பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, May 06, 2012

IPL 5 - CSK vs MI -மும்பைக்கு வெற்றியை விட்டுக் கொடுத்த சென்னை -எ.அ.பாலா

டாஸில் வென்ற ஹர்பஜன், பந்து வீச முடிவு செய்தார். சென்னைக்கு நல்லதொரு தொடக்கம். 6 ஓவர்களில் 52-1. வழக்கத்திற்கு மாறாக விஜய் ஃப்ரீயாக ஆடினார், முனாஃபின் ஒரு ஓவரில் அவர் விளாசியதில் 24 ரன்கள், ரொம்ப ஃப்ரீயாக ஆட முயன்று, அவுட்டானார்.. ரைனா வழக்கம் போல சுறுசுறுப்பாக ஆடி, 20 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து, பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி, பிராங்க்ளினின் டுபாக்கூர் பந்துக்கு விக்கெட் இழந்தார்!

உள்ளே வந்த தோனி, சென்ற ஆட்டம் போல சொதப்பாமல், பாஸிட்டிவ்வாக ஆடியது கண்டு திருப்தியாக இருந்தது, பிரேவோவும் சிறப்பாகவே ஆடினார், 16 ஓவர்களில் 138 for 3 என்ற நிலையில் சென்னை 180-ஐ தாண்ட முடியாமல் போனதற்கு RPசிங்கும், மலிங்காவும் முறையே வீசிய 19வது, 20வது ஓவர்கள். சென்னை எடுத்த மொத்த ஸ்கோரான 173, உருப்படாத மிடில் ஆர்டர் கொண்டிருக்கும் மும்பை அணிக்கு அதிகம் என்று தான் தோன்றியது!ஹில்ஃபன்ஹாசின் முதல் ஓவர் ஒரு அருமையான மெய்டன்! 3வது ஓவரில் பிரான்க்ளினை வீட்டுக்கு அனுப்பினார். அதன் பின் சச்சினும், ரோஹித்தும் வெகு சிறப்பாக ஆடினார்கள் என்று தான் கூற வேண்டியுள்ளது. ரன்கள் குவிந்த வண்ணம் இருந்தது. Sachin was in supreme form. ஒரு வழியாக அஸ்வின் வீசிய 16வது (அஸ்வினின் நாலாவது ஓவரை அது வரை தள்ளிப் போட்ட தோனியை பாராட்ட வேண்டும்) ஓவரின் கடைசி பந்தில் டுபிளஸ்ஸி பிடித்த சூப்பர் காட்ச் வாயிலாக சச்சின் (74, 44 பந்துகள்) அவுட்.

சென்னை வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் நம்பிக்கை மெல்ல துளிர்க்க ஆரம்பித்த கணம் இது என்று சொல்லலாம். சென்னை இருந்த நிலைமைக்கு, அஷ்வினின் பந்து வீச்சு அபாரமானது, 4-0-28-1. 57 (42 பந்துகள்) ரன்களில் ஆடிக் கொண்டிருந்த ரோஹித் சர்மா, அம்பானி கொடுக்கும் துட்டுக்கு உயிரைக் கொடுத்து ஆடுவது போலவே, பரிதாபமான இந்திய கிரிக்கெட் ரசிகர்களூக்காகவும், இந்திய அணிக்கு ஆடும்போதும் இது போல ஆட வேண்டும் என்பது என் பிரார்த்தனை. ரோஹித் மும்பை ரஞ்சி அணிக்கு ஆடுவதனாலேயே பயங்கரமாக hype பண்ணப்பட்டவர் என்பது என் எண்ணம். திறமை வாய்ந்தவர் தான். ஆனால், கோலி, ரெய்னா போன்றவர்கள் அவரை விட temperament-இல் எவ்வளவோ மேல்!

38 of 24 என்பது, கவைக்குதவாத கார்த்திக் (இது இன்னொரு hype type) பிரேவோவின் 17வது ஓவரில் 2 பவுண்டரிகள் ஓசியில் அடித்ததால் (கடைசி பந்தில் எதிர்பார்த்தது போல அவுட் :)) இலக்கு 27 of 18 (147/3) என்றாகி மும்பைக்கு சாதகமாகவே இருந்தது! 18வது ஓவரை வீச ஜடேஜாவை தோனி அழைத்ததை மாஸ்டர் ஸ்ட்ரோக் என்பேன்!!! அந்த ஓவரில் ராயுடுவும், ரோஹித்தும் காலி, 2 ரன்கள் மட்டுமே! ஆட்டம் சென்னை பக்கம் திரும்பத் தொடங்கியிருந்தது. ஆட்டத்தை பார்த்தபடி, நான் வழக்கமான ராமானுச நூற்றந்தாதி பாராயணத்தின் நடுவில் இருந்தேன் :-)

ஹில்ஃபன்ஹாசுக்கு ஒரு ஓவர் பாக்கி இருந்த நிலைமையில், நம்பிக்கை அதிகமாகியது! 19வது ஓவரை, ஸ்மித் அடித்த ஒரு சிக்ஸர் பந்து தவிர்த்து, பிரேவோ சிறப்பாகவே வீசினார்! அந்த ஓவரில் பீட்டர்சன் ரன் அவுட். பந்து வீச்சிலும் பரிமளிக்காத, கேப்டன் ஆக இருக்கவும் லாயக்கில்லாத (இவர் அணியில் இருப்பதே சச்சின் போட்ட பிச்சை!) ஹர்பஜன் முதல் பந்து முட்டை எடுத்து அவுட்.

25 of 12 என்பது 16 of 6 என்று ஆட்டம் முழுவதுமாக சென்னை பக்கம் திரும்பியிருந்த நிலையில், ஹில்ஃபன்ஹாஸ் முதல் 3 பந்துகளை அருமையாக வீசி, மலிங்காவை வீழ்த்தி, 2 ரன்கள் மட்டுமே வழங்கியதில், சென்னை ரசிகர்கள் ரொம்ப சந்தோஷமாக இருந்தது டிவிட்டரில் தெரிந்தது! 3 பந்துகள், 14 ரன்கள் தேவை. இப்போது தான் ஹில்ஃபன்ஹாசுக்கு ஏழரை நாட்டு சனியன் பிடித்து, ஸ்மித் போன்ற, காலணாவுக்கு பிரயோஜனம் இல்லாத, மட்டமான பேட்ஸ்மனுக்கு (யார்க்கருக்கு முயற்சித்து) தொடர்ந்து 2 ஃபுல் டாஸ் பந்துகள் வீசி, ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் தாரை வார்த்தார்.

1 பந்து 4 ரன்கள் தேவை. இப்போது கூட சென்னை ஜெயித்திருக்கலாம், அவர் ஒரு well directed short ball வீசியிருந்தால்! தோனி வந்து அறிவுறுத்தியும், ஹில்ஃபன்ஹாஸ் அந்த கடைசி பந்தை over pitch பண்ணியதால், காட்டான் ஸ்மித் காட்டுத்தனமாக அடித்ததில், பந்து பவுண்டரிக்கு பறந்தது. மும்பை என்ற மிகச்சாதாரண அணிக்கு இன்னொரு ஓசி வெற்றி! மும்பை வென்றது என்பதை விட சென்னை தோற்றது என்பது சரியாக இருக்கும். ஹர்பஜனுக்கு போலிங், பேட்டிங், கேபடன்ஸி என்று எதுவுமே சிலாக்கியமாக இல்லாவிட்டாலும், அதிர்ஷ்டம் நிறைய உள்ளது! அதே அதிர்ஷ்டம் தோனியை இந்த ஐபிஎல்-இல் அடிக்கடி கை விட்டு விடுவதால், சென்னை சற்றே சிரமமான நிலைமையில் உள்ளது.

இன்னும் சென்னை (மும்பை அணி chokers போல் அல்லாமல், 2 முறை சேம்பியன்ஷிப்பை தொடர்ந்து வென்ற அணியாயிற்றே!) மீது நம்பிக்கை இருக்கிறது, பார்ப்போம்!

எ.அ.பாலா
காலையில் கருடசேவை சேவித்த பாலாவுக்கு இந்த நிலமை வந்திருக்க கூடாது.

12 Comments:

விச்சு said...

செம த்ரில்லிங் மேட்ச். சென்னை கோட்டை விட்டதில் கொஞ்சம் வருத்தமே. ஜெயிக்க வேண்டிய மேட்ச் வீணாக்கிவிட்டார்கள்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

உங்கள் பாசிடிவ் வரிகளால் இன்னும் நம்பிக்கை உள்ளது சென்னை டீமிடம்

CS. Mohan Kumar said...

கடைசி ஓவரில் அந்த ரெண்டு புல் டாஸ் மேட்ச் பிக்சிங் இருக்கு என்கிற வாதத்தை நம்ப வைக்குது. சென்னை மீது இன்னும் நம்பிக்கை வைப்பது வீணே என்று தோன்றுகிறது. இம்முறை பல ஜெயிக்க வேண்டிய மேட்ச் தோற்று கொண்டிருக்கின்றனர் :((

valaiyakam said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

நன்றி

வலையகம்

Vinoth said...

Started my manipulation on points table & fixtures, let us pary for Bolinger to come to form..otherwise it's a big doubt. I heard of hot news..but here Bala has given hot review comments. great work!!

என்.ராமதுரை / N.Ramadurai said...

எனக்கு என்னவோ இந்த்த் தடவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சான்ஸ் இருப்பதாகத் தோன்றவில்லை. சென்னை அணியை விட நல்ல தாத்திலுள்ள் கல்கத்தா, பெங்களூர், தில்லி அணிகளில் ஒன்று பட்டத்தைப் பெறுவதே பொருத்தமாக இருக்கும்.
என் ராமதுரை

ஜெ. said...

//18வது ஓவரை வீச ஜடேஜாவை தோனி அழைத்ததை மாஸ்டர் ஸ்ட்ரோக் என்பேன்!!// எப்போ அப்படி நினைத்தீர்கள் - ஓவர் ஆரம்பிக்கும் போதா அல்லது முடிந்த பின்பா?!!

//25 of 12 என்பது 16 of 6 என்று ஆட்டம் முழுவதுமாக சென்னை பக்கம் திரும்பியிருந்த நிலையில், ஹில்ஃபன்ஹாஸ் முதல் 3 பந்துகளை அருமையாக வீசி, மலிங்காவை வீழ்த்தி, 2 ரன்கள் மட்டுமே வழங்கியதில், சென்னை ரசிகர்கள் ரொம்ப சந்தோஷமாக இருந்தது டிவிட்டரில் தெரிந்தது!// அப்போ நீங்க என்ன நினைச்சீங்க?!! தோனியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்குன்னு தானே!

// ஆட்டம் சென்னை பக்கம் திரும்பத் தொடங்கியிருந்தது. ஆட்டத்தை பார்த்தபடி, நான் வழக்கமான ராமானுச நூற்றந்தாதி பாராயணத்தின் நடுவில் இருந்தேன் :-)// சொல்லி முடித்தீர்களா, இல்லையா!

-ஜெ.

R. J. said...

Is the umpire saying - 'Out!' to the stray dog?!! - R. J.

Anonymous said...

இட்லிவடையில் அய்பியெல் கட்டுரைகள் ரொம்ப மட்டமாக இருக்கிறது. நாங்கள் மேட்சில் என்ன பார்த்தோமோ அதையே பதிவாக எழுதி யாருக்கு என்ன பிரயோசனம். நல்ல எழுத்தாளரை வைத்து இட்லிவடை இதை எழுத வைக்கலாம்.

pasa paravaigal said...

Bala ur only onside person please dont write this kind of dummy story

pasa paravaigal said...

Bala ur only onside person please dont write this kind of dummy story

Anonymous said...
This comment has been removed by a blog administrator.