கர்நாடக மாஜி முதல்வர் எடியூரப்பா ஒரு நிகழ்ச்சியில் ...
"சோனியாகாந்தி சமீபத்தில் கர்நாடகத்துக்கு வருகை தந்து தும்கூர் சித்தகங்கா மடாதிபதி சிவகுமார சுவாமியிடம் ஆசீர்வாதம் பெற்றார். அப்போது காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் வந்திருந்ததை பார்க்க முடிந்தது. காங்கிரஸ் தலைவி சோனியாகாந்திக்கு ஒரு நல்ல குணம் உண்டு.
தனது கட்சி தலைவர்கள் யாராவது கஷ்டத்தில், பிரச்சினையில் சிக்கிக் கொண்டால் அவர்களை சோனியா காந்தி காப்பாற்றுவதை முதல் வேலையாக கொண்டு இருக்கிறார். பதவியில் இருப்பவர்களை நீக்க மாட்டார். குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க கோர்ட்டுகள் இருக்கிறது.
ஆனால் நமது கட்சியில் (பா.ஜனதாவில்) அப்படிப்பட்ட தலைவர்கள் யாரும் இல்லை. யாராவது புகார் கூறினால் என்ன ஏது என்று விசாரிக்காமலேயே அவர்களின் நாற்காலியை கவிழ்த்து விடுகிறார்கள். அவர்களை நிர்மூலம் ஆக்கிவிடுகிறார்கள்.
நான் வளர்த்த எனது கட்சி பற்றி நானே குறை கூறும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டதே என்பதை நினைக்கும்போது மிகுந்த வேதனையாக உள்ளது. இங்கு (பா.ஜனதாவில்) முதுகில் குத்துபவர்கள் தான் உள்ளனர். கட்சிக்காக உழைத்தவர்களுக்கு மதிப்பு இல்லை.
1. இவர் தப்பு செய்துள்ளார் என்று இதன் மூலம் ஒப்புக்கொண்டு உள்ளார்
2. பிஜேபி பாராளுமன்றத்தில் கூச்சல் போடுவதை விட்டு விட்டு இவரை கவனிக்கலாம்.தினம் தினம் தலைவர்களை டெல்லிக்கு அழைத்து பேச்சு வார்த்தை நடத்துவதற்கு பதிலாக சட்டசபையை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்கலாம்.
3, சாதி அரசியல் என்பது ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி காரர்களிடமும் இருக்கிறது. காங்கிரஸ் மைனாரிட்டி அரசியல் செய்யும் போது இவர்களுக்கு அதை கேட்க உரிமை கிடையாது.
4. அடுத்த தேர்தலில் இவர்களுக்கு ஒரு சீட்டு கூட கிடைக்க கூடாது என்று எல்லாம் வல்ல அயோத்தி ராமரை வேண்டுகிறேன்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, May 14, 2012
மதர்ஸ் டே ஸ்பெஷல்
Posted by IdlyVadai at 5/14/2012 08:04:00 AM
Labels: அரசியல், செய்திவிமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
it's not that simple and Yeddy is not the villain as it is made out in by the dalal media.
What he says is right. The rootless BJP leaders in Delhi (Ananth Kumar, Sushma, Advani) are trying to pull him down for no reason and he has every right to do what he feels right.
நீங்கள் ஒரு சீட்டுகூட கிடைக்க கூடாது என்கின்ற பி ஜே பியில் தான், நீங்கள் வானளவ புகழும் மோடியும் இருகின்றார் என்பதை மறந்து விட்டீர்களா. ஏன் மதுரை ஆதினம் மாதிரி திடீர் என்று ஒரு தள்ளாட்டம்.. மனமாற்றம். தங்க செங்கோல் ஏதாவது கிடைத்ததா......
//நீங்கள் ஒரு சீட்டுகூட கிடைக்க கூடாது என்கின்ற பி ஜே பியில் தான், //
நான் கர்நாடகா தேர்தலை சொன்னேன் !
நம் நாட்டில் ஜனநாயகமும்,தேர்தல்களும் உள்ள வரை கருணா,எடுரப்பா போன்ற திலகங்களும் இருப்பார்கள்.எந்த கட்சி வந்தாலும் நிலைமை மாறாது.
எனவே எடுரப்பாவை குறை சொல்லி பயன் இல்லை.நம் அரசியலில் கயவர்கள்,திருடர்கள்,சமூக விரோதிகள் இவர்கள் ஆதிக்கமே அதிகம் இருக்கும்.நாடும் உருப்படாது.
எடி சோனியாவை புகழ்வது போல் தோன்றுகிறதா? சோனி நல்லவரா? கெட்டவரா?!
Post a Comment