பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 10, 2012

நித்தியானந்தா - சோ, ஜெயேந்திரர் கருத்து
மதுரை ஆதீனமாக நித்தியானந்தா மகுடம் சூட்டிக் கொண்டதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை எதிர்ப்பதாக கடந்த 3 நாட்களுக்கு முன்பே சங்கர மடத்தில் இருந்து தெரிவித்தோம்.

இதுபோன்ற செயல்கள் ஆன்மிகத்தை நிச்சயம் பாதிக்கும். மதுரை ஆதீனம் என்பது ஞானசம்பந்தர் பரம்பரையில் வந்தது. ஆதீனமாக பட்டம் சூட்டி கொள்பவர்கள் மொட்டை அடித்து தலையில் ருத்ராட்ச மாலை அணிய வேண்டும் என்ற ஆன்மிக விதிமுறை உள்ளது. இவ்வாறு தலையில் மொட்டை அடித்து தலையில் ருத்ராட்ச மாலை அணிந்திருப்பவர்களை மட்டுமே ஆதீனமாக பட்டம் சூட்ட வேண்டும்.

ஆனால் நித்தியானந்தா இந்த விதிமுறைகளை மீறி தலையில் முடியோடு பட்டம் சூட்டிக் கொண்டுள்ளார். இதனை ஆன்மிகவாதிகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மேலும், ரஞ்சிதா என்ற பெண் எப்போதும் நித்தியானந்தாவுடன் உள்ளார். இதுவும் ஆன்மிகத்திற்கு எதிரானது. ஆன்மிகவாதிகள் நித்தியானந்தாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதை நான் ஆதரிக்கிறேன்.

ஜனாதிபதி பதவியிலிரிந்து, கூடாங்குளம் அணு மின் நிலையம் வரை தன் கருத்தை தைரியமாக சொல்லும் சோ, நித்தி விவகாரத்தில் வழ வழ கொழ கொழ. தண்டத்தை மடத்தில் விட்டு விட்டு சென்ற ஜெயேந்திரர் மொட்டை பற்றி பேசுவது வேடிக்கை.

மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதாக நினைக்காதீர்கள் :-)

18 Comments:

Unknown said...

//மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதாக நினைக்காதீர்கள் :-) //

இதுல எங்க மொட்டைத்தலையும் முழங்காலும் வந்துச்சு. எல்லா சாமியாரும் அப்படித்தான்

Sridharan said...

your comments on Jayanthrear is OK...But you are awfully wrong when it comes to criticising Cho's comments...Infact he has aired a balanced view

ஜெ. said...

//ஜனாதிபதி பதவியிலிரிந்து, கூடாங்குளம் அணு மின் நிலையம் வரை தன் கருத்தை தைரியமாக சொல்லும் சோ, நித்தி விவகாரத்தில் வழ வழ கொழ கொழ. தண்டத்தை மடத்தில் விட்டு விட்டு சென்ற ஜெயேந்திரர் மொட்டை பற்றி பேசுவது வேடிக்கை// - மிக மிகச் சரியான கருத்து.

இன்று தினமலரில், ஸ்ரீரங்கம் பழைய ஜீயரின் சடலம் படும் பாடு கஷ்டமாயிருக்கிறது.

-ஜெ.

Anonymous said...

Mr Idli Vadai. Your comment is on bad taste. Jayendirar left only his post and not sanyaasam to do public service. He was called back - on Jayendrirar's terms- He left for serving the religion. That too after keeping a second in line ready. Again Dhandam is the symbol of association with that Mutt and all sanyasis need not carry dandam. There are Advaitin sanyasis w.o dandam. Please post things on subjects you know. don't post as if you know every thing.

IdlyVadai said...

//Mr Idli Vadai. Your comment is on bad taste. Jayendirar left only his post and not sanyaasam to do public service. He was called back - on Jayendrirar's terms- He left for serving the religion. That too after keeping a second in line ready. Again Dhandam is the symbol of association with that Mutt and all sanyasis need not carry dandam. There are Advaitin sanyasis w.o dandam. Please post things on subjects you know. don't post as if you know every thing..//
முன்பு ஞாநி நடத்திய நடத்திய தீம்தரிகிட பத்திரிக்கையில் இதை பற்றி விரிவாக எழுதியிருந்தார் என்று நினைக்கிறேன். படித்துப்பாருங்கள்.

maayavi said...

//இன்று தினமலரில், ஸ்ரீரங்கம் பழைய ஜீயரின் சடலம் படும் பாடு கஷ்டமாயிருக்கிறது//

இப்படி உங்களுக்கு மட்டும் புரிந்தவாறு பேசிகொல்லாமல் லிங்க் கொடுத்தால் நாங்களும் படிப்போம்

//முன்பு ஞாநி நடத்திய நடத்திய தீம்தரிகிட பத்திரிக்கையில் இதை பற்றி விரிவாக எழுதியிருந்தார் என்று நினைக்கிறேன். படித்துப்பாருங்கள்//

மேலே சொன்னது தான் உங்களுக்கும் . தீம்தரிகிட தினத்தந்தியோ bbc 'o இல்லை

சில மாதத்திற்கு சில நூறு என்று விற்ற பத்திரிகையில் ஏற்கனவே எழுதியிருகேறேன் என்று சொல்லாமல் அதனை digitalize or ஸ்கேன் செய்து லிங்க் கொடுத்தால் நன்று

ம்ம் வர வர பகுத்தறிவு வாதிகளுக்கும் சரி பகுத்தறிவு பற்றி பேசுபவர்களுக்கும் சரி basic பகுத்தறிவு கூட இல்லாமல் இருப்பது வியபளிக்கிறது

Anonymous said...

The opinion of cho, is the reasonable option left for public.,Or any one other than the nominating authority .

We can have opinion criticize , protest on events and happenings in pubic institutions ., aadhinamm. Has it's rules and if the patronizers move off ., there will be nothing left of the mutt., and as it seems nithi seems to be funding the mutt., and our politicos will make sure he will have not much to do with the land holding .,

Anonymous said...

ஒருத்தர் அஜால் குஜால் கேசுக்ககாக கோர்ட்டு படி ஏறுபவர், இன்னொருத்தர் கொலை கேசுக்காக கோர்ட்டு படி ஏறுபவர்.இதில் ஒருத்தரை பற்றி இன்னொருவர் குறை கூற என்ன தகுதி உள்ளது. இவர்களால் இந்து மதம் சாகாமல் இருந்தால் சரி. சோ என்னதான் சொல்ல வருகின்றார் ..... நாளைக்கே மதுரை ஆதினம் பொட்டு சுரேஷையோ, ராவணனையோ அதின்மாக ஆக்கினாலும் இதே பதிலை ஏற்றுகொள்ளலமா . அதை விடுங்கள் ...
போயஸ் ஆதினத்தில் இளைய வாரிசாக மீண்டும் சசிகலா வந்துள்ளதை பற்றி அன்னாரின் கருத்தை கேட்டு போடுங்களேன்.

Anonymous said...

சோ அப்படி எழுதுவதற்கு ஒருவேளை நித்தி தனக்கு வாரிசாக சோவை நியமித்துவிடுவார் என்ற பயமாகக் கூட இருக்கலாம்.இட்லிவடை சாருவிடம் கருத்துக் கேட்கலாமே.

Anonymous said...

சோ அப்படி எழுதுவதற்கு ஒருவேளை நித்தி தனக்கு வாரிசாக சோவை நியமித்துவிடுவார் என்ற பயமாகக் கூட இருக்கலாம்.இட்லிவடை சாருவிடம் கருத்துக் கேட்கலாமே.

சிந்திப்பவன் said...

சோ ராமசாமி,ஜெயகாந்தன் போன்றோர் தங்கள் மதிப்பை இழந்து பல காலம ஆச்சு.ஏதோ அவர்கள் கருத்தை தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

Coming to Jayendirar,அவர் வழக்குகளே நிலுவையில் இருக்கும்போது அவர் இன்னொருவரை பற்றி பேசியதை தவிர்த்திருக்கலாம்.He is notorious for loose talks and it continues.

பாரத தேசத்தில்,

அரசு சரியில்லை,
ஆதினம் சரியில்லை;

ஆத்திகன் சரியில்லை,
நாத்திகன் சரியில்லை;

பணக்காரன் சரியில்லை,
ஏழை சரியில்லை;

இளைஞன் சரியில்லை,
முதியோன் சரியில்லை;

படித்தவன் சரியில்லை,
பாமரன் சரியில்லை;

போலீஸ் சரியில்லை,
திருடன் சரியில்லை;

பெற்றோர் சரியில்லை,
குழந்தைகள் சரியில்லை;

120 கோடி இந்தியர்களையும்

இணைப்பது

சுயநலமும்,நேர்மையினமையும்!

Sh... said...

சிந்திப்பவன் - அருமையான வரிகள், உண்மையும் கூட.

R. J. said...

Mayavi: You could have easily browsed Dinamalar.com and got the news item in detail. Finally, Jeeyar has been laid in rest at Kollidam after 2 days of his body kept in an ambulance on the road side. Pitiable. - R. J.

சிந்திப்பவன் said...

fOR MAYAAVI:

திருச்சி: ஸ்ரீரங்கம் பலஹாரி ராமானுஜ ஜீயர் மடத்தின் நான்காவது ஜீயரின் உடல், இரண்டு நாள் ஆம்புலன்சில் காத்திருப்புக்குப் பின், நேற்று காலை, நல்லடக்கம் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கம், அம்மா மண்டபம் சாலையில், பலஹாரி புரு÷ஷாத்தம ராமானுஜ ஜீயர் மடம் உள்ளது. 150 ஆண்டு பழமையான இம்மடத்துக்கு, பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் உள்ளன.

கோல்கட்டாவில் முக்தி : இம்மடத்தின் நான்காவது ஜீயராக இருந்தவர், ஸ்ரீலெட்சுமண ராமானுஜ ஜீயர்,88. சொந்த ஊரான கோல்கட்டாவில் இருந்த அவர், முதுமை காரணமாக, கடந்த 6ம் தேதி முக்தியடைந்தார்.
விமானம் மூலம் அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியை வந்தடைந்தது. ஜீயரின் வளர்ப்பு மகள் தோதா ராணி, அவரின் கணவர் பத்ரிநாத் வீடு, திருவானைக்காவல் டிரங்க் ரோட்டில் உள்ளது. வீட்டின் முன், நேற்று முன்தினம் அதிகாலை, 3.15 மணிக்கு, ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. பல்வேறு பிரச்னை காரணமாக, இம்மடத்தை இந்து சமய அறநிலையத் துறை எடுத்துக் கொண்டுள்ளது.

அடக்கம் செய்வதில் பிரச்னை : மடத்தில், ஜீயரின் உடலை அடக்கம் செய்ய, பத்ரிநாத் தரப்பினர் அனுமதி கேட்டனர். "மடம் மற்றும் கோவில் உள்ள இடத்தில், பிரேதத்தை கொண்டு வரக்கூடாது' என்று, நிர்வாக அதிகாரி சம்பத்குமார் மறுப்பு தெரிவித்து விட்டார். "ஏற்கனவே இருந்த மூன்று ஜீயர்களின் உடல்கள், கொள்ளிடம் பஞ்சக்கரையில் தான் அடக்கம் செய்யப்பட்டன. எனவே, உடலை அனுமதிக்கக் கூடாது' என்று, ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அன்று மாலை, பத்ரிநாத் தரப்பினர் திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் கொடுக்கச் சென்றனர். அங்கு நடந்த பேச்சு வார்த்தையின் இறுதியில், மறுநாள் காலை மடத்தின் வெளியே ஆம்புலன்சை நிறுத்தி, ஜீயருக்கு அஞ்சலி செலுத்த ஒப்புக் கொள்ளப்பட்டது. நேற்று காலை வரை, இரண்டு நாட்களாக, சாலையோரத்தில், ஆம்புலன்சில் ஜீயரின் உடல் காத்துக் கிடந்தது. நேற்று காலை, மடத்தின் வெளியே ஆம்புலன்சில் இருந்த ஜீயரின் உடலுக்கு, அவரின் சீடர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதன்பிறகு, கொள்ளிடம் பஞ்சக்கரையில், மடத்துக்குச் சொந்தமான இடத்துக்கு, உடல் கொண்டு செல்லப்பட்டது. ஜீயரின் உடல் உட்கார்ந்த நிலையில் வைக்கப்பட்டு, பால், பன்னீர், திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தோண்டப்பட்டிருந்த குழியில் வைக்கப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது.

(நன்றி:தினமலர் 11/5/12)

Anonymous said...

hi gnaani - oh that great hindu saint? why dont ask him to write about ur vaishnava articles?

Anonymous said...

hey....what CHO has told his views about the nomination of NITHYANANDA is 100%correct,that's what i feel.....

Anonymous said...

hey....what CHO has told his views about the nomination of NITHYANANDA is 100%correct,that's what i feel.....

R.Gopi said...

தி.மு.க.தலைமையை யாருக்கு விட்டு தரப் போகிறார் கருணா?

1) ஸ்டாலின்
2) அழகிரி
3) கனிமொழி
4) ராசா