பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 29, 2012

பிஜேபி பேரணி அரசியல் - யதிராஜன்


பாஜக இரண்டு பட்டால் மீடியாவுக்குக் கொண்டாட்டம். பாரதத்தைச் சுற்றி பல பிரச்சனைகளும், தலைவலிகளும் இருப்பினும், மீடியாக்களுக்கு அதுவெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. பம்பாயில் பாஜகவின் தேசிய செயற்குழுவில் யார் பலமாகத் தும்மல் போடுகிறார்கள், நரேந்திர மோதி வருவாரா? எதியூரப்பா வருவாரா? அத்வானி கடைசிநாள் பேரணியில் கலந்து கொள்வாரா என்ற உலக முக்கியத்துவம் வாய்ந்த, இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துகின்ற தேசியப் பிரச்சனைகளை மாய்ந்து மாய்ந்து எழுதியும், பேசியும் வருகிறார்கள். பாஜகவின் தேசிய செயற்குழு பம்பாயில் நடக்கப் போகிறது என்ற செய்தி வந்ததுமே இவர்களுக்கு பிரசவ வேதனை கண்டுவிட்டது.



சென்ற மாதம் காங்கிரஸில் அல்லோலகல்லோலப்பட்ட அபிஷேக் மனு சிங்வி விவகாரம் பற்றி வாயே திறவாத மீடியாக்கள் இன்று சஞ்சய் ஜோஷிக்கும், மோதிக்கும் கடும் விரோதம்; அதனால் மோதி கட்கரியை மிரட்டுகிறார் என்று சேற்றை வாரித் தூற்றுகின்றன. சஞ்சய் ஜோஷி பதவி விலகவில்லயென்றால் நான் முதல்வர் பதவியைத் துறப்பேன் என்று மோதி மிரட்டுவதாக மீடியாக்கள் சரடு விடுகின்றன. இன்னொரு பக்கம், சஞ்சய் ஜோஷி கட்சியில் நீடித்தால் கட்சிக்குக் காசு கொடுக்க முடியாது என்று சவால் விடுவதாக எழுதித் தள்ளுகின்றனர் மீடியா மஹானுபாவர்கள். எல்.கே.அத்வானி எதியூரப்பாவுடன் ஒரே மேடையில் அமர்வதை விரும்பவில்லை, எனவே அவர் இந்த செயற்குழுவைப் புறக்கணிக்கப் போகிறார்; எல்.கே. அத்வானிக்கு கட்கரி இரண்டாம் முறை கட்சித் தலைவராவது பிடிக்கவில்லை, எனவே பேரணியைப் புறக்கணிக்கிறார்..இவையெல்லாம் 24/7 அண்ட ஆகாசப் புளுகு சானலின் உபயம்.

கடந்த 2011 டிசம்பரில் தில்லியில் நடைபெற்ற பாஜகவின் தேசிய செயற்குழுவிலும், அதைத் தொடர்ந்து வந்த உத்திரப் பிரதேசத் தேர்தல் பிரசாரத்தில் மோதி பங்கேற்காததும் மீடியாவின் மோதி தொடர்பான மேற்கூறிய குடைச்சலுக்கு ஒரு காரணம். எண்பதுகளின் கடைசியில் மஹராஷ்டிர ஆர்.எஸ்.எஸ்சில் பணி புரிந்து கொண்டிருந்த சஞ்சய் ஜோஷியை குஜராத்தில் பாஜகவின் கட்சிப் பணிக்காக ஆர்.எஸ்.எஸ் அனுப்பியது. அப்பொழுது நரேந்திர மோதி அங்கு பாஜக பொதுச் செயலாளர். பிறகு பாஜக 1995 ஐல் ஆட்சியைக் கைப்பற்றி கேஷுபாய் படேல் தலைமையில் ஆட்சி அமைந்தது; இடையில் ஷங்கர் சிங் வகேலா கட்சிக்குள் புரட்சிக் கொடி தூக்கியதில் நரேந்திர மோதியிடமிருந்த பொதுச் செயலாளர் பதவி சஞ்சய் ஜோஷிக்குச் சென்றது. இதிலிருந்தே இவர்களிருவருக்கும் உரசல் இருப்பதாகக் கூறப்படுவதுண்டு. பிறகு 1998 இல் நரேந்திர மோதியிடம் முதல்வர் பதவி ஒப்படைக்கப்பட்டதுடன், சஞ்சய் ஜோஷியை தில்லி தலைமை அங்கு இழுத்துக் கொண்டு கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் ஆக்கியது. பிறகு உத்திரப் பிரதேசத் தேர்தல் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்ட்து, அங்கு தோல்வி கண்டது….இதெல்லாம் பூர்வ கதை. இந்த இருபதாண்டு காலக் கதைகளைக் கிளறி, அதெற்கிடையே தோராயமாக ஒரு முடிச்சிட்டு பிதற்றித் திரிகிறது மீடியா. ஆயிற்று, இப்பொழுது சஞ்சய் ஜோஷி ராஜிநாமா செய்ததாலேயே, மோதி கலந்து கொண்டார் என பிதற்றத் துவங்கியிருக்கிறது.

ஆனால் நடந்து முடிந்தது நேர் மாறான விஷயம்! மோதி பம்பாயில் பேசிய பேச்சிற்கு காங்கிரஸிற்கு பேதி கண்டதுதான் மிச்சம். எடுத்த எடுப்பிலேயே பிரதமரையும், இந்த ஆட்சியையும் கூறு போட்டுத் தொங்க விட்டார். ஐக்கிய நாடுகள் சபையில் எஸ்.எம் கிருஷ்ணா தன்னுடைய உரையைப் படிக்காமல், அந்நிய நாட்டின் உரையைப் படித்த்தற்கும் பிரதமர் கூட்டணி நிர்பந்தம் என்று சொல்வாரா?



· கடந்த பத்தாண்டுகளில் குஜராத்தின் வளர்ச்சி; அவ்வளர்ச்சியோடு தேசிய வளர்ச்சி மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் வளர்ச்சி ஒப்பீடு.



· தேசிய தீவிரவாத தடுப்பு மையம் என்ற பெயரில் காங்கிரஸ் செய்யும் தகிடுத்தத்ங்கள்.



· மத்திய காங்கிரஸ் பாஜக மற்றும் இதர கட்சிகள் ஆளும் மாநிலத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவது.



· அரசிற்கும், ராணுவத் தளபதி வி.கே.சிங்கிற்கும் இடையிலான மோதல் போக்கு.



போன்றவற்றையெல்லாம் கடுமையாக விமர்சித்தார். இதற்கு முன்னதாகப் பேசிய அருண் ஜேட்லி தனக்கே உரித்தான பாணியில் இந்த காங்கிரஸ் கூட்டணி அரசு பொறுப்பேற்ற நாள் முதலாக இவர் பேசும் கணம் வரை நடைபெற்ற ஊழல்களை அடுக்கி, அதற்கு பிரதமரின் கையாலாகாத்தனத்தையும், மெத்தனப் போக்கையும் கடுமையாகச் சாடினார். பிறகு பேசிய நிதின் கட்கரி அவ்வளவாக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை என்றாலும் கூட இந்த தேசிய செயற்குழுவின் நோக்கம் வெற்றி பெற்றதாகவே சொல்ல வேண்டும்.



பிறகு சம்பிரதாயமான சில தீர்மானங்கள், கட்கரியை இரண்டாம் முறையாக கட்சித் தலைவராகத் தேர்வு செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலிரண்டு தினங்கள் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அத்வானியும், சுஷ்மா ஸ்வராஜும், இத்தீர்மானங்களின் போதும் பேரணியின் போதும் இல்லை, தனிப்பட்ட மற்றும் முன்னதாக ஒப்புக் கொண்ட கட்சி நிகழ்வுகளுக்காக தில்லி திரும்பியதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் ஜனசங்க காலம் தொட்டு, இன்று வரை கட்சியின் மூளையாக செயல்பட்டு வரும் அத்வானி கட்சியின் செயற்குழுவிற்குப் பிறகு மரபாகவே நடைபெறும் பேரணியைப் புறக்கணிப்பது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக என்று கட்சியினர் என்னதான் சமாதானம் கூறினாலும், அத்வானி பேரணியைப் புறக்கணித்ததில் விஷயமில்லாமலிருக்காது என்றே தோன்றுகிறது.



இன்றைய சூழலில், ஊழல் தலைவிரித்தாடும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு ஒரே மாற்று பாஜகதான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால் தேர்தலுக்குத் தயாராவதற்கு முன்னர் கட்சியில் இருக்கும் அபிப்ராய பேதங்களைக் களைந்து, பிரதமர் வேட்பாளரைத் தேர்தலுக்கு முன்னரே, குறிப்பாக நரேந்திர மோதியை அறிவித்தலே பாஜகவிற்கு தேர்தலில் நலம் பயக்கும். செய்தியாளர்களிடம் இது பற்றி கருத்து தெரிவித்த எதியூரப்பாவும், நரேந்திர மோதியைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தினார். ஆனால் இப்போதிருக்கும் சூழலில் இவையெல்லாம் எந்த அளவிற்கு சாத்தியம் என்ற சந்தேகம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது.



தேர்தலில் வாக்களிக்கப் போகும் மக்கள் நிச்சயமாக NDTV யையோ, மற்ற மீடியாக்களின் கருத்திற்கோ செவி சாய்த்து வாக்களிக்கப் போவதில்லை. நல்ல நிர்வாகத் திறன் கொண்ட நேர்மையான நல்லாட்சி வழங்கக் கூடிய ஒரு தலைவரைத்தான் மக்கள் விரும்புவர். இதை பாஜக உணர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தேசத்தின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்.

இட்லிவடையின் சில கேள்விகள்:

1. இரண்டாம் முறை கட்சிதலைவர் பரிந்துரையின் போது ஏன் அத்வானி அப்செண்ட் ஆக வேண்டும் ?.
2. ஏன் கட்கரி தலைவர் பதவியை இரண்டாவது முறை வேறு யாருக்காவது விட்டுக்கொடுக்க கூடாது ?
3. ஏன் இப்போது சஞ்சய் ஜோஷி ராஜிநாமா செய்ய வேண்டும் ?
4. மத்திய தலைமை முதுகெலும்பற்றது என்று சொல்லும் எடியூரப்பாவை ஏன் ஒதுக்கி வைக்க முடியவில்லை ?
சர்க்கஸில் மற்றவர்களை காட்டிலும் நம்மை கவர்வது அங்குள்ள கோமாளிகள் தான். தற்போது பிஜேபியிலும் அதே மாதிரி தான்!

Read More...

Monday, May 28, 2012

IPL5 -CSK vs KKR இறுதியாட்டம் -வந்தாரை வாழ வைத்த சென்னை -எ.அ.பாலா

சென்னை அணி தோல்வியை தழுவியதால், எ.அ.பாலாவை இறுதி போட்டி பற்றி எழுத ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டார். அவர் எழுதவில்லை என்றால் இட்லிவடை வாசகர்கள் தங்கள் கோபத்தை யாரிடம் காட்டுவார்கள் ? அதனால் அவரை பல முறை கேட்டுக்கொண்ட பின் இந்த பதிவை சற்றும் முன் எழுதி அனுப்பினார். அவருக்கு இட்லிவடை ரசிகர்கள்(?) சார்பில் மிக்க நன்றி.


சென்னை முதலில் விளையாடி 190 அடித்தவுடன், சென்னை நிச்சயம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையில், இடுகைக்கான மேட்டரை எழுத ஆரம்பித்து, கொல்கத்தா 10 ஓவர்கள் பேட் செய்திருந்த நிலையில், முடித்து விட்டேன். சில fill in the blanks நிரப்ப வேண்டியிருந்தது தான் மிச்சமிருந்தது. ஆனால், விதி (ஹில்ஃபன்ஹாஸின் 19வது ஓவரின் கடைசிப் பந்து நோ பால் மூலமாக) விளையாடி விட்டது. கொல்கத்தா [edited] ஓசியில் ஜெயித்து விட்டார்கள்! (ஓசி என்று சொல்ல காரணம் இருக்கிறது! அடுத்த பாராவில்!) அதனால், நான் கஷ்டப்பட்டு எழுதி வைத்த மேட்டரை இங்கே இடுவது, சென்னை தோல்வியடைந்த சூழலில் relevant ஆக இருக்காது என்பதால், மனதில் சட்டென்று தோன்றிய ஒரு சில எண்ணங்கள் மட்டுமே!

என்னளவில், 7 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில், ஒரு சேம்பியன் அணியான சென்னை சுலபமாகவே வெற்றி பெற்றிருக்க வேண்டும். இது 6 பந்துகளில் 9 ரன்கள் என்று ஆனது தான் தோல்விக்கு மிக முக்கியக் காரணம் என்று கூறுவேன். அதோடு, edge வாங்கி பல ஓசி பவுண்டரிகள் கொல்கத்தாவுக்குக் கிடைத்ததால் தேவையான ரன் ரேட் கட்டுப்பாட்டில் இருந்தது.

இருந்தாலும், தன்னடக்கம் மிக்க பிஸ்லா, ஒரு பெரிய ஆட்டத்தில் எந்தவித அழுத்தமும் இன்றி அபாரமாக பேட்டிங் செய்ததை நிச்சயம் பாராட்ட வேண்டும். அதே நேரத்தில், நல்ல போதையில் இருந்த ஷாருக் கான், ஆட்டத்திற்குப் பின் செய்த அலம்பலும், உளறலும் தாங்க முடியாமல் இருந்தது. அதுவும், மைதானத்தில் குரங்குக்கு இணையாக அவர் போட்ட குட்டிக்கரணம் பார்க்க கண்றாவியாக இருந்தது!

இவ்வாட்டத்தில் தோனி (மும்பை, தில்லி ஆட்டங்களில் கிட்டிய சுலப வெற்றிகளாலும், மற்றும் 190 ரன்கள் இந்த ஆடுகளத்தில் அதிகம் என்றெண்ணியும்) சற்றே மிதப்பாக இருந்தாரோ என்று எண்ணும்படி அவர் கேப்டன்ஸி இருந்தது. காலிஸ், பிஸ்லா என்று 2 வலது கை மட்டையாளர்கள் ஆடியபோது, அந்த கூட்டணியை உடைக்க அவர் ஜகதியுடன், ஜடேஜா அல்லது ரைனாவை (இடது கை சுழல் பந்துவீச்சு) பயன்படுத்தியிருக்க வேண்டும். அவரது ஃபீல்ட் அமைப்பும் நேற்று சோபிக்கவில்லை.

ஐபிஎல் கோப்பையை தான் ஓடி வந்து வாங்கிக் கொள்ளாமல், அதை கம்பீர் வாங்கிக் கொள்ள அனுமதி அளித்த ஷாருக்கின் பெருந்தன்மையை எத்தனை பாராட்டினாலும் தகும்! அது போல, கம்பீர் எல்லா பேட்டிகளிலும், கிரிக்கெட் ஒரு டீம் விளையாட்டு, கொல்கத்தா வென்றது அணியினரின் கூட்டு முயற்சியால் மட்டுமே என்று (தான் தன்னடக்கத் திலகம் என்று பேர் வாங்குவதற்காக) உளறுவது அவரை காமடி பீஸாக பார்க்க வைக்கிறது என்பதை உணரவேண்டும். கங்குலியும் தோனியும் கிரிக்கெட் டீம் விளையாட்டு இல்லை என்று கூறினார்களா என்ன ?!?!?! கம்பீர் கூறும் தத்துவங்களை விட பெரிய விஷயங்கள் எல்லாம் அவரை விட அறிவாளிகளான கிரிக்கெட் ரசிகர்களுக்குத் தெரியும்!!!

ஷாரூக் கானின் கொல்கத்தா அணியில் சேரும்வரை கம்பீர் நன்றாகத் தான் இருந்தார். ”சேர்வார் சேர்க்கையால்”, கெட்டிக்காரத்தனமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு இப்போது தத்துபித்து என்று சீரியஸாக பேத்துகிறார். அவர் நார்மலாக இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஏனெனில், இந்திய கிரிக்கெட்டுக்கு கம்பீர் போன்ற திறமையான தொடக்க ஆட்டக்காரரின் சேவை தேவை. ஆனால், இந்த வெற்றியை வைத்து அவரை இந்திய கேப்டன் ஆக்கலாம் என்று சொல்லுபவரைப் பார்த்து பரிதாபம் மட்டுமே பட முடியும்! 31 வயதாகும் கம்பீரை விட மிக இளையவரான விராத் கோலியைத் தான் தோனிக்குப் பின் கேப்டனாக groom செய்வதே இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு சரியானதாக இருக்கும்.

கொல்கத்தாவை சென்னை பழிவாங்க சேம்பியன்ஸ் லீக் டி-20 இருக்கவே இருக்கிறது. அதுவரை வெயிட்டீஸ் :-)

ஏற்கனவே சென்னை அணி தோல்வியால் நொந்து போய் உள்ள பாலாவை அட்லீஸ்ட் இந்த இறுதி போட்டி பதிவிலாவது திட்டாமல் இருக்க வாசகர்களை வேண்டுகிறேன் :-)

Read More...

Saturday, May 26, 2012

கி அ அ அனானியின் வாதம்


நேற்று மும்பை தோற்றதற்கு காரணம் நானே! - ஹர்பஜன் வாக்குமூலம் என்ற தலைப்பில் கி.அ.அ.அனானி அனுப்பிய கேலி சித்திரத்தை பிரசுரித்தேன். பிறகு சிலரின் மனம் புண்பட கூடாது என்று அதை எடுத்தது பலருக்கு நினைவு இருக்கலாம்.

இன்று இட்லிவடைக்கு கி.அ.அ அனானி அவர்கள் கீழே அவருடைய வாதத்தை எனக்கு அனுப்பியுள்ளார். இட்லிவடை தனி ஒருவருடைய சொத்து இல்லை அது வாசகர்களுடைய சொத்தாகி பல காலம் ஆகிவிட்டது. இட்லிவடை செய்தது சரியா தப்பா என்று சைடில் இருக்கும் வாக்கு பெட்டியிலும், கீழே பின்னூட்டதிலும் தங்கள் கருத்தை சொல்லலாம். ( கார்ட்டூனை பார்க்காதவர்கள், எ.அ.பாலா பதிவில் பார்க்கலாம் )
நன்றி
இட்லிவடை



இந்த கேலி சித்திரத்தை போடுவதில் இட்லி வடைக்கு மறுப்பில்லை. "மனது புண்பட்ட" சிலரது வேண்டுகோளின் படி நீக்கியிருக்கிறார் என்று அர்த்தம் செய்து கொள்கிறேன்.

அம்பானி குடும்பத்துக்கு தமிழ் தெரியும் என்றோ அல்லது அவர்கள் நிரந்தர "இட்லி வடை " வாசகர்கள் என்றோ எந்தத் தகவலும் நான் இதுவரை கேள்விப் படாததால் இந்த மனம் புண்படுதல் நேரடியாக " அம்பானி குடும்பத்துக்கு " இல்லை. "அம்பானி ரசிகர்களுக்கு " மனிதாபிமானத்தின் அடிப்படையில் மட்டுமே என்றும் புரிந்து கொள்கிறேன்.

எந்த உடல் ஊனத்தையும் கேலி செய்வது தவறு என்றே நானும் நினைக்கிறேன்.ஆனால் நான் பார்த்த வரையில் குண்டு , ஒல்லி.தொப்பை போன்ற மாறும் தன்மையுடைய அம்சங்களைக் கேலி செய்வது சாதாரணமாக நடக்கும் விஷயங்கள்தான். இது தவறென்று சொல்பவர்கள் " ஒல்லி குச்சி " நரசிம்மனையும். "தயிர் வடை" தேசிகனயும், "குண்டு" கல்யாணத்தையும் தமிழ் சினிமா உலகம் அவர்களது உடல் வாகை வைத்து கேலி செய்து படம் பண்ணும் போது அதைப் பார்த்து கெக்கெக்கே என்று சிரிக்கிறோமா இல்லை அல்லது "ச்சே..ச்சே இதெல்லாம் தப்பு " என்று பக்கத்து சீட்டில் இருப்பவரிடமாவது சொல்கிறோமா என்று "புண் பட்ட " மனதைத் தொட்டு யோசிக்கலாம். நானும் குண்டு மல்லிகா, குட்டை கோமளா..டேய் இப்ப டல் திவ்யா தூள் திவ்யா ஆகிட்டாடோய்" மாதிரியானவைகளை தினமும் பார்ப்பதால் குண்டுத்தன்மையை கேலி செய்வது எனக்குத் தப்பாகப் படவில்லை.

இதைச் சொல்வது நான் அம்பானிக்களை கிண்டல் செய்தது சரி என்று சப்பைக் கட்டு கட்டுவதற்காக கண்டிப்பாக இல்லை.

இந்தியா போன்ற நாட்டில் பணம் படைத்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக 5 பேர் இருப்பதற்காக,1000 கோடி ரூபாயில் "அன்டில்லா " என்கிற அரண்மனையை விடப் பெரிய மாளிகையைக் கட்டி அதற்கு 70 லட்சம் ரூபாய் மின் கட்டணம் கட்டிக் கொண்டு பின் வாஸ்து சரியில்லை என்று சொல்லி கட்டிய வீட்டில் குடியிருந்தும் குடியிருக்காமல் இந்திய ஏழ்மையை எள்ளி நகையாடும் விதமாக வாழ்க்கை நடத்தும், அந்த பணத் திமிரை வெளிக்காட்டுவதில் சிறிதும் தயக்கம் காட்டாத அம்பானிக்களையும் ஊதாரித்தனத்திலும் தாந்தோன்றித்தனத்திலும் அவர்களை விட எதிலும் சற்றும் சளைக்காத மல்லையாக்களையும் மற்றும் அது போன்ற பணத்திமிர் பிடித்தலைபவர்களையும் "எல்லா விதத்திலும் " கிண்டலும் கேலியும் செய்வதில் எனக்கு எந்த தயக்கமோ ,வருத்தமோ கிடையாது என்பதையும் பதிவு செய்து கொள்கிறேன்.

கி அ அ அனானி.

வாக்கு பெட்டி சைடில்...:-)

Read More...

உலக சேம்பியன்ஷிப் செஸ் - ஆனந்த் vs கெல்ஃபாண்ட்

இட்லிவடை வாசகர்களில் செஸ் ஆர்வலர்களுக்கு மட்டுமாவது, இந்த ஐபிஎல் கிரிக்கெட் பெருவிழாவுக்கு நடுவே, தற்சமயம் உலக செஸ் சேம்பியன்ஷிப் நடந்து வருவது நிச்சயம் தெரிந்திருக்கும். 10 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், உலக சேம்பியன் விஷி ஆனந்தும், அவரை எதிர்த்தாடும் போரிஸ் கெல்ஃபாண்டும் சமநிலையில் (5-5) இருக்கிறார்கள். 12 ஆட்டங்கள் முடிவில், புள்ளிகள் சமநிலையில் இருக்குமானால், 4 துரித ஆட்டங்கள் நடைபெறும். அதில் சமன் எனில், 2 அதிவேக ஆட்டங்கள், சமன் எனில், இது போல 4 முறை (4 X 2) தொடரும், சமன் எனில், போதும் விட்டு விடுவோம் :-) இப்போது 7,8,9,10-வது ஆட்டங்கள் பற்றி பார்க்கலாமா?

எ.அ.பாலாவின் ஐபிஎல் கிரிக்கெட் இடுகைகளுக்கு இடையே, நான் செஸ் குறித்து டெக்னிக்கலாக எழுதினால் எடுபடுமா என்று ஒரு சந்தேகம் இருக்கிறது. ஆனால், 2010 உலக சேம்பியஷிப் சமயத்தில், லலிதா ராம் அவர்களின் செஸ் இடுகைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததை கவனித்தேன்! அந்த காரணத்தால் ஒரு கட்டுரை எழுதிப்பார்ப்போமே என்றொரு உந்துதல் பிறந்தது.முதல் 6 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தன. அதில் 3வது Neo-Grulfeld ஆட்டத்தில், வெள்ளைக் காய்களுடன் விளையாடிய ஆனந்துக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. 30 நகர்த்தல்கள் வரை முன்னணியில் தான் இருந்தார்; d6-ல் அவரது ஒரு passed pawn முடிவாட்டத்தில் கெல்ஃபாண்டுக்கு பிரச்சினை தரும் வகையில் அமர்ந்திருந்தது. நேரமின்மை காரணமாக ஆனந்தின் பலமில்லாத 35வது நகர்த்தலால் (Rh1), ஆனந்திடம் ஒரு pawn அதிகமிருந்தும், ஆட்டம் டிராவில் முடிந்தது. ஆட்டத்தை இங்கே ஆடிப் பார்க்கலாம்!

http://www.chessgames.com/perl/chessgame?gid=1665818

7வது ஆட்டம்: http://www.chessgames.com/perl/chessgame?gid=1666550

இதில் ஆனந்துக்கு கறுப்புக்காய்கள். செமி-ஸ்லாவ் தற்காப்பை ஆனந்த் கையாண்டார். 11-வது நகர்த்தலின் முடிவில், கெல்ஃபாண்ட் C-file-ஐ தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றது போலத் தோன்றியது. ஆனந்தின் 15வது நகர்த்தல் (Qb8), கெல்ஃபாண்டின் C-file ஆதிக்கத்தை கலைக்க மேற்கொண்ட முடிவு என்பது அடுத்து கருப்பு யானை C8க்கு வந்தவுடன் புரிந்தது. 20 நகர்த்தல்களுக்குப் பின், வெள்ளைக் காய்கள் தாக்குதலை தொடங்க சாதகமாகவே பொஸிஷன் இருந்தது. ஆனந்தின் காய்கள் ராணியின் தரப்பு (Queenside) குவிந்திருந்த போதிலும், இதுவரை அவர் செய்த தற்காப்பு நகர்த்தல்களை பலமற்றவை என்று கூறமுடியாது.

ஆனந்தின் 21வது நகர்த்தல் Ne4 பலகீனமானது என்று சொல்ல செஸ் கிராண்ட் மாஸ்டர் தேவையில்லை. அவரது வீழ்ச்சிக்கு அடி கோலிய நகர்த்தலது! உடனே, கெல்ஃபாண்ட் தனது யானையையும், ராணியையும் ஆனந்துடன் எக்ஸ்சேஞ்ச் செய்து கொண்டதில் அவரது பொஸிஷன் மேலும் வலுவடைந்தது. தொடர்ந்து பலகீனமான சந்தேகத்துக்குரிய நகர்த்தல்களால், தனது பொஸிஷனை மேலும் மோசமாக்கிக் கொண்ட ஆனந்த் ஒரு உலக சேம்பியன் போல விளையாடவில்லை என்பது வருத்தமாக விஷயம். C8-ல் இருந்த ஆனந்தின் வெள்ளை பிஷப், தனக்கும் ஆட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல பரிதாபமாக காட்சியளித்தது. கெல்ஃபாண்ட் கொடுத்த தொடர் அழுத்தத்தினால், அந்த பிஷப்பை 35வது நகர்த்தலில் ஆனந்த் இழந்தார்.

கெல்ஃபாண்ட் தனது யானை, 2 குதிரைகளைக் கொண்டு ஆனந்தின் ராஜாவுக்கு மேட்டிங் வலையை அழகாக விரித்தார். கடைசி முயற்சியாக, e- pawn-ஐ ராணியாக்க ஆனந்த் வகுத்த அதிரடி திட்டத்திற்கு கெல்ஃபாண்ட் அசரவில்லை. 38வது நகர்த்தலில், ஆனந்த் “38. ... e1=Q 39. Ng6+ Kg8 40. Rg7#!” காரணத்தினால் ரிசைன் செய்தார்.

8வது ஆட்டம்: http://www.chessgames.com/perl/chessgame?gid=1666558

உலக சேம்பியன்ஷிப் ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் மோசமாக விளையாடி தோற்கும்போது உண்டாகும் சைக்காலிஜிகல் அழுத்தம் காரணமாக, அடுத்த ஆட்டத்தில் பாதுகாப்பான ஆட்டத்தை தேர்வு செய்யும் மனநிலைக்கு ஒருவர் ஆளாவது சகஜமே. ஆனால், ஆனந்தின் முந்தைய பல உலக சேம்பியன்ஷிப் அனுபவமும், அவரது அசாத்திய tactical ஆட்டத்திறமையும் இந்த முக்கியமான ஆட்டத்தில் அவருக்கு பெரிதும் உதவின.

ஆனந்துக்கு வெள்ளைக்காய்கள். இதுவும் ஒரு d4 தொடக்கம், நியோ கிரன்ஃபல்ட் தற்காப்பு வகையில், ஆனந்த் சற்றே அக்ரஸிவ்வான f3 நகர்த்தல் வாயிலாக ஃப்ளோர்-ஆலிகைன் தொடர்ச்சியைத் தேர்ந்தெடுத்தார். இவ்வாட்டத்தில் வெற்றி அவசியம் என்பதால், ஆனந்த் ரிஸ்க் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். 7வது நகர்த்தலில் ஆனந்தின் ராஜா தரப்பு குதிரை (ராணி தரப்பு குதிரை நேரடியாக செல்லும் வாய்ப்பிருந்த) c3-க்கு சென்றது சற்று ஆச்சரித்தை அளித்தது.

கெல்ஃபாண்ட் ராஜா தரப்பு castling செய்தார். ஆனந்தின் 12வது நகர்த்தல் g4-ஐ பார்த்தவுடன், ஆனந்த் தாக்குதலுக்காக castling-ஐ புறக்கணித்து விட்டது புரிந்தது. 14வது நகர்த்தலில், கெல்ஃபாண்ட் தனது குதிரையை g7 அல்லது f6க்கு எடுத்துச் சென்று அமைதியாக ஆட்டத்தை தொடர்ந்திருக்கலாம். ஆனால் அவர் பொஸிஷன் (14...Nf6 15.Kc2 Na6 16.Rd1 or 14...Ng7 15.h4) மேலும் பலமிழந்து போயிருக்கும்,

தானும் தாக்குதலில் இறங்க முடிவு செய்த கெல்ஃபாண்ட், ஆனந்தின் ராஜாவுக்கு செக் கொடுத்து, f3 ஃபோர்க் வாயிலாக அவரது யானையை வெட்டும் நோக்கத்துடன் 14.Qf6 நகர்த்தலை தேர்ந்தெடுத்தார். ஆனால், உலக சேம்பியன்ஷிப் ஆட்டத்தில், Attack is the best form of defense என்பது சில சமயங்களில் மட்டுமே கை கொடுக்கும். ஆனந்த் இதை துல்லியமாக எதிர்பார்த்தவர் போல, 15.gxNh5 நகர்த்தலை அதிகம் யோசிக்காமல் செய்தார். 15.... Qxf3+ 16.Kc2 Qxh1 தொடர்ந்தன. ஆனந்த் தனது யானையை மனமுவந்து தாரை வார்த்தார் என்று தான் கூற வேண்டும். ஏன்?

ஆனந்தின் 17. Qf2-க்கு பிறகு தான் தனது ராணி ஆனந்த் விரித்த trap வலையில் மாட்டி விட்டது கெல்ஃபாண்டுக்கு உறைத்தது. கெல்ஃபாண்ட் 17 ... Nc6 ஆடி மேலும் ஒரு குதிரையை இழந்து ராணியை காப்பாற்றி, மோசமான பொஸிஷனில் ஆட்டத்தை தொடர்ந்திருக்கலாம். ஆனந்த் போன்ற ஒரு விற்பன்னரிடம் அதில் பயனெதுவும் இல்லை என்றுணர்ந்து உடனடியாக ரிசைன் செய்தார். கெல்ஃபாண்டின் பிளண்டர் காரணமாகத் தான் அவர் தோற்றார் என்றாலும், இவ்வாட்டத்தில் ஆனந்தின் ஒவ்வொரு நகர்த்தலும், துல்லியமான, நம்பிக்கையான நகர்த்தல். சமீப காலத்தில் உலக சேம்பியன்ஷிப் ஆட்டங்களில் மிகக் குறைந்த நகர்த்தல்களில் முடிவடைந்த ஆட்டம் இது என்று கூறுகிறார்கள்.

9வது ஆட்டம்: http://www.chessgames.com/perl/chessgame?gid=1667306

இவ்வாட்டம் டிராவில் தான் முடிந்தது என்றாலும், கெல்ஃபாண்டின் தாக்குதலை தனது தற்காப்பு நகர்த்தல்களால் திறமையாக சமாளித்த ஆனந்தை நிச்சயம் பாராட்ட வேண்டும். அதுவும், பல நகர்த்தல்களுக்கு முன்பே, ஆட்டம் செல்லக்கூடிய சாத்தியங்களை நுணுக்கமாக ஆராய்ந்து, தனது ராணியை 20. Rxc5 நகர்த்தலுக்குப் பின் கெல்ஃபாண்டின் யானை, பிஷப்புக்கு தியாகம் செய்யத் துணிந்ததில், அவரது மன உறுதி பளிச்சிட்டது.

முடிவாட்டத்தில், கெல்ஃபாண்டின் ராணிக்கு எதிராக ஆனந்திடம் ஒரு யானையும், ஒரு குதிரையும் இருந்தன. இம்மாதிரி சூழ்நிலையில், Zugzwang ஏற்படாத வகையில் ஆடுவதற்கு அதிக திறமை வேண்டும். கெல்ஃபாண்ட் வெற்றி பெற மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் ஆனந்த் முறியடித்ததில், ஆட்டம் 49வது நகர்த்தலில் டிராவில் முடிவடைந்தது.

10வது ஆட்டம்:
http://www.chessgames.com/perl/chessgame?gid=1667320

இவ்வாட்டத்தில் ஆனந்துக்கு வெள்ளை என்பதால், ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. சற்றே வித்தியாசமான king pawn (e4) தொடக்கம்; சிசேலியன் தற்காப்பு (ரோஸலிமோ தொடர்ச்சி) வகைப்பட்டது. 5வது நகர்த்தலில் (e5) கெல்ஃபாண்ட் தனது pawn ஐ தியாகம் செய்ய முடிவு செய்தார். அவர் d6 ஆடியிருந்தால், அவரது கருப்பு ராணி trap செய்யப்படும் அபாயம் ஒன்று ஒளிந்திருந்தது !!! ...5...d6 6.e5 6...dxe5 7.Nxe5 Qd4 8.Nc4 Qxa1 9.Nc3.

pawn-களின் அரண் இல்லாத ராணியின் தரப்பு தைரியமாக castling செய்து கெல்ஃபாண்ட் ஆச்சரியப்படுத்தினார், இந்த சூழலில், ஆனந்த் மிகச் சிறிய அளவில் முன்னணியில் இருந்தார் என்று தான் கூற வேண்டும், ஆனந்தின் c5 pawn மீதான தாக்குதலை கெல்ஃபாண்ட் சமாளித்தது அருமை. 8வது ஆட்டத்தின் தோல்வியை மனதில் வைத்து, கெல்ஃபாண்ட் இவ்வாட்டத்தில் மிகச் சரியான தற்காப்பு நகர்த்தல்களை ஆச்சரியமளிக்கும் வகையில் மேற்கொண்டார். 25வது நகர்த்தலில் ஆட்டம் டிராவில் முடிந்தது.

ஆனந்த் 18வது நகர்த்தலில் Re5 ஆடியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. தொடர்ச்சியாக ஆட்டம் சிக்கலான பொஸிஷனுக்கு போயிருக்கும் என்பது தவிர, ஆனந்துக்கு நிச்சயமான பெரிய அட்வாண்டேஜ் கிடைத்திருக்கும் என்று ஆராய்ந்து கூறுவது என் செஸ் அறிவுக்கு அப்பாறப்ட்டது. ஆனாலும், இன்னும் இரண்டே ஆட்டங்கள் இருக்கும் நிலையில், இந்த டிரா எனக்கு வருத்தத்தையே அளித்தது.

பொறுமையாக வாசித்த இ.வ வாசகர்களுக்கு நன்றி.

இதை எழுதியது யார் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு புத்தகம் பரிசு.

Read More...

Friday, May 25, 2012

மும்பை தோற்றதற்கு காரணம் நானே! - ஹர்பஜன் வாக்குமூலம்



சிலரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த படம் நீக்கப்படுகிறது. யாருடைய மனமும் புண்படுத்தும் எண்ணம் இட்லிவடைக்கு என்றும் இருந்ததில்லை.
நன்றி.

Read More...

Thursday, May 24, 2012

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 24-5-2012

டியர் இட்லிவடை,

உன்னுடைய வலைப்பதிவு எல்லாம் ஒரே பச்சை நிறமாக இருக்கிறது. அம்மாவிற்குப் பிடித்த கலர் என்பதால் என்று நினைக்கிறேன். கொஞ்சம் காலத்துக்கு உன் வலைப்பதிவை நீல நிறத்துக்கு மாற்றிவிடு. மம்தா ஏதாவது சலுகை கொடுத்தாலும் கொடுப்பார். என்ன புரியலையா? மேற்குவங்கத்தில் வீட்டுக்கு நீல நிறம் அடித்தால் வரிச்சலுகை உண்டு என்று மம்தா அறிவித்திருக்கிறார். துக்ளக் ஆணாகத்தான் இருக்க வேண்டும் என்று கிடையாது, பெண்களிலும் இருக்கார்.

ஜெயலலிதா அரசின் ஒரு வருட சாதனை என்ன என்று கேட்டால் அவர் கொடுத்த அந்த முழுபக்க விளம்பரம் தான். 15 கோடி, 20 கோடி என்று "சில" ஆங்கில டிவி சேனல் நியூஸ் போட்டார்கள். பலரும் அதைக் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் ஆச்சரியம். அதற்கு காரணம் ... சத்யமேவ 'ஜெ'யதே.

சத்யமேவ ஜெயதே என்ற டாக் ஷோவில் எல்லோருக்கும் தெரிந்த உண்மைகளைப் புதிதாகச் சொல்லுகிறார்கள். பாரதிராஜா கருத்தம்மா படம் பார்த்த பின்னர் பெண் சிசு கொலைகள் கிராமத்துல் தான் நடக்கும் என்று நம்பிக்கொண்டு இருந்த எனக்கு அது டாக்டர் குடும்பத்திலும் நடக்கும் என்பது பெரிய அதிர்ச்சியாக இல்லை.


கருத்தம்மாவை விட கருத்துப்படம் என்றால் நம் அரசியல்வாதிகள் ரொம்ப சீரியஸாகிவிடுகிறார்கள். இந்த வார கல்கியில் ஞாநி எழுதிய ஓ-பக்க்ங்களில் எனக்கு பிடித்த பகுதி இது "இன்றைய சூழலில் நாம் காந்தியை காங்கிரஸ், பி.ஜே.பி. யிடமிருந்து விடுதலை செய்ய வேண்டியிருக்கிறது. பெரியாரை தி.க.விடமிருந்து விடுவிக்க வேண்டியிருக்கிறது. விவேகானந்தரை ஆர்.எஸ்.எஸ்.சிடமிருந்து விடுவிக்க வேண்டியிருக்கிறது. அம்பேத்கரை தலித் தலைவர்களிடமிருந்து விடுதலை செய்ய வேண்டியிருக்கிறது." இந்த கார்ட்டூனில் நத்தை வேகத்தில் போகும் அரசியல் சட்டத்தை நேரு மற்றும் அம்பேத்கர் சாட்டையை வைத்து வேகமாக ஓட்டுகிறார்கள். இதைப் பார்த்துவிட்டு நேரு ஏதோ அம்பேத்காரை அடிப்பதாக நினைத்துவிட்டு, தலித்துக்கு எதிராக என்று பாராளுமன்றத்தில் முழங்கிப் பிறகு எல்லா கார்ட்டூனையும் பாடப் புத்தகத்திலிருந்து எடுத்துவிட்டார்கள். இன்று வேறு எதற்க்கோ வந்த டைம்ஸ் ஆப் இந்தியா கார்ட்டுன் இதற்கு நன்றாகப் பொருந்துகிறது. யானையை விட்டு விட்டு லத்தியை..


லத்தியை வைத்து அடித்தால் பரவாயில்லை "வன்னியர் பெண்களை கலப்பு திருமணம் செய்ய வருவோரை வெட்டிப் போடுவேன்" என்று சொல்லுகிறார் காடு'வெட்டி' குரு. இணையத்தில் பலர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதற்குப் பேசாமல் கம்யூனிஸ்டுக்ககளைக் கலப்புத் திருமணம் செய்யலாம். மம்தா உங்களை வெட்டிப் போட மாட்டார்.

கலைஞர் பற்றி ஏன் இப்போது எல்லாம் எழுதுவதில்லை என்று ஒருவர் என்னிடம் கேள்வி கேட்டுள்ளார். கலைஞர் பதில்கள் என்று ஒரு புத்தகம் கொண்டுவந்தால் அதில் கலைஞர் பதில்கள் எல்லாம் கேள்விகளாகவே இருக்கும். உதாரணம் ராசா ஜாமினில் வந்ததை பற்றி கேட்ட கேள்விக்கு "ராவணன் ஜாமினில் விடுதலையாகும் போது ராசா விடுதலையாகக் கூடாதா?" என்று பதில் கேள்வி கேட்டுள்ளார்.

சஞ்ஜய் ஜோஷி, மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கட்சியின் தேசிய நலனுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாகத் தெரிவித்துள்ளார். இதனால் நமக்கு பிஜேபியில் சஞ்ஜய் ஜோஷி என்ற ஒருவர் இருக்கிறார் என்று தெரிந்தது. மோடிக்கு நன்றி.

முன்பெல்லாம் கலைஞர் கோபப்பட்டால் உடனே பிரணாப் வந்து சமாதனப்படுத்துவார். ஆனால் இப்போது கண்டு கொள்வதே இல்லை. அதனால கோவத்தை குறைத்துக்கொண்டு, இப்போ எங்களிடம் எம்.பிக்கள் இருக்கிறார்கள், அவர்களை விட்டு பெட்ரோல் விலையைக் குறைக்கச் சொல்லுவேன் என்கிறார். இதைவிட பெரிய ஜோக் அழகிரியிடம் ஏன் பிரதமர் கொடுத்த டின்னருக்கு போகலை என்று கேட்டதற்கு "டயட்" என்று பதில் சொல்லியிருக்கார்!

நானும் டயட்டில் இருப்பதால் சினிமா செய்திகள் எதுவும் இந்த வாரம் கிடையாது. ( படம் உண்டு!). ஆனால் ஒரு எச்சரிக்கை. "கள்ளதொடர்பு" வைத்திருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கண்டு பிடித்து இருக்கிறார்கள். இதைப் படித்துவிட்டு எவ்வளவு பேருக்கு மாரடைப்பு வர போகிறதோ! அதைவிட இந்த செய்தியை படித்தால் நிச்சயம் வரும். சபாநாயகர் மீரா குமார் 37 நாட்களுக்கு ஒரு முறை வெளிநாடு போகிறாராம். இன்னும் மாரடைப்பு வரவில்லை என்றால் கீழே உள்ள செய்தியை படியுங்க.

"சுவாமி விவேகானந்தரும், சாமி நித்தியானந்தரும் ஒன்றே" என்று கூறியுள்ளார் நம்ம டிராபிக் ராம"சாமி".

Read More...

IPL5 -CSK vs MI -மும்பை F-16ஐ சுட்டு வீழ்த்திய தோனி”காப்டர்” -எ.அ.பாலா

சென்னை அணி, நேற்று பங்களூரில் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை அணியை ஜெயித்தது என்று சொல்லுவதை விட நசுக்கியது (அ) தரையிலிட்டு தேய்த்தது என்று சொல்வது பொருத்தமானதாக இருக்கும்! இதற்கு ஒரு காரணம், சென்னையின் Big match அனுபவமும் (3 ஐபிஎல்இறுதி ஆட்டங்கள், 1 செமிஃபைனல்) கூட! சென்னை அணி 4வது இடத்துக்கு ஓசியில் வந்தது என்று சொல்லுபவர்களுக்கு: பங்களூரும், ராஜஸ்தானும் தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டதற்கு, சென்னை என்ன பண்ணும்? அது போல, தர்மசாலாவில் நடந்த தில்லி-பஞ்சாப் ஆட்டத்தில், தில்லியின் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக பஞ்சாபின் வெற்றிக்கு வாய்ப்பு ரொம்ப கம்மி என்பது உலகறிந்த விஷயம் தானே! மேலும், சென்னை ஒரு 17 பாயிண்டுகள் எடுத்து, அதோடு முக்கியமாக +ve NRR-ஐ வைத்திருந்ததால் தானே, பிளே ஆஃப்-இல் நுழைய முடிந்தது!



நேற்றைய ஆட்டத்தில், தோனியின் ஆட்டம் அட்டகாசம்! அவரது பரபரப்பின்மையே முக்கியமான சமயங்களில் அவரது பலம் என்பதை அவர் மீண்டும் நிருபீத்தார்! அதுவும் அந்த ஹெலிகாப்டர் ஷாட்டை, (அதுவும் மலிங்காவின் பந்து வீச்சில்) shot of the day, ஏன், shot of IPL-5 என்று தாராளமாகக் கூறலாம்! அந்த ஓவரில், மலிங்கா 2 பந்துகளை chuck பண்ணினார் என்பது கூடுதல் தகவல்! அவர் 4 ஓவர்களில் 41 ரன்களை தாரை வார்த்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது! இடையே, சங்கர் படத்துக்கு இணையான பிரும்மாண்டமான 112 மீ சிக்ஸர் ஒன்றும் தோனி அடித்தார்.

தோனியின் 20 பந்துகள் 51 ரன்களும், பிரேவோவின் 14 பந்துகள் 33 ரன்களுமே, சென்னையின் மெகா ஸ்கோருக்கு (187) வழிவகுத்தன! அது போல, 1 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்து மதிமயங்கி இருந்த சென்னையின் துயரகற்றி உய்ய வைத்த பெருமைக்குரியவர்கள், பத்ரியும், ஹஸ்ஸியும் ஆவர் :-) சென்னை முதல் 9 ஓவர்களில் எடுத்தது 47 ரன்கள் மட்டுமே! அடுத்த 4 ஓவர்களில் எடுத்ததும், 47 ரன்கள்!! தலைவர் தோனி, அண்ணல் பிரேவோ காஸ்மிக் நடனத்தின் முடிவில், அதாவது கடைசி 7 ஓவர்களில் சென்னை எடுத்தது, 93 ரன்கள்!

அதே நேரம், நல்ல திறமையிருந்தும், தொடர்ந்து சொதப்பும், முரளி விஜயையும், ரைனாவையும் பார்த்து மகா எரிச்சலாக இருந்தது! பிரேவோ, பந்து வீச்சிலும் நேற்று மிளிர்ந்தார். 3-0-10-2. அதுவும், போலார்ட் அவுட்டானவுடன், எப்படி அந்த பந்தை போலார்ட் அடித்திருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கி, அவருக்கு “பை பை” சொன்னது கண் கொள்ளா காட்சி ;-) ஹில்ஃபன்ஹாஸ் பந்து வீச்சு ரொம்ப disappointing! இந்திய ஆடுகளங்களில் அவர் ஷார்ட்டாக பந்து வீசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்! Some of his deliveries are standing up, begging to be hit !!! ஹில்ஃபன்ஹாஸுக்கு பதில் போலிங்கர் அடுத்த ஆட்டத்தில் ஆடினால் பரவாயில்லை என்று தோன்றினாலும், அதிலும் ஒரு ரிஸ்க் இருக்கத் தான் செய்கிறது!

டுபிளஸ்ஸிக்கு பதில் ஹஸ்ஸியை அணியில் தக்க வைத்துக் கொண்டது நல்ல விஷயமே! சென்னை1-2 என்ற நிலையில் இருந்தபோது, அவரது அனுபவம் மிக்க பயனுள்ளதாக அமைந்தது! இதை hind sight-ல் தான் கூறுகிறேன் என்றாலும், அது தான் உண்மை!!!! இதற்கு தோனியை பாராட்ட வேண்டும்! அஷ்வின் எதிர்பார்த்தது போல சிறப்பாக பந்து வீசினார். ஆனால், அவரை விட பவர் பிளே ஓவர்களில் தைரியமாக, மிகத் திறமையாக பந்து வீசிய ஜகதியை எத்தனை பாராட்டினாலும் தகும்! அதுவும், ஹில்ஃபன்ஹாஸ் பந்து வீச்சு ஸ்மித்தால் துவம்சம் செய்யப்பட்டுக் கொண்டிருந்த ஒரு கடினமான சூழலில்!

என்னைப் பொருத்தவரை, அவரது ஆல்ரவுண்ட் பெர்ஃபார்மன்ஸுக்காக, பிரேவோவுக்குத் தான் (தோனிக்கு தரப்பட்ட) ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும்! எனது முந்தைய ஐபிஎல் இடுகையில், சென்னை ஆடுகளத்தை சுழற்பந்து வீச்சுக்கு அதிகம் உதவாத வகையில் சற்றே சீர் செய்ய வேண்டும் என்று கூறியதை சற்று மாற்றிச் சொல்கிறேன்! நாளைக்கு சுழற்பந்து வீச்சுக்கு ஏதுவாகவும், ஞாயிறன்று, சற்றே பசுமையான ஆடுகளமாகவும் அமைத்தல் அவசியம் :-)

என்னடா, மும்பை பேட்டிங் பற்றி எதுவுமே எழுதவில்லை என்று நினைப்பவர்களுக்கு: அந்த உதவாக்கரைகள் பேட்டிங் குறித்து எழுத ஒரு எழவும் இல்லை! அச்சுபிச்சு போல இருக்கு அம்பானியின் திருமகன் ஒரு பெரிய சோபாவில் தனியாக அமர்ந்திருந்ததை டிவியில் காட்டினார்கள்! மும்பை எப்போதும் போல முக்கியமான ஆட்டங்களில் CHOKE-இ விடும் என்று தெரிந்தோ என்னவோ, நிடா அம்பானி பங்களுர் பக்கம் தலைகாட்டவில்லையோ? எல்லாவற்றையும் விட, ஆட்டம் முடிந்த பிறகு, பேட்டி என்ற பெயரில் டேனி மாரிஸன் பிரசித்தி பெற்ற ஐபிஎல் குட்டிகள் ஷிபாங்கி மற்றும் அர்ச்சனா விஜயாவுடன் அடித்த லூட்டி தான் நேற்றைய ஹைலைட் ;-)

இப்படியாக, சென்னை சூப்பர் கிங்க்ஸ் (CSK) Mumbai Choker Indians (MCI) அணியை (எதிர்பார்த்தது போல) முக்கியமான எலிமினேட்டர் ஆட்டத்தில் வென்றது! MCI அணி சென்னையை 2 குரூப் ஆட்டங்களிலும் ஜெயித்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே! ஆனால், என்ன பிரயோஜனம்? இப்போதிலிருந்து, சென்னைக்கு 1 match at a time & 2 to go, இரண்டும் நம்மூர் சேப்பாக்கத்தில்! நம்பிக்கையே வாழ்க்கையின் உயிர்நாடி!

எ.அ.பாலா

ஸ்நேகாவிற்கும் திருமணம் பற்றி ஏன் இட்லிவடை ஒரு போஸ்டும் போடவில்லை என்று ஒருவர் நேற்று கேட்டார். அவருக்காக இந்த படம் !

Read More...

Monday, May 21, 2012

IPL - கெய்ல் புயல் ஓய்ந்து சென்னையில் சகஜ நிலை குறித்தும் மற்றும் பிறவும் -எ.அ.பாலா

என்னமோ ஒண்ணுமே புரியலை, அதெப்படி 3 ஆட்டங்களும் (DD vs KXIP, DC vs RR, DC vs RCB) சென்னைக்கு சாதகமாக அமைந்தது என்று!!!! தில்லி பஞ்சாபை வென்றது பெரிய விஷயமில்லை என்றாலும் டெக்கான் ராஜஸ்தானையும் பலம் வாய்ந்த பெங்களூர் அணியையும் வீழ்த்தியதை நம்பவே முடியவில்லை. கெய்லும் கோலியும் டிவிலியர்சும் டெக்கானை நசுக்கியிருக்க வேண்டாமோ !?!? என்னமோ நடக்குது மர்மமா இருக்குது என்றெல்லாம் சொல்லி, டெயில் ஸ்டெயின் என்ற உலகத்தின் தலை சிறந்த பந்து வீச்சாளரை சிறுமைப்படுத்த இஷடமில்லை! கெய்ல், தில்ஷன், கோலி என்ற திறமை மிக்க 3 மட்டையாளர்களுக்கு எதிராக அவரது அந்த பந்து வீச்சை (4-0-8-3) விவரிக்க வார்த்தைகள் இல்லை !

இந்த ஐபிஎல்-லில் 700+ ரன்கள் அடித்த கெய்லையும், கோலியையும் நினைத்தால் பாவமாக இருந்தாலும், ஆணாதிக்க திமிருடன், லூக் போமர்பேஷ் விஷயத்தில், புகார் கொடுத்த பெண்ணின் நடத்தை பற்றி டிவிட்டரில் அசிங்கமாக உளறியிருந்த, அவரது அப்பா மால்யா என்பது தவிர வேறெந்த பெரிய த்குதியும் இல்லாத சித்தார்த்த மால்யாவுக்கு இது தேவை தான் என்ற எண்ணம் என்னைப் போல் பலருக்கும் தோன்றியிருக்கக் கூடும்!

என் நண்பர்களில் சிலர், ஐபிஎல்-லில் பெட்டிங் / ஃபிக்ஸிங் நிச்சயம் உள்ளது என்பதற்கு பல க்ளோஸ்

ஆட்டங்களை உதாரணமாகக் கூறி வந்துள்ளனர்! இதற்கு சுவாரசியமான காரணங்கள் வேறு :) ஐபிஎல் திரைக்குப் பின் நடப்பவை அனைத்துமே குழப்பமாக இருப்பதால், என்னைப் போன்ற சராசரி “சென்னை” ஆட்களின் ஒரே interest சென்னை அணி எப்படியாவது செமியில் பூந்து விட வேண்டும் என்பது மட்டுமே! (அதற்கு யார் எக்கேடு கெட்டாலும் கவலையில்லை :)) அது நடந்தும் விட்டதால், இன்னும் 48 மணி நேரம் எந்த டென்ஷனும் இல்லை, சென்னை-மும்பை ஆட்டம் தொடங்கும் வரை!

ஆனால், பங்களூரில் இந்த ஆட்டம் நடக்கவிருப்பதால், பங்களூர் செய்த சொதப்பலால், கொல்லைப்புறம் வழியாக செமியில் நுழைந்த சென்னைக்கு, சின்னசாமியில் ரசிகர்கள் ஆதரவு கிடைக்காது என்று தோன்றுகிறது! காவிரித் தண்ணீரையே தர மாட்டேன் என்கிறார்கள்! ஐபிஎல் ஆட்டத்தில் சென்னைக்கு ஆதரவு தராவிட்டால் என்ன குடி முழுகி போய் விடப் போகிறது! அது போல, சுழற்பந்து வீச்சுக்கு அதிக ஆதரவு இல்லாத வகையில், புனேவிலும், சேப்பாக்கத்திலும் ஆடுகளங்கள் சற்றே சீர் செய்யப்பட்டால், கொல்கத்தா அணிக்கு unfair advantage கிடைக்காமல் போகும்!

மற்றும் பிற:

ஐபிஎல்-லில் நடக்கும் விரும்பத்தகாத விஷயங்கள் (லூக், ஜுனியர் மால்யா, ஷாருக் லூட்டிகள்!) குறித்தும், BCCI-கார்ப்பரேட் கூட்டு சேர்ந்து கிரிக்கெட்டை ஒரு வழி பண்ணுவது பற்றியும், அதிக விலை டிக்கட்களை காரணம் காட்டியும், பொதுவாக கிரிக்கெட் மேல் உள்ள கடுப்பால் அறச்சீற்றம் கொள்வோரைக் கண்டு ரொம்ப பரிதாபமாக இருக்கிறது! (லாலு ஐபிஎல்-லை மூடிவிட வேண்டும் என்கிறார், இதென்ன மளிகைக்கடையா ;)) இவர்கள் அறச்சீற்றப்படுவதற்கு இந்த நாட்டில், ஐபிஎல்-லை விட மக்களை மிகுந்த இம்சைக்கு உள்ளாக்கும் பல விஷயங்கள் உள்ளன!

சில பெரிய உதாரணங்கள்:
1. ஆயிரக்கணக்கான கோடிகள் சர்வ சாதாரணமாக சுருட்டப்படும் மெகா ஊழல்கள்! (மாஜி அமைச்சர் சுக்ராம், பங்காரு லஷ்மண் தவிர வெறெந்த பெரிய அரசியல்வாதியும், எந்த ஊழலுக்காகவும் தண்டிக்கப்பட்டதாக நான் கேள்விப்பட்டதில்லை!) 2. கிலோ 120 என்று பீன்ஸ் விற்பதற்கும், சராசரி மக்கள் சொந்த வீடு என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு நில விலை எகிறி விட்டதற்கும், இன்னும் பலவற்றுக்கும் காரணமான பணவீக்கம்!
3. வெளிநாட்டு வங்கிகளில் ஒளிந்து கொண்டிருக்கும் (பல பில்லியன் டாலர்கள்) கறுப்புப் பணம்!

சில சின்ன உதாரணங்கள்:
1. தியேட்டர்களை மல்டிபிளக்ஸ்களாக மாற்றி, டிக்கட் விலையை ஏற்றியதோடு மட்டுமல்லாமல், உள்ளே தின்பண்டங்களை 5 மடங்கு விலைக்கு அநியாயமாக விற்கும் அவலம்! (இவ்விடங்களில் வெளி உணவுக்கு அனுமதி கிடையாது என்பது தெரிந்ததே!) 2. ஐந்து நட்சத்திர விடுதிகள் போல இயங்கும் சிலபல தனியார் மருத்துவமனைகள்! இங்கு சாதா ஜுரத்துக்குக் கூட 5 வித பரிசோதனைகள் செய்து விட்டுத் தான், சிகிச்சை தரப்படும்.
3. கல்வியை முழுமொத்த வியாபாரம் ஆக்கி விட்ட சிலபல தனியார் கல்லூரிகள் / பள்ளிகள் 4. நடிகர்கள் கட்-அவுட் பாலாபிஷேக கலாச்சாரம்! (பாவம், பா.ம.கட்சியினர் மட்டும் தான் இதுக்கு சவுண்டு விடறாங்கோ!)

இப்படி எத்தனையோ டைனாசர் டைப் அவலங்கள் இருக்கையில், ஐபிஎல்-லில் நடக்கும் எறும்பு சைஸ் அவலங்களை குறை கூறி என்ன ஆகப் போகிறது !!! ஏதோ ஒரு 4 மணி நேரம் ஜாலியா, கொஞ்சம் டென்ஷனா கிரிக்கெட்டைப் பார்த்தோமா, அப்படியே சியர் லீடர்ஸையும், அர்ச்சனா விஜயாவையும், ஷிவாங்கியையும் இன்ன பிற கூத்துகளையும் ரசிச்சோமா என்று அடுத்த ஜோலிக்கு போயிக்கினே இருக்கணும்! அப்படியே டென்ஷனா இருந்தா, சீனாவில் காசு கொடுத்தாலும் கிடைக்காத கருத்துச் சுதந்திரத்தை பயன்படுத்தி, டிவிட்டர், ஃபேஸ்புக்கில் யாரையாவது / எதையாவது ஒரு வாங்கு வாங்கிட்டு அமைதியாயிடணும் ;-) நம்ம குயிக் கன் முருகன் பாணியில் சொல்லணும்னா, “We are (can be!) like that Only!"

டெயில் பீஸ்:

தற்போது லார்ட்ஸில் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே டெஸ்ட் ஆட்டம் நடந்து வருகிறது! வெஸ்ட் இண்டீஸ் போராடியும், இங்கிலாந்து ஜெயிக்கும் நிலையில் உள்ளது. இதில், KKRக்கு ஆடும் சுனில் நரைனும், RCBக்கு ஆடும் கெய்லும், CSKக்கு ஆடும் பிரேவோவும் பங்கு பெறாதது, சற்று வருத்தமாக இருக்கிறது! இவர்கள் ஆடியிருந்தால், ஆட்டம் இன்னும் அருமையாக இருந்திருக்கும். அதுவும், நரைன் இங்கிலாந்து மட்டையாளர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியிருப்பார்!

எ.அ.பாலா

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா
தேவையான பொருட்கள்:

நெய் - 300 கிராம்,

சம்பா கோதுமை - 200 கிராம்,

சீனி - 600 கிராம்

செய்முறை:

கோதுமையை முதல் நாளே தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். ஊறிய பின்பு ஆட்டுக்கல்லில் போட்டு அரைக்க அரைக்க பாலாக பொங்கும். அதை ஒரு துணியை வைத்து வடிகட்டி எடுக்க வேண்டும்.

அடுப்பில் ஒரு வாணலியை (பாத்திரம்) வைத்து, அதில் கோதுமைப் பாலை ஊற்ற வேண்டும். பால் கொதித்து வரும்போது சீனியைப் போட்டு நன்றாக கிளற வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கிளறுவதை நிறுத்தக் கூடாது. பாலும், சீனியும் இறுகி கெட்டியான ஒரு பதத்திற்கு வரும்போது,நெய்யை ஊற்றிக் கிளற வேண்டும். கிளறிக்கொண்டிருக்கும்போதே அல்வா குங்கும நிறத்திற்கு மாறிவரும். அப்படி வந்தவுடன் ஒரு பெரிய தட்டில் ஊற்றி ஆற வைக்க வேண்டும். நன்றாக ஆறியபின்பு எடுத்துச் சாப்பிட்டால் இருட்டுக்கடை அல்வாவின் சுவை தானாக வரும்!


Read More...

Balaganesan வாவ் 2000!

இட்லிவடையை ருசிப்பவர்கள் பட்டியலில் 2000வது நபர்!! நன்றி @ganesanbala

Read More...

Saturday, May 19, 2012

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 19-5-2012

டேய் முனி,
நல்லாருக்கியா? சத்தத்தையே காணும் ரொம்பநாளா? ரொம்ப நாள் கழிச்சு உனக்கு லெட்டர் எழுதறதில் மன்னுமோகனுக்கு அப்பப்போ கடுதாசி எழுதி சந்தோஷப்படும் முக மற்றும் அம்மா போல எனக்கும் மகிழ்ச்சி. ஜாதிகள் இல்லை என்று சொல்லுபவர்கள் கூட தங்கள் வீட்டுக்கு ஜாதி கணக்கெடுப்புக்கு வரும் போது தங்கள் ஜாதியின் பெயரைச் சரியாக சொல்லுகிறார்கள். ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியார் சொன்னது வெறும் பாப்பாக்களுக்கு தான், பெரியவர்களுக்குக் கிடையாது. ( படம் : உடையாத ஜாதிக்காய்! )

ஜாதியச் சொல்லிதான் குடியரசுத்தலைவர் பதவிக்கும் ஆளை நிறுத்துகிறார்கள். லேடஸ்ட் விக்டிம் பாவம் சாங்கமா! அம்மா திடீர்னு ஆதரவளிப்பதால் "சங்கும்மா அவருக்கு" என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அம்மாவின் ஆதரவு இருந்தால் என்ன வேண்டுமென்றாலும் நடக்கும் என்று நிறையப்பேர் நினைக்கிறார்கள். ரீசன்ட் ஆட்கள் அருணகிரியும் நித்தியும். அ.தி.மு.க.வின் ஆதரவுடன்தான் நான் இளைய ஆதீனமாக பொறுப்பேற்றேன் என்று நித்தி சொல்லுகிறார். போற போக்கைப் பார்த்தால் பேசாம அவரையே ஜனாதிபதியாக பரிந்துரைக்கணும் என்று அம்மாவிடம் கேட்டாலும் கேப்பார். இப்போவே அவருக்கு ஜனாதிபதி லெவலுக்கு போலீஸ் பாதுகாப்பு வேற இருக்கிறது.

திஹாரில் இருந்த ராசா ஜாமீனில் வெளியே வந்தவுடன் திடீர் என்று திமுக அவருக்கு ஆதரவு கொடுத்திருக்கிறது. ஜாமீன் பணம் கட்ட ஆள் தேடினா துண்டக் காணும் துணியக் காணும் என்று ஓடி இருக்கிறார்கள். ஒரு வழியா மெட்ராசில் இருந்து போன் வழியா ஒருவழி சொல்லி வெளியே வந்திருக்கிறார். வெளியே வந்து தூங்கி எழுந்து நேராகப் பாராளுமன்றம் போயிருக்கிறார். இவருடைய கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?

உணர்ச்சி வசப்பட வேண்டும் என்று ஷாருக்கானுக்கு சொல்லியே தர வேண்டாம். பல படங்களில் சிவாஜிக்கு அடுத்து அதிகமாக உணர்ச்சிவசப்படும் நடிகர் இவர். வான்கடே மைதானத்தில் பாதுகாவலருடனும், மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடமும் தகராறில் ஈடுபட்ட ஷாருக்கான் மீது 5 வருட தடை விதித்திருக்கிறார்கள். காசு குடுத்து மேட்ச் பாக்க வரவனை எப்டி வரக்கூடாது என்று தடை விதிப்பார்கள் என்று தெரியல. இந்த கேஸ் கோர்ட்டுக்கு போனால் என்ன நடக்கும்? யாராவது வக்கீல்கள் இதை பற்றி சொன்னால் நல்லா இருக்கும்.

கோர்ட் கேஸ் என்று பிஸியாக இருக்கும் ஆதி சங்கரர் பரம்பரையில் வந்த ஜெயேந்திரர் சும்மா இருக்காமல், ரஞ்சிதா பற்றி பேசப் போய் ரஞ்சிதா இப்போது அவரை மீண்டும் கோர்ட்வரை கொண்டு போயிருக்கார். இந்த மாதிரி மத குருக்களுக்கு எப்படி நாட்டுநடப்பு தெரிகிறது? அரசியலும் சினிமாவும் ஆன்மிகம் போலவே நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் ஒரு அங்கமாகி ரொம்ப நாள் ஆகிவிட்டது.


சினிமா, அரசியல் பற்றி நான் ஒன்றும் எழுதுவதிஉல்லை, அறிவியல் நியூக்கிளியர் சைன்ஸ்தான் எழுதுகிறேன் என்கிறார் மதன். இவர் எழுதிய ஹாய் மதன் பகுதிக்கு ஜெயலலிதா படம் போட்டு இப்போது அவரை விகடனிலிருந்து தள்ளி வைத்திருக்கிறார்கள். நடந்தது என்ன என்று வாசகர்களுக்கு ஒரு ஃப்ளாஷ் பேக்.

2.5.2012 விகடனில் ஹய் மதன் பகுதியில்...

உலகில் உள்ள உயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் காலில் விழுந்ததாக வரலாறு இல்லை. ஆனால், மனிதன் மட்டும்இதற்கு விதிவிலக்காக இருப்பது ஏன்? இதைத் தொடங்கிவைத்தது யார்?

ஆதி மனிதன்தான். திடீர் என்று தெருவில் குண்டு வெடிக்கிறது. உடனே என்ன செய்கிறீர்கள்? தரையோடு படுத்துக்கொள்கிறீர்கள். காரணம், அதில்தான் ஆபத்து ரொம்பக் குறைவு. ஆதி மனிதனும் திடீர் என இடி இடித்தாலோ, பெரிய மின்னல் தோன்றினாலோ தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கத் தரையில் நடுங்கிப் படுத்துக்கொண்டான். பிறகு, சூரியன் போன்ற இயற்கை விஷயங்களின் முன்பு 'எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாதே’ என்பதை விளக்க, குப்புறப் படுத்தான். பிறகு, அரசர்கள் முன்பு, இன்று தலைவர்கள் காலடியில் ('பதவி ஏதாவது தந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அர்த்தம்!). விலங்குகளும் தத்தம் தலைவன் முன்பு அடிபணிகின்றன. 'நான் உனக்கு அடங்கிப்போகிறேன்!’ என்கிற ஓர் அர்த்தம்தான் அதற்கு உண்டு! என்று பஞ்ச் வைத்து எழுதிய இந்த கேள்வியை யார் படித்தாலும், ஜெயலலிதா காலில் விழும் அமைச்சர்கள் தான் நினைவுக்கு வருவார்கள். அதையே விகடனும் போட்டிருக்கிறார்கள் ஆனால் மதன் விகடனுக்கு ஒரு கடிதம் எழுந்தினார் அது கீழே...

2.5.2012 இதழில் 'காலில் விழுந்து வணங்குவது’ பற்றிய மனித இயல் (Anthropology) பற்றிய ஒரு கேள்விக்கு, ஆதி மனிதன் எப்படி அதை ஆரம்பித்திருக்கக்கூடும் என்று விளக்கி, பொதுவான ஒரு பதில் எழுதியிருந்தேன். ஆனால், அந்தப் பதிலுக்கான படம் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழுவது போன்ற பெரிய புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது எனக்கு மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்தது. ஆதிகாலத்திய சம்பிரதாயம் பற்றிய பொது அறிவுப் பதில் தான் அதுவேயன்றி, குறிப்பிட்ட ஒருவரைப் பற்றிய பதிலே அல்ல அது!ஜெயா டி.வி-யில் நான் சினிமா விமர்சனம் செய்துவருகிறேன். இந்நிலையில், அவர்கள் அந்தப் புகைப்படத்தை ஹாய் மதன் பகுதியில் வெளியிட்டதற்கு நான்தான் காரணமோ என்று தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார்களா? என்னிடம் ஜெயா டி.வி-யின் தலைமை அதுபற்றி விளக்கம் கேட்டால், 'அந்த புகைப்படம் வெளிவந்ததற்கு நான் காரணமல்ல’ என்று இதன் பின்னணியை விவரமாக விளக்க வேண்டி வராதா? அந்த தர்மசங்கடம் எனக்குத் தேவைதானா? முப்பதாண்டு காலம் விகடன் நிறுவனத்துக்காக உழைத்த எனக்கு இப்படியரு பிரச்னையை ஏற்படுத்துவது நேர்மையான, நியாயமான செயல்தானா என்பதை தாங்கள் சிந்திக்க வேண்டும்.முக்கியமான பிரச்னைகள் எத்தனையோ சந்தித்துக்கொண்டிருக்கும் தமிழக முதல்வரிடம் இதற்காக அப்பாயின்ட்மென்ட் கேட்டு, அவரைச் சந்தித்து, நான் செய்யாத தவறுக்கு விளக்கம் தந்துகொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை எனக்கு ஏற்படுத்துவது முறையா என்று சிந்திக்க வேண்டுகிறேன்.

...வரும் இதழிலேயே 'புகைப்படங்கள், லே - அவுட்டுக்கு மதன் பொறுப்பல்ல’ என்ற விளக்கத்தையாவது வெளியிட்டால், நியாயம் காப்பாற்றப்படும். அதை வரவிருக்கும் இதழிலேயே செய்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

அதற்கு விகடனாரின் பதில்

மதன் நமக்கு எழுதியிருக்கும் இந்தக் கடிதம், தவிர்க்க முடியாத சில நெருக்கடி களுக்கும் நிர்பந்தங்களுக்கும் அவர் சமீப காலமாக ஆளாகி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.

'ஹாய் மதன்' பகுதியில் வாசகர்கள் கேட்ட கேள்வியிலோ, மதன் அளித்த பதிலிலோ நேரடி வார்த்தைகளில் இடம் பெறாத - அதே சமயம், அந்தக் கேள்வி - பதிலுக்கு மேலும் வலிமையும் சுவாரஸ்யமும் சேர்க்கக்கூடிய படங்களை இதற்கு முன் ஏராளமான சந்தர்ப்பங்களில் ஆசிரியர் குழு சேர்த்துள்ளது. அப்போதெல்லாம், எந்தக் காரணங்களைக் காட்டியும் ஒருபோதும் எந்த ஆட்சேபமும் அவர் தெரிவித்ததே இல்லை.அதேபோல், 'இது பொது அறிவுப் பகுதி மட்டுமே' என்று இப்போது மதன் குறிப்பிடும் 'ஹாய் மதன்' பகுதியில் அரசியல் மற்றும் சினிமா பற்றிய நேரடியான, காரசாரமான பதில்களை அவர் தொடர்ந்து இதழ் தவறாமல் அளித்திருப்பதை வாசகர்களும் நன்கு அறிவார்கள். இப்போது திடீரெனத் தன் நிலைப்பாட்டை அவர் மாற்றிக்கொள்வதற்கான காரணம், அவருடைய கடிதத்திலேயே உள்ளது.இதையெல்லாம் பார்க்கும்போது... தற்போது அவர் இருக்கின்ற சூழ்நிலையில், 'ஹாய் மதன்' பகுதியை மட்டும் அல்ல... கார்ட்டூன்களையும்கூட நடுநிலையோடு படைப்பது அவருக்குச் சாத்தியம் ஆகாது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு தரப்பைப் பற்றிய நியாயமான விமரிசனங்களையோ, புகைப்படங் களையோ தவிர்த்துவிட்டு... செய்திகளையும் கருத்துக்களையும் நீர்க்கச் செய்வது வாசகர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்றே விகடன் கருதுகிறான்.

எனவே, இந்த இதழ் முதல் திரு. மதனின் கேள்வி - பதில் பகுதியும் அவருடைய கார்ட்டூன்களும் விகடனில் இடம் பெறாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


விகடன் செய்தது சரியா தப்பா என்று பின்னூட்டத்தில் மக்கள் அடிப்பார்கள் என்று நினைக்கிறேன். விகடனுக்கு ஒரே ஒரு கேள்வி, மாறன் சகோதரர்கள் பற்றி நடுநிலமையாக விகடன் எழுதுமா? விகடன் மீடியா சன் டிவியில் வரும் தொடர்களுக்கு இதற்கும் conflict of interest வருமா? வராதா? விகடன் தாத்தா சிந்திக்க வேண்டும்!

தாத்தா வயசாகிவிட்ட எடியூரப்பா பதவி படுத்தும் பாடு என்று ஒரு சீரியல் எடுக்கலாம். தினமும் காலை குளித்துவிட்டு ஏதாவது விஷமம் செய்துக்கொண்டே இருக்கிறார். புதுசா ஆபீஸ் ஓப்பன் செய்து சோனியா காந்தி படத்தை மாட்டியுள்ளார், பிறகு எடுத்துவிட்டார். எந்த பதவி மீதும் ஆசை கிடையாது என்று சொல்லும் இவர் ஜெயிலிலிருந்து வெளியே வந்த பிறகு எனக்கு "மாநில தலைவர் பதவி" தந்திருக்க வேண்டும் என்று நேற்று சொன்னார் இன்று முதல்மந்திரி பதவியோ அல்லது மாநிலத் தலைவர் பதவியோ எனக்கு வேண்டாம் என்கிறார். பேசாம பிரதமர் பதவியோ அல்லது ஜனாதிபதி பதவியோ கொடுங்கள் இவருக்கு. அட்லீஸ்ட் நித்திக்கு பிறகு அடுத்த மடாதிபதியாகவாவது இவரை தேர்வு செய்யுங்கள். எது எப்படியோ பிஜேபியின் டர்டி பிக்சர் இவர்.

டர்டி பிக்சர் படத்தை தமிழில் எடுக்க வேலைகள் நடந்து வருகிறது. இதில் நயன் நடிப்பதாக இருந்தது ஆனால் இப்போது அவர் நடிக்க மறுத்துள்ளார் என்று செய்தி. சீதையாக நடித்த பிறகு இது தேவையா என்று கூட யோசித்திருப்பார் என்று நினைக்கிறேன். எல்லாம் கடவுள் செயல்!

கடவுளுடன் மட்டுமே கூட்டணி வைக்கும் கேப்டனின் ரீசன்ட் பேச்சு: சட்டசபைக்கு விஜயகாந்தை வரச்சொல் என்கின்றனர். நான் வந்தால், பஸ் கட்டணம், பால் விலை, மின் கட்டணத்தை குறைத்துவிடப் போகிறார்களா? மேலே இருக்கும் ஆண்டவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான்" என்று போகிறது பேட்டி. இதில் என்ன வேடிக்கை என்றால் மக்கள் குரலே மகேசன் குரல் என்று மேடைக்கு மேடை பேசுகிறார்கள்!. எல்லாம் கலி காலம். ஒருநாள் கடவுள் நேராக வந்து இந்தக் காமெடியன்களை எல்லாரையும் ஒக்கார வெச்சுப் பஞ்சாயத்துப் பண்ணால்தான் சரிப்படும்.

கடைசி செய்தி: மதன் என்ன செய்ய போகிறார்? ஞாநி மாதிரி கல்கிக்கு வருவார் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.


ஐபிஎல்லில் ஷாரூகான், மால்யா புள்ளை போன்றோர் ஓனர் என்ற பெயரில் அடிக்கும் கூத்துகளுக்கு அளவில்லாமல் போகிறது. இவர்களையும் அன்புடன் பாலாவைப் பின்னூட்டத்தில் திட்டுவது போலத் திட்டினால் தகும்.


இனிமேலானும் வாரம் ஒருமுறை மறக்காம கடுதாசி போடு.

அன்புடன்
இட்லிவடை

Read More...

Tuesday, May 15, 2012

IPL5 CSK vs KKR கரணம் தப்பாததால் சென்னைக்கு மரணமில்லை!

நேற்று கொல்கத்தாவில் நடந்த (சென்னைக்கு) முக்கியமான ஆட்டத்தில், தோனி டாஸில் வென்று கொல்கத்தாவை பேட் செய்ய சொன்னதற்கு முந்தைய 2 வெற்றிகரமான துரத்தல்கள் காரணமாக இருக்கலாம். ஆனால், மெக்கல்லமும் குறிப்பாக கம்பீரும் விளாசிய விளாசலில், 11 ஓவர்களில் ஸ்கோர் 96/0, சென்னைக்கு ஆப்பு உறுதி என்ற நிலையிருந்தபோது, சென்னையின் famous fightback தொடங்கியது. 12வதில் மெக்கல்லம் ரன் அவுட், 13வது / 15வது ஜகதி ஓவர்களில் கம்பீர், காலிஸ் விக்கெட்டிழந்தார்கள். கொல்கத்தாவின் சரிவுக்கு ஜகதி தான் முக்கியக் காரணம், 4-0-26-2 when CSK was under so much pressure!


16 ஓவர்களில் 122/3, அதாவது 6 ஓவர்களில் 26 ரன்களே கொல்கத்தா எடுத்தது! அடுத்த 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் விழ, ஒரு சமயத்தில் 175-180 ரன்கள் எடுக்கக் கூடிய நிலையிலிருந்த கொல்கத்தா எடுத்தது 158 ரன்களே! அஸ்வின் எப்போதும் போல சிறப்பாக பந்து வீசினார், 4-0-26-1. கடைசி ஓவரில், கொல்கத்தா மட்டையாளர்களை கை தட்டி உற்சாகப்படுத்துமாறு, ஷாருக் கான் தன் கைகளை உயர்த்தி ரசிகர்களுக்கு சிக்னல் கொடுத்தது, பார்க்க கண்றாவியாக இருந்தது!

முரளி விஜய்யும், ஹஸ்ஸியும் எந்தவித அழுத்தமும் இன்றி, அருமையாக ஆடினர். அதுவும் கொல்கத்தா போன்ற double paced ஆடுகளத்தில், ஹஸ்ஸியின் டைமிங்கை அற்புதம் என்று தான் கூறவேண்டும். கொல்கத்தா 11 ஓவர்களில் எடுத்த ஸ்கோரை (96/0) சென்னை 10 ஓவர்களில் எடுத்து வெற்றியை நோக்கி உறுதியாக சென்று கொண்டிருந்த நேரம், சனியன் (ஷாருக் கானை சொல்லவில்லை) கண்ணைத் திறந்தது ! நரைன் வீசிய 11வது ஓவரில், இருவரும் அவுட்! அதுவும் ஹஸ்ஸி அவுட்டான நிலையில், செட்டிலாகி இருந்த மொ.க.முரளி விஜய் செய்தது அதிமுட்டாள்தனம் !

14வதில், ரெய்னா அனாவசிய ரன் அவுட்! ”தடவல் திலகம்” தோனி களமிறங்கினார்! 17வது ஓவர் முடிவில், ஸ்கோர் 127/3, 6.3 என்றிருந்த RRR-ஐ 10.7-க்கு இட்டுச் சென்ற பெருமைக்கு முக்கிய சொந்தக்காரர் கப்தான் தோனி அவர்களே! 18வது பாட்டியா ஒவரில், 5 ரன்கள் மட்டுமே! 2 ஓவர்களில், 27 ரன்கள் தேவை என்ற நிலையிலும், தோனி முகத்தில் துளியும் டென்ஷன் இல்லை, இது பிளஸ்ஸா, மைனஸா என்பது கடவுளுக்கே வெளிச்சம் :)

எப்போதும் போல, nothing to lose என்று ஆனபின், தோனி பொங்கியெழுந்தார்! டிலாங்கே வீசிய 19 ஓவரின் முதல் பந்து, டிலாங்கேவின் தலைக்கு மேலே (தலையில் பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று உண்மையாகவே கலங்கி விட்டேன்!) நேர் பவுண்டரிக்கு பறந்தது! டிலாங்கேவும் சற்று அதிர்ந்து போனது போலத் தான் இருந்ததன் விளைவு, அடுத்த 2 பந்துகளில், 1 பவுண்டரி, ஒரு 105மீ சிக்ஸர்! மொத்தம் 18 ரன்கள் அந்த ஓவரில்! அடுத்த ஓவரில் மேலும் டிராமா!

பாட்டியாவின் 2வது பந்தில் தோனி க்ளீன் போல்ட்! கடைசிப்பந்தில், ஜெயிக்க 5 ரன்கள் தேவை என்ற நிலையில், பாட்டியா வீசிய லோ ஃபுல்டாஸை பிரேவோ உயரத் தூக்கி அடித்ததில், லாங்க்-ஆன் பவுண்டரிக்கு சற்றே வெளியே பந்து சென்றதில், சென்னைக்கு அதி அதி அதி அற்புதமான ஒரு வெற்றி :) அதுவும், ஷாருக் கானின் உருப்படாத கொல்கத்தா அணியை வீழ்த்தியதில் இரட்டிப்பு மகிழ்ச்சி! ஆனால், சென்னை அணி, நரைனை சற்று கவனமாக ஆடியிருந்தால், இந்த ஆட்டத்தை சுலபமாக, 17-18 ஓவர்களில் ஜெயித்திருக்க வேண்டும்! நமது ரன்ரேட்டும் இன்னும் சற்று கூடியிருக்கும்.

நேற்று நடந்த இன்னொரு ஆட்டத்தில், மும்பை பங்களூரை வென்றது சென்னைக்கு நல்லதே! சச்சின் அணியில் இருந்தும், பொறுக்கித்தனத்தில் அடிக்கடி ஈடுபடும் மும்பை அணியினரில் நேற்று ராயுடுவின் முறை போல! பங்களூரின் ஹர்ஷல் படேலை ஏதோ கெட்ட வார்த்தைகளால் அர்ச்சிக்க, கடுப்பான படேல், அடிக்க கை ஓங்கி விட்டார்! ரவுடிப்பயல் ராயுடுவை 2 அறை செவிட்டில் விட்டிருந்தால், நன்றாக இருந்திருக்கும்! இதற்கெல்லாம் முக்கியக் காரணம் முதிர்ச்சியும், பெருந்தன்மையும் இல்லாத அரைகுறை ஹர்பஜன் கேப்டனாக இருப்பதே!

சென்னை ரசிகர்களை கொஞ்சம் “காப்ரா” பண்ணி விட்டு இடுகையை நிறைவு செய்கிறேன் ;-) சென்னை அடுத்த ஆட்டத்தில் பஞ்சாபை வென்றாலும், பங்களூரு தனது அடுத்த 2 ஆட்டங்களை வென்று, கொல்கத்தா தனது இரண்டில் ஒன்றை வெல்லும் பட்சத்தில், 3 அணிகளுமே, 19 புள்ளிகளில் இருக்கும். அச்சமயம், 3வது 4வது இடங்களுக்கான தேர்வை, நெட் ரன் ரேட்டே முடிவு செய்யும்!
ராசாவிற்கு ஜாமீன்; ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

Read More...

Monday, May 14, 2012

மதர்ஸ் டே ஸ்பெஷல்

கர்நாடக மாஜி முதல்வர் எடியூரப்பா ஒரு நிகழ்ச்சியில் ...

"சோனியாகாந்தி சமீபத்தில் கர்நாடகத்துக்கு வருகை தந்து தும்கூர் சித்தகங்கா மடாதிபதி சிவகுமார சுவாமியிடம் ஆசீர்வாதம் பெற்றார். அப்போது காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் வந்திருந்ததை பார்க்க முடிந்தது. காங்கிரஸ் தலைவி சோனியாகாந்திக்கு ஒரு நல்ல குணம் உண்டு.

தனது கட்சி தலைவர்கள் யாராவது கஷ்டத்தில், பிரச்சினையில் சிக்கிக் கொண்டால் அவர்களை சோனியா காந்தி காப்பாற்றுவதை முதல் வேலையாக கொண்டு இருக்கிறார். பதவியில் இருப்பவர்களை நீக்க மாட்டார். குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க கோர்ட்டுகள் இருக்கிறது.

ஆனால் நமது கட்சியில் (பா.ஜனதாவில்) அப்படிப்பட்ட தலைவர்கள் யாரும் இல்லை. யாராவது புகார் கூறினால் என்ன ஏது என்று விசாரிக்காமலேயே அவர்களின் நாற்காலியை கவிழ்த்து விடுகிறார்கள். அவர்களை நிர்மூலம் ஆக்கிவிடுகிறார்கள்.

நான் வளர்த்த எனது கட்சி பற்றி நானே குறை கூறும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டதே என்பதை நினைக்கும்போது மிகுந்த வேதனையாக உள்ளது. இங்கு (பா.ஜனதாவில்) முதுகில் குத்துபவர்கள் தான் உள்ளனர். கட்சிக்காக உழைத்தவர்களுக்கு மதிப்பு இல்லை.

1. இவர் தப்பு செய்துள்ளார் என்று இதன் மூலம் ஒப்புக்கொண்டு உள்ளார்
2. பிஜேபி பாராளுமன்றத்தில் கூச்சல் போடுவதை விட்டு விட்டு இவரை கவனிக்கலாம்.தினம் தினம் தலைவர்களை டெல்லிக்கு அழைத்து பேச்சு வார்த்தை நடத்துவதற்கு பதிலாக சட்டசபையை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்கலாம்.
3, சாதி அரசியல் என்பது ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி காரர்களிடமும் இருக்கிறது. காங்கிரஸ் மைனாரிட்டி அரசியல் செய்யும் போது இவர்களுக்கு அதை கேட்க உரிமை கிடையாது.
4. அடுத்த தேர்தலில் இவர்களுக்கு ஒரு சீட்டு கூட கிடைக்க கூடாது என்று எல்லாம் வல்ல அயோத்தி ராமரை வேண்டுகிறேன்.

Read More...

Friday, May 11, 2012

IPL5 CSK vs RR சென்னைக்கு ஒரு ராயல் வெற்றி

தோனி டாஸில் ஜெயித்தது நல்லதாக போயிற்று. அதனால் முதலில் பேட் செய்த ராஜஸ்தானை, 2-3 முறை மழை பெய்து கழுத்தறுத்ததில், விக்கெட்டுகளை இழந்து, 9 ஓவர்களில் 43-3 என்று பரிதாபமான நிலையில் இருந்தது. சென்னையின் பந்து தடுப்பிலும், பந்து வீச்சிலும் ஒரு purpose தெரிந்தது! ஹில்ஃபன்ஹாஸையும் யோ மகேஷையும் நிச்சயம் பாராட்ட வேண்டும். என்ன தான், மழை மற்றும் பிட்ச் காரணமாக பந்து வீச்சுக்கு ஆதரவு இருந்தாலும், அவர்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் பந்து வீசினர்.

ஹில்ஃபன்ஹாஸ், field restriction இருந்த முதல் 6 ஓவர்களில், அதுவும் மும்பைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஏற்பட்ட பெருத்த ஏமாற்றத்தை தள்ளி வைத்து விட்டு, தொடர்ச்சியாக 4 ஓவர்கள் வீசி, 8 ரன்களே கொடுத்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவே, சென்னைக்கு நல்லதொரு தொடக்கத்துக்கு வழி வகுத்தது! மகேஷ் 4-0-21-2. பிரேவோ ரன்களை சற்றே வழிய விட்டதால் (3 ஓவர்கள், 38 ரன்கள்), ராஜஸ்தான் 126 ரன்கள் எடுத்தது, நான் 110 தான் தேறும் என்று எண்ணினேன்.



மிகவும் சுலபமாக சென்னை ஜெயித்து விடும் என்று எப்போதும் போல நம்பினேன் :) முதல் வாட்சன் ஓவரிலேயே முரளி விஜய் முட்டை-அவுட் ஆனார். டைட் தனது பந்து வீச்சில் 150 கிமீ வேகத்தை சர்வசகஜமாகத் தொட்டார்! 6-வது ஒவரில், 23 ரன்கள் எடுத்து, நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரைனாவும் காலி. 2-டவுன் பிரேவோ களமிறங்கினார். (ச)செம்மையாகத் தடவினார்! 12வது ஓவரில், அவரது நரக வேதனை முடிவுக்கு வந்தது! 60-3, RRR 8.4.



ஹஸ்ஸியை ரன் அவுட் ஆக்கியதோடு இல்லாமல், தானும் ரன் எடுக்க எந்த முயற்சியும் எடுக்கத் தயங்கிய தோனியின் தயவால், ராஜஸ்தான் பக்கம் ஆட்டம் மொத்தமாகத் திரும்பியது. ஜடேஜா பந்தை அடிக்க முயற்சியாவது செய்தார். திருவாளர் கேப்டன் தோனி, திரிவேதியின் 110 கிமீ பந்துகளை, க்ரீஸுக்குள் இருந்தபடியே, நடனமாடி கஷ்டப்பட்டு தடுத்து ஆடிக் கொண்டிருந்ததைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. யாராவது அவரை தடுத்தாட்கொண்டால் நல்லது என்று தோன்றியது ;) இப்படி சொதப்பி, 16 ஓவரில் தோனி (10, 16 பந்துகளில்) வீழ்ந்தபோது, ஸ்கோர் 80-5, தேவையான ரன்ரேட் 11.8 !!!



உடனடியாக ஜடேஜாவும் அவுட்! இரு புது மட்டையாளர்கள் களத்தில், மார்க்கல், அனிருத்தா. இவர்களை Nothing to Lose என்ற நிலைக்கு (22 பந்துகளில் 43 ரன்கள்) தள்ளியதற்காவது தோனியை பாராட்டியே தீர வேண்டும்!!! அப்புறம் நடந்தது தான் எல்லாருக்கும் தெரியுமே :-) பங்கஜ், வாட்சன், டைட் என்று எல்லாருமே ஒரு வாங்கு வாங்கப்பட்டதில், 18.1 ஓவர்களிலேயே, சென்னைக்கு ஒரு நம்பமுடியாத வெற்றி! அதுவும், டைட்டின் பந்தில் அனிருத்தா அடித்த சிக்ஸர் கண்ணிலேயே நிற்கிறது! சென்னை தோற்கவே கூடாத ஆட்டத்தில் தோற்றும், ஜெயிக்கவே முடியாத ஆட்டத்தை ஜெயித்தும், இந்த IPL-இல் அடிக்கும் கூத்தை என்னவென்று சொல்ல :)



சில குறிப்புகள்: இந்த IPL-இல் சென்னை பேட்டிங் பல ஆட்டங்களில் சொதப்பலாக இருந்தது என்பதை தோனியே ஆட்ட முடிவு பேட்டியில் ஒப்புக்கொண்டார். இந்த லட்சணத்தில் ஆடினால், அடுத்த சுற்றுக்கு சென்னை தேறினாலும், கோப்பையை வெல்வது மிக மிக கடினம். பேட்டிங் ஆர்டரை அடிக்கடி மாற்றியதில், ஸ்திரத்தன்மை போய் விட்டது! தலைவர் தோனி ஃபார்மில் இல்லாததால், அவர் 2 அல்லது 3-டவுன் வருவதில் எந்த பயனும் இல்லை என்பது தெளிவு! அதனால், ரெய்னா, ஜடேஜா, பிரேவோவுக்குப் பின் அவர் வருவது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது!



இனி வரும் 3 குரூப் ஆட்டங்களில், ஜடேஜா பேட்டிங் ஃபார்முக்கு / அவருக்கு பொறுப்பு வருவதற்கும் இது வழி வகுக்கும்! அதுவும் இலக்கைத் துரத்தும்போது, இது இன்னும் முக்கியமாகிறது! தோனி, தொடர்ந்து 10 to 15 ஓவர்களில் செய்யும் சொதப்பலால், RRR கண்டபடி எகிறி, அடுத்து வரும் பேட்ஸ்மன்களுக்கு அனாவசிய அழுத்தம் ஏற்படுகிறது! அது போல, சென்னை முதலில் பேட் செய்யும் ஆட்டங்களிலாவது, ஒரு 5-6 ஓவர்கள் இருக்கும் சூழலில், மார்க்கல் களமிறங்குவது மிக அவசியம்!



2-3 வருடங்களாக, தொடர்ந்து, ஐபிஎல் ஆட்டங்களில் சென்னை ரசிகர்களை இருக்கை நுனிக்கு இட்டு வந்து டென்ஷன் கொடுப்பதை ஒரு கலைவடிவமாகவே சென்னை அணி ஆக்கி விட்டது :) பலம் வாய்ந்த தில்லி அணியும், கெய்லையும், டிவிலியர்ஸையும் (மட்டுமே) நம்பியிருக்கும் டுபாக்கூர் பங்களூர் அணியும், பல ஆட்டங்களை ஓசியில் ஜெயித்த, உருப்படாத மும்பை அணியும் அதை விட உருப்படாத கொல்கத்தா அணியும் ஐபிஎல் கோப்பையை அண்டாத அளவுக்கு சென்னை அணி பார்த்துக் கொள்ளும் பட்சத்தில், டிவிட்டரில் உலவும் @elavasam @njganesh போன்ற சென்னை அணி ரசிகர்கள் இந்த டென்ஷனை மிக்க மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள் :-) நான் சென்னை ரசிகன் கிடையாது!

காரணம்: எனக்கு ”சென்னை வெறியன்” சாரி, வெறியர் என்ற பட்டத்தை மிக்க அன்போடு டிவிட்டரில் வழங்கிய நண்பர் @njganesh -க்கு நன்றி :)



எ.அ.பாலா

இப்படியே பாலா விமர்சனம் எழுதிக்கொண்டு போனால், அவரை அடுத்த மதுரை ஆதினமாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உள்ளது.

Read More...

Thursday, May 10, 2012

பா.ஜ. மாநில மாநாடு !

மதுரையில் தாமரை சங்கமம் என்ற பெயரில் பா.ஜ. மாநில மாநாடு நடந்து வருகிறது. மாநாட்டில் பா.ஜ. மூத்த தலைவர்கள் கலந்துகொண்டு பேசினார்.


* இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் சுஷ்மா சுவராஜ் தலைமையில் சென்ற பாராளுமன்ற குழு, அந்நாட்டு அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக அங்கு இலங்கை தமிழர்களுக்கு மேலும் பாதுகாப்பு கூடியுள்ளது. எத்தனை தேசிய கட்சிகள் உருவெடுத்தாலும்,பா.ஜ.வே வலுவான ஒரு தேசிய கட்சி - அத்வானி

* விரைவில் தாமரை ஆட்சி மலரும் - நிதின்கட்காரி

இத்துடன் இன்றைய விளையாட்டு செய்திகள் முடிவடைந்தன

Read More...

நித்தியானந்தா - சோ, ஜெயேந்திரர் கருத்து




மதுரை ஆதீனமாக நித்தியானந்தா மகுடம் சூட்டிக் கொண்டதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை எதிர்ப்பதாக கடந்த 3 நாட்களுக்கு முன்பே சங்கர மடத்தில் இருந்து தெரிவித்தோம்.

இதுபோன்ற செயல்கள் ஆன்மிகத்தை நிச்சயம் பாதிக்கும். மதுரை ஆதீனம் என்பது ஞானசம்பந்தர் பரம்பரையில் வந்தது. ஆதீனமாக பட்டம் சூட்டி கொள்பவர்கள் மொட்டை அடித்து தலையில் ருத்ராட்ச மாலை அணிய வேண்டும் என்ற ஆன்மிக விதிமுறை உள்ளது. இவ்வாறு தலையில் மொட்டை அடித்து தலையில் ருத்ராட்ச மாலை அணிந்திருப்பவர்களை மட்டுமே ஆதீனமாக பட்டம் சூட்ட வேண்டும்.

ஆனால் நித்தியானந்தா இந்த விதிமுறைகளை மீறி தலையில் முடியோடு பட்டம் சூட்டிக் கொண்டுள்ளார். இதனை ஆன்மிகவாதிகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மேலும், ரஞ்சிதா என்ற பெண் எப்போதும் நித்தியானந்தாவுடன் உள்ளார். இதுவும் ஆன்மிகத்திற்கு எதிரானது. ஆன்மிகவாதிகள் நித்தியானந்தாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதை நான் ஆதரிக்கிறேன்.

ஜனாதிபதி பதவியிலிரிந்து, கூடாங்குளம் அணு மின் நிலையம் வரை தன் கருத்தை தைரியமாக சொல்லும் சோ, நித்தி விவகாரத்தில் வழ வழ கொழ கொழ. தண்டத்தை மடத்தில் விட்டு விட்டு சென்ற ஜெயேந்திரர் மொட்டை பற்றி பேசுவது வேடிக்கை.

மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதாக நினைக்காதீர்கள் :-)

Read More...

Sunday, May 06, 2012

IPL 5 - CSK vs MI -மும்பைக்கு வெற்றியை விட்டுக் கொடுத்த சென்னை -எ.அ.பாலா

டாஸில் வென்ற ஹர்பஜன், பந்து வீச முடிவு செய்தார். சென்னைக்கு நல்லதொரு தொடக்கம். 6 ஓவர்களில் 52-1. வழக்கத்திற்கு மாறாக விஜய் ஃப்ரீயாக ஆடினார், முனாஃபின் ஒரு ஓவரில் அவர் விளாசியதில் 24 ரன்கள், ரொம்ப ஃப்ரீயாக ஆட முயன்று, அவுட்டானார்.. ரைனா வழக்கம் போல சுறுசுறுப்பாக ஆடி, 20 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து, பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி, பிராங்க்ளினின் டுபாக்கூர் பந்துக்கு விக்கெட் இழந்தார்!

உள்ளே வந்த தோனி, சென்ற ஆட்டம் போல சொதப்பாமல், பாஸிட்டிவ்வாக ஆடியது கண்டு திருப்தியாக இருந்தது, பிரேவோவும் சிறப்பாகவே ஆடினார், 16 ஓவர்களில் 138 for 3 என்ற நிலையில் சென்னை 180-ஐ தாண்ட முடியாமல் போனதற்கு RPசிங்கும், மலிங்காவும் முறையே வீசிய 19வது, 20வது ஓவர்கள். சென்னை எடுத்த மொத்த ஸ்கோரான 173, உருப்படாத மிடில் ஆர்டர் கொண்டிருக்கும் மும்பை அணிக்கு அதிகம் என்று தான் தோன்றியது!



ஹில்ஃபன்ஹாசின் முதல் ஓவர் ஒரு அருமையான மெய்டன்! 3வது ஓவரில் பிரான்க்ளினை வீட்டுக்கு அனுப்பினார். அதன் பின் சச்சினும், ரோஹித்தும் வெகு சிறப்பாக ஆடினார்கள் என்று தான் கூற வேண்டியுள்ளது. ரன்கள் குவிந்த வண்ணம் இருந்தது. Sachin was in supreme form. ஒரு வழியாக அஸ்வின் வீசிய 16வது (அஸ்வினின் நாலாவது ஓவரை அது வரை தள்ளிப் போட்ட தோனியை பாராட்ட வேண்டும்) ஓவரின் கடைசி பந்தில் டுபிளஸ்ஸி பிடித்த சூப்பர் காட்ச் வாயிலாக சச்சின் (74, 44 பந்துகள்) அவுட்.

சென்னை வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் நம்பிக்கை மெல்ல துளிர்க்க ஆரம்பித்த கணம் இது என்று சொல்லலாம். சென்னை இருந்த நிலைமைக்கு, அஷ்வினின் பந்து வீச்சு அபாரமானது, 4-0-28-1. 57 (42 பந்துகள்) ரன்களில் ஆடிக் கொண்டிருந்த ரோஹித் சர்மா, அம்பானி கொடுக்கும் துட்டுக்கு உயிரைக் கொடுத்து ஆடுவது போலவே, பரிதாபமான இந்திய கிரிக்கெட் ரசிகர்களூக்காகவும், இந்திய அணிக்கு ஆடும்போதும் இது போல ஆட வேண்டும் என்பது என் பிரார்த்தனை. ரோஹித் மும்பை ரஞ்சி அணிக்கு ஆடுவதனாலேயே பயங்கரமாக hype பண்ணப்பட்டவர் என்பது என் எண்ணம். திறமை வாய்ந்தவர் தான். ஆனால், கோலி, ரெய்னா போன்றவர்கள் அவரை விட temperament-இல் எவ்வளவோ மேல்!

38 of 24 என்பது, கவைக்குதவாத கார்த்திக் (இது இன்னொரு hype type) பிரேவோவின் 17வது ஓவரில் 2 பவுண்டரிகள் ஓசியில் அடித்ததால் (கடைசி பந்தில் எதிர்பார்த்தது போல அவுட் :)) இலக்கு 27 of 18 (147/3) என்றாகி மும்பைக்கு சாதகமாகவே இருந்தது! 18வது ஓவரை வீச ஜடேஜாவை தோனி அழைத்ததை மாஸ்டர் ஸ்ட்ரோக் என்பேன்!!! அந்த ஓவரில் ராயுடுவும், ரோஹித்தும் காலி, 2 ரன்கள் மட்டுமே! ஆட்டம் சென்னை பக்கம் திரும்பத் தொடங்கியிருந்தது. ஆட்டத்தை பார்த்தபடி, நான் வழக்கமான ராமானுச நூற்றந்தாதி பாராயணத்தின் நடுவில் இருந்தேன் :-)

ஹில்ஃபன்ஹாசுக்கு ஒரு ஓவர் பாக்கி இருந்த நிலைமையில், நம்பிக்கை அதிகமாகியது! 19வது ஓவரை, ஸ்மித் அடித்த ஒரு சிக்ஸர் பந்து தவிர்த்து, பிரேவோ சிறப்பாகவே வீசினார்! அந்த ஓவரில் பீட்டர்சன் ரன் அவுட். பந்து வீச்சிலும் பரிமளிக்காத, கேப்டன் ஆக இருக்கவும் லாயக்கில்லாத (இவர் அணியில் இருப்பதே சச்சின் போட்ட பிச்சை!) ஹர்பஜன் முதல் பந்து முட்டை எடுத்து அவுட்.

25 of 12 என்பது 16 of 6 என்று ஆட்டம் முழுவதுமாக சென்னை பக்கம் திரும்பியிருந்த நிலையில், ஹில்ஃபன்ஹாஸ் முதல் 3 பந்துகளை அருமையாக வீசி, மலிங்காவை வீழ்த்தி, 2 ரன்கள் மட்டுமே வழங்கியதில், சென்னை ரசிகர்கள் ரொம்ப சந்தோஷமாக இருந்தது டிவிட்டரில் தெரிந்தது! 3 பந்துகள், 14 ரன்கள் தேவை. இப்போது தான் ஹில்ஃபன்ஹாசுக்கு ஏழரை நாட்டு சனியன் பிடித்து, ஸ்மித் போன்ற, காலணாவுக்கு பிரயோஜனம் இல்லாத, மட்டமான பேட்ஸ்மனுக்கு (யார்க்கருக்கு முயற்சித்து) தொடர்ந்து 2 ஃபுல் டாஸ் பந்துகள் வீசி, ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் தாரை வார்த்தார்.

1 பந்து 4 ரன்கள் தேவை. இப்போது கூட சென்னை ஜெயித்திருக்கலாம், அவர் ஒரு well directed short ball வீசியிருந்தால்! தோனி வந்து அறிவுறுத்தியும், ஹில்ஃபன்ஹாஸ் அந்த கடைசி பந்தை over pitch பண்ணியதால், காட்டான் ஸ்மித் காட்டுத்தனமாக அடித்ததில், பந்து பவுண்டரிக்கு பறந்தது. மும்பை என்ற மிகச்சாதாரண அணிக்கு இன்னொரு ஓசி வெற்றி! மும்பை வென்றது என்பதை விட சென்னை தோற்றது என்பது சரியாக இருக்கும். ஹர்பஜனுக்கு போலிங், பேட்டிங், கேபடன்ஸி என்று எதுவுமே சிலாக்கியமாக இல்லாவிட்டாலும், அதிர்ஷ்டம் நிறைய உள்ளது! அதே அதிர்ஷ்டம் தோனியை இந்த ஐபிஎல்-இல் அடிக்கடி கை விட்டு விடுவதால், சென்னை சற்றே சிரமமான நிலைமையில் உள்ளது.

இன்னும் சென்னை (மும்பை அணி chokers போல் அல்லாமல், 2 முறை சேம்பியன்ஷிப்பை தொடர்ந்து வென்ற அணியாயிற்றே!) மீது நம்பிக்கை இருக்கிறது, பார்ப்போம்!

எ.அ.பாலா
காலையில் கருடசேவை சேவித்த பாலாவுக்கு இந்த நிலமை வந்திருக்க கூடாது.

Read More...

திருவல்லிக்கேணி கருடசேவை - படங்கள் - எ.அ.பாலா

இன்று காலை திருவல்லிக்கேணி கங்கண்ணா மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளி இருந்தபோது எடுத்தவை.




இது அல்லிக்கேணி சிறுவர்கள் குழாம் எழுந்தருளப் பண்ணியிருந்த சின்ன கருடசேவை

மஞ்சள் கமெண்டில் கண்டம் இருப்பதால் இன்று கிடையாது.

Read More...

Saturday, May 05, 2012

ராமானுஜ (17)அந்தாதி - பா.ராகவன்


பா.ராகவன் எழுதிய ராமானுஜர் பற்றிய வெண்பாம்கள்.


ஆயர் குலமுதல்வன் அவனினும் நானுவக்கும்
ஜீயர் பதமே சரண் (1)

சரணமெனும் தத்துவத்தின் சாரம் அளித்தவனே
வரணுமென் வாசலுக்கு நீ (2)

நீயுறைந்த ரங்கநகர் வீதியெலாம் நானலைந்து
வாயுரைத்த வார்த்தையது கேள் (3)

கேள்வி பலகேட்டு, கேடுபல கண்டபின்னர்
தோல்வியில் துவண்டதினம் நூறு. (4)

நூறுவழி நமக்குண்டு நோகாது இன்பமுற
வேறுவழி ஏதுமில்லை காண் (5)

காணக் கிடைக்கின்ற கருணைப் பெருங்கடலே
வானைப்போல் விரிந்தது உன் எண்ணம் (6)

எண்ணமெலாம் நீ நிறைந்து ஏகாந்தப் பெருவெளியில்
என்னை விளை யாட அனுப்பு. (7)

அனுப்பிவைத்த அற்புதமே அதிசயமே அருஞ்சுவையே
இனிப்பினுள் இருப்பதுவோ சொல் (8)


சொல்லில் அடங்காத சுடரொளி ஞானத்தை
வள்ளலே வந்தெனக் களி (9)

அளித்த பிறவியிதில் அவதிகள் பலகோடி
களித்து வாழவழி காட்டு (10)

காட்டுகிறேன் பெருமகிழ்வை எனச்சொல்லி மேலேறி
ஊட்டுவித்த உணவெனக்குப் போதும். (11)

போதும்போதுமென பொங்கும் வரையெனக்கு
போதம் நீயெனக்குத் தா (12)


தானுகந்த திருமேனி தரிசன நேரத்தில்
நானுருகி நூர்த்தகவி நூறு. (13)

நூறெழுதும் கர்வமழி காலமெலாம் சேவித்து
பேரழியத் தெரியா தெனக்கு (14)


எனக்குள்ளே இருட்குகைகள் ஏராள முண்டப்பா
மனச்சுவரில் மால் பெருமை எழுது. (15)


எழுத்தி லடங்காத எம்பெரு மானாரே
பழுத்த மனத்தின் ருசி. (16)

ருசிக்கின்ற உண்மையென இரண்டை நீசொன்னாய்
ரசிக்கிற மனதைக் கொடு (17)

Read More...

Thursday, May 03, 2012

குட்டி சாமியார் என்ன ஆனார் ?



(நன்றி: குமுதம் ரிப்போட்டர்)
குட்டியுடன் இருக்கும் சாமியாரை கவனிப்பார்களா அல்லது குட்டி சாமியாரை கவனிப்பார்களா ?

Read More...

IPL5 - RCB vs KXIP - இதல்லவோ டி-20 ஆட்டம்! - எ.அ.பாலா


நேற்று சின்னசாமி அரங்கில் சில நம்ப முடியாத விஷயங்கள் நடந்தன! டாஸில் வென்ற டேவிட் ஹஸ்ஸி அதற்கு முந்தைய நாள் பெய்த மழை காரணமாக முதலில் பந்து வீச முடிவு செய்தது, சரியான தேர்வு என்று தான் சொல்ல வேண்டும். பங்களூர் அணி தொடக்கத்திலேயே அடிதடிக்கு அஞ்சாத அகர்வாலை இழந்தது. இதுவரை நடந்த ஆட்டங்களில் ”நிறத்துக்கப்பால்” காணப்பட்ட பிரவீன் குமாரின் பந்து வீச்சை விவரிக்க/வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!!! 4-0-8-0.

கெய்ல், விராத் கோலிக்கு எதிராக இத்தகைய பந்து வீச்சை அதி அற்புதம் என்று தான் கூறுவேன்! அவர் பந்து வீச்சில், பந்து காற்றிலும், பிட்ச் ஆனபின்னும், ஒரு குடிகாரனைப் போல நிலை தடுமாறியதில், கெய்ல் என்ற புலி எலியானது, சற்றே ஃபார்மில் இல்லாத கோலி சுண்டெலியானது ;-) 9 ஓவர்களில் பங்களுர் எடுத்தது 48 ரன்கள் மட்டுமே.



அடுத்து பந்து வீச வந்த சவ்லாவையும், அவானாவையும் எதிர்த்து, கெய்ல் கோர தாண்டவம் ஆடியபோதும், ஆசார் மெஹ்மூதின் பந்து வீச்சில் அவரது டி20 அனுபவம் மிளிர்ந்தது. 16வது ஓவரில் மெஹ்மூத் கெய்லை (71, 42 பந்துகளில்) வீழ்த்தினார். அடுத்த ஓவரில் கோலியும் காலி. 17 ஓவர்களில் ஸ்கோர் 135-3. மெஹ்மூத் தான் வீசிய 20வது ஓவரில், டிவிலியர்ஸ், மெக்டொனால்ட் விக்கெட்டுகளை சாய்த்து, நான்கே ரன்கள் கொடுத்து தனது அருமையான ஸ்பெல்லை (4-0-20-3) பூர்த்தி செய்தார்! பங்களூர் மொத்தம் 158 ரன்கள்.

பஞ்சாபின் துரத்தல் சுறுசுறுப்பாகத் தொடங்கியது. மந்தீப் சிங், சாகீர் கானை ஒரு கிளப் பந்து வீச்சாளரரைப் போல அணுகியதில், மார்ஷ் விக்கெட்டிழந்தும், ஸ்கோர் 8 ஓவர்களில் 70/1 என்று பஞ்சாப் ஆரோக்கியமான நிலையில் இருந்தது! அப்பண்ணா வீசிய 9வது ஓவரில் மந்தீப் அவுட். களமிறங்கிய கேப்டன் ஹஸ்ஸி, அப்பண்ணா வீசிய 13வது ஓவரிலும், பதான் வீசிய 16வது ஓவரிலும் செய்த துவம்சம் காரணமாக, பஞ்சாப் ஸ்கோர் 146-2. ஹஸ்ஸி 41 ரன்கள், 22 பந்துகளில் !!!

4 ஓவர்களில் 13 ரன்களே தேவை (8 விக்கெட்டுகள் கையில்) என்று தோற்கவே முடியாத நிலையில் இருந்தபோது, ’தோற்றே தீருவோம்’ என்று பஞ்சாப் பிரம்ம பிரயத்தனத்தில் இறங்கி, Harakiri செய்யவிருப்பதை அறியாத நான், சில மணித்துளிகள் வேறு சேனலுக்குத் தாவி மீண்டும் திரும்பி வந்து பார்த்தால், சைனியும், மஹ்மூத்தும் அவுட்டாகி, ஸ்கோர் 151-4. 14 பந்துகளில் 8 ரன்கள் என்பது ஹஸ்ஸி இருக்கையில் எளிது என்றபோதும், சின்னசாமியே ஏனோ டென்ஷனில் இருந்த மாதிரி தோன்றியது என் பிரமையா என்று தெரியவில்லை :-)

சாகீர் வீசிய அருமையான 19வது ஓவரில், 2 ரன் அவுட் (ஹஸ்ஸி, நய்யார்), 2 ரன்கள் மட்டுமே! அதாவது, 17,18,19-வது ஓவர்களில் பஞ்சாப் எடுத்தது 8 ரன்கள், இழந்தது 4 விக்கெட்டுகள், அதில் 3 ரன் அவுட் !!!! இந்த நம்ப முடியாத மகா கூத்துக்கு ஒரே காரணம், மர்ஃபியின் II Law of Thermodynamics --- Things get Worse under Pressure ;-) இறுதி ஓவரில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் 2 dot பந்துகள், 3வதில் 2 ரன்கள், நாலாவதில் 1 ரன். இப்போது 2 of 2 தேவை. நிற்க!

பெங்களுர் ஜெயிப்பது, சென்னையின் அடுத்த சுற்று தகுதி வாய்ப்புக்கு நல்லதில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், ப்ரீதி ஜிந்தாவின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்த டென்ஷனைப் பார்த்து மனம் கலங்கியே, பஞ்சாப் ஜெயிக்க வேண்டும் என்று வேண்டி விரும்பினேன் என்ற உண்மையை (இதை ஏதாவது ஒரு அனானி நண்பர் கண்டுபிடித்து கமெண்ட் போடுவதற்குள்) நானே சொல்லி விடுவது உத்தமம் ;-) அந்த 5வது பந்தை பியுஷ் சாவ்லா கூலாக சிக்ஸர் அடித்து, ப்ரீதியை டென்ஷனிலிருந்து விடுவித்தார்!

இது போன்ற “நகம் கடி” ஆட்டங்களை வைத்துப் பார்க்கும்போது டி-20 கிரிக்கெட்டுக்கு சூரியனைப் போன்ற பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்பது எள்ளளவும் சந்தேகமில்லை! பின்னர் ப்ரீதியை பேட்டி எடுத்தபோது, இறுதி ஓவரில் தனக்கு இதயமே நின்று விடுவது போல உணர்ந்ததாக சந்தோஷமாகவே கூறினார்! ஆக, பஞ்சாப் அடிக்கடி ஜெயித்து, ப்ரீதி ஜிந்தா போன்ற மெல்லிய இதயம் படைத்தவர்கள், ஆரோக்கியமாக, சந்தோஷமாக இருப்பது எல்லாருக்கும் மகிழ்ச்சி தானே! என்ன நான் சொல்றது :-)

எ.அ.பாலா
http://balaji_ammu.blogspot.com

Glossary:
நகம் கடி - NAIL BITING
நிறத்துக்கப்பால் - OFF COLOUR

Yellow

Read More...

Wednesday, May 02, 2012

அடடா அடடா ஆதீனமே ஆடுது! - ஜூவி கட்டுரை

( ஜூவியில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு ).

'இடத்தைக் கொடுத்தால், மடத்தைப் பிடிப்பார்கள்’ என்ற பழமொழிக்கு புதிய
உதாரணமாக ஆகி விட்டார் நித்தியானந்தா!

ஏப்ரல் 11-ம் தேதி, நடிகை ரஞ்சிதா சகிதம் மதுரை ஆதீன மடத்துக்கு விசிட்
அடித்துவிட்டுப் போனார் நித்தியானந்தா. அப்போதே பலரும் சங்கடப்பட்டார்கள்.
'புனிதமான மதுரை ஆதீனத்துக்குள், சர்ச்சையில் சிக்கிய ஒருவர் நடி கையுடன்
வரலாமா?’ என்று கேள்வி எழுப்பினார்கள். அன்று விருந்தாளியாக வந்தவரே... இன்று
மதுரை ஆதீனமாக மாறிவிட்டார்.

சம்பந்தம் இல்லாவிட்டாலும் தானே போய் சர்ச்சையில் சிக்கிக்​கொள்பவர் மதுரை
ஆதீனம். கடந்த 2004-ம் ஆண்டு தன் அத்தை மகளின் மகனான சுவாமிநாதனை ஆதீனத்தின்
இளவரசராக கோலாகல விழா நடத்திப் பட்டம் சூட்டினார். மிகக்குறுகிய
காலத்துக்குள், 'ஆதீன விதிகளுக்கு விரோதமாகச் செயல்படுவதாக’ குற்றச்சாட்டுகளை
அடுக்கி, சுவாமிநாதனை மடத்தை விட்டு விலக்கியும் வைத்தார். இந்த வில்லங்கமே
இன்னமும் முழுமையாகத் தீராத நிலையில், நித்தியானந்தாவை அவசர கதியில் அடுத்த
குரு மகா சந்நிதானமாகத் தேர்வு செய்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி
இருக்கிறார் ஆதீனம்.

தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் தலைவர் கணபதி சந்தானத்திடம் இதுகுறித்துப்
பேசினோம். ''திருஞானசம்​பந்தரால் உருவாக்கப்பட்டது மதுரை ஆதீன மடம். சிறந்த
முறையில் சைவத் தொண்டாற்றி மக்களைப் பண்புள்ள மனிதர்களாக உருவாக்கிய ஒரு
பாரம்​பரியமான மடத்துக்கு, செக்ஸ் வழக்கில் சிறை சென்று வந்த ஒருவரை, இன்னும்
வழக்கில் இருந்து விடுபடாத ஒருவரை, அடுத்த மடாதிபதியாக ஆதீனகர்த்தர் நியமித்து
இருப்பது கண்டிக்​கத்தக்கது. வருந்தத்தக்கது. சைவப் பாரம்​பரியத்தில்
வந்தவர்​களுக்கும் ஆன்மிகத்​துக்கு சிறந்த தொண்டாற்றி பல்வேறு அறிஞர்களை
உருவாக்கிய சைவ சமயத்தாருக்கும் இது மாபெரும் இழுக்கு. இந்தச் செயலை சைவப்
பாரம்பரியத்தில் வந்த எவரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். எனவே, ஆதீனகர்த்தர்
அவர்கள் தனது அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெற்று, சைவ சமயத்துக்கு உண்மையாகத்
தொண்டாற்றும் ஒருவரை நியமிக்க வேண்டும். சைவ வேளாளர் பிரிவில் உள்ள 13
சாதிக்காரர்கள்தான் மதுரை ஆதீனமாக வர முடியும். ஆனால், மரபுகளை மீறி,
முதலியார் சாதியைச் சேர்ந்த நித்யானந்தாவை அடுத்த வாரிசாக அறிவித்திருக்கிறார்
ஆதீனம். ஆதீனத்தின் செயல்பாடுகள் எல்லாமே முரண்பாடாகவே இருக்கிறது.

தருமபுரம், திருப்பனந்தாள் ஆதீனங்கள், கல்லூரி​களைத் தொடங்கித் தமிழை
வளர்க்கிறார்கள். திருவாவடுதுறை ஆதீனத்தில் பழைய தமிழ் நூல்களை எல்லாம்
புதுப்பித்து வெளியிட்டு சேவை செய்கிறார்கள். மதுரை ஆதீனம் இதுவரை தமிழுக்காக
என்ன செய்திருக்கிறார்? நித்தியானந்தா ஒரு கோடி கொடுத்தால், மடத்தை
விக்கிறதுக்கு இது என்ன மாநகராட்சி டெண்டரா? அப்படியானால் நாளைக்கு இன்னொருவர்
இரண்டு கோடி கொடுத்தால், அவருக்குப் பட்டம் சூட்டுவாரா? ஆதீனம் தன்
இஷ்டத்துக்குச் செயல்படுவதற்கு மடம் ஒண்ணும் அவங்க பாட்டன் சொத்து இல்லை.
நித்யானந்தா சைவ வேளாளரே அல்ல. அவருக்குப் பட்டம் சூட்டியது செல்லாது என்று
கோர்ட்டுக்குப் போகப்போகிறோம். அரசாங்​கமும் இந்த விஷயத்தைக் கவனிக்க
வேண்டும்'' என்றார்.

பெங்களூருவில் இருந்த மதுரை ஆதீனத்தைத் தொடர்புகொண்டு பேசி​னோம். ''எங்களைப்
போல அனைத்துத் திறமைகளும் தகுதிகளும்கொண்ட ஒரு துணிச்சலான மாவீரனைத்
தேடிக்கொண்டு இருந்தோம். பார்வதி தேவியும் சிவபெருமானும் நித்தியானந்தாவை
அடையாளம் காட்டினார்கள்.
அவர்களது உத்தரவை ஸ்டே பண்ணி வைக்கக் கூடாது. அதனால்,
அவசர அவசரமாக நித்தியானந்தாவுக்குப் பட்டம் சூட்டிவிட்டோம்'' என்றார்.

''மடம் மதுரையில் இருக்க, மகுடத்தை பெங்களூருவில் வைத்து சூட்டி
இருக்கிறீர்களே?''

''நித்தியானந்தாவுக்குப் பட்டம் சூட்டும் விழாவில் பிடதியில் உள்ள அவரது
சிஷ்யர்களும் வெளி​நாடுகளில் இருப்பவர்களும் கலந்துக்கப் பிரியப்பட்டாங்க.
அவ்வளவு பேரையும் மதுரைக்கு கூட்டிட்டுப்போறது முடியாதுங்​கிறதால நாங்களே
இங்கு வந்து விட்டோம்.''

''சைவ வேளாளர் அமர வேண்டிய ஆதீனகர்த்தரின் இருக்கையில் முதலியாரான
நித்தியானந்தாவை வைத்து உள்ளீர்களே?''

''அதெல்லாம் இல்லை. நித்தியானந்​தாவும் சைவ வேளாளர்தான்
. மதுரை ஆதீனகர்த்தராக
அமர்வதற்கான அனைத்துத் தகுதிகளும் அவருக்கு இருக்கு. இப்படிப்பட்ட ஆற்றல்மிக்க
ஒரு தம்பி​ரானைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப் பெற்றமைக்காக, நாங்கள்
இறைவனுக்கு நன்றி சொல்கிறோம். இதை நாங்கள் செய்த தவத்தின் புண்ணியமாகக்
கருதுகிறோம் நித்தியானந்தாவின் வருகை ஆதீனத்துக்குப் பெருமை''

''ஒரு கோடிக்கும் தங்க சிம்மாச​னத்துக்கும் உங்களது சுயநலத்​துக்​காகவும்
மதுரை ஆதீனத்தை நித்தி​யானந்தாவிடம் அடகு வைத்து​விட்ட​தாகச்
சொல்கிறார்களே...''

இந்தக் கேள்விக்கு அருகில் இருந்த நித்தியானந்தாவே பதில் சொன்னார். ''நானும்,
நித்தியானந்தர் பீடத்தின் சீடர்களும் பீடத்தின் அசையும் அசையா சொத்துக்களும்
குரு மகா சந்நிதானத்தின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம். இனி நாங்கள் வேறு,
அவர்கள் வேறு அல்ல. எங்களது அன்பின் அடையாளமாகத்தான் சந்நிதானம் அவர்களின்
சமுதாயப் பணிகளுக்காக இந்தச் சிறிய தொகையை பாத காணிக்கையாகத் தந்திருக்கிறோம்.
வேறு எதுவும் சொல்லி இதைக் கொச்சைப்படுத்த வேண்டாம். இந்தத் தொகையை இப்போது
ஐந்து கோடியாகக் கொடுத்திருக்கிறோம்'' என்றார்.

தொடர்ந்து, மதுரை ஆதீனத்திடம் பேசினோம்

''நித்தியானந்தா, மதுரை ஆதீனத்தை வீழ்த்தி​விட்டாரா?''

''ஆதீனத்தை யாரும் வீழ்த்த முடியாது. அவருக்கு ஏராளமாய் சொத்துக்கள் இருக்கு.
அதனால் எங்களை வீழ்த்த வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. சிவபெருமான் - பார்வதி
தேவியின் அஸ்திரம்கொண்டு நாங்கள்தான் அவரை வீழ்த்தி இருக்கிறோம்.''

''செக்ஸ் புகாரில் சிக்கிய ஒருவர்தான் அடுத்த மதுரை ஆதீனமாக வர வேண்டுமா,
வேறு நல்ல சைவத் தொண்டர்கள் கிடைக்கவில்லையா?''

''செக்ஸ் புகாருக்கும் நித்தியானந்தாவுக்கும் சம்பந்தம் இல்லை. அவர்,
அதுபோன்ற காரியங்களில் ஈடுபடவும் இல்லை. அவரையும் ரஞ்சிதாவையும் இணைத்து
பரப்பப்பட்ட செய்திகள் அனைத்துமே அப்சல்யூட்லி ராங்.

இது ஒரு பெரிய பிரச்னையா? செக்ஸ் குற்றச்சாட்டு யார் மீதுதான் இல்லை. புகார்
கொடுக்கணும்னா, திருமணமாகி பிள்ளை பெற்ற அத்தனை பேர் மீதும் செக்ஸ் புகார்
குடுக்கலாம். ஒரு பொம்பளைப் பிள்ளைகிட்டப் பேசுறது தப்பா? நாமெல்லாம் பெண்ணில்
இருந்துதானே வந்தோம். மதுரை ஆதீனத்திலும், 'வைஷ்ணவி, கஸ்தூரி, மாதவி,
கோபிகா’னு நிறையவே பெண்கள் பணிவிடை செய்கிறார்கள். அதற்காக எங்கள் மீதும்
ஏதாவது பழி போடுவதா? மதுரையை ஆண்ட கூன்பாண்டியனின் மனைவி மங்கையர்க்கரசிதானே
திருஞானசம்பந்தரை அழைத்து வந்து மதுரை ஆதீன மடத்தையே தொடங்கினார். பெண்களின்
சிறப்புகளை மதித்து அவர்களின் மாண்புகளைக் காக்கிற மடம், மதுரை ஆதீன மடம். அதே
நிலைப்​பாட்டில்தான் நித்தியானந்தர் பீடமும் இருக்​கிறது. சைவ வேளாளர்
சங்கத்தினர் ஆதீனம் எடுத்திருக்கும் இந்த முடிவைப் பாராட்டி வரவேற்காமல், பழி
போடுவது வேதனையாக இருக்கிறது'' என்று மதுரை ஆதீனம் கூறினார்.

அடுத்து நித்தியானந்தாவிடம் பேசினோம் ''ஸ்வாமி அவர்கள் என்னை மதுரை ஆதீனத்தின்
அடுத்த குருமகா சந்நிதானமாக அறிவித்​திருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக
இருக்கிறது. முதலில் தயக்கமாக இருந்தாலும், இப்போது தைரியம் வந்துவிட்டது.
இந்த வாய்ப்பை முழுமையாக ஏற்று இன்னும் மூன்று ஆண்டுகளில் மதுரை ஆதீனத்தை அகில
உலக ஆன்மிக இயக்கமாக மாற்றிக்​காட்டுவோம். நித்தியானந்தர் தியான பீடத்துக்கு
151 நாடுகளில் மையமும் 40 நாடுகளில் கிளைகளும் இருக்கின்றன. உலகம் முழுவதும்
1.20 கோடி சீடர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் கொண்டு நாங்கள் நினைத்ததை
முடிப்போம். பிடதி ஆசிரமப் பணிகள் இருப்பதால், மதுரை ஆதீனத்தில் என்னால்
முழுமையாகத் தங்கி இருக்க முடியாது என்றாலும், அடிக்கடி மதுரைக்கு வருவேன்''
என்கிறார் பூரிப்புடன்.

- குள.சண்முகசுந்தரம்

சொ.பாலசுப்ரமணியன்

பிடதியில்...

கடந்த 27-ம் தேதி, கர்நாடக மாநிலத்​தின் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள
நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் ஆட்டம் பாட்டம், எக்கச்சக்கக் கூட்டம்
என்று கல்யாண வீட்டுக் கலகலப்பு.

தங்கமுலாம் பூசப்பட்ட மூன்று ஆசனங்கள் மேடையில் போடப்பட்டு இருந்தன. அதில்,
ஆனந்த சிரிப்போடு நிஜ நித்தியானந்தாவும், அடுத்த ஆசனத்தில் ஃபைபரில் ட‌ம்மி
நித்தியானந்தா சிலையும், மூன்றாவது ஆசனத்தில் மதுரை ஆதீனமான அருணகிரியும்
காட்சி தந்தார்கள்.

சரியாக 9.05 மணிக்கு மதுரை ஆதீனமான அருணகிரி, நித்தியானந்தாவை மதுரையின்
293-வது ஆதீனமாக அறிவித்தார். கூடவே வெள்ளைப் பேப்பரில் மேடையில் வைத்து
கையெழுத்து போடப்பட்டது. இதனால் அகம் மகிழ்ந்துபோன நித்தி, ஒரு கோடி
ரூபாய்க்கான செக்கை மதுரை ஆதீனத்திடம் வழங்கினார். கூடவே, ஆறு அடி உயர தங்கச்
செங்கோல் வழங்கி, தங்கக் கிரீடத்தையும் அணிவித்தார். மதுரை ஆதீனமும்
நித்தியானந்தாவுக்குத் தங்கக்கிரீடம் அணிவித்தார். நித்தியானந்தா மற்றும்
மதுரை ஆதீனத்தின் முகங்களில் தெரிந்த மகிழ்ச்சியைக் கண்ட பக்தர்கள், சத்தமாக
ஒலித்த சினிமா பாடலுக்கு ஏற்ப ஆட்டம் போட ஆரம்பித்தனர். மதுரை ஆதீனமும்
ஆடலுக்கு ஏற்ப தலையை ஆட்டி ரசித்தபடி, ஆடுபவர்களை உற்சாகப்படுத்தினார். இதை,
முன்வரிசையில் இருந்து பார்த்த ரஞ்சிதா, அமைதியான சிரிப்போடு ரசித்தார்.

விழாவில் பேசிய மதுரை ஆதீனம், ''திருஞான சம்பந்தரால் 1,500 ஆண்டுகளுக்கு முன்
தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனத்தை, எனக்குப் பிறகு யார் கண்ணியமாகக்
கண்காணிக்கப் போகிறார்கள் என்ற கவலையில் பல நாட்கள் தூக்கமின்றித் தவித்தேன்.
அப்படி சிந்தனையுடன் ஒரு நாள் இரவு தூங்கியபோது, சிவபெருமான் என் கனவில்
தோன்றி, 'நித்தியானந்தாதான் உனக்கு சரியான வாரிசு’ என்று சொன்னார்.
அதன்பிற‌கு, பெங்களூரு ஆசிரமத்துக்கு வந்து நித்தியானந்தாவோடு
பழகிப்பார்த்தேன். அவரும் என்னை மதுரையில் வந்து பார்த்தார். அவருடைய
ஆசிரமத்தில் ஆண்கள், பெண்கள் அனைவரும் தங்களை மறந்து ஆடிப்பாடி
மகிழ்கிறார்கள். நானும் நேற்று அவர்களோடு சேர்ந்து ஆடினேன்.அப்போது பல
பெண்கள், 'அடடா... ஆதீனமே ஆடுது’ என ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். இப்படித்தான்
எல்லோரும் ஜாலியாக இருக்க வேண்டும். நித்தியானந்தாவின் இந்த அணுகுமுறையை நான்
ரொம்ப லைக் பண்றேன். நித்தியானந்தா மிகவும் இளமையாக இருக்கிறார். அதனால்
என்னைவிட அவரால் நன்றாக ஆன்மிகப் பணியில் ஈடுபட முடியும். இந்து மதத்தை அவரால்
மட்டுமே சரியான திசையில் வளர்க்க முடியும். கூடவே, ஆதீனத்தின் கொள்கையான சைவ
சித்தாந்தத்தில் நித்தியானந்தாவும் ஆழமாக இருப்பதால், எனக்கு ரொம்பப் பிடித்து
விட்டது. நித்தியானந்தா மாதிரி புனிதமானவரைப் பார்க்கவே முடியாது. எனவே, மதுரை
ஆதீனத்துக்குச் சொந்தமான இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களையும்,
1250 ஏக்கர் நிலத்தையும், கோயில்களையும் நித்தியானந்தாவே நிர்வகிப்பார். எனவே
நீங்கள் அனைவரும் 293-வது மதுரை ஆதீனமான நித்தியானந்தாவை, 'ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ
பரஹம்ச நித்தியானந்த ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள்’ என்று
பயபக்தியோடு அழைக்க வேண்டும்'' என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசி
முடித்தார்.

அடுத்து உற்சாக மிகுதியில் பேசிய நித்தியானந்தா, ''மதுரை ஆதீனமான ஸ்ரீஸ்ரீ
அருணகிரி சுவாமிகளின் ஆன்மீக சேவை செய்த ஆண்டுகள்கூட என் வயது இல்லை. மதுரை
ஆதீனத்தின் புகழை சர்வதேச அளவுக்கு உயர்த்துவேன். அதேபோன்று மதுரை ஆதீனத்தின்
ஆளுகைக்கு உட்பட்ட அனைத்துக் கோயில்களும் கைப்பற்றப்பட்டு, புனரமைக்கப்பட்டு
ஓர் ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும். ஏற்கெனவே மதுரை ஆதீனத்துக்குச்
சொந்தமாக இருந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை மீண்டும் ஆதீனத்தின் ஆளுகைக்கே
கொண்டு வருவேன். இதற்காக எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிவேன். ஆதீனம்
சார்பாக மதுரையில் மருத்துவக் கல்லூரியும், 24 மணி நேர அன்னதானச் சேவையும்
உடனே தொடங்கப்படும். அதேபோன்று, ஜூன் மாதம் மதுரையில் நடைபெற இருக்கும் குரு
பூஜையில், மதுரை ஆதீனமான அருணகிரி சுவாமிகளுக்கு தங்க சிம்மாசனம், தங்க
செங்கோல், தங்கக் கிரீடம் வழங்கப்படும்'' என்று பட்டியல் வாசித்தார்.

அதுசரி, எப்படி மதுரையைப் பிடித்தார் நித்தியானந்தா? சில கதைகளைச்
சொல்கிறார்கள்.

கதை ஒன்று:

சி.டி. மேட்டரில் சிக்கியதில் இருந்தே, நித்தியானந்தாவின் இமேஜ் ஈடு செய்ய
முடியாத அளவுக்கு டேமேஜ் ஆகியிருந்தது. அதை எப்படியாவது மீட்டுக்கொள்ளத்
துடித்தார். கர்நாடகத்தில் எந்த மடாதிபதியும் இவரை அருகில் சேர்க்கவே இல்லை.
அதனால், தமிழகத்தில் தன்னுடைய செல்வந்த பக்தர்கள் மூலமாக காய் நகர்த்த
ஆரம்பித்தார்.

மதுரையில் இருக்கும் பிரபல பிசினஸ் புள்ளிஒருவர் ஹீலிங் டச் மூலமாக
நித்தியானந்தாவால் கடந்த ஆண்டு குணப்படுத்தப்பட்டார். அவர் மூலமாக
ஆதீனத்​துக்கு அறிமுகமாகி, அவரை பெங்களூருவுக்கு லவட்டிக் கொண்டு​வந்து மூன்று
மாதங்களுக்கு மேலாகத் தன் சேவையில் ஆதீனத்தை வைத்துப் பராமரித்தாராம்.
ஆதீனத்​தை ஹாங்காங் கூட்டிச் சென்றும் ஆன்மீக சேவையை அரங்கேற்றி​னாராம்
நித்தி. அங்கே நடந்தவை குறித்தும் பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன!

கதை இரண்டு:

மதுரை ஆதீனத்துக்குப் பணச் சிக்கல் இருந்தது. நித்தியிடம் எக்கச்சக்கமாகப்
பணம் இருந்தது, ஆனால், போதிய மதிப்பு இல்லை. அதனால், இருவரும் ஒருவரை ஒருவர்
சந்தித்துப் பேசி தேவைகளைப் பரிமாறிக் கொண்டார்கள். வேறு எந்தக் காரணமும்
இல்லை.

கதை மூன்று:

ஆதீனத்துக்கும் நித்தியானந்தாவுக்கும் நீண்ட காலமாகவே நல்ல தொடர்பும் உறவும்
உண்டு. இருவரும் பல்​வேறு ஊர்களுக்கும் நாடுகளுக்கும் ஒன்றாகவே போய்
வந்திருக்கிறார்கள். அந்த நேரங்களில் மதுரை ஆதீனத்தின் ஆர்வங்களை மிகத்தெளிவாக
அறிந்துகொண்ட நித்தியானந்தா, சரியான நேரத்தில் காரியத்தைச்
சாதித்துக்கொண்டார். மதுரையில் வைத்து பதவியேற்பு விழாவை நடத்தினால் பிரச்னை
வரும் என்றுதான் பெங்களூருவில் நடத்தினார்.

ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள், ஆதினமூலமும் அப்படித்தானோ?

- இரா.வினோத்

மதுரையில்...

பட்டத்து இளவரசரை அழைத்துக்கொண்டு கடந்த 29-ம் தேதி காலையில் மதுரை வந்து
இறங்கினார் மதுரை ஆதீனம். அதிகாலையிலேயே விழாக்கோலம் சூடிக்கொண்டது ஆதீன மடம்.
நித்தியின் சீடர்களால் ரொம்பிக்கிடந்த ஆதீன மடத்தில் ஆளாளுக்கு லேப்டாப்களைத்
தூக்கிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடிக்​கொண்டு இருந்​தார்கள்.

சரியாக காலை 9.35 மணிக்கு கிழக்கு வாசல் திறக்க, ஆதீனங்கள் இருவரும்
புன்னகைத்தபடி பிரசன்னமானார்கள். வழக்கமான காவியை விடுத்து, மதுரை ஆதீனத்தின்
டிரேட் மார்க் காவிக்கு மாறி இருந்த நித்தியானந்தா, முடி இறக்கம் செய்யாமலே
தலையில் ருத்ராட்சம் கட்டி இருந்தார். ஒருவருக்கொருவர் தங்கக் கிரீடங்களை
அணிவித்துக்கொண்டு, பத்திரிகையாளர்களிடம் பேசினார்கள்.

முதலில் பேசிய ஆதீனம், ''நம்முடைய குருமகா சந்நிதானம் திருஞான சம்பந்தர்
பெருமான் தீராத வியாதிகளை எல்லாம் தீர்த்து வைத்தார். அதேபோன்ற வல்லமை
நித்தியானந்தருக்கு இருக்கு. இவர் இங்கிருந்து பிரார்த்தனை செய்தால்,
வெளிநாட்டில் இருந்து தங்கமும் வைரமும் வருகிறது. எனக்கு இருந்த சுவாசக்
கோளாறையே குறைத்து விட்டார். அதனால், உங்களில் யாருக்காவது நோய் வந்தால்,
நம்முடைய 293-வது குருமகா சந்நிதானத்தை அணுகுங்கள்'' என்று கலாய்த்த ஆதீனம்,
''உலகத்திலேயே இப்படிப்பட்ட முதலமைச்சரை நான் பார்த்தது இல்லை. புரட்சித்
தலைவி என்றால், புரட்சித் தலைவிதான். தமிழ் மக்களை, தமிழ்நாட்டை
முன்னேற்றுவதற்காக உழைக்கும் புரட்சித் தலைவி அவர்களின் ஆட்சியைப் பாராட்டி
ஆசீர்வதிக்கின்றோம்'' என்று அம்மாவுக்கு திடீர்ப் புகழாராம் சூட்டினார்

அடுத்துப் பேசிய நித்தியானந்தா, ''பிடதி ஆசிரமத்தில் நடக்கும் அத்தனை
பணிகளும் மதுரை ஆதீனத்துக்கும் விரிவுபடுத்தப்படும். இதை நான் ஏற்கெனவே சொல்லி
இருந்தா, 'அத்தனை பணிகளுமா?’ன்னு நீங்க ஏடாகூடமாக் கேள்வி கேப்பீங்க. இப்ப
நீங்களே கேட்டதால், இதைச் சொல்கிறேன். குருமகா சந்நிதானம் அவர்கள் ஒரு ஆல
விருட்சம். நாங்களெல்லாம் முந்தா நாள் பெய்த மழையில் நேத்து முளைத்த
காளான்கள். ஆலமரத்தின் நிழலில் காளான்கள் இருப்பது இயற்கைதானே. மதுரை ஆதீனம்
என்பது மிகப் பெரிய கடல். நாங்கள் சிறு துளி. கடலில் கலப்பதை துளி
விரும்புவதைப் போல எனக்குக் கொடுத்த வாய்ப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு
இருக்கிறேன்'' என்றார். பேட்டியை முடித்துக்கொண்டு இருவரும் பூரண கும்பங்கள்
சகிதம் மீனாட்சி அம்மனைத் தரிசிக்க ஊர்வலமாய்க் கிளம்பினார்கள்.

(நன்றி ஜூவி)
இந்த பதிவுக்கு எதற்கு மஞ்சள் ?

Read More...

Tuesday, May 01, 2012

IPL5 CSK vs KKR -சேப்பாக்கத்தில் சொதப்பிய சென்னை - எ.அ.பாலா

கடந்த ஒரு 4-5 IPL ஆட்டங்களை ஏனோ பார்க்கவில்லை! இம்முறை Mr.Cricket மைக்கேல் ஹஸ்ஸி சென்னை அணியில் இருந்ததால், இந்த ஆட்டத்தில் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையில் டிவி முன் உட்கார்ந்தேன். (என் நல்ல காலம், டிக்கெட் இருந்தும், சேப்பாக்கத்துக்கு செல்லவில்லை!) ஆட்டத்தில் ஜெயிக்கிறாரோ இல்லையோ, டாஸில் தோனி ஜெயித்து விடுகிறார்! சென்னை முதல் பேட்டிங் செய்தது.

டுபிளஸ்ஸி 2வது ஓவரிலேயே லீ பந்து வீச்சில் காலி. 5வது ஓவரில் ஹஸ்ஸி தன்னைத் தானே ரன் அவுட் ஆக்கிக் கொண்டார்! ரைனா நன்றாக ஆடிக்கொண்டிருந்தது சற்று ஆறுதல். 10 ஓவர்களில் 74-2, ஆடுகளத்தின் தன்மையை (பந்து பிட்ச் ஆனவுடன், பந்தின் வேகம் கணிசமாக குறைந்து விடுவதை) வைத்து பார்க்கும்போது, இதை நல்ல நிலைமை என்று தான் கொள்ள வேண்டும்! 155-160 ரன்கள் எடுத்து விட்டால், கொல்கத்தாவுக்கு ஆப்பு உறுதி என்றும் தோன்றியது!


பிரேவோவும் ரைனாவும் சீக்கிரமே விக்கெட் இழந்தார்கள். தோனியும், மில்லியன் டாலர் பேபி ஜடேஜாவும் சோபிக்கவில்லை. நரைனின் அருமையான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பயங்கரமாகத் தடவினார்கள். 17 ஓவர்களில் 113/4. 140 கூட தேறாது என்று புரிந்தது. பிரேவோ, அஷ்வின் தவிர்த்து நம்மிடம் இருக்கும் பந்து வீச்சை வைத்துக் கொண்டு 140-ஐ defend பண்ணுவது கடினம் என்றும் புரிந்தது. சென்னையின் மரண வேதனையின் முடிவில் மொத்த ஸ்கோர் 139!

இம்மாதிரி ஆடுகளத்தில் திறமையும், நிதானமும் உள்ள மட்டையாளர்கள் மட்டுமே பரிமளிப்பார்கள் என்பதற்கு கம்பீரும், காலிஸும் சிறந்த உதாரணங்கள். மெக்கல்லம் 3வது ஓவரிலேயே அவுட்டான பின், இருவரும் ஜோடி சேர்ந்ததில், 12 ஓவர்களில் 82-1. காலிஸ் அவுட்டான பிறகும், கம்பீர் RRR 8-க்கு மேல் போகாமல் பார்த்துக் கொண்டார். திவாரியும், கம்பீரும், பதானும், 18, 19 மற்றும் 20வது ஓவர்களில் விக்கெட்டிழந்து, Climax-இல் சற்றே சுவாரசியம் கூடியபோதும், சென்னைக்கு Anit-climax ஆக ஆட்டம் முடிந்தது. சேப்பாக்கம் என்ற CSK-யின் கோட்டை மதிள்சுவரில் விரிசல்கள் தோன்ற ஆரம்பித்திருப்பதால், சென்னை ரசிகர்கள் ரொம்பவும் எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பது அவர்கள் உடம்புக்கு நல்லது :-)

இத்தனை "பெத்த" பேரு மட்டையாளர்களை வைத்துக் கொண்டு (டுபிளஸ்ஸி, ஹஸ்ஸி, தோனி, ரைனா, ஜடேஜா, பிரேவோ, மார்க்கல், பத்ரி) 139 ரன்கள் எடுத்த ஒரு லாயக்கில்லாத அணி தோற்றது நியாயம் என்று தான் நினைக்கிறேன்! அதோடு, மார்க்கல் போன்ற பலம் வாய்ந்த hitter-களுக்கு ஒவ்வொரு ஆட்டத்திலும், கடைசியில் 8-10 பந்துகள் ஆடக் கிடைத்தால், அவர் தான் என்ன செய்ய முடியும்?
இந்த IPLலில் (மொத்தம் 8 ஆட்டங்களில், மும்பைக்கு எதிரான ஆட்டம் தவிர்த்து) அவருக்கு ஆடக் கிடைத்த வாய்ப்பு 7-8 ஓவர்கள் தான். இதில் என்னத்தை கிழிக்க முடியும்! அது போலவே, ரைனா கடந்த இரு IPL-கள் போல இந்த IPL-லில் பிரகாசிக்காதது சென்னையின் பின்னடைவுக்கு ஒரு முக்கியக் காரணம்.

தோனியும், பயிற்சியாளர் ஃபிளெமிங்கும், பிற பயிற்சியாளர்களும், திறமையான வீரர்கள் கொண்ட காம்பினேஷன் இருந்தும் சென்னையின் தொடர் தோல்விகளுக்கான காரணங்களை அலசி, புது திட்டங்களை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அது போலவே, என்னைப்போன்ற சென்னை ரசிகர்கள், கேல்குலேடரை கையில் வைத்துக் கொண்டும், Spreadsheet அனாலிஸிஸ் செய்தும், எத்தனை ரன் வித்தியாசத்தில், எவன் ஜெயித்து எவன் தோற்பதால், எந்த ஆட்டத்தில் மழை பெய்வதால், சென்னை அணி (எப்படியாவது) அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்புகள் குறித்து ஆராய்ச்சி செய்யத் தயாராக வேண்டும் ;-)

சென்னை சூப்பர் கிங்க்ஸ் (CSK) தங்கள் பெயரை "சென்னை சப்பைக் கம்மனாட்டிகள்" என்று மாற்றிக் கொள்ளலாம்! இந்த இடுகையில், யாரையும் திட்டக்கூடாது என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், "முடியல", மன்னிக்கவும்!

எ.அ.பாலா

எஜமானுக்கு சுருட்டு. தொழிலாளிக்கு பீடி. தொழிலாளர் தின நல்வாழ்த்துகள். [ புகை பிடித்தல் உடல் நலத்திற்குக் கேடு.
]


Read More...