பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 28, 2012

IPL5 -CSK vs KKR இறுதியாட்டம் -வந்தாரை வாழ வைத்த சென்னை -எ.அ.பாலா

சென்னை அணி தோல்வியை தழுவியதால், எ.அ.பாலாவை இறுதி போட்டி பற்றி எழுத ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டார். அவர் எழுதவில்லை என்றால் இட்லிவடை வாசகர்கள் தங்கள் கோபத்தை யாரிடம் காட்டுவார்கள் ? அதனால் அவரை பல முறை கேட்டுக்கொண்ட பின் இந்த பதிவை சற்றும் முன் எழுதி அனுப்பினார். அவருக்கு இட்லிவடை ரசிகர்கள்(?) சார்பில் மிக்க நன்றி.


சென்னை முதலில் விளையாடி 190 அடித்தவுடன், சென்னை நிச்சயம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையில், இடுகைக்கான மேட்டரை எழுத ஆரம்பித்து, கொல்கத்தா 10 ஓவர்கள் பேட் செய்திருந்த நிலையில், முடித்து விட்டேன். சில fill in the blanks நிரப்ப வேண்டியிருந்தது தான் மிச்சமிருந்தது. ஆனால், விதி (ஹில்ஃபன்ஹாஸின் 19வது ஓவரின் கடைசிப் பந்து நோ பால் மூலமாக) விளையாடி விட்டது. கொல்கத்தா [edited] ஓசியில் ஜெயித்து விட்டார்கள்! (ஓசி என்று சொல்ல காரணம் இருக்கிறது! அடுத்த பாராவில்!) அதனால், நான் கஷ்டப்பட்டு எழுதி வைத்த மேட்டரை இங்கே இடுவது, சென்னை தோல்வியடைந்த சூழலில் relevant ஆக இருக்காது என்பதால், மனதில் சட்டென்று தோன்றிய ஒரு சில எண்ணங்கள் மட்டுமே!

என்னளவில், 7 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில், ஒரு சேம்பியன் அணியான சென்னை சுலபமாகவே வெற்றி பெற்றிருக்க வேண்டும். இது 6 பந்துகளில் 9 ரன்கள் என்று ஆனது தான் தோல்விக்கு மிக முக்கியக் காரணம் என்று கூறுவேன். அதோடு, edge வாங்கி பல ஓசி பவுண்டரிகள் கொல்கத்தாவுக்குக் கிடைத்ததால் தேவையான ரன் ரேட் கட்டுப்பாட்டில் இருந்தது.

இருந்தாலும், தன்னடக்கம் மிக்க பிஸ்லா, ஒரு பெரிய ஆட்டத்தில் எந்தவித அழுத்தமும் இன்றி அபாரமாக பேட்டிங் செய்ததை நிச்சயம் பாராட்ட வேண்டும். அதே நேரத்தில், நல்ல போதையில் இருந்த ஷாருக் கான், ஆட்டத்திற்குப் பின் செய்த அலம்பலும், உளறலும் தாங்க முடியாமல் இருந்தது. அதுவும், மைதானத்தில் குரங்குக்கு இணையாக அவர் போட்ட குட்டிக்கரணம் பார்க்க கண்றாவியாக இருந்தது!

இவ்வாட்டத்தில் தோனி (மும்பை, தில்லி ஆட்டங்களில் கிட்டிய சுலப வெற்றிகளாலும், மற்றும் 190 ரன்கள் இந்த ஆடுகளத்தில் அதிகம் என்றெண்ணியும்) சற்றே மிதப்பாக இருந்தாரோ என்று எண்ணும்படி அவர் கேப்டன்ஸி இருந்தது. காலிஸ், பிஸ்லா என்று 2 வலது கை மட்டையாளர்கள் ஆடியபோது, அந்த கூட்டணியை உடைக்க அவர் ஜகதியுடன், ஜடேஜா அல்லது ரைனாவை (இடது கை சுழல் பந்துவீச்சு) பயன்படுத்தியிருக்க வேண்டும். அவரது ஃபீல்ட் அமைப்பும் நேற்று சோபிக்கவில்லை.

ஐபிஎல் கோப்பையை தான் ஓடி வந்து வாங்கிக் கொள்ளாமல், அதை கம்பீர் வாங்கிக் கொள்ள அனுமதி அளித்த ஷாருக்கின் பெருந்தன்மையை எத்தனை பாராட்டினாலும் தகும்! அது போல, கம்பீர் எல்லா பேட்டிகளிலும், கிரிக்கெட் ஒரு டீம் விளையாட்டு, கொல்கத்தா வென்றது அணியினரின் கூட்டு முயற்சியால் மட்டுமே என்று (தான் தன்னடக்கத் திலகம் என்று பேர் வாங்குவதற்காக) உளறுவது அவரை காமடி பீஸாக பார்க்க வைக்கிறது என்பதை உணரவேண்டும். கங்குலியும் தோனியும் கிரிக்கெட் டீம் விளையாட்டு இல்லை என்று கூறினார்களா என்ன ?!?!?! கம்பீர் கூறும் தத்துவங்களை விட பெரிய விஷயங்கள் எல்லாம் அவரை விட அறிவாளிகளான கிரிக்கெட் ரசிகர்களுக்குத் தெரியும்!!!

ஷாரூக் கானின் கொல்கத்தா அணியில் சேரும்வரை கம்பீர் நன்றாகத் தான் இருந்தார். ”சேர்வார் சேர்க்கையால்”, கெட்டிக்காரத்தனமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு இப்போது தத்துபித்து என்று சீரியஸாக பேத்துகிறார். அவர் நார்மலாக இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஏனெனில், இந்திய கிரிக்கெட்டுக்கு கம்பீர் போன்ற திறமையான தொடக்க ஆட்டக்காரரின் சேவை தேவை. ஆனால், இந்த வெற்றியை வைத்து அவரை இந்திய கேப்டன் ஆக்கலாம் என்று சொல்லுபவரைப் பார்த்து பரிதாபம் மட்டுமே பட முடியும்! 31 வயதாகும் கம்பீரை விட மிக இளையவரான விராத் கோலியைத் தான் தோனிக்குப் பின் கேப்டனாக groom செய்வதே இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு சரியானதாக இருக்கும்.

கொல்கத்தாவை சென்னை பழிவாங்க சேம்பியன்ஸ் லீக் டி-20 இருக்கவே இருக்கிறது. அதுவரை வெயிட்டீஸ் :-)

ஏற்கனவே சென்னை அணி தோல்வியால் நொந்து போய் உள்ள பாலாவை அட்லீஸ்ட் இந்த இறுதி போட்டி பதிவிலாவது திட்டாமல் இருக்க வாசகர்களை வேண்டுகிறேன் :-)

17 Comments:

Anonymous said...

Okay guys! Let's START ... This is the last opportunity until next IPL :).

வவ்வால் said...

பாலா,

இதெல்லாம் ரொம்ப ஓவருங்க,ஓ.சில ஃபைனல் வந்த சென்னை விட கொல்கட்டா ஒன்றும் மோசமில்லை.

நான் முன்னரே சொன்னேன், ஶ்ரீரினிவாசன் ஃபைனல்ல கைக்கொடுப்பார்னு ஆடினா கப்பு கெலிக்க முடியாதுனு.

ரைனா பேட்டிங் தான் இடது ,பவுலிங் வலது கை தான்,

எல்லா கோப்பை வழங்கும் விழாவிலும் கேப்டன் தான் வாங்குவார்,எப்போது ஓனர் வாங்கினார், இப்போ ஷாருக்கான் விட்டு தந்தார்னு சொல்லுரிங்க?

Anonymous said...

The IPL gala is over...until next year. Hurray...

Big Hurray. This moronic commentary is also over.

R. J. said...

vavvaal, vid maattiingaLaa idlyvadai ivvaLavu kenjikketta pinnum! Leave this poor, silly Bala now. We have to learn to watch games unbiased to enjoy them. (No Bala, I am not drunk.) - R. J.

vijayaragavan said...

Unfair biased review. It's just a humiliation that made the author to write this post. Edged fours? had that not happened for CSK? There's nothing technical in this review. I do not know when the tamil writers (so called) would stop personification. It's just an event.

Anonymous said...

யோ ரொம்ப ஓவர் இதெல்லாம் ,சென்னை ஜெயிச்சா திறமை ,அடுத்தவன் ஜெயிச்சா லக்கா , அப்படி பாத்தா டெல்லிக்காரன் கேட்ச் மேல கேட்ச் விட்டு சென்னையை ஜெயிக்க வச்சானே அதுக்கு பேரு இன்னாவாம்...

எல்லாமே பிக்ஸிங்க் இல்லாட்டி இந்த மொண்ணை சென்னை லீக் போட்டிகளோடு போயிருக்கும் வெளிய...

Anonymous said...

/* காலிஸ், பிஸ்லா என்று 2 வலது கை மட்டையாளர்கள் ஆடியபோது, அந்த கூட்டணியை உடைக்க அவர் ஜகதியுடன், ஜடேஜா அல்லது ரைனாவை (இடது கை சுழல் பந்துவீச்சு) பயன்படுத்தியிருக்க வேண்டும்.*/

என்னது ரெய்னா இடது கை சுழல் பந்துவீச்சாளரா?????

Anonymous said...

Intha review ai vida shah rukh khan kudithu vitu pota kuti karnamae mael.

கம்பீர் said...

இந்த மாதிரி கட்டுரை எல்லாம் வருகிற வரை "இட்லி வடை" நன்றாகத் தான் இருந்தார். ”சேர்வார் சேர்க்கையால்”, கெட்டிக்காரத்தனமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு இந்த மாதிரி தத்துபித்து என்று கட்டுரை வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார். அவர் நார்மலாக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இது எப்படி இருக்கு ?

Anonymous said...

Bala..neenga evlo adichalum thangareenga..vaanga nama onna thozil panalam..

****Power Star****Dr.Srinivasan****

ப்ரதிவாதி பயங்கரம் கிரிக்கெட்டாச்சாரி said...

அப்பாடா! இதுவரை அரை வேக்காட்டுத்தனமா தத்து பித்துன்னு உளறி வந்த பாலாவின் IPL போஸ்ட்டிங்குகள் முடிவுக்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி.

ஜெ. said...

எழுத மாட்டேன் என்றவை படுத்தி எழுத வைத்து, பிறகு அடிக்காதீங்க, அடிக்காதீங்கன்னு சொல்லியே இ.வ. பாலாவை பலிகடா ஆக்கிவிட்டார்! பாவம் பாலா நொந்து நூடில்ஸ் ஆகியிருப்பார்! ஐ.பி.எல். 6 பிழைக்கும்! - ஜெ.

enRenRum-anbudan.BALA said...

வவ்வால்,

கருத்துக்கு நன்றி, சென்னை இறுதிச்சுற்றுக்கு வரும் என்ற உங்கள் ஜோசியம் பலித்ததற்கு பாராட்டு :) Lets agree to disagree on your "fixing" theory :)
//ரைனா பேட்டிங் தான் இடது ,பவுலிங் வலது கை தான்,//

அவசரத்தில் ஏற்பட்ட தவறு. அந்த அடைப்புக்குறி சமாச்சாரம், ஜடேஜாவுக்கு அருகில் வராமல், ரைனாவுக்கு அடுத்து அமைந்து விட்டது. மன்னிக்க.

அன்புடன்
பாலா

enRenRum-anbudan.BALA said...

//R. J. said...

vavvaal, vid maattiingaLaa idlyvadai ivvaLavu kenjikketta pinnum! Leave this poor, silly Bala now. We have to learn to watch games unbiased to enjoy them. (No Bala, I am not drunk.) - R. J.
//

I have no issue with you liking or hating my writing! But, you make personal comments like "poor, silly" easily but when I called you a moron in the garb of an intellectual, you could so offended and jump up and down. Its very funny ;-) (I am also not drunk :))

enRenRum-anbudan.BALA said...

//கம்பீர் said...

இந்த மாதிரி கட்டுரை எல்லாம் வருகிற வரை "இட்லி வடை" நன்றாகத் தான் இருந்தார். ”சேர்வார் சேர்க்கையால்”, கெட்டிக்காரத்தனமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு இந்த மாதிரி தத்துபித்து என்று கட்டுரை வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார். அவர் நார்மலாக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இது எப்படி இருக்கு ?
//

சூப்பரா இருக்கு கம்பீர் சார் :) ஐ யாம் லவ்விங் இட் !!!! நெஜமாவே நைஸ் கமெண்ட் ....

Anonymous said...

"அது போல, கம்பீர் எல்லா பேட்டிகளிலும், கிரிக்கெட் ஒரு டீம் விளையாட்டு, கொல்கத்தா வென்றது அணியினரின் கூட்டு முயற்சியால் மட்டுமே என்று (தான் தன்னடக்கத் திலகம் என்று பேர் வாங்குவதற்காக) உளறுவது அவரை காமடி பீஸாக பார்க்க வைக்கிறது என்பதை உணரவேண்டும். கங்குலியும் தோனியும் கிரிக்கெட் டீம் விளையாட்டு இல்லை என்று கூறினார்களா என்ன ?!?!?! கம்பீர் கூறும் தத்துவங்களை விட பெரிய விஷயங்கள் எல்லாம் அவரை விட அறிவாளிகளான கிரிக்கெட் ரசிகர்களுக்குத் தெரியும்!!!" - எந்த IPL / கிரிக்கெட் கேப்டன் (ராகுல் டிராவிடையும் சேர்த்து) சொல்லும் கமெண்டுகள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரியாது ? எல்லா பிளேயர்களும் அரைத்த மாவைத்தான் அரைக்கிறார்கள்! எல்லா வர்ணனையாளர்களும் (மண்ணின் மைந்தர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் உள்பட) சொன்னதையேதான் திரும்ப திரும்ப சொல்கிறார்கள் & கொல்கிறார்கள்! அப்பொழுதெல்லாம் பாலாவுக்கு வராத கோபமும், சலிப்பும் இப்போது வருவானேன்? CSK பைனலுக்கு வந்ததே மஹா ஓசியில்தான்! அதனை நினைத்து சந்தோழப்பட்டு, வரும் CLT20 இதே மாதிரி ஓசி சான்ஸ் கிடைக்க கடவுளை பிரார்த்திப்பதைத்தான் பாலா செப்டம்பர் வரை செய்யவேண்டும்! மற்றவர்கள் மேல் ஆத்திரப்படகூடாது!

Anonymous said...

Bala, MIB 3 Pathacha??