பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, May 05, 2012

ராமானுஜ (17)அந்தாதி - பா.ராகவன்


பா.ராகவன் எழுதிய ராமானுஜர் பற்றிய வெண்பாம்கள்.


ஆயர் குலமுதல்வன் அவனினும் நானுவக்கும்
ஜீயர் பதமே சரண் (1)

சரணமெனும் தத்துவத்தின் சாரம் அளித்தவனே
வரணுமென் வாசலுக்கு நீ (2)

நீயுறைந்த ரங்கநகர் வீதியெலாம் நானலைந்து
வாயுரைத்த வார்த்தையது கேள் (3)

கேள்வி பலகேட்டு, கேடுபல கண்டபின்னர்
தோல்வியில் துவண்டதினம் நூறு. (4)

நூறுவழி நமக்குண்டு நோகாது இன்பமுற
வேறுவழி ஏதுமில்லை காண் (5)

காணக் கிடைக்கின்ற கருணைப் பெருங்கடலே
வானைப்போல் விரிந்தது உன் எண்ணம் (6)

எண்ணமெலாம் நீ நிறைந்து ஏகாந்தப் பெருவெளியில்
என்னை விளை யாட அனுப்பு. (7)

அனுப்பிவைத்த அற்புதமே அதிசயமே அருஞ்சுவையே
இனிப்பினுள் இருப்பதுவோ சொல் (8)


சொல்லில் அடங்காத சுடரொளி ஞானத்தை
வள்ளலே வந்தெனக் களி (9)

அளித்த பிறவியிதில் அவதிகள் பலகோடி
களித்து வாழவழி காட்டு (10)

காட்டுகிறேன் பெருமகிழ்வை எனச்சொல்லி மேலேறி
ஊட்டுவித்த உணவெனக்குப் போதும். (11)

போதும்போதுமென பொங்கும் வரையெனக்கு
போதம் நீயெனக்குத் தா (12)


தானுகந்த திருமேனி தரிசன நேரத்தில்
நானுருகி நூர்த்தகவி நூறு. (13)

நூறெழுதும் கர்வமழி காலமெலாம் சேவித்து
பேரழியத் தெரியா தெனக்கு (14)


எனக்குள்ளே இருட்குகைகள் ஏராள முண்டப்பா
மனச்சுவரில் மால் பெருமை எழுது. (15)


எழுத்தி லடங்காத எம்பெரு மானாரே
பழுத்த மனத்தின் ருசி. (16)

ருசிக்கின்ற உண்மையென இரண்டை நீசொன்னாய்
ரசிக்கிற மனதைக் கொடு (17)

27 Comments:

Anonymous said...

6, 7 , 10, 15 and 16 superb!

thanks for sharing!

மதுரை ஆதினத்தில் ரெய்டு. செய்தி பார்க்கவி்ல்லையா?

- மதுரைக்காரன்.

Jayashree Govindarajan said...

"வெண்பாம்"(தான்)னு மறக்காம குறிப்பிடுங்க. :P

Anonymous said...

அந்தாதியின் கடைசி பாடலின் ஈற்றடியின் கடைசி சொல், முதல் பாடலின் முதல் சொல்லால் முடிவது சிறப்பல்லவா? (உதிக்கின்றவே என்று அபிராமி அந்தாதி முடிவது போல).

ராமானுஜ (18) இப்படி இருக்கலாமோ?

கொடுக்கின்ற மனமும் நின்திருவடி சரணுமல்லால்
வேறெதும் வேண்டேன் ஆய்ந்து (18)

Anonymous said...

அந்தாதியின் கடைசி பாடலின் ஈற்றடியின் கடைசி சொல், முதல் பாடலின் முதல் சொல்லால் முடிவது சிறப்பல்லவா? (உதிக்கின்றவே என்று அபிராமி அந்தாதி முடிவது போல).

ராமானுஜ (18) இப்படி இருக்கலாமோ?

கொடுக்கின்ற மனமும் நின்திருவடி சரணுமல்லால்
வேறெதும் வேண்டேன் ஆய்ந்து (18)

ஹரன்பிரசன்னா said...

அட்டகாசம் பாரா.

கார்த்தி said...

(18) கொடுநரகம் வேண்டி கொண்டாய் மக்களை மாலின்பால், பாற்கடெலெழுந்த ஆதிசேடனே

(அடியேனின் சிறு முயற்சி..பிழையிருந்தால் மன்னிக்கவும்..)

valaiyakam said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

நன்றி

வலையகம்

கவியரசு said...

ஓர் எழுத்து மாறும்போதுகூட வெண்பா இலக்கணம் கெட்டு, பாடலே சிதைந்துவிடும்.
#வெண்பா இரண்டு அடிகளுக்குக் குறையாமல் வர வேண்டும்.
#இயற்சீர் மற்றும் வெண்சீர் வெண்டளைகள் மட்டுமே வர வேண்டும்.
#ஒவ்வோரடியும் நான்கு சீர்கள் பெற்றும் , ஈற்றடி ( இறுதியடி ) மட்டும் மூன்று சீர்கள் பெற்றும் வர வேண்டும்.
#ஈற்றடியின் ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு, என்னும் வாய்பாடுகளுள் ஒன்றினைப் பெற்று வருதல் வேண்டும்.

கவியரசு said...

இங்குள்ள வெண்பாக்கள்
கவிதைகள் அல்ல
ஆனால்
ஆக்கிக்கொள்ளலாம்.

கவியரசு

enRenRum-anbudan.BALA said...

ஜயஸ்ரீ,

வெண்பாவில், பாரா உங்க லெவலை அடைவதென்பது ஆகுமோ, வியன் மூவுலகு பெறினும் :) அவர் ஒரு வெண்பாம் வீசும் டிவிட்டரிஸ்ட் !

அன்புடன்
பாலா

வெண்பா said...

பா ரா,

இங்குள்ள வெண்பாக்கள்
கவிதைகள் அல்ல
ஆனால்
ஆக்கிக்கொள்ளலாம்.

நளவெண்பாவை நான்குமுறை படிக்க வெண்பா எளிதில் கைவரப் பெறும்.


# வெண்பா எழுதுவதும் ஒரு கணித சூத்திரம் போலத்தான். நுட்பமான அழகுடையது வெண்பா.புலமை கை கூட எளிதாகும்.

enRenRum-anbudan.BALA said...

அனானி,

//கொடுக்கின்ற மனமும் நின்திருவடி சரணுமல்லால்
வேறெதும் வேண்டேன் ஆய்ந்து (18)
//
நமக்கு இலக்கணம் தெரியாது, ஆனாலும் இது நல்லா இருக்கு !

enRenRum-anbudan.BALA said...

//கார்த்தி said...

(18) கொடுநரகம் வேண்டி கொண்டாய் மக்களை மாலின்பால், பாற்கடெலெழுந்த ஆதிசேடனே
//

நல்ல முயற்சி, கார்த்தி, வாழ்க !

பொழிப்பு மோனை said...

#வெண்பாவுக்குப் பொழிப்பு மோனை வருதல் சிறப்பு.
ஓரடியின் முதற்சீரும் மூன்றாம் சீரும் ஓரினிவெழுத்துகளால் அமைய வேண்டும்.
மேற்கண்ட பாடலில்,
"கள்வடியும் பூவிதழ்க் காரிகையைக் கைகளில்
அள்ளினேன் பந்துபோல் அப்படியே - துள்ளும்
இதழில் கவிதை எழுதினேன் சொர்க்கக்
கதவும் திறந்தது கண்டு"

வெண்பா said...

#எதுகை நயம் பெறாது வருதல் வெண்பாவுக்கு அழகன்று!அடியின் முதற்சீரில் இரண்டாமெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகையாகும். பாடலைப் பாருங்கள்!
"கள்வடியும் பூவிதழ்க் காரிகையைக் கைகளில்
அள்ளினேன் பந்துபோல் அப்படியே - துள்ளும்
இதழில் கவிதை எழுதினேன் சொர்க்கக்
கதவும் திறந்தது கண்டு"


நேரிசை வெண்பாவினிரண்டாம் அடியின் இறுதியில் வரும் தனிச்சொல்முதற்சீரின் எதுகையைப் பெறுதல் வேண்டும்.

enRenRum-anbudan.BALA said...

ஜயஸ்ரீ,

வெண்பாம் இடுகைக்கு பின்னூட்டம் இடுகிறீர்கள்! ராமானுஜர் பற்றிய இடுகைக்கு ஒண்ணும் கிடையாதா ? என்னமோ போங்க!

உங்க பாஷையில் சொல்லணும்னா,

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)

Anonymous said...

http://sezhunkaarikai.blogspot.in/2011/07/blog-post.html

Anonymous said...

வெண்பா நண்பா விளக்கம் சூப்பர்!
அரிய தகவல் இது. மிக்க நன்றி...

தெளிவான விளக்கம்!

Anonymous said...

தமிழ் ஐயா, தலை சுத்துது ஐயா!

Anonymous said...

வெண்பா எழுத வேண்டும் தமிழ்ப்புலமை
நண்பாஉன் கவிதைகள் நன்று

கவியரசு said...

வெண்பா எழுத வேண்டும் தமிழ்ப்புலமை
நண்பாஉன் கவிதைகளை நிறுத்து.

கவியரசு

பா ரா முகம் said...

கவிதை எழுத களிமனம் போதும்
கவியரசு நீஇதை உணர்.
-பா ரா முகம்

பண்பு said...

நாம் எப்பொழுதுமே நாம் கொண்டுள்ள கொள்கையை கருத்தை சொல்லை செயலை நியாயப் படுத்தவே முனைகிறோம். அது எவ்வளவு சிறிய செய்தியாக இருப்பினும் சரி அதை நியாயப்படுத்த பற்பல உக்திகளையும் கையாள்கிறோம். இது பிறரைப் பாதிக்காத வரை தவறில்லை.

நம்போன்ற எழுத்தர்களிடையே கவிஞர்களிடையே இப்பண்பு வெகுவாய் ஒட்டிக்கொண்டிருத்தல் வியப்பில்லை. அப்பண்பு நல்லாக்கங்களுக்குத் துணைநிற்குமானால் ஏற்புடையதே.

ஜெ. said...

இ.வ.வுக்கு நன்/றி, பா. ரா.வுக்கு நன்றி, ரசித்து அடுத்தும் எழுதியோருக்கும் நன்றி, இலக்கணப் புலவர்களுக்கும் நன்றி. தீந்தமிழுக்கும், அந்தாதி நாயகர் ராமனுஜருக்கும் மெய்யுருகி சாஷ்டாங்க நமஸ்காரம். - ஜெ.

Jayashree Govindarajan said...

இதில் ஜெ.என்ற பெயரில் இட்டிருக்கும் நன்றி/நமஸ்கார மறுமொழி என்னுடையதல்ல.

எ.அ.பாலா, நான் மரபிலக்கியம் குழுவுல தேமா புளிமான்னு அசைபிரிக்கக் கத்துகிட்டபோது பாரா கடுமையா ராகிங் செஞ்சாரு. அதனால பழிக்குப் பழியா--வெண்பாம் எழுதறவர் ஒழுங்கா வெண்பா எழுதறவரை விடறதில்லை..

இதை வெண்பா-ன்னு நினைச்சு பலர் திருத்தக்கிளம்பிட்டாங்க. அதனாலதான் சொன்னேன், வெண்பாம்(தான்)னு குறிப்பிடுங்கன்னு

cho visiri said...

''கவியரசு said...
வெண்பா எழுத வேண்டும் தமிழ்ப்புலமை
நண்பாஉன் கவிதைகளை நிறுத்து.''

While the original post by Ragavan fails in many ways grammatically ( VeNpaa}, the aforementioned one from Kaviarasu fails, too.

Third Seer in the given work ( வேண்டும்) represents THeymaa) the first Asai in the next Seer should have been Nirai in order to satisfy the previous word, " எழுத",.(PuLiMaa). Maa mun Nirai should occur.
At the cost of repetition the original post by Shri Raagavan can not be alled as VeNpaa at all.
Eatradi Mucheer iNaiadi Naarseer. Maa mun Nirai and ViLamun Ner.

Again the seer "கவிதைகளை" corresponds to KaruViLanKai". Therefor the last Seer cannot be a Nirai (நிறுத்து.which corresponds to the Nirai Asai namely Pirappu). As per the grammar of VEnpaa, KaruviLankai should be followed with the last Seer as NEr asai only that is either asNaaL or as Kaasu.
I hope Kaviarasu (Tamizh Koorum Nallulagaththil Oruvar) ) would agree with me.

இமயவரம்பன் said...

http://ennachidharalgal.blogspot.com/2012/05/blog-post.html