பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 01, 2012

IPL5 CSK vs KKR -சேப்பாக்கத்தில் சொதப்பிய சென்னை - எ.அ.பாலா

கடந்த ஒரு 4-5 IPL ஆட்டங்களை ஏனோ பார்க்கவில்லை! இம்முறை Mr.Cricket மைக்கேல் ஹஸ்ஸி சென்னை அணியில் இருந்ததால், இந்த ஆட்டத்தில் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையில் டிவி முன் உட்கார்ந்தேன். (என் நல்ல காலம், டிக்கெட் இருந்தும், சேப்பாக்கத்துக்கு செல்லவில்லை!) ஆட்டத்தில் ஜெயிக்கிறாரோ இல்லையோ, டாஸில் தோனி ஜெயித்து விடுகிறார்! சென்னை முதல் பேட்டிங் செய்தது.

டுபிளஸ்ஸி 2வது ஓவரிலேயே லீ பந்து வீச்சில் காலி. 5வது ஓவரில் ஹஸ்ஸி தன்னைத் தானே ரன் அவுட் ஆக்கிக் கொண்டார்! ரைனா நன்றாக ஆடிக்கொண்டிருந்தது சற்று ஆறுதல். 10 ஓவர்களில் 74-2, ஆடுகளத்தின் தன்மையை (பந்து பிட்ச் ஆனவுடன், பந்தின் வேகம் கணிசமாக குறைந்து விடுவதை) வைத்து பார்க்கும்போது, இதை நல்ல நிலைமை என்று தான் கொள்ள வேண்டும்! 155-160 ரன்கள் எடுத்து விட்டால், கொல்கத்தாவுக்கு ஆப்பு உறுதி என்றும் தோன்றியது!


பிரேவோவும் ரைனாவும் சீக்கிரமே விக்கெட் இழந்தார்கள். தோனியும், மில்லியன் டாலர் பேபி ஜடேஜாவும் சோபிக்கவில்லை. நரைனின் அருமையான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பயங்கரமாகத் தடவினார்கள். 17 ஓவர்களில் 113/4. 140 கூட தேறாது என்று புரிந்தது. பிரேவோ, அஷ்வின் தவிர்த்து நம்மிடம் இருக்கும் பந்து வீச்சை வைத்துக் கொண்டு 140-ஐ defend பண்ணுவது கடினம் என்றும் புரிந்தது. சென்னையின் மரண வேதனையின் முடிவில் மொத்த ஸ்கோர் 139!

இம்மாதிரி ஆடுகளத்தில் திறமையும், நிதானமும் உள்ள மட்டையாளர்கள் மட்டுமே பரிமளிப்பார்கள் என்பதற்கு கம்பீரும், காலிஸும் சிறந்த உதாரணங்கள். மெக்கல்லம் 3வது ஓவரிலேயே அவுட்டான பின், இருவரும் ஜோடி சேர்ந்ததில், 12 ஓவர்களில் 82-1. காலிஸ் அவுட்டான பிறகும், கம்பீர் RRR 8-க்கு மேல் போகாமல் பார்த்துக் கொண்டார். திவாரியும், கம்பீரும், பதானும், 18, 19 மற்றும் 20வது ஓவர்களில் விக்கெட்டிழந்து, Climax-இல் சற்றே சுவாரசியம் கூடியபோதும், சென்னைக்கு Anit-climax ஆக ஆட்டம் முடிந்தது. சேப்பாக்கம் என்ற CSK-யின் கோட்டை மதிள்சுவரில் விரிசல்கள் தோன்ற ஆரம்பித்திருப்பதால், சென்னை ரசிகர்கள் ரொம்பவும் எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பது அவர்கள் உடம்புக்கு நல்லது :-)

இத்தனை "பெத்த" பேரு மட்டையாளர்களை வைத்துக் கொண்டு (டுபிளஸ்ஸி, ஹஸ்ஸி, தோனி, ரைனா, ஜடேஜா, பிரேவோ, மார்க்கல், பத்ரி) 139 ரன்கள் எடுத்த ஒரு லாயக்கில்லாத அணி தோற்றது நியாயம் என்று தான் நினைக்கிறேன்! அதோடு, மார்க்கல் போன்ற பலம் வாய்ந்த hitter-களுக்கு ஒவ்வொரு ஆட்டத்திலும், கடைசியில் 8-10 பந்துகள் ஆடக் கிடைத்தால், அவர் தான் என்ன செய்ய முடியும்?
இந்த IPLலில் (மொத்தம் 8 ஆட்டங்களில், மும்பைக்கு எதிரான ஆட்டம் தவிர்த்து) அவருக்கு ஆடக் கிடைத்த வாய்ப்பு 7-8 ஓவர்கள் தான். இதில் என்னத்தை கிழிக்க முடியும்! அது போலவே, ரைனா கடந்த இரு IPL-கள் போல இந்த IPL-லில் பிரகாசிக்காதது சென்னையின் பின்னடைவுக்கு ஒரு முக்கியக் காரணம்.

தோனியும், பயிற்சியாளர் ஃபிளெமிங்கும், பிற பயிற்சியாளர்களும், திறமையான வீரர்கள் கொண்ட காம்பினேஷன் இருந்தும் சென்னையின் தொடர் தோல்விகளுக்கான காரணங்களை அலசி, புது திட்டங்களை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அது போலவே, என்னைப்போன்ற சென்னை ரசிகர்கள், கேல்குலேடரை கையில் வைத்துக் கொண்டும், Spreadsheet அனாலிஸிஸ் செய்தும், எத்தனை ரன் வித்தியாசத்தில், எவன் ஜெயித்து எவன் தோற்பதால், எந்த ஆட்டத்தில் மழை பெய்வதால், சென்னை அணி (எப்படியாவது) அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்புகள் குறித்து ஆராய்ச்சி செய்யத் தயாராக வேண்டும் ;-)

சென்னை சூப்பர் கிங்க்ஸ் (CSK) தங்கள் பெயரை "சென்னை சப்பைக் கம்மனாட்டிகள்" என்று மாற்றிக் கொள்ளலாம்! இந்த இடுகையில், யாரையும் திட்டக்கூடாது என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், "முடியல", மன்னிக்கவும்!

எ.அ.பாலா

எஜமானுக்கு சுருட்டு. தொழிலாளிக்கு பீடி. தொழிலாளர் தின நல்வாழ்த்துகள். [ புகை பிடித்தல் உடல் நலத்திற்குக் கேடு.
]


6 Comments:

ப்ரதிவாதி பயங்கரம் கிரிக்கட்டாச்சாரி said...

ஹைய்யோ பாலா! திரும்ப கிரிக்கெட் சகதியில் விழுந்தாச்சா! பக்தியும் கிரிக்கெட்டும் ஒரே பேரில எழுதறதவிட, பக்திக்கு ஸ்ரீவேணுகோபலன், செக்ஸ் கதைகளுக்கு புஷ்பா தங்கதுரைன்னு ஒருத்தர் ரெண்டு பேரில் எழுதினமாதிரி நீங்களும் try பண்ணலாம்.

Anonymous said...

ஐயா! சென்னை என்று அணியின் பெயர் இருப்பதால் ரொம்ப பாசம் காட்டவேண்டாம். ஆடுபவர்கள் பெரும்பாலும் வெளி மாநிலம்/ நாடு. ஒரு ஐடியா தரட்டுமா. உம்ம மாதிரி நாமக்காரனுங்கள்லாம் ஒண்ணு சேர்ந்து இன்னொரு IPL - Iyengar Players League ன்னு ஒண்ணு ஆரம்பிக்கலாமே. ஆனா டீமுக்குள வடகலை, தென்கலைன்னு சண்டை போட்டுக்காம இருக்கனும்.

வவ்வால் said...

//சென்னை சூப்பர் கிங்க்ஸ் (CSK) தங்கள் பெயரை "சென்னை சப்பைக் கம்மனாட்டிகள்" என்று மாற்றிக் கொள்ளலாம்!//

பாலா ஏற்கனவே ஒரு நல்லப்பெயர் இருக்கே "சென்னை சொதப்பல்ஸ் கிங் "என.

என்ன இங்கேயே நிரந்தரமா தங்கிட்டிங்க அப்போ இதுவும் உங்க வீடு தானா :-))

இந்த முறை அதிகம் உதை வாங்கும் அணியாக சென்னை இருக்கும், கடைசி ஒரு மேட்சில் வென்றால் நாக் அவுட் போகலாம் என்னும் நிலையில் உள்ளே நுழையும் எல்லாம் ஶ்ரீனிவாசன் கையில் :-))

Anonymous said...

//கடந்த ஒரு 4-5 IPL ஆட்டங்களை ஏனோ பார்க்கவில்லை! //

Engaluku Nalla Kaalam...

Anonymous said...

என்னைப் பொருத்தவரை, இந்த விக்கெட்டுகள் எல்லாமே ஒரு கட்டாந்தரை போலத்தான் இருக்கின்றன! இதில் பௌலர் திறமை என்று எதுவும் தோன்றவில்லை. ஒரே ஒரு திறமை நோ பால் அல்லது வைடு போடாதிருப்பது என்று வேண்டுமானால் கொள்ளலாம். அதிலும் இந்த மேட்ச்சில் அக்கறையே இல்லாமல் ஏகப்பட்ட எக்ஸ்ட்ரா csk போட்டதும் தோல்விக்கு முக்கிய காரணம் அல்லவா பாலா??
-ரோமிங் ராமன்.

enRenRum-anbudan.BALA said...

//

Anonymous said...
ஐயா! சென்னை என்று அணியின் பெயர் இருப்பதால் ரொம்ப பாசம் காட்டவேண்டாம். ஆடுபவர்கள் பெரும்பாலும் வெளி மாநிலம்/ நாடு.


//
எல்லா அணிகளுமே இந்த லட்சணத்தில் தானே! டிராவிட்டும், ரஹானேயும் ராஜஸ்தான் மண்ணின் மைந்தர்களா? கெய்ல், கோலி, அகர்வாலுக்கு கன்னடத்தோடு ஸ்நான ப்ராப்தி கிடையாதே! கங்குலி, உத்தப்பா, டிண்டா ஆடுவது புனே அணிக்கு! கொல்கத்தா அணியை விடுங்கள், அதன் ஓனர் ஷாருக் கூட பெங்காலி இல்லை :) மும்பையும் இதில் காலி தான்! இன்னும் நிறைய உள்ளது இப்படி!

சென்னை அணி எவ்வளவோ பரவாயில்லை. கடந்த 3-4 ஐபிஎல்-களில், சென்னை அணியில் முரளி விஜய், அனிருத்தா, பத்ரி, அஷ்வின், பாலாஜி, Y.மகேஷ் என்று பல உள்ளூர் வீரர்கள் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள்!