டேய் முனி,
நல்லாருக்கியா? சத்தத்தையே காணும் ரொம்பநாளா? ரொம்ப நாள் கழிச்சு உனக்கு லெட்டர் எழுதறதில் மன்னுமோகனுக்கு அப்பப்போ கடுதாசி எழுதி சந்தோஷப்படும் முக மற்றும் அம்மா போல எனக்கும் மகிழ்ச்சி. ஜாதிகள் இல்லை என்று சொல்லுபவர்கள் கூட தங்கள் வீட்டுக்கு ஜாதி கணக்கெடுப்புக்கு வரும் போது தங்கள் ஜாதியின் பெயரைச் சரியாக சொல்லுகிறார்கள். ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியார் சொன்னது வெறும் பாப்பாக்களுக்கு தான், பெரியவர்களுக்குக் கிடையாது. ( படம் : உடையாத ஜாதிக்காய்! )ஜாதியச் சொல்லிதான் குடியரசுத்தலைவர் பதவிக்கும் ஆளை நிறுத்துகிறார்கள். லேடஸ்ட் விக்டிம் பாவம் சாங்கமா! அம்மா திடீர்னு ஆதரவளிப்பதால் "சங்கும்மா அவருக்கு" என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அம்மாவின் ஆதரவு இருந்தால் என்ன வேண்டுமென்றாலும் நடக்கும் என்று நிறையப்பேர் நினைக்கிறார்கள். ரீசன்ட் ஆட்கள் அருணகிரியும் நித்தியும். அ.தி.மு.க.வின் ஆதரவுடன்தான் நான் இளைய ஆதீனமாக பொறுப்பேற்றேன் என்று நித்தி சொல்லுகிறார். போற போக்கைப் பார்த்தால் பேசாம அவரையே ஜனாதிபதியாக பரிந்துரைக்கணும் என்று அம்மாவிடம் கேட்டாலும் கேப்பார். இப்போவே அவருக்கு ஜனாதிபதி லெவலுக்கு போலீஸ் பாதுகாப்பு வேற இருக்கிறது.
திஹாரில் இருந்த ராசா ஜாமீனில் வெளியே வந்தவுடன் திடீர் என்று திமுக அவருக்கு ஆதரவு கொடுத்திருக்கிறது. ஜாமீன் பணம் கட்ட ஆள் தேடினா துண்டக் காணும் துணியக் காணும் என்று ஓடி இருக்கிறார்கள். ஒரு வழியா மெட்ராசில் இருந்து போன் வழியா ஒருவழி சொல்லி வெளியே வந்திருக்கிறார். வெளியே வந்து தூங்கி எழுந்து நேராகப் பாராளுமன்றம் போயிருக்கிறார். இவருடைய கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?
உணர்ச்சி வசப்பட வேண்டும் என்று ஷாருக்கானுக்கு சொல்லியே தர வேண்டாம். பல படங்களில் சிவாஜிக்கு அடுத்து அதிகமாக உணர்ச்சிவசப்படும் நடிகர் இவர். வான்கடே மைதானத்தில் பாதுகாவலருடனும், மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடமும் தகராறில் ஈடுபட்ட ஷாருக்கான் மீது 5 வருட தடை விதித்திருக்கிறார்கள். காசு குடுத்து மேட்ச் பாக்க வரவனை எப்டி வரக்கூடாது என்று தடை விதிப்பார்கள் என்று தெரியல. இந்த கேஸ் கோர்ட்டுக்கு போனால் என்ன நடக்கும்? யாராவது வக்கீல்கள் இதை பற்றி சொன்னால் நல்லா இருக்கும்.
கோர்ட் கேஸ் என்று பிஸியாக இருக்கும் ஆதி சங்கரர் பரம்பரையில் வந்த ஜெயேந்திரர் சும்மா இருக்காமல், ரஞ்சிதா பற்றி பேசப் போய் ரஞ்சிதா இப்போது அவரை மீண்டும் கோர்ட்வரை கொண்டு போயிருக்கார். இந்த மாதிரி மத குருக்களுக்கு எப்படி நாட்டுநடப்பு தெரிகிறது? அரசியலும் சினிமாவும் ஆன்மிகம் போலவே நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் ஒரு அங்கமாகி ரொம்ப நாள் ஆகிவிட்டது.
சினிமா, அரசியல் பற்றி நான் ஒன்றும் எழுதுவதிஉல்லை, அறிவியல் நியூக்கிளியர் சைன்ஸ்தான் எழுதுகிறேன் என்கிறார் மதன். இவர் எழுதிய ஹாய் மதன் பகுதிக்கு ஜெயலலிதா படம் போட்டு இப்போது அவரை விகடனிலிருந்து தள்ளி வைத்திருக்கிறார்கள். நடந்தது என்ன என்று வாசகர்களுக்கு ஒரு ஃப்ளாஷ் பேக்.
2.5.2012 விகடனில் ஹய் மதன் பகுதியில்... உலகில் உள்ள உயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் காலில் விழுந்ததாக வரலாறு இல்லை. ஆனால், மனிதன் மட்டும்இதற்கு விதிவிலக்காக இருப்பது ஏன்? இதைத் தொடங்கிவைத்தது யார்?
ஆதி மனிதன்தான். திடீர் என்று தெருவில் குண்டு வெடிக்கிறது. உடனே என்ன செய்கிறீர்கள்? தரையோடு படுத்துக்கொள்கிறீர்கள். காரணம், அதில்தான் ஆபத்து ரொம்பக் குறைவு. ஆதி மனிதனும் திடீர் என இடி இடித்தாலோ, பெரிய மின்னல் தோன்றினாலோ தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கத் தரையில் நடுங்கிப் படுத்துக்கொண்டான். பிறகு, சூரியன் போன்ற இயற்கை விஷயங்களின் முன்பு 'எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாதே’ என்பதை விளக்க, குப்புறப் படுத்தான். பிறகு, அரசர்கள் முன்பு, இன்று தலைவர்கள் காலடியில் ('பதவி ஏதாவது தந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அர்த்தம்!). விலங்குகளும் தத்தம் தலைவன் முன்பு அடிபணிகின்றன. 'நான் உனக்கு அடங்கிப்போகிறேன்!’ என்கிற ஓர் அர்த்தம்தான் அதற்கு உண்டு! என்று பஞ்ச் வைத்து எழுதிய இந்த கேள்வியை யார் படித்தாலும், ஜெயலலிதா காலில் விழும் அமைச்சர்கள் தான் நினைவுக்கு வருவார்கள். அதையே விகடனும் போட்டிருக்கிறார்கள் ஆனால் மதன் விகடனுக்கு ஒரு கடிதம் எழுந்தினார் அது கீழே...
2.5.2012 இதழில் 'காலில் விழுந்து வணங்குவது’ பற்றிய மனித இயல் (Anthropology) பற்றிய ஒரு கேள்விக்கு, ஆதி மனிதன் எப்படி அதை ஆரம்பித்திருக்கக்கூடும் என்று விளக்கி, பொதுவான ஒரு பதில் எழுதியிருந்தேன். ஆனால், அந்தப் பதிலுக்கான படம் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழுவது போன்ற பெரிய புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது எனக்கு மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்தது. ஆதிகாலத்திய சம்பிரதாயம் பற்றிய பொது அறிவுப் பதில் தான் அதுவேயன்றி, குறிப்பிட்ட ஒருவரைப் பற்றிய பதிலே அல்ல அது!ஜெயா டி.வி-யில் நான் சினிமா விமர்சனம் செய்துவருகிறேன். இந்நிலையில், அவர்கள் அந்தப் புகைப்படத்தை ஹாய் மதன் பகுதியில் வெளியிட்டதற்கு நான்தான் காரணமோ என்று தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார்களா? என்னிடம் ஜெயா டி.வி-யின் தலைமை அதுபற்றி விளக்கம் கேட்டால், 'அந்த புகைப்படம் வெளிவந்ததற்கு நான் காரணமல்ல’ என்று இதன் பின்னணியை விவரமாக விளக்க வேண்டி வராதா? அந்த தர்மசங்கடம் எனக்குத் தேவைதானா? முப்பதாண்டு காலம் விகடன் நிறுவனத்துக்காக உழைத்த எனக்கு இப்படியரு பிரச்னையை ஏற்படுத்துவது நேர்மையான, நியாயமான செயல்தானா என்பதை தாங்கள் சிந்திக்க வேண்டும்.முக்கியமான பிரச்னைகள் எத்தனையோ சந்தித்துக்கொண்டிருக்கும் தமிழக முதல்வரிடம் இதற்காக அப்பாயின்ட்மென்ட் கேட்டு, அவரைச் சந்தித்து, நான் செய்யாத தவறுக்கு விளக்கம் தந்துகொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை எனக்கு ஏற்படுத்துவது முறையா என்று சிந்திக்க வேண்டுகிறேன்.
...வரும் இதழிலேயே 'புகைப்படங்கள், லே - அவுட்டுக்கு மதன் பொறுப்பல்ல’ என்ற விளக்கத்தையாவது வெளியிட்டால், நியாயம் காப்பாற்றப்படும். அதை வரவிருக்கும் இதழிலேயே செய்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
அதற்கு விகடனாரின் பதில்
மதன் நமக்கு எழுதியிருக்கும் இந்தக் கடிதம், தவிர்க்க முடியாத சில நெருக்கடி களுக்கும் நிர்பந்தங்களுக்கும் அவர் சமீப காலமாக ஆளாகி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.
'ஹாய் மதன்' பகுதியில் வாசகர்கள் கேட்ட கேள்வியிலோ, மதன் அளித்த பதிலிலோ நேரடி வார்த்தைகளில் இடம் பெறாத - அதே சமயம், அந்தக் கேள்வி - பதிலுக்கு மேலும் வலிமையும் சுவாரஸ்யமும் சேர்க்கக்கூடிய படங்களை இதற்கு முன் ஏராளமான சந்தர்ப்பங்களில் ஆசிரியர் குழு சேர்த்துள்ளது. அப்போதெல்லாம், எந்தக் காரணங்களைக் காட்டியும் ஒருபோதும் எந்த ஆட்சேபமும் அவர் தெரிவித்ததே இல்லை.அதேபோல், 'இது பொது அறிவுப் பகுதி மட்டுமே' என்று இப்போது மதன் குறிப்பிடும் 'ஹாய் மதன்' பகுதியில் அரசியல் மற்றும் சினிமா பற்றிய நேரடியான, காரசாரமான பதில்களை அவர் தொடர்ந்து இதழ் தவறாமல் அளித்திருப்பதை வாசகர்களும் நன்கு அறிவார்கள். இப்போது திடீரெனத் தன் நிலைப்பாட்டை அவர் மாற்றிக்கொள்வதற்கான காரணம், அவருடைய கடிதத்திலேயே உள்ளது.இதையெல்லாம் பார்க்கும்போது... தற்போது அவர் இருக்கின்ற சூழ்நிலையில், 'ஹாய் மதன்' பகுதியை மட்டும் அல்ல... கார்ட்டூன்களையும்கூட நடுநிலையோடு படைப்பது அவருக்குச் சாத்தியம் ஆகாது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு தரப்பைப் பற்றிய நியாயமான விமரிசனங்களையோ, புகைப்படங் களையோ தவிர்த்துவிட்டு... செய்திகளையும் கருத்துக்களையும் நீர்க்கச் செய்வது வாசகர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்றே விகடன் கருதுகிறான்.
எனவே, இந்த இதழ் முதல் திரு. மதனின் கேள்வி - பதில் பகுதியும் அவருடைய கார்ட்டூன்களும் விகடனில் இடம் பெறாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
விகடன் செய்தது சரியா தப்பா என்று பின்னூட்டத்தில் மக்கள் அடிப்பார்கள் என்று நினைக்கிறேன். விகடனுக்கு ஒரே ஒரு கேள்வி, மாறன் சகோதரர்கள் பற்றி நடுநிலமையாக விகடன் எழுதுமா? விகடன் மீடியா சன் டிவியில் வரும் தொடர்களுக்கு இதற்கும் conflict of interest வருமா? வராதா? விகடன் தாத்தா சிந்திக்க வேண்டும்!தாத்தா வயசாகிவிட்ட எடியூரப்பா பதவி படுத்தும் பாடு என்று ஒரு சீரியல் எடுக்கலாம். தினமும் காலை குளித்துவிட்டு ஏதாவது விஷமம் செய்துக்கொண்டே இருக்கிறார். புதுசா ஆபீஸ் ஓப்பன் செய்து சோனியா காந்தி படத்தை மாட்டியுள்ளார், பிறகு எடுத்துவிட்டார். எந்த பதவி மீதும் ஆசை கிடையாது என்று சொல்லும் இவர் ஜெயிலிலிருந்து வெளியே வந்த பிறகு எனக்கு "மாநில தலைவர் பதவி" தந்திருக்க வேண்டும் என்று நேற்று சொன்னார் இன்று முதல்மந்திரி பதவியோ அல்லது மாநிலத் தலைவர் பதவியோ எனக்கு வேண்டாம் என்கிறார். பேசாம பிரதமர் பதவியோ அல்லது ஜனாதிபதி பதவியோ கொடுங்கள் இவருக்கு. அட்லீஸ்ட் நித்திக்கு பிறகு அடுத்த மடாதிபதியாகவாவது இவரை தேர்வு செய்யுங்கள். எது எப்படியோ பிஜேபியின் டர்டி பிக்சர் இவர்.
டர்டி பிக்சர் படத்தை தமிழில் எடுக்க வேலைகள் நடந்து வருகிறது. இதில் நயன் நடிப்பதாக இருந்தது ஆனால் இப்போது அவர் நடிக்க மறுத்துள்ளார் என்று செய்தி. சீதையாக நடித்த பிறகு இது தேவையா என்று கூட யோசித்திருப்பார் என்று நினைக்கிறேன். எல்லாம் கடவுள் செயல்!
கடவுளுடன் மட்டுமே கூட்டணி வைக்கும் கேப்டனின் ரீசன்ட் பேச்சு: சட்டசபைக்கு விஜயகாந்தை வரச்சொல் என்கின்றனர். நான் வந்தால், பஸ் கட்டணம், பால் விலை, மின் கட்டணத்தை குறைத்துவிடப் போகிறார்களா? மேலே இருக்கும் ஆண்டவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான்" என்று போகிறது பேட்டி. இதில் என்ன வேடிக்கை என்றால் மக்கள் குரலே மகேசன் குரல் என்று மேடைக்கு மேடை பேசுகிறார்கள்!. எல்லாம் கலி காலம். ஒருநாள் கடவுள் நேராக வந்து இந்தக் காமெடியன்களை எல்லாரையும் ஒக்கார வெச்சுப் பஞ்சாயத்துப் பண்ணால்தான் சரிப்படும். கடைசி செய்தி: மதன் என்ன செய்ய போகிறார்? ஞாநி மாதிரி கல்கிக்கு வருவார் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.
ஐபிஎல்லில் ஷாரூகான், மால்யா புள்ளை போன்றோர் ஓனர் என்ற பெயரில் அடிக்கும் கூத்துகளுக்கு அளவில்லாமல் போகிறது. இவர்களையும் அன்புடன் பாலாவைப் பின்னூட்டத்தில் திட்டுவது போலத் திட்டினால் தகும்.
இனிமேலானும் வாரம் ஒருமுறை மறக்காம கடுதாசி போடு.
அன்புடன்
இட்லிவடை
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, May 19, 2012
மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 19-5-2012
Posted by IdlyVadai at 5/19/2012 09:57:00 PM
Labels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்
Subscribe to:
Post Comments (Atom)
15 Comments:
மதன் ஜெயா டிவி தலைமைப் பொறுப்பை ஏற்க இருப்பதாகக் கேள்விப்பட்டேன்....
'நம்பள்கி-நிம்பள்கி' சொல்றான்,
அரே,
ஆட்டே தூக்கி மாட்லே போட்றான்
மாட்டே தூக்கி ஆட்லே போட்றான்!
நிம்பள் ,
மதனே தூக்கி ரோட்லே போட்றான்?
நம்பள்,
விகடனே தூக்கி குப்பைலே போட்றான்!!!
சைத்தான்கி பச்சே....
Vikatan, no doubt, is best info-tainment magazine we have around. However, I dont think vikatan is neutral or unbiazed magazine.
For example-1) It kicked out Mr Gnani for his suggestion in O pakkangal that Mr. Karunanidhi should retire from active politics.
2) Vikatan's business interests with Sun Tv group- Vikatan is never critical of Sun group or Marans!
Given this Madhan's letter to vikatan was not upto his stature. So Vikatan has a point if it wants to relieve Madhan of his columns. However, for courtesy sake, it could have thanked him for his services to Vikatan for over 30 years. After all, vikatan is a grand old media around and could have crafted its response with more courtesy.
மதன் கல்கிக்கு வருவாரா மாட்டாரான்னு வெங்கிதான் சொல்லணும்.
விகடனை கிழி கிழி என்று கிழிக்கும் எங்கள் அன்பு தலைவன் !!!!! டி ஆர் !!
Youtube link below
http://www.youtube.com/watch?v=OjtP1YL3dcE
// விகடனுக்கு ஒரே ஒரு கேள்வி, மாறன் சகோதரர்கள் பற்றி நடுநிலமையாக விகடன் எழுதுமா? விகடன் மீடியா சன் டிவியில் வரும் தொடர்களுக்கு இதற்கும் conflict of interest வருமா? வராதா? விகடன் தாத்தா சிந்திக்க வேண்டும்!//
விகடன் தாத்தா மாறி மாறி ஜால்ரா அடிக்க ஆரம்பிச்சு கிட்டதட்ட எனக்கு தெரிஞ்சு பன்னிரண்டு வருஷம் ஆகுது. இவனுங்க அடிக்கிற ஜால்ரா தாங்காம நான் வீணாப்போன சாரி விகடனோட சப்ஸ்க்ரிப்ஷன்-னை க்ளோஸ் பண்ணிட்டேன்.
IV, How is Cho? Why no post? Trust he is getting well.
மதன் மாதிரியான கார்ட்டூன் ஜீனியசுக்கா இந்த கதி? நம்பவே முடியவில்லை. போலிகள் கோலோச்சும் தமிழ்நாட்டில் உண்மையான திறமைக்கு மதிப்பு இருக்கப்போவதில்லை. இருந்தாலும் இப்படியா? கற்றவரை மதிக்காத சமுகம் உருப்பட்டதாக வரலாறில்லை. என்னவோ போங்கள்....
கேரளா போன்ற மாநிலத்தில் பிறந்திருந்தால் அவரைத் தலைமேல் வைத்து கொண்டாடியிருப்பார்கள்.
(மேற்கு வங்காளத்தில் பிறந்திருந்தால்? என்று இக்கரடக்கரல் கொக்கி போடுகிறவர்களின் தலையில் காக்காய் பே...டு வைப்பதாக!)
1. அந்தக் காலத்தில் ஐந்தோ, பத்தோ ஜாதிகள் தான் இருந்திருக்கும், இப்போதோ நூறு ஜாதியாவது இருக்கும்போல் இருக்கிறது! எங்கே ஒழிக்க!
2. சங்கோ, சக்கரமோ, அம்மாவுக்கு எப்பவும் தான் முதலில் இருக்க வேண்டும்! அதனால் முதல் கருத்து!
3. ஷாருக் கான் உணர்ச்சி கரமாகத் தானே நடிப்பைத் தொடங்கினார் - கக்..கக்..கக்..கான்! அவர், ஜூனியர் மால்யா எல்லோரும் பண போதையில் மிதப்பவர்கள் - வேறு என்ன எதிர்பார்க்க?
4. ஏன் அவரை ஸ்டேடியத்திலிருந்து ban செய்ய முடியாது? அது ஒரு ப்ரைவேட் இடம் - கம்பன்ய் ஆஃபீஸ் மாதிரி, ஹோட்டல் மாதிரி. ஷூ இல்லை, டை இல்லை என்றுகூட உள்ளே விடுவதில்லை. மேலும் அவரால் அமைதிக்கு பங்கம் என்றால் கோர்ட் என்ன செய்யும்? வந்தால் 4 போலீஸுடன் தான் பொத்திக்கொண்டு வரவேணும்.
5. மதன் பாவம். விகடனுக்கும் நிர்பந்தங்கள் உண்டு, ஆனாலும் இந்த விஷயத்தில் மதன் தொடை நடுங்கியாகவே வெளிப்படுகிறார். (வேறு பதிவில் நிறையப் பேர் - அநேகமாக எல்லோரும் - மதனுக்கு எதிராகவே எழுதியிருக்கிறார்கள்).
6. நித்தி - நெத்தியில் அடித்துக் கொள்வோம்! அது ஒரு பண முதலை. யாரைக் கையில் போட வேண்டுமோ, அதை செய்ய முடியும்! பிறகென்ன!
காஞ்சி, ஐயா கழகத்திலும், மதுரை, அம்மா கழகத்திலும் வி ஐ பி உறுப்பினர்கள்!
-ஜெ.
# ஆனாலும் இந்த விஷயத்தில் மதன் தொடை நடுங்கியாகவே வெளிப்படுகிறார்.#
ஜெ. அண்ணா,
ஆட்டோ ரெடியா இருக்கு. கொஞ்சம் உங்க அட்ரஸ்ஸ சொல்லுங்கோ....
/*ஐபிஎல்லில் ஷாரூகான், மால்யா புள்ளை போன்றோர் ஓனர் என்ற பெயரில் அடிக்கும் கூத்துகளுக்கு அளவில்லாமல் போகிறது. இவர்களையும் அன்புடன் பாலாவைப் பின்னூட்டத்தில் திட்டுவது போலத் திட்டினால் தகும்.*/
ஐபிஎல் ஒரு வீணாப்போன கேஸ் ! போங்கப்பா ! போய் பிள்ளை குட்டிங்கள படிக்க வைங்கப்பா
ஆட்டோவா, எனக்கா, ஐயைய்யோ! ஐயா ஆ. வி. ஆசிரியரே காப்பாத்து, காலில் விழுகிறேன்! - ஜெ.
விகடன் குழுமம் பால் மாறி பலகாலம் ஆகிறது......நக்சலைட்டுகளின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டிவிட்டாரே என்ற கோபத்தில் '' கோ '' பட இயக்குனர் கே.வி. ஆனந்தை கரித்து கொட்டிய போதே விகடனின்'' தேசபக்தி ''தெரிந்து விட்டது......விகடன் வெளியீடுகளை காசு கொடுத்து வாங்கிப்படிப்பது தேச விரோதம்......
i made it 2000 friends in ur site boss........am special one........
hi ...i made friends on ur site boss......so am special one
Post a Comment