பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 24, 2012

IPL5 -CSK vs MI -மும்பை F-16ஐ சுட்டு வீழ்த்திய தோனி”காப்டர்” -எ.அ.பாலா

சென்னை அணி, நேற்று பங்களூரில் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை அணியை ஜெயித்தது என்று சொல்லுவதை விட நசுக்கியது (அ) தரையிலிட்டு தேய்த்தது என்று சொல்வது பொருத்தமானதாக இருக்கும்! இதற்கு ஒரு காரணம், சென்னையின் Big match அனுபவமும் (3 ஐபிஎல்இறுதி ஆட்டங்கள், 1 செமிஃபைனல்) கூட! சென்னை அணி 4வது இடத்துக்கு ஓசியில் வந்தது என்று சொல்லுபவர்களுக்கு: பங்களூரும், ராஜஸ்தானும் தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டதற்கு, சென்னை என்ன பண்ணும்? அது போல, தர்மசாலாவில் நடந்த தில்லி-பஞ்சாப் ஆட்டத்தில், தில்லியின் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக பஞ்சாபின் வெற்றிக்கு வாய்ப்பு ரொம்ப கம்மி என்பது உலகறிந்த விஷயம் தானே! மேலும், சென்னை ஒரு 17 பாயிண்டுகள் எடுத்து, அதோடு முக்கியமாக +ve NRR-ஐ வைத்திருந்ததால் தானே, பிளே ஆஃப்-இல் நுழைய முடிந்தது!நேற்றைய ஆட்டத்தில், தோனியின் ஆட்டம் அட்டகாசம்! அவரது பரபரப்பின்மையே முக்கியமான சமயங்களில் அவரது பலம் என்பதை அவர் மீண்டும் நிருபீத்தார்! அதுவும் அந்த ஹெலிகாப்டர் ஷாட்டை, (அதுவும் மலிங்காவின் பந்து வீச்சில்) shot of the day, ஏன், shot of IPL-5 என்று தாராளமாகக் கூறலாம்! அந்த ஓவரில், மலிங்கா 2 பந்துகளை chuck பண்ணினார் என்பது கூடுதல் தகவல்! அவர் 4 ஓவர்களில் 41 ரன்களை தாரை வார்த்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது! இடையே, சங்கர் படத்துக்கு இணையான பிரும்மாண்டமான 112 மீ சிக்ஸர் ஒன்றும் தோனி அடித்தார்.

தோனியின் 20 பந்துகள் 51 ரன்களும், பிரேவோவின் 14 பந்துகள் 33 ரன்களுமே, சென்னையின் மெகா ஸ்கோருக்கு (187) வழிவகுத்தன! அது போல, 1 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்து மதிமயங்கி இருந்த சென்னையின் துயரகற்றி உய்ய வைத்த பெருமைக்குரியவர்கள், பத்ரியும், ஹஸ்ஸியும் ஆவர் :-) சென்னை முதல் 9 ஓவர்களில் எடுத்தது 47 ரன்கள் மட்டுமே! அடுத்த 4 ஓவர்களில் எடுத்ததும், 47 ரன்கள்!! தலைவர் தோனி, அண்ணல் பிரேவோ காஸ்மிக் நடனத்தின் முடிவில், அதாவது கடைசி 7 ஓவர்களில் சென்னை எடுத்தது, 93 ரன்கள்!

அதே நேரம், நல்ல திறமையிருந்தும், தொடர்ந்து சொதப்பும், முரளி விஜயையும், ரைனாவையும் பார்த்து மகா எரிச்சலாக இருந்தது! பிரேவோ, பந்து வீச்சிலும் நேற்று மிளிர்ந்தார். 3-0-10-2. அதுவும், போலார்ட் அவுட்டானவுடன், எப்படி அந்த பந்தை போலார்ட் அடித்திருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கி, அவருக்கு “பை பை” சொன்னது கண் கொள்ளா காட்சி ;-) ஹில்ஃபன்ஹாஸ் பந்து வீச்சு ரொம்ப disappointing! இந்திய ஆடுகளங்களில் அவர் ஷார்ட்டாக பந்து வீசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்! Some of his deliveries are standing up, begging to be hit !!! ஹில்ஃபன்ஹாஸுக்கு பதில் போலிங்கர் அடுத்த ஆட்டத்தில் ஆடினால் பரவாயில்லை என்று தோன்றினாலும், அதிலும் ஒரு ரிஸ்க் இருக்கத் தான் செய்கிறது!

டுபிளஸ்ஸிக்கு பதில் ஹஸ்ஸியை அணியில் தக்க வைத்துக் கொண்டது நல்ல விஷயமே! சென்னை1-2 என்ற நிலையில் இருந்தபோது, அவரது அனுபவம் மிக்க பயனுள்ளதாக அமைந்தது! இதை hind sight-ல் தான் கூறுகிறேன் என்றாலும், அது தான் உண்மை!!!! இதற்கு தோனியை பாராட்ட வேண்டும்! அஷ்வின் எதிர்பார்த்தது போல சிறப்பாக பந்து வீசினார். ஆனால், அவரை விட பவர் பிளே ஓவர்களில் தைரியமாக, மிகத் திறமையாக பந்து வீசிய ஜகதியை எத்தனை பாராட்டினாலும் தகும்! அதுவும், ஹில்ஃபன்ஹாஸ் பந்து வீச்சு ஸ்மித்தால் துவம்சம் செய்யப்பட்டுக் கொண்டிருந்த ஒரு கடினமான சூழலில்!

என்னைப் பொருத்தவரை, அவரது ஆல்ரவுண்ட் பெர்ஃபார்மன்ஸுக்காக, பிரேவோவுக்குத் தான் (தோனிக்கு தரப்பட்ட) ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும்! எனது முந்தைய ஐபிஎல் இடுகையில், சென்னை ஆடுகளத்தை சுழற்பந்து வீச்சுக்கு அதிகம் உதவாத வகையில் சற்றே சீர் செய்ய வேண்டும் என்று கூறியதை சற்று மாற்றிச் சொல்கிறேன்! நாளைக்கு சுழற்பந்து வீச்சுக்கு ஏதுவாகவும், ஞாயிறன்று, சற்றே பசுமையான ஆடுகளமாகவும் அமைத்தல் அவசியம் :-)

என்னடா, மும்பை பேட்டிங் பற்றி எதுவுமே எழுதவில்லை என்று நினைப்பவர்களுக்கு: அந்த உதவாக்கரைகள் பேட்டிங் குறித்து எழுத ஒரு எழவும் இல்லை! அச்சுபிச்சு போல இருக்கு அம்பானியின் திருமகன் ஒரு பெரிய சோபாவில் தனியாக அமர்ந்திருந்ததை டிவியில் காட்டினார்கள்! மும்பை எப்போதும் போல முக்கியமான ஆட்டங்களில் CHOKE-இ விடும் என்று தெரிந்தோ என்னவோ, நிடா அம்பானி பங்களுர் பக்கம் தலைகாட்டவில்லையோ? எல்லாவற்றையும் விட, ஆட்டம் முடிந்த பிறகு, பேட்டி என்ற பெயரில் டேனி மாரிஸன் பிரசித்தி பெற்ற ஐபிஎல் குட்டிகள் ஷிபாங்கி மற்றும் அர்ச்சனா விஜயாவுடன் அடித்த லூட்டி தான் நேற்றைய ஹைலைட் ;-)

இப்படியாக, சென்னை சூப்பர் கிங்க்ஸ் (CSK) Mumbai Choker Indians (MCI) அணியை (எதிர்பார்த்தது போல) முக்கியமான எலிமினேட்டர் ஆட்டத்தில் வென்றது! MCI அணி சென்னையை 2 குரூப் ஆட்டங்களிலும் ஜெயித்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே! ஆனால், என்ன பிரயோஜனம்? இப்போதிலிருந்து, சென்னைக்கு 1 match at a time & 2 to go, இரண்டும் நம்மூர் சேப்பாக்கத்தில்! நம்பிக்கையே வாழ்க்கையின் உயிர்நாடி!

எ.அ.பாலா

ஸ்நேகாவிற்கும் திருமணம் பற்றி ஏன் இட்லிவடை ஒரு போஸ்டும் போடவில்லை என்று ஒருவர் நேற்று கேட்டார். அவருக்காக இந்த படம் !

36 Comments:

Anonymous said...

ஏதோ பெரிய ஜோக் அடித்துவிட்டதாக நினைத்து தன்னைதானே முதுகில் தட்டிகொண்டு ஸ்மைலி போட்டு எ.அ.பாலா எழுதுவது எரிச்சலுக்குரியது.

இந்த மொக்கை ஜோக்குக்கு கூட ஏண்டா இவ்ளோ சிரி சிரிக்கிறீங்க என்று சந்தானம் மாதிரி கேட்க தூண்டுகிறது.

இட்லிவடைக்கு எ.அ.பாலா சமீபகாலத்தில் திருஷ்டி பொம்மையாக அமைந்துவிட்டது துரதிருஷ்டவசமானது.

- எம்.எஸ்.என்

Madhavan Srinivasagopalan said...

// சென்னைக்கு 1 match at a time & 2 to go, இரண்டும் நம்மூர் சேப்பாக்கத்தில்! நம்பிக்கையே வாழ்க்கையின் உயிர்நாடி! //

சென்னை ஜெயிச்சா ரெண்டு or மூணு நாளு சந்தோஷமா இருப்பீங்களா ?
அதுக்கப்புறம்....... சகஜமான வாழ்க்கை தான..?

நீங்க கிரிக்கெட்டு மட்டும்தான் வாழ்க்கைன்னு நெனைக்கறீங்களோ ?

Match பாத்தோமா.. மறந்தோமானு இல்லாம விமர்சனம் வேற..
ரொம்ப முக்கியம்..!!

Madhavan Srinivasagopalan said...

பிரசன்னா கல்யாணம் பற்றி அடுத்த பதிவில் வெளியிடப்படும்.
-- இவன்(ர்) இ.வ.

Unknown said...

பாலா மேட்ச நாங்க டீவிலியே பாத்துக்கிறோம். நீ மட்டும் விமர்சனம் எழுதாத. ப்ளீஸ்

Anonymous said...

//போலார்ட் அவுட்டானவுடன், எப்படி அந்த பந்தை போலார்ட் அடித்திருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கி, அவருக்கு “பை பை” சொன்னது கண் கொள்ளா காட்சி ;-) //

This is dead wrong, Bala

Actually, Bravo was telling Pollard to get on a plane.

Bravo quoted "Two days ago he [Pollard] sent me a message asking me to pack my bags and go home ...it was my turn today to tell him."

Bala, please wake up from your dream and stop this rubbish writing.

enRenRum-anbudan.BALA said...

//ஏதோ பெரிய ஜோக் அடித்துவிட்டதாக நினைத்து தன்னைதானே முதுகில் தட்டிகொண்டு ஸ்மைலி போட்டு எ.அ.பாலா எழுதுவது எரிச்சலுக்குரியது.//

எரிச்சலா இருந்தா படிக்கவே கூடாது! எதுக்கு ஒரு வெத்து கமெண்ட் ?

//இட்லிவடைக்கு எ.அ.பாலா சமீபகாலத்தில் திருஷ்டி பொம்மையாக அமைந்துவிட்டது துரதிருஷ்டவசமானது.
//
சரி தான், இட்லிவடை ஒரு அறிவுஜீவி பிளாக், அதன் வாசகர் நீர் அறிவுஜீவி ?!?! ப்ளீஸ், காமடி பண்றதுக்கும் ஒரு அளவில்லையா! சும்மா ஜாலிக்கு எழுதினா உமக்கு ஏன் இத்தனை ஆங்காரம் என்று புரியலை!

enRenRum-anbudan.BALA said...

//நீங்க கிரிக்கெட்டு மட்டும்தான் வாழ்க்கைன்னு நெனைக்கறீங்களோ ?

Match பாத்தோமா.. மறந்தோமானு இல்லாம விமர்சனம் வேற..
ரொம்ப முக்கியம்..!!
//

விமர்சனம் எழுதச் சொல்றாங்க, டைம் இருக்கு, எழுதறேன்! அதான் மேட்டர். மத்தபடி, கிரிக்கெட் மட்டும் தான் வாழ்க்கைன்னு நான் எங்கேயும் சொல்லலியே...

enRenRum-anbudan.BALA said...

//
jaisankar jaganathan said...

பாலா மேட்ச நாங்க டீவிலியே பாத்துக்கிறோம். நீ மட்டும் விமர்சனம் எழுதாத. ப்ளீஸ்
//
அத சொல்ல நீ யாரு நயினா? இட்லிவடை எழுதச்சொன்னார், எழுதறேன்! உன்னை எவனாவது கட்டாயப்படுத்தி வாசிக்க சொன்ன மாதிரி ஏன் இத்தனை தேவையில்லாத டென்ஷன், ஆதார துவேஷம்? கூல் ப்ளீஸ் :)

For your information, IV informed that readership for my IPL posts is really good. So, I neither need your suggestion nor your stinking comment!

Simmaguru said...

பாலா சார், போலிங்கர் ஆஸ்திரலியா கிளம்பி 15 நாள் ஆச்சு. உங்க பாணில சொல்லனும்னா ஹில்பின்ஹாஸ் தான் அடுத்த ஆட்டங்களில் நமக்கு அருள் பாலிக்கணும்

@chennaiipl Doug Bollinger is back in Australia for personal reasons and will not be available for today's game. #CSKvsDD 2 Weeks ago

Anonymous said...

Bala sir,
ROFL for your comment regarding MI batting.... your writing flow is excellent...

Anonymous said...

//frustrating to see this guy's writing in IV//
Hello Idlyvadai ,Content quality of the Blog is going downfall.

by ***Anony Pottai***

சத்தீஷ் வாசன் said...

//
jaisankar jaganathan said...

பாலா மேட்ச நாங்க டீவிலியே பாத்துக்கிறோம். நீ மட்டும் விமர்சனம் எழுதாத. ப்ளீஸ் //
என்ன ப்ராப்ளம் உங்களுக்கு ? உங்களுக்கு விருப்பமிலேன்னா படிக்காம போகவேண்டியத்துதானே ! பாலாவ எழுத வேண்டாம்ன்னு சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? அதுவும் அவரை ஒருமைய்ல் விளிக்கிறீர்களே ? நாகரிகமற்ற் உங்கள் எழுத்தைவிட he is for better !!

எ.பாலா
நீங்கள் எழுதுங்கள் ! இந்த ”ஆதார துவேஷங்களை பசித்த புலி பதம் பார்க்கட்டும் ! :-))

சத்தீஷ் வசன்

enRenRum-anbudan.BALA said...

//This is dead wrong, Bala

Actually, Bravo was telling Pollard to get on a plane.

Bravo quoted "Two days ago he [Pollard] sent me a message asking me to pack my bags and go home ...it was my turn today to tell him."

Bala, please wake up from your dream and stop this rubbish writing.
//
Agreed, I made a mistake by not verifying facts! I am not a professional. I write out of interest. Thats all. Thanks for pointing out.

But, because of that mistake, my writing cannot become rubbish! Its very clear for all to see that you are one disgruntled moron filled with abominable hatred !!!! Sorry to say this.

enRenRum-anbudan.BALA said...

//Simmaguru said...

பாலா சார், போலிங்கர் ஆஸ்திரலியா கிளம்பி 15 நாள் ஆச்சு. உங்க பாணில சொல்லனும்னா ஹில்பின்ஹாஸ் தான் அடுத்த ஆட்டங்களில் நமக்கு அருள் பாலிக்கணும்
//

தகவலுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சிம்மகுரு சார்.

enRenRum-anbudan.BALA said...

//Bala sir,
ROFL for your comment regarding MI batting.... your writing flow is excellent...
//
Thanks for reading and commenting.

enRenRum-anbudan.BALA said...

//Anonymous said...

//frustrating to see this guy's writing in IV//
Hello Idlyvadai ,Content quality of the Blog is going downfall.

by ***Anony Pottai***
//

I respect your point of view but please comment in any language other than English ;-)

enRenRum-anbudan.BALA said...

//சத்தீஷ் வாசன் said...

//
jaisankar jaganathan said...

பாலா மேட்ச நாங்க டீவிலியே பாத்துக்கிறோம். நீ மட்டும் விமர்சனம் எழுதாத. ப்ளீஸ் //
என்ன ப்ராப்ளம் உங்களுக்கு ? உங்களுக்கு விருப்பமிலேன்னா படிக்காம போகவேண்டியத்துதானே ! பாலாவ எழுத வேண்டாம்ன்னு சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? அதுவும் அவரை ஒருமைய்ல் விளிக்கிறீர்களே ? நாகரிகமற்ற் உங்கள் எழுத்தைவிட he is for better !!

எ.பாலா
நீங்கள் எழுதுங்கள் ! இந்த ”ஆதார துவேஷங்களை பசித்த புலி பதம் பார்க்கட்டும் ! :-))

சத்தீஷ் வசன்
//
சத்தீஷ் வாசன்,
நான சாதாரணன்! உங்களை மாதிரி இ.வ வாசகர்களுக்காகத் தான் நான் பொழுதுபோக்காக எழுதுகிறேன் ! அறிவுஜீவிகளாக தங்களை நினைத்துக் கொண்டிருக்கும் வெறுப்பை உமிழும் சன்மங்களுக்காக அல்ல! நன்றி தங்கள் புரிதலுக்கு!

Madhavan Srinivasagopalan said...

// enRenRum-anbudan.BALA said "விமர்சனம் எழுதச் சொல்றாங்க, டைம் இருக்கு, எழுதறேன்! அதான் மேட்டர். மத்தபடி, கிரிக்கெட் மட்டும் தான் வாழ்க்கைன்னு நான் எங்கேயும் சொல்லலியே... "//

Fair reply. ok.. My interpretation went wrong.

I feel we/media give much hype to cricket than what it deserves.

I do watch cricket but I feel 'I am not for Cricket, but Cricket is for me'

Anonymous said...

//Its very clear for all to see that you are one disgruntled moron filled with abominable hatred !!!! Sorry to say this.//

Same to you Mr. Bala. You are the biggest Moron of all.

vimal rahul said...

Well bala

vimal rahul said...

Well bala

vimal rahul said...

Well bala

Anonymous said...

//For your information, IV informed that readership for my IPL posts is really good. So, I neither need your suggestion nor your stinking comment//

Readership and the Click on the post is entirely different. :)

*APPATAKKAR*

Unknown said...

//அறிவுஜீவிகளாக தங்களை நினைத்துக் கொண்டிருக்கும் வெறுப்பை உமிழும் சன்மங்களுக்காக அல்ல// இது ரொம்ப நாகரிகமான வார்த்தையாக்கும்.

Anonymous said...

//ஸ்நேகாவிற்கும் திருமணம் பற்றி ஏன் இட்லிவடை ஒரு போஸ்டும் போடவில்லை என்று ஒருவர் நேற்று கேட்டார். அவருக்காக இந்த படம்//

அட ஙொக்க மக்கா!

எ.அ.பாலா ரசிகர் மன்றம் said...

/**********
jaisankar jaganathan said...

//அறிவுஜீவிகளாக தங்களை நினைத்துக் கொண்டிருக்கும் வெறுப்பை உமிழும் சன்மங்களுக்காக அல்ல// இது ரொம்ப நாகரிகமான வார்த்தையாக்கும்.
**************/
யோவ், சொம்மா ஜாலியா எழுதி டைம்பாஸ் பண்ணினுக்கிற நம்ம தலைவர ஒருமையில பேசி, வம்பு வளிச்சுது யாரு? வினை வெதச்சவன் அத்த அறுத்துத் தான் ஆவணும்! பாலாண்ணன் என்ன கௌதம புத்தரா, நீ திட்டினா கம்முனு போறதுக்கு ?

எ.அ.பாலா ரசிகர் மன்றம் said...

//Readership and the Click on the post is entirely different. :)

//
என்னா மாதிரி கண்டுபிடிப்பு.... என்னா மாதிரி கெட்டிக்காரத்தனம்! இப்படிபட்ட மூளைக்காரனுங்க இவ வாசகரா இருப்பது இட்லிவடைக்கு பெத்த பெருமை தான்பா :)

Unknown said...

//வினை வெதச்சவன் அத்த அறுத்துத் தான் ஆவணும்// அடேங்கப்பா. இது ரொம்ப ஓவரு

Anonymous said...

எ.அ.பாலா அனானியா கமெண்டு போடும்போதும் கூட ஸ்மைலி போட்டு தானே கமெண்டு போட்டதை காட்டி கொடுத்து விடுகிறார். இம்மாதிரி திருட்டுதனம் செய்ய அவருக்கு சாமர்த்தியம் போதாது.

இட்லிவடைக்கு கடைசி எச்சரிக்கை. இதேமாதிரி தொடர்ந்து எ.அ.பாலாவை எழுதவைத்தால், அவரது பிளாக்கை போலவே இட்லிவடை பிளாக்கும் நமுத்துப்போன உருளைக்கிழங்கு சிப்ஸாகிவிடும்.

-எம்.எஸ்.என்

Anonymous said...

Is IV aping Kumudham? Why this kolaveri? Seems IV is enjoying all the criticism faced by Bala and exposes him more by publishing his ill-tempered counter responses! Does this really sell? It will be better if you delete anti-Bala / anti-article comments and publish only the congratulatory messages by Bala and his Thondar kuzhaam - if you really do not want Bala to suffer from High BP. (You / Bala may guess who wrote this - but I am going to be an anony to avoid all the dung Bala is going to write back.)

Anonymous said...

//இட்லிவடைக்கு கடைசி எச்சரிக்கை. இதேமாதிரி தொடர்ந்து எ.அ.பாலாவை எழுதவைத்தால், அவரது பிளாக்கை போலவே இட்லிவடை பிளாக்கும் நமுத்துப்போன உருளைக்கிழங்கு சிப்ஸாகிவிடும்.//

M.S.N - factu factu factu

**APPATAKAR**

enRenRum-anbudan.BALA said...

//Anonymous said...

எ.அ.பாலா அனானியா கமெண்டு போடும்போதும் கூட ஸ்மைலி போட்டு தானே கமெண்டு போட்டதை காட்டி கொடுத்து விடுகிறார். இம்மாதிரி திருட்டுதனம் செய்ய அவருக்கு சாமர்த்தியம் போதாது.

இட்லிவடைக்கு கடைசி எச்சரிக்கை. இதேமாதிரி தொடர்ந்து எ.அ.பாலாவை எழுதவைத்தால், அவரது பிளாக்கை போலவே இட்லிவடை பிளாக்கும் நமுத்துப்போன உருளைக்கிழங்கு சிப்ஸாகிவிடும்.

-எம்.எஸ்.என்
//
இந்த குற்றச்சாட்டுக்கு பல தடவை பதில் சொல்லியாச்சு! உமக்கு “அனானி”ன்னு வெத்து tag போதுமே, என்னமோ உலகப் பிரசித்தி பெற்ற விஐபி மாதிரி எம்.எஸ்.என் னு சிக்னேச்சர் ஏன், நல்ல கூத்து ;-)

enRenRum-anbudan.BALA said...

//Is IV aping Kumudham? Why this kolaveri? Seems IV is enjoying all the criticism faced by Bala and exposes him more by publishing his ill-tempered counter responses! Does this really sell? It will be better if you delete anti-Bala / anti-article comments and publish only the congratulatory messages by Bala and his Thondar kuzhaam - if you really do not want Bala to suffer from High BP. (You / Bala may guess who wrote this - but I am going to be an anony to avoid all the dung Bala is going to write back.)
//
Your moral outrage looks so convincing :) I dont suffer from any high BP and I give as fitting a response to some people indulging in personal mud slinging ! I simply dont care to guess who you are either!

Why dont you direct/follow your fine advice to the few "kolaveri" anonys (you included) who put generic abusive comments ????

enRenRum-anbudan.BALA said...

//எ.அ.பாலா அனானியா கமெண்டு போடும்போதும் கூட ஸ்மைலி போட்டு தானே கமெண்டு போட்டதை காட்டி கொடுத்து விடுகிறார்
//

ஹலோ, உம்மை மாதிரி வெறுப்பைக் கக்கும் அனானி இருக்கும்போது, என் எழுத்தை ஜாலியா எடுத்துக்கற அனானி இருக்கக் கூடாதா ? என்ன மாதிரி லாஜிக் உம்முடையது, தாங்க முடியல!

Unknown said...

பாலா நீங்க ஏன் வெறும் பதிவோட நிறுத்தக்கூடாது. ஏன் இப்படி பதில் சொல்லி டென்ஷனை ஏத்துறீஙக்

enRenRum-anbudan.BALA said...

//பாலா நீங்க ஏன் வெறும் பதிவோட நிறுத்தக்கூடாது. ஏன் இப்படி பதில் சொல்லி டென்ஷனை ஏத்துறீஙக்
//

நல்ல ஆலோசனை தான், முயற்சிக்கிறேன். ஆனா சிலருக்கு பதில் தேவைப்படுகிறது, சில சமயங்களில். என்ன செய்வது ?

நீங்கள் எனக்கு எதிரி கிடையாது. குறைகளை, குற்றங்களை சொல்லுங்கள். சரி செய்து கொள்கிறேன். மற்றபடி, அனானியாக தனிநபர் தாக்குதல் செய்யும்போது, பதிலளிக்க வேண்டியுள்ளது!

நான் பெரிய எழுத்தாளன் என்று எங்கும் எப்போதும் கூறியதில்லை, பொழுதுபோக்காக எனக்குத் தோன்றியதை எழுதுகிறேன். அவ்வளவு தான்!