பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 21, 2012

IPL - கெய்ல் புயல் ஓய்ந்து சென்னையில் சகஜ நிலை குறித்தும் மற்றும் பிறவும் -எ.அ.பாலா

என்னமோ ஒண்ணுமே புரியலை, அதெப்படி 3 ஆட்டங்களும் (DD vs KXIP, DC vs RR, DC vs RCB) சென்னைக்கு சாதகமாக அமைந்தது என்று!!!! தில்லி பஞ்சாபை வென்றது பெரிய விஷயமில்லை என்றாலும் டெக்கான் ராஜஸ்தானையும் பலம் வாய்ந்த பெங்களூர் அணியையும் வீழ்த்தியதை நம்பவே முடியவில்லை. கெய்லும் கோலியும் டிவிலியர்சும் டெக்கானை நசுக்கியிருக்க வேண்டாமோ !?!? என்னமோ நடக்குது மர்மமா இருக்குது என்றெல்லாம் சொல்லி, டெயில் ஸ்டெயின் என்ற உலகத்தின் தலை சிறந்த பந்து வீச்சாளரை சிறுமைப்படுத்த இஷடமில்லை! கெய்ல், தில்ஷன், கோலி என்ற திறமை மிக்க 3 மட்டையாளர்களுக்கு எதிராக அவரது அந்த பந்து வீச்சை (4-0-8-3) விவரிக்க வார்த்தைகள் இல்லை !

இந்த ஐபிஎல்-லில் 700+ ரன்கள் அடித்த கெய்லையும், கோலியையும் நினைத்தால் பாவமாக இருந்தாலும், ஆணாதிக்க திமிருடன், லூக் போமர்பேஷ் விஷயத்தில், புகார் கொடுத்த பெண்ணின் நடத்தை பற்றி டிவிட்டரில் அசிங்கமாக உளறியிருந்த, அவரது அப்பா மால்யா என்பது தவிர வேறெந்த பெரிய த்குதியும் இல்லாத சித்தார்த்த மால்யாவுக்கு இது தேவை தான் என்ற எண்ணம் என்னைப் போல் பலருக்கும் தோன்றியிருக்கக் கூடும்!

என் நண்பர்களில் சிலர், ஐபிஎல்-லில் பெட்டிங் / ஃபிக்ஸிங் நிச்சயம் உள்ளது என்பதற்கு பல க்ளோஸ்

ஆட்டங்களை உதாரணமாகக் கூறி வந்துள்ளனர்! இதற்கு சுவாரசியமான காரணங்கள் வேறு :) ஐபிஎல் திரைக்குப் பின் நடப்பவை அனைத்துமே குழப்பமாக இருப்பதால், என்னைப் போன்ற சராசரி “சென்னை” ஆட்களின் ஒரே interest சென்னை அணி எப்படியாவது செமியில் பூந்து விட வேண்டும் என்பது மட்டுமே! (அதற்கு யார் எக்கேடு கெட்டாலும் கவலையில்லை :)) அது நடந்தும் விட்டதால், இன்னும் 48 மணி நேரம் எந்த டென்ஷனும் இல்லை, சென்னை-மும்பை ஆட்டம் தொடங்கும் வரை!

ஆனால், பங்களூரில் இந்த ஆட்டம் நடக்கவிருப்பதால், பங்களூர் செய்த சொதப்பலால், கொல்லைப்புறம் வழியாக செமியில் நுழைந்த சென்னைக்கு, சின்னசாமியில் ரசிகர்கள் ஆதரவு கிடைக்காது என்று தோன்றுகிறது! காவிரித் தண்ணீரையே தர மாட்டேன் என்கிறார்கள்! ஐபிஎல் ஆட்டத்தில் சென்னைக்கு ஆதரவு தராவிட்டால் என்ன குடி முழுகி போய் விடப் போகிறது! அது போல, சுழற்பந்து வீச்சுக்கு அதிக ஆதரவு இல்லாத வகையில், புனேவிலும், சேப்பாக்கத்திலும் ஆடுகளங்கள் சற்றே சீர் செய்யப்பட்டால், கொல்கத்தா அணிக்கு unfair advantage கிடைக்காமல் போகும்!

மற்றும் பிற:

ஐபிஎல்-லில் நடக்கும் விரும்பத்தகாத விஷயங்கள் (லூக், ஜுனியர் மால்யா, ஷாருக் லூட்டிகள்!) குறித்தும், BCCI-கார்ப்பரேட் கூட்டு சேர்ந்து கிரிக்கெட்டை ஒரு வழி பண்ணுவது பற்றியும், அதிக விலை டிக்கட்களை காரணம் காட்டியும், பொதுவாக கிரிக்கெட் மேல் உள்ள கடுப்பால் அறச்சீற்றம் கொள்வோரைக் கண்டு ரொம்ப பரிதாபமாக இருக்கிறது! (லாலு ஐபிஎல்-லை மூடிவிட வேண்டும் என்கிறார், இதென்ன மளிகைக்கடையா ;)) இவர்கள் அறச்சீற்றப்படுவதற்கு இந்த நாட்டில், ஐபிஎல்-லை விட மக்களை மிகுந்த இம்சைக்கு உள்ளாக்கும் பல விஷயங்கள் உள்ளன!

சில பெரிய உதாரணங்கள்:
1. ஆயிரக்கணக்கான கோடிகள் சர்வ சாதாரணமாக சுருட்டப்படும் மெகா ஊழல்கள்! (மாஜி அமைச்சர் சுக்ராம், பங்காரு லஷ்மண் தவிர வெறெந்த பெரிய அரசியல்வாதியும், எந்த ஊழலுக்காகவும் தண்டிக்கப்பட்டதாக நான் கேள்விப்பட்டதில்லை!) 2. கிலோ 120 என்று பீன்ஸ் விற்பதற்கும், சராசரி மக்கள் சொந்த வீடு என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு நில விலை எகிறி விட்டதற்கும், இன்னும் பலவற்றுக்கும் காரணமான பணவீக்கம்!
3. வெளிநாட்டு வங்கிகளில் ஒளிந்து கொண்டிருக்கும் (பல பில்லியன் டாலர்கள்) கறுப்புப் பணம்!

சில சின்ன உதாரணங்கள்:
1. தியேட்டர்களை மல்டிபிளக்ஸ்களாக மாற்றி, டிக்கட் விலையை ஏற்றியதோடு மட்டுமல்லாமல், உள்ளே தின்பண்டங்களை 5 மடங்கு விலைக்கு அநியாயமாக விற்கும் அவலம்! (இவ்விடங்களில் வெளி உணவுக்கு அனுமதி கிடையாது என்பது தெரிந்ததே!) 2. ஐந்து நட்சத்திர விடுதிகள் போல இயங்கும் சிலபல தனியார் மருத்துவமனைகள்! இங்கு சாதா ஜுரத்துக்குக் கூட 5 வித பரிசோதனைகள் செய்து விட்டுத் தான், சிகிச்சை தரப்படும்.
3. கல்வியை முழுமொத்த வியாபாரம் ஆக்கி விட்ட சிலபல தனியார் கல்லூரிகள் / பள்ளிகள் 4. நடிகர்கள் கட்-அவுட் பாலாபிஷேக கலாச்சாரம்! (பாவம், பா.ம.கட்சியினர் மட்டும் தான் இதுக்கு சவுண்டு விடறாங்கோ!)

இப்படி எத்தனையோ டைனாசர் டைப் அவலங்கள் இருக்கையில், ஐபிஎல்-லில் நடக்கும் எறும்பு சைஸ் அவலங்களை குறை கூறி என்ன ஆகப் போகிறது !!! ஏதோ ஒரு 4 மணி நேரம் ஜாலியா, கொஞ்சம் டென்ஷனா கிரிக்கெட்டைப் பார்த்தோமா, அப்படியே சியர் லீடர்ஸையும், அர்ச்சனா விஜயாவையும், ஷிவாங்கியையும் இன்ன பிற கூத்துகளையும் ரசிச்சோமா என்று அடுத்த ஜோலிக்கு போயிக்கினே இருக்கணும்! அப்படியே டென்ஷனா இருந்தா, சீனாவில் காசு கொடுத்தாலும் கிடைக்காத கருத்துச் சுதந்திரத்தை பயன்படுத்தி, டிவிட்டர், ஃபேஸ்புக்கில் யாரையாவது / எதையாவது ஒரு வாங்கு வாங்கிட்டு அமைதியாயிடணும் ;-) நம்ம குயிக் கன் முருகன் பாணியில் சொல்லணும்னா, “We are (can be!) like that Only!"

டெயில் பீஸ்:

தற்போது லார்ட்ஸில் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே டெஸ்ட் ஆட்டம் நடந்து வருகிறது! வெஸ்ட் இண்டீஸ் போராடியும், இங்கிலாந்து ஜெயிக்கும் நிலையில் உள்ளது. இதில், KKRக்கு ஆடும் சுனில் நரைனும், RCBக்கு ஆடும் கெய்லும், CSKக்கு ஆடும் பிரேவோவும் பங்கு பெறாதது, சற்று வருத்தமாக இருக்கிறது! இவர்கள் ஆடியிருந்தால், ஆட்டம் இன்னும் அருமையாக இருந்திருக்கும். அதுவும், நரைன் இங்கிலாந்து மட்டையாளர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியிருப்பார்!

எ.அ.பாலா

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா
தேவையான பொருட்கள்:

நெய் - 300 கிராம்,

சம்பா கோதுமை - 200 கிராம்,

சீனி - 600 கிராம்

செய்முறை:

கோதுமையை முதல் நாளே தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். ஊறிய பின்பு ஆட்டுக்கல்லில் போட்டு அரைக்க அரைக்க பாலாக பொங்கும். அதை ஒரு துணியை வைத்து வடிகட்டி எடுக்க வேண்டும்.

அடுப்பில் ஒரு வாணலியை (பாத்திரம்) வைத்து, அதில் கோதுமைப் பாலை ஊற்ற வேண்டும். பால் கொதித்து வரும்போது சீனியைப் போட்டு நன்றாக கிளற வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கிளறுவதை நிறுத்தக் கூடாது. பாலும், சீனியும் இறுகி கெட்டியான ஒரு பதத்திற்கு வரும்போது,நெய்யை ஊற்றிக் கிளற வேண்டும். கிளறிக்கொண்டிருக்கும்போதே அல்வா குங்கும நிறத்திற்கு மாறிவரும். அப்படி வந்தவுடன் ஒரு பெரிய தட்டில் ஊற்றி ஆற வைக்க வேண்டும். நன்றாக ஆறியபின்பு எடுத்துச் சாப்பிட்டால் இருட்டுக்கடை அல்வாவின் சுவை தானாக வரும்!


20 Comments:

ஜெ. said...

அப்போ இட்லி வடைக் கடையில் இனி அல்வாவும் கிடைக்கும்! ஆமாம், முதல் லவா போணி யாருக்கு - ”எப்படியாவது ஸி.எஸ்.கே. செமி (ஃப்னலில்) புகுந்துவிடும் என்று கனவு காணும் பாலாவுக்கா! மற்ற 3 டீம்கள் சொதப்பியதோ, இல்லை வாங்கப்பட்டதோ - இப்படியும் ஒரு வெற்றி தேவையா? - ஜெ.

ஜெ. said...

பாலா செஸ்ஸை விட்டு விட்டாரா? ஆனந்த் இப்படி அடி வாங்கியும் இவர் இன்னும் உதவிக்குப் போகவில்லையே! தனக்கும் ஏதாவது தர்ம அடி கிடைக்கும் என்று பம்முகிறாரா? - ஜெ.

bandhu said...

ஒரு naive கேள்வி.. சென்னை டீமிற்கும் சென்னைக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா?

enRenRum-anbudan.BALA said...

ஜெ,

நியூஸ் பார்க்கற / வாசிக்கிற வழக்கமே கிடையாதா ? இன்னிக்கு ஆனந்த் கெல்ஃபாண்டை பின்னி பெடலெடுத்துட்டாரே, மேட்டர் தெரியாதா? 20 மூவ்கள் கூட தாங்கலை, தெரியுமா !!!

Anonymous said...

/*ஐபிஎல் திரைக்குப் பின் நடப்பவை அனைத்துமே குழப்பமாக இருப்பதால், என்னைப் போன்ற சராசரி “சென்னை” ஆட்களின் ஒரே interest சென்னை அணி எப்படியாவது செமியில் பூந்து விட வேண்டும் என்பது மட்டுமே!*/
ipl la semis unda enna?

enRenRum-anbudan.BALA said...

//மற்ற 3 டீம்கள் சொதப்பியதோ, இல்லை வாங்கப்பட்டதோ - இப்படியும் ஒரு வெற்றி தேவையா? - ஜெ.
//

நல்ல கேள்வி :) நான் குறிப்பிட்ட மத்த மெகா அவலங்களுக்கு மத்தியில், உங்க கேள்விக்கான பதில்:

மேரா பாரத் மஹானில், துட்டு கொடுத்து இப்படி வெற்றியை வாங்கியிருந்தால் கூட அது ஒரு பிரச்சினையே இல்லை! என்சாய் !

enRenRum-anbudan.BALA said...

bandhu,

//ஒரு naive கேள்வி.. சென்னை டீமிற்கும் சென்னைக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா?
//

இதற்கு ஏற்கனவே பதில் சொல்லி விட்டேன், ஒரு பின்னூட்டம் வாயிலாக!
கட் & பேஸ்ட் உங்களுக்காக:

enRenRum-anbudan.BALA said...

//

Anonymous said...
ஐயா! சென்னை என்று அணியின் பெயர் இருப்பதால் ரொம்ப பாசம் காட்டவேண்டாம். ஆடுபவர்கள் பெரும்பாலும் வெளி மாநிலம்/ நாடு.


//
எல்லா அணிகளுமே இந்த லட்சணத்தில் தானே! டிராவிட்டும், ரஹானேயும் ராஜஸ்தான் மண்ணின் மைந்தர்களா? கெய்ல், கோலி, அகர்வாலுக்கு கன்னடத்தோடு ஸ்நான ப்ராப்தி கிடையாதே! கங்குலி, உத்தப்பா, டிண்டா ஆடுவது புனே அணிக்கு! கொல்கத்தா அணியை விடுங்கள், அதன் ஓனர் ஷாருக் கூட பெங்காலி இல்லை :) மும்பையும் இதில் காலி தான்! இன்னும் நிறைய உள்ளது இப்படி!

சென்னை அணி எவ்வளவோ பரவாயில்லை. கடந்த 3-4 ஐபிஎல்-களில், சென்னை அணியில் முரளி விஜய், அனிருத்தா, பத்ரி, அஷ்வின், பாலாஜி, Y.மகேஷ் என்று பல உள்ளூர் வீரர்கள் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள்!
May 04, 2012 12:50 AM

enRenRum-anbudan.BALA said...

//ipl la semis unda enna?//

மன்னிக்கவும்! அதை Play off என்று எழுதியிருக்க வேண்டும், அவசரத்தில் தப்பாக எழுதி விட்டேன்!

வவ்வால் said...

பாலா,

விடாம சப்பைக்கட்டு செய்யுறிங்க :-))

முன்னரே உங்களின் ஒருப்பதிவில் நான் சொன்னதும்

//இந்த முறை அதிகம் உதை வாங்கும் அணியாக சென்னை இருக்கும், கடைசி ஒரு மேட்சில் வென்றால் நாக் அவுட் போகலாம் என்னும் நிலையில் உள்ளே நுழையும் எல்லாம் ஶ்ரீனிவாசன் கையில் :-))

May 01, 2012 9:47 PM //

Anonymous said...

ஒரு naive கேள்வி.. சென்னை டீமிற்கும் சென்னைக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா?

repeat

சாதாரண கிராமத்தான் said...

என்னப்பா இட்லி, இந்த வீணாப்போன ipl பற்றி இதனை கட்டுரையும் ஏதாவது ஒரு நடிகையின் படமும் தவறாமல் போடுகிறீர்களே இந்த உலக சாம்பியன் செஸ் போட்டி அப்படின்னு ஒன்னு நடந்து வருகிறதே அதை பற்றி ஒன்றுமே வரவில்லையே? அதிலும் நம்ம ஊரு ஆனந்த, இப்போதைய உலக சாம்பியன் விளையாடும்போது கூட. குடி, கும்மாளம், நடிகையுடன் கூத்து இப்படி ஏதாவது கவர்ச்சி சமாச்சாரம் இருந்தால்தான் இந்த செஸ் பற்றியும் பதிவு வரும் போல இருக்கு.

ஜெ. said...

பாலா அவர்களுக்கு: செஸ் பேப்பரில் படிப்பதோடு சரி, வரிசையான ட்ராக்களை டி வி சானல்களிலோ, நெட்டில் ப்ரௌஸ் பண்ணியோ பார்க்கும் தெம்பு எனக்கில்லை! சரி, ஆனந்த் சமன் செய்துவிட்டார். இனி எப்படி என்று கொஞ்ஜம் ஜோஸ்யம் சொல்லுங்களேன்! - ஜெ.

anujanya said...

பாலாவோ லலிதா ராமோ செஸ் பற்றி எழுதலாமே. சென்ற முறை லலிதா ராம் எழுதியது ரொம்ப நல்லா இருந்தது.

IdlyVadai said...

//பாலாவோ லலிதா ராமோ செஸ் பற்றி எழுதலாமே. சென்ற முறை லலிதா ராம் எழுதியது ரொம்ப நல்லா இருந்தது.//

இன்று கேட்டேன், அவர் வெளிநாடு போகிறாராம்... ஆட்டம் முடிந்தவுடன் எழுதுகிறேன் என்று சொல்லியிருக்கார். பாலா கேட்டுப்பார்க்கிறேன்....

Anonymous said...

Commentary-galai poruthamattil. Lalitha Ram malai and bala madu.

நெருப்பாற்றில் நீஞ்சி வந்த சிங்கம் said...

மஞ்சள் கமெண்ட்டு நல்லா இருக்குவெண்று தானே எல்லாரும் சொல்கிறாங்கோ.......அப்புறம் அதை இன்னாத்துக்கு கோசரம் இப்படி எழுதிக் கொடுக்கோனும்மெண்டு நான் வினவ விரும்புறேன்.

Anonymous said...

பொழுதுபோக்கு !! நல்ல இருக்கு !! மத்தபடி எல்லாம் நம்பிக்கை தான் !!

Anonymous said...

இனிமேல் இட்லிவடை பக்கமே வராமல் இருந்துவிடலாமா என்கிற அளவுக்கு பாலா தொடர்மொக்கை போடுகிறார். என்னைபோல பல இட்லிவடை வாசகர்களும் நினைக்கிறார்கள். இட்லிவடை சமீபத்தில் தனக்கு ஏற்பட்ட ஹிட்ஸ் சரிவை சரிபார்த்தால் இது புரியும்.

enRenRum-anbudan.BALA said...

//Anonymous said...

இனிமேல் இட்லிவடை பக்கமே வராமல் இருந்துவிடலாமா என்கிற அளவுக்கு பாலா தொடர்மொக்கை போடுகிறார். என்னைபோல பல இட்லிவடை வாசகர்களும் நினைக்கிறார்கள். இட்லிவடை சமீபத்தில் தனக்கு ஏற்பட்ட ஹிட்ஸ் சரிவை சரிபார்த்தால் இது புரியும்.//

பல வாசகர்களின் எண்ணப்போக்கையும் அறியவல்ல நீர் பெரிய மகானாகத் தான் இருக்க முடியும்! தங்கள் பெயர் சொன்னால், தன்யனாகி, தங்களுக்கு சீடனாவது குறித்து யோசிப்பேன் ;-)

ஒரு தகவலுக்காக: ஹிட்ஸ் சரிவு என்று நீரே ஏதாவது எடுத்து விடாதீர்! அதெல்லாம் நன்றாகவே இருக்கிறது. உம்மைப் போல ஒரு 10% ஆட்களுக்கு மொக்கை என்று பட்டால், எனது இடுகைகளை வாசிக்காமல், மற்ற இ.வ இடுகைகளை வாசியுங்களேன். யார் உம்மை கட்டாயப்படுத்தி வாசிக்கச் சொன்னது ????

கௌதமன் said...

இருட்டுக் கடை அல்வாவில் இருட்டு எவ்வளவு பங்கு போடவேண்டும் என்பதையும் சொல்லுங்கள்!