோரும் தமிழர் என்று ஆதரிப்பார்கள். மற்றவர்கள் மைனாரிட்டி என்று ஆதரிப்பார்கள். இந்திய அரசியல் இவ்வளவு தான்.

குடியரசு தலைவர் தேர்தல் எப்படி இருக்க வேண்டும் ?
ஐபிஎல் மாதிரி பெர்யர்களை ஏலம் விடலாம். இப்போழுதும் கிட்டதட்ட அது மாதிரி தான் நடந்துக்கொண்டு இருக்கிறது.


யார் தான் சரியான சாய்ஸ் ?
13 ராசியில்லாத நம்பர் அதனால் 13 குடியரசு தலைவர் தேர்வில் இவ்வளவு குழப்பம். நாளைக்கே பிரதிபா பாட்டீல் மாதிரி திடீர் வேட்பாளர் யாராவது வரலாம். நித்தியானந்தாவை கூட இவர்கள் தேர்ந்தெடுக்கலாம் !

Read More...

Tuesday, June 12, 2012

தலை சிறந்த இட்லிவடை பேட்டி !

த சன்டே இந்தியன் பத்திரிக்கையில் இட்லிவடை ( மற்றும் பேயோனின் ) பற்றி வந்த கட்டுரை.




கிளிக் செய்து பெரிதாக்கி படித்துக்கொள்ளுங்கள்.



தேசத்தின் தலை சிறந்த செய்தி இதழில் இட்லிவடை குறித்து வந்தது மகிழ்ச்சியளிக்கிறது, தசஇ குழுவினருக்கு நன்றி. எங்களை யார் என்று காட்டிக்கொடுக்காத பா.ராகவன், பத்ரிக்கு ஸ்பெஷல் நன்றி :-)

Read More...

Monday, June 11, 2012

ஹையோ ஹையோ !


காங்கிரஸுக்கு மஞ்சள் காமாலை வந்து ரொம்ப காலம் ஆகிவிட்டது, பிஜேபி அந்த மஞ்சளையும் தாண்டி ஆரஞ்சுக்குப் போய் விட்டது.

Read More...

Sunday, June 10, 2012

கார்ட்டூன் அரசியல்



தேசியக் கல்வி ஆராய்ச்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள 12 -ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடர்பாக கேலிச் சித்திரத்துக்கு முதலில் வைகோ எதிர்ப்பு தெரிவித்தார், பின்னர் ராமதாஸ், வீரமணி என்று எல்லோரும் சேர்ந்துக்கொண்டார்கள். தற்போது திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த கார்ட்டூன் ஆ.கே.லக்ஷ்மனுடையது, இது வரைந்த காலகட்டத்தோடு இதை பார்க்க வேண்டும், போன வாரம் செய்த சாம்பார் ஊசி போய் இருக்கிறது என்று இவர்கள் இப்போது கண்டனம் தெரிவிப்பது நல்ல ஜோக். தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு பானி பூரி, பேல் பூரி என்று சாப்பிட்டுக்கொண்டு தான் இருக்கிறோம்...

தமிழர்களுக்கு சகிப்புத்தன்மை + நகைச்சுவை பார்சேல்!

Read More...

Friday, June 08, 2012

அண்ணன் - தம்பி



கோர்டில் ஆசிர்வாதம் ஆச்சாரி. இங்கே ஆச்சார்யன் ஆசிர்வாதம்.

Read More...

ஸம(ய)த்துவம்







ஸம(ய)த்துவம்

Read More...

Sunday, June 03, 2012

”மனம் திறந்த” மூன்று IPL5 மங்கையர் - கி.அ.அ.அனானி

எச்சரிக்கை - வயது வந்தவர்களுக்கு மட்டும் -இது ஒரு "ஏ" பதிவு

கி.அ.அ அனானி பற்றி பலருக்கு தெரிந்திருக்கலாம், பாலாவின் பதிவில் அடிக்'கடி' எழுதுபவர் ஆனால் பாலா கிடையாது. ஏன் என்றால் அவரை நான் பல முறை சந்தித்திருக்கிறேன் அவர் வீட்டில் காபி கூட சாப்பிட்டிருக்கிறேன்.

இவர் பாலாவின் நண்பர் என்பதாலோ என்னவோ இவரும் ஐ.பி.எல் சம்பந்தமாக பதிவு எழுத ஆரம்பித்துவிட்டார். போன வாரம் இவர் ஒரு கார்ட்டூன் அனுப்பியிருந்தார் பிறகு சில வாசககள் கண்டனம் தெரிவித்ததால் நீக்கினேன். ஓட்டு பதிவில் பலர் நீக்கியிருக்க தேவை இல்லை என்று சொன்னதால் அதை மீண்டும் இங்கே பிரசுரம் செய்கிறேன்.


நிற்க. வாசகர்களின் அமோக ஆதரவை பெற்ற இவர் எழுதிய அனுப்பிய பதிவிற்கும் ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கையில் இங்கே இங்கே பிரசுரம் செய்கிறேன்.
நன்றி
இட்லிவடை



பூனம் பாண்டே என்ற மாடல் அழகியை உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்தியா 50 ஓவர்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை ஜெயித்தால் திகம்பரர் மாதிரி போஸ் கொடுக்கத் தயார் என்று காபரா பண்ணிய கேபரே ஸ்டைல் அம்மணி, இந்தியா ஜெயித்ததும் ..சும்மா உல்லலாங்காட்டிக்கி..நம்ம வீரர்களை உற்சாகப் "படுத்துவதற்காக " அப்படிச் சொன்னேன் என்றெல்லாம் ரசிகர்களை வெறுப்பேற்றி ஜகா வாங்கி ரசிகர்களுக்கு அல்வா கொடுத்தாலும், சில பிகினி போஸ்கள் வாயிலாக “மனம் திறந்து” தனது இரக்க குணத்தையும் வெளிப்படுத்தினார்!

இப்போது ஐபிஎல் போட்டிகளின் போது கொல்கத்தா நைட் ரைடர்சையும் குறிப்பாக அதன் முதலாளி ஷாருக் கானையும் ஐஸ் வைப்பதற்காக அம்மணி அதே மாதிரி ஒரு டகால்டி ஸ்டேட்மென்ட் கொடுத்தார். அவர் நேரமோ ரசிகர்களின் நேரமோ தெரியவில்லை... கொல்கத்தாவும் ஜெயித்து விட்டது. ஆனால் இந்த முறை அம்மணி ரசிகர்களை ஏமாற்றவில்லை!!!??? இந்தப் போட்டோவை அவரது ட்விட்டரில் போட்டுவிட்டார். இதோட இல்லாம அம்மணி இது வெறும் ட்ரெயிலர்தான் மெயின் படம் வந்துக்கினே இருக்கு அப்படீன்னு பீதியைக் கிளப்பி விட்டுருக்காங்க, (ம்ம்ம்ம்...கூந்தலுள்ள சீமாட்டி பின்னியும் முடிவா..கொண்டையும் போடுவா) இதன் மூலம் ரசிகர்கள் பிறவிப்பலன் அடைந்ததிருக்கட்டும்.அம்மணி போட்டு வைத்திருக்கும் கணக்கும் ஒர்க்கவுட் ஆகுமா என்று அம்மணியும் காலமும் தான் சொல்ல வேண்டும்.

இதே போல சென்னை சூப்பர் கிங்ஸ்க்கும் ஒரு தீவிர ரசிகை மாடல் இருக்கிறார். ரோஸ்லின் கான் என்கிற இந்த ரோஜா முதலில் ஒரு டாப்லெஸ் போட்டோவை போட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தன் அன்பையும் ஆதரவையும் தெரிவிச்சிக்கிச்சு. அப்பால கப் கெலிச்சா ஒரு ஸ்பெசல் பிகினி ட்ரெஸ் போட்டோ ஷூட் உண்டு என்று ஒரு அதிரடியும் பண்ணிச்சு..ஆனா கொல்கத்தா ஜெயிச்சா சென்னை தோத்துத்தானேங்க ஆவணும்..அது தானே விதி...சென்னை ரசிகர்களுக்கு விசில் போட இந்தத் தடவை குடுத்து வைக்கலை..பாவம்..அடுத்த தடவை பார்க்கலாம். (இலவு காத்த கிளி??!!)

தான்யா அப்படீங்குற கன்னட நடிகை..ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி படத்துல எல்லாம் சைடு ரோல்ல தலை காட்டி இருக்குதாம். சென்னைல ரூம் போட்டு தமிழ் சினிமால தெறமை "காட்ட" தயாராயிக்கினு இருந்துச்சாம். ஐபிஎல் போட்டி நடக்கும் போது , பெங்களூரு அணி தோத்தததனால சென்னை அணிக்கு "ப்ளே ஆஃப்"ல் விளையாட வாய்ப்பு கிடைத்ததும் தான்யா குட்டி கடுப்பாகி " தமிழ்நாடு தண்ணீர் பிச்சை கேட்டது குடுத்தோம், மின்சாரம் பிச்சை கேட்டது,குடுத்தோம் இப்ப ஐபிஎல் போட்டில பிச்சை கேட்டு இருக்கிறது.அதையும் விட்டுக் கொடுத்தோம்" அப்படீன்னு ட்விட்டரிலோ /ஃபேஸ்புக்கிலோ பொட்டி தட்டியிருக்குது (நண்டு கொழுத்தா வளையில தங்காது).இதைத் தொடர்ந்து ஆளாளுக்கு ஆப்படிக்கத் தொடங்க அம்மணி மன்னிப்பு கேட்டது மட்டுமில்லாம சென்னையைக் காலி பண்ணிட்டு பெங்களூருக்கு அப்பீட் ஆயிருச்சு. அங்கன போயி இனிமே நான் சென்னைக்கு வரமாட்டேன்.. தமிழ்ப்படங்களில் நடிக்க மாட்டேன் அப்படீன்னு சொல்லிக்கிட்டு திரியுதாம்( ச்சீ..ச்சீ இந்தப் பழம் புளிக்கும் ). இதைக் கேள்விப்பட்டு தமிழ்த் திரையுலகில் ஒரு கூட்டம் கொந்தளிச்சுக் கொல வெறியோட திரியுதாம்.

இதைப் பேப்பரில் படித்த சீதா பாட்டி "இவதான் செத்த மூடிண்டு இருக்கப்படாதா " என்று சிலாகித்தாள். நான் திடுக்கிட்டு "எதைச் சொல்றீங்க ..பாட்டி" என்று கேட்டேன்.பாட்டி கடுப்புடன் "வாயைத்தாண்டா சொல்றேன் ப்ரும்மஹத்தி " என்றாள்.

கி.அ.அ.அனானி







மூன்று மங்கையர் படங்களை அனுப்பியிருந்தார் கி.அ.அ.அனானி, ஆனால் அவர்கள் யார் யார் என்று சொல்ல மறந்துவிட்டார். இட்லிவடை வாசகர்கள் இட்லிவடையை காட்டிலும் கெட்டிக்காரர்கள், சரியாக கண்டுபிடித்திவிடுவார்கள். படங்களை கிளிக் செய்தால் விவரமாக தெரியும்... கண்டுபிடிப்பது சுலபம்!

Read More...

செஸ் போட்டி - பரிசு அறிவிப்பு


செஸ் பதிவுகளை எழுதியது யார் ? என்ற போட்டியில் "It is by the same BALA" என்று எழுதிய சந்திரமௌளீஸ்வரனுக்கு பரிசு. வாழ்த்துகள்.
அவர் என்னுடைய ஈ-மெயிலுக்கு அவர் முகவரியுடன் தொடர்பு கொண்டால் பரிசு அனுப்பிவைக்கப்படும்.
நன்றி
அட பாலாவை திட்ட முடியாமல் போய்விட்டதே என்று வருத்தப்படுபவர்கள், இருக்கவே இருக்கு அடுத்த ஐபிஎல் :-)

Read More...

Friday, June 01, 2012

விஸ்வநாதன் ஆனந்த் - ஒரு செஸ் சகாப்தம்

நான் ஆனந்த்-கெல்ஃபாண்ட் உலக செஸ் சேம்பியன்ஷிப்பில் சில ஆட்டங்கள் குறித்து இட்லிவடையில் ஒரு வாரத்திற்கு முன்னர் எழுதியிருந்தது நினைவிருக்கலாம். இப்போது, ஆனந்த் உலக சேம்பியன் பட்டத்தை அடுத்த 2 வருடங்களுக்கு தக்க வைத்துக் கொண்டதற்குப் பிறகு எழுதுவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. 42 வயதில் ஆனந்த் பெற்ற இந்த இமாலய வெற்றிக்கு, அவருக்கு செஸ் மேல் எள்ளளவும் ஆர்வம் குறையாமல் இருப்பதே முக்கியக் காரணம் என்றால் அது மிகையில்லை. செஸ்ஸில் தொடக்க ஆட்ட ஆராய்ச்சியையும், கற்றலையும் செஸ் விளையாட்டின் மீது ஒரு வித காதலோடு அவர் செய்ததும், தொடர்ந்து செய்து வருவதுமே, அவர் பல சிகரங்களைத் தொட பெரிதும் உதவின. அதோடு, கடினமான தருணங்களில் ஒரு சேம்பியனுக்கே உரித்தான மன உறுதியும், தளரா நரம்புகளும் அவருக்கு பெரும்பலமாக அமைந்து வந்திருக்கின்றன. ஒரு மோசமான தோல்விக்குப் பின் 8வது ஆட்டத்தில், 17-ஏ நகர்த்தல்களில் கெல்ஃபாண்டை அவர் வீழ்த்தியது இதற்கு சிறந்த உதாரணம். கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட்டிடம் இத்தகைய குணங்களை காண முடியும்.



இதில், டெக்னிக்கலாக அதிகம் எழுதப் போவதில்லை. அவரது செஸ் வாழ்க்கையின் அருமை பெருமைகள் பற்றி கொஞ்சம் பேசுவோம். 12 பிரதம ஆட்டங்களில், புள்ளிகள் சமனாக இருந்த நிலையில் நேற்று நடந்து முடிந்த 4 ஆட்டங்கள் கொண்ட துரித ஆட்டத் தொடரை ஆனந்த் 2.5-1.5 என்ற புள்ளி எண்ணிக்கையில் வென்றார். திருமணத்திற்குப் பின் பல ஆண்டுகள் கழித்து சமீபத்தில் மகன் பிறந்ததால் அடைந்த மகிழ்ச்சிக்கு இணையான ஒன்றை இந்த ஐந்தாவது செஸ் உலகப் பட்டம் ஆனந்துக்கு அளித்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

2வது ஆட்டத்தில் வென்று, மற்ற 3 ஆட்டங்களையும் சுலபமாக டிரா செய்தார் ஆனந்த். இந்த நான்கு 20 நிமிட ஆட்டங்களிலும், கெல்ஃபாண்ட் நேரக்குறைவினால் ரொம்ப சிரமப்பட்டார். துரித ஆட்டத்தில் முடிசூடா மன்னராக விளங்கும் ஆனந்துக்கு அந்தப் பிரச்சினையே இல்லை. 2வது ஆட்டத்தில், நேரக் குறைவு தந்த அழுத்தத்தினால், சில சந்தேகத்துக்குரிய தேர்வுகள் செய்யும் கட்டாயத்துக்கு கெல்ஃபாண்ட் ஆளானார். ஆனாலும், ஒரு மகாபாரதப் போராட்டத்துக்குப் பின் தான், தனது பிஷப்பை ஒரு ஃபோர்க்கில் குதிரைக்கு ஈடாக இழந்த பின், வேறு வழியின்றி 77வது நகர்த்தலில் கெல்ஃபாண்ட் ரிசைன் செய்தார்.

http://www.dnaindia.com/sport/commentary_as-it-happened-wcc-2012-anand-takes-lead-in-tie-break-2_1695793

அது போலவே, நேரக் குறைவு தந்த அழுத்தத்தினாலேயே, 3வது ஆட்டத்தில் முன்னணியில்இருந்தும், கெல்ஃபாண்டால் அதை வெற்றியாக மாற்ற இயலவில்லை அல்லது நமது ஸ்பீட் கிங் அதை அனுமதிக்கவில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம். 3வது மற்றும் 4வது ஆட்டங்களில் ஆனந்தின் (நேரம் அதிகம் எடுத்துக் கொள்ளாத) சுறுசுறுப்பான தற்காப்பு நகர்த்தல்கள் அபாரம் என்று கூறுவேன்.

Speaking about the tie break, the champion said, "I wouldn’t say there is some kind of justice in it. After we played 12-games, I dont think the tiebreak is a reasonable situation that would separate us after a very tough match. Things really went my way in the tiebreaker, I can say I won because I won", Anand said matter-of-factly. ஆனந்த் இப்படிக் கூறியிருப்பது அவரது தன்னடகத்தையும், யதார்த்த அணுகுமுறையையும் காட்டுகிறது.

செஸ் வரலாற்றில், மூன்று வகையான ஆட்ட முறைகளில் (நாக் அவுட், மேட்ச், டோர்னமண்ட்) உலக சேம்பியன் பட்டத்தை வென்றுள்ள ஒருவர் விஷி ஆனந்த் மட்டுமே. நாக் அவுட் முறையில், டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் போல, ஒவ்வொரு சுற்றிலும், தோற்றவர் வெளியேற்றப்படுவார். கால் இறுதி, அரை இறுதி, இறுதிச் சுற்றுகள் நடந்து வெற்றி பெற்றவர் சேம்பியன் என அறிவிக்கப்படுவார். 2000-ஆம் ஆண்டு, அலெக்ஸி ஷிராவை நாக் அவுட் முறையில், இறுதிச்சுற்றில் வென்று முதன் முதலாக உலக சேம்பியன் ஆனார்.
6 ஆட்டங்கள் இருந்தும், ஆனந்துக்கு நான்கே ஆட்டங்கள் தான் தேவைப்பட்டன. 3.5-0.5

2007-இல் கிராம்னிக் உலக சேம்பியனாக இருந்தபோது மெக்ஸிகோவில் நடந்த (உலகின் அப்போதைய 8 சிறந்த ஆட்டக்காரர்கள் பங்கு பெற்ற, 14 சுற்றுகள் கொண்ட) டோர்னமண்ட் முறை உலக செஸ் சேம்பியன்ஷிப்பில், 9 புள்ளிகள் எடுத்து முதலாவதாக வந்ததன் மூலம் ஆனந்த் 2வது முறை உலக சேம்பியன் ஆனார். இதில், ஒரு தோல்வியைக் கூட ஆனந்த் சந்திக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.
http://en.wikipedia.org/wiki/World_Chess_Championship_2007
அடுத்த ஆண்டில், மேட்ச் ஆட்ட முறையில், கிராம்னிக்கை 6.5-4.5 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்து (3வது) பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார்.

2010-இல், டோபோலோவ் என்ற சிங்கத்தை அதன் குகையிலேயே (சோஃபியா, பல்கேரியா) வீழ்த்தி பட்டத்தை 4வது முறை வென்றது, ஆனந்தின் செஸ் வாழ்க்கையின் ஒரு மிகப்பெரிய சாதனை. கிராம்னிக் போல் அல்லாமல், டோபோலோவ், ரிஸ்க் எடுத்து அக்ரெஸ்ஸிவ்வாக விளையாடுபவர். புள்ளிகள் சமனாக (5.5-5.5) இருந்த நிலையில், 12வது இறுதி ஆட்டத்தில் கறுப்புக் காய்களுடன் ஆடிய ஆனந்த், டோபோலோவுக்கு கொடுத்த சைக்காலாஜிகல் அடி காரணமாக, இப்போது உலகத் தர வரிசையில் 12வது இடத்தில் டோபோலோவ் இருக்கிறார். இந்த 12வது ஆட்டமும், ஆனந்தின் வெற்றியின் நேர்த்தியும் மிகவும் பேசப்பட்டவை.

இந்தியாவின் முதல் உலக ஜூனியர் செஸ் சேம்பியன், முதல் கிராண்ட் மாஸ்டர், முதல் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர், துரித ஆட்டம், காய்களை பார்க்காமல் ஆட்டம், மொத்தப் புள்ளிகள் என்ற 3 வகைகளிலும் உலகப் பிரசத்தி பெற்ற ஏம்பர் செஸ் டோர்னமண்ட் பட்டத்தை தனியொருவராக வென்ற முதல் செஸ் ஆட்டக்காரர் என்று பல முதல்கள் ஆனந்தின் செஸ் வாழ்க்கையில் விரவி இருக்கின்றன. அதோடு, இந்தியாவின் ஒரே உலக செஸ் சேம்பியன், கோரஸ் டோர்னமண்ட் பட்டத்தை 5 முறை வென்ற ஒரே மனிதர், மைன்ஸ் செஸ் பட்டத்தை 7 ஆண்டுகள் தொடர்ச்சியாக வென்ற ஒரே ஆட்டக்காரர் என்று நாம் பிரமிக்கத்தக்க “ஒரே” ஒருவர் ஆனந்த் மட்டுமே. ஆனந்த் செஸ் ஆஸ்கார் பட்டத்தை 6 முறை வென்றுள்ளார்.

இந்தியாவின் இரண்டாம் உயரிய விருதான பத்ம விபூஷனையும் ஆனந்த் பெற்றிருக்கும் நிலையில், ஒரு விளையாட்டு வீரருக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டுமெனில், அதற்கு ஆனந்த் ஒருவரே மிக்க தகுதி படைத்தவர் என்று தாராளமாக சொல்ல முடியும்.

போட்டி முடிவு நாளை அறிவிக்கப்படும். !

Read More...