பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, May 26, 2012

கி அ அ அனானியின் வாதம்


நேற்று மும்பை தோற்றதற்கு காரணம் நானே! - ஹர்பஜன் வாக்குமூலம் என்ற தலைப்பில் கி.அ.அ.அனானி அனுப்பிய கேலி சித்திரத்தை பிரசுரித்தேன். பிறகு சிலரின் மனம் புண்பட கூடாது என்று அதை எடுத்தது பலருக்கு நினைவு இருக்கலாம்.

இன்று இட்லிவடைக்கு கி.அ.அ அனானி அவர்கள் கீழே அவருடைய வாதத்தை எனக்கு அனுப்பியுள்ளார். இட்லிவடை தனி ஒருவருடைய சொத்து இல்லை அது வாசகர்களுடைய சொத்தாகி பல காலம் ஆகிவிட்டது. இட்லிவடை செய்தது சரியா தப்பா என்று சைடில் இருக்கும் வாக்கு பெட்டியிலும், கீழே பின்னூட்டதிலும் தங்கள் கருத்தை சொல்லலாம். ( கார்ட்டூனை பார்க்காதவர்கள், எ.அ.பாலா பதிவில் பார்க்கலாம் )
நன்றி
இட்லிவடைஇந்த கேலி சித்திரத்தை போடுவதில் இட்லி வடைக்கு மறுப்பில்லை. "மனது புண்பட்ட" சிலரது வேண்டுகோளின் படி நீக்கியிருக்கிறார் என்று அர்த்தம் செய்து கொள்கிறேன்.

அம்பானி குடும்பத்துக்கு தமிழ் தெரியும் என்றோ அல்லது அவர்கள் நிரந்தர "இட்லி வடை " வாசகர்கள் என்றோ எந்தத் தகவலும் நான் இதுவரை கேள்விப் படாததால் இந்த மனம் புண்படுதல் நேரடியாக " அம்பானி குடும்பத்துக்கு " இல்லை. "அம்பானி ரசிகர்களுக்கு " மனிதாபிமானத்தின் அடிப்படையில் மட்டுமே என்றும் புரிந்து கொள்கிறேன்.

எந்த உடல் ஊனத்தையும் கேலி செய்வது தவறு என்றே நானும் நினைக்கிறேன்.ஆனால் நான் பார்த்த வரையில் குண்டு , ஒல்லி.தொப்பை போன்ற மாறும் தன்மையுடைய அம்சங்களைக் கேலி செய்வது சாதாரணமாக நடக்கும் விஷயங்கள்தான். இது தவறென்று சொல்பவர்கள் " ஒல்லி குச்சி " நரசிம்மனையும். "தயிர் வடை" தேசிகனயும், "குண்டு" கல்யாணத்தையும் தமிழ் சினிமா உலகம் அவர்களது உடல் வாகை வைத்து கேலி செய்து படம் பண்ணும் போது அதைப் பார்த்து கெக்கெக்கே என்று சிரிக்கிறோமா இல்லை அல்லது "ச்சே..ச்சே இதெல்லாம் தப்பு " என்று பக்கத்து சீட்டில் இருப்பவரிடமாவது சொல்கிறோமா என்று "புண் பட்ட " மனதைத் தொட்டு யோசிக்கலாம். நானும் குண்டு மல்லிகா, குட்டை கோமளா..டேய் இப்ப டல் திவ்யா தூள் திவ்யா ஆகிட்டாடோய்" மாதிரியானவைகளை தினமும் பார்ப்பதால் குண்டுத்தன்மையை கேலி செய்வது எனக்குத் தப்பாகப் படவில்லை.

இதைச் சொல்வது நான் அம்பானிக்களை கிண்டல் செய்தது சரி என்று சப்பைக் கட்டு கட்டுவதற்காக கண்டிப்பாக இல்லை.

இந்தியா போன்ற நாட்டில் பணம் படைத்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக 5 பேர் இருப்பதற்காக,1000 கோடி ரூபாயில் "அன்டில்லா " என்கிற அரண்மனையை விடப் பெரிய மாளிகையைக் கட்டி அதற்கு 70 லட்சம் ரூபாய் மின் கட்டணம் கட்டிக் கொண்டு பின் வாஸ்து சரியில்லை என்று சொல்லி கட்டிய வீட்டில் குடியிருந்தும் குடியிருக்காமல் இந்திய ஏழ்மையை எள்ளி நகையாடும் விதமாக வாழ்க்கை நடத்தும், அந்த பணத் திமிரை வெளிக்காட்டுவதில் சிறிதும் தயக்கம் காட்டாத அம்பானிக்களையும் ஊதாரித்தனத்திலும் தாந்தோன்றித்தனத்திலும் அவர்களை விட எதிலும் சற்றும் சளைக்காத மல்லையாக்களையும் மற்றும் அது போன்ற பணத்திமிர் பிடித்தலைபவர்களையும் "எல்லா விதத்திலும் " கிண்டலும் கேலியும் செய்வதில் எனக்கு எந்த தயக்கமோ ,வருத்தமோ கிடையாது என்பதையும் பதிவு செய்து கொள்கிறேன்.

கி அ அ அனானி.

வாக்கு பெட்டி சைடில்...:-)

12 Comments:

Anonymous said...

http://balaji_ammu.blogspot.com/2012/05/blog-post_26.html -- Cartoon is published by BALA

Anonymous said...

எனது கருத்தை வெளியிட்டமைக்கு நன்றி.
ஓட்டுப் பெட்டி எல்லாம் வைத்து தூள் கிளப்புகிறீர்கள்..ம்ம்..நடக்கட்டும்...looks like rigged :-) as of now 31 votes in favour of post and 1 against.
எனக்கு தற்சமயம் "வாதம்" எல்லாம் கிடையாது:-) அப்படி ஏதாவது வந்து விடக்கூடாது என்று பயந்து பயந்து தினம் உடற்பயிற்சி எல்லாம் கூட செய்கிறேன்:-)
கி அ அ அனானி

R. J. said...

What is the problem with IV? You don't mind publishing BNala's cricket blogs and make him face all the kindals, kelis and naiyaandis, but you don't want even an Ambani fan to be hurt. This is not fair to Bala. You should apologise to him or stop publishing his blogs so that he won't be targeted by many. - R. J.

Anonymous said...

I do agree with Bala that the cartoon has to be taken in a lighter way. But at the same time, nobody can say that moneyed people should not lead such a flamboyant life. It is like saying that since majority of Indians live in poor houses and thatched sheds, everyone should follow that lifestyle. Anomalies will be there, and we need to get adjusted to reality rather than cursing them for that.

Anonymous said...

" But at the same time, nobody can say that moneyed people should not lead such a flamboyant life. It is like saying that since majority of Indians live in poor houses and thatched sheds, everyone should follow that lifestyle"
பணம் படைத்தவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழக் கூடாது என்று நான் சொல்லவில்லை.அவரவர் வசதிக்கேற்ப மக்கள் வாழ்க்கை நடத்துவது இயற்கைதான். ஆனால் அதை அதீதமாக "show off " பண்ணுவதுதான் எரிச்சல் ஏற்படுத்துகிறது. இந்தியாவிலேயா நாராயண மூர்த்தி,ரத்தன் டாடா ,ஆசிம் ப்ரேம்ஜி போல நிறைய பணக்காரர்கள் இருக்கிறார்கள். இவர்களும் ஆடம்பரமாகத்தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்..அனால் அதைத் தம்பட்டம் அடித்து இல்லாதவரை எரிச்சல் மூட்டுவதில்லை.அம்பானி ,மல்லையா போன்றோரது வெட்டி ஆடம்பரம் இல்லாதவரை குத்திக் காட்டுவது போல் இருக்கிறது atleast என்னளவிலாவது.

கி அ அ அனானி

Unknown said...

மூணாவது ஆப்ஷன் குடுங்க. பதில் சொல்ல தெரியவில்லைன்னு

Anonymous said...

Completely unacceptable!!!Time and again it's become fashionable to pass a communist comment saying you cannot show off richness ,blah blah blah. It's his hard earned money, he has every bloody right to show it off, waste it, donate it for charity, who the hell are you to tell what he should/shouldn't be doing with his money. Manifestation of typical middle class indian mentality and communist comment..

Anonymous said...

//It's his hard earned money,
//

அடங்கொய்யால....

//Manifestation of typical middle class indian mentality
//

அடங்கொக்க மக்கா....

enRenRum-anbudan.BALA said...

//Anonymous said...

I do agree with Bala that the cartoon has to be taken in a lighter way. But at the same time, nobody can say that moneyed people should not lead such a flamboyant life. It is like saying that since majority of Indians live in poor houses and thatched sheds, everyone should follow that lifestyle. Anomalies will be there, and we need to get adjusted to reality rather than cursing them for that.
//

அனானி தம்பி,
உங்க கருத்துக்கு நன்றி. ஆனால்,
இந்த கார்ட்டூன் என்னுடையது இல்லை, நெஜமா கி.அ.அ.அனானி நான் இல்லை.

நம்ம இட்லிவடையின் நெருங்கிய நண்பர் என்று பட்சி சொல்லியது :)

Anonymous said...

எ.அ பாலாவே ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரிதான் இருப்பார் என்று பட்சி சொல்லுகிறது

கி அ அ அனானி

Anonymous said...

"எ.அ பாலாவே ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரிதான் இருப்பார் என்று பட்சி சொல்லுகிறது

கி அ அ அனானி"

இந்தப் பின்னூட்டத்தைப் போட்ட அனானிக்கு

நானே ஒரு அனானி பேரை வைத்துக் கொண்டு எழுதுகிறேன்.அதில் மறைந்து கொண்டு உங்கள் கருத்தைச் சொல்ல முயல வேண்டுமா?Why this kola veri??

(பதிவெழுதிய) கி அ அ அனானி

Anonymous said...

இன்றுடன் ஓட்டுப் பதிவு முடிந்தது..350க்கும் மேலான நல்ல ஓட்டும் கள்ள ஓட்டும் போட்டு பதிவை ஆதரித்தவர்க்ளுக்கு நன்றிகள் பல..50 எதிர் ஓட்டைப் போட்டு அவர்களது கருத்தைப் பதிந்தவர்களுக்கும் ஸ்பெஷல் நன்றி.

கி அ அ அனானி